ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
போராளிகளின் ஆற்றலும், உறுதிப்பாடும் பாரிய நம்பிக்கை தந்துள்ளது: வடபோர்முனைத் தளபதி லெப்.கேணல் ஜெரி [வியாழக்கிழமை, 6 செப்ரெம்பர் 2007, 14:30 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலி போராளிகளிடமுள்ள அசைக்க முடியாத உறுதிப்பாடும் அவர்களிடம் காணப்படுகின்ற பன்முக ஆற்றல்களும் களமுனையில் பாரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்று வடபோர் முனைக்களமுனைத் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் ஜெரி தெரிவித்துள்ளார். வடபோர் முனையில் இருந்து அவர் கூறியுள்ளதாவது: முன்னெப்போதைய கால கட்டங்களிலும் எமது விடுதலை இயக்கம் பெற்று வந்திராத பெரும் ஆளணிப் பலத்தை இப்போது பெற்றிருக்கின்றது. களத்தில் எமது போராளிகளின் உறுதிப்பாடு மிகவும் நம்பிக்கை தருவதாக இருக்கின்…
-
- 19 replies
- 4k views
-
-
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களிற்கு மட்டுமல்லாமல், இதுவரை உயிரிழந்த அனைவருக்குமான நினைவுத்தூபியையே யாழ் மாநகரசபை அமைக்க வேண்டுமென ஈ.பி.டி.பி வலியுறுத்தியுள்ளது. யாழ் மாநகரசபை அமர்வில் இன்று, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முடிவினை முன்னாள் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவிக்கையில், இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து உரிமைக்காக போராடிய அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒரு பொதுவான நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடு. அந்தவகையில் யாழ் பல்கலைக்களக மாணவன் விஜிதரன் படுகொலை மற்றும் அவருக்கு நீீதி கேட்டு போராட…
-
- 19 replies
- 2.4k views
-
-
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாலைய மாணவனான பரமானந்தம் தனுராஜ் 194 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார். யாழ். ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலையை சேர்ந்த மாணவன் ஒருவன் யாழ் மாவட்டத்தில் முதலாவதாக வந்து இதுவே முதல் தடவையாகும். குறித்த பாடசாலையில் இம்முறை நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 23 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். http://www.virakesari.lk/article/local.php?vid=7455
-
- 19 replies
- 987 views
-
-
இலங்கை கடற்படை அட்டூழியம்: கழுத்தை இறுக்கி மீனவர் கொலை Last Updated : 23 Jan 2011 11:28:26 AM IST வேதாரண்யம், ஜன.23: இலங்கை கடற்படை வீரர்களால் கோடியக்கரை அருகே மீனவர் ஒருவர் சுருக்குக் கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக மீனவர்களைக் குறிபார்த்து இலங்கைக் கடற்படை நிகழ்த்தும் வெறிச்செயல் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது என்பதைக் காட்டும் வகையில், வேதாரண்யம் - கோடியக்கரை அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த முறை துப்பாக்கிச் சூடோ வலை அறுப்போ நிகழவில்லை. மாறாக குரல்வளையை சுருக்குக் கயிறால் கட்டி கடலுக்குள் போட்டுள்ளனர். மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களின் படகில் ஏறிய இலங்கைக் கடற்படை வீரர்கள், அவர்களை அதில் இருந்து கடலுக்குள் குதித்துவிட…
-
- 19 replies
- 2.3k views
-
-
புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் மூவர் 192 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்றிரவு வெளியாகின. இதில் முதல் கிடைத்த தகவல்களின்டி யாழ். மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை, சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை, அளவெட்டி அருணேதயாக் கல்லூரியின் மாணவர்கள் மூவர் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இதேசமயம் கிளிநொச்சி மாவட்டத்தில் சேர்ந்த மூன்று மாணவர்கள் 183 புள்ளிகளை பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர். அவர்கள் திரேசா பெண்கள் கல்லூரி, வட்டக்கச்சி ம.வி., கண்ணகிபுரம் ம.வி. ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்தவர்களாவர். http://malarum.com/article/tam/2014/09/27/5810/%…
-
- 19 replies
- 1.1k views
-
-
(நா.தனுஜா) புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும் புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஏனைய பிராந்திய நாடுகளுடன் தொடர்பில் இருப்பதற்கு புலம்பெயர் சமூகத்தவர்கள் (டயஸ்போரா) எமக்குப் பெரிதும் உதவுகின்றார்கள். இலங்கை உள்ளடங்கலாக பல்வேறு தெற்காசிய நாடுகளையும் சேர்ந்த புலம்பெயர் சமூகத்தவர்களுடன் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளோம். அதேவேளை இருதரப்ப…
-
