ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
பசிலுக்கு அமெரிக்காவில் பாரிய சொத்துக்கள் உள்ளன – வாக்குமூலம் வழங்கிய விமல். முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் பாரிய அளவிலான சொத்துகள் உள்ளன. அவை தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை ஆரம்பிக்குமாக இருந்தால் மேலும் தகவல்களை வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள பசில் ராஜபகச்வின் சொத்துக்கள் குறித்து கடந்த காலத்தில் விமல் வீரவங்ச வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு இன்று அவரிடம் வாக்குமூலமொன்றை பெற்றிருந்தது. வாக்குமூலத்தை அளித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் இருக்கு…
-
-
- 6 replies
- 685 views
-
-
தமது சொந்த இடங்களிலும் தமது உறவுகளோடும் தைப்பொங்கலை கொண்டாடக் கூடியதாக நிலைமை மாறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியின் முழு விவரம் வருமாறு:- இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது மனங்கனித்த தைத் திருநாள் வாழ்த்துக்கள். இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்தும் இந்த நன்னாளில் தமது சொந்த இடங்களிலும் தமது உறவுகளோடும் இந்த தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாத முடியாத நிலையில் உள்ள எமது மக்களின் நிலைமை வெகுவிரைவில் மாறவேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். இந்த நாளில் பல்வேறு சமய காரியங்களில் ஈடுபடும…
-
- 6 replies
- 507 views
-
-
இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக்க காத்திருக்கும் ஆளுங்கட்சி! மத்தியிலே ஆளும் தரப்பிற்கு வவுனியா வடக்கு பிதேச சபையின் ஆட்சி அதிகாரம் போகுமாக இருந்தால் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக நடைமுறைப்படுத்துவார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியா வடக்கில் போருக்கு பின்னர் கடும் வேகத்தில் குடியேற்ற செயற்பாடுகள் நடைபெறுகின்றது. வவுனியா வடக்கு பிரதேச சபையில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுகட்சி ஆட்சியமைப்பதற்காக நாம் பல்வேறு செயற்பாடு…
-
-
- 6 replies
- 432 views
-
-
கட்டுநாயக்க விமான நிலைய கழிப்பறைகளில் இருந்த ஹேண்ட்பவர் (சுத்தப்படுத்தும் உபகரணம்) தொகுதிகள் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக டொய்லட் ரிசு, எனப்படும் கழிப்பறைக் கடதாசிகளே வைக்கப்பட்டுள்ளன. நீரை பாவிப்பதன் காரணமாக விமான நிலைய கழிப்பறைகள் எந்தநேரமும் ஈரமான நிலையில் காணப்பட்டன. இதனால், சிங்கபூரில் நடைமுறையில் உள்ளதைபோல டொய்லட் ரிசு, சகல கழிப்பறைகளிலும் வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். டொய்லட் ரிசு பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிராத இலங்கையர்கள், இந்த புதிய நடைமுறை காரணமாக அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=160108&category=TamilNews&language=tamil
-
- 6 replies
- 674 views
-
-
பட்சேவுக்கு இந்தியா கூட்டாளி, தமிழனுக்கு பகையாளி! பகையாகளிடம் கெஞ்சும் தமிழக கோமாளிகள்!! கருத்துப்படத்தை காண : http://vinavu.wordpress.com/2009/01/20/carlank1/
-
- 6 replies
- 3.3k views
-
-
அரசாங்க இணையத்தளத்தில் புலிகள் ஊடுருவல் செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013 14:02 ஊடக மற்றும் தகவல்கள் அமைச்சின் இணையத்தளங்களை தாக்குவது 'கணினிமுறை பயங்கரவாத நடவடிக்கை' என கூறியுள்ள அரசாங்கம் வெளிநாடுகளில் எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இணையங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சுமத்தியுள்ளது. ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதனால் இந்த கணினிமுறை தாக்குதல் நடைபெறும் நேரம் முக்கியத்துவம் பெறுகின்றது என்று ஊடக அமைச்சின் செயலாளர் ஷரித்த ஹேரத் தெரிவித்துள்ளார். அவர்கள் பல முனைகளில் தொழிற்படுகின்றனர். அவற்றில் இதுவும் ஒன்றாகும். …
-
- 6 replies
- 745 views
-
-
கிழக்கு மாகாணசபைக்கான ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. முஸ்லிம் சமூகத்தின் காணிப் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப் படாவிட்டால், அரசாங்கத்திற்கு வழங்கப்படும் ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள நேரிடும் என கிழக்கு மாகாணசபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.ஜமால் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையில் முஸ்லிம் மக்கள் காணிப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். புல்மோடையில் முஸ்லிம் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த தற்போதைய கிழக்கு மாகாணசபை அரசாங்கம் எவ்வாறான காத்திரமான நடவடிக்கைகளையும் …
