ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உதயம்! வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த கட்சியின் செயலாளர் நாயகமாக வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் செயற்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அனந்தி சசிதரன் வெற்றி பெற்றிருந்தார். அந்த கட்சியின் உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி எடுத்திருந்த நிலையில், கட்சியிலிருந்து விலகியே செயற்பட்…
-
- 10 replies
- 1.4k views
-
-
கத்தோலிக்க மத அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளின் 15 சடலங்கள் தோண்டியெடுப்பு மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோலிக்க மத அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்கலாக 15 சடலங்கள் நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் பொது மயானத்தில் இறந்த மக்களினதும், கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோரின் சடலங்கள்அடக்கம் செய்யப்பட்டு வந்தன. கடந்த சில வருடங்களுக்கு முன் மன்னார் பொது மயானத்திற்கு அருகில் உயிரிழந்த கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் அடக்கத்த…
-
- 10 replies
- 844 views
-
-
இறுதிப் போர் யாருக்கு சாதகம்? [18 - January - 2009] விதுரன் முல்லைத்தீவில் இறுதிப்போரில் படையினர் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவைச் சுற்றி சகல முனைகளிலும் குவிக்கப்பட்டுள்ள படையினர் ஆங்காங்கே பாரிய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனினும் விடுதலைப் புலிகளின் கடும் பதில் தாக்குதல்களால் பின்னடைவையும் சந்திக்கின்றனர். தங்களது சகல வளங்களையும் திரட்டி முல்லைத்தீவை குறிவைத்துள்ள படையினருக்கு புலிகளின் பதில் நடவடிக்கைகள் குறித்தும் பலத்த சந்தேகங்கள் உள்ளன. இதுவரை காலமும் பின்வாங்கிய புலிகளின் பதில் நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பது குறித்தும் படையினர் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர். வன்னிப் போரில் படையினரின் கையே ஆரம்பம் முதல் ஓங்கியுள்ளது. வன்னியில் பெரும்பாலான…
-
- 10 replies
- 3.1k views
-
-
யுத்தம் முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள புதிய சூழலில் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அகலக் கால் பதிக்கும் நடவடிக்கைகளில் இந்திய உளவு நிறுவனமான றோ ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளுக்காக தமிழகத்தைச் சேர்ந்த பெருமளவான றோ உறுப்பினர்கள் தமிழர் தாயகத்தில் களமிறக்கப்பட்டுள்ளதாக எமது யாழ்ப்பாண நிருபர் தெரிவிக்கின்றார். சோதிடம் சொல்பவர்கள் மற்றும் புடவை வியாபாரிகள் என்ற போர்வையில் களத்தில் குதித்துள்ள இந்த உளவாளிகள் நகரப் பகுதிகளில் மட்டுமன்றி தீவகம் உள்ளிட்ட உட் பிரதேசங்களிற்குள்ளும் சென்று வியாபாரம் என்ற போர்வையில் உளவுத் தகவல்களைச் சேகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. வீடு வீடாகச் செல்லும் இவர்கள் மிகக் குறைந்த விலையில் இந்…
-
- 10 replies
- 1.9k views
-
-
யாழில் வீடொன்றில் இருந்து இரு வயோதிபப் பெண்களின் சடலங்கள் மீட்பு யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். 76 வயதுடைய ஒருவரும் மற்றையவர் 73 வயதுடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் உயிரிழந்துள்ளார். மற்றையவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு உதவி இல்லை என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது. மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளவ…
-
- 10 replies
- 571 views
-
-
