ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
மூதூரில் பிரசுரம் வீசியது புலிகள் அல்ல: கண்காணிப்புக் குழு மூதூர் முஸ்லிம்களை வெளியேறுமாறு கோரி துண்டுப் பிரசுரங்களை வீசியது விடுதலைப் புலிகள் அல்ல என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. கண்காணிப்புக் குழுவினரின் கடந்த வார அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மூதூரில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை. மூதூரில் மீளக் குடியேறுமாறு சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கலாம் என்று கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். http://www.eelampage.com/?c…
-
- 6 replies
- 2.1k views
-
-
திங்கள் 04-02-2008 14:42 மணி தமிழீழம் [சிறீதரன்] பதுளையில் கிளைமோர் தாக்குதல் : 1 படையினர் பலி: 3 படையினர் காயம் சற்று நேரத்திற்கு முன் கிளெட் பதுளை பகுதியில் கிளைமோர் குண்டு ஒன்று வெடித்துள்ளது. மதியம் 2.10 மணியவில் சிறீலங்கா படையினரின் உழவு இயந்திரம் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் ஒரு படையினர் கொல்லப்பட்டும் மூன்று சிறீலங்கா படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இக்கிளைமோரானது பதுளை கதிர்காமமம் வீதியில் 45 ம் மைல்கல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 6 replies
- 1.9k views
-
-
செயற்கை கை உருவாக்கி சாதனை படைத்த முல்லைத்தீவு இளைஞன்! முல்லைத்தீவு- மல்லாவியைச் சோ்ந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவர் செயற்கை கை ஒன்றினை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். மல்லாவியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை பத்மநாதனின் மகனான துசாபன் என்ற பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். 2009 ஜனவரி 20ஆம் திகதி சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார்கோவில் அருகாமையில் இடம்பெற்ற படையினரின் எறிகணைத்தாக்குதலில் துசாபனின் தந்தையார் பத்மநாதன் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். இதில் இருவர் கொல்லப்பட்டிருந்தனர். போரின்போது கண்முன்னே கண்ட அவல காட்சிகள் துசாபனின் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. இதனையடுத்து, போர்க் காலப்பகுதியில் கைகளை இழந்தவர்களுக்காக செயற்கை …
-
- 6 replies
- 658 views
-
-
[size=2][size=4]யாழ். நீதிவான் நீதிமன்றக் கட்டளையைக் வீதியில் கிழித்து எறிந்து, நீதிமன்றத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பெறுப்பதிகாரி சமன் சிகேரா இன்று சனிக்கிழமை தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு முடிந்த பின்னர் ஊடகவியலாளரிடம் யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பெறுப்பதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், "நிலம் சுவீகரிப்பு தொடர்பாக கடந்த 18 ஆம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ். பஸ் நிலையத்திற்கு அருகில் நடைபெற ஏற்பாடாகியிரு…
-
- 6 replies
- 743 views
-
-
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மை கட்சிகள் கூட்டாக களமிறங்க பேச்சு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முன் முயற்சியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசே மேற்கொண்டுள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய, சிறுபான்மையினங்களின் முக்கிய கட்சிகள் கூட்டணியாக செயற்பட கலந்துரையாடல்கள் நடந்து வருகிறது. தற்போதைய நிலையில், முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன இது குறித்து பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வீட்டு சின்னத்திலும், முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியில் மரச்சின்னத்திலும் போட்டியி…
-
- 6 replies
- 1k views
-
-
இலங்கையில் 13,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொது வெளிகளில் மலம் கழிப்பதாக தகவல்! November 4, 2025 இலங்கையில், 13,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் காடுகள் மற்றும் கடற்கரைகள் போன்ற திறந்தவெளிகளில் மலம் கழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தரவுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2024 மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பின் படி நாட்டின் 6,111,315 குடும்ப அலகுகளில் 0.2 சதவீதம் அதாவது, மொத்தம் 13,326 குடும்பங்கள் கழிப்பறை வசதிகள் இல்லாமல் தொடர்ந்து வாழ்கின்றன என்பதைக் காட்டுகிறது. 92.2 சதவீத வீடுகளில் தனியாக கழிப்பறைகள் உள்ளன என்றும், 5.8 சதவீதம் மற்ற குடும்பங்களுடன் கழிப்பறை வசதிகளைப் பகிர்ந்து கொள்வ…
