ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
முழு அளவு யுத்தத்துக்கான முன்னறிவிப்புகள் வருகின்றன 11.12.5007 இக்கட்டான கட்டத்தில் சிக்கியிருக்கும் இலங்கையின் எதிர்காலம் எத்திசை நோக்கியதாக அமையப் போகின்றது? ஓராண்டுக்கு முன் மறைந்த புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் தமது கடைசி நூலின் கடைசி அந்தமாக எழுதிய வார்த்தைகள் மேற்படி கேள்விக்கு ஓரளவு பதிலை ஊகிக்கக் கூடிய வாய்ப்பை நமக்குத் தந்திருக்கின்றன. ""இலங்கைத் தீவில் சமாதானத்துக்கு விரோதமாக இயங்கும் சக்திகள் எவை என்பதைச் சர்வதேச உலகம் இன்று நன்கறியும். இந்தச் சக்திகள் பல முனைகளில் இருந்து, பல வழிகளைக் கையாண்டு, அமைதியைக் குலைக்க முனைகின்றன. சமாதானத்திற்கு விரோதமாக இந்தச் சக்திகள் ஏவிவிடும் வன்முறைப் புயலுக்கும் நிழல் யுத்தத்திற்கும் முகம் கொடுத்து, பொறுமைய…
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழீழம் உருவாக இருந்த சந்தர்ப்பங்களில் மக்கள் விடுதலை முன்னணியே அதனை தடுத்தது. ஜே.ஆர்.ஜயவர்த்தனா,பிரேமதாஸ, சந்திரிகா ஆகியோர் நாட்டைப் பிரித்துக் கொடுக்கும் முயற்சியில் ஈ:டுபட்டமைடயாலேயே தங்கள் முழுப் பதவிக்காலத்தையும் வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்று 13ம் திருத்த சட்டத்தை அமுல்படுத்த முடியும் என நினைத்துச் செயற்படும் மஹிந்தவிற்கும் இந்த நிலையே ஏற்படும், என்று ஜே.வி.பி.யின் களுத்துறை மாவட்ட பா.உ பியசிறி விஜேநாயக்க தெரிவித்தார். கிராமியத் தலைவர்களுடன் ம.வி.மு இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளது. ஏனைய கட்சிகள் நாட்டுப் பிரச்சினையை அறிய முன் நாம் அவற்றை தெளிவாக மக்களுக்கு விளக்கி வருகின்றோம். சந்திரிகாவுடன் அரசமைத்து அதிலிருந்து நாம் விலகினோம். மஹிந்தவை ஜனாதிபதியாக்கி…
-
- 3 replies
- 2.1k views
-
-
யாழ் நகரில் சீரழியும் தமிழர் கலாச்சாரம் யாழ்ப்பாணத்தில் தமிழ்மக்களின் பாரம்பரியங்கள் சீரளிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். யாழ் அராலியில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையில் இதனைத் தெரிவித்துள்ளார். திறந்துவிட்ட யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை காலாச்சாரம் பரவத்தொடங்கியுள்ளது. தற்போது யாழ்மாவட்டத்தில் தமிழ் மக்களின் காலாச்சாரம் சீரழியும் நிலையினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. இது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இருந்து மீண்டு தமிழ் பாரம்பரியங்களை பாதுகாக்கும் பொறுப்பு இளைய சமூகத்திடம் உண்டு. தமி…
-
- 6 replies
- 2.1k views
-
-
யாழ்ப்பாண முற்றுகை அல்லது யாழ்ப்பாணத்திற்கான போர் என்பது கடந்த ஐந்து நூற்றாண்டுகளிலும் ஏறக்குறைய ஒரே அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. படைநடவடிக்கை அல்லது போர்விதி என்பது பெரும்பாலும் புவியியல் அமைவுகளையும் பருவகாலங்களையும் தம் திட்டமிடலிற் கொண்டுள்ளன. இந்த அடிப்படையைப் புறக்கணித்து விட்டு எந்தப் படை நடவடிக்கையையும் செய்ய முடியாது. எனவே யாழ்ப்பாணத்திற்கான முற்றுகையும், படை நடவடிக்கையும் புவியியல் சார்ந்தே முக்கியத்துவம் பெறுகின்றன. இப்போது வன்னியில் நடந்து கொண்டிருக்கும் போர் யாழ்ப்பாணத்திற்கான போரே. இதை இன்னும் சற்று விளக்கமாகவும், நேரடியாகவும் சொன்னால் இது ஆனையிறவுக்கான சமர் என்று சொல்லலாம். அதுவே உண்மையும் கூட. சிறீலங்கா இராணுவத்தினர் எட்டு மாதங்கள…
-
- 0 replies
- 2.1k views
-
-
இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் - 2 மாணவர்கள் மயக்கம் செங்கல்பட்டு: இலங்கையில் போரை நிறுத்த வேண்டும், தமிழர்களைக் காக்க வேண்டும் என்று கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் சட்ட மாணவர்களில் 2 பேர் இன்று மயக்கமடைந்தனர். இலங்கை அரசின் போர் நிறுத்தப்பட வேண்டும். தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். நேற்று அவர்களை நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, கெளதமன் ஆகியோர் சந்தித்து போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் ஈழத்தில் போர் நிறுத்தப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று நா…
-
- 10 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை உருவாக்கி இலங்கை இனப்பிரச்சினைக்கு காரணமாக இருந்ததே இந்தியாதான் என்று சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதி ஹமில்டன் வனசிங்க கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 2.1k views
-
-
வான்புலிகளின் தாக்குதல் எழுப்பும் கேள்விகள்! -ஜெயராஜ் சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய கடற்படைத் தலைமையகம் மீது வான்புலிகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடத்தியுள்ள தாக்குதலானது களநிலைமை குறித்த மறு மதிப்பீடு ஒன்றிற்குச் செல்ல வேண்டியதானதொரு நிர்ப்பந்தத்தைச் சிறிலங்காப் படைத்தரப்பிற்கு மட்டுமல்ல வேறு உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளுக்கும் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும் என்றே உறுதியாக நம்பலாம். கடற்படையின் கிழக்குத் தலைமையகம் மீது வான்புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா கடற்படைக்கு ஏற்பட்டுள்ள உயிர் இழப்புக்கள் மற்றும் உடமை இழப்புக்கள் என்பனவற்றின் அளவு, தொகை என்பன இங்கு முக்கியமானதொரு விடயம் அல்ல. சிறிலங்காப் படைத்தரப்பின் அதி முக்கியத்துவம் வாய்ந்த கேந…
-
- 5 replies
- 2.1k views
-
-
-
வீரகேசரி நாளேடு 3/25/2009 10:50:48 PM - விடுதலைப்புலிகள் பலமாக இருந்த ஓர் அமைப்பு என்பதனால் அவர்களை உடனடியாக அழிப்பது என்பது கடினமான காரியமாகும். புலிகளை முற்றாக அழிப்பதற்கு சில காலம் எடுக்கும் அவர்களை அழித்ததன் பின்னரே இந்நாட்டில் முழுமையான அமைதியை ஏற்படுத்த முடியும் அது வரையிலும் சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் என்று அமைச்சர் விநாகய மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். பழமைகளை மறந்து புதுமையை பற்றி செல்லவேண்டும் அதன் மூலமாகவே ஏற்பட்டிருக்கும் கசப்புணர்வை இல்லாதொழிக்க முடியும். இந்நிலையில் தமிழ் மக்களின் நலனில் கூட்டமைப்பு விருப்பம் கொண்டிருக்குமாயின் கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் இன்று பு…
-
- 12 replies
- 2.1k views
-
-
யாழ். இந்துவின் கௌரவத்தைக் கெடுக்கும் ரவுடிகளை உடன் கைது செய்யுங்கள்! யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மிகச் சிறந்த கல்விக் களஞ்சியம். ரவுடிக் கும்பல்கள் அதன் கௌரவத்தைக் கெடுப்பதற்கு அனுமதிக்க முடியாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். இத்தகைய ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர் குழுக்கள், பழைய மாணவர் குழுக்களை இனங்கண்டு, உடனடியாகக் கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் வீரசிங்கவிற்கு நேற்று திறந்த நீதிமன்றத்தில் அவர் நேரடியாக உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் ஞாயிறன்று பட்டப்பகலில் 10, 15பேர் மோ…
-
- 29 replies
- 2.1k views
-
-
