ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
மூன்று போர் கப்பல்களில் 715 சீன கடற்படையினர் அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட இலங்கை வருகை (லியோ நிரோஷ தர்ஷன்) வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக சீன கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளை கருத்தில் கொண்டு தேவையான உதவிகளை வழங்குவதற்காக சீன அரசாங்கம் இந்த மூன்று கப்பல்களை அவசரமாக இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. நல்லெண்ணப் பயணமாக கொழும்பு வரத் திட்டமிட்டிருந்த இந்தப் போர்க் கப்பல்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நி…
-
- 4 replies
- 606 views
-
-
வடக்கிலிருந்து இராணும் வெளியேற்றப்படும் எனவும் இராணுவம் இருக்கும் இடங்களில் மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்ததால் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்துள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்த நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலம் தாழ்த்தாது தமது கருத்துக்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இராணுவம் தமிழ் தாயகத்தை விட்டு வெளியெற வெண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்பதை அவர் ஒத்துக் கொண்டுள்ளார். அவரது சகாக்களான பசிலும் கோத்தபாயாவும் வீரவன்சவும் வடபகுதியில் படையினர் மக்களைப் பாதுகாப்பததாகவும் படையினர் இருப்பதை மக்கள் விரும்பு…
-
- 4 replies
- 1k views
-
-
தனது அடிப்படை உரிமை மீறப்பட்டிருப்பதாக பொன்சேகா தாக்கல் செய்த மனுவை ஏற்று விசாரணை நடத்துவதென கொழும்பு உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இது குறித்து இன்று ஆராயப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிமன்றப் பதிவாளர் இந்த விசாரணை இம்மாதம் 23ம் திகதி நடைபெறும் எனவும் தெரிவித்தார். இலங்கையின் நீதி முறையின் படி இது போன்ற வழக்குகளை விவாதிப்பதா இல்லையா என்பதை முதல் நாள் அமர்வின் போது நீதிமன்றம் தீர்மானிப்பது வழக்கம். http://www.eelamweb.com/
-
- 4 replies
- 1k views
-
-
காணிக் கிணற்றினுள் கன நேரமாகப் பதுங்கியிருந்த பெண்; அதிர்ச்சிக் காரணம்! யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் பெண்ணொருவர் நீண்ட நேரமாக கிணற்றினுள் பதுங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் வங்கி ஊழியர்களுக்கு பயந்து நான்கு மணி நேரமாக குறித்த பெண் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, குடும்பத்தின் கஸ்ட நிலை காரணமாக வடமராட்சி பகுதியில் ஒரு குடும்பப் பெண் 3 நிதி நிறுவனத்திடம் இருந்து கடனை பெற்றிருந்தார். அதற்காக வாராந்தம் பணத்தை செலுத்தி வந்துள்ளார். பின்னர் அவரால் தொடர்ந்தும் செலுத்த முடியாமல் போன போது, இரு வாரங்களின் பின்னர் 3 நிதி நிறுவனங்கள…
-
- 4 replies
- 533 views
-
-
ஏக்கிய ராஜ்ஜியவுக்கு ஒரு மித்தநாடு எப்படிப் பொருந்தும் ? FacebookTwitterPinterestEmailGmailViber சிங்கள மக்களில் பெருவாரியா னோர் ஏக்கிய ராஜ்ஜிய சொல்லுப் பயன்படுத்தவேண்டும் என்று சொல்லுகிறார்கள். அதை ஏன் பயன்படுத்தவேண்டும் என்று கேட்டால் நாடு ஒருமித்து இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். அவர்கள் நாட்டின் ஆட்சிமுறை ஒற்றையாட்சியாக மையத்தில் அதிகாரங்கள்கு விக்கப்பட்டதாக – இருக்கவேண்டும் என்று ஒரு போதும் கூறவில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் சார்பில் வழி நடத்தற் குழுவில் பங்கேற்கும் உறுப் பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சி கிழக்குக் குடத்தனை அரசினர் தமிழ…
-
- 4 replies
- 619 views
-
-
