நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
Crème brûlée ( எரியூட்டிய கறமல் புடிங் ) . நான் ஆரம்பகாலங்களில் உணவகத்தில் உதவி சமயல்காறராக வேலை செய்த பொழுது எனது செஃப் மூலம் கற்றுக் கொண்டது . இனிப்பு பதார்த்த வகையைச் சேர்ந்த இந்தப் பதார்த்தம் செய்வதற்கு மிகவும் இலகுவனது . சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிட்டதன் பின்பு விரும்பி இதைச் சாப்பிடுவார்கள் . 4 பேருக்குச் செய்ய , தேவையானவை: மஞ்சள் முட்டைக் கரு 5. சீனி 100 கிறாம் . 100 வீதம் கிறீம் பால் 50 cl. வனிலா பிஃளேவர் 1 தேக்கரண்டி . பழுப்புச் சீனி ( மண்ணிற சீனி ) தேவையான அளவு . பக்குவம் : ஒரு பெரிய கிண்ணத்தில் முட்டை மஞ்சள்க் கருவையும் சீனியையும் நன்றாக நுரை வரும் வரை அடியுங்கள் . பின்பு பாலை சிறிது சிறிதாகக் கலக்கி நன்றாக அடியுங…
-
- 11 replies
- 2.4k views
-
-
வெள்ளை அரிசி நூடில்ஸ் & தந்தூரிக் கோழிப் பொரியல் & குழம்பு வெள்ளை அரிசி நூடில்ஸ் (பல கடைகளில் ஊறவைத்து உடனே சமைப்பதற்குரிய ரைஸ் நூடில்ஸும் விற்பனை செய்கிறார்கள்) 1/4 பச்சை இலைக் கோவா (மெல்லிதாக அரிந்தது) 3-4 தண்டு செலரி(மிகச் சிறிய துண்டுகளாக வெட்டியது) 100 கிராம் பீன்ஸ் முளை 3 கரட் (மெல்லிதாக வெட்டியது சமையல் ஒலிவொயில் (தேவையான அளவு) 3 4 மேசைக் கரண்டி- சோயா சோஸ் உப்பு (தேவையான அளவு) ஒரு பாத்திரத்தில் குளிர் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். none stick பாத்திரத்தில் சமையல் ஒலிவொயில் தேவையான அளவு விட்டு எண்ணெய் நன்றாகக் சூடேறும் போது வெட்டியா மரக்கறிகளை சட்டியில் போட்டு, மரக் கரண்டியால் கிளறிய படியே பொரியவிட வேண்டும். அரைவாசி பொரிந்து வர…
-
- 13 replies
- 2.5k views
-
-
சிம்பிளான... உருளைக்கிழங்கு ரோஸ்ட் உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அதிலும் அதனை ரோஸ்ட் செய்து சாம்பார் சாதத்துடன் சாப்பிட பலருக்கும் பிடிக்கும். உங்களுக்கு மிகவும் எளிமையான முறையில் உருளைக்கிழங்கு ரோஸ்ட் எப்படி செய்வதென்று தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள். தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது) கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் …
-
- 0 replies
- 802 views
-
-
தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு- 250g வெங்காயம் - 100g பச்சை மிளகாய் - 3 மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி மசாலாத்தூள் -1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை,உப்பு , எண்ணெய் - தேவையான அளவு செய்முறை உருளைக்கிழங்கை தோல்சீவி மெல்லிய சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும் . வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயையும் சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் சட்டியில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் , கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் அரைப்பதத்திற்கு வெந்ததும் மிளகாய்த்தூள், உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் 1…
-
- 1 reply
- 864 views
-
-
அனைவருக்கும் இனிய கொத்துரொட்டி வணக்கங்கள்... எனக்கு கொத்துரொட்டி எண்டால் நல்ல விருப்பம்.. வீட்டில பக்கத்தில சாப்பாட்டு கடை ஒண்டு இருக்கிது. அதில சிலது கொத்துரொட்டி வாங்கி சாப்பிடுறது. சிலது நான் வீட்டில சொல்லிறது என்ன நான் கடையில வாங்கி சாப்பிட்டது எண்டு. சிலது சொல்லிறது இல்ல.. அப்ப என்ன எண்டால் கொத்துரொட்டி ஆசை வந்த உடன நான் கடைசியா மாட்டு கொத்து ரொட்டி பார்சல் ஒண்டு வாங்கிக்கொண்டு வந்து வீட்டில வச்சு சாப்பிட்டன். கடையில மாட்டு கொத்து மாத்திரம்தான் இருக்கிது எண்டு சொல்லிச்சீனம். சரி எண்டு அத வாங்கினன். பிறகு என்ன எண்டால்.. வீட்ட போன உடன சாப்பாட்டு பார்சலப்பாத்து அம்மா கேட்டா உது என்ன எண்டு. நான் மாட்டுகொத்துரொட்டி எண்டு சொன்னன். ஆ... எண்டு சொல்லி கத்திப்போட்ட…
-
- 52 replies
- 12.5k views
-
-
அகத்திக்கீரை வறை அகத்திக்கீரை பொரியல் செய்வது மிகவும் சுலபம். கீரை வகைளில் அகத்திக்கீரை மிகவும் நல்லது பொதுவாக அசைவ உணவு அதிகம் சாப்பிடுபவர்கள் இதுபோன்ற கீரைகளை பொரியல் செய்து சாப்பிடுவது நல்லதாகும். இதுபோன்ற பொரியல் செய்வதற்கு அதிக நேரம் தேவை இல்லை. தேவையான பொருள்கள்: ஒரு கட்டு அகத்திக்கீரை ஒரு பெரிய வெங்காயம் ஒரு தக்காளி இரண்டு பச்சை மிளகாய் கொஞ்சம் பூண்டு ஒரு டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன் சமையல் எண்ணெய் அரை டீஸ்பூன் பெருங்கயப்போடி கொஞ்சம் தேங்காய் துருவல் கொஞ்சம் கருவேப்பிலை கொஞ்சம் மல்லி இலை தேவையான அளவு உப்பு சமைக்கும் முறை: அகத்திக்கீரை காம்பை எடுத்துவிட்டு மிக சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் நன்றாக கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் வை…
-
- 1 reply
- 6.4k views
-
-
வாங்க இண்டைக்கு உடம்புக்கு மிகவும் நல்லதும், தடிமல், இருமல், காய்ச்சல், நெஞ்சு சளி என்பவற்றை இலகுவா குணமாக்கும் ஒரு தேநீர் செய்யிற எப்பிடி எண்டு பாப்பம், முதலாவதா சுக்கு, மல்லி மிளகு வச்சு ஒரு தூள் செய்து, அத வச்சு எப்பிடி இலகுவான ஒரு தேனீர் செய்யிற எண்டும் பாப்பம் வாங்க, நீங்களும் இத மாதிரி செய்து எப்பிடி வந்தது எண்டு சொல்லுங்கோ.
