நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
தேவையான பொருட்கள மாங்காய் வற்றல் - 8 துண்டுகள், சுண்டைக்காய் வத்தல் - 12, , சி. வெங்காயம் - 10, , பூண்டுபல் - 10, , மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி, , கொத்தமல்லிதூள் - 3 தேக்கரண்டி , தேங்காய்துருவல் - 1/4 கப், கடுகு - 1 தேக்கரண்டி, , உ. பருப்பு - 1/2 தேக்கரண்டி, , வெந்தயம் - 1/2 தேக்கரண்டி , சீரகம் - 1/2 தேக்கரண்டி, வெல்லம் - ஒரு நெல்லிக்காய் அளவு, , கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு. , செய்முறை மாங்காய் வற்றல் 15 நிமிடம் சுடுதண்ணீரில் ஊறவிடவும். , தேங்காயை அரைத்து வைத்துக்கொள்ளவும். சி.வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும். , ஒரு வாணலியில் 1/4 கப் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும் கடுகு, உ. பருப்பு வெந்தயம், சீரகம், கறி…
-
- 1 reply
- 3k views
-
-
. யாழ்ப்பாணத்து தமிழர்களின் அடையாளங்களில் உணவுக்கு முக்கிய இடம் உள்ளது. சுவையான யாழ் சமையல் முறைகள் தற்போது மாற்றம் அடைந்து வருவதுடன் புழக்கத்தில் இருந்து இல்லாமல் போவதும் கவலைக்குரிய ஒரு விடயமாகும். கூழ், கஞ்சி, களி போன்ற தமிழர்களுக்கே உரிய உணவுகளை எவ்வாறு சமைப்பது என்பதை எம்மவர்கள் மறந்து விட்டார்கள். கூழ் காய்ச்ச தேவையான பொருட்கள்: ஒடியல் மா - 100 கிராம் கழுவின இறால் - 100 கிராம் கழுவின பாதி நண்டு - 8 மீன்தலை - 1 புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி பயிற்றங்காய் - 10 புளி - ஒரு சின்ன உருண்டை பாலாக்கொட்டை - 100 கிராம் சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம் தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவ…
-
- 29 replies
- 13.1k views
-
-
அசைவ உணவுப்பிரியர்கள் பலருக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு என்றால் அது மீன் பொரியல் என சொல்லலாமா? என்ன தான் சுவையாக கறி வைத்தாலும், அதோடு சாப்பிட மீன் பொரியல் இல்லை என்றால் கொஞ்சம் கஸ்டம் தான். அதுவும் படகிலேயே போய் மீனை பிடித்து பொரித்தால்?! யம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. இத்தனை அருமை பெருமைகளை தனக்குள் அடக்கிய மீன் பொரியலை செய்வதொன்றும் பெரிய வேலை கிடையாது. மிகவும் எளிதான செய்முறை தான். தேவையானவை: உங்களுக்கு பிடித்த மீன் 5 துண்டுகள் (சின்ன மீன் என்றால் 5 மீன்கள்) மிளகாய் தூள் 1 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க மல்லி தூள் 1/2 தே.க கரைத்த புளி 1 தே.க உப்பு தேவைக்கேற்ப பொரிக்க எந்த எண்ணெய் பயனடுத்துவீர்களே, அது கொஞ்சம் செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் எண்ணெயை வி…
-
- 25 replies
- 4.5k views
-
-
Roasted Lamb & Garlic Mayonnaise Sandwich &feature=dir
-
- 3 replies
- 893 views
-
-
அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா சமையல் பகுதிக்கும் வந்தாச்சு இங்கதான் சமையல் வல்லுனர்கள்/சமையல் கலைஞர்கள் இருக்கிறீங்களே . எனக்கும் கொஞ்சம் சுவையா சமைக்க உதவி செய்யுங்கோ. என்ர நிறுவனத்தில எங்கட குழுவில 5 பேர் இருக்கிறம். ஒவ்வொரு வியாழக் கிழமையும் ஒராள் சமைக்கவேணும். வாற வியாழன் திரும்ப என்ர முறை. ஏற்கனவே இரண்டு தரம் ஏதோ தட்டுத் தடுமாறி எனக்கு தெரிஞ்சத வைச்சு சமைச்சுக் குடுத்திட்டன். இரண்டு தரமும் கோழியை வைச்சு விளையாடியாச்சு. இனி வேற ஏதாவது புதுசா செய்ய வேணும் . சுலபமா - கனநேரம் செலவளிக்காமல் (30 - 50 நிமிடங்களுக்குள்) செய்யக் கூடிய ஒரு உணவுக்கு செய்முறை சொல்லுங்கோ. புண்ணியமாப் போகும்
-
- 40 replies
- 11.4k views
-
-
Sacla- தக்காளி & மிளகாய் கோழிக் குழம்பு தேவையான பொருட்கள் கோழிக் கால்- 4 சிவப்பு வெங்காயம்- 1 கரட்- 2 பீன்ஸ்- 5 எண்ணெய்- தேவைக்கு ஏற்ப கருவேப்பிலை- தேவைக்கு ஏற்ப ரம்பை இலை/ கொத்தமல்லி இலை- தேவைக்கு ஏற்ப இஞ்சி- சிறிதளவு உள்ளி- சிறிதளவு உப்பு- சிறிதளவு தேசிக்காய்- 1/2 மிளகாய்த் தூள்- தேவைக்கு ஏற்ப தயிர் (low fat)- 200g Sacla' Stir Through sauces2-3 கரண்டி செய்முறை(தயார் படுத்த எடுக்கும் நேரம்- 10 நிமிடங்கள்) 1) கோழிக் காலின் தோலை நீக்கி இரண்டாக வேண்டும்.(பெரிய துண்டுகள்) 2) உள்ளி, இஞ்சி இரண்டையும் நன்றாக அரைத்து எடுக்கவேண்டும். 3) கோழித் துண்டுகளுடன் உள்ளி இஞ்சிச் கலவையையும் சேர்த்து, தயிர், உப்பு மிளகாய…
-
- 3 replies
- 2.4k views
-
-
. ஆட்டுக்கால் சூப். தேவையான பொருட்கள்; ஆட்டின் பின் கால்கள் இரண்டு. மூன்று பெரிய வெங்காயம். 6 செத்தல் மிளகாய். பதினைந்து உள்ளி. 50 கிராம் மல்லி. இஞ்சி . மிளகு. பெருஞ்சீரகம். தக்காளிப் பழம் ஒன்று. எலும்பிச்சம் பழம் ஒன்று. சிறிது மஞ்சள் தூள். உப்பு. செய் முறை; ஆட்டின் கால்களில் உள்ள இறைச்சியை நீக்கி விட்டு, அதன் கால்களை சிறு துண்டுகளாக பெரிய கத்தியால் வெட்டவும். அதனை ஒரு பெரிய பாத்திரத்தில் இட்டு ஒன்றரை லீற்றர் தண்ணீரும் , உப்பும் போட்டு நன்கு அவிய விடவும். வெங்காயத்தை நீளமாக சிறு துண்டுகளாக வெட்டவும். செத்தல் மிளகாயை சிறிய துண்டுகளாக வெட்டவும். மல்லி, பெருஞ்சீரகம், மிளகு போன்றவற்றை கிறைண்டரி…
-
- 31 replies
- 8.8k views
-
-
பொரி அரிசி மா பொரி அரிசி மா எண்டா பொதுவா எல்லாருக்கும் என்ன எண்டு தெரியும் என நினைக்கிறன். ஊரிலை இருக்கேக்கை பொரி அரிசி மா பொதுவா 4 மணி தேத்தண்ணியோட சாப்பிடுற சிற்றுண்டி. சில நேரம் வீட்டிலை பெரும்பாலான ஆக்கள் விரதம் பிடிக்கினம், எண்டால் விரதம் பிடிக்காத ஆக்களுக்கு காலை உணவாகவும் இதை சாப்பிடுவினம். சின்னனிலை எனக்கு பொரி அரிசி மா சாப்பிட நல்ல விருப்பம். புலம் பெயர்ந்தாப்பிறகு பொரி அரிசி மா சாப்பிடுறக்கு வாய்ப்பு மிக குறைவு அல்லது இல்லாமல் போட்டிது எண்டே சொல்லலாம். எல்லா வகையான மாக்களையும் அரைச்சு விக்கிற தமிழ் வியாபார நிறுவனங்கள் ஏன் இன்னும் பொரி அரிசி மா பக்காம் போகேல்லை எண்டு தெரியேல்லை. புலம் பெயர்ந்த கன பேருக்கு இந்த அனுபவம் இருக்கும் எண்டு நி…
-
- 22 replies
- 6.4k views
-
-
தந்தூரி- பலர் ஏற்கெனவே செய்து சாப்பிட்டு இருப்பீர்கள்... இருந்தாலும், தமிழில் செய்யும் முறையை இன்று இணையத்தில் பார்த்தேன், சுலபமான முறையில் தயாரிக்கப் படும் இக்குறிப்பை யாழ் உறவுகளுக்குப் பயன் படுமே என்று நினைத்து இங்கே இணைக்கிறேன்.