சமாதான நடவெடிக்கையில் சகல தரப்பினரும் இனைந்து தீர்வுகாணவேண்டும் - நிருபமாராவ் இன்று இந்தியாவின் 57வது சுதந்திரதினம் கொழும்பிலுள்ள உயர் ஸ்தானிகர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பிரதம அதிநிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய நிருபமாரவ் சகலதரப்பினரும் இணைந்து தேசிய பிரச்சனைக்கான தீர்வை காணவேண்டும் என இந்தியா அறிவுருத்தியுள்ளதாக தெரிவித்தார்.. சகல தரப்பினரும் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா உதவுவதாகவும் . இரத்தம் சிந்தாமல் தீர்வு வெகுசீக்கிரம் எட்டப்படும் என மேலும் தனது உரையில் தெரிவித்தார்.. http://www.virakesari.lk/vira/html/head_vi...ew.asp?key=1778
-
- 4 replies
- 1.6k views
-
-
கறவை மாடுகளைத் தவிர வேறெந்த சொத்துக்களும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு இல்லையாம்! – நம்பச் சொல்கிறார் பசில். [Friday 2014-10-03 09:00] ராஜபக்ச குடும்பத்திற்கு கறவை மாடுகளைத் தவிர வேறெந்தச் சொத்துக்களும் கிடையாது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை பால் பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நெஸ்லே நிறுவனம் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “என்னைப் போன்றே எனது தந்தையும் ஒர் பால் பண்ணையாளர். எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் தோட்டங்கள், ஹோட்டல்கள் மற்றும் கம்பனிகள் காணப்படுவதாக சிலர் குற்றம்சுமத்தி வருகின்றனர். …
-
- 4 replies
- 445 views
-
-
பிரித்தானியாவிலிருந்து இலங்கை நோக்கி வந்த விமானத்தில் பிரித்தானிய யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியர்களான குறித்த யுவதியும், யுவதியின் காதலனும் 3 வாரகால சுற்றுலா வீசா மூலம் நேற்று மாலை லண்டனிலிருந்து இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் பயணித்து கொண்டிருந்த போதே யுவதி மீது குறித்த நபர் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டுள்ளார். இச் சம்பவத்தில் 27 வயதுடைய எலினா பரீல் என்ற யுவதியே பாதிக்கப்பட்டதுடன், 41 வயதுடைய பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்ற இலங்கையரே கைது செய்யப்பட்டவராவார். குறித்த சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்…
-
- 4 replies
- 597 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் மைக்கேல் கிறிம் புதிய மிகவும் காத்திரமான தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புக்களுக்கு ஆதரவுகளை வழங்குதல், மீள்குடியேற்றம் மற்றும் நல்லிணக்கப்பாட்டுக்கு உதவிகளை வழங்கு ல் என்பன அமைதியை ஏற்படுத்துவதற்கான காத்திரமான செயற்பாடுகள்.எனினும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்தவேண்டும் என காங்கரஸ் உறுப்பினர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கைகள், அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் மனித உரிமை அறிக்கை, ஐ.நா போர்க்குற்ற ஆலோசனைக் குழுவின…
-
- 4 replies
- 855 views
-
-
நவீனமயமாகும் யாழ் வீதிகள் June 2nd, 2011 nila யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியிலிருந்து நல்லூர் பாரதியார் சிலை சந்தி வரை செல்லும் அரசடி வீதியின் ஒரு பகுதி கார்ப்பெட் வீதியாக மாற்றப்பட்டு வருகிறது. யாழ் பலாலி வீதி கந்தர்மடம் சந்தியிலிருந்து நல்லூர் பக்கமாக இந்த அரசடி வீதி கார்ப்பெட் வீதியாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கார்ப்பெட் வீதி அமைக்கும் பணி நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று மாலையளவில் கந்தர்மடம் சந்தி வரையிலான பகுதி கார்ப்பெட் வீதியாக மாற்றப்பட்டுவிட்டதாக யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஏற்கனவே, நல்லூர் சங்கிலியன் தோப்புப் பகுதியிலிருந்து செம்மணி ஊடாகச் செல்லும் செம்மணி வீதியை கார்ப்பெட் வீதியாக்கும் பணி நடைபெற்றுள்ளது. சங்கிலியன் தோப்பு பகுதி…
-
- 4 replies
- 1.7k views
- 1 follower
-
-
