ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142712 topics in this forum
-
அரசியலமைப்புப் பேரவையாக மாறியது நாடாளுமன்றம்! புதிய அரசியலமைப்தைத் தயாரிப்பதற்காக, முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்புப் பேரவையாக, இன்று மாறியது. அதன் முதற்படியாக, உப தலைவர்கள் எழுவர் நியமிக்கப்பட்டனர். இரண்டாவதாக, வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டது. உப தலைவர்கள் 01. திலங்க சுமதிபால 02. செல்வம் அடைக்கலநாதன் 03. கபீர் ஹாசிம் 04. சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே 05. திலக் மாரப்பன 06. மஹிந்த யாப்பா அபேவர்தன 07. நலிந்த ஜயதிஸ்ஸ வழிநடத்தல் குழு 01. ரணில் விக்கிரமசிங்க 02. லக்ஷம…
-
- 20 replies
- 935 views
-
-
கொல்லப்பட்ட புலிகளின் உடல்களும்..கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும். படம் லங்காறுத் எனும் இராணுவ இணையத்தளம். யாழில் நடந்த சண்டைகளில் இதுவரை தாங்கள் 700 புலிகளைக் கொன்று..சகல தாக்குதல்களையும் முறியடித்துள்ளதாகக் கூறும் படைத்தரப்பு..புலிகளின் 80 உடல்களையும் பெருந்தொகுதி ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக தங்கள் இணையத்தளங்களூடும் ஊடகங்களூடும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்..! இவை குறித்த உண்மை நிலைப்பாடுகளை மக்கள் அறியக்கூடியதாக இல்லை..! :roll: :?: :idea:
-
- 20 replies
- 7.2k views
-
-
வீரத்தின் விலாசங்களாக வெற்றியின் அடையாளங்களாக ஒளிர்ந்தவர்களின் வழியில் வந்தவள்தான் இவள். பெண்ணின விடுதலையின் அடையாளச் சின்னங்களாய் அணிவகுத்த ஆயிரமாயிரம் தங்கைகளின் அக்காக்களின் வழியில் இவளும் ஒரு பொழுது ஊரிலிருந்து புறப்பட்டுச் சென்றாள். அடக்குமுறைகளினாலும் அடக்குமுறையாளர்களினாலும் அதிகம் வலிகள் சுமந்த கிழக்கு மாகாணத்திலிருந்து தன்னினவிடுதலைக்காகச் சென்றவள் இன்று மறதிகளுடனும் மனநிலைக் குழப்பத்துடனும் ஊனமாகித் திரும்பியிருக்கிறாள் ஊருக்கு. அக்காக்கள் இருவருக்குப் பின்னால் பிறந்த குடும்பத்தின் கடைக்குட்டி காணாமல் போன பொழுது அழுதவர்கள் அவள் திரும்பி வரும்வரை இவள் நினைவோடிருந்தார்கள். இன்று இவளோ நினைவுகளில் கூட பல விடயங்களை புரிந்து கொள்ளச் சிரமப்படுகிறாள். தலையில் ஏற்…
-
- 20 replies
- 3.4k views
-
-
சாணக்கியன் இராசமாணிக்கம் நாடாளுமன்ற அவையிலே மும்மொழிகளிலும் பேசுகிறார்!
