ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143598 topics in this forum
-
மஹிந்தவின் சிங்கள குடியேற்றம் - சண்டே லீடர் எச்சரித்துள்ளது நடுவன் தமிழீழமான முறிகண்டியில் 12ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றப்படுவதானது - மீண்டும் ஓர் இனக்கலவரம் ஏற்படுவதற்கு இந்த திட்டம் அடித்தளம் இடுகின்றது என்று சண்டே லீடர் எச்சரித்துள்ளது. தெற்கில் தமிழர்கள் காணிகளை தமது சொந்தப் பணத்தில் வாங்கி குடியேறுகின்றனர். ஆனால் வடக்கில் ஸ்ரீலங்கா அரசு அவர்களின் காணிகளைப் பறித்து சிங்களவர்களைக் குடியேற்றுகின்றது. முறிகண்டி பகுதியில் ஐந்தாயிரம் ஏக்கர் தமிழர் நிலம் பறிக்கப்பட்டு அங்கு 12 ஆயிரம் சிங்கள இராணுவ குடும்பங்களுக்கு வீடுகள் அமைக்கப்படுகின்றன, என சண்டே லீடர் ஆங்கில ஏடு ‘மஹிந்தவின் சிங்கள குடியேற்றம்' எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. 12 ஆயிரம் இராணுவ குடு…
-
- 5 replies
- 1.5k views
-
-
கடந்த 26ம் நாள் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை என்று கூறி முல்லைத் தீவில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினர் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் அழைத்துவரப்பட்டனர். இதன் போது சிறிலங்காப் படைகளால் வழங்கப்பட்ட கொப்பிகளையும் எழுது பொருட்களையும் பெற்றுக் கொள்ள போர்க்குற்றவாளி மேஐர் ஜென்ரல் ஜெகத் டயசின் காலில் விழுந்து வணங்க நிர்ப்பந்திக்கப்ட்டுள்ளனர். இந்த நிகழ்வில் சிறிலங்கா அரசுடன் சேர்தியங்குகின்ற முன்னாள் எம்.பி. கனகரத்தினம் முல்லைத் தீவு கல்வி பணிப்பாளர் உதயராணி ஆகியோர் கலந்து கொண்டனர். http://www.sankathi24.com/news/44781/64//d,fullart.aspx
-
- 5 replies
- 512 views
-
-
அமெரிக்காவின் பிரபல பாடகர் ,பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளருமாகிய லயனல் ரிச்சி கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி ஒன்று கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றது . குறித்த இசை நிகழ்ச்சி இலங்கையின் முன்னணி நிறுவனமான எக்சஸ் இன்டர்நேஷனல் கம்பனியின் இருபத்து ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்றது. இலங்கைக்கு முதன்முதலாக வருகை தந்த லயனல் ரிச்சி யின் இசை நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் V.I.Pக்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. ஆட்கள் தெரியாமல் பலர் சென்றுள்ளனர் ஜனாதிபதியின் பாரியார் உறவுக் காறர்கள் பிள்ளைகள் என பலரும் சென்றுள்ளனர் அதில் முஸ்லீம் காங்ரஸ் தலைவர் மற்றும் பல அரசியல் பிரபலங்கள் என பலரும் இருட்டில் நடனமாடி மகிழ்ந்துள்ளனர். http://www.jvpnews.com/srilanka/8441…
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழர் தாயக பிரதேசங்களில் அதிகரிக்கும் சிங்களக் குடியேற்றங்கள்- வடமாகாண சபை தீவிர ஆலோசனை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஈழத் தமிழர்களிடையே பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மைத்திரிபால சிறிசேனவும் ரணிலும் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, அபிவிருத்தி என்ற பெயரில் கூட்டங்களை நடத்துவதாகவும், ஆனால் வடமாகாண சபையுடன் கலந்துரையாடுவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட யாரும் தமிழ் இனவாதத்தை பேசுவதில்லை என்றும் ஈழத் தமிழர்களின் சுயநி…
-
- 5 replies
- 1.1k views
-
-
யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போலி வைத்திய சிகிச்சை நிலையங்கள் இயங்கி வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இயங்கும் சில வைத்திய சிகிச்சை நிலையங்கள் போலியானவை அங்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களும் போலியானவர்கள். குறிப்பாக பல் சிகிச்சை நிலையங்கள் மூன்று அவ்வாறு இயங்குகின்றன. அங்கு சிகிச்சை அளிக்கும் போலி வைத்தியர்களின் சிகிச்சையினால் பலர் பாதிக்கபப்ட்டுள்ளனர். குறித்த சிகிச்சை நிலையங்களில் போலி வைத்தியர்கள் போலி தாதியர்கள் போலி தொழிநுட்ப உத்தியோகஸ்தர்களே கடமையாற்றுகின்றனர். அந்த வைத்திய சிகிச்சை நிலையங்களோ அங்கு வைத்திய சிகிச்சைக்கு பயன்படுத…
