Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு எடுத்த முடிவை எதிர்த்து இந்திய மத்திய அரசு உச்ச நீதிமன்றம் நோக்கி நகர்வுகள் மேற்கொள்ளும். தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கும் இம் முடிவை எதிர்த்து; இந்திய மத்திய அரசு கோரி இருக்கும் விசாரணையை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்பு கொண்டுள்ளது. கொலை குற்றம் சாட்டப்பட்ட இவர்களின் விசாரணைகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் இவர்களை விடுதலை செய்யக்கூடாது என்றும் மத்திய அரசு கோரியுள்ளது. மன்மோகன் வெளியிட்ட அறிக்கை: மறைந்த ஸ்ரீ ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் எழும் சட்ட அடிப்படை பிரச்சினைகளை ஆராய மத்திய அரசு;உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை அனுப்ப உள்ளது. குற்றவாளிகளை விடுதலை செய்யும் முடிவு பற்றிய அறிக்கையான…

  2. பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவ வைத்திருக்கிறது. இவ்வாறு தமிழக வார சஞ்சிகை ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது. ‘மே, 1968… அர்ச்சகரின் மீதுதான் தவறு!’ – அந்த இளைஞனின் உதடுகளில் இருந்து உஷ்ணமாக வெளிப்பட்டன வார்த்தைகள். கோபம் அனலாகத் தெறிக்கும் தன் மகனின் முகத்தை விநோதமாகப் பார்த்தார்கள் பெற்றோர் இருவரும். ‘என்ன நடந்தது எனத் தெரிந்துதான் பேசுகிறாயா? தமிழரான அந்த அர்ச்சகரை சிங்களவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?’ – பதில் கோபத்துடன் திருப்பிக் கேட்டார் அந்த இளைஞனின் தந்தை. …

    • 28 replies
    • 2.6k views
  3. ஜனாதிபதி தேர்தல் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தேர்தல் நடப்பதற்கு, 48 மணித்தியாலங்கள் முன்னதாகவே அறிவிக்கப்படும் என்று சிங்கள ஊடகம் ஒன்று ஊகம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகள் நிறைவடையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி நள்ளிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்மானத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரக் காலத்தில் தமது நிலைப்பாட்டை அறிவித்தால் பாதக விளைவுகள் ஏற்படக் கூடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. முன்கூட்டியே அறிவித்தால் பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட பிரச்சாரங்களை மேற்கொள்ள வாய்ப்பு உண்டு என்ற காரணத்தினால் இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசி…

    • 28 replies
    • 1.8k views
  4. கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்

  5. ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலுக்கான தேர்தலில் இலங்கை தோல்வி Wednesday, 21 May 2008 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலுக்கான உறுப்பினர் தேர்தலில் இலங்கை தோல்வியடைந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் காலியான 15 இடங்களுக்கான தேர்தல் இன்று நியூயோர்க்கில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நடந்தது. பொதுச்சபையின் 192 உறுப்பு நாடுகள் அதில் வாக்களித்தன. ஆசிய நாடுகளுக்கான 4 காலியிடங்களுக்கான போட்டியில் இலங்கையுடன் 6 ஆசிய நாடுகள் போட்டியிட்டன. அதில் ஜப்பான்(155), பஹ்ரைன்(142), கொரியா(139) மற்றும் பாகிஸ்தான்(114) ஆகிய நாடுகளே வெற்றிபெற்றன. இலங்கைக்கு 101 வாக்குகளே கிடைத்தன. முன்னதாக மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான இலங்கை அரசின் ச…

    • 28 replies
    • 4.1k views
  6. கடல் அட்டைப்பண்ணை வேண்டுமென யாழில் போராட்டம் கடற்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு கடலட்டை பண்ணைகள் வேண்டுமென இன்று (30) வெள்ளிக்கிழமை யாழ் கோட்டை பகுதியில் இருந்து யாழ் பஸ் தரிப்பு நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பேரணியில் ஈடுபட்டவர்களால் கடற்தொழில் அமைச்சுக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது. பேரணிகள் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடத்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அட்டை பண்ணைகள் பெரிதும் உதவுகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நாட்டுக்கும் மக்களுக்கும் அன்னிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு தொழிலாக அட்டைப்பண்ணை காணப்படுகின்றது. சிலர் தமது குறுகிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடல் தொழிலும…