- 19 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா அரசின் தடுப்புக்காவில் உள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகா சாகும் வரை உண்ணா நிலை போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவரின் மனைவி அனோம பொன்சேகா சற்று முன்னர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஜெனரல் பொன்சேகா அமெரிக்காவில் உள்ள அவரின் இரு மகள்களுடனும் தொலைபேசியில் உரையாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே அதனை நீக்கும் வரை உண்ணாநிலை போரட்டத்தை மேற்கொள்ள பென்சேகா திட்டமிட்டுள்ளார். எனது கணவருக்கு அவரின் மகள்களுடன் பேசும் உரிமையை அரசு மறுத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=243:2010-03-07-07-20-57&catid=34:2010-02-09-12-34-0…
-
- 19 replies
- 1.7k views
-
-
கட்டுநாயக்க விமானப்படைதளம் மீதான விமானத்தாக்குதலை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் புதல்வர் சாள்ஸ் அன்டனி வழிநடத்தியுள்ளதாக பாதுகாப்பு படையின் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது என்று சிங்கள பத்திரிகையான லக்பிம நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்தசெய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை விமானப்படையினர் தயார்நிலையில் இருக்காததன் காரணமாகவே விடுதலைப்புலிகள், விமானப்படைத்தளம் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் செல்லக் கூடியதாக இருந்துள்ளதென முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறான விமானத்தாக்குதல் ஒன்று நடத்தப்படுமென இலங்கை விமானப்படையினர் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. …
-
- 19 replies
- 5.4k views
-
-
அமெரிக்க தமிழ் மக்கள் கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்டு எங்கள் காணமல் போன குழந்தைகளை மீட்க உதவுங்கள் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸிக்கு ஆதரவளித்து, தமிழ் இறையாண்மையைப் பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் குழந்தைகளைக் கண்டறியவும் ஹரிஸ் உதவுவார் என நம்புகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும்…
-
-
- 19 replies
- 1.3k views
- 1 follower
-
-
இவர் யார் , இவ்வளவு நாளும் எங்கிருந்தவர் ........ இவர் இப்படி கூறியதை கேட்டு பல தமிழ் நாட்டு தமிழர்கள் அதிர்ப்தி அடைந்துள்ளார்கள் . இவர் கூறியதை மேலும் வாசிக்க ........ http://sangamamlive.in/index.php?/content/view/1301/
-
- 19 replies
- 2.4k views
-
-
அரசாங்கத்தை சுதந்திரமாக விமர்சிக்கலாம் - ராஜித - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இலங்கையின் புதிய ஜனாதிபதி முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய மாற்றுக்கருத்துடையோர், மற்றும் ஊடகவியலாளர்களை நாடு திரும்புமாறு அழைத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்தின வெப்தளங்கள்மீதான தணிக்கையை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்,இது தவிர தொலைபேசிகளை இடைமறித்து ஓட்டுக்கேட்டல்,ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளை கண்காணித்தல் போன்றவற்றையும் உடனடியாக கைவிடுமாறு கேட்டுள்ளார், என தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த அரசாங்கத்தின் தாக்குதலுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பியோடி…
-
- 19 replies
- 829 views
-
-
ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பான தமது கருத்தினை இன்று பாராளுமன்றத்தில் சுமந்திரன் தெரிவித்தபோது, ரஞ்சன் ராமநாயக்கவின் குறித்த வழக்கில் தாமே அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி என்பதை தெரியப்படுத்தியதோடு நேர்மையானதொரு அரசியல்வாதியின் சார்பில் தாம் அவ்வழக்கினை முன்னெடுத்ததில் பெருமையடைவதாயும் தெரிவித்திருந்தார். துரதிஷ்டவசமாக அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு வருட கடூழிய தண்டனை விதிக்கப்பட்டது அசாதாரணமானதும் பாரதூரமானதொரு நிகழ்வு என்பதை தெரிவித்திருந்தார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக சட்டங்கள் இயற்றப்படாத காரணத்தினால் பாராளுமன்றம் இதற்கு பொறுப்பு க…
-
- 19 replies
- 2k views
-
-
பலத்த இழுபறிகள் மத்தியில் கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்த மாகாணசபைக்கான அமைச்சுக்கள் பதவி தொடர்பில் தற்போது முடிவு எட்டப்பட்டுள்லது. இந்தப் பேச்சுக்களின் முடிவில் அமைச்சுப் பதவிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் சேர்ந்த கிளிநொச்சி மாவட்ட மாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா கல்வி அமைச்சராகவும், அந்தக் கட்சியின் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர் மருத்துவர் பி.சத்தியலிங்கம் சுகாதார அமைச்சராகவும், ரெலோவைச் சேர்ந்த மன்னார் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் டெனீஸ்வரன் உள்ளூராட்சி அமைச்சராகவும், ஈ.பி.ஆர்.எல்.எவ்வைச் சேர்ந்த யாழ்.மாவட்ட மாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் விவசாய அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு வடக்கு மாகாண முதலமைச்ச…
