ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143569 topics in this forum
-
தமிழர்களுக்காக இறுதிவரை நேர்மையாகப் போராடி வெற்றி கொள்வேன் – சி.வி.விக்னேஸ்வரன் [ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 08:04 GMT ] தனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை, தமிழர்களுக்காக முழுமூச்சுடன் நேர்மையாக செய்து முடிப்பேன் என்று வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடவுள்ள முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வீரகேசரி நாளிதழுக்கு வழங்கியுள்ள தனிப்பட்ட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இயற்கை நிறைந்த அமைதியான வாழ்வை நேசிப்பவன் நான். அவ் வாழ்க்கையே எனது காதலியாகவும் கொள்கின்றேன். தற்போது வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுமாறு கூட்டமைப்பில் அங…
-
- 8 replies
- 1.5k views
-
-
பீரிசின் பதவிக்கு வருகிறது ஆபத்து! – போர்க்கொடி தூக்குகிறது ராவண பலய. [saturday, 2014-02-08 09:01:51] வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸை பதவியிலிருந்து விலக்கி, அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்குமாறு ராவண பலய அமைப்பு கோரியுள்ளது. இதுதொடர்பாக ராவண பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்ததிஸ்ஸ தேரர் கருத்து வெளியிடுகையில், வெளிவிவகார அமைச்சில் எந்தவொரு கொள்கையும், சரியான திட்டங்களும் இல்லை. ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராகச் சாட்சியமளிப்பவர்கள், சூழ்ச்சியாளர்கள் இந்த நாட்டில் இருப்பதற்கு எவ்வாறு இடமளிக்க முடியும். சர்வதேச அழுத்தங்களுக்கு ஆதரவாக எங்கள் நாட்டுத் தூதுவர்கள் சிலர் இருப்பது பெரும் தலையிடியாக இருக்கிறது. பி…
-
- 8 replies
- 508 views
-
-
இந்தியாவிலிருந்து... பொருட்களை கொண்டு வருவதற்கு, நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சிக்கல் – டக்ளஸ் இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சிக்கல் காணப்படுவதாகவும், பொருட்களை ஏற்றி வர படகுகள் தயாராக உள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் பற்றாக்குறை நாட்டில் நிலவுவதால், அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பது என்ற தீர்மானம் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. வரயிருக்கும் 10ம் திகதிக்கு பின்னர் வழமைக்கு திரும்பிவிடும் எனும் அடிப்படையல்தான் அந்த…
-
- 8 replies
- 497 views
-
-
நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை – 23 ஆவது ஆண்டு நினைவு தினம் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலை மாணவர்கள் 39பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் இன்றாகும். 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில்மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 21ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவுகூறப்படுகிறது. 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி, அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் குண்டுகளை கண…
-
- 8 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு adminMay 5, 2024 யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. அதன் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழஙகும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இனிமேல் இவ்வாறு ஒரு அவலம் ஏற்படாது இருப்பதை உறுதிப்படுத்தவும் இந்நிகழ்வு நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். https://globaltamilnews.net/2024/202451/
-
-
- 8 replies
- 689 views
- 2 followers
-
-
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கான சுங்க வரியை இலங்கை பலமடங்கு உயர்த்தியிருப்பது, இந்திய ஆட்டோமொபைல் தொழில் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, இலங்கை அரசுடன் பேசித் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என இந்திய அரசு அதிகாரிகள் தெரிவி்த்துள்ளனர். இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு இலங்கை மிக முக்கியமான வாடிக்கையாளர் நாடு ஆகும். கடந்த ஆண்டு மட்டும் 100 மில்லியன் டாலர் அளவுக்கு இந்திய கார் மற்றும் பிற வாகனங்கள் இலங்கைக்கு ஏற்றுமதியாகியுள்ளன. அந்த நிலையில், இலங்கையின் திடீர் முடிவு, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பயணி…
-
- 8 replies
- 885 views
-
-
