Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை! நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கொழும்பு, கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவை கைது செய்து நீதிமன்றில் முன்னலைப்படுத்த இன்று உத்தரவிட்டார். https://athavannews.com/2025/1457050

  2. மது, புகைத்தல் மற்றும் போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள்:- யாழ் நகர பிரபல பாடசாலைகளில் மது, புகைத்தல் மற்றும் போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் யாழ் மேல் நீதிமன்றம் எச்சரிக்கை யாழ் நகர்ப்புறத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் போதை வஸ்து பாவனை சில மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், பாடசாலை நேரத்தில் போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களில் மாணவ்கள் ஈடுபடுவதாகவும் அத்தகைய மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வியாழனன்று எச்சரிக்கை செய்துள்ளது. நூறு கிலோ கஞ்சா உடைமையில் …

    • 4 replies
    • 571 views
  3. வடக்கு மக்கள் கொழும்புக்கு சென்று முறைப்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை – ஐ.நா வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013 12:36 | கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் வடக்கு மக்கள் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு கிளையில் முறைப்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தொடர்பு கொள்வதற்கு வேறும் பல்வேறு வழிகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது. அண்மையில், கடத்தப்பட்ட காணாமல் போனோரின் உறவினர்களினால் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்வதற்காக வவுனியாவிலிருந்து புறப்பட்ட மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளிக்க திட்டமிட்டிருந்தனர…

    • 4 replies
    • 698 views
  4. அவிழ்ந்து போன திமுகவின் கோமணத்தை டெசோ மூலம் மறைக்க நினைக்கும் தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கலைஞர் என்கிற திருட்டு கபோதியின் யோக்கியதையை படியுங்கள் தோழர்களே !! கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம். *1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கு…

  5. இந்தியாவுக்கு மஞ்சளை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மஞ்சள் அடங்கிய கொள்கலன்களை மீள இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய தீர்மானித்துள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்க பணிப்பாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சுங்க திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டு, களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 62 மஞ்சள் அடங்கிய கொள்கலன்களை, மீள இந்தியாவுக்கு அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளோம். இந்தியாவிலிமிருந்து அபராதத் தொகையை அறவிட்டு, அதனை இந்தியாவுக்கே மீள் ஏற்றுமதி செய்யவுள்ளோம். மேலும், கைப்பற்றப்பட்டுள்ள கொள்கலன்களில் 1 மில்லியன் கிலோ கிராம் மஞ்சள் காணப்படுகின்றது. அத்துடன் இந்…

  6. சிறிலங்காவின் பாணந்துறை நீதிமன்றம் விசித்திரமான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட நபரொருவரைக் கைது செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் இவரைக் கைது செய்ய முடியவில்லை என பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து குறித்த நபரைத் தன்னால் கைது செய்து நீதிமன்றில் ஒப்படைக்க முடியும் என தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் முன் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தக் கைதியை பிணையில் விடுதலை செய்த பாணந்துறை நீதிபதி ரங்க திசாநாயக்கா இரு வாரங்களில் குறித்த நபரைக் கைது செய்து நீதிமன்றிடம் கையளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பு சட்டவாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. SOURCE: http://eelamweb.com

  7. இந்தியாவின்... ஒரு பில்லியன் டொலர் கடனில், இரும்பு இறக்குமதி: ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை என்கின்றது நிதி அமைச்சு அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலரில் இரும்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக நிதி அமைச்சு விளக்கமளித்துள்ளது. வங்கி அமைப்பு மற்றும் வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு காரணமாக உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதில் பல சிரமங்களை இறக்குமதியாளர்கள் எதிர்கொண்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது. இந்தியாவின் கடனின் கீழ் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ($ 300 மில்லியன்), மருந்து ($ 200 மில்லியன்) மற்றும் தொழில்துறை மூலப்பொருட்கள் ($ 500 மில்லியன்) இறக்குமதிக்காக ஆரம்பத்தில…

  8. போதனை வேண்டாம் திருமலை மாவட்டம் கோமரங்கடவலையில் ஆறு சிங்கள விவசாயிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக விடுதலைப் புலிகள் மீது சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் குற்றம் சாட்டியுள் ;ளார். அவர் பி.பி.ஸிக்கு வழங்கிய பேட்டியில் விடுதலைப்புலி களே இப்படுகொலைகளைப் புரிந்தனர் எனத் தெரிவித்துள்ளார். இதில் உள்ள வினோதம் என்னவெனில் இக்கொலைகள் குறித்து அவர் முதலில் தெரிவிக்கும் போது இத்தகைய சம்பவம் இடம் பெற்றதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது குறித்து உறுதி செய்யப்பட்டு மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்திருந்தார். அதாவது அப்பேட்டி வழங்கப்படும் போது இக்கொலைகள் குறித்த தகவலை அவரால் முழுமையாக ஊர்ஜிதம் செய்யமுடியவில்லை. ஆனால் இக்கொலைகளை விடுதலைப் புலிகளே செய்தா…

