ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142726 topics in this forum
-
February 9, 2019எங்கள் பிள்ளைகளை விடுங்கள் – எங்களின் ஆட்சியில் விடுங்கள் – தமிழீழ காலத்தில அந்த மாதிரித்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தனாங்கள். இப்பதான் இப்படி துன்பப்படுறம். இப்ப வந்தவையல் குப்பைகள் குப்பை ஆட்சி செய்யுதுகள்…..” என்றெல்லாம் தமது துயரை கொட்டி தீர்த்துள்ளார்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள். வடக்கின் ஆளுநர் அலுவலகம் முன்பாக இந்தத் தாய்மார்கள், மற்றும் உறவினர்கள், கண்ணீரால் தமது துயரை இன்று பதிவு செய்துள்ளார்கள். http://globaltamilnews.net/2019/112648/
-
- 19 replies
- 1.6k views
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜயவர்தன இன்று காலமானார். மேலும், http://tamilworldtoday.com/?p=12963
-
- 19 replies
- 1.1k views
-
-
சிகிரியாவில் கிறுக்கிய பெண்ணை மன்னித்து விடுவிப்பது சாத்தியமா? என பரிந்துரைக்குமாறு சட்ட அமைச்சை ஜனாதிபதி செயலகம் பணித்துள்ளதாம். http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=121670
-
- 19 replies
- 2.1k views
-
-
இறுதி யுத்த நாட்களில் 40,000 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டிருப்பதாக ஐநாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் விஸ் ஒத்துக் கொண்டிருக்கிறார். பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்படவில்லை என்று மறுத்து வரும் சிறிலங்கா அரச வட்டாரங்களில் இந்தக் கூற்று பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார். 14 ஆண்டு காலம் ஐநாவில் பணியாற்றிய கோர்டன் தற்போது பதவியை இராஜினமாச் செய்து விட்டு சொந்த இடமான அவுஸ்திரேலியாவிற்குத் திரும்பியிருக்கிறார். தான் இந்தத் தகவல்களைத் தமிழர்களிடமிருந்தோ விடுதலைப் புலிகளிடமிருந்தோ திரட்டவில்லை என…
-
- 19 replies
- 2k views
-
-
மாவீரர் தின உரை நிகழ்த்தப்போவது யார்…? – குமுதம் சஞ்சிகை எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது, எப்படி? என்னும் விவரங்கள் இல்லை. ஆனால், விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து சமீபத்தில் (நவம்பர் 17) வெளிவந்திருக்கும் அதிகாரபூர்வமான அறிவிப்பு இது. `அன்பார்ந்த தமிழ் ஈழ மக்களுக்கும், புலம்பெயர்வாழ் தமிழ் உறவுகளுக்கும்... கடந்த 18.5.2009 அன்று தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்காகப் போராடிய எமது இயக்கம் சந்தித்த பெரிய பின்னடைவைத் தொடர்ந்து, நாம் மீண்டும் எமது விடுதலை இயக்கத்தை தாயகத்தில் கட்டியமைத்து வருகிறோம். இதை அறிந்த இலங்கை பேரினவாத அரசும், அரசு துணைக் குழுக்களும் பொய்யான பிரசாரங்களை ஊடகங்கள் வாயிலாக கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது போன்ற பிரசாரப் போரை கடந்த 30 ஆண்டு …
-
- 19 replies
- 3.6k views
-
-
மக்களவையின் அனைத்துலக செயலகம் விடுக்கும் அவசர அவசிய செய்தி By: admin அன்பான தமிழீழ மக்களே! முள்ளிவாய்காலின் மனிதப்படுகொலைகள் ஓராண்டுகள் எட்டிவிட்டன. ஆனால் கொலையை செய்தவனும், கட்டளையிட்டவனும் எக்காளம் இட்டுக்கொண்டிருக்கிறான். ஆனால் நாமோ எமது உறவுகளை பறிகொடுத்தும், பலிகொடுத்தும் அவர்களுக்கான எதையும் நீதியின் முன்னால் நிறுத்த நாம் முன்வரவில்லை. எமது மக்களுக்கு நீதி வேண்டியும், நியாயம் கேட்டும் உலகம் முழுவதும், தாம் வாழும் நாடுகளிலும் அதை நீதிமன்றங்களில் வழக்கை பதிவு செய்தும், யுத்தத்தாலும், இப்பெயர்வாலும் மற்றும் அனைத்து இராணுவநடவடிக்கையாலும் உயிரை இழந்து, அங்கீவீனமாக்கப்பட்டவர்,காணாமல் போனோர், மனவுழைச்சலுக்குள்ளானவர்கள் போன்றோரின் விபரங்கள், தகவல்களை ஆதாரங்களுடன் எதி…
-
- 19 replies
- 2.1k views
-
-
நேற்றை தினம் பிபிசியில் (ஆங்கிலம்) இலங்கை தொடர்பான பிரதான செய்தியாக இருந்த தலைப்பில் மக்களின் கருத்துக்களைப் பகிரவும் இடமளிக்கப்பட்டிருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாங்களும் இன்னும் பல உறவுகளும் கருத்துக்களைப் பரிமாறி இருதோம். எங்கள் கருத்துக்களில்.. தமிழர்களின் இராய்ச்சியம் எப்படி ஆங்கிலயர்களின் ஆட்சியின் போது பறிக்கப்பட்டது.. சிலோன் எப்படி சிறீலங்கா என்ற சிங்கள அடையாளத்தைப் பெற்றது... அதன் மூலம் முழுத் தீவும் சிங்களவர்களுக்கு என்று அடையாளப்படுத்தப்பட்டது மற்றும் தமிழ் இன அழிப்பை திட்டமிட்ட இனக்கலவரங்கள் மூலம் ஆரம்பித்தது அதனை எதிர்க்க தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினர். அவர்களே புலிகள் என்றும்.. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் தீவில் இங்கிலாந்து ஸ்கொட்லாந்து..வேள்ஸ…
