ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
கூட்டமைப்பைச் சந்தித்தார் மோடி இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இலங்கைக்கு நேற்று (11) மாலை வருகை தந்த, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, இன்று (12) சந்தித்தார். இதில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைருமான இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா எம்.பி, செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் எம்.பியான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். - See more at: http://www.tamilmirror.lk/196523/க-ட-டம-ப-ப-ச-சந-த-த-த-ர-ம-ட-#sthash.orhCjqwu.dpuf
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
வவுனியாவில் தமிழர்கள் விரட்டியடிப்பு, 165 சிங்களக் குடும்பங்கள் திடீா் குடியேற்றம் Saturday, July 16, 2011, 22:54 சிறீலங்கா, தமிழீழம் தொடர்ந்தும் வன்னிப் பெருநிலப் பரப்பில் தமிழர் வாழ் நிலங்கள் வன்பறிக்கப்படும் நிகழ்வு அரங்கேறி வருகின்றதன் ஒரு கட்டமாக, வவுனியா தேமாமடு பிரதேசத்திலுள்ள கொக்கடிவான்குளம் பகுதியில் நூற்று அறுபத்தைந்து சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதுடன் அந்தக் கிராமத்தின் பெயரும் மாற்றப்பட்டு கலாபோவவெள எனும் சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொக்கடிவான் குளத்திற்கு அருகில் விவசாயம் செய்யக் கூடிய வகையில் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தால் அபிவிருத்தி செய்யப்பட்ட இருநூறு ஏக்கர் வயல் நிலத்தை அங்கிருந்த…
-
- 9 replies
- 763 views
-
-
நீச்சல் குளத்துடன் இலங்கையில் அதிக நவீன சிறைச்சாலை : புகைப்படங்கள் வெளியாகின அம்பாந்தோட்டை அகுனுகொலபெலச என்ற பகுதியில் 58 ஏக்கர் நிலப்பரப்பில் 4 ஆயிரத்து 996 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற சிறைச்சாலையின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி குறித்த சிறைச்சாலையின் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இச் சிறைச்சாலையில் இரண்டாயிரம் கைதிகளை சிறை வைக்கும் வசதி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப் புதிய சிறைச்சாலையில் ஒரு வைத்தியசாலையில்,தொழிற்கல்வி பயிற்சி மையம், கைத்தொழிற்காக தனியொரு கட்டிடம், அதிகாரிகளுக்காக 140 தங்குமிடங்கள் மேலும் நான்கு ஆயிரம் மீற்றர் நீளமான ஓடுபாதை , 25 மீற்றர் நீளம…
-
- 9 replies
- 2k views
-
-
புத்தளத்தில் உருக்குலைந்த நிலையில் 15 சடலங்கள் மீட்பு புத்தளம் மாவட்டம் டுமலடெனியா வென்னப்புவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் உருக்குலைந்த நிலையில் 15 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டள்ளன. மீட்கப்பட்ட சடலங்களில் 13 ஆண்களின் சடலங்கள், 2 பெண்களின் சடலங்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. -Pathivu-
-
- 9 replies
- 2.1k views
-
-
தம்புள்ளை மகா பத்திரகாளியம்மன் ஆலயம் இடிக்கப்பட்டு முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவே இந்த ஆலயம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல வருடங்களாக தங்களது வழிபாட்டு தலமாக விளங்கிய ஆலயம் தற்போது முற்றாக அகற்றப்பட்டுள்ளமை தொடர்பாக அங்குள்ள தமிழர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அந்தப் பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையொன்றை மையப்படுத்தி நாடு நகர அபிவிருத்தி வாரியத்தினால் புனித பூமியாக அடையாளப்படுத்தப்பட்ட எல்லைக்குள் இந்த ஆலயம் அமைந்திருந்தது. அந்தப் பகுதிக்குள் வாழ்ந்த தமிழ் குடும்பங்கள் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட போதிலும் ஆலயத்தில் தொடர்ந்தும் பூசை வழிபாடுகள் நடைபெற்று வந்தன. ஆலயத்தை அந்த இடத்திலிருந்து…
-
- 9 replies
- 1.1k views
-
-