-
- 6 replies
- 380 views
- 2 followers
-
-
"சீனாவும் பாகிஸ்தானும் தங்களது நலனுக்கு வாய்ப்பு உருவாகியிருப்பதாக உணர்ந்து, இலங்கையில் ஆழமாகக் காலூன்றத் தொடங்கிவிட்டன. இறுதியில் இலங்கையினால் நாம் ஒதுக்கப்படும் நிலைக்கு உள்ளாகலாம். வேட்டை நாயுடன் சேர்ந்து வேட்டை ஆடவும் எங்களால் முடியவில்லை, அஞ்சி ஓடும் முயலுடன் சேர்ந்து அதற்கு ஆதரவாக ஓடவும் எமக்கு மனமில்லை" என்று இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியான ராஜீவ் டோக்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று புதன்கிழமை 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டுக்கு அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு: "உலகம் தட்டையாகவும் இல்லை, இணைக்கப்பட்டதாகவும் இல்லை. தட்டைத் தன்மை என்ற ஒன்று இருக்குமானால் அது அதன் மனச்சாட்சியில்தான் இருக்க வேண்டும். ஏனெனில் மாபெரும் …
-
- 6 replies
- 1.3k views
-
-
புலிகளின் தலைவர் பற்றி சிதம்பரத்தின் உள்ளக ரகசியம் அம்பலம்.. சமீபத்தில் சென்னையில் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அக் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேசிய பேச்சு, அந்த நேரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அது அத்துடன் முடிந்து போகும் என்று பார்த்தால், தற்போது அது பற்றிய சர்சசைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்னதான் பேசினார்கள் அவர்கள் இருவரும்? ப.சிதம்பரம், “ …இலங்கை உள்நாட்டுப் போரை நிறுத்த, இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், இலங்கை அரசும் புலிகள் தரப்பிலும் அதற்கு செவிசாய்க்கவில்லை. மத்திய அரசு சொன்னபடி நடந்திருந்தால், பிரபாகரன் உயிர் தப்பியிருக்க வாய்ப்பு உண்டு.. “இலங்கை இறையாண்மை ப…
-
- 6 replies
- 1.5k views
-
-
முன்னாள் விடுதலைப் புலிகள் விடுவிப்பு இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் உள்ளிட்டோரை இலங்கை ஜனாதிபதி விடுவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை அடுத்து இதுவரைகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்த, காயமடைந்து ஊனமுற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 1175 பேர், சிறார் போராளிகள் 175 பேர், பல்கலைக்கழக மாணவர்கள் 178 பேர் என மொத்தத்தில் 1528 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் வைபவரீதியாக விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா பம்பைமடு முகாமில் இவர்களை விடுவிக்கும் வைபவம் நடந்துள்ளது. http://www.bbc.co.uk/tamil/news/story/…
-
- 6 replies
- 1.6k views
-
-
லண்டனில் இயங்கிவரும் மிடில் செக்ஸ் தமிழ் விளையாட்டுக் கழகம்(MTSSC) இலங்கை விமானசேவையான ஏர் லங்காவுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை வரும் செப்டெம்பர் மாதம் நடாத்தவுள்ளதாக அறியப்படுகிறது. குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள பல பாடசாலை முன்னாள் மாணவர்கள் இது தொடர்பாக பல சந்திப்புகளை நடாத்தி இருக்கின்றனர். சிலர் சிங்களவனோடு விளையாடக் கூடாது என்றும் சிலர் விளையாடலாம் என்றும் தமது கருத்துக்களைக் கூறியுள்ளனர். விளையாட இருக்கும், அல்லது விளையாட விரும்பும் துடுப்பாட்ட வீரர்களே ஒரு கணம் இதை வாசியுங்கள்! சர்வதேசரீதியாக பல அவப்பெயர்களைச் சம்பாதித்துள்ள இலங்கை அரசு தனது உண்மையான முகத்தை மறைக்கவே இவ்வாறன விளையாட்டுப் போட்டிகளையும், விழாக்களையும் நடாத்தி வருகின்றது என்ற உண…
-
- 6 replies
- 1.1k views
-
-
கொழும்பு விகாரை வழிபாடுகளில் தமிழ் இராணுவத்தினர்! [Thursday 2014-09-25 07:00] இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்டுள்ள தமிழ் இளைஞர்கள் கொழும்பிலுள்ள பௌத்த விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் சிலர் இராணுவத்தில் இணைந்து பயிற்சிகளை முடித்து அண்மையில் வெளியேறியிருந்தனர். இவர்களுக்கு சிங்கள மக்களுடனான உறவுகளைக் கட்டியெழுப்புதல் தொடர்பான பயிற்சியின் ஒரு கட்டமாக இராணுவத்தின் ஏற்பாட்டில் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பில் நாடாளுமன்றத் தொகுதி, அருங்காட்சியகம், இராணுவ மருத்துவமனை, துறைமுகம் என்பவற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பின்னர் சிங்கள அதிகாரிகள் தமிழ் இராணுவத்தி…
-
- 6 replies