-
- 6 replies
- 1.5k views
-
-
வியாழேந்திரனின் சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது! மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியிலுள்ள காணி ஒன்றின் அனுமதியை பெறுவதற்கு அதன் உரிமையாளரிடம் 15 இலச்சம் ரூபா இலஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் சகோதரர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட இருவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர். ஹோட்டல் ஒன்றில் வைத்து நேற்று (21) இவர்களை கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் தெரிவித்தனர். வந்தாறு மூலை பிரதேசத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரின் காணியை பிரித்து விற்பனை செய்யப்பட்டு அதில் மக்கள் குடியேறியுள்ளனர். இந்த…
-
- 6 replies
- 526 views
- 1 follower
-
-
யாழ்குடாவில் உணவு நிலை சீரடையும் வரையில் இந்தியாவில் இருந்து உணவு இறக்குமதி செய்யப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கையின் வடக்கில் யாழ்குடா நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறையை அடுத்து, தமிழகத் தலைநகர் சென்னையில் இருந்து உணவுப் பொருட்களை கப்பல் மூலமாக இலங்கை அரசு இறக்குமதி செய்து யாழ் குடாநாட்டில் விநியோகிக்கும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இது தொடர்பாக தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்குடா நாட்டில் உள்ள உணவு பற்றாக்குறை நிலை சீரடையும் வரை இலங்கை அரசு தமிழ்நாட்டில் உள்ள தனியார் வியாபாரிகளிடம் இருந்து உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகம் செய்யும் என்றார். இது குறித்து செவ்வாய்கிழமையன்று கொழும…
-
- 6 replies
- 1.5k views
-
-
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை எனத் தமிழரசுக் கட்சி தீர்மானம் editorenglishMarch 10, 2025 எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது என கட்சியின் பதில் செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடுகின்றமை தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. அந்த வகையில் கொழும்பு மாநகரசபையின் கீழ் தமிழ் மக்கள் வசிக்காத வட்டாரங்களும் உள்ளன. அங்கு வேட்பாளர்களை நியமிப்பது சவாலான ஒரு நிலையை ஏற்ப்படுத்தியுள்ளது. இங்கு ஏனைய கட்சிக…
-
-
- 6 replies
- 399 views
-
-
பிரதமரின் தலைமையில் தீகவாவி தாதுகோபுர புனரமைப்பு பணிகள் ஆரம்பம்! ‘சொலொஸ்மஸ்தான’விற்குரிய கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள முக்கியத்துவத்திலும், அளவிலும் முன்னுரிமை பெறும் தீகவாவி புனித பூமியிலுள்ள தாதுகோபுரத்தை புனரமைக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) கலந்து கொண்டார். முதலில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர், அதனை தொடர்ந்து பிரித் பாராயணத்திற்கு மத்தியில் தாதுகோபுர புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு அடிக்கல் நாட்டி வைத்தார். குறித்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் தீகவாவி ரஜமஹா விகாராதிபதி, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய இரு பகுதிகளுக்கான துணை பிரதான நீதித்துறை சங்கநாயக்கர் சங்க கீர்த்தி ஸ்ரீ புத்தரக்கித சாம ஸ்ரீ…
-
- 6 replies
- 750 views
-
-
நோர்வே வாழ் தமிழ் மக்களினால் இன்று ஒஸ்லோவில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள இனப்படுகொலையினை உடனே நிறுத்தக் கோரியும், போர் நிறுத்தம் உடனே செய்யவேண்டும் எனக்கோரியும், தமிழீழத்தினை அங்கிகரிக்க கோரியும் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றக் கொண்டிருப்பதாக எமது தமிழ்செய்தி நிருபர் தெரிவித்தார். வீதியால் சென்றுகொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பல இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். ஆர்ப்பாட்ட இடத்திற்கு பல நோர்வே ஊடகங்கள் சென்று செய்திகளை திரட்டிச் செல்வதாக எமது நிருபர் தெரிவித்தார். தற்பொழுது நோர்வே பாராளுமன்றம் நோக்கி ஆர்ப்பாட்டம் சென்றுகொண்டிருப்பதாக தெரி…