-
- 5 replies
- 1.8k views
-
-
1) ரட்ணசிறி விக்ரமநாயக்க உள்நாட்டு நிர்வாகம் 2) அநுர பண்டாரநாயக்க தேசிய மரபுரிமைகள் 3) டி.எம்.ஜயரட்ண பெருந்தோட்டக் கைத்தொழில் 4) நிமால் சிறிபால டி சில்வாசுகாதாரம் மற்றும் போஷாக்கு 5) மங்கள சமரவீரதுறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து 6) ஏ.எச்.எம்.பௌசிபெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத் துறை 7) ஜெயராஜ் பெர்னாண்டோப்புள்ளே நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி 8) மைத்திரிபால சிறிசேன விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் 9) சுசில் பிரேமஜயந்த கல்வி 10) கரு ஜயசூரிய பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் 11) ஆறுமுகம் தொண்டமான் இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி 12) ரவூப் ஹக்கீம்தபால் தொலைத் தொடர்பு 13) தினேஷ் குணவர்த்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
தமிழ்க்கொடி வழி இதழில் “சீமான் தலைமை ஏற்போம்” என்ற பெயரில் வெளிவந்துள்ள கட்டுரை: சீமான்! இவரை, பலருக்கு வெறும் இயக்குனராக மட்டும்தான் தெரியும். தமிழின் மீது அளவில்லாதப்பற்றும், தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு தமிழ் உணர்வாளர் தான் சீமான், தமிழுணர்வின் காரணமாக இனிய தமிழிலேயே உரையாடும் இவர்: தமிழர்களின் தேசிய தலைவர் வேலுப்பபிள்ளைபிரபாகரன் மீது கொண்ட அன்பினாலும் தமிழின் மீது கொண்ட பற்றினாலும் ‘தம்பி” ‘வாழ்த்துக்கள்’ போன்ற தரமான படங்களை வழங்கினார். ‘காவிரிநீர் பிரச்சனை’ ‘பாலாறுபிரச்சனை” என தமிழர்களுக்கென எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் சரி திரைப்படத்துறையில் இருந்து ஓங்கி ஒலிக்கும் குரல் இவர்குரலாகத்தான் இருக்கும், இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்தபோத…
-
- 5 replies
- 1.8k views
-
-
கோத்தபாய ராஜபக்சவை நஞ்சூட்டிக் கொல்ல திட்டம்? சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நஞ்சூட்டிக் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சிறிலங்காவின் புலனாய்வுத்துறை தெரிவித்திருக்கின்றது. கடற்படையில் இருந்து வெளியேறிய முன்னாள் வீரர்களை வைத்தே இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான முழு விபரங்களும் பாதுகாப்புச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருப்பதாவது: புலனாய்வுத்துறையினர் இது தொடர்பாக எனக்கு விபரங்களை கடந்த வியாழக்கிழமை சமர்ப்பித்துள்ளனர். மேலும் இச்சதித்திட்டத்தில் அரசில் உள்ள சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் உள்ளன. விடுதலைப் புல…
-
- 5 replies
- 1.8k views
-
-
‘ மகிந்தவை வெளியேற்ற ஒன்று திரளுங்கள்’ – முதல்வர் விக்னேஸ்வரன் அழைப்பு JAN 05, 2015 | 0:26by புதினப்பணிமனைin செய்திகள் வடமாகாண சபையை முடக்கப் பார்த்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை, அவரது இருக்கையை விட்டு வெளியேற்ற ஒன்று திரண்டு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். அதிபர் தேர்தல் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- “குழப்பமான சூழலில் நாம் தற்போது வாழ்ந்து வருகின்றோம். தமிழ்ப் பேசும் மக்கள் என்பதால் நாம் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளோம், அச்சுறுத்தப்பட்டுள்ளோம், பாகுபாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ளோம். எமது பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படக் கூடும் என்ற எண்ணத்தை நாம் எட்ட முடியாதுள்ளது. இந்த …
-
- 5 replies
- 744 views
-
-
