ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143582 topics in this forum
-
உலகின் மிக உயரமான நத்தார் மரத்தை நிறுவும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள காலிமுகத் திடலிலேயே, இந்த நத்தார் மரம் நிறுவப்பட்டுள்ளது. 325 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த நத்தார் மரம், உலகின் மிக உயரமான நத்தார் மரம் என்று கின்னஸ் சாதனை ஏட்டில் பதிவு செய்யப்படவுள்ளது. இந்த நத்தார் மரத்தின் உச்சியில் 20 அடி உயரமுள்ள நட்சத்திரமும் அமைக்கப்படுகிறது. கொழும்பின் வானுயர்ந்த கட்டடங்களுக்குப் போட்டியாக எழுந்துள்ள இந்த நத்தார் மரத்தின் மின் அலங்காரம் நேற்றிரவு பரீட்சித்துப் பார்க்கப்பட்டது. இந்த நத்தார் மரத்தில் 8 இலட்சம் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நத்தார் மரத்தை உருவாக்குவதற்கு சுமார் 80 ஆ…
-
- 5 replies
- 1.5k views
-
-
இன்று காலை 7.30 மணியளவில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான செய்திகள் சகல ஊடகங்களிலும் வெளிவந்திருந்தன. ஆனால் இந்தக்கொலைபற்றிய திடுக்கிடும் தகவலொன்றை இப்பொழுது தருகின்றோம். மட்டக்களப்பு நகருக்குள் ஊடுருவியுள்ள சுமார் நுற்றுக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவினரை தேடியழிக்கும் முகமாக கடந்த 4 மாதங்களுக்கு முன் மட்டக்களப்பிலுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிலராலும், புளொட் உறுப்பினர்கள் சிலரைக் கொண்டும் ஒரு மோட்டார் படையணி அமைக்கப்பட்டது. கறுப்பு நிற 6 அப்பாச்சி மோட்டார் சைக்கிள்களைக் கொண்ட இந்தப் படையணியில் இருவர் வீதமாக 12 பேர் …
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன? December 28, 2024 02:55 pm தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜாவும் எஞ்சிய காலங்களுக்கான பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானமும் செயற்படுவார்கள் என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அறிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (28) இடம்பெற்றது. இதன்போது கட்சியின் தலைமை தொடர்பான விடயம் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பின…
-
-
- 21 replies
- 1.5k views
- 1 follower
-
-
எவருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை புத்தாண்டில் அமைதியும் சமாதானமும் கிடைக்கட்டும் என்று ஆசி கூறி அன்பர்கள், அனுதாபிகளினால் அனுப்பப்பட்ட வாழ்த்து மடல்கள் வருடம் பிறந்து 10 நாட்களாகியும் கூட இன்னமும் தபாலில் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மடல்களை விரித்துப்பார்க்கும் போது ஒரு சம்பிரதாயத்துக்கேனும் மனம் மகிழக்கூடிய அருகதையுடன் இலங்கையர்களாகிய நாம் இருக்கின்றோமா என்று கேட்க வேண்டியிருக்கிறது. முன்னைய வருடங்களையும் விட 2008 ஆம் ஆண்டில் வன்முறைகள் படுமோசமாக அதிகரிப்பதற்கான அபாயச் சமிக்ஞைகளையே அன்றாடம் காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வருடம் பிறந்த ஒருவாரகாலத்திற்குள் இரு அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். புத்தாண்டு தினத்தன்று தலைநகர் கொழும்பில் பொன்னம்பல…
-
- 0 replies
- 1.5k views
-
-
விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை. உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவனின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள். இது சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்கவே மாட்டார்கள். இந்தத் தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்” என்றார். https://www.ibctamil.com/s…
-
- 6 replies
- 1.5k views
-
-
போர்க்குற்றச்சாட்டை எதிர்கொள்ள இந்திய அரசின் உதவி அவசியம்: ஜனாதிபதி தெரிவிப்பு [Wednesday, 2011-05-11 03:02:05] ஐ.நா. நிபுணர் குழுவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்களை சர்வதேச அரங்கில் எதிர்கொண்டு இலங்கைக்கு எதிரான முயற்சிகளை முறியடிக்க இந்தியாவின் உதவி மிக மிக அவசியம் என்று தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் நேற்றுப் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். "இந்தியா எப்போதுமே இலங்கையுடன் இணைந்து புரிந்துணர்வுடன் செயற்பட்டுள்ளது. எல்லாச் சமயங்களிலுமே இரு தரப்புகளுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பாகவே இருந்து வருகின்றன'' என்று தெரிவித்தார் ஜனாதிபதி. இருப்பினும் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் …
-
- 5 replies
- 1.5k views
-
-