கொழும்பு: உலகிலேயே மிகப் பெரிய அளவில் மன நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஒரே நபராக மகிந்தா ராஜபக்சேதான் இருப்பார். அந்த அளவுக்கு அவரைச் சுற்றிலும் ஏகப்பட்ட நெருக்கடிகள். அத்தனயையும் சமாளிக்க முடியாமல் கடும் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ள ராஜபக்சே இடையில் நிறுத்தி வைத்திருந்த மதுப் பழக்கத்தை மீண்டும் தொடங்கியுள்ளாராம். அதிபர் தேர்தலில் கிட்டத்தட்ட தோல்விதான் கிடைக்கும் என்ற நிலையில் உள்ளார் ராஜபக்சே. காரணம் அவருக்கு எதிராக பல விஷயங்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றனவாம். போரில் கிடைத்த வெற்றியைத்தான் பிரதானமாக நம்பியிருந்தார் ராஜபக்சே. அது ஒண்டி போதும், ஈசியாக ஜெயித்து விடலாம் என்ற மிதப்பில் இருந்து வந்தார். ஆனால் போரின் நாயகனாக சிங்களர்களால் வர்ணிக்கப்பட்ட பொன்சேகா பொளேர்…
-
- 8 replies
- 1.5k views
-
-
பிரதம செயலாளரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பொதுச்சேவை ஆணைக் குழுவுக்கே உண்டு; உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு மாகாண சபை பிரதம செயலாளருக்கு உத்தரவிட பொதுச் சேவைகள் ஆணைக் குழுவுக்கே அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்று இலங்கை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தனது அடிப்படை உரிமையில் தலையிடுகிறார் என்று தெரிவித்து வடக்கு மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் தாக்கல் செய்த மனு தீர்ப்புக்காக இன்று உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், கே.ஸ்ரீபவன் மற்றும் ரோஹினி மாரசிங்க ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் வழக்கை விசாரித்தனர். இதன்போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட…
-
- 8 replies
- 796 views
-
-
யாழ் மீனவர்களின் வலைகள் இந்திய மீனவர்களால் காரைநகரில் அறுக்கப்பட்டு நாசம் 2011-02-14 05:52:16 நேற்றைய தினமும் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இலங்கை மீனவர்களின் வலைகள் அறுக்கப்பட்டிருப்பதாக அப்பிரதேச மீன்பிடி சமாஜம் அறிவித்துள்ளது. மீனவர் பிரச்சினை குறித்து இரு தரப்பு மீனவர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தைமூலம் தீர்வொன்றை எட்டுவது குறித்த கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகப் பிரதான அதிகாரி மகாலிங்கத்திற்கும், யாழ் மீனவர் கூட்டுறவுச் சங்கங்க ளின் சமாஜப் பிரதிநிதிகளுக்குமிடையில் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்றிருந்தது. இந்தியத் துணைத்தூதரக அதிகாரியின் அழைப்பின் பேரிலேயே இக்கலந்துரையாடல் இடம்பெற்றிருந்ததாக யாழ். மீனவர் கூட்டுறவு…
-
- 8 replies
- 1.6k views
-
-
யாழில் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு யாழ்.மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். யாழ்.மாவட்டத்தில் 157 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டபோது 150 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பு மனு வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்பு மனு வேலணை பிரதேச சபையில் முழும…
-
- 8 replies
- 925 views
- 1 follower
-
-
சொந்தச் சரக்கில்லாத வங்கரோத்துக்காரர்கள் எம்மை குறை சொல்லிக் காலத்தை ஓட்டுகின்றனர், கஜேந்திரக்குமார் அணி குறித்து சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர் பிரச்சினைக்கான சமஸ்டித் தீர்வை தெளிவாக முன்வைத்து, தமது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் தைரியமாக வெளியிட்டுள்ளது. ஆனால் இவற்றிற்கு மாற்றீடு எதையும் முன்வைக்க தைரியமும், தகுதியும் இல்லாதவர்கள், வெற்றுச் சங்குகள் போன்று கூச்சல் இடுகின்றனர் என்று M.A.சுமந்திரன் தெரிவித்தார். கரவெட்டி கிழக்கில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் சட்டத்தரணி சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கும் பொழுதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வாக சமஷ்டி முறையை முனவைத்துள்ளத…
-
- 8 replies
- 630 views
-
-
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் தலைவர் ரத்ரகுமாரனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலி;த் தலைவர்கள் மீண்டும் இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் தொடர்பில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சமூகங்களுக்கு இடையில் சமாதானத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொண்டு வரும் முனைப்புக்களை புலித் தலைவர்கள் சீர்குலைக்கு முயற்சிக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடித் திரிவதாகவும் அவர்களுக்கு…
-
- 8 replies
- 670 views
-
-
வடமாகாணம் ஆற்றாமைகளிலிருந்து இன்னமும் மீளவில்லை : வடக்கு முதல்வர் தெரிவிப்பு எமது வடமாகாணம் அவலங்களிலும், ஆற்றாமைகளிலும் இருந்து இன்னும் மீளவில்லை இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். தேசிய பொங்கல் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது வடமாகாணம் அதன் அவலங்களிலும் ஆற்றாமைகளிலும் இருந்து இன்னும் மீளவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீங்கப்படவில்லை, தனியார் காணிகளும் மக்கள் நலம் சார்ந்த கட்டிடங்களும் விடுவிக்கப்படவில்லை, காணமற்போனார் விபரங்களை அவர்களின…
