ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
நினைவுத்தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளிகளாகயிருந்தவர்கள் மன்னிப்பு கோரவேண்டும் – உடனடியாக தூபி மீளநிர்மாணிக்கப்படவேண்டும் – சுமந்திரன் வேண்டுகோள் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளிகளாயிருந்த அனைவரும் அதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும உடனடியாக நினைவுத்தூபி மீள நிர்மாணிக்கப்படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த யுத்த நினைவு தூபி உடைக்கப்பட்ட நிகழ்வு, காட்டுமிராண்டித்தனமானதும் நியாயமாக சிந்திக்கும் எவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதானதும் அல்ல. இது அனுமதியின்றி கட்டப்பட்டது …
-
- 13 replies
- 1.2k views
-
-
இன்று காலை ஏற்பட்ட விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெய்வாதீனமான உயிர்தப்பியுள்ளார். கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த அவரின் வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது எனினும் சுமந்திரனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சுமந்திரன் பயணித்த வாகனம் கடுமையாக விபத்துக்குள்ளானதில் முழுமையாக சேதமடைந்துள்ளது. மழை பெய்து கொண்டிருந்த போது, அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது வாகனம் வீதியில் வழுக்கி, பலமுறை உருண்டு விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. எனினும் வேறு வாகனம் ஒன்றின் மூலம் அவர் கல்முனை நோக்கி பயணித்துள்ளார். https://tamilwin.com/article/road-accident-in-colombo-1619756644
-
- 13 replies
- 1.4k views
- 1 follower
-
-
சிங்கள, ஆங்கில ஊடக ஆசிரியர்களுக்கு மகிந்த நேரடி மிரட்டல் சிங்கள, ஆங்கில ஊடகங்களில் செய்திகளை 'அடக்கிப் போடுங்கள்' என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேரடி மிரட்டல் விடுத்துள்ளார். சிங்கள, ஆங்கில ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது சில ஊடக ஆசிரியர்களை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, "நீங்கள் எல்லாம் செய்திகளை அடக்கிப் போடுங்கள்" என்று எச்சரித்துள்ளார். மேலும் நோர்வேயில் தனக்கு பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் இல்லை என்றும் தாம் நோர்வேக்கு சென்று பேச்சுக்களை நடத்த வேண்டும் என்பதற்காகவே தற்போதைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றும் இதை சிங்கள ஊடக ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மகிந்த கூறியுள்ளார். விடுதலைப் புலிகளுடன் தாம் பேச்…
-
- 13 replies
- 2.7k views
-
-
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் இந்தியாவில் தமிழகத்தைத் தவிர எந்த மாநிலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.இது ஈழ ஆதரவாளர்களிடையே வேதனையான விஷயமாக இருந்து வந்தது. இந்நிலையில் ஈழப் போராட்ட வரலாற்றை காஷ்மீர் மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப் போவதாக சொல்லியிருக்கிறார் பேராசிரியர் கிலானி. ‘மே 17 இயக்கம்’ சார்பில் ஈழப் போராளி திலீபன் நினைவு நாள் நெல்லையில் அனுசரிக்கப்பட்டது.இதில் காஷ்மீர் விடுதலைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் மனித உரிமைப் போராளி கிலானி கலந்து கொண்டார்.யார் இந்த கிலானி டெல்லி பல்கலைக்கழகத்தின் உருதுப் பேராசிரியரான கிலான…
-
- 13 replies
- 2.5k views
-
-
-என்.ராஜ் சர்வதேச ரீதியில் கூகுள் நடத்திய கூகுள் கோட் இன் - 2019 (Google Code – In 2019) போட்டியில், யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மாணவன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். நித்தியானந்தன் மாதவன் என்ற மாணவனே, இவ்வாறு வெற்றி பெற்றுள்ளார். இவருக்கான கௌரவிப்பு விழா, கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமையகத்தில், ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில், 76 நாடுகளைச் சேர்ந்த 3,566 மாணவர்கள் பங்கேற்றனர். இதன்போது, 29 திறந்த மூல நிறுவனங்களுடன் 20 ஆயிரத்து 840 இடுபணிகள் (tasks) வழங்கப்பட்டன. இதில் “Apertium” என்ற மென்பொருள் தொடர்பில், குறித்த மாணவன் முதலிடத்தைப் பெற்று, Grand Prize Winner பட்டத்தை வென்றுள்ளார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்…