-
- 20 replies
- 2.6k views
-
-
வடபோர் முனையில் இடம்பெரும் மோதல் நடவடிக்கைகளின்போது கொல்லப்படும் படையினரின் உடலங்களை களமுனையின் பின்தளங்களில் படையினர் புதைத்துவிட்டு அவர்கள் காணாமல்போயுள்ளனர் என தெரிவிப்பதன் காரணமாக தாம் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களில் இவ்வாறு பல படையினர் காணாமல்போயுள்ளதாக படையினர் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமையகம் தெரிவித்துள்ளது. http://www.swissmurasam.net/2008-10-17-05-...4-20-04-08.html
-
- 20 replies
- 6k views
- 1 follower
-
-
புலம்பெயர் அமைப்புகளை தமழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பயங்கரவாத நிறுவனங்கள் என அவற்றைத் தடை செய்வதற்கு இலங்கை அரசு எடுத்த முடிவு வெட்கக்கேடானது என உலக தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. இவ் நடவடிக்கை இலங்கையில் யுத்தத்தின் போதும் மனித உரிமை மீறல்,நீதி, பொறுப்புக் கூறல் ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கு முயற்சிப்போரை அச்சுறுத்தி மௌனிக்கச் செய்யும் முயற்சியாகவே இது அமைவதாக உலகத் தமிழர் பேரவையின் கொள்கை வகுப்பு ஆலோசகர் ஜோன் ரியன் தெரிவித்துள்ளார். தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கில் புலிகளை மீளக் கட்டியெழுப்பும் முயற்சியைத் தடுப்பதற்காகவே இந்தத் தடை நடவடிக்கை என்கிறது அரசு. ஆனால், யாருமே மீண்டும் ஆயுதப் பிணக்குக்குச் செல்ல விரும்பவில்லை. அப்படிச் செய்கிறார்கள்…
-
- 20 replies
- 1.5k views
-
-
Posted by twnewsfeatures on 15 December 2015, 11:16 pm டி.பி.எஸ்.ஜெயராஜ் “புரூட்டசைப் பொறுத்தவரை அவன் சீசரின் பிரியமான தேவதூதன் என்பது உங்களுக்குத் தெரியும். தேவர்களே, சீசர் அவனை எவ்வளவு பிரியமாக நேசித்தார்,என்பதை நீங்களே மதிப்பிடுங்கள்! இதுதான் எல்லாவற்றையும் விட கொடூரத்தனமான வெட்டு, உன்னதமான சீசர் அவன் குத்துவதை கண்டபோது, அது நன்றிகெட்ட தனமானதாகவும் துரோகிகளின் கரங்களைவிட மிகவும் வலிமையானதாகவும் இருந்தது, அது அவரை பெருமளவு தோற்கடித்துவிட்டது: அப்போது அவரது பலமான இதயம் வெடித்துச் சிதறியது” – வில்லியம் ஷேக்ஸ்பியர் – “ஜூலியஸ் சீசர்” (காட்சி 2 நடிப்பு 3) தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்(ரி.என்.ஏ) நிலவிய அரசியல் பதட்டங்கள் கடந்தவாரம் ஒ…
-
- 20 replies
- 1.2k views
-
-
[size=4]இலங்கையில் யாழ்ப்பாண சுதந்திர இராச்சியத்தை ஆட்சி செய்த வர்கள் ஆரியச் சக்கரவர்த்திகள். இவர்களின் தலைநகரமாக நல்லூர் விளங் கியது. இந்த யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளின் வம்சத்து தோன்றல்களில் ஒருவர் துவாரகா விஜே நாதன். இவர் ரோரன்ரோ பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றவர்.[/size] [size=4]இலங்கையில் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற செயல் திட்ட பணிப்பாளராக உயர் பதவி வகிப்பவர் மிலிந்த ராஜபக்க்ஷ .[/size] [size=4]மிலிந்த ராஜபக்க்ஷவுக்கும் துவாரகா விஜேநாதனுக்கும் இடையில் மலர்ந்த காதல் இறை ஆசியுடனும், பெற்றோர், பெரியோர் ஆகியோரின் சம்மதத்துடனும் கொழும்பில் கடந்த ஜூலை 05 ஆம் திகதி வெகுவிமரிசையான திருமணமாக நடந்தேறியது. திருமண சடங்குகள் கொழும்பு கங்காராம விக…
-
- 20 replies
- 3.6k views
-
-
