ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
இன்று லிபியா விடயத்தில் காட்டிய அவசரத்தினை அன்று தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் வெளிக்காட்டவில்லை என ஐநா மனிதஉரிமைகள் கவுன்சிலின்கூட்டத்தொடரில் பங்கேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா குற்றஞ்சாட்டினார். ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 16வது கூட்டத் தொடரில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சக பிரதிநிதி சுகிந்தன் முருகையா, இளையோர் முன்னணி பொறுப்பாளர் ஜனர்தனன் புலேந்திரன்(சந்தோஸ்), இனப்படுகொலை-போர் குற்றங்களுக்கு எதிரான அமைச்சகத்தின் ஐநா மனித உரிமை சபைக்கான விவகாரங்களுக்கான பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா ஆகியோர் பங்கெடுத்துள்ளனர். 22 மார்ச் 2011 - செவ்வாய்கிழமை இடம்பெற்ற பொதுநிலவரங்க…
-
- 7 replies
- 1.8k views
-
-
விடுதலை ஆவாரா டக்ளஸ் தேவானந்தா?-குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வசந்தன் 23 செப்டம்பர் 2011 இந்திய அரசின் ஆதரவோடு போராளிக்குழுக்கள் இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில் நடந்த கொலை வழக்கு இது. சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்த டக்ளஸ் தேவானந்தா அதே பகுதியைச் சார்ந்த திருநாவுக்கரவு என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். கொலை வழக்காக பதியப்பட்ட இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாகக் சேர்க்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்தது நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்தது சென்னை போலீஸ். இந்த வழக்குக்கு இன்னமும் 6-வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்காக நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற டக்ளஸ் தேவானந்தா இலங்கைக்குக் தப்பிச் சென்றார் …
-
- 4 replies
- 1.8k views
-
-
பாலச்சந்திரன் படுகொலை பின்னணியில் போர்க்குற்ற விசாரணையை துரிதப்படுத்த கூட்டமைப்பு வேண்டுகோள் 'ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒன்றரை மணிநேரம் ஒளிபரப்பப்படவுள்ள காணொளியில் உள்ள ஒரு பகுதியே பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள். இதைவிட நெஞ்சை உருக்கும் கொடூரமான சம்பவங்கள் வெளிவரக்கூடும். எனவே, இந்தியா உட்பட உலக நாடுகள் தாமதிக்காது இலங்கை அரசு மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்தவேண்டும்.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற …
-
- 1 reply
- 1.8k views
-
-
வெள்ளிக்கிழமை, 22 டிசெம்பர் 2006, 05:02 ஈழம் (புதினம் நிருபர்) இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் விடியல் ஏற்படும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ள பாடசாலை மாணவர்கள், தமிழகத்தில் பாடசாலை பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்கிய முதல்மைச்சர் கலைஞர் கருணாநிதியை 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது அவர்கள் மத்தியில் கருணாநிதி பேசியதாவது: கடந்த பல ஆண்டுகளாக இலங்கையிலே நடைபெறுகின்ற அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற காரியங்கள் எந்த அளவுக்கு தமிழ்நாட்டிலே உள்ள எங்களையெல்லா…
-
- 8 replies
- 1.8k views
-
-
இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் அமெரிக்காவில் நடைபெறவுள்ள தேர்தல் ஒன்றில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமி கைலாசபதி என்ற யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பெண் ஒருவரே இவ்வாறு தேர்தலில் போட்டியிட உள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பிரைமரி தேர்தல்களில் குடியரசுக் கட்சி வேட்பாளர் சான்டி ஸ்மித்தை எதிர்த்து சுமி போட்டியிடவுள்ளார். சுமி கைலாசபதி அரசியல் விஞ்ஞானம் தொடர்பில் முதுமாணிப் பட்டமொன்றை பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமி கைலாசபதி 1990களில் அமெரிக்காவிற்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அமெரிக்காவின் ஆன் ஆர்பரில் வசித்து வரும் சுமி கைலாசபதி யாழ்ப்பாண பல்கலைக்கழக பழைய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. http…
-
- 2 replies
- 1.8k views
-
-
இலங்கையில் தமிழர் தாயகத்தில் தமிழ் பெண்களின் இன்றைய நிலையை சர்வதேசத்துக்கு எடுத்துரைக்கும் முகமாகவும் அத்தோடு உலகில் போரினாலும் அடக்குமுறையாலும் பாதிக்கப்படும் பெண்களுடன் கைகோர்க்கவும் யேர்மனி பிராங்க்போர்ட் நகரில் "இலங்கையில் இனப்படுகொலைக்குள்ளாகும் ஈழத்து தமிழ் பெண்கள் " மாநாடு நடைபெற்றது . இம் மாநாட்டில் தாயகத்தில் இருந்து வடமாகாண சபையின் உறுப்பினரும் காணாமல் போனோர் விடையமாக அயராது உழைக்கும் திருமதி அனந்தி சசிதரன் அவர்களும் மற்றும் நோர்வே , பிரான்ஸ் ,சுவிஸ் என பல நாடுகளில் இருந்தும் பெண்கள் உரிமைக்காக குரல்கொடுக்கும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் . திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் உரையாற்றுகையில் தற்போது போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்த நிலையில், பெண…