- 834 views
-
-
போர் நிறுத்தம் ஒப்பந்தம் : விடுதலைப் புலிகள் மறுப்பு! [ வெப் உலகம் ] - [ Dec 17, 2007 05:00 GMT ] சிறிலங்க அரசுடன் செய்துகொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர வேண்டும் என்று புலிகள் விரும்புவதாக இலங்கை கண்காணிப்புக் குழுவினர் கூறியதாக வெளியான செய்திகளை விடுதலைப் புலிகள் இயக்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது! போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக சிறிலங்க அரசிற்கு எந்தவிதமான செய்தியையும் தாங்கள் அளிக்கவில்லை என்றும், தங்களுடைய தலைவர் பிரபாகரன் ஆற்றிய உரையிலேயே எல்லா செய்திகளும் உள்ளது என்று தாங்கள் தெரிவித்ததாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும், ராணுவ பேச்சாளர் இளந்திரையனும் கூறியுள்ளனர். மாவீரர் நாளை முன்னிட்டு விடுதல…
-
- 6 replies
- 3.7k views
-
-
05 OCT, 2024 | 03:39 PM எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையொப்பமிட்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையெழுத்திட்டனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. https…
-
-
- 6 replies
- 714 views
- 1 follower
-
-
கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் நேற்றைய தினம் (30) விளக்கு வைத்து பண்டமெடுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. புளியம்பொக்கணையில் இருந்து மீசாலை புத்தூர் சந்திக்கு மாட்டு வண்டில்களில் பண்டம் எடுத்து செல்வது வழமை ஆயினும் இந்த ஆண்டு நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக புளியம்பொக்கணை கற்பக விநாயகர் ஆலத்திற்கே கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/புளியம்பொக்கணை-நாகதம்பி/ இந்த நேரத்திலுமா? 🙄
-
- 6 replies
- 977 views
-
-
யாழ்ப்பாணத்தில் எவ்வித சுதந்திரமும் இல்லை- கனேடிய செய்தித்தாள் யாழ்ப்பாணத்தில் எவ்வித சுதந்திரமும் இல்லை என நெசனல் போஸ்ட் என்ற கனேடிய செய்திதாளின் செய்தியாளர் ஸ்டுவட் பெல் எழுதியுள்ளார். யாழ்ப்பாண நகரம் சைக்கிள்களால் நிரம்பிக் காணப்படுகிறது. முச்சக்கர வண்டிகளும் குடைபிடித்த பெண்களும் கொழுத்தும் வெயிலில் தமது பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அங்கு பெருமளவான படையினர் தன்னியக்க துப்பாக்கிகளுடன் நடமாடுகின்றனர். பேரூந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகளின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்படுகின்றன. கொழும்பை அடுத்து இரண்டாவது பெரிய நகரமான யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி சன்னங்களால் துளையிடப்பட்ட பல வீடுகள் ஆட்கள் அற்ற நிலையில் காணப்படுகின்றன. அவை உள்நாட்டு யுத்தத்தின் தாக்…
-
- 6 replies
- 1.5k views
-
-
யாழில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைந்த குடும்பத்தினர் கைது யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகொன்றின் ஊடாக இந்தியாவுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மூவரும், நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில், திருகோணமலை பகுதியை சேர்ந்த 45 வயதான முகமது அன்சாரி, அவரது மனைவியான 35 வயதுடைய சல்மா பேகம் மற்றும் அவர்களது 10 வயது மகனான அன்ஸார் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அகதிகளாக இந்தியாவுக்குள் அவர்கள் வருகை தந்தமை பொலி…
-
- 6 replies
- 967 views
-
-
அப்பாவி தமிழர்கள், சம உரிமையோடு, அவரவர் நிலத்தில் குடியமர்த்தப்பட வேண்டும் என்று திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில், வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு உரையாற்றியபோது மேலும் கூறியதாவது: ஈழத்து கலை நிகழ்ச்சி இங்கே நடந்த போது, என் கண்களின் ஓரம் ஈரமானது. அங்கு போர் நின்று விட்டதாக சொல்லப்படுகிறது. களம் ஓய்ந்து விட்டாலும், காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன. அப்பாவி தமிழர்கள், சம உரிமையோடு, அவரவர் நிலத்தில் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்களின் துயரத்தில் பங்கேற்கும் விதத்தில், நான் எனது பிறந்த நாளை இந்த ஆண்டு கொண்டாடப் போவதில்லை. …
-
- 6 replies
