ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு எடுத்த முடிவை எதிர்த்து இந்திய மத்திய அரசு உச்ச நீதிமன்றம் நோக்கி நகர்வுகள் மேற்கொள்ளும். தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கும் இம் முடிவை எதிர்த்து; இந்திய மத்திய அரசு கோரி இருக்கும் விசாரணையை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்பு கொண்டுள்ளது. கொலை குற்றம் சாட்டப்பட்ட இவர்களின் விசாரணைகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் இவர்களை விடுதலை செய்யக்கூடாது என்றும் மத்திய அரசு கோரியுள்ளது. மன்மோகன் வெளியிட்ட அறிக்கை: மறைந்த ஸ்ரீ ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் எழும் சட்ட அடிப்படை பிரச்சினைகளை ஆராய மத்திய அரசு;உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை அனுப்ப உள்ளது. குற்றவாளிகளை விடுதலை செய்யும் முடிவு பற்றிய அறிக்கையான…
-
- 28 replies
- 2.6k views
-
-
28-05-2008 அன்றைய நாள்: நேரம் காலைப்பொழுதைக் கடந்து நண்பகலை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருந்த பொழுது..., கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய அந்த நெய்தல் மண் சுறுசுறுப்பாகியது. ஆங்காங்கே சுடுகருவி ஏந்திய போர் வீரர்களின் நடமாட்டம். போர்ச் சூழலுக்குள் கால் பதித்து விட்டதை உள்ளுணர்வு உணர்த்தியது. வான்குண்டுத் தாக்குதல்களாலும், எறிகணை வீச்சுக்களாலும் தலைகள் சாய்க்கப்பட்ட பனை, தென்னை மரங்களும், கொப்புகளை இழந்து எலும்புக்கூடாய் நிற்கும் நெய்தல் நில மரங்களும் போரின் தாக்கத்தைத் தெளிவாகப் பறைசாற்றின. பல்குழல் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததற்கான தடயங்களாக வீதிகளில் ஆங்காங்கே குழிகள். போர் முகத்துக்குள் இருந்தாலும், வீரம்மிக்க போராளிகளைத் தன் மடியில் சுமந்திருந்ததனால் மிடுக்கோட…
-
- 3 replies
- 2.6k views
-
-
உண்மையிலேயே உடைகின்றதா தமிழரின் தேசியத் தலைமை? [ செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஆளும் கட்சியான ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து இவர்கள் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இவர்களுக்கு ஆசன ஒதுக்கீட்டை வழங்க கூட்டமைப்பின் தலைமை மறுத்துவிட்டதை அடுத்தே ஆளும் கட்சியில் இணைந்து தோ்தலில் போட்டியிட இவர்கள் தீர்மானித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி, வன்னி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின…
-
- 17 replies
- 2.6k views
-
-
இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு தூதரை நியமிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை தூத்துக்குடி, பிப்.4- 'இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு தூதர் நியமிக்க வேண்டும்', என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று காலை தூத்துக்குடி வந்தார். பின்னர் ஸ்பிக் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஒரு சிறப்பு தூதரை ஈழத்தமிழர் பிரச்சினைக்காக இந்திய அரசு நியமிக்க வேண்டும். சிறப்பு தூதராக முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஏ.பி.வெங்கடேசன் போன்றவர்களை நியமிக்கலாம். ஷில…
-
- 16 replies
- 2.6k views
-
-
பிரித்தானியாவில் வாழும் அரசியல்வாதியான தயா இடைக்காடர் என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பம் ஜி.ரிவி. நேரடி நிகழ்ச்சி ஒன்றைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தோன்றியுள்ளது. வியாழன் நள்ளிரவு தொலைக்காட்சியின் 'வெளிச்சம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயா இடைக்காடர் 'சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை' என்று கூற முயன்ற அவரது கருத்தை, அதை நெறிப்படுத்திய செய்தியாளர் தினேஷ் அவர்கள் வெகு புத்திசாதுரியமாக தடுத்து நிறுத்தியுள்ளார். திரு. தினேஷ் அவர்களின் இந்த முடிவு பாராட்டத்தக்கது என்றாலும், திரு தயா இடைக்காடர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் தெளிவு படுத்தியே ஆகவேண்டும். தயா இடைக்காடர் சொல்ல வந்தது போல்,…