-
- 8 replies
- 720 views
-
-
[size=4]ஹிஜ்ரி 1433ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களில் தென்பட்டுள்ளதாகவும் நாளை ஞாயிறுக்கிழமை நோன்பு பெருநாளை அனைத்து முஸ்லிம்களும் கொண்டாட முடியும் எனவும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் இன்று சனிக்கிழமை சற்று நேரத்திற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நாட்டின் பல பிரதேசங்களில் பிறை தென்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து நாளை பெருநாள் கொண்டாட முடியும் என அறிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் சர்வதேசப்பிறை அடிப்படையில் 30 நோன்புகளையும் பூர்த்தி செய்து புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size] http://www.virakesari.lk/article/local.php?vid=216
-
- 8 replies
- 1.1k views
-
-
உதயன் மற்றும் சுடரொளி செய்திதாள்களின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் இன்று முற்பகல் 9.45 அளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். பிந்திய தகவலின்படி அவர் கடத்தப்படவில்லை என்றும், விசாரணைக்காகவே குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் புறநகர் கல்கிஸ்ஸையில் வைத்து வெள்ளை வேனில் வந்த சீருடை அணிந்தவர்களால் பலாத்காரமாக வித்தியாதரன் கடத்திச்செல்லப்பட்டதாக நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர் கல்கிஸ்ஸையில் உள்ள மஹிந்த மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அருகில் இருந்தோர் தடுத்தபோதும் அவர்களை தடுத்து விட்டு விசாரணைக்கு அழைத்துசெல்லவேண்டும் எனக்கூறியே வித்தியாதரன்…
-
- 8 replies
- 1.8k views
-
-
கச்சதீவை இந்தியா மீளப்பெறுவதைத் தடுக்கும் சர்வதேச சட்டங்கள் இல்லை! - கொழும்பு கருத்தரங்கில் தெரிவிப்பு [Monday, 2014-06-23 10:53:45] இந்தியா கச்சதீவை மீண்டும் கைப்பற்றினால் தென்சீனக் கடல் பிரச்சினையை ஒத்த பிரச்சினையாக அது மாறும் என்று கொழும்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாம்- இலங்கை சம்மேளனத்தின் அமர்வு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய பலரும் இந்தக் கருத்தை முன்வைத்தனர். கச்சதீவு விடயம் ஏற்கனவே முடிந்து விட்டது. எனினும் தற்போது அதனை திரும்பப்பெற தமிழ் நாடு கோரிக்கைகளை விடுத்து வருகிறது. தமிழகத்தின் கோரிக்கையை இந்திய மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் அங்கு, இலங்கைக்கு நிர்க்கதியான நிலை ஏற்படும். அதிகாரம் மிக்க தமிழகத…
-
- 8 replies
- 998 views
-
-
திங்கள் 03-12-2007 19:48 மணி தமிழீழம் [தாயகன்] புலிகளின் குரல் தாக்கப்பட்டதற்கு யுனெஸ்கோ கண்டனம் புலிகளின்குரல் வானொலி சிறீலங்கா வான் படையினரால் குண்டுவீசி தாக்கப்பட்டதற்கு யுனெஸ்கோ அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகக் கரைத்துரைத்த யுனெஸ்கோ அமைப்பின் இயக்குனர் கொயிச்சீரோ மட்சூறா, பொதுமக்கள் மீதான சிறீலங்காப் படையினரின் தாக்குதலை மன்னிக்க முடியாது எனவும், புலிகளின்குரல் வானொலி மீதான தாக்குதலையும், அதன் பணியாளர்கள் கொல்லப்பட்டதையும் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 8 replies
- 2.7k views
-
-
26 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை நாடேஸ்வரா கல்லூரி மீள்ஆரம்பம் -சொர்ணகுமார் சொரூபன் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியின் கனிஷ்ட வித்தியாலயம், 26 வருடங்களின் பின்னர் மீண்டும் தனது சொந்த இடத்தில், இன்று வியாழக்கிழமை (02) முதல் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. கடந்த கால யுத்தத்தின் போது, யாழ். மாவட்டத்தினை இராணுவத்தினர் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் மேற்கொள்ளபட்டது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி இடம்பெயர்ந்தனர். இதன் பின்னர், கடந்த 26 வருடங்களாக குறித்த பாடசலையின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் தெல்லிப்பழை ஸ்ரீ சாயிதுர்க்கை அம்மன் ஆலயத்த…
-
- 8 replies
- 762 views
-
-
[size=4][/size] [size=4]By Irshad 2012-11-23 16:28:15[/size] [size=4][/size] [size=4]பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று இடம்பெற்றது. ஜூம்ஆ தொழுகையினையடுத்து தெவட்ட கஹா பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பமான பேரணி, லிப்டன் சுற்றுவட்டம் வரை சென்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள். 'இஸ்ரேலே தாக்குதலை நிறுத்து, ஜக்கிய நாடுகள் சபையே ஏன் மௌனம்,அமெரிக்காவே அப்பாவி பலஸ்தீனர்களை கொன்றொழிக்கும் இஸ்ரேலுக்கு எதிராக என்ன நடவடிக்கையெடுக்கப் போகின்றாய்" போன்ற கோஷங்களை எழுப்பினர்.[/size] [size=4] பலஸ்தீன நட்புறவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் …