விக்கியின் நிராகரிப்பு – கம்மன்பில அதிர்ச்சி மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக, புளோரிடாவின் பீட்டா ஆய்வகத்தில் நடத்தப்பட்ட கார்பன் ஆய்வு அறிக்கையை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்திருப்பது குறித்து கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். “ஓய்வுபெற்ற நீதியரசர் இத்தகைய முடிவை எடுத்திருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியை அளிக்கிறது. மன்னார் புதைகுழி விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்கிறது. அமெரிக்க ஆய்வகத்தின் அறிக்கை தொடர்பாக அவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் தரும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://…
-
- 5 replies
- 1.5k views
- 1 follower
-
-
இலங்கையில் அமெரிக்கப் படைகள் இல்லை: இலங்கை இராணுவம் இலங்கையில் அமெரிக்க சிறப்புப் படைகள் இருப்பதாக வெளியான தகவல்களை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது. அமெரிக்காவினதோ வேறெந்த வெளிநாட்டினதோ துருப்புகள் தற்போது இலங்கையில் இல்லை என இராணுவப் பேச்சளார் நிஹால் ஹப்புஆரச்சி கூறினார். இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு ஆகிய நாடுகளில் பயங்கரவாத ஒழிப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக அமெரிக்க சிறப்புப் படைகள் நிலைகொண்டிருப்பதாக அமெரிக்காவின் பெண்டகன் உயரதிகாரி அட்மிரல் ரொபர்ட் வில்லார்ட் அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள வருடாந்த நீர்க்காக தாக்குதல…
-
- 5 replies
- 748 views
-
-
போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்ட ருத்ரகுமாரனுக்கு அமெரிக்க அரசாங்கம் அடைக்கலம் வழங்கியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரனினால் மேற்கொள்ளப்பட்ட பல போர்க்குற்றச் செயல்களுடன் ருத்ரகுமாரனுக்கு தொடர்பு காணப்படுகின்றது. ருத்ரகுமாரன் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் காணப்படுகின்றது. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்தில் ருத்ரகுமாரன் ஐந்து தடைவகள் இலங்கைக்கு விஜயம் செய்து, பிரபாகரனுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பிரபாகரனின் சட்ட ஆலோசகராகவும் ருத்ரகுமாரன் கடமையாற்றியுள்ளார் என திவயி http://www.seithy.co...&language=tamil
-
- 5 replies
- 1.3k views
-
-
புலி - மஹிந்த இரகசிய ஒப்பந்த விவகாரம்: விரைவில் அம்பலம் 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரகசிய ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை புலிகளில் முன்னாள் செயற்பாட்டாளரான எமிழ்காந்தன் அம்பலப்படுத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 2005ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ்ப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வாக்களிக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதற்காக, புலிகள் இயக்கத்தினருக்கு பெருந்தொகையான பணத்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுத்தார் என்று கூறப்படும் உடன்படிக்கை, மிக விவரமாக வெகு விரைவில் அம்பலப்படுத்தப்படும் என்று எத…
-
- 5 replies
- 578 views
-
-
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் தஞ்சக் கோரிக்கையாளர்கள் அனைவரையும் இலங்கைக்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியினர் கூறியிருப்பதை அந்த நாட்டின் அரசாங்கமும், அகதிகளுக்காக குரல்கொடுப்பவர்களும் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். [size=3]இலங்கை அகதிகள் ஆஸ்திரேலிய சட்ட முறைமைக்குள் வருவதற்கு முன்னதாகவே, அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு ஏதுவாக, இலங்கை அரசாங்கத்துடன் ஆஸ்திரேலியா ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி கூட்டமைப்பு கூறியுள்ளது.[/size] [size=3]பல இலங்கை தஞ்சக்கோரிக்கையாளர்கள், பொருளாதார நோக்கில் குடியேறுபவர்கள்தான், அவர்கள் அகதிகள் அல்ல என்று எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஜூலி பிசப் கூறியுள்ளார்.…