-
- 13 replies
- 1.5k views
-
-
யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவர் மெலும் தெரிவிக்கையில், எங்களுடைய அமைப்பு குறித்த பாதீட்டை எதிர்க்கும். அது அனைவருக்கும் தெரிந்த விடயம். புதிய விடயம் அல்ல. ஆனால் எங்களைப்பொறுத்தவரையில் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது. அது மிக விரைவில் வெளிவரும். ஊழல் செய்து தனிபர் உழைப்பதற்கான ஓர் இடமாக மாறியுள்ளது. இதனை மக்கள் மிக விரைவிலே உணர தொடங்குவார்கள். அந்த கலாச்சாரத்தை வைத்துக்கொண்டு ஒருநாளும் முடிவுக்கு வர முடியாது. ஒரு கோடி ரூபாவில் அரைவாசியை செலவழித்துக்கொண்டு மிகுதியை தமது பொக்கட்டுக்குள் போடும் நிலைதான…
-
- 13 replies
- 916 views
- 1 follower
-
-
-ரஸீன் ரஸ்மின் முல்லைத்தீவு நந்திக்கடலில் தொடர்ந்தும் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். நந்திக்கடல் வடக்காறு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மீன்கள் இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்கிக் கொண்டிருப்பதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சிலாப்பி, கெளிறு, மணல், மன்னா, கூறல் உள்ளிட்ட மீன்களே இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இன்று வியாழக்கிழமையுடன் ஐந்தாவது நாளாகவும் சுமார் 50 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு கரையொதுங்கி வரும் மீன்களை வட்டுவாகல் கிராமிய கடற்தொழில் மீன்பிடி கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து கறைத்துறைப்பற்று பிரதேச சபை …
-
- 13 replies
- 2k views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பெயரினை துஸ்பிரயோகம் செய்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அப்பட்டமான போக்கிலித் தனத்தை வெளிப்படுத்தி நிற்பதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. தற்போதைய சூழல் தொடர்பினில் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் தாயகம்.தேசியம்.சுயநிர்ணயமெனும் கோசங்களை வலியுறுத்தி ‘ பொங்குதமிழ்’ பிரகடனம் ஊடாக தமிழ் மக்களின் அங்கிகாரத்திற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நீண்டதொரு பாதையை கடந்தே வந்துள்ளது. நடந்தது இன அழிப்பு என்பதில் மாற்றுக்கருத்தேயில்லையென்பதுடன். சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி அண்மையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்புக்களையும் இணைத்து நடத்தியபோராட்டம் மிகப் பெரும் அவ…
-
- 13 replies
- 556 views
-
-
குளோபல் தமிழ் நியூஸ் (GTN) இணையத்தளம் தானே தன்னைச்சுற்றி உருவாக்கியிருக்கிற குழப்பத்திற்கான விளக்கம் இது பதிவு, மீனகம், ஈழம் நியூஸ் ஆகிய இணையத்தளங்கள் தமது கட்டுரை ஒன்றை மறுபிரசுரம் செய்துள்ளதாக குளோபல் தமிழ் நியூஸ் என்னும் இணையத்தளம் குற்றம் சுமத்தி செய்தி ஒன்றை கடந்த 01ம் திகதி வெளியிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக் குறித்த தன்னிலை விளக்கம் ஒன்றை பதிவு செய்ய செய்யவேண்டிய கடப்பாடு எங்களுக்கு உள்ளது. வியாபார நோக்கங்களை பெரும்பாலும் முதன்மைப்படுத்தி இணையத்தளங்களை நடத்திவரும் இணையங்களில் இருந்து செய்திகளை மறுபிரசுரம் செய்யும் போது யாருக்கும் ஆத்திரமும் கோபமும் வருவது சகஜமே. அதனை நாம் முதலில் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் எமது நிலைப்பாடு என்பது வேறுபட்டது. முள்ளி…
-
- 13 replies
- 1.8k views
-
-