-
- 19 replies
- 1.8k views
-
-
முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கிலே மக்கள் மத்தியில் குறிப்பாக சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவுதான் அநுரகுமார திசாநாயக ஜனாதிபதியாகியமை. அதைப்போலவே வடக்குகிழக்கில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களும் மாற்றம் ஒன்றினை எதிர்பார்த்து நிற்கின்றனர். அது புதியவர்களையும், இளையோரையும் பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும் என்பதாகும். மக…
-
-
- 19 replies
- 1.6k views
-
-
புலிகளின் மரபுவழி போர்த்திறனை முற்றாக அழித்து விட்டோம்: சிறிலங்கா இராணுவத் தளபதி [திங்கட்கிழமை, 30 யூன் 2008, 06:12 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] தமிழீழ விடுதலைப் புலிகளால் இனிமேல் மரபுவழி இராணுவமாக சண்டையிட முடியாது. எமது இராணுவத்தினர் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களால் தமது இராணுவ பலத்தை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகள் இன்னமும் எமது படைகளுடன் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் முன்பிருந்த எதிர்ப…
-
- 19 replies
- 3.2k views
-
-
தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சிகிச்சை பெற்ற வீமனின் தாயர் உயிரிழப்பு! பிப் 26, 2013 தளபதிகளில் ஒருவராக இருந்த வீமனின் தாயாரான ஏகாம்பரநாதன் இராஜேஸ்வரி (வயது 62) நேற்று யாழில் உயிரிழந்துள்ளார். கடந்த சில மாதங்களான கடுமையான விரத்தியில் இருந்த அவர் தற்கொலை முயற்சியில்ஈடுபட்டுள்ளார் இந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி வியாழக்கிழமை நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர்ச்சியாக சுமார் இரண்டு வாரங்கள் அதிதீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிளந்துள்ளார். http://www.sankathi24.com/news/27425/64//d,fullart.aspx
-
- 19 replies
- 975 views
-
-
கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த பல்கலை மாணவர்கள்; கைது செய்யப்படுவீர்கள்- எச்சரிக்கை விடுத்த பொலிஸார்! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர். அதனை அறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர். எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு பொலிஸார், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். …
-
- 19 replies
- 1.8k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல என கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமி;ழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்த பிரபாகரன் ஓர் சுதந்திரப் போராட்டவீரர் என ஸ்ரீதரன் பாராளுமன்றில் அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும், இந்தக் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என சம்பந்தன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தேசிய இனப்பிரச்சினைக்கான கட்சியின் தீர்வுத் திட்டம் அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட…
-
- 19 replies
- 1.1k views
-
-
யாழில் சிறுமி காயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு யாழ்ப்பாணம் சுளிபுரம் பகுதியில் ஆறு வயது சிறுமியொருவர் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவமானது சுளிபுரம் காட்டுபுலம் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் சிவநேஸ்வரன் றெஜீனா என்ற 06 வயது சிறுமியே சடலமாக மீட்கப்பட்டவராவர். வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள தோட்ட கிணறு ஒன்றிக்குள் உள்ளாடை மாத்திரம் காணப்பட்ட நிலையில் சடல…
-
- 19 replies
- 2.9k views
-
-
நக்கீரனின் விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்! ஈழத் தமிழர்கள் மீது கொடூரமான யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு. புலிகளின் தலைநகரான கிளிநொச்சியைப் பிடிப்பதற்காக விமானங்கள் மூலம் தமிழர்கள் மீது குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது ராணுவம். பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள்வரை கொத்து கொத்தாக படுகொலை செய்யப்படுகிறார்கள். ராணுவத்தினரின் விமான குண்டு வீச்சிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சொந்த வாழ்விடங்களை விட்டு காடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள் தமிழர்கள். உணவும், இருப்பிடமும் இல்லாமல் போதிய மருத்துவ வசதிகளும் கிடைக்காமல் தவிக்கின்றனர். குண்டு வீச்சில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு செல்கிற வழியிலேயே மரணமடைவது அதிகரித்து வருகிறது. தற்போது மழைக்கால…
