நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
Uploaded with ImageShack.us அவகாடோ என்னும் ஒரு வகை பழம் நல்ல கொலஸ்ரரோல் உண்டாக்கக் கூடிய பழம்.இதை நாங்கள் மீன் ரின் சம்பல் மாதிரி சம்பல் போடுவோம்.ஒரு அவகாடோ சம்பல் செய்தால் 5 பேர் வரை நன்றாக போட்டு சாப்பிடலாம்.மிகுதி இருந்தால் கொட்டி கழுவி கவிழ்க்க வேண்டும் என்று அல்ல.குளிர் சாதனப் பொட்டியில் வைத்து 4 5 நாட்களுக்கு சாப்பிடலாம். இதை எந்த நேர உணவுடனும் சாப்பிடலாம்.சான்விச் மாதிரி செய்து ஒரு வாழைப்பழமும் சேர்த்து சாப்பிட சுவை நன்றாக இருக்கும். சரி இதை எப்படி செய்யலாம் என்பதைப் பார்போம். அவகாடோவின் தோல் பகுதியில் இருக்கும் மெழுகை பட்டும் படாமலும் சுரண்டி எடுக்கவும். கரட் சுரண்டும் கருவியால்(விதை எடுக்கத்தேவை இல்லை)கரட் சுரண்டுமாப் போல் சுரண்டவும். ச…
-
- 15 replies
- 2.3k views
-
-
அவகாடோ டிப் என்னென்ன தேவை? நன்கு பழுத்த அவகாடோ (பட்டர் ஃப்ரூட்) - 3 எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப் நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு sour cream 2 டேபிள் ஸ்பூன் சிறிதாக வெட்டிய தக்காளிபழம் 2 சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 3 எப்படிச் செய்வது? நன்கு பழுத்த அவகாடோவை வெட்டி அதனுள் இருக்கும் கொட்டையை நீக்கவும். உள்ளே இருக்கும் சதைப்பற்றை ஸ்பூனால் வழித்து ஒரு கப்பில் போடவும். பிறகு அதை கரண்டியால் நன்கு மசிக்கவும். அதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லிஇலை, sour cream, தக்காளிபழம்,பச்சை மிளகாய் சேர்க்கவும். tortil…
-
- 2 replies
- 942 views
-
-
நேற்று மார்க்கம் & டெனிசன் பகுதியில் இருக்கும் கடை ஒன்றில் ஆட்டுக்குடலை பார்த்தவுடன் ஆசையில் வாங்கி கொண்டு வந்து விட்டேன். இப்ப அதை எப்படி கழுவுவது, சமைப்பது என்று தெரியவில்லை. ஆருக்கும் தெரிந்தால் உடனடியாக சொல்லவும்..
-
- 25 replies
- 22.2k views
-
-
அவரைக்காய் பொறிக்குழம்பு தேவையான பொருள்கள்: • அவரைக்காய் - 1/4 கிலோ • வெங்காயம் - 1 • தக்காளி - 1 • கறிவேப்பில்லை - 4 இலை • கொத்தமல்லி - சிறிதளவு • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி • மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி • தனியா தூள் - 1/2 தேக்கரண்டி • புளி - சிறிய எலுமிச்சை அளவு • உப்பு - 2 தேக்கரண்டி • பூண்டு -5 பல்கள் தாளிக்க: • கடுகு - 1/2 தேக்கரண்டி • வெந்தயம் - 1/2 தேக்கரண்டி • எண்ணெய் - 1 தேக்கரண்டி • சோம்பு - 1/2 தேக்கரண்டி செய்முறை: • முதலில் அவரைக்காய் நுனிகளை நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். • பூண்டை உரித்து லைட்டாக நசுக்கு வைத்து கொள்ளவும் • வெங்காயம…
-
- 3 replies
- 3.5k views
-
-
அவல் தேங்காய் சாதம் Posted By: ShanthiniPosted date: December 23, 2015in: தேவையான பொருட்கள் அவல் – 2 கப் தேங்காய் – 1 கப் (துருவியது) பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது) வேர்க்கடலைப் பருப்பு – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிது கறிவேப்பிலை – சிறிது செய்முறை முதலில் அவலை நன்கு நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதில் உள்ள நீரை வடிகட்டிக் கொள்ளவும். பின் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், வேர்க்கடலைப் பருப்பு, உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் விட்டு நன்கு பிசைந்துக் கொள்ளவும். பின்னர் ஒரு தட்டில் அவலை கொட்டி, அதில் பிசைந்து வைத்துள்ள தேங்காய் கலவையை போட்டு கலந்து, அதன் மேல் கொத்த…
-
- 1 reply
- 798 views
-
-