-
- 0 replies
- 963 views
-
-
இறால் தேங்காய்ப் பால் காரக் குழம்பு சேகரிக்க வேண்டியவை இறால் - 20 வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 1 பெரும்சீரகம் – ¼ தேக்கரண்டி வெந்தயம் – ¼ தேக்கரண்டி தட்டிய பூண்டு – 4 மிளகாய்த் தூள் – 1 ரீ ஸ்பூன் மல்லித் தூள் – ½ ரிஸ்பூன் மஞ்சள் – ¼ ரிஸ்பூன் தேங்காய்ப்பால் – ¼ கப் உப்பு – தேவைக்கு புளிக்கரைசல் – தேவைக்கு ரம்பை – 4 துண்டு கறிவேற்பிலை – சிறிதளவு. ஓயில் – 1 டேபிள் ஸ்பூன் தயாரிப்பு இறாலை தலை வால் நீக்கி கோதுகளைக் கழற்றி, பிடுங்கிச் சுத்தம் செய்யுங்கள். உடம்பின் மேற்புறத்தைக் கீறி, சாப்பாட்டுக் குடலை எடுத்துவிடுங்கள். நன்கு கழுவி, நீர் வடியவிட்டு கோப்பையில் எடுங்கள். ஓயிலில் சோம்பு, வெந்தயம், பூண்டு வதக்கி, பச்சை மிளகாய் வெங்காயம…
-
- 2 replies
- 872 views
-
-
தேவையான பொருட்கள் பெரிய மக்கரல் மீன் - 2 (சிறிய துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும்) மிளகாய் தூள் - 3 மேசைக் கரண்டி சின்ன வெங்காயம் - 10 (சிறிய துண்டுகளாக அரியவும்) பச்சை மிளகாய் - 3 (சிறிய துண்டுகளாக அரியவும்) பழப் புளி கரைசல் - கால் கப் (ஒரு தேசிக்காய் உருண்டை அளவு) உள்ளி - 1 பூண்டு தேங்காய்ப் பால் - அரை கப் (கொழுப்பென்பதால் தவிர்ப்பத நல்லது. ஆனால் சுவை.) தண்ணீர் - ஒரு கப் தேசிக்காய் - 1 சின்ன சீரகம், பெருஞ்சீரகம், வெந்தயம் - ஒவ்வொன்றும் ஒரு தேக்கரண்டி அளவு உப்பு /…
-
- 55 replies
- 7.6k views
-
-
வெண்டைக்காய் புளி குழம்பு தேவையானவை வெண்டைக்காய் - 1/4 கிலோ வெங்காயம் - 1/2 கறிவேப்பிலை பூண்டு - 5 பல் மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் புளித்தண்ணீர் - 1/4 கப் உப்பு பெருங்காயத்தூள் - சிறிது தேங்காய்ப்பால் -1/4 கப் கடுகு வெந்தயம் உப்பு எண்ணெய் செய்முறை * வெண்டைக்காயை வட்ட வட்டமாக நறுக்கி, கடாயில் சிறிது எண்ணெய் விட்டு , சிறு தீயில் நன்கு வதக்கி எடுக்கவும். * கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து, வெங்காயம், பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். * அதில் வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் , புளித்தண்ணீர், உப்பு சேர்…
-
- 14 replies
- 11k views
-
-
இந்தியன் ஸ்டைல் சிக்கன் சீசுவான் உங்களுக்கு சிக்கனை எப்போதும் குழம்பு, கிரேவி, ப்ரை என்று செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக சைனீஸ் ரெசிபியான சிக்கன் சீசுவானை இந்தியன் ஸ்டைலில் செய்து சுவையுங்கள். இது அற்புதமான ஓர் ரெசிபி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு... சிக்கன் - 400 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் முட்டை - 1 மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் கிரேவிக்கு... வெங்காயம் - …
-
- 0 replies