தன், மார்ச் 10, 2010 08:52 | கடந்த இரண்டு மாதங்களில் 3 மில்லியன் உல்லாச பயணிகள் வடக்கிற்கு பயணம் கடந்த இரண்டு மாதங்களில் 3 மில்லியன் உல்லாசப் பயணிகள் வடக்கிற்குச் சென்றுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் அறிக்கை யொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஏ9 பாதை மக்களின் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதன் விளைவாக நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் பல பாகங்களுக்கும் சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்களின் எண்ணிக்கை 3 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வா…
-
- 20 replies
- 1.3k views
-
-
'புலிப்பார்வை' படத்தில் பாலசந்திரன் கதாபாத்திரத்தில் மாற்றம் செய்து படப்பிடிப்பு நடத்த இருப்பதாக இயக்குநர் பிரவீன்காந்தி தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரகனின் மகன் பாலசந்திரன் மரணத்தைப் பின்னணியாக கொண்டு தயாராகி வரும் படம் 'புலிப்பார்வை'. பிரவீன் காந்தி இயக்கி வரும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சிறுவன் பாலசந்திரனை போராளி போன்று சித்தரித்து இருப்பதாக, இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இப்படத்தை திரையிட விடமாட்டோம் என்று 65 தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து அறிவித்தன. தமிழ் அமைப்புகளின் அறிவிப்பைத் தொடர்ந்து இயக்குநர் பிரவீன் காந்தி இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து கூறியது: …
-
- 20 replies
- 1.5k views
-
-
Posted on : Sat Jul 21 8:47:56 EEST 2007 தேங்காய் எண்ணெய் என நினைத்துக் கொண்டு விளக்குக்குப் பெற்றோல் ஊற்றிய பூசகர் மரணம் எரிந்துகொண்டிருந்த விளக்கில் தேங் காய் எண்ணெய் என நினைத்து பெற் றோலை ஊற்றிய ஆலயப் பூசகர் தீக்கா யங்களுக்கு இலக்காகி உயிரிழந்தார். புங்குடுதீவு சிவன்கோயிலில் நேற் றுக்காலை இச்சம்பவம் இடம்பெற்றது. எரிகாயங்களுக்குள்ளான புங்குடு தீவு 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆல யப் பூசகரான சிவசுப்பிரமணியம் தினேஸ் சர்மா (வயது 27) யாழ். ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்றுமாலை அவர் உயிரிழந்தார். ஆலயத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்குத் தணியும் தறுவாயில் இருப் பதைக் கண்டு தேங்காய் எண்ணெய் என நினைத்து பெற்றோலை ஊற்றியபோதே, தீப்…
-
- 20 replies
- 4.2k views
-
-
23.10.08 கவர் ஸ்டோரி இலங்கை வன்னிப்பகுதியில் இதுநாள் வரை என்ன நடக்கிறதென்றே சரிவரத் தெரியாத நிலையில், இருட்டைக் கிழித்துக் கொண்டு வரும் மின்னல் கீற்றாக வெளியே வந்திருக்கிறது ஒரு சி.டி. வன்னிப் போர்க்களத்தில் சிக்கி தமிழ்மக்கள் அகதிகளாகப் படும்பாட்டை விளக்கும் அந்த சி.டி., கடல் கடந்து தமிழகக் கரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அந்த சி.டி. `சீறும் தலைவர்' ஒருவரிடம் சிக்க, அவர் கடந்த 13-ம்தேதியன்று முதல்வர் கலைஞரை நேரில் சந்தித்து, அந்த சி.டி.யைக் கொடுத்திருக்கிறார். அடுத்தநாள் (14-ம்தேதிதான்) இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற நிலையில் அந்த சி.டி.யை வீட்டில் போட்டுப் பார்த்திருக்கிறார் கலைஞர். கூடவே அவரது குடும்பத்தாரு…
-
- 20 replies
- 6.9k views
-
-
ஜே வி பி தூக்கினது என்ன பொல்லாங்கட்டையா.. அல்லது இரும்புக் கம்பியா..??! இதுக்கு தன்னிலை விளக்கம் என்ன சார்.. சும். !! நல்ல சமாளிப்புக்கேசன்.. சும் அங்கிள்.
