ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
ஜனாதிபதித் தோ்தலில் தமிழா் தரப்பில் பொது வேட்பாளா் September 29, 2023 தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து வலுவாக பேரம் பேசும் உத்தியாக, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தரப்பின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று(29) தீர்மானித்துள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் கள்ளியங்காடு, கட்டப்பிராயிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் வீட்டில் நடைபெற்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தலைவா் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத் தலைவா் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், ஈழமக்கள் புரட்சிகரிவிடுதில…
-
- 4 replies
- 438 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவினால் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கையர் உட்பட பல்நாட்டு அகதிகள் நவுறு தீவிலிருந்து கம்போடியாவில் குடியமர்த்துவதற்காக அங்கு அனுப்பப்படவுள்ளனர் என அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் கூறியது. கம்போடிய தலைநகரான 'நொம்பென்' இல் குடியேற்றப்படுவதற்காக முதல் தொகுதி அகதிகள் விசேட விமானத்தின் மூலமாக திங்கட்கிழமை அழைத்து செல்லப்படவுள்ளனர். இதற்கான கம்போடியாவும் அவுஸ்திரேலியாவும் இருபக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. கம்போடியாவுக்கு அனுப்பப்படவுள்ளவர்களில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர். நவுறு தடுப்பு முகாம்களிலிருந்து வெளியேறுபவர்கள் சுய விருப்புடன் செல்பவர்களாக இருக்க வேண்டுமென இந்த ஒப்பந்தம் கூறுகின்றது. …
-
- 4 replies
- 930 views
-
-
மிருசுவிலில் சிறுவர்கள் உள்ளிட்ட எட்டுப் பொதுமக்களைப் படுகொலை செய்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு முகநூலில் ஆதரவு பெருகி வருகிறது. போர் வீரர் சுனில் ரத்நாயக்கவைப் பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த முகநூலில், 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இணைந்து கொண்டுள்ளனர். இந்த முகநூலில், தவறிழைத்த சிறிலங்காப் படையினருக்குத் தண்டனை வழங்கப்படுவதற்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்படுவதுடன், மரணதண்டனைக் குற்றவாளியான சுனில் ரத்நாயக்க குற்றமிழைக்காதவர் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஐ.நா விசாரணை அறிக்கை வெளிவரவுள்ள நிலையிலும், சிறிலங்காவில் உள்நாட…
-
- 4 replies
- 308 views
-
-
இனப் பிரச்சினைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் இராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.4k views
-
-
ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன்படி, வீட்டு பாவனை நுகர்வோருக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும் என்றும், இந்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். இதன்படி, 0-30 இற்கு உட்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 8 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும், 30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 9 ரூபாவாகவும், 60-90 இற்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 30 ரூபாயிலிருந்து 18 ரூபாவாகவும், 90-180 அலகுக்கு உட்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 50 ரூபாவிலிருந்து 3…
-
- 4 replies
- 320 views
- 1 follower
-
-
(நா.தனுஜா) இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் யார் தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்குகின்றாரோ, அவரையே ஆதரிப்பது என ஏற்கனவே நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக்கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட நிலையில், தற்போது தமிழரசுக்கட்சி ஆதரிப்பதற்குத் தீர்மானித்திருக்கும் சஜித் பிரேமதாஸ சமஷ்டி தீர்வு குறித்து வழங்கிய உத்தரவாதம் என்ன என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். அதுமாத்திரமன்றி தீர்வு குறித்த எவ்வித உத்தரவாதமுமின்றி சஜித்தை ஆதரிப்பதென கட்சி பிழையான முடிவை எடுத்து அதன்வழி செயற்படுமேயானால், தானும் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிப்பது என்ற சரியான த…
-
-
- 4 replies
- 394 views
- 1 follower
-
-
ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா மீதான தீர்மானம் குறித்த இறுதி நேரப் பரபரப்புகள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்காவிற்கு வலுச் சேர்க்கும் முகமாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் ஜெனிவாவுக்கு நேரடியாக சென்று களத்தில் குதித்துள்ளார். ஹிலாரி தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் குழு தீர்மானத்தை ஆதரிக்குமாறு கோரி ஏனைய நாட்டுப் பிரதிநிதிகளுடன் தீவிர பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது. தீர்மான வரைவின் மீதான வாக்கெடுப்பு நாளை மாலை அல்லது நாளைமறுதினம் காலை இடம்பெறும் என்று உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக இந்தியப் பிரதமர் அறிவித்ததன் பின்னர், வெளி விவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன் நேற்றுமுன்தினம் ஜெனிவாவிற்கு சென்று ச…
-
- 4 replies
- 2.2k views
-
-
முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் சனநாயக வடிவமாகவுள்ள, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு வலுவூட்ட, உலகளாவியரீதியில் உறுதுணைக்குழுக்கள் உருவாக்கம் பெற்று வருகின்றன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை விரிவாக்குவதும், மக்கள் மயப்படுத்துவதும் இந்த உறுதுணைக்குழுக்களின் அடிப்படை நோக்கமாகவுள்ளது. தமிழகத்தில் தோழமை மையமாகவும் மற்றும் சில நாடுகளிலும் இத்தகைய உறுதுணைக்குழுக்கள் ஏலவே தோற்றம் பெற்றிருந்ததன் தொடர்சியாக, தற்போது ஜேர்மன், சுவிஸ், பிரான்ஸ், நோர்வே மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலும் உறுதுணைக்குழுகள் விரிவாக்கம் பெற்றுள்ளன. ஜேர்மன்: ஜேர்மன் பேர்லின் நகரில் உறுதுணைக்குழுவின் அங்குரார்ப்பண கூட்டம் 28-04-12 சனிக்கிழமை இடம…
-
- 4 replies
- 763 views
-
-
மட்டக்களப்பு ஏறாவூர் ஐயங்கேணியில் மேலும் இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மதியம் வெள்ளைவானில் சென்ற பிள்ளையான் அணியினர் இந்த இளைஞர்களைக் கடத்திச் சென்றதாக முஸ்லீம்காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவுத் தெரிவித்துள்ளார். எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து பிள்ளையான் தரப்பில் இருந்து உத்தியோக பதில்கள் வெளிவரவில்லை. இதனை அடுத்து அப்பகுதியிலும் பதட்டம் நிலவுவதாக கூறப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு சிறிலங்காப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது இப்பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பதற்ற சூழ்நிலையினையடுத்தே இப்பிரதேசத்திற்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள…
-
- 4 replies
- 1.1k views
-
-
யுத்ததினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள், தற்போது உரிய மருத்துவ வசதிகள் குறித்த நேரத்துக்குள் கிடைக்காமல் பெரிதும் அவதியுறுகின்றனர். பாம்புக்கடி மற்றும் அவசர தேவையுள்ள நோயாளிகளை குறித்த நேரத்தில் வைத்தியசாலைகளில் சேர்க்க வேண்டிய தேவையும் உள்ளது. இதற்காக மருத்துவ வாகனம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கு கனடிய தமிழ் அமைப்பாகிய Toronto Voice of Humanity முன்வந்துள்ளது. இந்த அமைப்போடு சேவை நோக்கம் உள்ள தமிழ் மக்கள் கை கோர்த்து மக்களுக்கான திட்டம் விரைவில் நிறைவேற உதவி செய்யுங்கள் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. http://www.seithy.co...&language=tamil
-
- 4 replies
- 487 views
-
-
இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் : ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் 2012-11-22 15:26:13 விஸ்வரூபம் திரைப்படம் இலங்கையில் எங்கும் திரையிடக் கூடாது. மீறி திரையிட்டால் குறிப்பிட்ட திரையரங்குகளை முற்றுகையிட்டு மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுப்போமென ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அச் செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கமல்ஹாஸனின் நடிப்பில் வெளிவரவிருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிப்பதாகவும், இஸ்லாமியர்கள் பற்றிய தவறான எண்ணங்களை மக்கள் மத்தியில் விதைப்பதாகவும் எமக்கு செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், திரைப்படத்தின் விளம்பர காட்சி அமைப்ப…
-
- 4 replies
- 857 views
-
-