- 795 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெசிகா பிராட்லி பதவி, பிபிசி நியூஸ் 4 ஜூன் 2025, 03:22 GMT சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய் போன்று, விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்ற சர்ச்சைக்குரிய கூற்றுகள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. அது எந்த அளவுக்கு உண்மையானது? உங்கள் சமையலறை அலமாரியில் எங்காவது சூரியகாந்தி எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் கொண்ட ஒரு பாட்டில் நிச்சயமாக இருக்கக்கூடும். அவற்றை நீங்கள் சமைக்கப் பயன்படுத்தலாம், அல்லது சாலட்களில் தெளிக்கலாம். விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், தற்போது இந்த எண்ணெய்கள் குறித்துப் பலரும் இணையதளத்தில்…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
தேவையான பொருள்கள் பச்சரிசி - அரை கப் உளுந்து - அரை கப் தேங்காய் - ஒன்று பால் - ஒரு டம்ளர் ஏலக்காய் - சிறிதளவு சர்க்கரை - தேவையான அளவு செய்முறை: * உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு அரைக்கவும். * (தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் காய்ச்சிய பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சர்க்கரை சேர்த்து கலந்து வைக்கவும். * அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் விடவும். * நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். பணியாரத்தை எடுத்து, அதில…
-
- 0 replies
- 645 views
-
-
30 வகை சிங்கப்பூர், மலேசியா ரெசிப்பி! மலேசியர் மட்டுமின்றி இந்தியர், சீனர் என அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய முக்கியமான உணவுகளின் தொகுப்பு இது. இந்தியாவில் கிடைக்காத பொருட்கள் மற்றும் முட்டைக்கு மாற்றாகச் சேர்க்கப்பட வேண்டியவை பற்றியும் குறிப்புகள் உள்ளன. அசைவம் இல்லாமலே, மலேசிய - சிங்கப்பூர் உணவுகளை வெஜிடேரியன்களும் ருசிக்கும் வகையில் ரெசிப்பிகளை அளித்திருக்கிறார் சிங்கப்பூர் சமையல் கலைஞர் அப்ஸரா ஃபரீஜ். புத்தாண்டில் புதுச் சுவை அறிவோம்! பேக்ட் குயே தேவையானவை: பாண்டன் இலை - 5, மைதா மாவு - ஒரு கப், முட்டை - ஒன்று (விரும்பாதவர்கள் கண்டன்ஸ்டு மில்க் பயன்படுத்தலாம்), சர்க்கரை - 1/2 கப், கெட்டியான தேங்காய்ப்பால் - 150 மில்லி, எண்ணெ…
-
- 2 replies
- 3.9k views
-
-
மெல்லியதான அரிசி நூடுல்ஸ் - அரைக்கிலோ கேரட் - ஒன்று சிவப்பு குடமிளகாய் - ஒன்று பச்சைகுடமிளகாய் - ஒன்று முளைவிட்ட பச்சைபயிறு - இரண்டு கோப்பை முட்டகோஸ் - இரண்டு கோப்பை நறுக்கிய செல்லரி தண்டு - அரைக் கோபை வெங்காயத்தாள் - அரை கோப்பை நசுக்கிய பூண்டு - இரண்டு பற்கள் நசுக்கிய இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு வெஜிடபிள் ஸ்டாக்(அ)சூப் - அரைக்கோபை சர்க்கரை - ஒரு தேக்கரண்டி உப்புத்தூள் - அரைதேக்கரண்டி மிளகுத்தூள் - அரைதேக்கரண்டி கறி மசாலா - ஒரு தேக்கரண்…
-
- 1 reply
- 608 views
-
-
யாழ்ப்பாணத்து புளி கஞ்சி...... .தேவையான பொருள்... குத்தரிசி...1கப் றால்..100கிராம்...பைத்தங்காய் நறுக்கியது 1 கப் முருங்கை இலை.... 1 கப்....வெங்காயம்...5 உள்ளி....ஒரு முளு பூண்டு.. மஞ்சள் 2 ஸ்பூன் மிளகு 2ஸ்பூன் சின்ன சிரகம்2ஸ்பூன் தேங்காய் பாதி....உப்பு தேவையான அளவு ஒரு எலுமிச்சை பழம்
