ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142783 topics in this forum
-
யுத்த குற்றவாளி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றுள்ளார் எனக் கொழும்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் சிங்கபூருக்கு தப்பி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் அமைச்சர் விமல் வீரவன்சவும் தப்பி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. சிறிலங்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தாம் கைது செய்யப்படலாம் என்று அச்சத்திலேயே அவர் நாட்டில் இருந்துவெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இத்தகவலை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. http://www.pathivu.com/news/36799/57//d,article_full.aspx
-
- 12 replies
- 1.8k views
-
-
"யாழ்ப்பாணத்தில் மிகவும் அச்சத்தின் மத்தியிலேயே வாழவேண்டியுள்ளது. இதை மாற்றவேண்டும். நாட்டைப் பாதுகாக்க ஓகஸ்ட் 17ஆம் திகதி சிங்களவர்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும். சிங்களவர்கள் யார் என்பதைக் காட்டவேண்டும்." - இவ்வாறு நயினைதீவு நாகவிகாரதிபதி வண. நவந்தகல பதுமகீர்த்தி தேரர் தெரிவித்தார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 61 பெளத்த மற்றும் சிவில் அமைப்புகள் நேற்று மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்தன. இந்த நிகழ்வு கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:- "நான் யாழ்ப்பாணத்தில் 42 வருடங்களாக வாழ்ந்து வருகின்றேன். அங்குள்ள நிலைமை என்ன என்பது எனக்குத்தான் நன்றாகத் தெரியும். ரணில் விக்…
-
- 12 replies
- 1.1k views
-
-
கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாதளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் - டயனா கமகே By DIGITAL DESK 2 02 JAN, 2023 | 08:55 PM (இராஜதுரை ஹஷான்) வீதி கடைகளில் விற்பதற்காகவும், அனைவரும் வாங்கி பயன் படுத்துவதற்காகவும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குமாறு கோரவில்லை. வர்த்தக பயிராக அறிமுகப்படுத்துமாறு கோரியுள்ளேன். பயன்படுத்துபவர்கள் பயன்படுத்துவார்கள், கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம். தவறான மற்றும் முட்டாள்தனமான சிந்தனைகளில் இருந்து வெளிவரும் வரை இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்…
-
- 12 replies
- 617 views
- 1 follower
-
-
லெப் கேணல் வானதி /கிருபா அவர்களின் வீர வணக்கநாள் லெப் கேணல் வானதி/கிருபா நித்தியகரன் மாலதி தமிழீழம் (யாழ் மாவட்டம்) தாய் மடியில்-09.04.1974 வீரச்சாவு-21.03.2009 விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் ,,மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம் ,,ஆனாலும் மறைமுக கரும்புலிகள் ,,,போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும்,,,தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது. தாயக களங்களில் சமர்களிலெல்லாம் போராளிகளின் தன்னலமற்ற செயற்பாடுகளே வெற்றிகளை எமத…
-
- 12 replies
- 939 views
-
-
யாழ் பொதுசன நூலகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக அங்கிருந்து தொடர்பை ஏற்படுத்திய மக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகள் மற்றும் www.gtbc.fm வானொலிக்கு தெரிவித்திருக்கிறார்கள். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனைச் சந்திக்க முனைந்த மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை இலக்கத் தகடுகள் அற்ற பொலிஸார் மேற்கொண்டு உள்ளனர். இந்த தாக்குதலில் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் தாக்கப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்களின் போது தமிழ்த் தேசிய முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் தள்ளி விழுத்தப்பட்டு உள்ளனர். முன்னர் வந்த செய்திகள்: …
-
- 12 replies
- 1.8k views
-
-
அன்பான புலம்பெயர் மக்களே எல்லாவற்றையும் செய்யுங்கள்...ஆனால் இதையும் படியுங்கள்! -ஒரு போராளியின் உள்ளக் குமுறல்- திகதி:17.12.2010 sankathi
-
- 12 replies
- 1.9k views
-
-