    • 28 replies
    • 2k views
  7. துறைத்தலைவர் பதவி கோரி யாழ்.பல்கலை பேராசிரியர் உயிர் மாய்க்க முயற்சி August 16, 2022 தனக்கு துறைத்தலைவர் பதவி தரக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உயிரை மாய்க்க முயன்றுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ் பல்கலைக்கழக துறையின் ஒன்றின் தலைவராக இருந்த பேராசியர் தனது மேல் படிப்போன்றிக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி இருந்தார். அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது. அதனால் , அவரது துறைத்தலைவர் பதவி மற்றுமொரு பேராசிரியருக்கு வழங்கப்பட இருந்தது. அந்நிலையில் துறைத்தலைவராக இருந்த பேராசியர் தனது தனிப்பட்ட காரணத்தால் வெளிநாடு சென்று கற்கும் முடிவை இடை நிறுத்தி தனது துறைத்தலைவர் பதவி…

  8. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மதியுரைஞர் பதவிக்கு இந்திய அரசியல் பிரமுகர்களுள் ஒருவரான வைகோவை நியமிக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வகித்த மதியுரைஞர் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளதால் அப்பதவிக்கு உகந்தவர் வைகோ என்று விடுதலைப் புலிகள் இயக்கம் தீர்மானித்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிறந்த உதவியாளராக விளங்கி வரும் வைகோவை அப்பதிவியில் நியமிக்க அழைப்பு விடுக்கபட்டுள்ளதாக மேற்படி தகவல் பிரிவு தெரவிக்கின்றனது. அண்மைக் காலங்களாக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான பல கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் வைகோ கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய பிரதமரைச் சந்தித்து விடுதலைப்புலிகள் சார்பில் பேச்சுவார்த்தை …

  9. தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளுக்கு வெலிக்கடையில் நிர்வாணமாக்கி பாலியல் கொடுமைகள். PHOTOS, சிறீலங்கா | ADMIN | OCTOBER 26, 2012 AT 09:23 சிறீலங்கா இராணுவத்தினரும், கடற்படையினரும் தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளை மிகக் கேவலமான முறையில் முழு நிர்வாணமாக்கிச் சோதனை என்ற பெயரில் பாலியல் ரீதியான கொடுமைகளைச் செய்ததாக வெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண் அரசியல் கைதிகள் தெரிவிக்கின்றனர். முறையற்ற சோதனை நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி நிற்கின்றனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சிறைத்துறைச் சட்டத்தின்படியும், விதிமுறைகளுக்கமைவாகவும் சிறைக்கைதிகளைச் சிறை அதிகாரிகள் தவிர வேறு பிரிவினர் சோதனை செய்வது முறையற்ற செயல். ஆனால் நீதிக்குப் புறம்பான வகையில் இவற்றை எல்…

    • 28 replies
    • 2.1k views
  10. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி தாக்கப்பட்டுள்ளார் சிதம்பரம் நடராகர் கோயில் வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக மனுத்தாக்கல் செய்ய இன்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தார் சுப்பிரமணிய சாமி. அப்போது இலங்கை பிரச்சனையால் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் சுப்பிரமணிய சாமி மீது முட்டைகள் வீசி தாக்கினர். http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php

  11. இன்று புதுடெல்லி பறக்கிறார் கோத்தா – நாளை முக்கிய சந்திப்புகள் ஏற்பாடு Nov 28, 2019 | 1:27by கார்வண்ணன் in செய்திகள் சிறிலங்கா அதிபர் கோத்தபய ராஜபக்ச இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். சிறிலங்கா அதிபர் இந்தியப் பயணத்தின் போது, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார். சிறிலங்கா அதிபருடன், அவரது செயலர் பிபி ஜயசுந்தர, வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்க, திறைசேரி செயலர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல, அதிபரின் ஆலோசகர் லலித் வீரதுங்க, அதிபரின் தனிப்பட்ட செயலர் சுஜீஸ்வர பண்டார ஆகியோர் புதுடெல்லி செல்லவுள்ளனர் என்று அதிபரின் ஊடகப் பிரிவ…

  12. இலங்கை விவகாரங்களைக் கவனிப்பதற்கென தனது நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிக்க இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தமது ஆட்சிக் காலத்தில் இலங்கை விவகாரங்களுக்காக மட்டும் ஜி. பார்த்தசாரதியை சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருந்தார். அதேபோல் இலங்கை விவகாரங்களை தமது சார்பில் நேரடியாக கையாளக் கூடிய சிறப்பு பிரதிநிதியை நியமிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. அப்படி நியமிக்கப்படும் சிறப்பு பிரதிநிதியானவர் வெளிவிவகார அமைச்சர், அவ்வமைச்சின் செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கும் மேலான அதிகாரங்களைக் கொண்டு செயற்படக்கூடியவராக …