படையினருக்கு அதிக சேதங்களை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. கடந்த முதலாம், இரண்டாம் திகதிகளில் 57ஆவது மற்றும் 58 ஆவது டிவிசன்களால் வன்னேரி, நாச்சிக்குடா, அக்கராயன் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வுகள் முறியடிக்கப்பட்டதில் படையினர் பலத்த இழப்புக்களைச் சந்திக்க நேரிட்டது. 30 படையினரின் சடலங்களையும் ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றிய சம்பவம் அவர்களுக்குப் பெரும் உளவியல் உற்சாகமாக அமைந்திருக்கும். இந்தத் தாக்குதல்களில் 56 படையினர் கொல்லப்பட்டு 120 பேருக்கும் அதிகமானோர் காயமுற்றதாக படைத்தரப்புடன் நெருங்கிய தரப்புகள் தகவல் வெளியிட்டிருந்தன. ஆனால் புலிகள் தரப்பு இன்னும் கூடுதலான படையினர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருந்தது. இதற்குப் பின்னர் படையினர் இந்தக் களமுனைகளி…
-
- 2 replies
- 2.1k views
-
-
மைக் டெஸ்டிங் 123.. தந்தை செல்வாவின் பேத்தியின் ( பூங்கோதை சந்திரஹாசன் ) சிந்தனைகள்: Sri Lanka Through The Eyes of Filmmaker Poongkothai Chandrahasan Peace is the dividend Harvard-trained filmmaker Poongkothai Chandrahasan, 28, seeks after 25 years of the conflict between the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Sri Lankan government which recently came to a gory end in her homeland. Poongkothai, who hails from an illustrious family of lawyers and peace activists, is a woman with a vision for her war-torn nation. A refugee in Tamil Nadu, India, since the age of three, Poongkothai was in the heart of the Sinhalese area in the no…
-
- 10 replies
- 2.1k views
-
-
யாழ். மக்களே அவதானம்- சுமந்திரன் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை!! இம்முறை தேர்தலில் சுமந்திரனையிட்டு யாழ் தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இந்தவிடயம் தொடர்பாக அவர்கள் துண்டுப்பிரசுரம் ஒன்றையும் யாழ். குடா முழுவதும் விநியோகித்துள்ளார்கள். அந்த துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அன்பார்ந்த யாழ் மக்களே! இம்முறை நாடாளுமன்ற தேர்தல் என்பது வழமைபோன்ற ஒரு தேர்தல் அல்ல. தமிழர்களாகிய நாங்கள் மிக மிக அவதானமாகச் செயற்பட்டேயாக வேண்டிய ஒரு தேர்தல். சீனாவின் பக்கம் முழுவதுமாகவே சென்றுவிட்டுள்ள ஸ்ரீலங்காவை வழிக்கொண்டு வருவதற்கு தமிழ் மக்க…
-
- 25 replies
- 2.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் இன்றிரவு (13) நடத்திய சுற்றி வளைப்பின் போது முற்றுகைக்கு உள்ளான விபசார விடுதி ஒன்றிலிருந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் நகரப் பகுதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் விபசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இந்த விடுதி முற்றுகையிடப்பட்டது. இந்த விடுதி நீண்ட காலமாக விபச்சார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தமையும் தெரிய வந்துள்ளது கைது செய்யப்பட்டவர்களில் 6 பெண்களும் 7 ஆண்களும் அடங்குவதாக தெரியவருகின்றது. இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். விடுதி முகாமையாளர் ரஞ்சன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். http://akkinikkunchu.com/new/index.php
-
- 11 replies
- 2.1k views
-
-
அதிகாரிகளின் ராஜதந்திரக் கையாள்கை: அரசுத் தலைமைக்குப் பெரும் அதிருப்தி! தேவையின்றி மேற்கு நாடுகளை பகைத்துக் கொள்கின்றனராம் வெளிவிவகார அமைச்சின் கீழ்வரும் பல்வேறு அதிகார மட்டங்களினால் மேற்கொள்ளப்படும் இராஜதந்திரக் கையாள்கை குறித்து அரச உயர்பீடத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகத் தெரிவருகின்றது. உயர் மட்டப் பதவிகளில் இருப்போர் தம் எண்ணப்படி, பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதால் மேற்குலக நாடுகளுடன் தேவையின்றிப் பகைத்துக் கொள்ளும் இக்கட்டு ஏற்பட்டிருப்பதாக உணரும் அரசுத் தலைமை, இது குறித்து அதிக கவனம் எடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது. இலங்கையின் வெளிவிவகார விடயங்களும், இராஜதந்திரக் கையாள்கையும் இங்கு நிபுணத்துவமும் தொழில்சார் தகைமையும் மிக்க ஒரே தலைம…