அவல் தோசை ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (17:22 IST) தேவையான பொருட்கள்: கெட்டி அவல் - ஒரு கப் புளித்த மோர் - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: அவலை நன்றாக சுத்தம் செய்து மோரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் பொடியாக ஒரு சுற்றுச் சுற்றி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பச்சைமிளகாயை பொடியாக அரிந்து மாவில் சேர்த்து, தோசைமாவு பதத்துக்கு கரைத்து நிதானமான தீயில் தோசைகளாக வார்க்கவும். விருந்தினர்கள் வந்தால் இந்த தோசையை உடனடியாக செய்து அசத்தலாம். புளிப்பு மோர் இல்லையெனில் எலுமிச்சம்பழம் பிழிந்து கொள்ளலாம். அபார ருசியுடன் மெத்தென்று இருக்கும். http://tamil.webdunia.com/article/making-of-dishes-in-t…
-
- 8 replies
- 1.9k views
-
-
தேவையான பொருட்கள்: கெட்டி அவல் - ஒரு கப் புளித்த மோர் - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: அவலை நன்றாக சுத்தம் செய்து மோரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் பொடியாக ஒரு சுற்றுச் சுற்றி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பச்சைமிளகாயை பொடியாக அரிந்து மாவில் சேர்த்து, தோசைமாவு பதத்துக்கு கரைத்து நிதானமான தீயில் தோசைகளாக வார்க்கவும். விருந்தினர்கள் வந்தால் இந்த தோசையை உடனடியாக செய்து அசத்தலாம். புளிப்பு மோர் இல்லையெனில் எலுமிச்சம்பழம் பிழிந்து கொள்ளலாம். அபார ருசியுடன் மெத்தென்று இருக்கும். http://tamil.webdunia.com/article/making-of-dishes-in-tamil/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%…
-
- 1 reply
- 676 views
-
-
அவல் பர்ஃபி தேவையான பொருட்கள்: அவல் : 250 கிராம் சர்க்கரை : 400 கிராம் முந்திரி பருப்பு : 7 நிலக்கடலை : ஒரு குழிக் கரண்டி நெய் : 100 கிராம் செய்முறை: ஒரு அடிகனமான பாத்திரத்தில் அவலை லேசாக வறுத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பையும், தோல் நீக்கிய நிலக்கடலையையும் வறுத்து வைத்துக் கொள்ளவும். இவற்றை தனித் தனியே மிக்ஸியில் கரகரவென்று அரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சர்க்கரையைப் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு, சர்க்கரை நன்றாகக் கரையும் வரை காய்ச்சவும். சர்க்கரை நன்றாகக் கரைந்தவுடன் அரைத்து வைத்துள்ள அவலை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறவும். அவல் பாதி வேக்காடு வந்ததும் பொடித்து வைத்துள்ள முந்திரிப் பருப்பையும், நிலக் கடலையையும் க…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 558 views
-
-
அவல் போண்டா செய்ய தெரிந்து கொள்வோம்... தேவையான பொருட்கள் : தட்டை அவல் - ஒரு கப் உருளைக்கிழங்கு - ஒன்று வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 3 கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன் தயிர் - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 200 கிராம் உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தேவையான அளவு செய்முறை: * உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். அவலை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்த பின் தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொ…
-
- 0 replies
- 687 views
-
-
அவல் லட்டு செய்யும்முறை தேவையான பொருட்கள் அவல் - 1 கப் தேங்காய் துருவல் - 1/4 கப் சக்கரை -1 கப் ஏலப்பொடி -1 சிட்டிகை அவலை சுத்தம் செய்து ரவைபோல் உடைக்கவும் .இதனுடன் சக்கரை சேர்த்து அரைக்கவும் .பின்பு தேங்காய் துருவல் , ஏலப்பொடி சேர்த்து மெதுவாக அரைத்து எடுக்கவும் .சட்டியில் சிறிது நெய் விட்டு சூடாகியதும் இந்த கலவையை அதில் கொட்டி கிளறி பின் உருண்டை பிடிக்கவும . அவல் லட்டு தயார் .