-
- 28 replies
- 2.6k views
-
-
கருணாவை சந்திக்க நேரம் இல்லையாம்- பிள்ளையான். இங்கிலாந்தின் லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு துரத்தப்பட்ட TMVP யின் தலைவர் கருணா எனும் முரளீதரனை சந்திக்க நேரம் இன்மையால் முடியவில்லை எண்று கிழக்கின் முதலமைச்சரும் TMVP யின் உறுப்பினரும் ஆன சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்து உள்ளார். முதலமைச்சர் பதவி பற்றி கேட்க்கப்பட்ட கேள்விக்கு கருணா,தேவை இல்லாமல் முதலமைச்சர் பதவி பத்திரிக்கைகளால் இழுக்கப்படுகிறது எண்று வெறுப்பாக பதில் அளித்தார். ( சீச்சி. இந்தப் பழம் புளிக்கும்) http://www.bbc.co.uk/sinhala/news/story/20..._pillayan.shtml
-
- 16 replies
- 2.6k views
- 1 follower
-
-
தமிழீழ மக்களுக்கு கரும்புலி வீரர் மடல். அன்புக்கினிய எம் தாய்நாட்டு உறவுகளே வணக்கம்! எங்கள் மக்களின் துன்பம் கண்டு துவண்டு கரும்புலியான எனது உணவுர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். அன்பானவர்களே! உங்களின் வாழ்விற்காக, இருப்பிற்காக எனது உயிரைக் கொடையாகக் கொடுப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். எமது இனத்தைச் சிங்கள தேசம் அழிக்கத் துடிப்பதை நினைக்கும் போதுதான் இன்னும், இன்னும் பல பிறப்பெடுத்து எமது இனத்தின் விடிவிற்காக கரும்புலியாகப் போகத் துடிக்கின்றேன். அன்பான எமது மக்களே! நாம் சுதந்திரம் பெற்றே தீரவேண்டும் என்பதை இப்போது சிங்களவன் செய்யும் கொடுமைகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றதல்வா? எங்களின் உறவுகளும், எங்களின் சொத்துக்களும் எங்கள் கண்முன்…
-
- 22 replies
- 2.6k views
-
-
வான்புலிகள் தோற்றுவித்த புதிய அச்சுறுத்தல் - வேல்ஸிலிருந்து அருஷ் உலக சந்தையில் அதிகரித்துவரும் விலை உயர்வுகளில் எரிபொருட்களின் விலை உயர்வுக்கு அடுத்த நிலையில் அரிசியின் விலை உயர்ந்து வருவது மூன்றாம் உலக நாடுகளை அதிகம் பாதித்து வருகின்றது. இந்த விலை உயர்வு மேற்கத்தைய நாடுகளைவிட அரிசி உணவு வகையில் அதிகம் தங்கியுள்ள ஆசிய நாடுகளையே அதிகம் பாதித்துள்ளது. அரிசியை குறைந்தளவில் நுகர்ந்துவரும் பிரித்தானியாவிலும் அதன் விலை கடந்த வாரம் இரு மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உயிரியல் எரிபெருட்களுக்கான பயிர்ச்செய்கை, வறட்சி என்பன அரிசி உற்பத்தியை அதிகம் பாதித்துள்ள காரணிகள். இந்தக் காரணிகளால் குறைவடைந்துள்ள அரிசி உற்பத்தி ஆண்டுக்கான உலகின் தேவையாகிய 430 மில்ல…
-
- 3 replies
- 2.6k views
-
-
இலங்கை தமிழர் பிரசினையில் நல்லதே நடக்கும் என்று கருணாநிதி நம்பிகை தெரிவித்திருந்தார். இதுகுறித்து முதல் அமைச்சர் கருணாநிதியிடம் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு: கேள்வி: இலங்கையில் போர் நிறுத்தம் குறித்து நேற்று உங்களிடம் கேட்டபோது, நல்லதே நடக்கும் என்று சொன்னீர்கள்? அது என்ன ஆயிற்று? பதில்: இன்று ஓர் இரவு பொறுத்து இருந்து பார்ப்போம். இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி கூறினார். Nakeeran --------------------------------------- பாதுகாப்பு வலயம்' மீது பாரிய தாக்குதலுக்கான தயார் நிலையில் இராணுவம்: அச்சத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரமாக உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனம் செய்யப்பட்டுள…
-
- 8 replies
- 2.6k views
-
-
