ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
ஏமாற்றம் தரும் சிவ்சங்கர் மேனன் பயணம்; நாட்டையே உலுக்கும் முடிவை எடுப்போம்: மருத்துவர் இராமதாஸ் puthinam news
-
- 2 replies
- 1.2k views
-
-
கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு இரகசிய விஜயம்! [ பிரசுரித்த திகதி : 2011-01-13 10:18:49 AM GMT ] இஸ்ரேலுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்து தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள் காட்டி, லங்கா எவ்ரிதிங் என்ற சிங்கள இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளரின் அமெரிக்காவுக்கான பயணத்தை பாதுகாப்பு அமைச்சு ரகசியமாக பேணி வருகிறது. அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு லண்டனில் ஏற்பட்ட நிலைமை, பாதுகாப்பு செயலாளருக்கும் ஏற்படலாம் என்ற அடிப்படையில் இந்த பயணம் இரகசியமாக பேணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கன…
-
- 0 replies
- 1.2k views
-
-
தர்மத்திற்கமைய நடப்பவரை தர்மமே பாதுகாக்கும் - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் வெளியிடப்பட்ட விசேட அறிக்கை November 11, 2018 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் வெளியிடப்பட்ட விசேட அறிக்கை ( 2018.11.11) தற்போதைய அரசியல் நிலைமைகளை தெளிவுபடுத்தும் வகையில் 14 நாட்களுக்குள் இது நான் உங்கள் முன் உரையாற்றும் மூன்றாவது முறையாகும். முதலாவதாக கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்தியதை அடுத்து நான் எனது கருத்துக்களை முன்வைத்தேன். அதேபோன்று நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி பத்தரமுல்லையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது இரண்டாவது தடவையாக அரசியல் நிலைமைகளை உங்களுக்கு தெளிவுபடுத்தினேன். இன்று மூன்றாவது முறையாக உங்கள் முன் உரையாற்றுகின்றேன்…
-
- 9 replies
- 1.2k views
-
-
மன்னார்ப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறிலங்காப் படையினரின் மேலும் 3 பேரினது உடலங்கள் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன. மன்னார் கருங்கண்டல், வண்ணாங்குளம் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற சிறிலங்காப் படையினரின் நடவடிக்கை மீது தாக்குதல் நடத்தி பெரும் இழப்பை படையினருக்கு விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியதில் படையினரின் மேலும் 3 உடலங்கள் காணப்பட்டுள்ளன. முன்னர் படையினரின் 6 உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றைய தேடுதலின் போது ரி-56 ரக துப்பாக்கிகள் - 02 நடுத்தர ரவைகள் - 1,500 50 கலிபர் ரவைகள் - 500 குண்டுகள் - 12 பைகள் - 05 ரவைக்கூடுதாங்கி அணிகள் - 02 கிளைமோர்கள் - 02 தலைக்கவசங்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிற்குத் தெற்காக 30 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வடுவ என்ற சிங்கள கிராமத்தில் சிறியரக வானூர்தியை சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த சிறிய வானூர்தியை உடனடியாகக் கைப்பற்றி தங்கள் பாதுகாப்பில் கொண்டுவந்த சிறிலங்காப் படையினர், அங்கிருந்து அதனை அப்புறப்படுத்தினர். விசாரணையில் தெரியவந்த மேலதிக தகவல்களின்படி, சில வருடங்களுக்கு முன்னர் சிங்களவர் ஒருவரால் பயன்பாட்டில் இருந்த இந்த சிறியரக வானூர்தியை அவர் தனது பொழுது போக்கிற்காக பயன்படுத்தி வந்துள்ளார். எனினும், இயந்திரம் மற்றும் உதிரிப்பாகங்கள் பழுதடைந்ததால், கடந்த சில வருடங்களாக அவரால் வானூர்தியை பாவிக்க முடியவில்லை. இருப்பினும், வானூர்தியை வைத்திருப்பதற…
-
- 2 replies
- 1.2k views
-
-
