ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 14, 2011 திருகோணமலை,மூதூரிலுள்ள கடற்படை முகாம் மீது பொதுமக்கள் இன்று காலையில் நடத்திய தாக்குதல் காரணமாகக் கடற்படை முகாமுக்குச் சேதமேற்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறீஸ் பூதம் ஒன்று குறிப்பிட்ட கடற்படை முகாமுக்குள் நுழைவதனை அவதானித்த பொதுமக்கள் கடற்படை முகாமைச் சூழ்ந்து கொண்டு சரமாரித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் முகாமுக்குச் சொந்தமான நீர்த்தாங்கி ஒன்றும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. . நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள்; கொண்டு வருவதற்கு அங்கு விரைந்த பொலிஸார் முயற்சித்த போதும் அவர்கள் மீதும் பொதுமக்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன் காரணமாக பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார் என்றும் பொலி…
-
- 3 replies
- 1.2k views
-
-
தனது நண்பனின் தங்கைக்கு பல நாட்களாக தொடர்ந்து ஆபாசப்படங்கள் அனுப்பியவர் நண்பனாலும் நண்பனின் உறவினர்களாலும் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் நேற்று மாலை அச்சுவேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனது நண்பனின் முகப்புத்தகத்தில் தங்கையின் தொடர்பை எடுத்துக் கொண்ட இளைஞர் அவளுக்கு நட்பு தூது அனுப்பியும் தங்கை அதைக் கணக்கில் எடுக்கவில்லை எனத் தெரிகின்றது. இதன் பின்னர் தொடர்ச்சியாக அவளுக்கு ஆபாசப்படங்களை முகப்புத்தகத்தின் ஊடாக அனுப்பியதால் எரிச்சலுற்ற தங்கை தனது அண்ணனிடம் சொல்லி நண்பனின் நடவடிக்கை பற்றி ஏசியுள்ளார். இதன் பின்னர் தொலைபேசி ஊடாக இரு நண்பர்களும் சண்டையிட்டதாகவும் அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை அச்சுவேலிப் பகுதியில் உள்ள குறித்த இளைஞனின் வீட்டுக்குச் சென்ற நண்பனும் உறவினர்களு…
-
- 2 replies
- 1.2k views
-
-
முஸ்லீம் குழுக்களுக்கிடையில் மோதல்- 10பேர் காயம்,14வாகனங்கள் சேதம்! Published on March 23, 2012-10:49 pm · பொலனறுவை வெலிக்கந்தை கடுவன்வெல என்ற முஸ்லீம் கிராமத்தில் நடந்த சமய நிகழ்ச்சி ஒன்றின் போது இடம்பெற்ற மோதல்களில் 10பேர் காயமடைந்துள்ளனர். 14 வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. ஆம்பாறை கல்முனையிலிருந்து வந்த குழவினருக்கும், உள்ளுர்வாசிகளுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக வெலிக்கந்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் வெலிக்கந்தை வைத்தியசாலையில் அவசர சிகிச்சையை மேற்கொண்ட பின்னர் கல்முனைக்கு திரும்பி விட்டனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 7வான், 6முச்சக்கரவண்டிகள், ஒரு மி…
-
- 3 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகளை தடை செய்யுமாறு ஐ.நாவிடம் கோரிக்கை :ரோஹித்த போகொல்லாகம. விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக கருதி தடைசெய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் சகல நாடுகளும் விடுதலைப்புலிகளை தடைசெய்து, அந்த அமைப்பின் நிறுவனங்களின் செயற்பாடுகளை முடக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக போகொல்லாகம குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளை அரசாங்கம் தடை செய்த போதிலும் அரசியல் தீர்வொன்றை முன்வைக்கும் நடவடிக்கை அரசாங்கம் எந்த விதத்திலும் கைவிடவில்லை எனவும் அவர் கூ…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாதும் ஊரே யாவரும் கேளீர் தீதும் நன்றும் பிறர்தர வாரா முருகபூபதி (அமைப்பாளர், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு) இலங்கையில் அடுத்த ஆண்டு (2011) நாம் நடத்தவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக ஏற்கனவே பல இதழ்களிலும் (அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில்) இணையத் தளங்களிலும் மலர்களிலும் எழுதியிருப்பதுடன் தமிழ்நாடு Zee Tamil தொலைக்காட்சியிலும் தொலைபேசி ஊடாக விரிவாக பேசியிருக்கின்றேன். தமிழக ஜூனியர் விகடனும் எனது கருத்தை கேட்டு பதிவுசெய்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு 1987 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து வந்த காலம் முதல் மூலையிலே சோம்பிக்கிடக்காமல் தொடர்ந்தும் கலை, இலக்கியப்பணிகளிலும் இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கும் அகதி…