-
- 7 replies
- 5.1k views
-
-
லக்னோ ஸ்டைல் பாஸ்டு சிக்கன் கொழம்பு. 6 சிக்கன் தொடை. மொளாகா தூள் நெய்யி 4 டீஷ்ஸ்பூன் ( தேக்கறண்டி) அரைச்ச ஒனியன் அரை கப் அரைச்ச கஜு அரை கப் கோகோனட்டு கிரீம் ஒரு கப் 4 ஏலம் 2 ஸ்டிக் கருவா யோக்கர்ட் மஞ்சள் கார்லிக் பேஸ்ட் சால்டு சிக்கனை யோக்கர்ட், கார்லிக் பேஸ்ட், மஞ்சள், சால்டு கலந்து மிக்ஸ்ஸு பண்ணி வைக்கவும். வாணலியில் நெய்யி விட்டு ஏலம் கருவா ஒனியன் இட்டு வதக்கவும் ஒனியன் பிறவுண் கலர் வந்தவுடன் மொளாகா தூள் 2 டேபிள் ஸ்பூன் (மேசைக்கறண்டி) வாட்டரு விட்டு கொதிக்க விடவும்.. வாட்டரு வத்தியதும் சிக்கனை போட்டு பெறட்டவும்.. சிக்கன் எல்லாப்பக்கமும் பொரிந்ததும் கோகோனட்டு கிரீம், கஜு போட்டு அரைமனித்தியாலம் ஸ்ட…
-
- 1 reply
- 708 views
-
-
. யாழ்ப்பாணத்து தமிழர்களின் அடையாளங்களில் உணவுக்கு முக்கிய இடம் உள்ளது. சுவையான யாழ் சமையல் முறைகள் தற்போது மாற்றம் அடைந்து வருவதுடன் புழக்கத்தில் இருந்து இல்லாமல் போவதும் கவலைக்குரிய ஒரு விடயமாகும். கூழ், கஞ்சி, களி போன்ற தமிழர்களுக்கே உரிய உணவுகளை எவ்வாறு சமைப்பது என்பதை எம்மவர்கள் மறந்து விட்டார்கள். கூழ் காய்ச்ச தேவையான பொருட்கள்: ஒடியல் மா - 100 கிராம் கழுவின இறால் - 100 கிராம் கழுவின பாதி நண்டு - 8 மீன்தலை - 1 புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி பயிற்றங்காய் - 10 புளி - ஒரு சின்ன உருண்டை பாலாக்கொட்டை - 100 கிராம் சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம் தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவ…
-
- 29 replies
- 13k views
-
-
வாரணாசி தெருவோர உணவகங்களில் சாப்பாட்டு அசுரன்
-
- 2 replies
- 751 views
-
-
பெருநாள் என்றாலே எல்லார் வீட்டிலும் இனிப்பு நிச்சயம் இருக்கும். அதுவும் வட்லாப்பம் தான் பெரும்பாலான வீடுகளில் ஸ்பெஷல். அதன் எளிமையான வித்தியாசமான செய்முறை தேவையான பொருட்கள் முட்டை - 8 காய்ச்சிய பசும் பால் – 1 ½ லிட்டர் சீனி – 2 ரைஸ் குக்கர் கப் வன்னிலா எசன்ஸ் – சில சொட்டுக்கள் முந்திரி 10 ஏலக்காய் 6 நெய் 20 மில்லி செய்முறை பாலை காய்ச்சி ஆறவைத்து வன்னிலா எசன்ஸ் சேர்க்கவும். முட்டையையும் சீனியையும் நுரை வரும் அளவுக்கு மிக்ஸ்யில் அடித்து வைக்கவும். முந்திரி மற்றும் தோல் நீக்கப்பட்ட ஏலக்காய் (விதை மட்டும்) மிக்சியில் இட்டு ஒரு கல் உப்பிட்டு மிக சற்று தண்ணீர் இட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடித்து வைத்த முட்டையையும் சீனியையும் சேர்த்து வடித்து ஆறிய பா…
-
- 4 replies
- 3.3k views
-
-
தோசைக்கறி. https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t1.0-9/16083_832481853437538_6128921188676150796_n.jpg https://scontent-b-ams.xx.fbcdn.net/hphotos-xap1/t1.0-9/10514473_832481850104205_9187206269219250217_n.jpg தேவையான பொருட்கள்: --- கத்தரிக்காய் _________________________ 200 கி. --- வெங்காயம் __________________________ 01 பெரிது. --- பச்சைமிளகாய் _______________________ 4 , 5 . --- கடுகு , பெருஞ்சீரகம் , உப்பு , எண்ணை , கறிவேப்பிலை , பழப்புளி ____ தேவையான அளவு. --- தனிச் செத்தல் மிளகாய்த் தூள் ________ 01 மேசைக் கரண்டி.( தூள் நருவல் , நொருவலாய் இருந்தால் நல்லது.) --- இல்லையேனில் சதா. தூள் பாவிக்கலாம். உறைப்பு வேணுமெனில் …