-
- 19 replies
- 1.4k views
- 1 follower
-
-
இராணுவ ரீதியில் புலிகளை வெல்ல முடியாது இலங்கைக்கு அமெரிக்கா எடுத்துரைப்பு.இந்த தலைப்பில் எந்த சந்தேகமுமில்லை இந்த உண்மையை பல வருடங்களின் முன்பே அமெரிக்கா அறிந்திருந்ததினால் தான் ஸ்ரீலங்காவுக்கு உதவ முண்டியடித்துக் கொண்டிருக்கிறது இருந்தாலும் இன்று அமெரிக்கா இந்த கருத்தை சொல்வதில் தான் சந்தேகம் அதிகரிக்கிறது. உலகத்திலே ஏதாவது ஒரு நாடோ அல்லது விடுதலை அமைப்புகளோ சற்று பலம் பெற்றுவிட்டால் அங்கே தான் அமெரிக்காவின் பிரசன்னம் ஆரம்பிக்கிறது. இன்று எமது பிரச்சினையில் அமெரிக்கா தனது வேஷத்தை மாற்றி நடிக்க முயற்சிக்கிறமாதிரி தோன்றுகிறது. அதாவது ஸ்ரீலங்காவை கண்டிக்கிறமாதிரியும் தான் ஒரு நடுநிலை வாதியென்று காட்டிக்கொள்ள எத்தனிக்கிறது. இதை நிஷப்படுத்துகிறமாதிரி பிரிட்டிஷ்காரனின் …
-
- 19 replies
- 3.6k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி தலைமுறையை சேர்ந்த அருளர் எனப்படும் இ.அருள்பிரகாசம் இன்று காலமானார். ஈரோஸ் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர் அருளர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அருள்பிரகாசம் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளியான அருளர், 77ம் ஆண்டு இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை கொழும்பில் தங்க வைத்து, லங்கா ராணி என்ற கப்பலில் வடக்கிற்கு தமிழ் இளைஞர்கள் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்த பின்னணியில் லங்கா ராணி என்ற நாவலை எழுதியிருந்தார். அருளரின் குடும்பத்திற்கு சொந்தமான கன்னாட்டி பண்ணையில் தமிழீழ போராட்டத்தின் ஆரம்பகர்த்தாக…
-
- 19 replies
- 2k views
- 1 follower
-
-
"முதலில் உரிமை பிறகு கலப்புத் திருமணம்"-விக்னேஸ்வரன் தமிழ் மக்களுக்கு முதலில் உரிமைகள் பிறகு கலப்புத் திருமணங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கலப்புத் திருமணங்களை எதிர்க்கவில்லை, ஆனால் உரிமைகள் முதலில் என்கிறார் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாரணர் மாநாடு ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இக்கருத்தை விக்னேஸ்வரன் வெளியிட்டார். இலங்கையில் கலப்புத் திருமணங்கள் நல்லிணகத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் என வட மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ரெஜினால்டு குரே கடந்த வாரம் தெரிவித்திருந்தது பரபரப்பையும் விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது. …
-
- 19 replies
- 1.6k views
-
-
விமானப்படை தலைமையகத்தில் குண்டு வெடிப்பு! தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் தற்போது பலர் காயம்! -அததெரண (பட்டாசு வெடிகள் ஓய்ந்தன)
-
- 19 replies
- 4.7k views
- 1 follower
-
-
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு போக்குவரத்து திட்டங்கள். Clean Sri Lanka திட்டத்துக்கு நிகராக, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் முதலாவது நடவடிக்கையாக, பல்வேறு விதமான வாகன ஒலிகள், அதக சத்தத்தில் ஒலி எழுப்புதல், ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்துதல், விபத்துக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வண்ணங்கள் கொணட விளக்குகளை பொருத்துதல், சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்கள் என்பன தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது. இதன் இரண்டாவது நடவடிக்கையாக, பொதுப் போக்குவரத்து பஸ் சாரதிகள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்களைக் …
-
-
- 19 replies
- 880 views
- 1 follower
-
-
யாழ்தேவி ரயில் 23 வருடங்களின் பின்னர் கிளிநொச்சியை சென்றடைந்துள்ளது.இந்த ரயில் பயணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக இன்று சனிக்கிழமை ஆரம்பித்துவைத்தார். யாழ்தேவி ரயில் தனது பயணத்தை ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்தே இன்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பித்தது. கிளிநொச்சி ரயில் நிலையத்தை காலை 10.15 மணியளவில் சென்றடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதல் பயணியாக ஏறி பயணத்தை ஆரம்பித்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். http://tamil.dailymirror.lk/--main/82483-2013-09-14-11-03-31.html
