ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
வெடுக்குநாறிமலைக்கு வந்த கூட்டுஎதிரணியுடன் பிரதேச மக்கள் முறுகல்! இனவாதச் செயற்பாடுகளை தூண்டும் முயற்சியா? October 3, 2018 தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் ,தேசிய சுதந்திர முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த சமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர ஆகியோர் இன்றைய தினம் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றுள்ளனர். அத்துடன் கூட்டு எதிரணியோடு சென்றிருந்த தொல்லியல் திணைக்களத்தைச்சேர்ந்த இருவர் முற்றுமுழுதாக சிங்களத்தில் வரலாற்றுக்களை திரிவுபடுத்தி பல பொய்யான தகவல்களை அவர்களுக்கு கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் கூட்டு எதிரணியினருக்கும் ஆலயத்தை சூழ்ந்த மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டத…
-
- 4 replies
- 475 views
-
-
தப்பி ஓடிய பசில் ராஜபக்சே இலங்கை திரும்பினார்! எந்த நேரத்திலும் கைது? கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரான பசில் ராஜபக்சே மீண்டும் கொழும்பு திரும்பியுள்ளார். ஊழல் மோசடி வழக்கில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்த உடன் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார் பசில் ராஜபக்சே. அவர் மீது ஏராளமான ஊழல் மோசடி புகார்கள் தெரிவிக்கப்பட்டன. தப்பி ஓடிய பசில் ராஜபக்சே இலங்கை திரும்பினார்! எந்த நேரத்திலும் கைது? ‘திவிநெகும' என்ற அரசு நிதியிலிருந்து பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பசிலுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் இரு…
-
- 4 replies
- 722 views
-
-
கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக்கொலை March 5, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் ஓருவர் இன்று(05-03-2019) காலை ஏழு நாற்பதைந்து மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளரான 32 வயதான காந்தலிங்கம் பிறேமரமணன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வவுனியா வேப்பங்குளத்தை சேர்ந்த இவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை தனது அலுவலகப் பணிப்பாளருடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு உதயநகர் கிழக்கில் தங்கியிருக்கும் இடத்திலிருந்து புறப்படும்போதே உந்துருளியில் வந்த ஒருவர் சரமாறியாக வெட்டியுள்ளார். தலை, கை, …
-
- 4 replies
- 824 views
-
-
பிரித்தானியாவில் புதிய அகதிகள் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்படுகின்ற விண்ணப்பதாரிகள் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி குடிவரவுத் திணைக்களத்தினால் தன்னிச்சையாக நாடுகடத்தப்பட முடியும். இது அகதி அந்தஸ்த்துக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் உள்ள ஈழ அகதிகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அவ்வாறான அகதிகள் மீண்டும் சிறிலங்காவுக்கு சென்றால் உயிராபத்து காணப்படுகின்ற நிலையில், அவர்கள் நாடுகடத்தப்படுவது ஆபத்தானதாகும். எனினும் புதிய சட்டத்தின் கீழ் நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்பதால், ஈழ அகதிகக்கு பெரும் சிக்கல் ஏற்படவுள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே அகதிகளை விரைவாக நாடுகடத்த குடிவரவுத் திணைக்களத்தின…
-
- 4 replies
- 526 views
-
-
தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையை இந்திய கொள்கை வகுக்கும் அமைப்பான றோ, வழமைபோல் அபத்தமாக புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.6k views
-
-
பிரித்தானிய அரசாங்கத்தின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து இலங்கை அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மனித உரிமை விவகாரங்களில் பிரித்தானிய அரசாங்கத்தின் இரட்டைநிலைப்பாடு அம்பலமாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவும், அமெரிக்காவும் ஈராக்கில் மேற்கொண்டமனித உரிமை மீறல்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சிறீலங்கா அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாயத்துறை அமைச்சர் ஜெர்மிபிறவுணினால் இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரை தொடர்பில் இந்தக்கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிரித்தானிய படையினர் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட குற்றச்செயல்கள் தொடர்பில் எவ்வித கருத்தும் …
-
- 4 replies
- 1k views
-
-
சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் விரைவில்: சர்வதேச சமூகத்துக்கு அரசு உறுதி பொறுப்புக் கூறுதல் தொடர்பாக அமெரிக்கா உட்பட உலக சக்திகள் பலவற்றின் அழுத்தங்களுக்கு மத்தியில், சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டமூலம் விரைவில் சட்டமாக்கப்படும் என சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது. ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் ஜெனீவாவிலுள்ள பல்வேறு தூதரகங்கள், சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட சர்வதேச அமைப்புகள், உலக தமிழர் பேரவை, மனித உரிமைகளுக்கான தமிழர் மத்திய நிலையம் போன்ற எல்.ரி.ரி.ஈ. ஆதரவு அமைப்புகளுடன் இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவினர் கூட்டமொன்றை நடத்தினர். அக்கூட்டத்தின்போது சர்வதேச மன்னிப்புச் ச…
-
- 4 replies
- 828 views
-
-
வட் வரி செலுத்த தவறியமைக்காக டபிள்யூ.எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் இயக்குநர் அர்ஜுன் அலோசியஸுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 3.5 பில்லியன் வரியை செலுத்த தவறியமைக்காவே நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது. இந்த குற்றத்துக்காக மேலும் இருவருக்கும் நீதிமன்றம் ஆறு மாதகால சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/196245
-
-
- 4 replies
- 929 views
- 1 follower
-
-
16 DEC, 2024 | 12:27 PM யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் தொலைபேசியில் உரையாடி நூதனமான முறையில் அவரின் வங்கி கணக்கில் இருந்து 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறையிட சென்ற போதிலும் பொலிஸார் அவரின் முறைப்பாட்டினை பெற்றுக்கொள்ளாது அலைக்கழித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காரைநகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஒருவர், தன்னை வங்கி ஒன்றின் மானிப்பாய் கிளையில் இருந்து கதைப்பதாக அறிமுகம் செய்து கொண்டு, உங்கள் வங்கி கணக்கு செயலிழந்து விட்டது, அதனை மீள செயற்படுத்…
-
-
- 4 replies
- 483 views
- 1 follower
-
-
இறுதியுத்தத்தில் முக்கிய பங்காற்றிய இலங்கை இராணுவத்தின் மூன்று முக்கிய தளபதிகளின் பிள்ளைகளின் உயர்கல்வி விசாக்களை மூன்று நாடுகள் நிராகரித்துள்ளன. உயர்கல்வி நோக்கத்திற்காக அவர்களின் பிள்ளைகள் சமர்ப்பத்த விசாக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானிய விசாக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன. இறுதி யுத்தத்தில் மனித உரிமைமீறல், போர்க்குற்றம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் இந்த மூன்று தளபதிகளும் மேற்படி நாடுகளிற்கு செல்ல ஏற்கனவே விசா மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.pagetamil.com/86936/?fbclid=IwAR3hLzsrLPHrqfkV2Wn78AadS2CX-iXgnyd4VqH37iTe6LtNKbzhGD-hGuE
-
- 4 replies
- 735 views
-
-
பாதுகாப்புச் செயலாளராக தாம் வகித்த காலத்தில் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொத்தணி குண்டுகளை கொள்வனவு செய்ததில்லை எனவும், யுத்தம் இடம்பெற்ற போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொத்தணி குண்டுகள் பற்றிய புகைப்படங்களை பிரசுரிப்பது கொத்தணி குண்டுகளை பயன்படுத்தியமைக்கான ஆதாரமாக கருதப்பட முடியாது. இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க வேறும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியமானது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 4 replies
- 474 views
-
-
ஜனாதிபதியின் இணையத்தை முடக்கிய சிறுவனுக்கு கிடைத்தது அதிஷ்டம் ஜனாதிபதியின் இணையத்தை முடக்கிய சிறுவனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக BOUNTY LAB INTERNATIONAL PVT LTD அறிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் தலைமையகத்தை கொண்டுள்ள குறித்த நிறுவனம் தற்பொழுது இலங்கையிலும் செயற்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் ஜனாதிபதியின் இணையத்ததை ஹேக் செய்த சிறுவனுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக முன்வந்துள்ளது. "இப்படியான இளைஞர்கள் உலக அளவில் குறைவாகவே இருக்கின்றனர், இவர்களை நம் நாட்டிற்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும், இவர்களை பண்படுத்தவும் வேண்டும். நெறிமுறைகளை சொல்லிக் கொடுத்து வளப்படுத்த வேண்டும். ஜனாதிப…
-
- 4 replies
- 786 views
-
-
தமிழர்களுக்கு என்றொரு நாடு இது வரையில் எங்குமே இல்லை : கெஹெலிய By V.Priyatharshan 2013-02-28 20:10:46 உலகத்தில் எழுபது மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் அவர்களுக்கென்றொரு சொந்த நாடு இல்லையென ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், உலகில் எழுபது மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கென்று ஒரு சொந்த நாடு இல்லை. அதனை பெற்றுக் கொள்ளவே பிரபாகரன் போன்றவர்களை பயன்…