கிளிநொச்சியில் புலிகளின் இலக்குகள் மீது விமானத்தாக்குதல் 1/25/2008 9:34:23 AM வீரகேசரி இணையம் - கிளிநொச்சி செல்வநகர் பகுதியில் இன்று காலை ஸ்ரீ லங்கா விமானப்படையினர் விமானத்தாக்குதல் நடத்தியுள்ளனர்.இன்று காலை 7.30 மணியளவில் விமான படையினரின் சுப்பர் சொனிக் விமானங்கள் செல்வநகர் பகுதியில் விடுதலை புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ் வான் தக்குத்லை விமான படையினர் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கொமாண்டோ அண்டி விஜயசூரிய தெரிவித்தார். இன்று காலை மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதலின் போது ஏற்பட்ட சேத விபரம் இதுவரை தெரியவரவில்லை
-
- 5 replies
- 2.6k views
-
-
பின்வருவனவற்றை உங்கள் இணையத்தளங்கள், வலைப்பூக்களிலும் வெளியிடுவதுடன் ஏனைய இணையத் தளங்களுக்கும் அனுப்பி வையுங்கள். படங்களும் அதற்கான இணைப்புக்களும் http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-100x100.gif http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-150x150.gif http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-150x150.png http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-200x200.gif http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-200x200.png http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-250x250.gif http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-250x250.png http://irtag.yarl.com/wp-content/upload/st...…
-
- 10 replies
- 2.6k views
-
-
புலிகளின் தாக்குதல்கள் உதிரிகளானவையல்ல - ஜெயராஜ் - கிழக்கைப்போல் வடக்கும் மீட்கப்படும்; கிளிநொச்சி நகரம் விரைவில் கைப்பற்றப்படும்; விடுதலைப் புலிகள் விரைவில் தோற்கடிக்கப்படுவர் என மகிந்த ராஜபக்ச அரசாங்கமும், அதன் படைத்தரப்பும் அறிவிப்புக்கள் செய்து வரும் நிலையில், வடக்கு-கிழக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களும் மாற்றங்களும் தீவிரம் பெற்றுள்ளன. கடந்த பத்து நாட்களுக்குள் வடக்கு-கிழக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் பல இடம்பெற்றுள்ளன. இத்தாக்குதல்கள் தற்காப்புத் தாக்குதல்கள், அதிரடித்தாக்குதல்கள், முறியடிப்புத் தாக்குதல்கள், வலிந்து தாக்குதல்கள் எனப் பல வகைப்பட்டிருந்தன. இந்த வகையில், மூன்று வகை நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள…
-
- 0 replies
- 2.6k views
-
-
http://www.tamilsydney.com/content/view/1684/37/
-
- 1 reply
- 2.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்த மோதல்களின் போது அரச பாதுகாப்பு படையினர் செயற்பட்ட விதம் குறித்து மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதியால் நியாமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (16) பாராளுமன்றில் அவை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்பிக்கப்பட்டது. இலங்கை அரசின் பாதுகாப்பு படையினர் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறவில்லை என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் யுத்த சூனிய வலயத்தில் அரச பாதுகாப்பு படையினர் அநாவசியமாக பொது மக்களை இழக்கு வைத்து தாக்குதல்களை ம…
-
- 13 replies
- 2.6k views
-
-
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வந்து சொன்னாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யமாட்டோம் என மாவை சேனாதிராஜா உறுதிபட கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் தமிழரசுக் கட்சியின் ஏகபோகம் அதிகரித்த நிலையில், ஏனைய கட்சிகள் புறக்கணிக்கப்பட தொடங்கியதும், கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றது. எனினும், பல வருடங்களாக இந்த கோரிக்கையை தமிழரசுக்கட்சி கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்த நிலையில், இலங்கை வடக்கு முதல்வர் விக்னேஷ்வரனின் திடீர் எழுச்சியின் பின்னரான சூழலில், தமிழரசுக் கட்சியின் இருப்பிற்கு ஆபத்த நிகழலாமென்ற பரவலான கருத்துக்கள் எழத் தொடங்கியது. இந்தநிலையில் சுவிஸிலுள்ள தமிழர் அமைப்பொன்றின் ஊடாக தமிழ்தேசிய கூட்டமைப்பிலுள்ள கட்சி…