-
- 4 replies
- 2.1k views
-
-
அடுத்துவரும் வாரங்களில் வன்னியில் போர் வெடிக்கும்? பெரும் அழிவுகள் நேரலாம் என அச்சம் - ஏ.எவ. பி. கிளிநொச்சியை நோக்கி இராணுவம் நகர்ந்துகொண்டிருப்பதால் எதிர்வரும் நாட்களில் தீவிரமான மோதலையும் இரத்தக்களரியையும் நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்குமென இராணுவ ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி ஏ.எவ. பி. செய்தி வெளியிட்டுள்ளது. அரசபடையினர் தமது முக்கிய இலக்கான கிளிநொச்சியை நெருங்கும் வேளை கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரிவித்த இராணுவ ஆய்வாளர்கள் இராாணுவத்தினரின் ஆட்லறி விமான பல்குழல் பீரங்கித் தாக்குதல்களால் வடக்கில் பெரும் அழிவுகள் ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளனர். இராணுவம் கிளிநொச்சியை நெருங்கிவரும் வேளை அவர்கள் அதிகளவு காலாட்படையினரையே நம்பியிக்க…
-
- 1 reply
- 2.1k views
-
-
முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் மட்டும் தான் சிறுபான்மை. ஆனால் உலகத்தில் நாம் பெரும்பான்மையினர். அதை மிகத் தெளிவாகக் சொல்லிக் கொள்கிறோம். இலகுவாக எம்மை அடக்கி ஒடுக்கி வைக்க முடியும் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று -07- பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாார். தொடர்ந்தும் பேசிய அவர், முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் மட்டும் தான் சிறுபான்மை. நாம் மிகத் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். ஆனால் உலகத்தில் நாம் பெரும்பான்மையினர். அதை மிகத் தெளிவாகக் சொல்லிக் கொள்கிறோம். இலகுவாக எம்மை அடக்கி…
-
- 22 replies
- 2.1k views
-
-
இலங்கையில் தொடரும் அதிசயம் ; கொழும்பிலும் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம் பழம் நுவரெலியாவை தொடர்ந்து முதன் முறையாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாலுள்ள பேரீச்ச மரமும் பூத்து காய்த்துள்ளமை பார்ப்பவர் கண்களை அதிசயத்தில் ஆழ்த்தி உள்ளது. இவ்வருடம் நாட்டில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாகவே இவை காய்க்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மரம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது என ரயில் நிலையத்தில் பணிப்புரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். Tags http://www.virakesari.lk/article/21731
-
- 7 replies
- 2.1k views
-
-
நேரில் சந்திப்போம் என பிரபாகரனிற்கு கடிதம் எழுதினேன்- மகிந்த சமாதான தீர்வை காண்பதற்காக விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முன்வந்தேன் ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை இதன் காரணமாக அவரை கொல்லவேண்டியநிலையேற்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐலன்டின் விசேட செய்தியாளர் எஸ் வெங்கட் நாரயணனிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் தீர்வை காண்பதற்காக நேரடி சந்திப்பொன்றில் ஈடுபடுவோம் நான் கிளிநொச்சி வருகின்றேன் அல்லது நீங்கள் கொழும்பு வரலாம் என தெரிவித்து பிரபாகரனிற்கு கடிதம் எழுதினேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2006 இல் வ…
-
- 9 replies
- 2.1k views
-
-
விளையாட்டில் விளையாடப்போகும் அரசியல்! ஒரு வழியாக தமிழர்களை கருவறுத்த நாடும் துணைபோன நாடும் விளையாடப்போகும் உலகக் கோப்பை மட்டையாட்டப் போட்டியில் இரு நாட்டு அரசியலும் சேர்ந்து விளையாட தயாராகின்றது. இக்கோப்பையை வெல்வதால் இந்தியாவுக்கு என்ன நன்மை? சிறீலங்காவுக்கு என்ன நன்மை ? இந்தியாவுக்கு கௌரவம், சிறீலங்காவுக்கு வியாபாரம். ஆம் சிறீலங்கா வென்றால் உலக மட்டத்தில் பொருளாதாரத்தை சற்று தூக்கி நிறுத்த முடியும். சுற்றுலாத்துறையை சற்று ஆசுவாசப்படுத்தவும் முடியும் என நம்புகின்றது சிறீலங்கா அரசு. அதே நேரம் அவப்பெயருக்கு உள்ளாகியிருக்கும் சிறீலங்காவுக்கு இவ் வெற்றி சற்று ஆறுதலாக அமையவும் வாய்ப்புள்ளதாக கருதுகின்றது. அதன் ஒரு கட்டமாகத்தான் நியூசிலாந்து அதிபருக்கு …