November 3, 2013 சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை பிரித்தானியா மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி 04.11.2013 திங்கட்கிழமை, சுப்ரமணியம் பரமேஸ்வரன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றார். இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலமான 10 டவுணிங்க் வீதிக்கு முன்பாக திங்கட்கிழமை மாலை 5:30 மணிக்கு தனது உண்ணாநிலைப் போராட்டத்தை பரமேஸ்வரன் ஆரம்பிக்கின்றார். பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் முடிவை பிரித்தானியா மீளப்பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடரவுள்ள இவ் உண்ணாநிலைக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் இணைந்து அடையாள உண்ணாநோன்பை மேற்கொள்ளுமாறு பிரித்தானியாவாழ் தமிழீழ உறவுகளுக்கு பரமேஸ்வரன் அற…
-
- 12 replies
- 1.1k views
-
-
உறவுகளை இழந்த மக்களின்.... அவலங்களை, இன்று நேரடியாக... அறிந்துகொண்டேன் – அமெரிக்க தூதுவர் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் இரண்டினதும் அவசியத்தை அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் இன்று செவ்வாய்க்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்தித்து கலந்துரையாடினார். தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்கு அனைவரும் உரிமை உண்டு என்றும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார். போரின் போது குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களின் இதயத்தை உடைக்கும் கதைகளை இன்று நேரடியாக கேட்டு அறிந்துகொண்டதாகவும் அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1278688
-
- 12 replies
- 636 views
-
-
மன்னார், பெரியகடை பகுதியில் உள்ள வீடொன்றினுள் வேற்றுக் கிரகவாசி போன்ற மர்ம மனிதர் ஒருவர் திடீரென வந்து மறைந்ததாக குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றதாக தெரிவித்த வீட்டின் உரிமையாளர், குறித்த மர்ம நபர் சில நிமிடங்களில் மறைந்து விட்டதாகவும் கூறினார். இவ்வாறு தனது வீட்டுக்குள் புகுந்த மர்ம உருவம் கொண்ட நபரை தான் கையடக்கத்தொலைபேசி மூலம் படம் பிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/57974-2013-01-30-07-01-27.html
-
- 12 replies
- 3k views
-
-
இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் முகமாக தலைமன்னாருக்கு தனுஸ்கோடிக்கும் இடையிலான பாலம் அமைப்பது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மூன்று நாள் பயணமாக புதுடெல்லி சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன் போது நான்கு ஒப்பந்தங்களும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இன்று சந்தித்துப் பேசியுள்ளனர். இதன் போதே பாலம் அமைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன்படி, இத்திட்டத்திற்காக 5 பில்…
-
- 12 replies
- 1.6k views
-
-
காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நடிகர் சங்கம் போராடாது. அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு உண்டு என்று விஷால் கூறியுள்ளார். விஷால் சென்னையில் இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ''பாண்டிராஜ் இயக்கத்தில் 'கதகளி' படத்தில் நடித்து வருகிறேன். பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அடுத்ததாக முத்தையா இயக்கத்தில் 'மருது'வில் நடிக்கிறேன். அதனைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' நடிக்கவிருக்கிறேன். 'மருது' படத்தில் ராதாரவியுடன் நடிக்கவிருப்பதாக செய்தி வருகிறது. அது இன்னும் முடிவாகவில்லை. அவ்வாறு நடிக்கும் சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். நடிகர் சங்கம் என்பது வேறு, நடிப்பு என்பது வேறு. ராதாரவி…
-
- 12 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் நிர்வாக பதவிகளில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணா அம்மானிற்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையிலான பனிப்போர் மேலும் உக்கிரமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதுவரையில் பிரதித் தலைவர் பொறுப்பை வகித்து வந்த பிள்ளையானுக்கு பதிலாக ஜெயம் மாஸ்டரை பிரதித் தலைவராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் நியமித்துள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக கட்சியில் பல்வேறு கிளர்ச்சிகள் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ந…
-
- 12 replies
- 2.7k views
-
-