சித்தார்த்தனிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் : மாவை எம்.பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தொடர்பாக விசாரணை ஒன்று முன்னெடுக்க வேண்டும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மவை சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையிடம் கோரியுள்ளது. புளொட் அமைப்பின் தலைவர் சித்தர்த்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன் அனுமதியின்றி அந்த அமைப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/…
-
- 13 replies
- 772 views
- 1 follower
-
-
உடைகிறது கூட்டமைப்பு! தவிர்ப்பது எவ்வாறு? எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்துவிடும் அபாயம் தோன்றியுள்ளதாக வரும் தகவல்கள் கவலையளிப்பதாகவே உள்ளன. இவ் உடைவு குறித்த உத்தியோகபூர்வமான ஊடக அறிக்கைகள் எந்நேரமும் வெளிவரக் கூடிய நிலையே தோற்றம் பெற்றுள்ளது. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், விடுதலைப்புலிகளால் பரிந்துரைக்கப்பட்டிருந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினைச் சேர்ந்தவர்களின் கூட்டாக கூட்டமைப்பு இருந்து வருகிறது. இக் கூட்டமைப்பிலிருந்து தமிழ்க் காங்கிரஸ் மற்றும் விடுதலைப்புலிகளால் பரிந்துரைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வெளியேற இருப…
-
- 13 replies
- 1.4k views
-
-
5 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள் [புதன்கிழமை, 2 மே 2007, 21:20 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 5 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விபரம் வருமாறு: யாழ். மாவட்டத்தில் சிறிலங்கா கடற்படையினருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நேரடி மோதலின் போது நான்கு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். கப்டன் அபிநயன் என்று அழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சொந்த முகவரியாகவும், றாச்குமார் அன்புபுரம் முழங்காவில் கிளிநொச்சியை தற்காலிக முகவரியாகவும், உதயநகர் கிழக்கு கிளிநொச்சியை வேற்று முகவரியாகவும் கொண்ட பாலசிங்கம் உதயகுமார் மேஜர் ஈழமாறன் அல்லது கடலருவி என்று அழைக்கப்படும் மட்டக்க…
-
- 13 replies
- 2.8k views
-
-
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் திருகோணமலையில் நடைபெறுகிறது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் அரசியல் பீடத் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் கொழும்புஇ வடக்கு கிழக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில்இ தேர்தல் தொடர்பான கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இந்த கூட்டம் இன்று நடத்தப்படுகிறது.http://www.pathivu.com/news/41155/57//d,article_full.aspx
-
- 13 replies
- 657 views
-
-
எங்கள் தலைவர்! உங்கள் தம்பி வே.பிரபாகரன் எங்கே தேடுவது?? சகோதரர் மனோகரனிடம் JANUARY 21, 2014 COMMENTS OFF கேள்வி:-சரி பிரபாகரன் இருக்கிறார் அவர் வெளிப்படவில்லை… என்று வைத்துகொள்வோம்…இந்த நிலையில் யார் பேச்சை கேட்பது இப்போது எண்ணற்ற தலைவர்கள் தோன்றிவிட்டார்களே? மனோகரன்:-பிரபாகரன் தனக்கு பின் யாரென ஒருவரை தெரிவு செய்திருந்தால் இப்படி பெருந்தொகையானவர்கள் தோன்றியிருக்க மாட்டார்கள்.அவர்கள் தாமே பிரபாகரனின் குரல் என்று கூறியிருக்க மாட்டார்கள்.இப்போது பிரபாகரன் எடுத்த பணிகளை நாமே தொடர்கிறோம் என்று கூறும் யாரிடமும் அவர் எங்கே என்ற கேள்விக்கு பதில் இல்லை.ஆகவே இவர்கள் அனைவரும் பிரபாகரனின் தேர்வில் இல்லாதவர்கள் என்பது தெளிவு.பிரபாகரனின் உண்மையான உறுதியான குரல் இன்னமும் வரவில்லை.…
-
- 13 replies
- 1.4k views
-
-