தமிழர் பகுதிகளில் அரச அராஜகம் நீடித்தால் வீண் விபரீதம் ஏற்படும்! - மூதூரில் இரா.சம்பந்தன் உரை!! 'தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும், அவர்களை அச்சுறுத்தும் விதத்தில் அராஜகங்கள் புரிவதையும் அரச படைகளும், சிங்கள மக்களும் உடன் கைவிடவேண்டும். இல்லையேல் வீண்விபரீதங்களைச் சந்திக்க வேண்டி நிலை ஏற்படும்.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். மூதூர் பிரதேசத்துக்குட்பட்ட படுகாடு, முதலைமடு ஆகிய பகுதிகளில் தமிழ் மக்கள் விவசாயம் செய்த காணிகளை சிங்கள மக்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களைச் சேர்ந்த தமிழ் விவசாயிகள…
-
- 4 replies
- 546 views
-
-
மீண்டும் ஒன்றிணைந்த... ஆளும் கட்சி – தேசிய அரசாங்கத்திற்கு, இணக்கம் ! ஆளும் கட்சியும் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது என்ற பொது நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர். இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கலந்துகொண்டதாக சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார். அத்தோடு உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச உள்ளிட்ட உறுப்பினர்களும் இந்த விடயம் தொடர்பில் பொது நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவர் குறிப…
-
- 4 replies
- 396 views
-
-
பொலிஸ் வாகனங்களுக்கான... எரிபொருள் அளவை, 20 வீதத்தால் குறைக்க நடவடிக்கை! இலங்கையின் அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் வாகனங்களுக்காக பயன்படுத்தப்படும் எரிபொருள் அளவை 20 வீதத்தால் குறைக்குமாறு பொலிஸ்; மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன சுற்றுநிருபம் மூலம் அறிவித்துள்ளார். கடந்த முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொலிஸ் மா அதிபரால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தேவையற்ற மின்விளக்குகள், குளிரூட்டி இயந்திர பயன்பாட்டை நிறுத்துவதற…
-
- 4 replies
- 235 views
- 1 follower
-
-
ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 22, 2010 கொழும்பில் இன்று அருட்தந்தை ஜிம் பிரவுண் அடிகளாரின் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுட்டிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் கடத்தி சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டார் அருட் தந்தை ஜிம் பிரவுண் அடிகளார். இதுவரை காணாமல் போனோர் பட்டியலில் தான் அருட் தந்தை இருக்கின்றார் எனினும் அவர்கொல்லப்பட்டதனை பலர் உறுதி செய்துள்ளனர். கூடவே அவரை கைது செய்ததனை பலர் பார்த்தும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அருடதந்தை ஜிம் பிரவுண் அவர்களின் கடத்தல் தொடர்பில் கத்தோலிக்க சமூகம் மற்றும் குரு பணிமனைகள் மூர்க்கமான நடவடிக்களை எடுப்பதில் இருந்து பிவாங்கி விட்டன என்றே கூற முடியும். ஈழ நாதம்
-
- 4 replies
- 859 views
-
-
கூட்டமைப்பாக பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்போம் – இரா.சாணக்கியன் தேர்தலின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”அதாவது எதிர்வரும் காலங்களில் நடத்தப்பட இருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் நாங்கள் தொழில்நுட்ப ரீதியாக ஆராய்ந்த வகையில் அதிகூடிய ஆசனங்கள் பெரும்பான்மைக் கட்சிகளுக்கோ, ஒட்டுக் குழுக்களுக்கோ போகாத வண்ணம் ஒரு தீர்க்கமான முடிவினை எடுத்த…
-
- 4 replies
- 864 views
-
-
இலங்கைக்கு வெடிபொருள் சப்ளை செய்கிறதா தமிழ்நாடு? - வெடிபொருள் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் பகீர் பேட்டி இலங்கை ராணுவத்திற்கு இந்திய வெடிபொருட்கள் சப்ளையாகி வருவதை, மேலூர் போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதுபற்றி சென்ற இதழில் நாம் விரிவாகவே வெளியிட்டுள்ளோம். இதனை மையப்படுத்தி டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ‘‘இலங்கைக் கடற்படைக்கு வெடிபொருட்களைக் கொண்டு செல்ல அனுமதியளித்திருப்பது வேதனையளிக்கிறது’’ என்று குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகத் தலைவர்கள் சிலர் அதிர்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதற்குப்பதில் அளிக்கும் விதமாக,டெல்லியில் இருந்து கருணானிதி பதில் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில் வெடி பொருள…
-
- 4 replies
- 1.9k views
-
-