விடுதலைப்புலிகளுடனான போரின்போது காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கரை நேற்று (சனிக்கிழமை) சந்தித்த ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்ததுடன், இச்சந்திப்பில் காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தனது திட்டங்களையும் எடுத்துக் கூறியுள்ளார். மேலும் காணாமல்போனவர்கள் உண்மையில் இறந்துவிட்டதாகவும், அவர்களில் பெரும்பாலோர் விடுதலைப் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அல்லது கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்தோடு அவர்கள் தொடர்பாக தேவையான விசாரணைகள் முடிந்ததும், காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க நடவடிக்கை எ…
-
- 12 replies
- 1.8k views
-
-
யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல் 16 October 2025 எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து பயணிப்பது என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமையில், தமிழ் கட்சிகளின் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் உள்ளிட்ட முக்கிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். …
-
-
- 12 replies
- 537 views
- 3 followers
-
-
வன்னியில் இடம்பெறும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி சேகரிக்கும் பணி இன்று (25) முஸ்லிம் பிரதேசமான காத்தான்குழயில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்,காத்தான்குடி உலமா சபை, காத்தான்குடி வர்த்தகர் சங்கம்,காத்தான்குடி நகரசபை, போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தப் பணியை இன்று ஆரம்பித்து வைத்தன. http://www.tamilskynews.com/
-
- 12 replies
- 1.5k views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முஸ்லிம் பிரிவு உருவாக்கப்பட்ட வேண்டும் என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசரான சி.வே விக்னேஸ்வரன் தெரிவித்தார். முஸ்லிம் கட்சிகளை தொடர்ந்து நம்பியிருக்காது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முஸ்லிம் பிரிவு உருவாக்கப்பட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் கல்முனை மேயரும் செனட்டருமான மசுர் மௌலானவின் அகவை என்பது நிறைவு விழா கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில் தலைமையுரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். அதற்கான கொள்கை திட்டங்களை வகுத்து செயற்படுத்த வேண்டும். இதன் மூலம் பெறவேண்டியவற்றை இலகுவாக பெறமுடியும். இ…
-
- 12 replies
- 900 views
-
-
53 இஸ்லாமிய நாடுகள் பேரவை இலங்கையை ஆதரிக்க தீர்மானம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக ஏதாவது பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கு மேலும் பல நாடுகள் முன்வந்திருப்பதாக மகளிர் விவகார சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நேற்றுத் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கு 53 இஸ்லாமிய நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய மாநாட்டுப் பேரவை (ஓ.ஐ.சி) முன்வந்திருப்பதாகவும் அவர் கூறினார். இவ்விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கென விசேட தீர்மானமொன்றை நிறைவேற்றி அத்தீர்மானத்தை ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போதே இஸ்லாமிய மாநாட்டு பேரவை…
-
- 12 replies
- 1.8k views
-
-
இந்தியாவா? சீனாவா? - தேர்லுக்குப் பின் இலங்கை எந்தப் பக்கம்? 29 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியின் பின்னணியில் இந்தியா முக்கிய பங்காற்றியதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற பிறகு இலங்கையில் சீன முதலீடுகள் ஏதும் பாத…
-
- 12 replies
- 1.4k views
- 1 follower
-
-
சிறிலங்காவிற்கான பயணத்தின்போது இறுதியாக மோதல் நடைபெற்ற பகுதியை உலங்குவானூர்தியில் இருந்து பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன், அப்பகுதியில் கனரக ஆயுதங்களின் பாவனைக்கான தெளிவான சான்றுகளை காணவில்லை என தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலில் கூறியதாவது: இறுதியாக நடைபெற்ற போரில் கனரக ஆயுதங்களின் பாவனைக்கான தெளிவான ஆதாரங்களை நான் காணவில்லை. இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலைகண்டு நான் மிகுந்த கவலை அடைந்துள்ளேன். நான் உலகம் முழுவதிலும் உள்ள இதனை ஒத்த பகுதிகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளேன், ஆனால் இங்கு கண்டதை போல நான் எங்கும் கண்டதில்லை. பலர் தமது…