  9. புதன்கிழமை, நவம்பர் 10, 2010 அண்மைக்காலமாக இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீது உருவாக்கப்படும் கருத்துருவாக்கத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் பதில் அளித்துள்ளனர். இந்திய உள்துறை அமைச்சருக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் எழுதியுள்ளதாக கூறப்படும் கடிதம் அவர்களது உத்தியோகபூர்வ தளத்தில் இடப்பட்டுள்ளது. முழுமையான கடிதத்தினை பார்க்க இதனை அழுத்துக: http://www.viduthalaipulikal.net/index.php?option=com_content&view=article&id=58:letter-to-indian-gov&catid=28:report&Itemid=2 அதன் தமிழாக்க சுருக்கம் வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய நாம் எம் ஆயுதப்போராட்டத்தினை 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 அம் திகதி மெளனிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து இன…

  10. குமரன் பத்மநாதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்ளத் தயார் – பிரதமர் : 13 பெப்ரவரி 2011 Bookmark and Share குமரன் பத்மநாதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்ளத் தயார் – பிரதமர் : தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்ளத் தயார் என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் குமரன் பத்மநாதனுக்கு கட்சி அங்கத்துவம் வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தும் நோக்கம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். புலிகளுக…

  11. முல்லைத்தீவில் தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்ட வகையில் அபகரிப்பு !! முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எல்லைக் கிராமமான கருநாட்டுக் கேணியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்து. குறித்த பகுதியில் பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள தமிழர்களுக்குரிய காணிகளே அபகரிக்கப்பட்டு 180 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் இந்த சிங்கள குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் குறித்த காணிகளை பார்வையிடுவதற்கு, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு ம…

    • 4 replies
    • 414 views
  12. கோத்தாபய திறந்த சர்ச்சைக்குரிய வங்கிக்கணக்கில் 13.2 பில்லியன் ரூபா JAN 19, 2015 | 1:19by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சர்ச்சைக்குரிய வகையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் பேணப்பட்டு வந்த தனியான வங்கிக் கணக்கு ஒன்றில் இருந்த 13.2 பில்லியன் ரூபா பணத்தை, திறைசேரிக்கு மாற்றும்படி சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உத்தரவிட்டுள்ளார். இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையில், இந்த வங்கிக் கணக்கு பேணப்பட்டு வந்தது. இத்தகைய வங்கிக் கணக்கை தனியாக பேணுவதற்கு பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகாரம் இல்லை என்றும், இந்த வங்கிக் கணக்கு விடயத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில், இந்த வங…

  13. கரேன் பார்க்கர் கனடாவைச் சேர்ந்த சட்டநிபுணர். மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களில் தேர்ந்தவர். பொருளாதார ஒதுக்கீடுகள், ஆயுதங்கள் மற்றும் சுற்றுச் சூழல் குறித்து உலகளாவிய சட்டங்கள் உருவாக காரணமாக இருந்தவர். 1982இல் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் அமைப்பை உருவாக்கி;ச் கடந்த 20 ஆண்டு காலமாக அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். இலங்கை இனச் சிக்கலுக்கு நல்ல முறையில் தீர்வு காணும் நோக்கத்தோடு, மனித உரிமை சட்டங்கள் குறித்த ஜெனிவா தீர்மானங்களை பின்பற்றும் வகையில் இலங்கை அரசுடனும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடனும் பல சுற்று பேச்சுக்கள் நடத்தியுள்ளார். கடந்த மார்ச் 2007இல் கரேன் பார்க்கரை "தமிழ் மிர்ரர்" இதழ் கண்ட பேட்டி கே : அண்மையில் மீண்டும் திரிகோணமலையில் …