-
- 20 replies
- 2.8k views
-
-
கலைஞர் உலக தமிழினத் தலைவர் கலைஞர் இன்று இலங்கைத் தமிழரின் பிரச்சனைகளை தீர்த்து விட்டதனால் உண்ணா நோன்பை கைவிடும் அறிவிப்பை நடிகர் சங்கம் அறிவிக்கும்.. விரைவில் எதிர்பாருங்கள்
-
- 20 replies
- 4.5k views
-
-
தற்போதைய களநிலவரம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் வழங்கிய சிறப்பு நேர்காணல் நன்றி: தமிழ்நாதம்
-
- 20 replies
- 4.7k views
-
-
திகதி: 25.07.2010 // தமிழீழம் சங்கதி இணையத்தள முகவரி தனிநபர் ஒருவரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பதிவுக்குரியவர் அதனைக் கையகப்படுத்தி தவறானவர்களின் கைகளில் ஒப்படைக்க முனைந்துள்ள நிலையில், அவ் இணையத்தளத்தின் ஆசிரியர் குழுமம் முழுமையாக வெளியேறி www.sangathie.com என்ற புதிய இணையத் தளத்தில் இயங்கவுள்ளது. இவ் இணையத்தளமே கடந்த காலங்களில் இயங்கிவந்த இணையத்தள செய்தியாளர்களால் இயக்கபடவுள்ளது என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். அத்துடன், கடந்த காலங்களில் நீங்கள் தொடர்புகொண்ட இலத்திரனியில் முகவரியில் sankathireaders@gmail.com உங்கள் தொடர்புகளை மேற்கொள்ளலாம் என்பதையும் அறியத்தருகின்றோம். நன்றி சங்கதி நிர்வாகம் http://www.sangathie.com/index.p…
-
- 20 replies
- 3.9k views
-
-
அமெரிக்காவின் இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா பின்பற்றி வந்த கடுமையான நிலைப்பாடுகளை தளர்த்திக் கொண்டு, இலங்கையுடன் நட்புறவான கொள்கைகளை பின்பற்ற ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானமொன்றை நிறைவேற்ற அமெரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு ஆதரவளிக்கும் வகையில் தீர்மானம் அமைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் பாரிய ம…
-
- 20 replies
- 2k views
-
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் பதிவு இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது பிரத்தியேக செயலாளரே குறித்த வாகனத்தை வீட்டின் வாகன தரிப்பு கராஜூக்கு கொண்டு வந்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அவரது மனைவியும் பொலிஸில் சாட்சியமளித்துள்ளனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்கு சொந்தமான மிரிஹான – எம்புல்தெணிய மண்டப வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று இருப்பதாக பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, மிரிஹான பொலிஸார் நுகேகொட நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிவித்தது…
-
-
- 20 replies
- 1.1k views
- 1 follower
-
-
டெனீஸ்வரனை பதவி நீக்கியமைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை வடக்கு மாகாண அமைச்சராகப் பதவி வகித்த பா.டெனீஸ்வரனை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி நீக்கியிருந்தார். இதற்கு எதிராக பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இரு தரப்பு சமர்பணங்களுக்கும் முடிவடைந்த பின்னர், வழக்கு தீர்ப்புக்காக இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, அமைச்சர் பதவியிலிருந்து டெனீஸ்வரனை பதவி நீக்கியதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவரது அமைச்சுப் பதவிகளை தற்போது வகிக்கும் அமைச்சர்களையும் தொடர்ந்து செயற்படுவதற்கு நீதிமன்றம…
-
- 20 replies
- 1.6k views
-
-
இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சட்ட ரீதியான் பாதுகாப்பைத் தருமாறு, இலங்கைப் பாலியல் தொழிலாளர் சங்கம், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைக் கோரியிருக்கிறது. இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய, அந்த சங்கத்தின் துணைத் தலைவி பி.மகேஸ்வரி தற்போது பாலியல் தொழிலில் 8000 க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபடுவதாகத் தெரிவித்தார். பலத்த வறுமை காரணமாகவே பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்ட வருவதாக தெரிவித்த அவர் சட்டத்தில் இருக்கின்ற சில அவகாசங்களை பயன்படுத்தி போலீசார் அவர்களைக் கைது செய்து வருவதாக குற்றம் சாட்டினார். எனவே பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு பாதுகாப்பைத் தரக்கூடிய சட்ட திருத்தங்களை அரசாங்கம் கொண்டுவரவேண்டும் என்று பி.மகேஸ்வரி கூறினார். தங்களது உரிமைகளை பாதுகாப்பதற்கு …