    • 28 replies
    • 5.7k views
  13. Published By: DIGITAL DESK 3 12 MAR, 2025 | 10:49 AM அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணியாற்றிய பெண் வைத்தியரைக் கத்திமுனையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளியை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை (12) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர். நாட்டின் சகல வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்றையதினம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அநுராதபுரம் வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் தப்பியோடிய இராணுவச் சிப்பாய் எனக் கருதப்படுபவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி அடையாள பணிப்பகிஷ்கரிப்பு நடைபெறுகின்றது. …

  14. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளருமாகிய கஜேந்திரன் அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதன் முழு வடிவம் இங்கே தரப்படுகின்றது. 15-03-2010 ஊடக அறிக்கை கடந்த 14-03-2010 அன்று தமிழ் இணையத்தளத்தில் கஜேந்திரன் குழுவினருக்கு வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபராக சிறீதரன் அவர்கள் கடமையாற்றிய காலத்தில் கிளிநொச்சிப் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் பெறுவது தொடர்பாக அதிபர் சிறீதரன் அவர்கள் விடுதலைப் புலிகளது அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களை அணுகியதாகவும் அதன்போது தமிழ்ச்செல்வன் குழுவில் இருந்த ச…

    • 28 replies
    • 2.1k views
  15. மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் நாளை 8 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின்பால் இலங்கை கவனம் செலுத்தியிருப்பது வெற்றியென இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், காற்றாலை மின் உற்பத்தியானது சுற்றாடல் நேயமிக்கதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். மன்னாரில் காற்றாலை மின்நிலையம்: நாளை திறப்பு விழா!!! | NewUthayan

  16. ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனிற்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்ற 16 விசேட அதிரப்படையினருக்கு எதிராக யாழ்.மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் ( இலங்கை தமிழ் அரசுக் கட்சி ) , முன்னாள் விடுதலைப்புலிகள் போராளி உறுப்பினர் தனுபன் ( தற்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் ) ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் முறைப்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 6 - 08- 2020 திகதி யாழ்.மத்திய கல்லூரியில் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் வாக்கெண்ணுதலை பார்வையிடுகின்ற முகவர்களாக நியமிக்கப்பட்டு அதன் நிமித்தம் பணியில் இருந்தோம். …

  17. இலங்கைக்கான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் – பிரித்தானியா எச்சரிக்கை By Shana இலங்கைக்கான அத்தியாவசியப் பயணங்களைத் தவிர ஏனைய பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறை நாட்டில் போராட்டங்களையும் வன்முறையையும் தூண்டியுள்ளது. 70 வருடங்களில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில் போராட்டங்கள், அமைதியின்மை மற்றும் பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே விடுமுறைக்கு செல்பவர்கள் ஆர்ப்பாட்டங்கள், வீதித் தடைகள் மற்றும் அமைதியின்மை ஆகியவற்றை சந்திக்க நேரிடும் என பிரித்தானிய வெளிவிவகார அ…

  18. 02 NOV, 2023 | 07:11 PM மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு “நாம்-200” நிகழ்ச்சி கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் தற்போது இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. https://www.virakesari.lk/article/168355

  19. மன்னாரில் புலிகள் விட்டது தவறா? அல்லது தந்திரமா? - லண்டனிலிருந்து வன்னியன், செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் கி.மு ஆறாம் நூற்றாண்டில் இலங்கையின் முதலாவது மனிதக் குடியேற்றம் என்று குறிப்பிடப்படும் தம்பபன்னியே இன்றைய மன்னார் பெருநிலப்பரப்பு.; வடக்கில் மேற்குக் கடற்கரையில் கலக்கும் பாலியாறு தொடக்கம் தெற்கே மோதகம் ஆறு என்றழைக்ப்படுகின்ற கலாஓயாவுக்கு இடைப்பட்ட ஏறக்குறைய 65 மைல் நீளமான பாக்கு நீரிணைக் கடற்கரைப் பகுதியையும், சராசரி 20 தொடக்கம் 35 மைல் அகலமும் கொண்ட இன்றைய மன்னார் மாவட்டம். இலங்கையின் வரலாற்றில் ஆரம்பப் புள்ளி என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இப்பிரதேசத்தின் மனித நாகரிகம் என்பது சிங்கள வரலாற்றாசிரியர்கள் குறிப…