-
- 8 replies
- 3.4k views
-
-
நவராத்திரியில் கடலைக்கு [சுண்டல்] எத்தனை முக்கியம் இருக்கோ; அவலுக்கும் உண்டு. 'அவல் கடலை' என்று சேர்த்தே அழைப்பது ஈழத்தில் உள்ள வழக்கம். நவராத்திரி தினங்களில் அவல் நிச்சயம் இருக்கும். ஈழத்தில் காலை நேர உணவாகவும் அவல் ஆவதுண்டு. ஊருக்கு போகும் நேரத்தில் பெரியத்தையின் அவலுக்காகவே காலையில் அவர் வீட்டுக்கு அண்ணன்களுடன் போய்விடுவேன். அத்தனை அற்புதமான சுவை. அப்படி வேறு யாருக்குமே சமைக்க தெரியாது என்பது என் கருத்து. புதிதாக துருவிய தேங்காய் பூவையும், சர்க்கரையையும் சேர்த்தால்...என்ன சுவை..என்ன சுவை... அவல் செய்வது ஒன்றும் பெரிய வேலையே இல்லை. ஆனாலும் கைப்பக்குவம் என சொல்வார்களே; அது அடிக்கடி வேலையை காட்ட தான் செய்கின்றது. அவல் - 250 கிராம் துருவிய தேங்காய் பூ - 50 கிரா…
-
- 19 replies
- 4.1k views
-
-
யாழ்ப்பணம் எண்டாலே பனங்கிழங்கு தான் முதலாவதா யாபகம் வரும். வாங்க அந்த பனங்கிழங்கு எப்பிடி அவிக்கிற எண்டும் அதோட சேர்த்து சாப்பிட ஒரு மிளகு சம்பலும் செய்வம் வாங்க. நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 27 replies
- 3.6k views
-
-
இது காரமும் இனிப்பும் கலந்த சிற்றுண்டி. பனங்கிழங்கு கிடைக்கும் காலங்களில் வீட்டில் செய்வார்கள். தேவையான பொருட்கள். 1. அவித்த பனங்கிழங்கு -- 4 2. செத்தல் மிளகாய் - 2 (நடுத்தரம்) 3. மிளகு - 8-10 4. தேங்காய் பூ - 1/2 கப் (125 மி. லி. அளவு கரண்டி) 5. உப்பு - சுவைக்கு ஏற்ப 6. சீனி/சர்க்கரை - 2 மேசை கரண்டி/ சுவைக்கு ஏற்ப. 7. உள்ளி - ஒரு பல்லு, (நடுத்தரம்) செய்முறை 1. அவித்த பனங்கிழங்கை குந்து எடுத்து/ வார்ந்து , சிறிய துண்டுகளாக முறித்து/ வெட்டி கொள்ளவும். சிறிய உரலில் இடிப்பதாயின் 2. செத்தல் மிளகாய், உப்பு, மிளகு என்பவற்றை உரலில் போட்டு நன்கு பொடியாக்கவும். 3. உள்ளியை சேர்த்து இடிக்கவும். 4. முறித்து வைத்த கிழங்கை பகுத…
-
- 23 replies
- 5.1k views
-
-
வயல் அறுப்புகள் முடிந்து விட்டது நண்பர்களுடன் சிறிய வாய்க்காலில் குளிக்க சென்ற வேளை வாய்க்கால் ஓரம் சில கெழுத்தி மீன்கள் விளையாடி எங்களை அழைத்து கொண்டது ஆகா அருகில் சென்று பார்த்தால் நல்ல களி கெழுத்தி என்பார்கள் கிழக்கில் மீன் களை பார்த்ததும் குளிப்பதை நிறுத்தி விட்டு கைகளால் அனைத்தையும் பிடித்து கொண்டோம் நல்ல நெல்லு தின்ற கெழுத்திகள் கொழுத்து இருந்தது இதை என்ன சமையல் செய்யலாம் என்று யோசித்து இருக்க நண்பன் ஒருத்தன் சொன்னான் அவித்து கடைவோம் என்று பிறகென்ன அவித்து கடைந்து உருவிவிட்டோம் தேவையான பொருட் கள் மீன் ஆத்து மீன் ( கெழுத்தி, பனையான் , ஆற்று சிறு மீன் கள் ) மாங்காய் நல்ல புளி மாங்காய் உப்பு கொச்சி சீரக் கொச்சி…