தெளிவான வரைவுத் திட்டமொன்றை இலங்கையிடமிருந்து அமெரிக்கா எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்திற்கு பதிலளிக்கக் கூடிய வகையில் தெளிவான வரைவுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் எதிர்பார்ப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெளிவான திட்டமொன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்காவிட்டால் அதனை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கும் இடையில் நாளைய தினம் முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது . இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அம…
-
- 5 replies
- 1.2k views
-
-
"தொடரும் போர், கொடுத்து வருகின்ற "பாடத்தை" சம்பந்தப்பட்டவர்கள் புரட்டி பார்க்கட்டும்.´ இணையத்தள நிருபர் 3/29/2008 12:20:16 PM - தமிழர்களின், விடுதலை என்ற பயணத்தில், கால் நூற்றுண்டை "போர்" விழுங்கிவிட்டது. ஈழப்போர், அகிம்சை வழிப்போராட்டங்களாக ஆரம்பமாகி, ஆயுத வழியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காந்திய வழிப் போராட்டங்கள் சாத்தியமற்றுப் போனதால், ஆயுத வழிப் போராக மாறியது. கொடிய போரால், எத்தனை எத்தனை உயிர்கள் நாளாந்தம் சரிந்து கொண்டிருக்கின்றன. இரத்த ஆறு, வற்றாத நதியாக, ஓடிக்கொண்டிருக்கிறது. உயிர்குடிக்கும் ஆயுதங்கள், மிலேச்சத்தனமாக பாவிக்கப்படுகின்றன . கொடிய ஆயுதங்களால், அப்பாவி பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள் . கொடிய போர் இன்னும் தொடர்வதால் , தமிழர்கள் வாழ்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்தில் அரிசிக்கு சிகப்பு நிறமூட்டம் செய்து விற்பனைக்காக களஞ்சியப்படுத்தியிருந்த வேளை கைது செய்யப்பட்ட விற்பனை நிலைய உரிமையாளருக்கு நீதிமன்றினால் இருபதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் யு.எல்.அப்துல் மஜீது நீதிமன்றுக்கு தெரிவித்த குற்றச்சாட்டிற்கிணங்க விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து நீதிபதி 20 ஆயிரம் ரூபா அபராதத்தினை விதித்ததுடன், எதிர்காலத்தில் இவ்வாறு கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்படுமிடத்து வர்த்தக நிலையத்தின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுமென ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் எச்சரிக்கையினையும் விடுத்தார். செயற்கையாக ச…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஞானசார தேரர் மாயக்கல்லி விஜயம் விகாரை நிர்மாணிக்கவும் 2 ஏக்கர் காணி காணி சொந்தக்காரர்களுக்கு மாற்றுக் காணி (அம்பாறை மேலதிக நிருபர்) பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அம்பாறை பௌத்த பிக்குகளுடன் நேற்று செவ்வாய்க் கிழமை இறக்காமம் மாயக்கல்லி மலையடி வாரத்திற்கு விஜயம் செய்தார். மாயக் கல்லிப் பிரதேச விகாரை விடயம் தொடர்பில் நேற்று அம்பாறை கச்சேரியில் அரச அதிபர் துசித்த வணிகசிங்க தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட மாநாட் டில் மாகாணக் காணி ஆணையாளர் டீ.டீ. அனுர தர்மதாச மாவட்ட உதவிக் காணி ஆணையாளர் டீ.டீ.எஸ். தக்சிலா குணரத்ன மாவட்ட நில அளவை திணைக்கள அதிகாரிகள் மற்றும் இறக்கா…
-
- 13 replies
- 1.2k views
-
-
பேச்சுக்கு அரசு தயார் என்கிறார் மகிந்த ராஜபக்ச [சனிக்கிழமை, 2 யூன் 2007, 05:54 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோதலில் ஈடுபட்டு வரும் வேளை, அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மகிந்தவின் பேச்சாளரான சந்திரபால லியனகே அனைத்துலக ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகள் சம்மதித்தால் 2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் விட்ட இடத்தில் இருந்து பேச்சுக்களை நடத்துவதற்கு அரசு தயாராக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இன்றுகூட பேச்சுக்களை நடத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று மகிந்த ராஜபக்ச கூறியிருக்கின்றார். நான் ஒரு ஜனநாய…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்த குழுவின் தலைவரான பிரேம்குமார் குணரட்னம் மற்றும் ஜே.