  20. விடுதலைப் புலிகளை முற்றாக நீக்குவதற்கு இன்னும் சிறிது காலமே தேவை: சரத் பொன்சேகா [புதன்கிழமை, 23 ஓகஸ்ட் 2006, 01:47 ஈழம்] [காவலூர் கவிதன்] தமிழர்களைப் பாதுகாப்பதற்காகவே சிறிலங்கா படைகள் வடக்கு-கிழக்கில் நிலைகொண்டுள்ளன. கடந்த இரண்டு தசாப்த போரில், விடுதலைப் புலிகளே தமிழ்மக்களைக் கொன்றுள்ளனர், படையினரல் அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கொழும்பு நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் இப்போது மீண்டும் பழைய உடல்நிலையில் மிக சுறுசுறுப்பாக உள்ளேன். ஒரு விடயம் மிக முக்கியமானது, அதாவது சிறிலங்காப் படைகளுக்கு தமிழ் மக்கள் மீது எந்தக் கோபமோ வெறுப்போ கிடையாது. அவர்களைப் பாதுகாப்பதுதான் படைகளின் பிரதான…

  21. எதிர்வரும் அரச தலைவருக்கான தேர்தலில் மகிந்த ராசபக்சவுக்கு சாதகமான முடிவுகள் வரும் என்ற நம்பிக்கைகள் அரச தரப்பில் குறைந்து வருவதால் சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோததபாயாவின் மனைவி அதிகளவு பணத்துடன் வெளிநாடு ஒன்றுக்கு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா அரச தலைவருக்கான தேர்தல் எதிர்வரும் 26 ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கன ஆதரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன. இதனை தொடர்ந்து அரச தரப்பில் உள்ள பலரும் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயன்று வருகின்றனர். அரச ஊடகங்களின் தலைவர்கள் பலர் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல நுளைவு அனுமதிகளை பெற்றுள்ள அதே சமயம் பாதுகாப்ப…

  22. ஐ.நா. அமைதிப்படை... நாட்டுக்குள், நுழையும் ஆபத்து- விமல் எச்சரிக்கை! நாட்டில் எதிர்க்காலத்தில் வன்முறைகள் வெடிக்குமானால், ஐ.நா.வின் அமைதிப்படை இலங்கைக்குள் வருகைத் தரும் ஆபத்து உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தேர்தலில் தோல்;வியுற்று ஒன்றரை வருடங்கள் கழித்து நாடாளுமன்றுக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று தாமரை மொட்டுக் கட்சியினரின் ஆதரவுடன் ஜனாதிபதியாகியுள்ளார். அதாவது தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றி, தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கி…

    • 28 replies
    • 1.4k views
  23. [திங்கட்கிழமை, 01 யூன் 2009, 02:37 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழ் மக்களின் அரசியல், சமூக பொருளாதார இருப்பினையும் தற்சார்பு நிலையினையும் நிர்மூலமாக்குவதில் முனைந்திருக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் கபடத்தனத்தை எதிர்கொள்வதற்கும் ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் கட்டமைப்பினை வென்றெடுப்பதற்குமான பாரிய தேசியக் கடமை நம்முன் காத்திருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை செல்வராஜா பத்மநாதன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "சிறிலங்கா அரசாங்கமும் அதன் சிங்கள இராணுவ இயந்திரமும் தமிழீழ மக்கள் மீத…

    • 28 replies
    • 3.4k views
  24. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கலாம்; சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுதலைப் புலிகள் விவகாரத்தை சரியான வகையில் கையாளாவிடின் நாட்டின் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வடக்கில் யுத்தம் உச்ச கட்டத்திலிருந்ததை விட இப்போது மிக குறைவாகவே அங்கு இராணுவம் உள்ளது. தேவையேற்படின் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வைத்துக்கொண்டு இராணுவ குறைப்பை மேற்கொள்ள வேண்டும். மேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது. நிலைமையை அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவ…

    • 28 replies
    • 2.4k views
  25. நாளை லன்டனில்........... நடக்கவிருக்கும் போருக்கு ஆதரவான லன்டன்வாழ் சிங்கள மக்களின் கூட்டத்திற்க்கு எதிரில் போரினால் பாதிக்கபட்ட லன்டன்வாழ் தமிழ் மக்களினது கூட்டத்தை நடத்த மெட்ரொபொலிடன் போலீஸ் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது... அவசரமாக விபரங்கள் தேவை......................................

    • 28 replies
    • 3.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.