-
- 0 replies
- 696 views
-
-
ஆடி அமாவாசை விரதத்திற்கான சுவையான பாகற்காய் கறி தயாரிக்கும் முறை
-
- 34 replies
- 3.4k views
- 1 follower
-
-
-
ஆடிக்கூழ் செய்முறை 5- 6 பேருக்கு போதுமானது தேவையான பொருட்கள் : அரிசி - 1/2 சுண்டு வறுத்த பயறு - 100 கிராம் கற்கண்டு - 200 கிராம் தேங்காய் - 1 உப்பு - அளவிற்கு தண்ணீர் - 14 தம்ளர் செய்முறை : அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து இடித்தரித்துக் கொள்க . ஒரு தேங்காயை துருவி 4 தம்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பாலை பிழிந்தெடுத்து , இதில் 1/2 தம்ளர் முதல் பாலை எடுத்து வேறாக வைக்கவும் . பின்பு அரித்து வைத்துள்ள மாவில் 1/3 பனங்கு மாவை எடுத்து பாத்திரத்திலிட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத் தம்ளர் முதல் பாலை சிறிது …
-
- 5 replies
- 6.7k views
-
-
ஆடிக்கூழ் செய்வது எப்படி? 16ம் திகதி ஆடிப்பிறப்பாம்...... ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற் பச்சையரிசி இடித்துத் தெள்ளி வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச் சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப் பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே பூவைத் துருவிப் பிழிந்து பனங்க…
-
- 11 replies
- 2.2k views
-
-
ஆடிக்கூழ். நாளை ஆடிப்பிறப்பு. (17.07.2025) ஆடிப்பிறப்பன்று ஆடிக்கூழ் காய்ச்சுதல் அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை பெரும்பாலான (வீடுகளில்) இடங்களில் நடைபெறும் சம்பிரதாயம். ஆடிக்கூழ் செய்யும் முறை 👇 தேவையான பொருட்கள்: 750 கிராம் பனங்கட்டி 1 ¼ கப் சிவப்பு பச்சை அரிசி ½ கப் முழுப் பயறு ½ கப் வறுத்த உளுத்தம் மா ½ கப் தேங்காய் சொட்டு 2 ரின் தேங்காய்ப்பால் (400 மி.லீ x 2) 3 ¼ லீட்டர் தண்ணீர் (-/+) ½ மே.க மிளகு(-) உப்பு செய்முறை: அரிசியை குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்ததாக தண்ணீரை வடித்து, வடியில் வார விடவும். வாரவிட்ட அரிசியை மிக்சியில் அரைத்து, அரிதட்டால் அரித்து எடுக்கவும்( மிளகு சேர்க்க விரும்பினால் அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்). மாவை இரு பங்குகளாக …
-
-
- 2 replies
- 257 views
- 1 follower
-
-