-
- 19 replies
- 5.2k views
-
-
கே.பியின் கைது வெளிவராத சில உண்மைகள் Tuesday, 18 August 2009 கே.பி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார், எங்கு கொண்டு செல்லப்பட்டார் என பல தகவல்கள் உலாவந்தவண்ணம் உள்ளன, கற்பனையின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற சில இணையத்தளங்கள், அவர் தானாகச் சென்று சரணடைந்தார் என்று கூட எழுதித்தள்ளியுள்ளார்கள். உண்மை சற்று தாமதமாக வெளியே வருகின்றது. பரந்தன் இணைய வாசகர்களுக்காக கொழும்பில் இருந்து வந்த தகவலை வழங்குகிறோம். கே.பியைப் பற்றி எந்த ஒரு இரகசியத்தையும் வெளியிடக் கூடாது என கோத்தபாய கொழும்பில் உள்ள அனைத்துப் பத்திரிகைகளுக்கும் தனிப்பட்ட ரீதியில் மிரட்டல் விடுத்துள்ளார். தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் படி கொழும்பில் உள்ள ஒரு தனிப்பட்ட மிகவும் இரகசியமான இடம் ஒன்றில் கே.பி வைக்கப…
-
- 19 replies
- 3.4k views
-
-
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளராக கருணா போட்டியிட உள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. எனினும் இந்த முடிவு இன்று மாலையே உறுதிப்படுத்தப்படும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கருணாவுடன் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி, அமைச்சர் அமீர்அலி, கணேசமூர்த்தி, வெள்ளிமலை, அலிசாகிர் மௌலானா, ஹிஸ்புல்லா, ராஜன் மயில்வாகனம் ஆகியோர் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது http://www.eelamweb.com
-
- 19 replies
- 1.6k views
-
-
நாட்டுக்கு என்று ஒரு சட்டம் இருக்கு அதனைவிடுத்து காட்டுசட்டங்களை அமுல்படுத்த முடியாது என வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில், யாழில் தற்போது வாள்வெட்டு கலாச்சாரம் போதைப்பொருள் பாவனை என்பன அதிகரித்து காணப்படுகின்றது. அதனை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர் அத்துடன், விடுதலை புலிகள் காலத்தில் அவ்வாறான செயற்பாடுகள் இல்லாமல் இருந்தது அதற்கு அவர்களின் கடுமையான சட்டங்களும் , தண்டனைகளுமே காரணம் எனவும் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் போதே சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவ…
-
- 19 replies
- 1.3k views
-
-
புலிகள் பயன்படுத்தும் கட்டடத் தொகுதி மீது இன்று காலை விமானத் தாக்குதல் Monday, 28 April 2008 இரணமடு பகுதியில் புலிகளின் விமான ஓடுபாதைக்கு அருகில் காட்டுப் பிரதேசத்தில் புலிகளால் பயன்படுத்தப்பட்டுவந்த கட்டத் தொகுதியொன்றின் மீது இன்று காலை விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் என்றூ விஜேசூரிய தெரிவித்தார். இன்று காலை; 9.15 மணியளவில் விமானப்படையின் ஜெட் விமானங்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளன. இதன் காரணமாக கட்டடத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் புலிகள் தரப்பில் ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி அறிய முடியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.ajeevan.ch/content/view/2252/1/
-
- 19 replies
- 2.9k views
-
-
போராளிகளின் ஆற்றலும், உறுதிப்பாடும் பாரிய நம்பிக்கை தந்துள்ளது: வடபோர்முனைத் தளபதி லெப்.கேணல் ஜெரி [வியாழக்கிழமை, 6 செப்ரெம்பர் 2007, 14:30 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலி போராளிகளிடமுள்ள அசைக்க முடியாத உறுதிப்பாடும் அவர்களிடம் காணப்படுகின்ற பன்முக ஆற்றல்களும் களமுனையில் பாரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்று வடபோர் முனைக்களமுனைத் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் ஜெரி தெரிவித்துள்ளார். வடபோர் முனையில் இருந்து அவர் கூறியுள்ளதாவது: முன்னெப்போதைய கால கட்டங்களிலும் எமது விடுதலை இயக்கம் பெற்று வந்திராத பெரும் ஆளணிப் பலத்தை இப்போது பெற்றிருக்கின்றது. களத்தில் எமது போராளிகளின் உறுதிப்பாடு மிகவும் நம்பிக்கை தருவதாக இருக்கின்…
-
- 19 replies
- 4k views
-
-