“அழகிய கம்பீரமாக எழுந்து நிற்கும் நல்லூர் ஆலயம் போல் அனைவராலும் பேசப் படக்கூடிய புதியதொரு யாழ்ப்பாணம் நகரம் கட்டியெழுப்பப்படும்” இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர கட்டடத்திற்கு இன்று (07) அடிக்கல் நாட்டிய போது இதனைத் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாணம் மாநகர மண்டபத்திற்கு நாம் இன்று அடிக்கல் நாட்டியுள்ளோம். இது யாழ்ப்பாணத்திற்கு அழகிய மண்டபமாக இருக்கப் போகிறது. நல்லூர் ஆலயம் எந்தளவு அழகியதொரு கம்பீரமாக எழுந்து நிற்கின்றதோ அதேபோல் எல்லோராலும் பேசப்படக்கூடிய அழகான புதியதொரு யாழ்ப்பாணம் நகரத்தை கட்டியெழுப்பப்பும் மாபெரும் திட்டம்…
-
- 13 replies
- 1.2k views
-
-
`பிரபாகரனை' வெளியிடுவதற்கு தணிக்கை சபை அனுமதித்தது [04 - March - 2008] "பிரபாகரன்" என்ற பெயரில் 25 வருட இனப்பிரச்சினையை சித்திரிக்கும் திரைப்படத்தை வெளியிட இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன தணிக்கைச் சபை அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் இந்த திரைப்படம் வெளிவருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கை அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் மத்தியில் பொது மக்கள் படும் துயரங்களை எடுத்துக் காட்டுவதாக இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் கதையானது விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தப்பித்த தற்கொலைக் குண்டுதாரியையும் அவர் எப்படி அந்த கடுமையான முடிவுக்கு தள்ளப்பட்டாரென்பதை…
-
- 13 replies
- 3.7k views
-
-
பெட்டா ரயில் நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஊடகங்களுக்கு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். வேலைநிறுத்தம் நடந்தால் டிக்கெட் ஏன் விற்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் விடுமுறைக்கு ஏராளமான இடங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சுற்றுலா பயணி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எவரேனும் இலங்கைக்கு விஜயம் செய்ய வந்தால், தமது சொந்த வாகனத்தை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கின்றார் . பெருமாள் .
-
- 13 replies
- 933 views
-
-
இலங்கையின் வட மாகாணத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துவரும் நிலையில்,யாழ்ப்பாணத்தில் இராஜதந்திரப் பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதென்ற இந்தியாவின் தீர்மானமானது தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். யாழ்.குடாநாட்டில் 5 பிரதான வீதிகளை அகலமாக்கும் பணியில் சீன ஒப்பந்தக்காரர்கள் ஈடுபட்டிருப்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.அத்துடன், மின்சார விநியோக நடவடிக்கைகளிலும் சீன ஒப்பந்தக்காரர்கள்ஈடுபட்டிருக்கின்றனர். யாழ்ப்பாணம்காங்கேசன்துறை வீதி,யாழ்ப்பாணம்பலாலி வீதி,யாழ்ப்பாணம்மானிப்பாய் வீதி,யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி,யாழ்ப்பாணம்ஊர்காவற்றுறை வீதி ஆகிய பிரதான வீதிகளே சீனர்களால் திருத்தப்படுவதாக அண்மைய செய்தியொன்று தெரிவிக்கிறத…
-
- 13 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஊழியர்களுக்கு உயிர் அச்சுறுறுத்தல் விடுத்து துண்டுப் பிரசுரம் ஒன்று சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களினால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு ஒட்டப்ட்டுள்ளது. நாட்டைக்காக்கும் தேசிய அமைப்பு என்ற பெயரில் வெளியிடப்பட்டள்ள இந்த துண்டுப் பிரசுரத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துறைசார்ந்த முறையில் எண்ணிக்கை ரீதீயாக கொலை செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு துணைபுரிந்த குற்றத்திற்காக கலைப்பீடத்தில் 86 பேருக்கும், முகாமைத்துவப் பீடத்தில் 67 பேருக்கும், மருத்துவ பீடத்தில் 38 பேருக்கும், விஞ்ஞான பீடத்தில் 27 பேருக்கும், சித்த பீடத்தில் 7 பேருக்கும்,…
-
- 13 replies
- 3.7k views
-
-