பிரபல சிங்கள திரைப்பட நடிகை வினு வெத்தமுனி படுகொலை 16 பெப்ரவரி 2011 பிரபல சிங்கள திரைப்பட நடிகையும், தயாரிப்பாளருமான வினு வெத்தமுனி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரத்மலானையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று காலை இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாத மூன்று பேரினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. ரத்மலானை ராஜங்கன மாவத்தையில் அமைந்துள்ள அவரது வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயர் கோட் ஒன்றைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக இருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. gtn உயிரிழந்த நடிகையின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்…
-
- 4 replies
- 1.5k views
-
-
சிலாபத்தில் திருடா்கள் ஆயுதத்துடன் பிடிபட்டனர் இன்று புத்தளம் சிலாப வீதயில் வாகன விபத்து நடைபெற்றுள்ளது.இதில் ஸ்தலத்திலேயே மூவா் பலியாகினா். 3வா் படுகாயமடந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்து பலியானவர்களின் வாகனம் குடை சாய்ந்து விபத்து சம்பவிதத்திலேயே பலியாகியும். காயமடைந்துள்ளனர். மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1658#1658
-
- 3 replies
- 1.5k views
-
-
புலிகளின் செயற்பாடுகள் அதிகம் உள்ள நாடுகளில் - 04 மார்ச் 2011 இலங்கை தூதரங்களுக்கு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் நியமிக்கப்படாமை பாரிய குறைப்பாடாம்? விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் அதிகமாக உள்ள நாடுகளில் இருக்கும் இலங்கை தூதரங்களுக்கு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் நியமிக்கப்படாமை பாரிய குறைப்பாடு என தூதரக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து, கனடா, தாய்லாந்து, மலேசியா போன்ற விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் அதிகமுள்ள நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களில் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் குறித்த எந்த தகவல்களும் இந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களுக்கு கிடைப்பதில்லை. …
-
- 0 replies
- 1.5k views
-
-
லாகூரில் இலங்கை கிரிக்கட் அணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய விசேட ஒலிபரப்பு சேவைக்கு கருத்துரைத்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளரான திலீபன் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார் இந்த தாக்குதலுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கலாமா என ஒலிப்பரப்பாளர் கேட்டபோது, அது உண்மையல்ல என திலீபன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அது தொடர்பாக கருத்து கூறவும் முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை முல்லைத்தீவில் இன்றும் 3 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இருப்பதாக தெரிவித்த அவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் க…
-
- 1 reply
- 1.5k views
-
-
போலீசின் காட்டாட்சிக்கு எதிரான வழக்குறைஞர் போராட்டத்தை ஆதரிப்போம் ! கருத்துப்படங்கள், முழக்கங்கள் ! -பிப்ரவரி 19, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த போலீசின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து இன்று சென்னையில் வழக்கறிஞர்கள் பேரணி நடைபெறுகிறது. இதற்கு தமிழ்நாடு முழுவதிலிமிருந்து ஆயிரக்கணக்கில் வக்கீல்கள் வருகிறார்கள் என்பதால் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு பஞ்சுமிட்டாய் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. பேருக்கு இரண்டு போலீசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்திருக்கும் நீதிமன்றம், வழக்கறிஞர்கள் தங்களைத் தாக்கிய போலீசு மீது புகார் கொடுத்தும் இன்று வரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவாகவில்லை என்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத்திற்காக போர்க்குணத்துடன் போராடிய வழக்கற…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை அதிக முக்கியத்தும் கொடுத்து பேசுவது முட்டாள்தனமானது என வினாயகமூர்த்தி முரளிதர கூறியுள்ளார். தான், புலிகள் அமைப்பிலிருந்த போது தான் கே.பி.யை சந்தித்துள்ளதாகவும் ஆனால் கே.பி. கைது செய்யப்பட்ட பின்னர் அவரை சந்திக்கவில்லை எனவும் முரளிதர மேலும் தெரிவித்தார். கே.பி. வடபகுதி அபிவிருத்திக்குப் பொறுப்பாக நியமிக்கப் போவதாக வெளியான செய்தி குறித்து கேட்டபோது, “இவை அனைத்தும் தவறான விடயம். இதேபோன்று கே.பியை முதலமைச்சராக அரசாங்கம் நியமிக்கப்போவதாக சரத் பொன்சேகா கூறினார். அடுத்த நாளே அதற்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்தது. கே.பியை அந்தளவுக்கு முக்கியத்தும் கொடுத்து பார்ப்பது …
-
- 8 replies
- 1.5k views
-
-
நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பி த்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் யாருமே கவனம் செலுத்தாமையால், வாழ வேண்டிய தமிழ் இளைஞர்கள் சிறைகளில் வாடுகின்ற அவலம் நடந்து கொண்டிருக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் இலங்கை ஆட்சியாளர்களின் திருகுதாளங்களை விட, தமிழ் அரசியல் தலைமைகளின் திருகுதாளங்களே பிரமாதமானவை. இப்போது கூட தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர் என்றவுடன் கொழும்புத் தமிழ் அரசியல் தலைமையை காப்பாற்ற விரும்பும் சிலர் நேற்று முன்தினம் நல்லூரில் உண்ணாவிரதம் இருந்தனர். காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 12.30 மணி வரையான நேரத்தில் ஒரு உண்ணாவிரதம் நடந்து முடிந்தது. பார்த்தீர்களா? எங்கள் இளைஞர…
-
- 1 reply
- 1.5k views
-
-
சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் மணலாறு (வெலிஓயா) பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதி குருகந்த ரஜமஹா விகாரை என்ற தமது ஆலயம் அமைந்துள்ள பகுதி எனவும் இந்த ஆலயப் பகுதியில் அரசியல்வாதிகள் பிரச்சனைகளை ஏற்படுத்தி குழப்பங்களை உண்டு பண்ணுவதாகவும் இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் இதில் கவனம் செலுத்தி தமது பிரச்சனைக்கு ஒரு தீர்வை பெற்றுத்தர வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை புல்மோட்டை பகுதியிலிருந்…
-
- 8 replies
- 1.5k views
- 1 follower
-
-
யாழ் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது : சரத் வீரசேகர! யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடிய ஏந்தியவாறு பொதுமக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடம் யாழ்ப்பாண நகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசிய கொடியினை ஏந்தியவாறு இலங்கை 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியமை வரவேற்கத்தக்க விடயம். யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றமை அனைவரும்…
-
- 11 replies
- 1.5k views
-
-
படையினருக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் மன்னிக்கப்பட்டனர். நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் சிங்கள மக்கள் தமது கடமையை சரிவர நிறைவேற்றியுள்ளனர். தமிழர் தரப்பிலிருந்துதான் கூடுதல் பங்களிப்பு அவசியமாகவுள்ளது. இவ்வாறு முன்னாள் வான்படைத் தளபதி எயார் சீப் மார்சல் ரொசான் குணதிலக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: போர் முடிவடைந்தப் பின்னர், புலி உறுப்பினர்கள் மறுவாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர். இந்தத் திட்டம் வெற்றிகரமாக முன்னெட…
-
- 14 replies
- 1.5k views
-
-
Apologists in Sri Lanka are quick to defend Mahinda Rajapakse in pointing to LTTE flag waving protestors in London as evidence of proscribed terrorists on British soil plotting to divide the “motherland”. They are confused as to why Britain is turning a blind eye, refusing to crack down, accusing London of harbouring and even tacitly supporting secessionists to underpin a perceived master plan of colonial/European/Western domination. Its “divide and rule” they say. Another favourite explanation is that it is all being done for electoral expediency of British parliamentarians. The above is a display of weakness of Colombo’s thought and policy in relati…
-
- 5 replies
- 1.5k views
-
-
கிழக்கு மாகாணசபைக்கான ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. முஸ்லிம் சமூகத்தின் காணிப் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப் படாவிட்டால், அரசாங்கத்திற்கு வழங்கப்படும் ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள நேரிடும் என கிழக்கு மாகாணசபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.ஜமால் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையில் முஸ்லிம் மக்கள் காணிப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். புல்மோடையில் முஸ்லிம் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த தற்போதைய கிழக்கு மாகாணசபை அரசாங்கம் எவ்வாறான காத்திரமான நடவடிக்கைகளையும் …
-
- 6 replies
- 1.5k views
-
-
தலையங்கம்: நம்பிக்கைத் துரோகிகள்... தினமணி இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடந்த போர் முடிந்து ஓராண்டு நிறைவடையும் இந்த நேரத்தில் வேறொரு விதமான தாக்குதலை தமிழர்கள் மீது தொடுத்திருக்கிறது ராஜபட்ச அரசு. தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு கெüரவமான பிரதிநிதித்துவம் அளித்துவந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறையைக் கைவிடுவதற்கு இப்போதுள்ள அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பதுதான் அது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படும், தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடிக்கும் வேட்பாளரே வெற்றியாளர் என்ற தேர்தல் முறைக்கு இலங்கையும் மாறவிருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் என்ன குறை என்றே கேட்கத் தோன்றும். இந்தியாவைப் போ…