Oct 10, 2010 / பகுதி: செய்தி / சிறீலங்கா பணிப்பெண்களுக்கு சவுதியில் தடை சிறீலங்கா பணிப்பெண்கள் சவுதி அரேபியாவுக்கு வருவதை தடை செய்யும் அறிவித்தலை சவுதிஅரேபியா அரசு நாளை (11) வெளியிடும் என சவுதிஅரேபியா நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது. சிறீலங்கா பணிப்பெண்களுக்கான ஊதியத்தை 7,500 சவுதி றியால்களில் இருந்து 5,500 ஆக குறைப்பது என்ற சவுதிஅரேபியாவின் முடிவைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையே இந்த அறிவிப்புக்கு காணம் என அது மேலும் தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகளை சேர்ந்த 70 இலட்சம் பணிப்பெண்கள் அரேபிய நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் மூலம் ஆசிய நாடுகள் அதிகளவு பணத்தையும் சம்பாதித்து வருகின்றன. இந்த நிலையில் சவுதியின் அறிவிப்பு ச…
-
- 10 replies
- 1.1k views
-
-
பொதுபலசேனா கண்டியில் நடத்தவுள்ள மிகப்பிரமாண்டமான மாநாட்டில் இஸ்லாமிய அடிப்டைவாதத்துக் கெதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி – தலதா மாளிகை திடலில் பிக்குகள் மாநாடு இடம்பெறவுள்ளது. இதில் சுமார் ஒரு இலட்சம் பொது மக்கள் மற்றும் 10 ஆயிரம் பிக்குகள் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கவும் அனைத்து இன மக்களையும் ஒரு சட்டத்துக்கு கீழ் கொண்டு வருவதுமே இந்த மாநாட்டின் முக்கிய விடயமென பொதுபலசேனா தெரிவித்துள்ளது. முஸ்லிம் மக்களின் ஆடை விவகாரம் , ஹலால் , மத்ரஷா , காதிக்கோர்ட் சட்டம் மற்றும் தௌஹீத் பள்ளிவாசல்கள் …
-
- 10 replies
- 1.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை மையப்படுத்தி இரண்டு ஹிந்திப் படங்கள்தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 'சிலோன்' மற்றும் 'ஜப்னா' என இந்தப் படங்களுக்குபெயரிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை மையப்படுத்தி இந்தத் திரைப்படங்கள் வெளிவரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரபல திரைப்பட இயக்குனர்களான சந்தோஷ் சிவன் மற்றும் சூஜித் சிர்கார் ஆகியோர்இந்தப் படங்களை இயக்குகின்றனர். நீண்டகாலமாக மனதில் இருந்த கதையை திரை வடிவில் கொண்டு வருவதாக சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார் . இதேவேளை, புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுக்கு நிகரான தோற்றத்தை உடையவர்களை திரைப்படத்தில் நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளதாக சூஜித்சிர்கர் தெரிவித்து…
-
- 10 replies
- 1.5k views
-
-
[திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2007, 05:18 ஈழம்] [க.திருக்குமார்] எம்மிடம் இந்திரா - 2D ரக ராடார்கள் மூன்று உள்ளன. இந்த வகை ராடார்களையே இந்தியாவும் பயன்படுத்தி வருகின்றது. அவை முன்னேற்றகரமான வகையைச் சேர்ந்த ராடார்கள். எனினும் அவற்றைப் புறக்கணித்த பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வான்படைத் தளபதி ஆகியோர் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு இந்தியாவின் ராடார்களே பொறுப்பு எனக் கூறியுள்ளனர். கட்டுநாயக்கவில் வான் தாக்குதல் இடம்பெற்ற சமயம் எல்லா ராடார்களும் ஓய்விலேயே வைக்கப்பட்டிருந்தன. இது எமது படைத்தரப்பினரின் அறிவற்ற தன்மையைக் காட்டுகின்றது. ராடார்கள் சூழற்சி முறையில் இயக்கப்பட வேண்டும் என்ற பொது அறிவு கூட அவர்களுக்கு இல்லை என நாடாளுமன்ற குழுக் கூட்டத…
-
- 10 replies
- 2.4k views
-
-
இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக கொண்டாட அனைவரையும் ஒன்றினைந்து வலுச்சேர்ககுமாறும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தில் இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இதனை அறிவித்துள்ளனர். அச் சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவித்தள்ளதாவது, “ஈழத்தமிழர்கள் இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் இன்று வரையில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் எம்மக்களும் காலாதி காலமாக நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்றபோதும் எமது மக்களின் போராட்டங்களை யாருமே கண்டு கொள்ளாத நிலையிலே விரக்த்தியின் விளிம்பில் நின்று இ…