-
- 4 replies
- 688 views
-
-
இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் - பழ.நெடுமாறன் கருணாநிதி தலைமையிலான திமுக ஜெனீவா தீர்மானத்தை முன்னிறுத்தியே, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய இலங்கை தொடர்பான தீர்மானம் 'உருக்குலைந்து போன, உருப்படாத தீர்மானம்' என்று திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். அந்தத் தீர்மானத்தால் ஆகப்போவது எதுவுமில்லை என்றும் அவர் ஊடகங்களுக்குக் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு தான் எழுதிய கடிதங்களில், இலங்கையில் 'இனப்படுகொலை' நடந்திருப்பதை மூடிமறைக்கக்கூடாது என்றும் அதனை ஒப்புக்கொண்டு இலங்கை அரசு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தான் சுட்டிக்காட்டியதாக கருணாநிதி …
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளரும் புதிய தலைவராகவும் செயற்பட்டு வந்த கே.பி எனப்படும் குமரன் செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்ட 48 மணித்தியால காலப்பகுதிக்குள் விடுதலைப் புலிகளால் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விபரங்களும் அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு உதவிய தேசிய மற்றும் சர்வதேச ஆதரவாளர்கள் தொடர்பான தகவல்களும் வெளிக்கொணரப்பட்டுள்ளன என்று அரச பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. அரச பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிறைவடைந்ததும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தத் தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கைப் பாதுகாப்பு தரப்பினரி…
-
- 4 replies
- 1.9k views
-
-
“பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கையில் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அந்த நாடுகளுக்கு தேவையான பொம்மை அரசாங்கம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்கு முயற்சிக்கின்றன. எமது நாட்டின் பூகோள ரீதியான அமைவிடத்தின் முக்கியத்துவம் காரணமாகவே இவ்வாறான முயற்சியில் ஈடுபடுகின்றன என்று” ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறுகையில், 1948 ஆம் ஆண்டு எமது நாட்டிலிருந்து பிரிட்டன் சென்றது. எனினு…
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு: பண்ருட்டி ராமச்சந்திரன் தமிழ் இனத்தை காப்பாற்ற தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார். தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் தாக்கப்படுவதை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் மீனவர் பிரச்சினை மிகப்பெரும் பிரச்சினையாக உருமாறி உள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்கள ராணு வத்தால் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். மீனவர்கள் பிரச்சினைக்காக ராமேஸ்வரத்தில் விஜயகாந்த் போராட்டம் நடத்தினார். டெல்லியிலும் உண்ணாவிரதம் இருந்தார். கடலில் அத்துமீறி மீன…
-
- 4 replies
- 932 views
-
-
வியாழக்கிழமை, 12, ஆகஸ்ட் 2010 (22:4 IST) இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்: காயமடைந்த மீனவர் மருத்துவமனையில் அனுமதி கச்சதீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் கண்ணாடி துகள்களால் தாக்குதல் நடத்தினர். இதில் காயம் அடைந்த மீனவர் மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கச்சதீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள், 100 படகுகளில் சென்ற ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை மிரட்டியுள்ளனர். இதில் எஞ்சிய மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில், மீண்டும் வந்த இலங்கை கடற்படையினர் கண்ணாடி புட்டிகளை தூ…
-
- 4 replies
- 957 views
-
-
12 இலட்சம் ரூபாய் வாடகையாக செலுத்துகிறோம் – திருவாய் மலர்ந்தார் விக்கி! வடக்கு மாகாணத் திணைக்களங்கள், அமைச்சுக்கள், அமைச்சர்களின் வதிவிடங்கள் மற்றும் முதலமைச்சர் அலுவலகம் என்பவற்றின் வாடகைக்காக மாதாந்தம் செலவிடப்படும் தொகை 12 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாவெனத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். 25.09.2013 ஆம் திகதியிலிருந்து வடக்கு மாகாணசபை மற்றும் சபை சார்ந்த அமைச்சுக்களின் காரியாலயங்கள், முதலமைச்சரின் காரியாலயம், ஏனைய திணைக்களங்கள் மற்றும் இதர அலுவலகங்களுக்கும் முதலமைச்சர், அவைத் தலைவர், அமைச்சர்களது வதிவிடங்களுக்கும் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கட்டங்கள், வீடுகள் தொடர்பான விடயங்கள், அந்தக் கட்டங்கள், வீடுகளின் விலாசங்கள், உரிமையாளர்களின் ப…
-