-
- 2 replies
- 1.8k views
-
-
தையிட்டி விகாரையை அகற்ற முடியாது! – சவேந்திர திட்டவட்டம் யாழ்., தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்ற முடியாது.” – இவ்வாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அடிக்கல் நட்டிருந்தார். இந்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது. இதனையடுத்து தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறுகோரி மக்களால் 3 நாள் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டி…
-
- 29 replies
- 1.8k views
- 1 follower
-
-
“கப்டன் பண்டிதர்” குடும்பம் நீதிமன்ற உத்தரவில் வீட்டில் இருந்து வெளியேற்றம்! by G. Pragas தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான “கப்டன்” பண்டிதரின் தாயார் சின்னத்துரை மகேஸ்வரி மற்றும் சகோதரன் ஆகியோர் தாம் குடியிருந்த வீட்டிலிருந்து நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்றைய (05) தினம் வெளியேற்றப்பட்டுள்ளனர். புலிகளின் முன்னாள் நிதி மற்றும் ஆயுதப் பராமரிப்பு பொறுப்பாளருமான கப்டன் பண்டிதர் 1985ம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பண்டிதரின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் யாழ்ப்பாணம் – கம்பர்மலையில் வசித்து வந்த நிலையில் இவர்களில் ஒரு சகோதரன் 2006ம் ஆண்டு சுட்டுக்…
-
- 17 replies
- 1.8k views
-
-
கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஈழவேந்தன் எம்.பி. சுவிற்ஸர்லாந்து தூதுவரிடம் நேற்று மன்னார் சம்பவம் குறித்து விளக்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தனுக்கும், இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்து நாட்டின் தூதுவர் ருத் பிளின்ட்டுக்கும் இடையிலான திடீர்ச் சந்திப்பு ஒன்று நேற்று மாலை 6 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஈழவேந்தன் சர்வதேச நாடு ஒன்றுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையம் சென்றிருந்தார். இவ்வேளையில், விமான நிலையத்தில் தூதுவர் ருத் பிளின்ட் வந்திறங்கினார். அப்போது இருவரும் சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் வரை கலந்துரையாடினர் எனத் தெரிவிக்கப்பட…
-
- 0 replies
- 1.8k views
-
-
செம்மணி புதைகுழி வழக்கு விசாரணையை யாழ்ப்பாணத்தில் நடத்த அனுமதிக்க வேண்டாம் செம்மணி புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணையை யாழ்ப்பாணத்தில் நடத்த அனுமதிக்க வேண்டாமென்று கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமையும் நேற்று முன்தினம் புதன்கிழமையும் இராணுவத் தளபதியால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. செம்மணி படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை யாழ்ப்பாணம் உட்பட வடக்கு , கிழக்கில் நடத்த வேண்டாமென்றும் கோரி 19 தனித்தனி மனுக்களை தாக்கல் செய்ததுடன் அப்படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை அனுராதபுரத்துக்கு மாற்றுமாறும் இராணுவத் தளபதி கோரியுள்ளார். செம்மணியில் புதைகுழிகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பாக தொடர…
-
- 3 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் 54 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 1.8k views
-
-
இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி) ஐ.நா வில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட விசாரணை அறிக்கை இலங்கைக்கு எதிரானதாக இருக்க கூடாதென்பதில் மிகத்தீவிரமாக செயற்பட்ட சுமந்திரன் அதனை சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு ஒப்புக்கொண்ட விடயத்தை வாசகர்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். அதில் சுமந்திரன் தெரிவித்துள்ளதாவது: தமிழ்தேசிய கூட்டமைப்பானது ஜெனிவாவுக்கு செல்வதில்லை என முடிவெடுத்துள்ளது. நாங்கள் இந்நாட்டின் ஒரு பகுதி. நாங்கள் இந்நாட்டின் அரசியற்கட்சி. ஜெனிவாவில் என்ன நடக்கிறது என்றால் அது நாடுகளுக்கிடையிலான விடயம். அங்கு 47 நாடுகள் வாக்களிக்க கூடிய நிலையில் உள்ளன. அது அவர்களுடைய விடயம் (எப்படி வாக்களிப்பது என்பது). ”நாங்கள் ஏனைய நாடுகளை ஆதரிக்குமாறு பரப…
-
- 15 replies
- 1.8k views
-
-