-
- 5 replies
- 1.2k views
-
-
வன்னி அகதிகளுக்கு உதவுங்கள்: யாழ். ஆயர் உருக்கமான வேண்டுகோள் [வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2008, 05:17 மு.ப ஈழம்] [க.நித்தியா] வன்னியில் இடம்பெற்று வரும் உக்கிரமான மோதல்களால் வீடு வாசல்களை விட்டு வெளியேறி வரும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான போர் அகதிகளுக்கு உதவுமாறு யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். கத்தோலிக்க தொண்டு உதவி அமைப்பின் தேவைப்படுவோருக்கான திருச்சபையிடம் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள யாழ். ஆயர் செளந்தரநாயகம் ஆண்டகை மேலும் கூறியுள்ளதாவது: விடுதலைப் புலிகளுடனான அரச படையினரின் போரானது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மக்கள் இடையில் சிக்கியிருக்கின்றனர். படைகளின் முன்னேற்றத்தினால் மக்கள் தமத…
-
- 5 replies
- 1.2k views
-
-
வீரகேசரி இணையம் - இந்தியா மேற்கொள்ளும் அழுத்தங்களுக்கு அடிபணிந்து யுத்த நிறுத்தம் ஏற்படுத்த வாய்ப்பில்லை எனவும் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைந்தால் மட்டுமே யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்பதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:- ''தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தற்போது அரச படையினரின் முன் நகர்வுகளுக்கு ஈடுகொடுக்க முடியாது பின் வாங்கி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. படையினர் தாக்குதல் மேற்கொள்ளக் கூடிய பிரதேசங்களைவிட்டு விடுதலைப் புலி உறுப்பினர்கள் பின்வாங்கி வருவதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. …
-
- 5 replies
- 1.4k views
-
-
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின் துணைவியாரான, சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா காலமானார். திடீரென சுகயீனமடைந்த அவர், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே காலமானார். தமிழ் அரசியல் கைகளின் வழக்குகள் உள்ளிட்ட இலங்கையில் பிரபல்யமான இருந்த பல வழக்குகளில் ஆஜராகி, தனது வாதத்திறமையால் நியாயத்தை பெற்றுக்கொடுத்தவர் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா என்பது குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா காலமானார்
-
- 5 replies
- 671 views
-
-
யாழ்ப்பாணத்தில் வைத்து, வடக்கு மாகாணசபை முதல்வர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திடீர் அழைப்பு விடுத்துள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அமெரிக்காவில் இருந்து திரும்பும் சிறிலங்கா அதிபருக்காக காத்திருக்கிறோம். என்று தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதல்வருக்கு யாழ்ப்பாணத்தில் வைத்தே சிறிலங்கா அதிபர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மாகாணசபைக்கள் சட்டத்தின்படி, மாகாண முதலமைச்சர், சிறிலங்கா அதிபர் முன்னிலையிலோ ஆளுனர் முன்னிலையிலோ பதவியேற்க முடியும். …
-
- 5 replies
- 1.4k views
-
-
அம்பாறை பொத்துவில் நகரில் பெண்ணொருவரை கடத்திச் செல்ல முயன்ற அமைச்சர் கருணா குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவர் காவற்துறையினரால் 12 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொத்துவில் எத்தம பிரதேசத்தில் உள்ள கருணாவின் அலுவலகத்தில் பணியாற்றி வரும் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுந்தரலிங்கம் தர்மலிங்கம், ஆன்டி ரனிஸ்குமார், மகிந்த குமார் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொத்துவில்லைச் சேர்ந்த சிவலிங்கம் சாந்தகுமாரி என்ற 19வது யுவதியை சந்தேக நபர்கள் கடத்திச் செல்ல முயன்றதாக பொத்துவில் காவற்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னை பொத்துவில்லில் உள்ள கருணா குழுவின் அலுவலகத்திற்கு கடத்திச் சென்ற போது, தான் அங்கிருந்து தப்பிச் வந…