ஆட்சி கவிழ்ப்பிற்கு... தயாராகும், விமல் தரப்பு? அரசாங்கத்தின் சாதாரணப் பெரும்பான்மை பலத்தையும் விரைவில் இல்லாமல் செய்வோம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 11 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று(வியாழக்கிழமை) கண்டிக்கு பயணம் மேற்கொண்டு வரலாற்று சிறப்புமிக்க தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதன்பின்னர் மகாநாயக்க தேரர்களை சந்தித்து, தமது வேலைத்திட்டத்தை கையளித்தனர். இதன்நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச, “நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்வைத்தோம். அமைச்சரவையில் இருந்து எம்மை நீக்கினர். ஆனால் நாம் வேலைத்திட்டத்தை கைவிடமாட்டோம். அதனை தொடர்ந்து முன்னெடுப்போம். நிதி அமைச்சர் பஸில்…
-
- 9 replies
- 650 views
-
-
விடுதலைப் புலிகளுடன் அரசு பேச்சுக்களை நடத்தாது: பிரதமர் ரட்னசிறீ விக்கிரநாயக்க [புதன்கிழமை, 28 மார்ச் 2007, 22:08 ஈழம்] [காவலூர் கவிதன்] நாளை பேச்சை ஆரம்பிக்கவும் அரசு தயாராக இருக்கிறது என்று சிறீலங்கா வெளிநாட்டமைச்சர் ரோஹித போகல்லகம தெரிவித்த மறுநாள், சிறீலங்கா பிரதமர் ரட்னசிறீ விக்கிரமநாயக்க, அந்த அறிவிப்பை மறுதலிக்கும் வகையில், கருத்து வெளியிட்டுள்ளார். உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டும்படி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரி எழுதிய கடிதத்திற்குப் பதலளித்துள்ள பிரதமர், பேச்சுவார்த்தை மூலம் விடுதலைப் புலிகளுடன் இணக்கம் காண சிறீலங்கா அரசு தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார். போர் முனையில் படைகள் பெற்றுள்ள வெற்றிகளை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்…
-
- 9 replies
- 1.7k views
-
-
[Monday April 02 2007 09:57:36 AM GMT] [tharan] பாக்கு நீரிணைக் கடற் பரப்பில் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய மீனவர்கள் ஐவரை சுட்டுக் கொன்ற இலங்கைப் படகுகளை தேடும் நடவடிக்கையில் இந்திய கடற்படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை பாக்குநீரிணைக் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டனர். எனினும், இலங்கை கடற்படையினர் இந்தத் தாக்குதலை நடத்தவில்லையென இலங்கை அரசும் கடற்படையினரும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாக்கு நீரிணையில் இலங்கை இந்திய கடல் எல்லையில் இந்திய கடற்படையினர் அண்மைக்காலமாக தங்கள் கண்காணிப்புப் பணிகளையும் ரோந்த…
-
- 9 replies
- 2.6k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிக்கொண்டுள்ள ஆனந்தசங்கரி மற்றொரு புதிய கூட்டமைப்பினை உருவாக்க முற்பட்டுள்ளார். அவரது முன்னாள் அரசியல் எதிரிகளுள் ஒருவரான டக்ளஸ் தேவானந்தா தரப்பு உள்ளிட்ட வௌ;வேறு கட்சிகள் கூட்டு சேர்ந்து இப்புதிய கூட்டமைப்பினை உருவாக்க ஏற்பாடாகியுள்ளது. புதிய கூட்டமைப்புத் தொடர்பான முதலாவது கலந்தாய்வுக் கூட்டம் நல்லூரினில் இன்று இடம்பெற்றிருந்த போதும் நீண்ட இழுபறிகளுடன் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் ஈபிடிபி சார்பில் அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டிந்தனர். தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் அதன் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரியும் சிறீடெலோ சார்பினில் அதன் செயலாளர் நாயகம் உதயராசா மற்றும் யாழ்.மாவ…
-
- 9 replies
- 1.3k views
-
-
காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மூடப்படுகிறது! 31 AUG, 2023 | 03:08 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடி புராதன நூதனசாலை தற்போது உரிய பராமரிப்பின்றி, குப்பைகள் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த பூர்வீக நூதனசாலைக்கு நாடெங்கிலும் இருந்து பெருமளவினர் அன்றாடம் சென்று பார்வையிடுகின்றனர். இந்த நூதனசாலையை பார்வையிடுபவர்களுக்கான நுழைவுச்சீட்டுகளும் அங்கே வழங்கப்படுகின்றன. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மிகம், அறிவியல், வர்த்தகம், வழிபாடு…