மட்டக்களப்பிலிருந்து மகான் எழுதிய ” மகிந்த பிள்ளாயான் இடையே ஆரம்பித்த நிழல் யுத்தம் ” ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் செந்தமிழ்] தெற்காசிய வலைய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக் கொண்ட பதினைந்தாவது உச்சி மகாநாட்டின் மூலம் மஹிந்தா அரசுக்கும் ஒட்டுக்குழுவின் தலைவர் பிள்ளையானுக்கும் இடையில் முதல் முறையாக பாரிய நிழல் யுத்தம் ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்தின் கைபொம்மையாக செயற்பட்டுவரும் ஆயுதக்குழுவின் தலைவர் பிள்ளையானை பாரத பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் சந்திக்க மறுப்பு தெரிவித்தமை பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கும், முதல் அமைச்சருக்கும் அடித்த சாவு மணியாகும். 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் இலங்கையின் சிறுபான்மை இனமா…
-
- 13 replies
- 2.3k views
-
-
மட்டக்களப்பு, கல்லடிப் பாலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. (படங்கள்:- கே.எஸ்.சசிக்குமார், தேவ அச்சுதன், ஜவ்பர்கான்) http://tamil.dailymirror.lk/--main/61368-2013-03-22-11-44-51.html
-
- 13 replies
- 871 views
-
-
த.ம.வி.பு அமைப்பின் பிரதித் தலைவன் பிள்ளையான் கொழும்பில் தங்கி நின்று மஹிந்த மற்றும் பல அரசியல் தலைவர்களைச் சந்தித்த வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றும் தமிழ் அமைச்சர் ஒருவரையும் அவரது கட்சியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் ஒருவரையும் சந்தித்த பிள்ளையான் அச்சமயம் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பிற்கு தமது கட்சி எதிரானது அல்ல என்ற தகவலை அவர்களிடம் தெரிவித்தார் என அறிய வந்துள்ளது. அண்மையில் இடம் பெற்ற மட்டு. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமது கட்சியின் உறுப்பினர்களுடன் கொழும்பு வந்துள்ள பிள்ளையான், உயர் பாதுகாப்புடன் கொழும்பில் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார் என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. அவரது கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்ப…
-
- 13 replies
- 2.9k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணமடைந்தது உண்மையே என அந்த அமைப்பின் சர்வதேச உறவுகளுக்கான பிரிவின் தலைவர் செல்வராசா பத்மநாதன் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் கூட, அந்த மரணத்தின் சர்ச்சைகள் நீடிக்கின்றன. காரணம்..? முதலில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது முதல் இன்று வரையிலான முக்கிய நிகழ்வுகளைக் காண்போம்... மே 18 : "இலங்கை ராணுவ முற்றுகையில் இருந்து (வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதி) பிரபாகரன் தனது தளபதிகளுடன் குண்டு துளைக்காத ஒரு கவச வேனில் வட பகுதியை நோக்கி தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது, ராணுவத்தினர் வீசிய ராக்கெட்டில் பிரபாகரன் சென்ற வேன் சிதறடிக்கப்பட்டது. பின்னர், அந்த வேனுக்கு…
-
- 13 replies
- 6.8k views
-
-
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்! நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான கௌரவ ஆர்.எம்.எஸ். ராஜகருணா, கௌரவ மேனகா விஜேசுந்தர, கெளரவ சம்பத் பி.அபேகோன் மற்றும் கௌரவ எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார். https://athavannews.com/2025/1416130
-
-
- 13 replies
- 807 views
- 1 follower
-
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 4 நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அடுத்த மாதம் 7ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார். மஹிந்த பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர், செல்லும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்றும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரின் இந்த விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/பரதமர-மஹநத-அடதத-வரம-இநதய-பயணம/175-244863
-
- 13 replies
- 1.2k views
-