-
- 5 replies
- 890 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்ட நாள் முதல் நாம் உண்மையாகவும் விசுவாசமாகவும் நடந்து கொண்டு வருகிறோம். ஐக்கிய தேசியக் கட்சி எம்மைக் கறிவேப்பிலையாகக் கருதிச் செயற்பட்டால் அது பாரிய விலையைக் கொடுக்க வேண்டி வரும் என மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட எமது கட்சி இன்று நாடளாவிய ரீதியில் பிரபலமடைந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர் இம்முறை அதிக ஆசனங்களுடன் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். Source: http://www.eelamweb.com/
-
- 5 replies
- 1.2k views
-
-
எல்லாரும் இலங்கைக்கொடியை கட்டித் தொங்க விட்டிருக்கினம் நாங்களும் தொங்கவிட்டிருக்கிறம் இலங்கை சுதந்திரம் அடைந்து இன்றுடன் 66ஆவது ஆண்டு. நாடளாவிய ரீதியில் கொடியேற்றி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். http://www.onlineuthayan.com/News_More.php?id=866342622704620403
-
- 5 replies
- 682 views
-
-
இலங்கைப் படைகளுடனான பயிற்சி தொடரும்- அமெரிக்கா Share அமெரிக்க– இலங்கைப் படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி போன்ற வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. திருகோணமலையில் கடந்த 2ஆம் திகதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்த, அமெரிக்க – இலங்கைக் கடற்படைகளுக்கு இடையிலான முதலாவது ஐந்து நாள் கூட்டுப் பயிற்சி தொடர்பாக அமெரிக்கத் தூதரகத்தி னால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இலங்கைக்கான அமெரிக்கத் துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், இலங்கை அரசு நல்லிணக்கம், நீதி மற்றும் மனித உரிமைகள் போன்ற…
-
- 5 replies
- 327 views
-
-
11.10.2006 அன்று வடபோர்முனை கிளாலி - முகமாலை முன்னரங்கினூடாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் துருபதன் உட்பட்ட மாவீரர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பலத்த எறிகணைச் சூட்டாதரவுடனும், குண்டு வீச்சு வானூர்திகளின் துணையுடனும் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய நகர்வு முயற்சி விடுதலைப் புலிகளின் போரணிகளால் சில மணிநேரத்தில் முறியடிக்கப்பட்டது. இதன்போது 150 வரையான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பல கவச ஊர்திகளும் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டிருந்தன. சிறிலங்கா படையாள் ஒருவர் விடுதலைப் புலிகளால் சிறைப் பிடிக்கப்பட்டதுடன் கொல்லப்பட்ட படையினரில் 75 வரையானோரின் உடலங்களும…
-
- 5 replies
- 1.7k views
-
-
ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானம் -மீண்டும் நிராகரித்தது இலங்கை Published By: Rajeeban 06 Mar, 2023 | 11:26 AM ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை கடந்த வருடம்நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இலங்கை மீண்டும்தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 52 அமர்வில்இடம்பெற்ற கூட்டமொன்றின் போது ஜெனீவாவில் உள்ளஇலங்கையின் ஐநாவிற்கான அலுவலகத்தின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலிஅருணதிலக இதனை தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்ட்டவை போன்ற தீர்மானங்கள்இலங்கை மக்களிற்கு உதவியாக அமையப்போவதில்லை மாறாக நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும…
-
- 5 replies
- 591 views
-
-
ஜனாதிபதி தேர்தல் பெறுபேறு வெளியான இரண்டு நாட்களுக்குள் தன்னுடைய அந்தரங்க உறுப்பின் ஒருபகுதியை அறுத்துவீசப்போவதாக பெண்ணொருவர் தன்னை அச்சுறுத்தியதாக தலாவ பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தம்புத்தேகம பொலிஸில் நேற்று முறையிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/137271
-
- 5 replies
- 1.1k views
-