-
- 10 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 66 வயது கைதி ஒருவர், இன்று (25) மதியம் 12:20 மணியளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிளிநொச்சி, புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு என அடையாளம் காணப்பட்ட இவர், தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி ஜெமீல் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார். கிளிநொச்சி பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://adaderanatamil.lk/news/cmdj2htun01ngqp4kj6slv95l
-
-
- 10 replies
- 539 views
- 2 followers
-
-
"மத்திய அரசினது தலையீடு இல்லாத எங்கள் அலுவல்களை நாங்களே பார்த்துக் கொள்ளக்கூடிய சமஸ்டி தீர்வொன்றே எமக்கு பொருத்தமானது" என தெரிவித்தார் புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன். இன்று யாழப்பாணத்தினில் அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். "எமக்கான நியாயமான தீர்வாக சமஸ்டி தீர்வே அமைய முடியும். ஆனால் இந்த இனவாத அரசு அவ்வாறான தீர்வொன்றை தரப்போவதில்லை என்பது நிச்சயம்" எனவும் அவர் தெரிவித்தார். 26 வருடங்களிற்கு முன்னதாக தமிழ் தரப்புக்கள் நிராகரித்த 13வது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாணசபையை தப்ப வைத்துக்கொள்ள நாம் இப்போது போராட வேண்டியிருக்கின்றது.கூட்டமைப்பினர் இந்தியாவிற்கு சென்று …
-
- 10 replies
- 1.3k views
-
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் புது டில்லி நகரத்திற்கு இன்று வியாழக்கிழமை (21) புறப்பட்டார் என கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரது மனைவி மைத்ரி விக்கிரமசிங்க, சாகல ரத்நாயக்க மற்றும் பணியாளர்கள் ஆகியோரும் சென்றுள்ளனர். இவர்கள் இன்றைய தினம் காலை 08.19 மணியளவில் இந்திய விமான சேவையின் ஏ. ஐ - 282 விமானத்தின் மூலம் இந்தியாவின் புது டில்லி நகரத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்றுள்ளனர். https://www.virakesari.lk/article/199300
-
-
- 10 replies
- 575 views
- 1 follower
-
-
2006 ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையை வரவேற்றமை அதற்கு மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான அதிகாரங்களை வழங்க ஒப்புக்கொண்டமை மற்றும் நாட்டில் மனித உரிமைகளை பேணுவது தொடர்பாக பொறுப்பேற்றமை ஆகியவை இந்த அரசாங்கம் செய்த பிழைகளாகும் என்று எதிர்க்கட்சியின் தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டினார். 2007 ஆம் ஆண்டு யூன் மாதம் மனித உரிமை பேரவையை உருவாக்குவது தொடர்பான தீர்மானம், 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி 60ஃ25 தீர்மானத்தை ஏற்றுக்கொண்டமை மற்றும் மனித உரிரைகளை பாதுகாப்பதில் அரச சார்பற்ற நிறுவனங்களின் வகிபாகத்தை அதிகரித்தமை போன்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாகவே இவ்வருடம் மனித உரிமை அமர்வில் நாடு ஆபத்தான நிலைமைக்கு முகம்கொடுக்கவேண்டிய…
-
- 10 replies
- 676 views
-
-
ஆலோசனைகள்: 1. அமெரிக்கா தமிழீழத்தை அமைத்துக் கொடுத்தால் திரிகோணம்லையில் Base "பேச்" அமைத்துக்கொள்ளலாம் என்ற உடன்பாட்டை அமெரிக்காவுடன் போடலாம். 2. பாகிஸ்தானின் ஐ ஸ் ஐ உடன் கூட்டு சேர்ந்து இந்தியாவுக்கு தொல்லைகள் தரலாம். ஐ ஸ் ஐ இந்தியாவில் எப்படியாவது பிரச்சனையை உருவாக்க காத்துக்கொண்டிருக்கிற்து. பிரதி பலனாக, அவர்களிடமிருந்து விமான, ஆயுத பயிற்சி பெறலாம். சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்களா???