சனிக்கிழமை, 25 ஜூன் 2011 10:44 பிரிந்து நின்ற ரெலோ கட்சிகளை ஒன்றிணைந்து ஒரே தலைமையின் கீழ் மீண்டும் ரெலோவின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இது குறித்த முக்கிய கலந்துரையாடல் கடந்த வாரம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் முக்கியஸ்தருமான வினோ நோதராத லிங்கம் கடந்த மாதம் லண்டனிற்கு பயணமாகியிருந்தார். அங்கு ரெலோவின் முன்னாள் உறுப்பினர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். ரெலோவின் பிரிந்து நிற்கும் ரெலோ உறுப்பினர்களை ஒன்றிணையுமாறு புலம்பெயர் ரெலோ உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையினை அடுத்து மூன்று பிரிவினரையும் ஒன்…
-
- 4 replies
- 1.2k views
-
-
வடமாகாண சபையில் இனவழிப்பு பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த 10ம் திகதி இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது. சர்வதேச விசாரணையில் சிறிலங்காவில் 1948ம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் தமிழின அழிப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் கொண்டு வரப்பட்ட இந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை ஏற்க மறுத்து வந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், தற்போது அதனை வரவேற்றுள்ளார். எனினும் இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்தில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.http://www.pathivu.com/news/37753/57//…
-
- 4 replies
- 657 views
-
-
600 பொலிஸாருக்கு நடந்த கதி தொடர்பில் விசாரணை ஆரம்பம்; பொலிஸ் மா அதிபருக்கு ஆணைக்குழு அழைப்பாணை காணாமற்போனவர்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, அம்பாறையில் 600 பொலிஸார் காணாமற் போனமை குறித்த தனது விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளது. இதற்காக பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனை எதிர் வரும் 22ஆம் திகதி ஆணைக் குழுவுக்கு வருகை தருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டமையை ஆணைக்குழு வட்டாரங்கள் "உதயன்' பத்திரிகையிடம் உறுதிப்படுத்தின. இறுதிப் போரின் போது பல ஆயிரக் கணக்கானவர்கள் காணாமற் போயுள்ளனர். அரச புள்ளிவிவரங்களின் படி சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு என்ன நடந்தது என்று…
-
- 4 replies
- 614 views
-
-
என்னை வாழ விடுங்கள்! ஊடகங்களிடமும், பொதுமக்களிடமும் யசாரா வேண்டுகோள் அநாவசிய தொந்தரவுகள் இன்றி தன்னை, தன்பாட்டில் வாழவிடுமாறு யசாரா அபேநாயக்க ஊடகங்களிடமும், பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாம் புதல்வன் யோசித்த ராஜக்ச மற்றும் படுகொலை செய்யப்பட்ட றக்பி வீரர் வசீம் தாஜுடீன் ஆகியோரின் முன்னாள் காதலி என்று அறியப்பட்டுள்ள யசாரா அபேநாயக்க, இது தொடர்பாக தனது பேஸ்புக் ஊடாக ஒரு வேண்டுகோளை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நான் ஒருவிடயம் குறித்து உங்களுடன் கருத்துப் பரிமாறிக் கொள்ள விரும்புகின்றேன். …
-
- 4 replies
- 1.5k views
-
-
400 மில்லியன் பெறுமதியான 350 யானை தந்தங்கள் தீமூட்டி அழிக்கப்படுவதை பார்வையிட உள்ளனர் 400 மில்லியன் பெறுமதியான 350 யானை தந்தங்கள் தீமூட்டி அழிக்கப்படுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் காலிமுகத்திடலில் ஜனவரி 26 ம் திகதி நேரில் பார்வையிடவுள்ளனர். 2012 இல் கைப்பற்றப்பட்ட 1.5 தொன் யானைதந்தங்களை உலக சுங்க தினமான ஜனவரி 26 ம் திகதி இலங்கை சுங்கத் திணைக்களம் காலிமுகத்திடலில் தீமூட்டி அழிப்பதற்கு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கென்யாவிலிருந்து கொழும்பு ஊடாக துபாய்க்கு கடத்தப்பட்டவேளை இலங்கை சுங்கத்துறையினர் இந்த தந்தங்களை கைப்பற்றியிருந்தனர். இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளிற்கு அமைய இந்த தந…
-
- 4 replies
- 762 views
-
-