நான் நேற்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கப்போகும் போது ....... கடையில் அரிசி மா என்று நினைத்து , ஐந்து கிலோ ஆட்டா மாவை தெரியாத்தனமாக வாங்கிவிட்டேன் . அதனை வீட்டிற்கு கொண்டுவந்தவுடன் ....... என்ரை மனிசி அதனை பார்த்து , அது அரிசி மா இல்லை , ஆட்டா மா என்று கண்டு பிடித்து விட்டா ..... எங்களுக்கு முன் , பின் ஆட்டாமாவில் சமைத்து பழக்கம் இல்லை . அதன் பெறுமதி குறைவு என்றாலும் உணவுப் பொருட்களை வீணாக்க விரும்பாத கொள்கை உடையவர்கள் நாங்கள் . அதனை வாங்கிய கடையில் திருப்பிக் கொடுக்கலாம் என்றால் ......, வாங்கிய உணவுப் பொருட்களை திரும்ப எடுக்க கூடாதென்பது கடையின் சட்டம் . இப்போ பிரச்சினை என்னவென்றால் ......... அரிசி மாவுக்கும் , ஆட்டா மாவுக்கும் வித்தியாசம் தெரியா…
-
- 67 replies
- 34.5k views
-
-
[size=5]வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் தேங்காய்ப் பால் இன்றியே கறி சமைக்கிறார்கள். இது யாழ்ப்பாண முறையில் (தேங்காய் பால் சேர்க்கும்) முறையிலிருந்து சிறிது வித்தியாசமானது தேவையான பொருட்கள்:[/size] [size=5]ஆட்டிறைச்சி இறைச்சி – 1 கிலோ சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டப் பெற்றவை[/size] [size=5]வெண்காயம் – 2 பெரிய வெண்காயம் நீள்மாக வெட்டப் பெற்றவை[/size] [size=5]சிறிய உருளை கிழங்கு. பெரிதாயின் பாதி போதுமானது - சீவி சிறு துண்டுகளாக வெட்டியவை[/size] [size=5]பச்சை மிளகாய் – 5 மிளகாய் நீட்டாக வெட்டப் பெற்று இரண்டு துண்டாக்கப்பெற்றவை[/size] [size=5]உள்ளி: 5 - 6 பற்கள் நீளமாக பிளந்து இரண்டாக வெட்டப் பெற்றவை[/size] [size=5…
-
- 10 replies
- 6.8k views
-
-
-
-
உலகில் பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணும் மற்றொரு இறைச்சி இது. ஆட்டு இறைச்சியில் கொழுப்பு (Fat) சற்று அதிகம். ஆட்டின் அனைத்து பாகங்களுமே உணவாக உட்கொள்ளப்படுகின்றது. மருத்துவ ரீதியாக ஒவ்வொரு பாகமும் உடலுக்கு ஒவ்வொரு பலனைக் கொடுக்கின்றது. ஆட்டிறைச்சி வாங்கும் போது மிகவும் பார்த்து வாங்குதல் அவசியம். இளம் ஆட்டின் கறி சுவையாக இருக்கும். மிருதுவாகவும் இருக்கும். கறியின் கொழுப்பு வெண்மை நிறமாக இருத்தல் வேண்டும். மஞ்சள் நிறமாக இருந்தால் சற்று முற்றின ஆடு என்று கொள்ளலாம். கறியின் நிறம் சற்று மங்கிய சிவப்பாய் இருக்க வேண்டும். முற்றின கறியாக இருந்தால், சிறிது வினிகர், எலுமிச்சை சாறு சேர்த்து வேக வைப்பதின் மூலம் சற்று மிருதுவாக்கலாம். ஆட்டு இறைச்சி 100 கிராம் உண்பதில் அடங…
-
- 1 reply
- 9.2k views
-