-
- 9 replies
- 720 views
-
-
தமிழர்களின் போராட்டவலுவைச்சிதைத்ததிற்கான பலனை இந்தியா அனுபவிக்கத்தொடங்கியுள்ளது. தமிழர்களைப்போராடத்தூண்டிவிட்டு பின்னர் ஒட்டு மொத்த தமிழர்களையே கொன்று குவிக்கவும், கொன்றுகுவித்தும்நாடகமாடிய இந்தியா இன்று 'பிள்ளையார் பிடிக்கக்குரங்கு வந்தது" போல் சீனாவின் பிடியில் மும்முனைகளிலும் அகப்பட்டு என்னசெய்வது என்று தவிதவியாய்த் தவிக்கின்றது. சீனாவோ தன்பிடியைமேலும் வலுப்படுத்திக்கொணடு செல்கின்றது. தமிழர்களை ஒழிக்க இலங்கை அரசிற்கு இந்தியா உதவி இருந்தாலும் இந்திhவின் பலவீனத்தைப்பாவித்து தமிழர்களை ஒழித்தது இலங்கை. மீண்டும் இந்தியா இப்பிராந்தியத்தில் வலுவாக இருந்தால் இலங்கையில் அமைதி நிலவாது என்பதை ராஜபகஸ 1986களில் ஐபிகேஎவ்ஆக இலங்கையில் காலடி வைத்தபோதே கூறியுள்ளார். புலிகளை வளர்த்…
-
- 9 replies
- 1.5k views
-
-
இது என்ன கொடுமையடா? துரோகிகள் வரிசையில் இன்று முழுத் தமிழினமும் வெடகி தலைகுனிய வேண்டும்! பொய் பொய் பொய் இன்னும் எத்தனை பொய்கள்? போதும் உங்கள் பசப்புகள்.. மாவீரர்களை நாம் வணங்க இந்த சில்லறை பொறுக்கிகளிடம் போவதை விட ஒரு தேவாலயத்திலோ அல்லது கோயிலிலோ சென்று வணங்குவதே சாலச்சிறந்தது... இன்று மெயிலில் வந்த ஒரு பிரச்சாரம்... எச்சரிக்கை - எக்ஸல் மண்டபத்தில் இலங்கை அரசு ஒழுங்கு செய்து நடாத்தும் மாவீரர்தின நிகழ்வு தேசப்பற்றுடன் எத்தனையோ தியாகங்கள், அர்ப்பணிப்புகள் செய்த நாம், எமது விடுதலைப் போரட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடவின் சந்தர்ப்பத்தை பாவித்து எமக்குள் இருக்கும் பணம், பொருள், பெண மற்றும் பதவி ஆசைகொண்ட பலர் இப்போதுதான் தமது ஆட்டத்தைக் காட்டவெளிக்க…
-
- 9 replies
- 2.2k views
-
-
ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து இலங்கை மகிழ்ச்சி - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு 27 செப்டம்பர் 2014 பதவி பற்போவதனால் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கிட்டும் என்கிறார் ராஜித- தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டு கால சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையின் மூலம் தமிழக அரசில்வாதி எவ்வளவு ஊழல் மோடிகளில் ஈடுபட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். …
-
- 9 replies
- 1.6k views
- 1 follower
-
-
அறுபது நீண்ட ஆண்டுகள், தமிழ் பேசும் சிறுபான்மையினர், இடைவெளியின்றிச் சூறையாடப்பட்டிருக்கின்றனர்; வேறுபாடின்றி தெருவோரத்தில் கொன்று போடப்பட்டிருக்கின்றனர்; அவர்கள் காணி நிலம், வீட்டு முற்றம், தெருக்கோடி எல்லாமே பேரினவாதப் புற்று நோய்க் கிருமிகளால் சிறுகச் சிறுக அரிக்கப்பட்டு அதன் உச்ச பட்ச வடிவமாக வன்னி நிலம் முழுவதுமே அபகரிக்கப்பட்டுவிட்டது. கொன்று போடப்பட்டவர்கள், சாம்பலாக்கப்பட்டவர்கள், விரட்டியடிக்கப்பட்டவர்கள், சிதைத்துச் சிதைது குடியேற்றப்பட்டவர்கள் என்று வடக்கும், கிழக்கும், மலையகமும் மறுபடி மறுபடி அவலங்களின் பூமியாக மாற்றப்பட்டுவிட்டது. இவையெல்லாம் நேற்று ஆரம்பித்து இன்று முடிவடையும் சிவில் யுத்தமல்ல. பின் காலனியக் காலகட்டம் முழுவதுமே தமிழ்ப் பேசும் சிறுப…
-
- 9 replies
- 1.8k views
- 1 follower
-
-
சிங்களத்தின் கட்டாய இராணுவப்பயிற்சி - தமிழ் மாணவர்களுக்கும் சிங்களத்தில் அறிக்கை - மூன்று வாரங்கள் இந்த பயிற்சி - "தலைமைத்துவம்" என்ற பெயரில் இந்த "பட்டறை" Tamil university students get Sinhala summons for military course Genocidal regime of Mahinda Rajapaksa in further militarization of state in the island introduces an obligatory course conducted by the military for all students selected for the universities. The three-weeks course in selected centres of the SL Armed Forces begins on Sunday and Tamil students received summons letters in Sinhala, BBC News said Thursday. Meanwhile, Students Unions in the island have moved to the Supreme Court to s…