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களிற்கு மட்டுமல்லாமல், இதுவரை உயிரிழந்த அனைவருக்குமான நினைவுத்தூபியையே யாழ் மாநகரசபை அமைக்க வேண்டுமென ஈ.பி.டி.பி வலியுறுத்தியுள்ளது. யாழ் மாநகரசபை அமர்வில் இன்று, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முடிவினை முன்னாள் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவிக்கையில், இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து உரிமைக்காக போராடிய அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒரு பொதுவான நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடு. அந்தவகையில் யாழ் பல்கலைக்களக மாணவன் விஜிதரன் படுகொலை மற்றும் அவருக்கு நீீதி கேட்டு போராட…
-
- 19 replies
- 2.4k views
-
-
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாலைய மாணவனான பரமானந்தம் தனுராஜ் 194 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார். யாழ். ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலையை சேர்ந்த மாணவன் ஒருவன் யாழ் மாவட்டத்தில் முதலாவதாக வந்து இதுவே முதல் தடவையாகும். குறித்த பாடசாலையில் இம்முறை நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 23 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். http://www.virakesari.lk/article/local.php?vid=7455
-
- 19 replies
- 980 views
-
-
இலங்கை கடற்படை அட்டூழியம்: கழுத்தை இறுக்கி மீனவர் கொலை Last Updated : 23 Jan 2011 11:28:26 AM IST வேதாரண்யம், ஜன.23: இலங்கை கடற்படை வீரர்களால் கோடியக்கரை அருகே மீனவர் ஒருவர் சுருக்குக் கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக மீனவர்களைக் குறிபார்த்து இலங்கைக் கடற்படை நிகழ்த்தும் வெறிச்செயல் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது என்பதைக் காட்டும் வகையில், வேதாரண்யம் - கோடியக்கரை அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த முறை துப்பாக்கிச் சூடோ வலை அறுப்போ நிகழவில்லை. மாறாக குரல்வளையை சுருக்குக் கயிறால் கட்டி கடலுக்குள் போட்டுள்ளனர். மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களின் படகில் ஏறிய இலங்கைக் கடற்படை வீரர்கள், அவர்களை அதில் இருந்து கடலுக்குள் குதித்துவிட…
-
- 19 replies
- 2.3k views
-
-
புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் மூவர் 192 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்றிரவு வெளியாகின. இதில் முதல் கிடைத்த தகவல்களின்டி யாழ். மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை, சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை, அளவெட்டி அருணேதயாக் கல்லூரியின் மாணவர்கள் மூவர் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இதேசமயம் கிளிநொச்சி மாவட்டத்தில் சேர்ந்த மூன்று மாணவர்கள் 183 புள்ளிகளை பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர். அவர்கள் திரேசா பெண்கள் கல்லூரி, வட்டக்கச்சி ம.வி., கண்ணகிபுரம் ம.வி. ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்தவர்களாவர். http://malarum.com/article/tam/2014/09/27/5810/%…
-
- 19 replies
- 1.1k views
-
-
(நா.தனுஜா) புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும் புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஏனைய பிராந்திய நாடுகளுடன் தொடர்பில் இருப்பதற்கு புலம்பெயர் சமூகத்தவர்கள் (டயஸ்போரா) எமக்குப் பெரிதும் உதவுகின்றார்கள். இலங்கை உள்ளடங்கலாக பல்வேறு தெற்காசிய நாடுகளையும் சேர்ந்த புலம்பெயர் சமூகத்தவர்களுடன் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளோம். அதேவேளை இருதரப்ப…
-
- 19 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா அரசின் தடுப்புக்காவில் உள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகா சாகும் வரை உண்ணா நிலை போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவரின் மனைவி அனோம பொன்சேகா சற்று முன்னர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஜெனரல் பொன்சேகா அமெரிக்காவில் உள்ள அவரின் இரு மகள்களுடனும் தொலைபேசியில் உரையாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே அதனை நீக்கும் வரை உண்ணாநிலை போரட்டத்தை மேற்கொள்ள பென்சேகா திட்டமிட்டுள்ளார். எனது கணவருக்கு அவரின் மகள்களுடன் பேசும் உரிமையை அரசு மறுத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=243:2010-03-07-07-20-57&catid=34:2010-02-09-12-34-0…
-
- 19 replies
- 1.7k views
-