-
- 38 replies
- 2.6k views
-
-
சிங்கள இனவாதத்தை பற்றிய அபிப்பிராயம்....? http://www.alertnet.org/thenews/newsdesk/I...5100061f8d4.htm http://www.crisisgroup.org/home/index.cfm?id=5144&rss=1
-
- 0 replies
- 2.6k views
-
-
இலங்கைப் படையினருக்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்க இந்தியா இணக்கம்! இலங்கைப்படையினருக்கு தொடர்ந் தும் இராணுவப் பயிற்சிகளை வழங்க இந்தியா உடன்பாட்டுக்கு வந்திருக் கின்றது என்று இந்தியத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல் லாகம மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச் சின்போதே இந்த இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் பேச்சில் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து, நீண்ட கலந்துரையாடல் நடைபெற்ற தாக வெளிவிவ கார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பில் இலங்கை இந்திய கூட்டுக்கடற் படை ரோந்து தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த ரோந்து குறித்துப் ப…
-
- 15 replies
- 2.6k views
-
-
இலங்கை சேர்ந்த 184 சிங்களவர்கள் தஞ்சை மாவட்டம், பூண்டி மாதா திருக்கோயிலுக்கு பயணமாக 03.09.2012 அன்று வந்தனர். இதையறிந்த நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் , தமிழ்த தேசப் பொதுவுடமைக் கட்சி தோழர்கள் சுமார் 100க்கு மேற்பட்டோர் பூண்டி மாதா திருக்கோயிலை முற்றுகையிட்டனர். இதை சற்றும் எதிர்பாரத சிங்களவர்களை அழைத்துவந்த பேருந்து ஓட்டுனர் சிங்களவர்களை விட்டு ஓடினார். முற்றுகைப் போரட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமைவகித்தார், நாம்தமிழர் கட்சி மாநில ஒருகிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் விவேகான்ந்தன் உட்பட 100க்கு மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். h…
-
- 42 replies
- 2.6k views
-
-
போருக்குக் காரணமான தென்னிலங்கை அம்பலத்துக்கு வருகின்ற உண்மைகள் ? நிலவரத்தின் ஆய்வாளர் கபிலன் இலங்கைத் தீவில் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற போருக்கு காரணம் யார் என்ற உண்மை இப்போது அவர்களின் வாயாலேயே வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் கிளிநொச்சி அரச படைகளால் வெற்றிகொள்ளப்பட்ட பின்னர்- தென்னிலங்கையில் இருந்து வருகின்ற கருத்துக்கள் முற்றிலும் இனவாத விஷம் கலந்ததாகவும்- போருக்கான தமது பங்களிப்புக்கு உரிமை கோருவதாகவும் இருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. கிளிநொச்சியின் வெற்றியில் உரிமைகோரி பிரதான கட்சிகள் தமக்கிடையே மோதிக் கொண்டிருக்கின்றன. இந்த மோதலின் காரணமாக ஒரு உண்மை அவர்களின் வாயாலேயே வெளிவந்தும் இருக்கிறது. ‘நுணலும் தன் வாயால் கெடும்…
-
- 0 replies
- 2.6k views
-
-
தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா யாழ்ப்பாணத்துக்கு இன்று சனிக்கிழமை வருகைதந்தார். இவருக்கான வரவேற்பு நிகழ்வு யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதரக பிரதித் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி, இலங்கை தமிழரசுக்கு கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர். - http://www.malarum.com/article/tam/2014/12/20/7564/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE…
-
- 30 replies
- 2.6k views
-
-