-
- 9 replies
- 1.4k views
-
-
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றிற்கான முடிவுகள் வெளியாகின! இலங்கையில் இந்த ஆண்டுக்குரிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தற்பொழுது www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்குரிய மேற்படி பரிட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் அவற்றுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டன. இதில் 3,55,326 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அதன்படி தமிழ் மொழி மூலம் 87,556 மாணவர்களும், சிங்கள மொழி மூலம் 67,770 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர் https://www.ibctamil.com/srilanka/80/107128…
-
- 9 replies
- 2.8k views
-
-
அவுஸ்திரேலிய முன்னால் பிரதமரும் தற்போதய வெளிநாட்டு அமைச்சரை இலங்கையின் கொலைக்களம் பாதித்திருப்பதாக தனது வலைத்தளத்தில் தெரிவித்திருக்கின்றார் . http://twitter.com/#!/kruddmp
-
- 9 replies
- 1.5k views
-
-
நீங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவரா? சட்ட விரோத நடவடிக்கைகளில் எப்போதும் ஈடுபடாதவரா? உங்கள் வேலை உண்டு நீங்கள் உண்டு என்று வாழ்பவரா? நீங்கள் எப்படியானவராக இருந்தாலும் வெள்ளை வான் அனர்த்தம் உங்களுக்கும் ஏற்படலாம்! நீங்கள் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது உங்கள் கதவுகள் தட்டப்படலாம். வீதியில் உங்கள் பாதையை வெள்ளைவான் ஒன்று மறிக்கலாம். அதை எதிர் கொள்ள நீங்கள் தயாரா? 1) திகிலடையாதீர்கள் நீங்கள் கொஞ்சமும் எதிர்பாராத கணத்தில் இது இடம்பெறும் போது திகைப்படைந்து செயலிளந்து நிற்காதீர்கள். உங்களுக்கு கிடைக்கும் சுதந்திரமான இறுதி கணங்களை பயத்தை நீக்கி புத்திசாதுரியத்துடன் பயன்படுத்துங்கள். உங்களை கடத்த வந்தவர்கள் நன்கு திட்டம…
-
- 9 replies
- 1.7k views
-
-
விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி நகுலன் கைது சிறிலங்கா இராணுவத்தினரின் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான நகுலன் இன்று தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நகுலன் என அழைக்கப்படும், கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி இன்று காலை, கோப்பாய் தெற்கில் உள்ள அவரது வீட்டில் இருந்து, சிவிலுடையில் சென்ற தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்து கொண்டு செல்லப்பட்டார். விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த நகுலன், இறுதிக்கட்டப் போரின் போது, அம்பாறை மாவட்டத்தில், புலிகளின் தளபதிகளில் ஒருவரான ராமுடன் இணைந்து செயற்பட்டவர். புலிகளின் முன்னாள் தளபதி ராம் நேற்று …
-
- 9 replies
- 997 views
-
-
[size=4]வெலிக்கடைச் சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் போது கணிசமானளவு கைதிகள், சிறப்பு அதிரடிப்படையினரால், படுகொலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சிறிலங்கா இராணுவ கொமாண்டோக்களால் கலவரம் அடக்கப்பட்ட பின்னர், சிறிப்பு அதிரடிப்படையினரால் இவர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். கடைசிக் கைதி சனிக்கிழமை காலை 6 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறைச்சாலை பணியாளர் ஒருவர் கூறியுள்ளார். “சனிக்கிழமை அதிகாலை 2 – 3 மணியளவில் கலவரத்தை சிறிலங்கா இராணுவ கொமாண்டோக்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். அதையடுத்து கைதிகள் தமது கூண்டுகளுக்குள் சென்றனர். அதன்பின்னர், சிறப்பு…
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