- 949 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தில்திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டுவருகின்றது என இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரன் அன்ரூசுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார் பிராந்தியத்தின் கல்விக் கேந்திர மையமாக இலங்கையை மாற்றுவதற்கு உதவுவதாக அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் திருமதி கெரன் அன்ட்ரூஸ் என்னிடம் தெரிவித்தார். என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்புகளைப் படிக்க விரும்பும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பொருத்தமான பாடநெறிகளின் ஆரம்ப கட்டத்தை இலங்கையில் தொடர்வதற்குத் தேவையான கல்வி நிறுவனங்களை இலங்கையில் நிறுவுவதன் மூ…
-
- 6 replies
- 506 views
-
-
ஈழத் தமிழர்கள் மீது போர் குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அந்த போர்க் குற்றங்களின் நோக்கம் இன அழிப்புத்தான் என்பதனை ஐ.நாவுக்கு அனுப்பும் ஒவ்வொரு கடிதங்களிலும் வலியுறுத்தவேண்டும். போர்க்குற்ற விசாரணையை (War Crimes) மட்டும் முன்னிலைப் படுத்தாமல் இனப் படுகொலையையும் (Genocide) முன்னிலைப் படுத்துவதாக அனைத்து செயல் பாடுகளும் அமைய வேண்டும். போர்குற்ற விசாரணை என்பது குற்றமிழைத்தவருக்கு தண்டனை என்பதுடன் இருந்துவிடுகின்றது. போர்குற்ற விசாரணை பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் நடவடிக்கை அல்ல. அது குற்றவாளிக்கு தண்டனை என்பதனை முதல் நோக்கமாக கொண்ட வடிவமைப்பு. இதற்கு முற்றிலும் எதிராக இனப்படுகொலை விசாரணை பாதிக்கப்பட்ட இனத்தை, இன…
-
- 6 replies
- 1.2k views
-
-
எம்.வி. சன் சீ கப்பல் மூலம் கனடா சென்ற பெண்ணொருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காகச் செயற்பட்டவரெனவும் அவ்வியக்கத்தின் உறுப்பினர்களுக்கே உரித்தான தாலிக்கொடியை அவர் வைத்துள்ளார் என்றும் கனேடிய அரசாங்க பிரதிநிதி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் பெண்ணின் பெயர் விபரங்களை வெளியிடுவதில் தடை உள்ளது. இந்நிலையில் குறித்த பெண் மீதான விசாரணை நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. குறித்த பெண்ணும் அவரது பிள்ளைகளும் எம்.வி. சன் சீ கப்பல் மூலம் கனடா வந்தடைந்த தினத்திலிருந்து பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 6 replies
- 1.1k views
-
-
விமானப்படைக்கு இறுதி எச்சரிக்கை- தமிழ்ச்செல்வன் ஏப்ரல் 24, 2007 கிளிநொச்சி: காட்டுநாயகே மற்றும் பலாலி விமான தளங்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய விமான தாக்குதல்கள் 100 சதவீத வெற்றி பெற்றுள்ளன. இது இலங்கை விமானப் படைக்கு விடப்பட்ட இறுதி எச்சரிக்கை என புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இதுகுறித்து கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியில், காட்டு நாயகே விமான தளம் மீது நாங்கள் நடத்திய விமான தாக்குதல் 100 சதவீத வெற்றியைப் பெற்றது. தற்போது பலாலி விமான தளம் மீதும் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் பூமி மீது இலங்கை விமானப்படை நடத்தி வந்த தொடர் தாக்குதலை நிறுத்தும் வகையில் இந்த வான்வழி…
-
- 6 replies
- 5.8k views
-
-
தனக்கு மைத்திரி தேவையில்லை எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் பிரதமர் பதவிக்குப் பொருத்தமான பல அனுபவமுள்ளவர்கள் இருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்துள்ளார்.
-
- 6 replies
- 718 views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளதனை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2.4k views
-
-
வீரகேசரி இணையம் - மன்னார் தள்ளாடி மற்றும் உயிலங்குளம் பகுதிகளில் இன்று அதிகாலை கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இம் மோதலின் போது படுகாயமைடைந்த 14 இராணுவத்தினர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்த 14 இராணுவத்தினரையும் மேலதிக சிகிச்சைகளிற்க்காக அனுராதப்புரம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னர் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை மன்னார் தள்ளாடி மற்றும் சௌத் பார் படைத்தளத்திலிருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி கடும் ஷெல் தாக்குதல் இடம்பெற்று வருவதாகவும், இதனை தொடர்ந்து மன்னாரின் பல பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக எ…
-
- 6 replies
- 3.2k views
-
-
மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்ததுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அதனையடுத்து மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர். அதனையடுத்து அஸ்கிரிய விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார தி…
-
-
- 6 replies
- 506 views
-