ஒரு பத்திரிகையாளனின் பட்டறிவு தொடர்.. இலங்கை இனப்பிரச்சினைக்கு ஜக்கிய இலங்கைக்குள் சமஸ்டி வழியில் தீர்வுகாண்பது பற்றிய விவகாரம் ஒரு சர்ச்சைக்குரிய விவாதமாக வெடித்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில். அதுபோலவே சர்ச்சைக்குரியதாக தொடங்கியிருக்கும் இந்த அரசியல் அனுபவத் தொடரிலும் அதன் ஆரம்பத்திலேயே- இதன் வாசகர்களுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்ய வேண்டிய நிலமை எனக்கு இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்காவின் ஜக்கிய தேசியக்கட்சி அரசுடனும். பின்னர் மகிந்தராஜபக்ச அரசுடனும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் நடத்திய ரேநடிப் பேச்சுக்கள் அணைத்தையும்- ஒன்றைக் கூடத் தவறவிடாமல் - கவர் பண்ணிய ஒரே செய்தியாளன் என்ற பின்புலத்தில் இந்தப் பேச்சுகளின் இடையே மைய இழையோட்…
-
- 0 replies
- 1.8k views
-
-
கொலைக்காண பணிப்புரையை வழங்கிய அனிதாவும் கைது:- 2ஆம் இணைப்பு:- நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனை (ரஜீவ்) கொலை செய்யுமாறு பணித்தது அவருடைய மனைவியே கொலை குறித்து விசாரணை நடத்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். தனது கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக முன்னர் அவரது மனைவி பொலிஸாருக்கு அறிவித்திருந்தார். ஆனால் தனது கணவனை கொலை செய்யுமாறு அவர் பணிப்பு விடுத்ததை அடுத்து வட மாகாண சபை எதிர்கட்சித் தலைவரும் ஈபிடிபி கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் மற்றும் அவரது அலுவலகத்தில் பணிபுரியும் லண்டன் சசிந்திரன் ஆகியோர் இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொலைக்கு பயன்படுத…
-
- 6 replies
- 1.8k views
-
-
மெக்சிகோ, அவுஸ்திரேலியா, சுவிஸ்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இதயத்தில் ரத்தம் என்ற இருவட்டுக்கு பின்னூட்டல்கள் வந்துள்ளது என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் படுகொலை பற்றியது எனக் கூறி இதயத்தில் ரத்தம் என்ற தலைப்பிலான இருவட்டினை மதிமுக பொது செயலாளர் வைகோ தயாரித்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இருவட்டில் ஈழத்தமிழர்கள் வரலாறு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, இலங்கை தலைவரின் அட்டூழியம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன் என வைகோ கூறினார். மேலும் இருவட்டினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, கணேசமூர்த்தி எம்.பி. மூலம் 139 நாடுகளின் தூதரகத்துக்கு அனுப்பி வைத்தேன் எனவும் தற்போது மெக்சிகோ, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில்…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஈழத் தமிழ்க் குடும்பத்துக்கு அவுஸ்திரேலியாவில் நடந்த கதி! கடந்த ஏப்ரல் மாதம் திருமணமாகியிருந்த கணேஷ் ரஞ்சினி தம்பதியர் அவுஸ்திரேயாவின் மெல்பேர்ண் குடிவரவுத் திணைக்கள அலுவலகத்திற்கு கடந்த 10-05-2012 வியாழக்கிழமை மாதாந்த நேர்காணலுக்கென அழைக்கப்பட்டு சென்றபோது இடிபோல அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று அங்கு தமக்காகக் காத்திருக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவுஸ்திரேலியாவின் புலனாய்வுப் பிரிவு எந்தவித ஈவு இரக்கமும் இல்லாமல் ரஞ்சினையும் அவரது இரு குழந்தைகளையும் 'தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்" என அறிக்கை அனுப்பியுள்ளதால், கணவரிடமிருந்து அவர்களைப் பிரித்து சிட்னியிலுள்ள விலாவூட் தடுப்பு முகாமுக்குஅனுப்புவதற்கு குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் தீர்மானித்…
-
- 2 replies
- 1.8k views
-
-
மியன்மாரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வெளியுலக, ஊடக தொடர்புகள் இன்றி வாழ்கின்றார்கள் திகதி: 15.06.2009 // தமிழீழம் சிறீலங்காவுக்கு விஜயம் செய்யும் மியன்மார் பிரஜைகளுக்கு வீசா நடைமுறைகள் தளர்த்தப்பட உள்ளன. இதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளது. தற்போது மியன்மாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்த உடன்படிக்கையுடன் சிறீலங்காவின் சுற்றுலா வளர்ச்சிக்கு மியன்மாரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திடவுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியாக உள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியின் மியன்மார் விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலு…
-
- 9 replies
- 1.8k views
-
-
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையில் இருந்து விலகி ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து தான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/articles/2015/10/26/த-வி-கூ-வில்-இணையவுள்ள-கருணா-அம்மான்
-
- 2 replies
- 1.8k views
-
-
03.09.2000ம் அன்று யாழ்.தென்மராட்சியில் பலமுனைகள் ஊடாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிகளிற்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் இரும்பொறை உட்பட்ட மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 6 replies
- 1.8k views
-
-
சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட அதிஷ்ட இலாபச்சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழில் கைது செய்யப்பட்டிருக்கும் சேதுபதி என்பவர் தமது கட்சி உறுப்பினர் அல்ல என ஈ.பி.டி.பி அறிவித்துள்ளது. இதேவேளை அரச படையினர் இவர் ஈ.பி.டி.பி உறுப்பினரே என உறுதிப்படுத்தியுள்ளனர். கடத்தப்ப்பட்ட மோட்டார் சைக்கிளும் இவரிடம் காணப்பட்டதாகப் படையினர் கூறுகின்றனர். இதே வேளை யாழ்ப்பாணத்தைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பது குறித்து கோதாபாயவிற்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் வெளிப்பாடே இந்தக் கைது எனவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்றுவரும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஈபிடிபி உறு…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஆயுதங்களுடன் சிங்களவர் மூவர் கைது வெலிகந்தையில் சம்பவம் 2/18/2008 6:23:20 PM வீரகேசரி இணையம் - பொலன்னறுவை வெலிகந்தை பொலிஸ் பிரிவுகுட்பட்ட பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை வைத்திருந்த மூன்று சிங்களவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள் ளனர். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இவர்கள் வெலிகந்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டுள்ளதுடன் கூலித்தொழில் செய்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான என்.கே.இலங்ககோன் தெரிவித்தார். இவ்விடயம் குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்ததாவது : கொலகனவாடிய செவனபிட்டியவைச் சேர்ந்த முதுகமகேலாகே தர்மசேன எனும் தர்மே (27வயது), மஹாவௌ செவனபிட்டியவைச் சேர்ந்த முதுகமலாகே ரஞ்சித் (31 வயது)…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஈழத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்றது மலேசியா மலேசியாவில் உண்ணாவிரதம் இருந்த ஈழத்தமிழர்களை காப்பாற்ற பல்வேறு உலக தமிழ் அமைப்புகளுக்கும், நக்கீரன் மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, ஐ.நா.வின் அகதிகளுக்கான அதிகாரிகளை சந்தித்து, ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தார். உள்துறை அமைச்சகத்திடமும் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தார். அதேபோல மாற்று செயல் அணி அமைப்பைச் சேர்ந்த கலைவாணர் முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்த ஈழத்தமிழர்களை நேரில் சந்திக்க பலமுறை முயற்சித்தும், அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு திங்கள்கிழமை மலேசிய பிரதமர் அலுவலகத்துக்கு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் அவல நிலைகளை பேக்ஸ் மூலமாக செய்திகளாக அனுப்பினார். தொடர்ந்து மலே…
-
- 3 replies
- 1.8k views
-
-
கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றி தமிழீழத்துக்கான பாதையைத் திறந்த மகிந்தவுக்கு நன்றி: சுரேஸ் பிரேமச்சந்திரன் [வெள்ளிக்கிழமை, 8 யூன் 2007, 11:37 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றி தமிழீழம் உருவாவகுவதற்கான பாதையைத் திறந்திருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் பேசியதாவது: கொழும்பில் தமிழர்கள் வெளியேற்றப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் இந்த வெளியேற்றல் நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம்…
-
- 6 replies
- 1.8k views
-
-
காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்பதற்கு இந்தியா (India) 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதென இலங்கையின் விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (07) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் நிதியுதவிகள் மேலும், இந்த நிதி வழங்கலுக்கமைய குறித்த துறைமுகம் விரைவில் கப்பல் பயணங்களுக்கு தயாராகி விடும் எனவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, வடக்கில் விமான நிலையம், தீவுகளில் காற்றாலை மின்சாரம் மற்றும் தொடருந்து போக்குவரத்து துறைகளில் இந்தியா நிதியுதவிகளையும் முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளமை குறி…
-
-
- 27 replies
- 1.8k views
- 1 follower
-
-
ஏன் எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக உதயன் நாளிதழ் வழங்கினார்..? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ. சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு இலவசமாக விநியோகித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெறவுள்ளது. கூட்டத்துக்கு முன்னதாக அங்கு வந்திருந்தவர்களுக்கு வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை இலவசமாக வழங்கி வைத்தார். "சுமந்திரனுக்கு வாக்களிக்கவேண்டாம்" என்று பிரதான தலைப்பிட்ட செய்தி உதயனில் இன்…
-
- 5 replies
- 1.8k views
-