-
- 19 replies
- 874 views
-
-
நயினாதீவுக்கு - நாகதீபவுக்கு வேண்டும் ஒரு "ம்" [ Wednesday, 16 December 2015 ,04:56:47 ] இலங்கையின் அரசியல் நிலவரங்கள் பிராந்திய, மற்றும் வல்லரசுகளுக்கிடையிலான பனிப் போர்களின் சங்கூது தரவையாக காணப்படுகின்றன. இவற்றில் இந்தியா, சீனா, அமெரிக்கா என களத்தில் அடையாளம் காட்டும் பெரிய நாடுகளும் சிறிய கேந்திர நாடுகளும் கபடியாடிக் கொண்டிருக்கின்றன. உள்நாட்டு அரசியலில் பேரினவாதம் சாயம் வெளுக்காமல் சால்வைகள் மட்டும் மாறிக் காணப்படுகின்றன. ஏதோ கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மாற்றம் விரும்பிய எங்கள் மக்களுக்கும் விதிப்பயன் இயங்கத் தொடங்கிவிட்டது. எங்கள் அரசியல் வழிநடத்துநர்கள் ஒத்தூதிகளாக - நல்லபிள்ளைகளாக - எஜமானர்களுக்கு விசுவாசம் காட்டியும் உள்ளுக்குள்ளே கலம்பம…
-
- 19 replies
- 1.5k views
-
-
புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்து குழுவினர்கள் இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இதன் போது வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது இக்குழுவில், 1. மருத்துவ கலாநிதி ரூபமூர்த்தி அவுஸ்திரேலியா 2. திருமதி சந்திரா மோகன் ராஜ் சுவிற்சலாந்து 3. சிறிபதி சிவனடியார் யேர்மனி 4. பேரின்பநாயகம் கனடா 5. விமலதாஸ் பிரித்தானியா 6. சார்ல்ஸ் பிரித்தானியா 7. மருத்துவர் அருணகுமார் …
-
- 19 replies
- 2.1k views
-
-
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர அமெரிக்காவின் புதிய தீர்வை வரியினால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் ஏனைய விளக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பி வைத்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த நாடாளுமன்றில் இதனைத் தெரிவித்தார். புதிய வரித்திருத்தத்தினால் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய வழிமுறைகள், அரசாங்கம் என்ற அடிப்படையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் போன்றன இந்தக் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த வரியைக் குறைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதியிடம் இந்த கடிதம் ஊடாக கோரிக்க…
-
-
- 19 replies
- 957 views
-
-
[size=4]முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன் கொலை வழக்கில் பிரதான சந்தேகநபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. கிறிஸ்தோபர் வலன்ரின் என்ற பிரதான சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்தே, அவருக்கு மரணதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ச தீர்ப்பளித்தார். ஐதேக ஆட்சிக்காலத்தில் இந்து சமய விவகார அமைச்சராக இருந்த தி.மகேஸ்வரன் கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் வைத்து கடந்த 2008 ஜனவரி முதலாம் நாள் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேகநபரான வலன்ரினை, மகேஸ்வரனின் மெய்க்காவலர்களால் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.[/s…
-
- 19 replies
- 1.6k views
-
-
சதோச வளாகத்தில் இது வரை 102 மனித எச்சங்கள் மீட்பு மன்னார் 'சதோச' வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொன்ட சமயத்தில் சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்ப்டதை தொடர்ந்து குறித்த வளாத்தில் இன்று திங்கட்கிழமையுடன் 58 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. குறித்த அகழ்வு பணியானது கடந்த 24 திகதி வெள்ளிக்கிழமை பகலுடன் நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை வழமை போல் விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. இது வரை குறித்த வளாகத்தில் 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 95 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்…
-
- 19 replies
- 4.2k views
-
-
நேர்காணல் : ஆர்.ராம் 9ஆவது பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்கு கிழக்கில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு நான் காரணமல்ல. அரசியலமைப்பு உள்ளிட்ட செயற்பாடுகளில் பங்கேற்று முன்னெடுத்தமையும், ஐ.நா.விடயங்களை கையாண்டமையும், சிங்கள ஊடகத்திற்கு வழங்கய செவ்வியும் தவறானவையாக இருந்திருந்தால் மக்களின் அங்கீகாரம் எனக்கு கிடைத்திருக்காது. நான் தோல்வி அடைந்திருப்பேன். ஆனால் கடந்த காலத்தில் நடைபெற்ற அனைத்து விடயங்களுக்கும் நானே பொறுப்பாளி என்று என்னை பிழையாக சித்தரித்தவர்களே தோல்வி அடைந்திருக்கின்றார்கள் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்…
-
- 19 replies
- 1.6k views
-