[size=6]இலங்கையை மையப்படுத்தி பனிப் போர் மோகம் சூழ்கிறது[/size] [size=4]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் போன்று இது வெளிப்படையாக உணரப்படாத போதிலும் ஒழுங்குமுறையில் இந்தியாவும் சீனாவும் பயங்கரமான விதத்தில் இலங்கையில் பலப்பரீட்சையில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது.[/size] [size=2] [size=4]எங்களில் எவருக்கும் வெளிப்படையாகத் தெரியாதபோதிலும் நாங்கள் எவரும் அறியாத விதத்தில் இலங்கையை மையப்படுத்தித் தற்போது பனிப்போரொன்று உருவாகி வருகிறது. இந்தப் பனிப்போரில் சீனாவும் இந்தியாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளன.[/size][/size] [size=2] [size=4]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் போன்று இது வெளிப்படையாக உணரப்படாத போதிலும் ஒழுங்கு முறையில் இந்தியாவும் சீனாவும் பயங்க…
-
- 4 replies
- 974 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போலி அரசியலையே நடத்திவருகின்றது.! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது போலி அரசியலையே நடத்திவருகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல்வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான பொய் அரசியலை நடத்துகின்றது என்பது உங்களுக்கு தெரியும். நான் 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினேன். 20 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவருகின்றேன். இக்காலப்பகுதியில் சம்பந்தன் ஒரே கதையைத்தான் மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். ஹ…
-
- 4 replies
- 1.1k views
-
-
இனவழிப்பு செயற்பாடு குறித்து சர்வதேசத்தின் பதில்தான் என்ன? [06 ஜனவரி 2009, செவ்வாய்க்கிழமை 9:50 மு.ப இலங்கை] கிளிநொச்சியை அரசுப் படைகள் கைப்பற்றியமையை ஒட்டி தென்னிலங்கைச் சிங்களவர்கள் வெடி கொளுத்தி, இனிப்புப் பரிமாறி, பால்சோறு பொங்கிக் கொண்டாட, மறுபுறத்தில் தலைநகரிலும் மேல்மாகாணத்தின் ஏனைய இடங்களிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழர்கள் வரிசையாகக் காத்து நின்றனர் - தம்மைப் பொலிஸில் மீண்டும் மூன்றாவது தடவையாகப் பதிவு செய்வதற்காக. தமிழர் தேசம் கைப்பற்றப்பட்டமையை ஒட்டி, சிங்கள தேசம் ஆரவாரித்துக் கொண்டாடி மகிழ்கையில் - அந்த நேரம் பார்த்து - இந்தப் பதிவுக்கான அழைப்பைத் திடீரென விடுத்து, அதை முன்னெடுத்தமை ஈழத் தமிழரின் நெஞ்சத்தில் ஆழப் பதியும் விதத்தில் ஆப்பு இறக்…
-
- 4 replies
- 1.1k views
-
-
தென்மராட்சி வரணிப் பகுதியில் வீடு புகுந்து குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கொடிகாமம் பொலிஸார் தயக்கம் காட்டி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த மாதம் 19 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் நபர் ஒருவர் பொல்லு கோடரியோடு வீடு புகுந்து வீட்டிலிருந்த பெண் ஒருவருக்கும் வயோதிபர் இருவருக்கும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதுடன் வீட்டுப் பொருட்களையும் கோடாரியால் தாக்கி சேதப்படுத்தியுள்ளார். குறித்த தாக்குதலுக்கு உள்ளானவர்கள் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் கொ…
-
- 4 replies
- 977 views
-
-
முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும்-சுமந்திரன் வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்கு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா நீதிமன்றத்திற்கு இன்று வந்த நிலையில் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது 1957ஆம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்தத்தில் இருந்து வருகின்ற…
-
- 4 replies