  14. சனிக்கிழமை , ஆகஸ்ட் 13, 2011 இன்று மலையகத்தில் இரண்டு கிறிஸ் பூதங்கள் பிடிபட்டன பொதுமக்கள் அவைகளை தாக்கும் போது சிங்களத்தில் ஓலமிட்டன.சிறிலங்காவில் இப்போ சிறுபான்மை இன மக்களை கலக்கி வருவது கிறிஸ் பூதங்கள் எனும் மாயாவிகள்.ஆரம்பத்தில் மலையகத்தில் தோட்டப்பகுதிகளில் தமிழ் பெண்களை இலக்கு வைத்த கிறிஸ் பூதங்கள் இப்போ கிழக்கு மாகாணம் திருக்கோவில், பொத்துவில் போன்ற தமிழ் , முஸ்லிம் மக்களையும் இலக்கு வைக்கின்றது. . ஆனால் இந்த கிறிஸ் பூதம் தொடர்பில் பொலிசார் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. பொதுமக்கள் சில சந்தேகப்பேர்வழிகளை பிடித்துக்கொடுத்தாலும் அவர்களை இராணுவம் மற்றும் பொலிசார் விடுவித்து வருகின்றனர். . இதனால் சிறுபான்மை மக்களுக்கு பீதியும் சந்தேகமும் …

  15. [saturday, 2011-10-22 11:58:20] "பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கு." இது பாரதிதாசன் வரிகள். கனடியத் தமிழருக்காகவே அன்று எழுதி வைத்தார் போலும். கனடியத் தமிழர் துணிச்சலுடனும் ஒற்றுமையுடனும் உற்சாகத்துடனும் செயற்பட வேண்டிய தருணமிது. "பொங்கு தமிழ்" ரொறன்ரோவில் நிகழவுள்ளதாக அறியப்பட்டவுடனேயே அதற்கெதிராக செயற்படத் தொடங்கி விட்டனர் இங்குள்ள உள்ள மகிந்த அரசின் கைக்கூலிகள். இதனை நிகழவிடாமல் செய்வதற்கு அனைத்து வழிகளையும் - சாம பேத தான தண்டம் அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். புலம்பெயர் தமிழரின் அரசியல் அழுத்தம் காரணமாக மகிந்தவின் இனவெறி அரசு மேற்குலகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படுவதுடன் சர்வதேச போர்க்குற்ற விசாரண…

  16. 16 JUL, 2024 | 01:56 PM நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் அறிவித்துள்ளார். மேற்படி நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா 2024 ஆம் ஆண்டிற்கான புற ஏற்பாடுகள் முதலாவது கலந்துரையாடலானது மாநகர ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரனின் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ்மா அதிபர், நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்துச் சபை, யாழ் மாவட்ட தனியார் பஸ் சங்கம், பிரதேச செயலகம் நல்லூர், இலங்கை…

  17. மற்றுமொரு முள்ளிவாய்க்காலா இடிந்தகரை...?: கொளத்தூர் மணி [Photos] எல்லா மாநிலங்களிலும் விரட்டியடிக்கப்பட்டதால் அணுமின்நிலையத்தை தென்தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளத்தில் நிறுவ மத்திய அரசு முடிவெடுத்தது. அன்றிலிருந்து இந்த அணுஉலைக்கு எதிராகப் போராடி வரும் மக்கள் 2011இல் புகுசிமாவில் நடந்த அணுஉலை பேரழிவிற்குப்பின் மேலும் உறுதியாகப் போராடிக்கொண்டிருக்கின்றனர். மக்களின் உணர்வைப் புரிந்து செயல்படுவதாக “மக்களின் அச்சத்தைப் போக்காமல் மத்திய அரசு கூடங்குளம் அணுஉலையை திறக்கக்கூடாது” என்று முதல்வர் முன்மொழிந்து தமிழகசட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு நேரெதிராக இன்று மக்களை அச்சுறுத்தி அணுஉலையை திறக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. கூடங்குளத…

  18. சிங்களவர்களை அரவாணிகளாக்காதீர் : நாங்கள் சிங்கங்கள் கெஹெலிய மாவீரர் தினத்தை நினைவு கூருவதற்கு அரச அங்கீகாரத்தை வழங்கி சிங்களவர்களை"அரவாணிகளாக்கி” விடாதீர்கள். சிங்களக் கொடி கம்பீரமாக பறந்த நாட்டை காட்டிக் கொடுக்க வேண்டாம் என சபையில் கோரிக்கைவிடுத்த கெஹெலிய ரம்புக்வெல்ல எம்.பி.,காஷ்மீரில, இங்கிலாந்தில், பாகிஸ்தானில், ஜேர்மன், கனடாவில் பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு அனுமதியளிக்கப்படுகின்றதா என்ற கேள்வியையும் முன்வைத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற…

  19. பிணையில் விடுதலையான தம்பியுடன் செல்பி தனது சகோதரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பியதை செல்பி எடுத்து தனது முகப்புத்தக பக்கத்தில் தரவேற்றி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ. இதேவேளை, தனது சகோதரன் கடந்த 44 நாட்கள் கஷ்டப்பட்ட வேளையில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஷ எம்.பி. அதில் கருத்து தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/4179

  20. The day a Tamil learned about hate Canadian Tamils mark 25 years since Colombo riots forced their flight Stewart Bell, National Post Published: Wednesday, July 23, 2008 http://www.nationalpost.com/todays_paper/s....html?id=672763 Stewart Bell இடம் இருந்து எமது போராட்டத்தின் முக்கிய நிகழ்வு ஒன்று பற்றி மிகவும் வரவேற்கத்தக்க ஒரு பார்வை.