-
- 6 replies
- 2.1k views
-
-
http://www.ttn.tv
-
- 5 replies
- 2.1k views
-
-
உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக யாழில் சுவரொட்டி -குணசேகரன் சுரேன் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்த வருகை தரும் தென்னிந்திய பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக, யாழ்.நகரின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியில் வெலிங்டன் திரையரங்கு அமைந்திருந்த மைதானத்தில் இன்று, இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக, உன்னிகிருஷ்ணன் மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர். “எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய உன்னி எங்கள் மண்ணில் இன்னிலை பாட முடியாது” என, அந்தச் சுவரொட்டியில் குறிப்பிட்டுள்ள…
-
- 16 replies
- 2.1k views
-
-
சிங்கத்தமிழர்களே வாரீர்! மெரீனா கடற்கரைக்கு என்று நம்மை அழைக்கிறார்கள் இனப்படுகொலையை கண்டு நொந்து நூலானவர்கள்! பாவம் அவர்களுக்கு தெரியாது அவர்கள் அழைத்த நாம்தான் தமிழின துரோகிகள் என்று! பாவம் அவர்களுக்கு தெரியாது நம் இனம் அழிந்துகொண்டிருந்த போது IPL ரசித்துக்கொண்டிருந்தோம் என்று! பாவம் அவர்களுக்கு தெரியாது நம் இனம் அழிந்துகொண்டிருந்த போது சிவாஜி தி பாஸ் ரசித்துக்கொண்டிருந்தோம் என்று! போட்டியிட்ட 63 இடங்களை கூட தோற்கடிக்க முடியாத தமிழின துரோகிகள் நாம்! காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு கூட இனப்படுகொலையை மறந்து சீமானை காரணம் சொன்ன ஈனப்பிறவிகள் நாம்! இந்த பாவமண்ணில் வாழ பிடிக்காமல்தான் போய் சேர்ந்துவிட்டான் முத்துக்கு…
-
- 2 replies
- 2.1k views
-
-
The presenter at a Christmas show organized in Paris, by 'Negombo Paris Organization' had been badly assaulted by the head of Education Centre, another Sri Lankan organization in France, according to reports reaching 'our reporter' The chairman of the Centre, who has accused the presenter of not giving him enough publicity, too, has been retaliated before fleeing the scene. Later, he had returned with a group of Sri Lankans, including a top official at the SLFP branch office in France, and had again assaulted the presenter. People attending the Christmas show had intervened before the situation turned for the worse. They have also lodged a complaint with …
-
- 0 replies
- 2.1k views
-
-
[size=3][size=4]சேலம்: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து நேற்று சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் விஜய்ராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.[/size][/size] [size=3][size=4]சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய்ராஜ் தமிழின உணர்வாளர். தமிழ் இயக்கங்கள் நடத்துகின்ற அனைத்து கூட்டங்களுக்கும் தவறாமல் சென்று கலந்து கொள்வார். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு தமிழர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வலியுறுத்தி நேற்று அதிகாலை தீக்குளித்தார். பின்னர் தீக்காயங்களுடன் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் அவர் உயிரிழந்தார். தீக்குளித்த நிலையில் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேச…
-
- 36 replies
- 2.1k views
- 1 follower
-