Jump to content

”படுகொலைகளை தடுக்க ஐநா தவறிவிட்டது”- மனித உரிமைக் கவுன்சிலில் தமிழீழ பிரதிநிதி(காணொலி)


Recommended Posts

இன்று லிபியா விடயத்தில் காட்டிய அவசரத்தினை அன்று தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் வெளிக்காட்டவில்லை என ஐநா மனிதஉரிமைகள் கவுன்சிலின்கூட்டத்தொடரில் பங்கேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா குற்றஞ்சாட்டினார்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 16வது கூட்டத் தொடரில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சக பிரதிநிதி சுகிந்தன் முருகையா, இளையோர் முன்னணி பொறுப்பாளர் ஜனர்தனன் புலேந்திரன்(சந்தோஸ்), இனப்படுகொலை-போர் குற்றங்களுக்கு எதிரான அமைச்சகத்தின் ஐநா மனித உரிமை சபைக்கான விவகாரங்களுக்கான பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.

DSC00084.JPG

22 மார்ச் 2011 - செவ்வாய்கிழமை இடம்பெற்ற பொதுநிலவரங்களுக்கான பிரிவில், தமிழர் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா ஆற்றிய உரையில், ஆயதப்போர்கள் இடம்பெறும் சுழல்களில், பெரும் இனப்படுகொலைகள் இடம்பெறும் வாய்ப்புக்கள் உள்ளது பற்றி, சர்வதேச சமூகம் விழிப்புடன் இருத்தல் வேண்டும் எனப் பல ஆண்டுகளுக்கு முன்பே, முன்னாள் ஐநா பொதுச்செயலாளர் கொபி அனன் ஆலோசனை கூறியிருந்த போதும், பல்வேறு ஆயதப் போர்ச்சூழல்களில் பொதுமக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலைமை, கவனிப்பாக கையாளப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

rimg0096.jpg

இலங்கைத் தீவில் இடம்பெற்ற போரினை, அதற்கான உதாரணமாக முன்வைத்த சிறிசஜீதா சிவராஜா அவர்கள், தொடர்ந்து தனதுரையில், தமிழர் தாயகப் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மையங்கள், தாக்கி அழிக்கப்பட்டு 100000 மேற்பட்ட மக்கள் போரின் இறுதி வாரத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகின்றது. 40000 மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐநா அதிகாரிகளே சொல்லியிருந்த போதும், ஐநா அமைதி காத்துள்ளது.

இன்று செயலாளர் நாயகத்தின் சிறப்புக் குழு போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று கூறுகின்றது என்றும், நேரிடையான முறையில் ஐநாவின் அன்றைய செயலற்றதன்மையை தமிழ் பிரதிநிதி எடுத்துரைத்தார்.

rimg0098.jpg

இன்று தமிழ்மக்களின் நிலைமை போர்க்காலத்திலும் பார்க்க மோசமாகவுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய தமிழர் பிரதிநிதி, சிங்கள அரசு, உலகம் முழுவதும் பயணம் செய்து, புலம்பெயர்ந்த தமிழ்சமூகத்தினை குற்றஞ்சாட்டுவதிலும், அவர்களது சனநாயக நடவடிக்கைகளை கொச்சைப்படுத்துவதிலும், கவனம் செலுத்துகின்றது என்றும் நாடுகடந்த அரசு பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா சுட்டிக்காட்டினார்;.

உலகசமூகம், தமிழ்மக்களிற்கு உதவிடும் என நம்பிக்கையை வெளியிட்ட தமிழர் பிரதிநிதி, ஐநாவின் இனத்துவேசத்திற்கு எதிரான சிறப்புப்பிரதிநிதியும் சிறீலங்காவின் நடவடிக்கைகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோளை விடுத்தார்.

இறுதியாக, உலக நாடுகள், புலம்பெயர் தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் உரையாடல்களை நிகழ்த்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கடந்தாண்டு 15வது மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத் தொடரிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

நாதம் ஊடக சேவை

தகவல் துறைஅமைச்சகம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

காணொலியைக் காண கீழ் உள்ள தொடுப்புக்குச் செல்லவும்

http://pooraayam.com/mukiaya/1301-2011-03-23-00-48-56.html

Press_release_March23.pdf

Link to comment
Share on other sites

ஆகா.. செயற்கரிய செயல்.. நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை தரும் செயல்

நன்றி

தொடரட்டும் தமிழரது குரல் எம்மை அழித்தோர் முன்.

Link to comment
Share on other sites

... தொடரட்டும் ... சிறு முயற்சிகள் எனிலும் ...

... இங்கு புலத்தில் எம்மவர் வெள்ளையை கட்டினாலும் செய்தியாக்கும் எம்மூடகங்களுக்கு, இப்படியான செய்திகள் கண்ணில் பட வாய்ப்பில்லைத்தான்!!!!!!!! <_< <_< <_<<_<<_<

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33682

Link to comment
Share on other sites

நாடு கடந்த அரசின் நிதானமான பயணம் தொடரட்டும். பல வேலைகளை அமைதியாக நகர்த்துவதுதான் வெற்றியான செயல். வாழ்த்துகள்.

நாமும் முடிந்த உதவிகளை செய்யவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக முக்கியமான இடத்தில் நாடுகடந்த அரசின் பிரதிநிதியின் குரல் ஒலித்திருக்கிறது.வாழ்த்துக்கள்.இப்படியான செயற்பாடுகளே இப்போது தேவை. அதை விடுத்து நா.க.அரசின் மீது வசைபாடுவது எந்தப் பலனையும் தராது.

Link to comment
Share on other sites

இன்று லிபியா விடயத்தில் காட்டிய அவசரத்தினை அன்று தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் வெளிக்காட்டவில்லை என ஐநா மனிதஉரிமைகள் கவுன்சிலின்கூட்டத்தொடரில் பங்கேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா குற்றஞ்சாட்டினார்.

வீடியோ பதிவு இங்கே இணைக்கப்பட்டுள்ளது

http://www.dailymotion.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒத்தையடி பாதையிலே அத்தை மவ போகையிலே.........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம் பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்   பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட பெண் : புது ராகம் புதுத் தாளம் ஒன்று சேரும் நேரம் இந்நேரம்…… குழு : பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி குழு : புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி பெண் : வாய்க்காலையும் வயல் காட்டையும் படைத்தாள் எனக்கென கிராம தேவதை பெண் : தெம்மாங்கையும் தெருக்கூத்தையும் நினைத்தால் இனித்திடும் வாழும் நாள் வரை பெண் : குழந்தைகள் கூட குமரியும் ஆட மந்தமாருதம் வீசுது மலயமாருதம் பாடுது   பெண் : நான் தூங்கியே நாள் ஆனது அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது பால் மேனியும் நூலானது அது ஏன் அதுக்கொரு தாகம் வந்தது பெண் : மனதினில் கோடி நினைவுகள் ஓடி மன்னன் யார் எனத் தேடுதோ உன்னைப் பார்த்ததும் கூடுதோ......!   --- பூப் பூக்கும் மாசம் தை மாசம் ---
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.