-
- 10 replies
- 1.2k views
-
-
பூநகரியில் 6000 ஹெக்ரயர் பரப்பில் பாரிய காற்றாலை, சூரியசக்தி மின்திட்டம்! பூநகரியில் 1040 மெகாவாட் உற்பத்தித் திறனுடைய சூரிய மின்சக்தி மற்றும் காற்றுவலு கலப்பு மின்திட்டத்தை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்திற்குப் பொருத்தமான இடமாக பூநகரி தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 6000 ஹெக்டயர் நிலப்பரப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 240 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்திட்டமும், 800 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் திட்டமும் அமைக்கப்படவுள்ளன. இத்திட்டம் 3 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இதற்கான கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் எனவும் அரசாங்கம் அறிவித்த…
-
- 10 replies
- 707 views
-
-
யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நால்வர் போட்டி adminJune 3, 2023 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என பல்கலை தகவல்கள் ஊடாக அறிய முடிகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக் கழகப் பேரவையின் பதவி வழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான இறுதித் தினம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையாகும். அன்றைய தினம் பிற்பகல் 3:00 மணியுடன் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்த வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மூவரும், கிழக்குப் பல்கலைக்…
-
- 10 replies
- 1k views
-
-
“நாராயணன் மட்டும் அல்ல அனைவரும் புலிகளை வெல்ல முடியாது எனக் கூறியிருந்தனர் ஆனால் வெற்றிகொண்டேன்” “கொழும்பிற்கு வரவேண்டாம் நான் கிளிநொச்சி வருகிறேன் என்றேன் பிரபாகரன் மாட்டேன் என்றார்” விடுதலை புலிகளின் தலைவரை கிளிநொச்சிக்கு சென்று சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்தியாவின் டில்லியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனிடம் சமாதானத் தூதுவர்களை அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன…
-
- 10 replies
- 2.6k views
-
-
09 FEB, 2024 | 12:49 PM கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரச பொது நிதிக் குழு மற்றும் வெரிட்டே ரிசேர்ச் (Verité Research) நிறுவனம் பகுப்பாய்வின் பிரகாரம், தெற்காசியாவிலேயே நமது நாடுதான் அதிக மின்சாரக் கட்டணத்தை அறவிடுகிறது. தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது நாட்டில் 3 மடங்கு அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இலங்கையில் 100 மின்சார அலகுகளுக்கு மாதத்துக்கு 5280 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் 2078 ரூபாயே வசூலிக்கப்படுகிறது. 200 அலகுகளுக்கு எமது நாட்டில் 12960 ரூபாய் வசூலிக்கப்படுவதோடு தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் 4609 ரூபாவே வசூலி…
-
- 10 replies
- 812 views
- 1 follower
-
-
வேத மந்திரங்களின்றி, திருக்குறள் ஒலிக்க கிளிநொச்சியில் நடந்த புதுமைத் திருமணம்! [Monday 2014-09-15 18:00] வேத மந்திரங்கள் எதுவும் ஓதப்படாமல், அதற்குப் பதிலாக திருக்குறள் ஒலிக்க கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் இன்று திருமணம் ஒன்று இடம்பெற்றது. இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் வேதியர் இல்லை. சமஸ்கிருத மொழியில் மந்திரங்கள் ஓதப்படவில்லை. இருப்பினும், திருக்குறள்கள் சொல்லப்பட்டன. சுப முகூர்த்தத்தில் மணமகளின் கழுத்தில் மணமகன் தாலி கட்டி திருமணம் முழுமை பெற்றது. கிளிநொச்சியில் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் கனகேஸ்வரன் உதயபாபு என்ற மணமகனுக்கு ஆசிரியையான இறைபிள்ளை அபிராமி என்பவருக்குமே இந்த திருமணம் நடைபெற்றது. திருமணத்தை கிளிநொச்சி தமிழ் சங்க தலைவரும் மண…