வி.பி. அரசியல் குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஜே.வி.பி. மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியுமான திமுது ஆட்டிகல ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக முற்போக்கு சோசலிசக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரேம்குமார் குணரட்னம் கிரிபத்கொடையில் வைத்தும், திமுத்து ஆட்டிகல தலவத்துகொடயில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளதாக முற்போக்கு சோசலிசக் கட்சியின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த ஜனக சுதார தெரிவித்தார். இது தொடர்பாக பொலிஸாரிடம் கேட்டபோது இக்கைது குறித்து தமக்குத் தெரியாது எனக் கூறினர். பிரேம்குமார் குணரட்னம் தலைமையிலான ஜே.வி.பி மாற்றுக்குழுவினர் மக்கள் பேராட்ட இயக்கத்தையும் முற்போக்கு சோசலிசக் கட்சியைய…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஏ.பி.சி. நிறுவனத்தின் ஹிரு வானொலிச் சேவைக்கு சொந்தமான அனைத்து பண்பலைகளையும் ‘தாருன்யட்ட ஹெடக்’ அமைப்பிற்கு வழங்க, லத்திரனியல் பரிமாற்று ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள்.................................................... தொடர்ந்து வாசிக்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6403.html
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியா புல்மோட்டையில் வைத்தியசாலை கட்டப்போகிறதாம் Indian forces will set up hospital in Lanka India is likely to soon establish a field hospital at Pulmodi in northeastern Sri Lanka to provide medical treatment for civilians injured in the bloody conflict raging in that country. The hospital will be established at Pulmodi which is on the northeastern coast and the security will be provided by the Sri Lankan Navy. The field hospital will be staffed by 52 Indian armed forces personnel comprising doctors and nurses. There will also be five specialists as part of the Indian medical contingent. India is likely to provide medicines worth about Rs 3 crores for the h…
-
- 4 replies
- 1.2k views
-
-
வரலாற்றுப் பெரும் துயராக உலகத் தமிழர் நெஞ்சங்களில் உறைந்துள்ள முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவேந்தல் வார் நிகழ்வுகள் .இன்று ஆரம்பமாகின்றன. மே 12 வியாழக்கிழமை முதல் மே 18 வரையிலான காலப்பகுதியை நினைவேந்தல் வாரமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது. சிறிலங்கா அரசினது திட்டமிட்ட இனக்கருவறுப்பு யுத்தத்துக்கு இரையாகிய உறவுகளை நெஞ்சில் இருத்தி சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செய்யப்படும். நினைவேந்தல் வாரம் முழுவதும் தமிழ்மக்கள் கறுப்பு பட்டியணிந்து சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பை குறியீட்டுரீதியாக வெளிப்படுத்துமாறு கோரப்பட்டிருப்பதோடு - தமிழ் வர்த்தக நிலையங்கள் பொது இடங்களில் கறுப்பு கொடியினை கட்டி வாரத்தை கடைப்பிடிக்குமாறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தி…
-
- 6 replies
- 1.2k views
-
-
கிடைப்பதை பெற்று வாழப்பழகிக் கொள்ளுங்கள்: எல்லாவெல மேதானந்த தேரர் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு மகிந்த தீர்வை ஏற்படுத்திக்கொடுப்பார் எனவே நீங்கள் அதனை ஏற்று வாழப்பழகிக்கொள்ள வேண்டும் என ஐதிக ஹெல உறுமியவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரதும் புலிகளினதும் கோரிக்கைகள் ஒரேமாதிரியானவை எனவே அரசாங்கம் ஒருபோதும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றக்கூடாது. தேர்தலில் வடக்கு கிழக்கில் வெற்றிபெற்று விடடதற்காக நாட்டை துண்டாடி தமிழீழம் அமைக்க இடமளிக்கமுடியாது நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் அரசுடன் இணைந்து செயற்படவேண்டும். கேட்பது கிடைக்காவிட்டால் தருவதை பெற்றுக்கொண்டு வாழப்பழக வேண்டும் எனவும் மேலும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்…