-
- 12 replies
- 1.6k views
-
-
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போ வதில்லை என்று தெரிவித்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியானது ஜனநாயக தேசியக் கூட்டணியில் அங்கத்துவம் வகிப்பதுடன் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது. இதில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கு ஏற்ப இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் வழிவிடும் முகமாக இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்குத் தான் தீர்மானித்துள்ளார் என்று சிவசக்தி ஆனந்தன் அறிவ…
-
-
- 12 replies
- 804 views
-
-
பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் வரலாறு முழுக்க சுயாதீனமானவர் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நியமிக்கப்பட முன்னமேயே, அவர் பக்க சார்பற்றவர் என நாட்டுக்கு நீரூபித்தவர் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் விடுதலை புலிகள் பலம்பெற்று இருந்த காலத்தில் கூட அவர் துணிச்சலுடன் தனது கருத்துகளை முன்வைக்க தவறவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மனோ கணேசன், அவர் மீதான வெட்கம் கெட்ட அழுத்தத்தை அரசு நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதிகார போக்குக்கு எதிராக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில், எங்களது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் முக்கியத்துவத்தை இன்று நாடு உணர்கின்றது என்றும் இதன் நடுநிலையாக தேர்தல்கள் அணைக…
-
- 12 replies
- 1.4k views
-
-
By VISHNU வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக 15 ஆம் திகதி வியாழக்கிழமை மரணமடைந்துள்ளார். வவுனியா கல்மடு பூம்புகாரை சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே (புத்திர சோகம் காரணமாக நோய்க்கு ஆளாகியிருந்த நிலையில்) 15 ஆம் திகதி வியாழக்கிழமை மரணமடைந்துள்ளார். இவரது மகன் இராமச்சந்திரன் செந்தூரன் (பிறப்பு: 1991.02.02) என்பவர் வவுனியா நகருக்கு வழமை போன்று தொழிலுக்கு (தினக்கூலி வேலைக்கு) சென்ற வேளை 2007.05.17 அன்று (கடத்தப்படும் போது வயது 16) கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார் மகனைத்தேடி வவுனியாவில் 2100 நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக்கண்டறி…
-
- 12 replies
- 758 views
-
-
இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை மட்டக்களப்பைச் சேர்ந்த இந்து மத குருக்களும் தனவந்தர் ஒருவரும் இணைந்து இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நேற்ற ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் பிதிர்க்கடன் தீர்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது.இந்தநிகழ்வு இடம்பெறும் இடத்துக்கு வருகைதந்த ஆயுதம் தரித்த இராணுவத்தினர் நிகழ்வில் கலந்துகொண்ட மக்களின் வாகன இலக்கங்களைப் பதிவுசெய்ததோடு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரிடமும் விசாரணை மேற்கொண்டனர். முள்ளிவாய்க்கால் நினைவுகூரலின் பதினோராவது ஆண்டு நினைவுக் காலம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் வரும் மே மாதம் முள்ளிவாய்க்காலில் நினைவுகூரல் இடம்பெறவுள்ளது…
-
- 12 replies
- 1.2k views
-
-
ஜெயலலிதாவை தலைவியாக கொண்டு இலங்கை மீது படையெடுங்கள்-ராஜபக்சேயை போரில் வெல்வார்:கலைஞர் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவ்வறிக்கை
-
- 12 replies
- 2k views
-
-
இன அழிப்பு உச்சத்தை எட்டிய 19/5 க்குப் பிறகு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களைப் பற்றியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும் உலகத்தமிழர்கள் மத்தியில் பல்வேறு விதமான குழப்பங்களும் சந்தேகங்களும் உலா வருகின்றன. பல்லாயிரக்கணக்கில் நடந்த படுகொலைகளை மறந்து விட்டு, தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் ஆழ்ந்து போக வேண்டும் என்று சிங்கள அரசு விரும்பியவாறே தற்பொதைய நிலவரங்கள் உள்ளன. மேலும், இயக்கத்தில் உள்ளதாக சொல்லப்படும் சில தலைவர்களின் அறிக்கைகள், “போராளிகள்” என அடையாளப்படுத்தப்படும் சிலரது கட்டுரைகள் சிங்கள அரசின் உளவுத்துறைக்கு நேரடியாகவே துணைபோவதாக நாம் கணிக்கிறோம். ஏற்கெனவே இது, இந்திய “றோ” உளவுத்துறையின் சதியா…
-
- 12 replies
- 1.9k views
-