- 4 replies
- 547 views
-
-
விடுமுறை காலத்தில் தமது ஊருக்கு வரும் போது வேறுநாடுகளில் பொருட்களை கொள்வனவு செய்யாது போரினால் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள உங்கள் பகுதியில் கொள்வனவு செய்து வருமானத்தினை உயர்வடைய செய்யுமாறு யாழ். மாவட்ட வர்த்தக சங்கத்தலைவர் ஜெயசேகரம் புலம்பெயர் நாட்டில் உள்ளவர்களுக்கு கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். யாழ். பிராந்திய உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர் வருமான வரி செலுத்துபவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேலும் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் தேசிய வளர்ச்சிக்காக வடக்கு வர்த்தகர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பினை வழங்கி வருகின்றனர். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர்…
-
- 4 replies
- 572 views
-
-
7 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் !! 7 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் !! 7 மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று காலை நியமிக்கப்பட்டுள்ளனர். அரச தலைவர் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதிய ஆளுநர்கள் அரச தலைவர் மைத்திரி பால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். மேல் மாகாணத்துக்கு ஹேமகுமார நாணயக்காரவும், வட மேல் மாகாணத்துக்கு – கே.சி. லோகேஸ்வரனும், சப்ரகமுவ மாகாணத்துக்…
-
- 4 replies
- 1.4k views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதை போல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் நோக்கத்திற்காக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதாக குறிப்பிடுகிறார். தெற்கு அரசியல்வாதிகள் இணக்கம் தெரிவித்ததாக வடக்கிற்கு பொய்யுரைக்கிறார். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினை தோற்றம் பெறும். ஆகவே ஜனாதிபதியின் இந்த பாவசெயலில் பங்குதாரராகுவதை தமிழ் அரசியல் தலைமைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்ப…
-
- 4 replies
- 727 views
-
-
ஆஸியிலிருந்தே புலிகளுக்கு பெருமளவு நிதி கிடைக்கிறது-அங்கு வைத்து கொஹன்ன தகவல் விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியில் திரட்டி வரும் பெரும் தொகைப் பணத்தில் ஆறில் ஒரு பகுதி ஆஸ்திரேலியாவிலிருந்தே அவர்களுக்குக் கிடைக்கின்றது. இவ்வாறு ஆஸ்திரேலிய ஊடக காங்கிரஸிடம் தெரிவித்திருக்கின்றார் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளரும், இலங்கை அரசின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் நாயகமுமான பாலித கொஹன்ன. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்திருக்கும் அவர், அங்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றார் என செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. ""புலிகளுக்கு பெருமளவு நிதி கிடைக்கும் வளமான நாடாக ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸியிலிருந்து கிடைக்கும்…
-
- 4 replies
- 2k views
-
-
Sri Lanka must probe war crime: India Eight days after airing Sri Lanka's Killing Fields, the government has finally broken its silence, saying Colombo needs to examine concerns about war crimes. Headlines Today had broadcast a Channel 4 documentary, which showed the horrific way the Sri Lankan Tamils were butchered in the last days of the army's war against the rebels. The documentary has been received with shock and horror across the world with calls for war crime charges against the Sri Lankan army. Now for the first time, India has reacted and demanded a full inquiry by Sri Lanka into what was shown in the documentary. During an interview with …
-
- 4 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவுக்கு மேலதிக ராடார்களை அனுப்பியது இந்தியா: "இந்து" சிறிலங்காவுக்கு ஓராண்டுக்குப் பின்ன்ர் மேஎலதிகமாக ராடார்களை இந்தியா அனுப்பியுள்ளதாக சென்னையிலிருந்து வெளிவரும் "இந்து" நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஓராண்டுக்குப் பின்னர் மேலதிகமான ராடார்களை சிறிலங்காவுக்கு இந்தியா அனுப்பியுள்ளதாக புதுடில்லியில் உள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 2005ஆம் ஆண்டு இரண்டு ராடார்களை இந்தியா சிறிலங்காவுக்கு அளித்திருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் ஒரு இரணுவ ராடாரை சிறிலங்காவுக்கு அனுப்பியது. அதே வகையான ராடார் கடந்த ஜுன் மாதமும் அனுப்பி …
-
- 4 replies
- 1.7k views
-