-
- 10 replies
- 1.3k views
-
-
கப்டன் பூங்குழலி ,கப்டன் ஈழவேந்தன் ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும் Monday, April 18, 2011, 8:39 தமிழீழம், முதன்மைச்செய்திகள் 18.04.1998 அன்று திருமலைக் கடற்பரப்பில் கடற்படையினரின் கடற்கலம் மீதான கரும்புலித் தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் . கப்டன் பூங்குழலி சாமிநாதன் சின்னமலர் நெடுந்தீவு கிழக்கு – யாழ்ப்பாணம் 08.08.1976 – 18.04.1998 கப்டன் ஈழவேந்தன் ஆறுமுகம் வீரசிங்கம் சுழிபுரம் யாழ்ப்பாணம் 15.03.1978 – 18.04.1998 http://www.tamilthai.com/?p=15134
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
10 JUL, 2024 | 01:00 PM கொழும்பிலுள்ள இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை கட்டடத்தில் இன்று (10) புதன்கிழமை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் தரைத் தளத்திலுள்ள ஒன்றுகூடும் மண்டபத்துக்கு அருகிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் பல தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/188116
-
-
- 10 replies
- 822 views
- 1 follower
-
-
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை என்பது மிக நீண்டதொரு பட்டியலை கொண்டது .எந்த அலுவலுக்கு எந்த அமைச்சுக்கு போவதென்பது சாதாரண மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது . ''தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு '' செயற்பாடுகள் நடைபெறுகிறதோ இல்லையோ இப்படியும் ஒரு அமைச்சு இயங்குகிறது .இடதுசாரி என்ற முகமூடியுடன் இந்த அரசாங்கத்தோடு கலந்து கொண்ட திரு .வாசுதேவ நாணயக்கார இதற்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கிறார் . கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த அமைச்சினால் ''இன விவகாரம் தொடர்பான அலகு'' என்று ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது .அமைச்சின் மேலதிக செயலாளர் திரு …
-
- 10 replies
- 1.7k views
-
-
சிங்கள மாணவர்களால் தமிழ் மொழியிலும் தமிழ் மாணவர்களால் சிங்கள மொழியிலும் தேசிய கீதம் பாடி வவுனியாவில் சுதந்திரதினம் அனுஷ்டிப்பு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2021) காலை 7.30 மணியளவில் இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தேசியகீதம் சிங்கள மாணவர்களால் தமிழ் மொழியிலும், தமிழ் மாணவர்களால் சிங்கள மொழியிலும் பாடப்பட்டதுடன் தேசிய கொடியை பிரதம விருந்தினர் ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கு.திலீபன் கலந்துகொண்டதுடன், வன்னி பிராந்திய படைகளின் பிரதானி, விமானப…
-
- 10 replies
- 986 views
-
-
அரசாங்கத்துக்கு த.தே.கூ ஆதரவா? ''இனப்பிரச்சனைத் தீர்வில் சாதகமான அணுகுமுறையை த.தே.கூ பரிசீலிக்கும்'' இலங்கையில் ஆளும் சுதந்திர முன்னணி அரசாங்கம், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் பெறும் நோக்கில் த.தே. கூட்டமைப்பின் ஆதரவை நாடுவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஊகங்களில் உண்மை இருக்கலாம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பில் இனப்பிரச்சினை தொடர்பாகப் பேசுவதற்கு ஜனாதிபதி முன்வருவாராக இருந்தால், நிச்சயம் அவருடன் பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தயாராக இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் கூறினார். மகிந்தவுடன் சம்பந்தர்(ஆவணம்) இனப் பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வு வர வேண்டும்…
-
- 10 replies
- 1.3k views
-