-
- 1 reply
- 1.2k views
-
-
தென்னிலங்கை கோமாளித்தனங்களால் 'இலங்கையிலும்" தோல்வியடைகிறதா நோர்வே? -புரட்சி (தாயகம்)- சிறிலங்கா அரசாங்கத்தின் வரவு-செலவு திட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது தொடர்பாக தென்னிலங்கையில் நிகழ்ந்து வரும் அரசியல் நடவடிக்கைகளையும் வௌ;வேறு அறிக்கைகளையும் உற்று கவனிப்பவர்களுக்கு பைத்தியம் பிடிக்காமால் இருந்தால் வியப்புத்தான். அவ்வளவு தூரத்திற்கு குத்துக்கரணங்களும் கட்சித்தாவல்களும் பணம், பதவிகள், பொறுப்புக்கள் என பல்வேறு 'திருப்பங்கள்" தங்களின் சுயநலன்களுக்காக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இதைவிட வேடிக்கை என்னவென்றால் கட்சி மாறுபவர்கள் தங்களை நியாயப்படுத்த கூறுகின்ற காரணங்களை நம்புவதற்கும் கூட தென்னிலங்கையிலே ஆட்கள் இருப்பதுதான். இப்பொழுது மகிந்த ராஜப…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://globaltamilnews.net/tamil_news.php?nid=11056&cat=
-
- 0 replies
- 1.2k views
-
-
வெள்ளி 07-12-2007 17:44 மணி தமிழீழம் [முகிலன்] யால வனப் பகுதியில் மோதல்கள்: படைத்தரப்பில் ஒருவர் காயம் அம்பாந்தோட்டை யால வனப் பகுதியில் சிறீலங்கா படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன. இன்று பிற்பகல் 2.15 மணியளவில் யால தல்கஸ்மங்கட வனப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இம்மோதல்கள் இடம்பெற்றன. மோதலின் போது சிறீலங்காப் படைகள் தரப்பில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.2k views
-
-
போருக்குப் பின்னான இனநல்லிணக்கத்தினைப் பாதிக்கும் வகையில் தமிழர் தாயக நிலங்களில் உயர்பாதுகாப்பு வலயங்கள், இராணுவக் குடியேற்றங்கள் என வடக்கில் தொடரும் சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை தூண்டிவிடவல்லது என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 'லக்பிம நியூஸ்' [lakbimanews] என்ற ஆங்கில இணையத்தளத்திற்காக 'ரங்க ஜெயசூரிய' எழுதியுள்ள செய்தி ஆய்வினை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. போருக்குப் பின்னான இனநல்லிணக்கத்தினைப் பாதிக்கும் வகையில் உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான கசப்புணர்வுகள் தொடர்கின்றன. குறிப்பாக, உயர் பாதுகாப்பு வலங்கள் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில், இதுபோன்ற வலயங்கள் தொடர்…
-
- 2 replies
- 1.2k views
-
-
சனல் 4 ஒளிபரப்பிய காட்சியினை தமது இராணுவ தொழில் நுட்பவியலாளர்கள் மிக நுட்பமாக பரிசோதித்ததாகவும் அந்த காட்சியில் இராணுவ வீரர்கள் தமிழ் இளைஞர்களை சுடும்போது சுட்டுக்கொண்டிருக்கின்ற இராணுவத்தினர் சிங்கள இராணுவத்தின் சீருடை அணிந்திருந்தாலும் அவர்கள் சீருடையில் இராணுவ பதவி நிலை பட்டி இருக்கவில்லை என்றும் அத்துடன் இராணுவத்தினரின் தலைமுடி வடிவம் தப்பிஓடிய இராணுவத்தினரின் தலை முடி வடிவத்தினை ஒத்ததாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனூடாக அந்த சிங்கள கொலைவெறி காணொளி இல் வரும் காட்சிகளை மறைமுகமாக ஒத்து கொள்ளும் இராணுவம் அதனை உத்தியோக பூர்வ இராணுவம் செய்யவில்லை தப்பியோடிய இராணுவம் தான் செய்தது என கூறமுற்படுவதுடன் பதவியில் இருப்பவர்கள் தப்பிக்கவும் முயற்சி செய்கின்றனர். ஒர…
-
- 3 replies
- 1.2k views
-
-