    • 4 replies
    • 1.3k views
  21. புதய நாடாளுமன்றம் எதிர்வரும் 13ஆம் திகதி கூடவுள்ளது. கடந்த 5 மாதங்களிற்கு பின்னர், நாடாளுமன்றம்- நாடாளுமன்ற கட்டட தொகுதியில் கூடவுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல முக்கியஸ்தர்கள் தோல்வியடைந்துள்ளனர். குறிப்பாக மட்டக்களப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். யாழில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தோல்வியடைந்தார். இம்முறை நாடாளுமன்றத்தில் 28 தமிழ் பேசும் தமிழர்கள் இடம்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 25 பேர் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி நாடாளுமன்றம் செல்கிறார்கள். முன்னாள் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவா…

  22. நான் பிரபாகரனாக இருந்தால் கொரில்லா யுத்தத்திற்கு மாறியிருப்பேன் மகிந்த கூறுகிறார் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமரச பேச்சுக்கு ஒரு போதும் வரமாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது.... இந்தியாவின் தேசியப் பத்திரிகையான ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார், இந்த நேர்காணலில் லலித் வீரதுங்கவும் உடனிருந்து சில கருத்துக்களை ஹிந்து ராமிடம் பகிர்ந்துள்ளார் ‘த ஹிந்து’ பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் என்.ராமுக்கு இலங்கை ஜனாதிபதி கடந்த ஜூன் 30 ஆம் திகதி அளித்த பேட்டியை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து இங்கு தருகிறோம். என்.ராம்: 2005 இல் நீங்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது இந்த…

    • 4 replies
    • 1.4k views
  23. கோட்டா, மகிந்தவை உள்ளடக்கிய புதிய அமைச்சரவை இன்று பதவிப் பிரமாணம்? April 17, 2022 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை உள்ளடக்கியதாக புதிய அமைச்சரவை இன்று மாலை பதவிப்பிரமானம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டா அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் பதவி விலகியிருந்த முன்னாள் அமைச்சர்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று மாலை விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இதன்போது எட்டப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டு உள்ளது. முன்னர் அமைச்சர்களாக பதவிவகித்திருந்த நாமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் புதிய…

    • 4 replies
    • 423 views
  24. மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தனக்கான கல்லறைக்கு இன்று காலை 9 மணியளவில் அடிக்கல் நாட்டியுள்ளார். பொரள்ளை கனத்தை மயானத்திலுள்ள தனது தாயாரின் கல்லறைக்கு அருகிலேயே தனது கல்லறையை தேர்ந்தெடுத்து அடிக்கல்லையும் நாட்டியுள்ளார். அடிக்கல்லை நாட்டும் முன்னர் மதவழிபாடுகளும் இடம்பெற்றன. தனது மறைவுக்கு பின்னர், சாம்பலை இங்கு அடக்கம் செய்ய வேண்டுமென விரும்புவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Pics By : J. Sujeewakumar) http://www.virakesari.lk/?q=node/362418

  25. சமாதானத்துக்கான ஜப்பான் அரசின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி, ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கை வருகின்றார். இத்தகவலை இலங்கைக்கான ஜப்பனிய தூதரகம் தெரிவித்துள்ளது. தனது விஜயத்தின் போது, அரச உயர்மட்ட அதிகாரிகள், பிரதிநிதிகள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களைச் சந்தித்து, இடம்பெயர்ந்தோரை விரைவாக மீள்குடியேற்றுவது தொடர்பாக அவர் கலந்துரையாடுவார். மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் யசூசி விஜயம் செய்வார். குறிப்பாக வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் ஜப்பான் உதவியுடன் மேற்கொள்ளப்படும், இடம்பெயர்ந்தோருக்கான திட்டங்கள் தொடர்பான நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்வார். யசூசி அகாசியின் 20 ஆவது இலங்கைக்கான விஜயம் என்பது குறிப்பிடத்தகக்து http://www.vi…

    • 4 replies
    • 781 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.