-
- 5 replies
- 1.2k views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகளை அழிக்கும் இலங்கை போருக்கு இந்தியா அதிகபட்ச ஆதரவை அளித்து வருவதாக இலங்கை அதிபரின் சகோதரரும், மூத்த ஆலோசகருமான பாசில் ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் குதிக்கத் தயாராகி வரும் தமிழ் மக்களுக்கு பாசில் ராஜபக்ஷேவின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இலங்கையின் பிரபல நாளிதழுக்கு பாசில் ராஜபக்ஷே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கவலையை இலங்கை அரசு பரிசீலிக்கும் என்று அதிபர் மஹிந்தா ராஜபக்சே உறுதி அளித்துள்ளார். அவரை சமீபத்தில் சந்தித்த இலங்கைக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத்திடம் உறுதி அளிக்கப்பட்டது. புலிகளை அழிக்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 7, நவம்பர் 2010 (13:51 IST) நான் ரவுடியா? ராஜபக்சேவிடம் சண்டை போடவேண்டுமா? திருமாவளவன் ஆவேசம் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் இந்திய நாடாளுமன்ற குழுவுடன் இலங்கை சென்று வந்தார். இந்த பயணத்தின் போது அவர் ராஜபக்சேவிடம், அப்பாவி தமிழர்களை கொன்றுகுவித்ததற்கு நேருக்கு நேர் கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து விட்டு வந்து இங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்;கண்டனம் தெரிவிக்கிறார் என்று கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. இந்நிலையில் திருமாவளவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது, ‘’ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்தீர்கள்?என்ற கேள்விக்கு, ’’…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 2.5 லட்சம் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் உடனடியாகக் குடியேறச் செய்யமுடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடை பெற்ற செய்தியாளர் மானாடொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பாக அல்லது தமிழ் பிரதேசங்கள் தொடர்பாக எந்த அறிவோ தெளிவோ இன்றிய இந்திய வெளிவிகார அமைச்சர் கிருஸ்ணா இலங்கை அரசாங்கம் எடுக்கும் வாந்தியினை திரும்ப உள்வாங்கி தானும் எடுக்கின்றார் போல தெரிகின்றது. அல்லது இலங்கை அரசாங்கம் தாம் சொன்னால் நிதி கிடைக்காது என்பதற்காக இந்திய அரசாங்கத்தினை கொண்டு சொல்லப்படுகின்றனவா எனவும் ஐயம் எழுகின்றது. இந்தியா போரின்போது தமிழ் மக்களை க…
-
- 1 reply
- 1.2k views
-
-
இந்தியா புறப்படுகிறார் பிரதமர் ரணில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க, இம்மாதம் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பிரதமரின் விஜயத்திற்கான திகதி குறித்து தற்போது இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், எதிர்க்கட்சி தலைவர் நியமனம் மற்றும் அமைச்சரவைக்கு அதிக உறுப்பினர்களை நியமிப்பதற்குரிய நாடாளுமன்ற அங்கீகாரம் ஆகியன பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே இவ்விஜயம் அமையுமென தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த அரசாங்கத்தை பெரிதும் எதிர்த்த இந்தியா, தற்போதைய மைத்திரி அரசாங்கத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டது. சீனாவுடனான இராஜதந்திர உறவுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பிரதமரின் இந்திய விஜயம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையவுள…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதித் தேர்தல் எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டால் பிரதமர் பதவியை வழங்குவதற்குத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பீ.திஸாநாயக்கவிற்கு அறிவித்துள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் அறியமுடிகிறது. இதுகுறித்து எஸ்.பீ.திஸாநாயக்க இதுவரை பதிலளிக்காத போதிலும், ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு இது உகந்த நேரமா என பல சோதிடர்களைத் தொடர்புகொண்டு எஸ்.பீ. கேட்டறிந்துள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய சம்மேளனத்தில் நேற்றைய தினம் ஜனாதிபதி உரையாற்றிய சந்தர்ப்பத்தில், எஸ்.பீ.திஸாநயாக்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர…
-
- 9 replies
- 1.2k views
-
-