-
- 6 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுக்கும் தமிழ் மாணவர்கள் தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வறுமை காரணமாகவும் பெற்றோர்கள் இல்லாத நிலையிலும் வீதியோரங்களில் பிச்சைஎடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. யாழ்ப்பாணத்தில் மட்டும் தற்போது ௧௪௨ பிச்சை ஏந்தும் மாணவர்களின் விபரங்களை எமது அமைப்பினர் சேகரித்து உள்ளனர். வடக்கில் பல மாணவர்கள் காலையில் பாடசாலைக்கும் மாலையில் பிச்சை எடுக்கும் தொழிலுக்கும் செல்கின்றனர் . அதிகரித்த பசி மற்றும் குடும்ப வறுமை என்பனவே எமது மாணவர்களை இந்தளவு நிலைக்கு கொண்டுவந்துள்ளது . எமது சமுதாயத்தின் எதிர்கால தூண்களின் நிலைமை எங்கே சென்று கொண்டிருக்கின்றது ? இதை இப்படியே வேடிக்கை பார்க்கப் போகிறோமா ? நலன்புாி முகாம்களிலிருந்த…
-
- 6 replies
- 1.2k views
-
-
நீர்வேலி மேற்குப் பகுதியில் சேதனமுறை மாதிரிப்பண்ணையொன்றினை வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் வியாழக்கிழமை திறந்து வைத்தார். யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயத்தில் அதிகளவில் விவசாய உரங்களும், பூச்சிகொல்லிகளும், பெருமளவு நீரும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நிலத்தடிநீர் விவசாய இரசாயனங்களால் மாசடைந்து வருவதோடு நிலத்தடிநீரின் அளவும் குறைந்து வருகிறது. மேலும், விவசாய இரசாயனங்கள் உணவுடன் உடலைச் சென்றடைவதால் மனிதர்களின் தேக ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்கும் முகமாகவே மேற்படி சேதனமுறை மாதிரிப் பண்ணை திறந்து வைக்கப்பட்டதாக வடமாகாண விவசாய அமைச்சர் தெரிவித்தார். யாழ் குடாநாட்டின் நீர்வளத்தைக் காப்பாற்றுவதோடு ஆரோக்கியமான வாழ்வைக…
-
- 6 replies
- 561 views
-
-
May 9, 2011 / பகுதி: செய்தி / தமிழ் நாடு தேர்தல் திருவிழா ஈழத்தமிழருக்கு என்ன பயன்? புல்லுக்கு இறைத்த நீரில் நெல்லுக்குப் பங்கு உண்டா? தமிழ் நாட்டு சட்ட சபைத் தேர்தல் வாக்களிப்பு ஏப்ரல் 13ம் திகதி நடைபெற்றது. வாக்குகள் எண்ணும் நடவடிக்கை மே 13ம் திகதி வரை நடைபெறும், அதாவது ஒரு மாதம் முற்றாக எண்ணும் பணி நடக்கும். முடிவுகள் 14ம் திகதி தெரியவரும். அடுத்த சட்ட மன்றம் 17ம் திகதி தொடங்கப்பட வேண்டும். தற்போதுள்ள சட்ட மன்றத்தின் காலம் 16ம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. தமிழ் நாட்டுத் தகவல்களின்படி ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. அப்படியாயின் தமிழக முதல்வர் பதவியை ஜெயலலிதா கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது.…
-
- 6 replies
- 1.2k views
-
-
இலங்கையில் காாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2023 இல் உலக நாடுகளில் மனித உரிமை நிலவரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. 1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம் பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றம் இல்லை அதேபோல 1988 – 89 ஜேவிபி கிளர்ச்சி காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகளவில் கவனத்தை ஈர்த்த காணாமல்போன சம்பவங்கள் குறித்த விசாரணைகளிலும் முன்னேற்றம் இல்லை எனவும் அமெரிக்க இராஜாங்க திணை…
-
- 6 replies
- 502 views
- 1 follower
-
-
அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த கரும்புலிகளில் 20 மாவீரர்களின் வித்துடல்களை புதைத்து விட்டதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 3k views
-
-
[size=4][size=5]நெருப்பு சுடும் எண்டு கைய விட்டுப் பார்த்தா தெரியவேணும் நெருப்புக்குள் கையை வைத்து தான் சுட்டுக் கொள்ளப் போகிறீர்கள் என்றால் அதை எப்படி நியாயம் என்று சொல்ல முடியும். அது பிழை தான் அதற்காக யாரும் மன்னிப்பு கேட்க முடியாது. அத்துடன் மன்னிப்பை ஏன் கோர வேண்டும் [/size]என டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக தெரிவித்தார். வவுனியா சிறையில் நடைபெற்ற கலவரத்தையடுத்து சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளான நிமலரூபன் மற்றும் டெல்றொக்சன் ஆகியோர் தொடர்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நானும் ஒரு முன்னாள் அரசியல் கைதி தான். நானும் MP தான்.…
-
- 6 replies
- 1.4k views
-
-