தலைவர் எப்போ வருவார் என ஏங்கும் தமிழ் மக்கள் இன்றும் அவர் வருகையை எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள்.ஆனால் சிங்களம் அவர் வந்து விடுவார் என பயத்தில் வாழ்கிறது.உண்மைகள் நெடுங்காலம் தூங்காது நேற்று சிறிலங்கா நடளுமன்றத்தில் தலைவரின் இருப்பு உறுதி செய்யப்பட்டது. ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் முன்வைத்துள்ள யோசனையானது சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறிய அதிகாரங்களை கூட பறித்து கொள்ளும் யோசனைகள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவிக்கும் போதே தலைவர் பற்றிய உண்மையையும் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துரலியே ரத்ன தேரர் முன்வைத…
-
- 4 replies
- 2.6k views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வரலாறு காணாத தோல்வியடையப்போகிறார் என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார். மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள திவி நெகும பயனாளிகளுக்கு வீடு திருத்துவதற்கான 2,500 ரூபாய் முதற்கட்ட கொடுப்பனவு வழங்கும் வைபவம் அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் சனிக்கிழமை (22) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆசியாவின் ஆச்சிரியம் மிக்க நாயகனாக திகழ்கின்றார். அவருடன் எத்…
-
- 4 replies
- 642 views
-
-
ஜ குமுதம் ஸ - ஜ ஆயச 24இ 2007 05:00 புஆவு ஸ இந்த முறை ஒரு முடிவோடுதான் சிலோன் நேவிக்காரர்கள் சுட்டிருக்கிறார்கள்’’ திகிலில் உறைந்து போய்க் கிடக்கும் பாம்பன்இ மண்டபம் மீனவர்கள் பேசிக் கொள்வது இப்படித்தான். துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகுஇ துணிந்து மீன் பிடிக்கப் போக மனமின்றிஇ படகுகளைச் சீர் செய்தபடியும்இ வலைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டுமிருந்தனர்இ அந்தப் பகுதி மீனவர்கள். தாக்குதலில் பலியான கிறிஸ்டோபர் என்ற மீனவரோடு படகில் சென்ற தாசன் என்ற மீனவர்இ குண்டு காயங்களோடு மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார். ‘‘செவ்வாய்க்கிழமை காலையில கிளம்பறோம். நாலு நாளு தங்கி பாடு பார்க்கலாம்னு திட்டத்தோட போனோம். வியாழக்கிழமையன்றைக்குக் சாயங்காலம் ஒரு அஞ்சரை மணியிருக்கும்இ வல்ல…
-
- 4 replies
- 2.3k views
-
-
துள்ளிக் குதிப்பவர்கள் இதைக் கொஞ்சம் கேளுங்க http://www.pathivu.com/?ucat=alasal&file=300307
-
- 4 replies
- 2.5k views
-
-
எனது கணவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்டடு அவர் உயிருடன் இருந்த பொழுது 2005ம் ஆண்டு பிரித்தானியாவில் பெயர்மக்ஸ் பதிப்பகத்தின் வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்ட ''போரும் சமாதானமும்'' என்ற தமிழ் நூல் தற்போது இந்தியாவில் ''தமிழர் தாயகம் வெளியீடு'' என்றழைக்கப்படும் நிறுவனத்தினால் மீள்பிரசுரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ''தமிழர் தாயக வெளியீடு'' என்ற குறிப்பிட்ட நிறுவனத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதோடு, எனது கணவரின் எழுத்தாக்கங்கள் அனைத்துக்மான காப்புரிமையைக் கொண்டவராக எனது அனுமதியின்றியே இந்நூலை சம்மந்தப்பட்ட நிறுவனம் மீள்பிரசுரம் செய்துள்ளது என்பதை அனைவரின் கனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன் என திருமதி. அடேல் …
-
- 4 replies
- 2.4k views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் மீண்டும் அந்தப் பதவியை பெறுவதற்காக குரல் கொடுக்கத் தலைப்பட்டுள்ளார்.அதற்காக அவர் சபாநாயகர் கரு ஜயசூரிய மீது குற்றம் சுமத்தவும் தலைப்பட்டுள்ளார். நடப்பில் உள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டிய இரண்டாவது நபர் சபாநாயகர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.இதை நாம் கூறும் போது அப்படியானால் முதல் நபர் யார் என்ற கேள்வி எழும். முதலாம் நபர் மீள் குடியேற்ற அமைச்சராகவிருந்த டி.எம்.சுவாமி நாதன் ஆவார். அவர் மீள்குடியேற்ற அமைச்சராகவிருந்த போது அவர் மீது கடும் குற்றச்சாட்டுக்களை கூட்டமைப்பினர் முன்வைத்தனர். இப்போது சபாநாயகர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளத…
-
- 4 replies
- 1k views
-
-
ரணிலை இரகசியமாக சந்திக்கும் பொன்சேகா! சரத் பொன்சேகா இரவு நேரங்களில் டயனா கமகேவின் வீட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமது பணி இடைநிறுத்தம் மற்றும் பதவி நீக்கத்தை தடுக்குமாறு சரத்பொன்சேகா நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளார். சரத் பொன்சேகாவிடம் நாம் ஒர…
-
- 4 replies
- 705 views
-
-
உலகத் தமிழர்களின் ஒரு பகுதியாக பிரான்சின் ஆளுகைக்கு உட்பட்ட றெயூனியன் தீவுத் தமிழர்கள் புத்தாண்டுப் பெருவிழாவை வழமைபோல் ‘காளிப் பெருவிழாவாக’ கொண்டாடியுள்ளனர். http://naathamnews.com/2012/01/02/tamil-diaspora/
-
- 4 replies
- 1.1k views
-