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்~ அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தான் கைதுசெய்யப்படலாம் என்பதால் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் பெயர்பட்டியலில் தனது பெயரை இடம்பெறச் செய்யத்திருந்தாக வெளிவிகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள பெயரிடப்பட்டுள்ள எவரையும் சர்வதேச போர்க் குற்றம் தொடர்பில் கைதுசெய்ய முடியாது. ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் பெயர்பட்டியலில் தனது பெயரையும் இடம்பெறச் செய்து அதன்மூலம் கிடைக்கும் சிறப்புரிமைகளை அனுபவித்து கொண்ட கோத்தபாய சபைக் கூட்டங்கள் எதிலும் …
-
- 1 reply
- 1.2k views
-
-
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் தேர்தலின்போது 99.4 விழுக்காடு மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்ட வாக்குகளில், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விபரம் வருமாறு: வாக்களித்தோர் எண்ணிக்கை 8274, தீர்மானத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகள் 8156, தீர்மானத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகள் 51, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 67. இம்முடிவுகள் இன்று நியுசவுத்வேல்ஸ் பாராளுமன்ற பத்திரிகையாளர் கூடத்தில் பிற்பகல் 2 மணியளவில் உள்ளுர் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் முன்னிலையில், இத்தேர்தலினை நடாத்திய அவுஸ்திரேலிய சிபிஐ நிறுவன அதிகாரிகளினாலும் அவுஸ்திரேலியா தமிழர் பேரவை, அவுஸ்திரேலியா தமிழர் வாக்குக்கணிப்…
-
- 15 replies
- 1.2k views
-
-
தமிழினத்திற்காக ராஜீவ் காந்தி இறந்தாராம் ! தங்கபாலு சேலத்தில் பேச்சு. Published on 10-02-2009 இலங்கை நல உரிமை பேரவை சார்பாக சேலத்தில் பேரணி நேற்று(09.02.2009) நடைபெற்றது. பேரணிக்கு பின்னர் நடந்த பொதுகூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்தவர் கலைஞர். அவர்களுக்காக உயிரையே இழந்தவர் ராஜீவ்காந்தி என்று கூறியுள்ளார். அத்துடன் நின்றுவிடாமல், இலங்கை சுதந்திரமடைவதற்காக பிரித்தானிய அரசை எதிர்த்து போராடியவர்கள் காங்கிரசினரே என்றும் கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு. எனவே தற்போது நடக்கும் இந்த போரை கூட எங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் எனவும், மேலும் மத்திய அரசு, சிங்கள அரச…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஜேவிபி மீது புலிகள் இதுவரை இலக்கு வைக்காததால் புலிகள்-ஜேவிபி தொடர்பு என அரசு சந்தேகம். ஜ செவ்வாய்கிழமைஇ 8 யூலை 2008 ஸ ஜ மௌலானா ஸ ஜே.வி.பி. எதிர்வரும் 10 ஆம் திகதி நடத்தவுள்ள வேலை நிறுத்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைக் கவிழ்த்து தோல்வி கண்டு வரும் விடுதலைப் புலிகளை பாதுகாக்கும் சர்வதேச சதித் திட்டத்தின் ஓர் அங்கமேயாகும். எனவே இந்த சதித் திட்டத்திற்கு உழைக்கும் வர்க்கத்தினர் உடந்தையாகக் கூடாது என்று ஜனாதிபதியின் தொழிற்சங்கங்கள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, உழைக்கும் வர்க்கத்தினருக்கு ரூபா 5000 சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கவே போராட்டமென அறிவித்த ஜே.வி.பி. இன்று மாகாண சபைத் தேர்தலை …
-
- 0 replies
- 1.2k views
-
-
முப்படைகளும் பாரிய போர்ப் பயிற்சி: வடபகுதியில் மற்றொரு தாக்குதலுருக்கான தயாரிப்பு? Monday, 09 June 2008 யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தம்முடைய கடல் மற்றும் தரை ரோந்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கும் சிறிலங்காவின் முப்படையினரும், பாரிய போர் ஒத்திகை ஒன்றையும் மேற்கொண்டிருப்பதாக குடாநாட்டிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே படையினரின் ஒத்திகை இடம்பெற்றதாகவும், இவை அனைத்தும் மற்றொரு பாரிய நடவடிக்கைக்கு சிறிலங்கா படையினர் தயாராகிவருவதை உறுதிப்படுத்துவதாக அமைத்திருக்கின்றது என யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவித்தன. பலாலித் தளத்திலிருந்து புறப்பட்ட சிறிலங்கா விமானப்…