கூட்டமைப்பின் அழுத்தம் போதுமானதாக இல்லை : தமிழர் மனித உரிமை மையம் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து அரசாங்கம் நடத்தவுள்ளதாகக் கூறப்படும் உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கவேண்டும் என்ற விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தங்கள் போதுமானதாக இல்லை என்று பிரான்ஸை தலைமையகமாகக்கொண்ட தமிழர் மனித உரிமை மையத்தின் செயலாளர் ச.வி. கிருபாகரன் தெரிவித்தார். கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் மிகவும் திறமையான முறையில் உலக நாடுகளுக்கு சென்று இந்த விடயத்தை அழுத்தம் திருத்தமாக கூறிவந்தாலும் கூட்டமைப்பின் நான்கு கட்சிகளினதும் பிரதிநிதிகள் ஒன்றாக சேர்ந்து …
-
- 6 replies
- 594 views
-
-
பௌத்த சமயத்தை உருவாக்கிய புத்தபெருமானே இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு வந்தவர். அவர் இலங்கைக்குவர முன்பு இங்கிருந்த மதம் என்னவென்று ஞானதேரருக்குத் தெரியுமா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் பகிரங்கமாக கேள்வியெழுப்பியுள்ளார். திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் நடாத்திய கவிந்திரன் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கையில் பூர்வீகமாக இருந்துவந்த தமிழ்மக்களை இந்தியாவிற்குப் போ என்று சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது. முன்னைய காட்டுமிராண்டித்தனமான அரசின் …
-
- 6 replies
- 1.1k views
-
-
நாமலின் முன்னாள் செயலாளர் கைது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் படபொல ஆராச்சிலாகே ஓனெல்ல இரேஷா சில்வா, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்ஷவின் 30 மில்லியன் ரூபாய் கறுப்புப் பணத்தை, நிறுவனமொன்றின் மூலம் மாற்றுவதற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அபுதாபியில் கைது செய்யப்பட்ட இவர், இலங்கைக்கு இன்றுக்காலை கொண்டுவரப்பட்ட போதை கைது செய்யப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/நாமலின்-முன்னாள்-…
-
- 6 replies
- 901 views
-
-
தண்ட கரண்யா வனத்தில் இந்திய படையினரின் நடவடிக்கைகள்..இது எனது நண்பர் ஒருவரால் முக நூலில் share பண்ண பட்டு இருந்தது
-
- 6 replies
- 2.3k views
-
-
கோல் ஊன்றி உயரம் பாய்தல் போட்டியில், யாழ்ப்பாண மஹாஜனா கல்லூரி மாணவி ஒருவர் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார். ஜெகதீஸ்வரன் அனிதா என்ற மாணவியே அகில இலங்கை தேசிய பாடசாலை மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்று சாதனையை படைத்துள்ளார். 2012ம் ஆண்டு தேசிய பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டியில் அனோமா கருணாசேன என்ற மாணவி 19 வயதுக்கு உட்பட்ட கோல் ஊன்றி உயரம் பாய்தல் போட்டியில் 3.0 மீற்றர் பாய்ந்து சாதனை படைத்திருந்தார். இந்த ஆண்டு குறித்த சாதனையை அனிதா 3.32 மீற்றர் உயரம் பாய்ந்து முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=152443507803369752
-
- 6 replies
- 589 views
-
-
சிறார்களை பணத்திற்கு வாங்கும் கருணா குழுவினர் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் மக்களின் சிறார்களை தமது படையில் சேர்ப்பதற்கு அவர்களுக்கு பெருமளவு பணத்தை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறார்களை கருணா குழுவில் சேர்க்கும் குடும்பங்கள் மாதா மாதம் 6,000 ரூபாய்களை பெறுவதாகவும், அந்தப் பணத்தைக்கொண்டு அவர்கள் எதனையும் செய்யலாம், இது அவர்களுக்கு பெரும் தொகையாகும் என தனது பெயரை குறிப்பிட விரும்பாத உள்ளுர் வாசி ஒருவர் தெரிவித்துள்ளார். கருணா குழுவினரின் இந்த நடவடிக்கைகள் மூலம் கடத்தப்பட்டுள்ளதாக செய்யப்படும் முறைப்பாடுகள் குறைவடையலாம் என தெ…
-
- 6 replies
- 1.5k views
-
-
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிறது. இந்நிலையில் கொடியேற்றத்தின் போது பின்பற்றப்படும் மரபை ஆலய நிர்வாகத்தினர் சிலர் பின்பற்றாது தவிர்க்க முயல்கின்றனர். இதனால் சிக்கல் நிலை எழுந்துள்ளது. அத்துடன் இது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் புறந்தள்ளி வருகின்றனர் எனத் தெரியவருகின்றது. இந்த ஆலய கொடியேற்றத் திருவிழாவன்று கோயிலுக்கு அண்மித்ததாக இருக்கின்ற குறிப்பிட்டதொரு சமூகத்தவர்கள் கொடிச்சீலை வழங்குவதுடன் அன்றைய தினம் தர்ப்பை அணிந்து அர்ச்சகர்களுக்கு தட்சணை கொடுப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது நீண்ட கால மரபாக உள்ளது. ஆனால், திருத்த வேலைகளுக்காக ஆலயம் இடிக்கப்பட்டு, பலகோடி ரூபா…
-
- 6 replies
- 651 views
-