- 782 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான திலீபன் உண்ணாவிரதம் காரணமாக உயிரிழக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். நோய் காரணமாகவே திலீபன் உயிரிழந்தார் என கமால் குணரட்ன குறிப்பிட்டுள்ளார். ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து 1987ம் ஆண்டில் திலீபன் 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர் நீத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பூசா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் கைதிகள் தொடர்பில் இன்றைய தினம் கண்டியில் வைத்து கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… “பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இந்த நாட்டின் மிகப் பெரிய குற்றவாளிகளாவர். இந்தக் கைதிகளின் கோரிக்…
-
- 4 replies
- 986 views
-
-
கழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு பதவி உயர்வு லண்டனில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக 04.02.2018 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ் மக்களைப் பார்த்து ‘கழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு சற்றுமுன்னர் மற்றொரு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனிலும் இராஜதந்திர வட்டாரங்களிலும் மிகுந்த சர்ச்சைக்குள்ளான பிரியங்க பெர்ணாட்டோவை இலங்கைக்கு வரவழைத்த சிறிலங்கா இராணுவத் தலைமை அவரை, சிறிலங்கா இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக (General Officer Commanding, 58 Division) மேஜர் ஜெனரல் தர பதவிநிலைக்கு உயர்த்தியிர…
-
- 4 replies
- 752 views
-
-
அம்பலமாகியது வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடிகள் கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் அமைந்துள்ள வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று, அவை தற்போது வட மாகாண கணக்காய்வுத் திணைக்களத்தினரால் விசாரணை செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலை அமைக்கும் காலத்திலிருந்து இன்றுவரை கட்டுமானப் பணிகள் பொருட் கொள்வனவு, உணவு வழங்கல் உள்ளிட்ட பல விடயங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளன. மேற்படி முறைகேடுகள் தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளாருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இந்த முறைகேடுகள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதனையடுத்து தற…
-
- 4 replies
- 853 views
-
-
சிறிலங்காவின் கடற்படை அதற்கு எனத் தனியான வானூர்திப் பிரிவு (Air wing) ஒன்றை எதிர்காலத்தில் அமைப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசார சமரசிங்க, ஏவுகணை வசதிகளையுடைய கப்பல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் சிறிலங்கா கடற்படை திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார். "போர் இப்போது முடிவடைந்துவிட்டாலும் கூட, சிறிலங்கா கடற்படையினரால் வெறுமனே துறைமுகத்துக்குள் முடங்கிக் கிடக்க முடியாது" எனவும் குறிப்பிட்ட புதிய கடற்படைத் தளபதி, "கடற்படையானது கடலிலேயே நிற்கும்" எனவும் தெரிவித்தார். தனது புதிய பதவியை நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட அவர், இன்று வியாழக்கிழமை முதன் முறையாக ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாடினார். அத…
-
- 4 replies
- 602 views
-
-
பிரபாகரன் சரணடைய விரும்பவில்லை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய கேசரிக்கு விசேட செவ்வி நேர்காணல்:- ஆர்.ராம் படப்பிடிப்பு:- உதேஷ் இந்திக்க இந்திய அமைதிப்படையினருக்கு எதிரான யுத்தத்தினை ஆரம்பித்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த பின்னரே நிறுத்தினார். முப்படையையும் வன்னி நிலப்பரப்பு நிருவாகத்தினையும் கொண்டிருந்த அவர் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை. ஆயுதங்கள் மூலம் வெற்றி பெறலாம் என்பதே அவரது மனோநிலை. யுத்தத்தின் இறுதியில் கூட கே.பி. அவரை வெளியேறுமாறு கோரினார். அதற்கு அவர் இணங்கவில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் சரணடை…
-
- 4 replies
- 841 views
-