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=3] ஏமாற்றமான எதிர்பார்ப்புக்களும் சிதைந்து போகும் சின்னங்களும்-01 [size=4]இலங்கையில் எங்கெல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் காணப்படுகின்றதோ அங்கெல்லாம் அதிக பாதுகாப்பும் அவ்விடத்தை முக்கியத்துவப்படுத்தி சிறப்பு கவனிப்புக்களும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களை பொருத்தவரை இது எவ்வளவு தூரம் உண்மை என்பது நாம் அறிந்ததே. யாழ்பாணத்தில் எத்தனையோ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்கின்ற போதும் அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிலவற்றை தவிர ஏனைய வரலாற்று முக்கியம் வாய்ந்த இடங்கள் கவனிக்கப்படாது விட்டு விடப்பட்டன என்பது கவலைகுரியதே. அந்த வகையில் யாழ்பாண வாழ் தமிழனாக எனது மன வேதனையை வெளிப்படுத்துவதே இப்பதிவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவு சிலாவத்தை மக்கள் குடியிருப்பு மீதும் கடல் தொழிலாளர் துறைகளின் மீதும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தின. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
புதிய தலைமுறை பௌத்த பிக்குகள் குறித்து மக்களுக்கு நம்பிக்கையில்லை – ஜனாதிபதி புதிய தலைமுறை பௌத்த பிக்குகள் குறித்து மக்களுக்கு நம்பி;க்கையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போது பௌத்த பிக்குகளாக துறவறம் பூணும் சிலர் தொடர்பில் பொதுமக்கள் நம்பிக்கையற்ற நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அமரபுர நிக்காயவின் பீடாதிபதி வணக்கத்திற்குரிய தெவுல்தென்ன ஞானீஸ்ஸர தேரரரின் 100ம் பிறந்த நாளை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஞானீஸ்ஸர தேரரர் போன்ற பௌத்த பிக்குகளையே பொது மக்கள் பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்hளர். எவ்வாறனெனினும் சில புதிய பௌத்த…
-
- 24 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஜனாதிபதி, அமைச்சர்கள் ஊதிய உயர்வை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கலாகும்! - பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 28 னுநஉநஅடிநச 2006 12:01 ஜனாதிபதி, பிரதம மந்திரி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உத்தியோகத்தர்களுக்குப் பெருமளவு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து அரசதுறை சம்பள மீளாய்வுத் தொழிலாளர் சங்க ஒன்றியம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யத் தயாராகி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளம் 20 ஆயிரம் ரூபாவிலிருந்து 54 ஆயிரம் ரூபாவாக அதாவது 165 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் சம்பளம் 31, 800 ரூபாவிலிருந்து 97 ஆயிரம் ரூபாவாக 210 சதவீதத்தாலும், ஜனாதிபதியின் சம்பளம் 25 ஆயிரம் ரூ…
-
- 3 replies
- 1.2k views
-
-
"எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில் திரண்டது. பல்வேறு நாடுகளில் இருந்து பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டு உரிமைக் குரலை ஓங்கி ஒலித்தார்கள். http://youtu.be/rCK8QACghpw http://youtu.be/7MMmaMMP8PQ ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் இருந்து ஆரம்பித்த பேரணி ஐ.நா சபை முன்றல்வரை சென்றது. ஐ.நா சபை முன்றலில் உள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நிகழ்வுகள் நடைபெற்றது. 3.00 மணியளவில் ஜெனீவா ஐ.நா சபை முன்றலை வந்தடைந்த மக்கள் பெருவெள்ளம், மேடையின் முன் ஒன்றுதிரண்டது. கொடியேற்றல் நிகழ்வு, ஈகைச்சுடர் ஏற்றல் நிக…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் மீதான தடையை மேலும் நீட்டிப்பது என இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளமையானது இரு அடிப்படைக் கேள்விகளை எழுப்பியுள்ளது. இவ்வாறு செய்தி மற்றும் அரசியல் ஆய்வுகளுக்கான Eurasia Review என்னும் இணையத்தளத்தில் ஆய்வாளர் J Jeganaathan எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்திபாரதி. அக்கட்டுரையின் முழுவிபரமாவது: இந்திய அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் 1991ல் முதன் முதலாக இந்திய அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகளை …
-
- 3 replies
- 1.2k views
-
-
ஒரு அப்பாவித் தமிழன் : "இலங்கையிலை யுத்த நிறுத்தம் ஏற்பட இலங்கை அதிபருடன்தானே பேசவேண்டும் அல்லது கடிதமெழுத வேண்டும்? கலைஞருக்கு கடிதமெழுதி என்ன பயன்?" கொஞ்சம் விவரமான தமிழன் : "கலைஞருக்கு கடிதமெழுதினால் யுத்த நிறுத்தம் வரவே வராது என்டது நிச்சயம். ஸ்ரீலங்கா அதிபருக்கு கடிதம் எழுத அவரும் பகிடி வெற்றி விளங்காமல் யுத்தத்தை நிறுத்தீட்டா....