-
- 8 replies
- 746 views
-
-
சங்கரியுடன் இணைந்து சூரியன் சின்னத்தில் சுரேஷ் போட்டி சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியுடன் இணைந்து சூரியன் சின்னத்தில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய ஈ.பி.ஆர்.எல்.ப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எனினும், இரு கட்சிகளுக்கும் இடையிலான பொதுச் சின்னம் மற்றும் பெயர் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்பதாலேயே இந்த முடிவை சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்துள்ளார். …
-
- 8 replies
- 1.6k views
-
-
செவ்வாய்க்கிழமை, 18, ஜனவரி 2011 (22:6 IST) ராஜபக்சே இனப்படுகொலைக் குற்றவாளியாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளார் :நாடு கடந்த தமிழ் ஈழ அரசு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை தெற்கு சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. கொண்டாட்டங்களில் பங்குகொள்ளவும், பொருத்தமான துறைகளில் தெற்கு சூடானின் மேம்பாட்டுக்குத் தமிழர் தரப்பு வல்லுநர்களின் உதவி வழங்கல் பற்றி ஆராய்வதற்காகவும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரதிநிதிகள் குழு ஒன்றை அனுப்புகிறது. சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் விருந்தினர்களாக வருகைதரும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுப் பிரதிநிதிகள…
-
- 8 replies
- 2.1k views
-
-
தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட 3 தமிழ் தேசவிரோத சக்திகள் ஒன்று சேர்ந்து இன்றுஒரே குரலில் தமிழ் மக்களுக்காய் ஒப்பாரி வைக்கப்போகின்றனராம் அதிலும் ஒருவர் 1000 பணத்தை தபாலில் அனுப்பி பணத்தாசை காட்டியும் வெல்லமுடியாமல் போன தமிழர் விடுதலைக்கூட்டணியின் நிர்வாக குழு தலைவர் எல்லாமான ஒரு தனிமனித கட்சியின் தலைவர் திரு.ஆனந்த சங்கரி அவர்கள் அவரை பற்றி நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை பெண்பித்தரான இவருக்கு உத்தியோக பூர்வமற்ற பலர் மனைவியாக இருப்பது யாவருமறிந்ததே பெண்களை பாலியல் கண்கொண்டு பார்க்கும் பாலியல் நோயாளியான இன்றைய நடைபிணம் ஆனந்த சங்கரி அடுத்தது புளட் கும்பலின் தலைவர் சித்தார்த்தன்.வவுனியாவில் கொள்ளை கொலை தொழிலை தன் கொம்பனியான வரயறுக்கபடாத கொலைகார புளட் நிறுவனத்தின் ம…
-
- 8 replies
- 3.4k views
-
-
[Friday, 2011-08-19 11:09:16] யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலாசார சீர்கேடுகளுக்கு புலம்பெயர் தமிழர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா குற்றஞ் சுமத்தியுள்ளார். சமீப காலமாக யாழ்.நகரத்தில் விபச்சாரம் மற்றும் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் ஊடகர்களால் எடுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு புலம் பெயர் தமிழர்களை குறைகூறியுள்ளார். யாழ். நகரில் இயங்கும் லொட்ஜ்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அந்த லொட்ஜ்களைப் பதிவு செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்கள் முதல்வரிடம் வினவினர். அதற்குப் பதிலளித்த முதல்வர், இங்குள்ள லொட்ஜ்களில…
-
- 8 replies
- 2.8k views
-
-
17 FEB, 2024 | 09:56 AM வீதியில் உலரவிடப்படும் நெல்லுடன் 'கற்மியம்' எனும் மூலகம் ஒன்று கலப்பதாகவும், எனவே அந்த நெல் அரிசியை உணவாக உட்கொள்ளும்போது புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, பொதுமக்கள் வீதியில் நெல்லை உலரவிடுவதைத் தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற நிலையில் அக்கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது ப…
-
- 8 replies
- 710 views
- 1 follower
-
-
முறிவடைந்தது கூட்டமைப்பு - அரசு பேச்சுவார்த்தை தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் சுமார் ஒரு வருட காலமாக இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இன்று முறிவடைந்துள்ளது. அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்குமிடையில் 15 ஆவது சுற்றுப்பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றபோது, பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு நியமிக்கக் கூடிய தமிழத்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பெயர்களை முன்வைக்குமாறு அரசதரப்பில் வலியுறுத்தப்பட்டதையடுத்தே பேச்சுவார்த்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்…
-
- 8 replies
- 965 views
-