புதன்கிழமை, 8, டிசம்பர் 2010 (16:20 IST) டக்ளஸ் தேவானந்தா வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் டக்ளஸ் வழக்கு தொடர்ந்தார். டக்ளஸ் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், டக்ளஸ் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என தீர்ப்பு கூறியது. மேலும், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை நடத்தவும் உயர் நீதிமன்றத்தில் வாய்ப்பு வழங்கி உத்தரவிட்டது. nakkheeran
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகளின் நிலைகள் மீது ஹெலிகள் றொக்கட் வீச்சு!: பிரசாத் சமரசிங்க திருகோணமலையின் வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகளின் மறைவிடங்கள் எனச் சந்தேகிக்கப்படும் காட்டுப்பகுதி மீது நேற்று விமானப் படையின் ஹெலிக்கொப்டர்கள் றொக்கட் தாக்குதல்களை நடத்தின என்று கொழும்பில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றுக்காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க கூறினார். தாக்குதலால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை என்று செய்தி ஏஜென்ஸிகள் தெரிவித்தன. -Sudaroli-
-
- 0 replies
- 1.2k views
-
-
2009 களமொன்றில் காயமடைந்தான் இவன். வயிற்றை அறுத்துக் கொண்டு போனது எறிகணை. சாகும் தறுவாயில் குருதி வெள்ளத்தில் கிடந்தவனை இவனது காதல் மனைவி காப்பாற்றத் துடித்த துடிப்பினைச் சொல்லும் தருணங்களில் அவள் அழுதேவிடுகிறாள். கைக்குழந்தையையும் அவனையும் கடலால் கொண்டு சென்று காப்பாற்றிவிட வேண்டுமென்ற முடிவோடு இயன்றவரையும் அவனது குருதிப்போக்கினை கட்டுப்படுத்த இயன்ற யாவையும் செய்தாள். அவளது முயற்சி அவனை உயிரோடு கொண்டுபோய் மருத்துவத்துக்காய் சேர்க்கப்பட்டான். தற்போது இவனுக்கு ஒரு சிறு நீரகம் மட்டுமே இயங்குகிறது. இடுப்பின் கீழ் இப்போது இவனுக்கு உணர்வுகள் இல்லாது வாழ்கிறான். வயிற்றுக்காயத்தின் தாக்கம் எஞ்சிய சிறுநீரகமும் தாக்கமடைந்திருப்பதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கிறது. சத்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
யுத்தகால அமைச்சரவையை உருவாக்குகிறார் மகிந்த? சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச யுத்தகாலத்துக்கான அமைச்சரவையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள மகிந்தவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை சந்தித்து வருகின்றனர். மகிந்தவின் நண்பரான மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிக் அலுவிகார மற்றும் அவரது மகன் ரஞ்சித் ஆகியோர் மகிந்தவை அண்மையில் சந்தித்தனர். தம்மைச் சந்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சி நண்பர்களிடம், விடுதலைப் புலிகள் யுத்தத்தைத் தொடங்கினால் யுத்த கால அமைச்சரவையை தாம் அமைக்க உள்ளதாகவும் அப்போது உங்களுக்குப் பணிகள் கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். …
-
- 2 replies
- 1.2k views
-
-
சனல் 4 கொலைக்களம் வீடியோ ஆவணப்படம் தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு வருவதாகவும் அது விரைவில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெலலிதாவிற்குச் சொந்தமான ஜெயா தொலைக்கட்சியில் ஒளிபரப்புச் செய்யப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று வெளியான சண்டே ரைம்ஸ் ஆங்கில வார இதழ் இத்தகவலை அரசியல் அலசல் பகுதியில் வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் உணர்ச்சியை தட்டி எழுப்பிவிடும் என்பதில் சந்தேகமேயில்லை என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயா தொலைக்காட்சியை இலங்கையிலும் பார்க்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஸ்ரீலங்காவின் தூதர் பிரசாத் காரியவாசம் அண்மையில் சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித…
-
- 2 replies
- 1.2k views
-