Sep 24, 2011 / பகுதி: செய்தி / இன்று நடப்பதை அன்றே சொன்ன யோகி - இணைத்தலைமையின் நகர்வை புரிந்துகொண்டிருந்த புலிகள்! இன்று நடப்பதை அன்றே சொன்ன யோகி - இணைத்தலைமையின் நகர்வை புரிந்துகொண்டிருந்த புலிகள்! http://www.pathivu.com/news/18523/57//d,article_full.aspx
-
- 4 replies
- 2.6k views
-
-
மீண்டும் இந்தியா -தாரகா- முன்னர் சிறுவர்களுக்காக வெளிவந்த ~அம்புலி மாமா| இதழில் மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதாக ஒரு கதை வந்த ஞாபகம் இருக்கிறது. எனது சிறுவயதில் அதனை படித்திருக்கிறேன். அந்த காலத்தில் பெரும்பாலும் அம்புலிமாமாவை படிக்காத சிறுவர்களை காண்பது கடினம். அந்தளவிற்கு ~அம்புலிமாமா| சிறுவர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்தது. விக்கிரமாதித்தியன் என்ற மன்னனிடம் கதைகளை கேட்டுவரும் வேதாளம், அந்த கதைகளில் சற்றும் திருப்தி கொள்ளாமல் மீண்டும், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வதும், அதனை கீழிறக்குவதற்கு சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தியன் மீண்டும், மீண்டும் கதைகள் சொல்வதுமாக நீளும் அந்த வேதாளக் கதை. தற்போது மீண்டும் இ…
-
- 8 replies
- 2.6k views
-
-
"புலிகள் மீது அடாத பழி" போடும் "றோ" உளவுத்துறை - "இந்து" நாளிதழின் கூட்டுச்சதி: தென்செய்தி [ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007, 19:43 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அடாத பழி போட இந்திய றோ உளவுத்துறையும் இந்து நாளிதழும் கூட்டுச்சதி செய்வதாக "தென்செய்தி" இதழ் சாடியிருக்கிறது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனை ஆசிரியராகக் கொண்ட "தென்செய்தி" இதழில் எழுதப்பட்டுள்ளதாவது: வான்புலிகளிடமும், கடற்புலிகளிடமும் தொடர்ந்து தோல்விகளைப் பெற்று நடுங்கிக்கொண்டிருக்கும் சிங்கள இராணுவத்திற்கும் அரசுக்கும் முட்டுக்கொடுத்து நிறுத்தும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளனர். சிங்கள அதிபர் இராசபக்ச மற்றும் அவரது அமைச்சர்கள் அடிக்கடி டில்லிக்கு வந்து பா…
-
- 8 replies
- 2.6k views
-
-
யாழ்ப்பாணத்தில் ஒட்டுகுழு ஈ.பி.டீ.பி. முக்கியஸ்தர் இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை Saturday, January 29, 2011, 6:59 யாழ்ப்பாணத்தில் ஒட்டுகுழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியின் (ஈ.பி.டீ.பி. )முக்கியஸ்தர் ஒருவர் இன்று காலை பகிரங்க இடத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் இன்று (29) காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிசாரின் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.இவன் யாழ். மாவட்ட வடமராட்சி கிழக்குப் பதில் பொறுப்பாளர் இராசரத்தினம் சதீஷ் என்பதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பருத்தித்துறை ஆனை விழுந்தான் சந்தியில் அவர்மீது இனந்தெரியாதவர்களா…
-
- 3 replies
- 2.6k views
-
-
நோர்வே தூதர் பிரட்ஸ்கார் நாளை வன்னி சென்று புலிகளை சந்திப்பார் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார் நாளை 1 ஆம் திகதி வன்னி செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 23 ஆம் திகதி பிரட்ஸ்கார் வன்னிக்குச் செல்லவிருந்த போதிலும் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி கடைசி நேரத்தில் இந்த விஜயத்தை அரசு ரத்துச் செய்திருந்தது. எனினும், வன்னிக்கான பயணத்தை கைவிடுமாறு பிரட்ஸ்காரை தாங்கள் கேட்கவில்லையெனவும் அவராகவே இதனைக் கைவிட்டிருந்ததாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை மறுத்த ஹான்ஸ் பிரட்ஸ்கார், வன்னிக்குச் செல்ல வேண்டாமெனவும் பாதுகாப்பு பிரச்சினைகளிருப்பதாகவும் அரசு கூறியதாலேயே தனது பயணம் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்திருந…
-
- 11 replies
- 2.6k views
-