-
- 13 replies
- 2.6k views
-
-
பூண்டு( உள்ளி) ஊறுகாய் தேவையான் பொருட்கள்: வெள்ளைப்பூண்டு உரித்தது( உள்ளி)- 4 கோப்பை உப்பு தூளு- ஒரு கோப்பை தமிழீழ மிளகாய்த்தூள்- ஒரு கோப்பை வெந்தயம்- ஒரு மேஜைக்கரண்டி நற்சீரகம்- ஒரு மேஜைக்கரண்டி பெருங்காயப்பொடி- சிறிதளவு....அடடே மறந்திட்டேனுங்க மீண்டும் தக்காளி ரசத்துக்கு போரனுங்க மீண்டும் வாரன்...
-
- 18 replies
- 4.4k views
-
-
படத்தின் காப்புரிமை FURG இந்த புகைப்படத்தைப் பார்த்தால் சாதாரண ரொட்டியைப் போலவே தோன்றும். ஆனால் இது அதிக புரதச்சத்து கொண்ட கரப்பான் பூச்சி ரொட்டி. இந்த ரொட்டியைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் மாவில், உலர்த்தி தூளாக்கப்பட்ட கரப்பான் பூச்சி மாவு கலக்கப்படும். அதிர்ச்சியாக இருக்கிறதா? அச்சம் வேண்டாம்… எல்லா ரொட்டிகளும் இந்த வகையைச் சேர்ந்ததில்லை. இந்த 'ஸ்பெஷல்' ரொட்டியின் விலையும் கொஞ்சம் அதிகம்தான். பொதுவாக சாமன்கள் வைத்திருக்கும் அறையிலும், அசுத்தமான இடங்களிலும் சுற்றும் கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே அருவருப்பாகத் தோன்றும் நிலையில், எப்படி அதை சாப்பிடுவது என்று தோன்றுகிறதா? சரி இந்த சிந்தனை எப்படி தோன்றியது? ஊட்டச்சத்து குறைபாடு, உலகில் உணவு பற்றாக்குற…
-
- 0 replies
- 766 views
-
-
நீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் தால் இதுவரை பாகற்காயைக் கொண்டு பொரியல், புளிக்குழம்பு என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு தால் செய்திருக்கமாட்டீர்கள். இந்த பாகற்காய் தால் நீரிழிவு நோயாளிகளின் வாய்க்கு சுவைத் தரும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த பாகற்காய் தால் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பாகற்காய் - 1 (நறுக்கியது) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) துவரம் பருப்பு - 1/2 கப் எண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தாளிப்பதற்கு... எண்ணெய் - 1 டேபிள்…
-
- 0 replies
- 2k views
-
-
Thalapath Mirisata Ingredients: Thalapath 500g Pepper 2 tsp Chilli powder 4 tsp Garlic 3 cloves Cardamom 2 Ginger 1/2 inch Cloves 3 Goraka 3 pcs Onion Rampe Curry leaves Oil Cinnamon 1/2 inch Green chilli 1 Method: Cut and clean thalapath. Grind pepper, garlic, cloves, cardamom, ginger and goraka. If it’s difficult to grind, add little water. Heat a saucepan and roast chilli powder. Heat oil. Add onion, rampa and curry leaves. Add fish, roasted chilli powder and the paste. Add cinnamon, green chilli, salt and water. Cook 15- 20 minutes. …
-
- 1 reply
- 1.1k views
-