-
- 0 replies
- 1.5k views
-
-
இனப்பிரச்சினைக்கு சமஷ்டி மூலம் தீர்வு கிடைக்காது – சிறிலங்கா பிரதமர் J இனப்பிரச்சினைக்கு சமஷ்டியின் மூலம் தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று முன்தினம் வணிக நிலையம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றிய அவர், “ஒன்றுபட்ட நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். சிலவற்றைத் தவிர, பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் இப்போது, பிளவுபடாத சிறிலங்காவுக்குள் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண முடியும் என்று ஏற்றுக் கொண்டிருக்கின்றன. சமஷ்டியை உருவாக்க முயற்சிக்காமல் இதனை முன்னெடுக்க வேண்டும். இதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான…
-
- 11 replies
- 1.5k views
-
-
தராகி சிவராம் நினைவேந்தல் அனுஷ்டிப்பு! 2005ம் ஆண்டு இதேநாள் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் எனும் தர்மரத்தினம் சிவராம் (மாமனதர் தராகி) அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (29) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா – ஏ9 வீதிக்கு அருகே போராட்டப் பந்தல் அமைத்து சுழற்சி முறையில் 1,167 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இந்த நினைவேந்தலை அனுஷ்டித்தனர். இதன்போது மாமனிதர் தராகியின் உருவப்படத்தை காட்சிப்படுத்தி மெழுகுவர்த்திகள் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். https://yarl.com/forum3/forum/40-ஊர்ப்-புதினம்/?do…
-
- 14 replies
- 1.5k views
-
-
MIA தொடர்பான அபதூரு கட்டுரை ஒன்று The New York Times பத்திரிக்கையில் வெளியானது. http://www.nytimes.com/2010/05/30/magazine/30mia-t.html?pagewanted=all MIAயின் போராட்டத்துக்கு பிறகு The New York Times தனது பிழைய்யை ஒப்புக்கொண்டது http://www.spinnermusic.co.uk/2010/06/03/new-york-times-correction-m-i-a-article/
-
- 1 reply
- 1.5k views
-
-
பரீட்சை பெறுபேறுகளில் மாணவிகள் ஆதிக்கம் : அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றோர் விபரம் கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதன்படி பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடமுடியும். இவ்வாறு வெளியான பரீட்சை முடிவுகளின் பிரகாரம் அகில இலங்கை ரீதியில் முதலிடம்பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அகில இலங்கை ரீதியில் முதலிடங்களைப்பெற்றோர் விபரம் வருமாறு, 1. குஷானி செனவிரத்ன - ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா 1.சாமுடி சுபசிங்க - ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா 1. நவோதயா ரணசி…
-
- 11 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்காவின் வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமை குறித்து ஐ.நா.வின் இனச் சிக்கலில் சிறார்கள் என்ற அமைப்பின் சிறப்பு பிரதிநிதியான ராதிகா குமாரசுவாமி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். "இனப்பிரச்ச்னையில் சிறார்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்தும் விதமான அண்மைய அதிர்ச்சியான சம்பவங்கள் அமைந்துள்ளன" என்று அவர் கூறியுள்ளார். இலங்கையில் இருதரப்பினரும் போர் நடவடிக்கைகளைக் கைவிட்டு பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். http://www.eelampage.com/?cn=28249
-
- 6 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பு பிரபல உணவகத்தில் பழுதடைந்த உணவு விநியோகம்.! மட்டக்களப்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் பழுதடைந்திருந்த உணவு வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று இரவு நடைப்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றுக்கே இவ்வாறான பழுதடைந்த உணவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவம் பிறந்தநாள் வீட்டில் இடம்பெற்றுள்ளமையால் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். இதேவேளை, கவலையடைந்த வாடிக்கையாளர் உணவக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட நகர பகுதிகளில் சுகாதாரமற்ற பழுதடைந்த உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்களை பரிசோதித்து உரிய சட்ட நடவடிக்கைய…
-
- 7 replies
- 1.5k views
-