மாவீரர் புதைந்த மண்ணில் மானத்தையும் உடலையும் விற்றுப் பிழைக்கும் ஒரு கூட்டம் [ புதன்கிழமை, 07 யூலை 2010, 11:29.49 மு.ப | ஊடகப் பணிமனை ] சேரமான்களே, அதியமான்களே அறிவீரோ இந்தக் கொடுமையினை.........? வசைபாடுவதை நிறுத்தி முதலில் இதற்கு வழி தேடும். தனக்கேயுரிய வனப்புடனும் எழிலுடனும் இறுமாப்புடனும் எழுந்துநின்ற ஒரு நகரம் தன் சுயத்தினையும் வனப்பினையும் இழந்து மாயையான, ஆபத்து நிறைந்த உலகத்திற்குள் மெல்ல நகரும் கதையிது. கடந்த 25, 26, 27ஆம் திகதிகளில் கிளிநொச்சி நகரின் மையத்திலமைந்திருக்கும் பொது விளையாட்டு மைதானம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் சிங்களவர்கள் நிறைந்திருந்தார்கள். இது என்ன சிங்கள நகரமோ என எண்ணுமளவிற்கு சிங்களவர்…
-
- 9 replies
- 2.2k views
-
-
வரதராஜ பெருமாள் கொழும்பிற்கு வந்து சேர்ந்தார், நாளை யாழிற்கு யாழ் நிருபர் திங்கட்கிழமை, மார்ச் 29, 2010 varathar வடக்கு கிழக்கு மகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சின் தலைவருமான அ.வரதராஜப்பெருமாள் நேற்றுப் பிற்பகல் கொழும்பு வந்து சேர்ந்துள்ளார். இந்தியாவில் பல வருடங்களாகத் தங்கியிருந்த அவர், தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக நாடுதிரும்பியுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணத்துக்கு ஓரிரு தினங்களில் வரவுள்ள அவர், தேர்தல் பிரசாரக் கூட்டங் களிலும், கருத்தரங்குகளிலும் உரையாற் றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மகாண சபையின் முதலாவது முதலமைச்சர் பதவியை ஏற்றிருந்த அவர், தனிநாடு பிரகடனம் செய்ததை …
-
- 9 replies
- 1.5k views
-
-
ஈழத் தமிழினம் புதியதொரு வரலாறு எழுதுவதற்குத் தயாராகிவருகின்றது. [ வியாழக்கிழமை, 13 மே 2010 ] நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றியில் நாங்கள் எல்லோரும் பங்கெடுக்க முடியும்! அண்ணன் உருத்திரகுமாரின் உன்னத பணியின் முதல் அத்தியாயமாக நாடு கடந்த தமிழீழ அரசு எனும் குழந்தை பிறப்பெடுக்கவுள்ளது. அந்தக் குழந்தையின் சுகப் பிரசவம் முதல் அதன் வளர்ச்சி மற்றும் அந்தக் குழந்தையின் வெற்றிப் பயணம் என்பன புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களாகிய எங்கள் ஒவ்வொருவரின் கைகளிலேயே தங்கியுள்ளது. வாக்குரிமையுள்ள சகலரும் தங்கள் வாக்குகளை செலுத்துவதன் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றியில் நாங்கள் எல்லோரும் பங்கெடுக்க முடியும். பிரிவுகளைப் புறந்தள்ளுவோம்….. எங்களுக்குள் நாங்களே முட்ட…
-
- 9 replies
- 1.7k views
-
-
இலங்கை அரசினது அழைப்பின் பேரினில் இராணுவ கருத்தரங்கில் கலந்து கொள்ள வருகை தரும் சுப்பிரமணியம் சுவாமி தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கான ஏற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது. அவரதும் குழுவினரதும் யாழ்.விஜயத்தின் போது பயணம் செய்யவுள்ள இடங்கள் மற்றும் சந்திக்கவுள்ள பிரமுகர்கள் பெயர் விபரங்கள் பட்டியல்படுத்தப்பட்டு முன்னேற்பாட்டு நடவடிக்கைகளினை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டுவருகின்றது. அவரது யாழ்ப்பாணத்திற்கான பயண நாட்கள் பற்றிய தகவல்கள் ஏதும் இன்னமும் வெளியாகவில்லையாயினும் 21ஆம் திகதிக்கு பின்னதாக அது இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பயணத…
-
- 9 replies
- 989 views
-
-
சனி 10-03-2007 01:38 மணி தமிழீழம் [மயூரன்] மட்டக்களப்பில் 40 000 பொதுமக்கள் 48 மணிநேரத்தில் இடப்பெயர்வு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான படுவான்கரைப் பகுதியில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட அகோர பலகுழல் எறிகணைத் தாக்குதலில் 40 000 பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரியவருகிறது. மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலை மற்றும் அயல்கிராமங்களில் இருந்தும் இடம்பெயர்ந்துள்ள மக்களால் பெரும் மற்றொரு மனிதஅவலம் சர்வதேச சழூகத்துக்கு தெரியாமல் இடம்பெறபோவதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை சிறீலாங்கா இராணுவத்தால் திறக்கப்பட்ட மூன்றாவது களமுனை புல்லுமலைப் பகுதியில் விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா…
-
- 9 replies
- 2k views
-