-
- 5 replies
- 1.2k views
-
-
ஈழப் போரின்போது நடைபெற்ற போர்க் குற்றம் தொடர்பாக, கோத்தபயா ராஜபக்சேவுக்கு எதிரான ஆதாரங்களை வழங்குமாறு அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பொன்சேகாவுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பாக வருகிற 4ம் தேதி விசாரணைக்கு வருமாறும் அழைத்துள்ளனர். இதனால் இலங்கையில் பலத்த பீதி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ராஜபக்சே சகோதரர்கள் பெரும் டென்ஷனில் உள்ளனர். தங்களுக்கு எதிராக பொன்சேகா போட்டுக் கொடுத்து விடுவாரோ என்ற அச்சம் அவர்களிடம் எழுந்துள்ளது. ஆனால் தான் யாரையும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார் பொன்சேகா. இதன் மூலம், ராஜபக்சே சகோதரர்களுடன் சமரசமாகப் போக அவர் முடிவெடுத்திருப்பதாக உணரப்படுகிறது. அமெரிக்காவில் தங்கியுள்ள பொன்சேகாவை, அமெரிக்காவிலுள்ள …
-
- 2 replies
- 1.2k views
-
-
எல்லா நாடுகளும் ஆயுதங்களை வைத்திருப்பதனாலேயே யுத்தம் ஏற்படாமல் இருக்கிறது”. இவ்வாறு சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் பிரிட்டனின் பிரதமராக இருந்த மாக்கிரட் தட்சர் கூறியிருந்தார். அவர் கூறிய செய்தியைப் பத்திரிகையில் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. நாடுகள் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு தட்சர் ஊக்குவிக்கின்றாரா? என்ற கேள்வி நம் சிறுவயதில் ஏற்பட்டதில் ஆச்சரியம் இல்லையாயினும் தட்சரின் இந்தக் கூற்றின் நியாயத்தை – யதார்த்தத்தைத் தற்போது உணர முடிகிறது. எல்லா நாடுகளும் ஆயுத வல்லமையைக் கொண்டிருக்கும் போது யுத்தம் என்பது இல்லாது போகும். ஒருவரிடம் ஆயுதம், இன்னொருவர் நிராயுதம் என்றால் அங்கு ஒரு தரப்பின் பலம் ஓங்கும். நிராயுதபாணி ஆயுததாரிக்கு என்றும் அஞ்சுபவனாக இருப்பத…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறையில் இருந்தாலும் சரத் பொன்சேக்கா நாட்டைக் காக்கத் தொடர்ந்து போராடுவார் என்கிறார் அனோமா பொன்சேக்கா Wednesday, 10 February 2010 12:57 பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடிய எனது கணவர் ஒரு பயங்கரவாதியைப் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். எனினும் ஊழலும் வன்முறையும் நிறைந்த இந்த ஆட்சியாளரிடமிருந்து மக்களை விடுவிக்கும் தனது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும் மன நிலையிலேயே அவர் இருக்கிறார் என்று நேற்று சரத் பொன்சேக்காவை சென்று சந்தித்த அவரது மனைவி அனோமா பொன்சேக்கா தெரிவித்தார். இன்றைய தினம் சரத் பொன்சேக்காவின் கைதிற்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதற்கிடையே சரத் பொன்சேக்க…
-
- 10 replies
- 1.2k views
-