-
- 20 replies
- 2.5k views
-
-
இனம் சார்ந்து மக்களை கூருணர்ச்சிப்படுத்துவதன் மூலம் தம்மை பிரபல்யப்படுத்த முனையும் ஊடகங்களால் உயிரச்சம் கலந்த நம்பிக்கையற்ற வாழ்க்கை நிலைக்குள் எம்மக்களை தள்ளிவிட முடியுமே தவிர, எம் மக்கள் பாதுகாப்பான நம்பிக்கைதரும் ஒரு சூழலை நோக்கி நகர்வதற்கு இவை ஒருபோதும் உதவப் போவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு புதிய நம்பிக்கையுடன், புதியதொரு சூழலில் தம்மை மீளவும் நிலைப்படுத்திக் கொள்ள தேவையான நம்பிக்கையை நம் தமிழ்த் தலைமைகள் வழங்க வேண்டிய ஒரு சூழலில் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை தோற்றுவிப்பதன் மூலம் தம் வாழ்வையே வெறுமையாகவும், வெறுப்பாகவும் சிந்திக்கின்ற ஒரு நிலைமையை இந்த ஊடகங்கள் ஏற்படுத்த முனைகின்றன. குண்டு சத்தங்கள் ஒய்ந்து போயுள்ள …
-
- 20 replies
- 1.7k views
-
-
கடந்த வருடம் மேமாதம் தாயகத்தில் நிகழ்தேறிய பேரழிவின் பின்னர் புலத்துவாழ் தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்புக்கள் புதியதோர் பரிணாமத்தில் பிரவேசிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவ்வாறான மாற்றமானது தமிழீழ தேசிய தலைமையின் விருப்புகளுக்கு அமைய - அவரின் வழிகாட்டலுக்கு அமையவே - நிகழ்த்தப்பட்டது. அதன்படி புலத்து வாழ் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சனநாயக கட்டமைப்புக்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு படிமுறையாக, நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் பல நாடுகளில் நடந்து நிறைவுபெற்று, இன்னும் சில நாடுகளில் நடைபெறவும் இருக்கின்றன. இந்நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற புதிய முயற்சியை கண்டுகொண்ட சிங்கள பேரினவாத அரச இயந்திரம் அதனை தடுத்து நிறுத்துவதற்…
-
- 20 replies
- 1.9k views
-
-
வீரகேசரி நாளேடு - கொழும்பில் இடம்பெறும் சார்க் மாநாட்டை முன்னிட்டு பிச்சைக்காரர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு பொதுவான முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கட்டாக்காலி நாய்களையும் கொழும்பு மாநகர சபையின் உதவியோடு பிடித்து அடைத்து வைத்துள்ளனர். கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக பிச்சையெடுத்தவர்களுக்கு பஸ்ஸில் வந்த கும்பலொன்று 10 ரூபா நோட்டுக்களை விநியோகித்துள்ளது. இதனைக் கண்றுற்ற ஏனைய பிச்சிசைக்காரர்களும் ஓடோடிச்சென்று அங்கு கூடவே அனைவரையும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இதன்போது பிச்சைக்காரர் ஒருவர் அவ்விடத்திலிருந்து பிடிபடாது ஓடித்தப்பியுள்ளார். அதேவேளை, பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தை அண்மித்த பிரதேசங்களிலுள்ள…
-
- 20 replies
- 2.8k views
-
-
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு! போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் அவருக்கு எதிராக விசாரணைகோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் எழுத்து மூல முறைப்பாடு ஒன்றினையும் வழங்கியுள்ளார். இந்த எழுத்துமூல முறைப்பாடு நேற்றயதினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. இந்த போதகர் புத்தரை அவமதித்துள்ளதாகவும் அவரது இந்த செயற்பாடுகளால் நாட்டின் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் கிறிஸ்தவ அடிப்படைவாத கும்பல் மிக…
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முறிகண்டி அக்கராயன் வீதியில் சிறிலங்காப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் சிறுவர், சிறுமியர், குழந்தைகள் உட்பட 17 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 20 replies
- 6.2k views
-