-
- 7 replies
- 2.8k views
-
-
அலுவலகத்தில் வேலை நேரம் தவிர நண்பர்களுடன் அரட்டை அடிப்பதையும் மதிய உணவு நேரத்தில அவர்களுடன் வெளிய போய் சாப்பிடுறதையும் பொழுதுபோக்காக கோண்டவன்தான் இந்த மனிதன். என்னோட கூட்டாலிகளாக கொரியன், சைனீஸ், தாய்வானிஸ், வியற்நாமிஸ், பிலிப்பினிஸ், மொங்கோலியன், ரஸியன், ஜேமனியன், ஈரானியன், துருக்கியன், ஜப்பானியன், அமெரிக்கன், மெக்ஸிகன் எல்லாரும் இருக்காங்க. இப்படி எல்லா நண்பர்களோடயும் சுத்தித்திரிந்து எல்லா நாட்டு சாப்பாடுகளையும் ருஷி பாத்தனான். இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா சாப்பிடுவம்னு யோசித்தபடியே வியற்நாம் நண்பனை கேட்டன் எனக்கு இன்னைக்கு முற்றுமுழுதாக வியற்நாம் முறையில் செய்த உணவு கிடைக்குமிடம் ஒன்றுக்கு கூட்டி செல்லும்படி. சிரித்தபடியே நண்பன் சொன்ணான் நல்ல இடத்துக்கு கொண்டுபோறன் ஆ…
-
- 23 replies
- 2.5k views
-
-
அன்பார்நத மடுறுத்தினர்களே.இங்கு ஒரே விதமான உணவுத்தயாரிப்பக்காண செய்முறைகள் பல உறவுகளினால் வெவ்வேறு இடங்களில் பதியப்பட்டுள்ளது.அவற்றை ஒரே திரியில் இணைத்தால் வாசித்து பயன் உதவியாக இருக்கும்.நன்றி.
-
- 0 replies
- 747 views
-
-
. மொறு மொறுப்பான உழுந்து தோசை. தேவையான பொருட்கள். இரண்டு சுண்டு உழுந்து. இரண்டு சுண்டு வெள்ளை பச்சை அரிசி. இரண்டு மேசைக்கரண்டி வெந்தயம். இரண்டு பெரிய வெங்காயம் அல்லது பன்னிரெண்டு சின்ன வெங்காயம். ஆறு கெட்டு கருவேப்பிலை. வெண்ணெய் (Butter அல்லது Margarine) ஆறு செத்தல் மிளகாய் சிறிது உப்பு கொஞ்சம் மஞ்சள் தூள். அப்பச்சோடாத் தூள் அல்லது ஈஸ்ட் செய்முறை. உழுந்தையும், அரிசியையும், வெந்தயத்தையும் ஒரு நீர் ஊற்றிய பாத்திரத்தில் 5 மணித்தியாலங்கள் ஊற விடவும். ஊறிய பொருட்களை கிறைண்டரில் பசை போல் அரைக்கவும். அரைத்த மாவை பெரிய பாத்திரத்தில் இட்டு அப்பச்சோடாவையும், மஞ்சள் தூளையும் கலந்து 10 மணித்தியாலம் மூடி வைக்கவும். புளி…
-
- 22 replies
- 16.5k views
-
-
. மல்லிகைப் பூப் போல இட்டலி செய்யும் முறை. தேவையான பொருட்கள். இரண்டு சுண்டு உழுந்து, ஒரு சுண்டு வெள்ளை அரிசி (சம்பா அரிசி என்றால் நல்லது), சுவைக்கேற்ப சிறிதளவு உப்பு, மா புளிக்க சிறிதளவு அப்பச்சோடா அல்லது ஈஸ்ட், இட்டலி அவிக்க.... இட்டலி சட்டி முக்கியம். இனி.... எப்படி ஆயத்தப் படுத்துவது என்று பார்ப்போம். உழுந்தை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எட்டு மணித்தியாலம் ஊற விடவும். அதே போல் வேறொரு பாத்திரத்தில் அரிசியையும் ஊற விடவும். ஊறிய உழுந்தையும், அரிசியையும் பசை போல் கிறைண்டரில் அரைக்கவும். அரைத்த உழுந்தையும், அரிசியையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு.... உப்பு, புளிப்பதற்கு தேவையான அளவு ஈஸ்டையும் சேர்த்…
-
- 31 replies
- 24.4k views
-
-
உங்களில் எத்தனை பேருக்கு ஈரல் பிடிக்கும்...ஈரல் சமைப்பதற்கு முன் நன்கு கவனமாக கழுவ வேண்டும், ஈரல் மென்மையானது சமைத்த பிறகு அதன் சிகப்பு நிறம் போய் இருக்க வேண்டும் அத்தோடு அதிக நேரம் அவிய விட்டால் அது இறுகி போய் கடிக்க கஸ்டமாக இருக்கும் ஆகவே கவனமாக சமைக்க வேண்டும்.இனி ஈரல் வறுவல் செய்ய தேவையான பொருட்களை பார்ப்போம்; ஆட்டு ஈரல் அல்லது கோழி ஈரல் 1/2 கிலோ வெங்காயம் 1 உள்ளி 6 அல்லது 7 பல் கருவேப்பிலை தேவையான அளவு மஞ்சல் தேவையான அளவு[1 தேக்கரண்டி] உப்பு தேவையான் அளவு மிளகாய்த் தூள் தேவையான அளவு[3 தேக்கரண்டி] கறுவா 1 துண்டு ஏலக்காய் 2 லவங்கம் 1 எண்னெய் தேவையான அளவு[3தொடக்கம் 5 தேக்கரண்டி] வெங்காயத்தாள் 1 கட்டு இனி எப்படி செய்வது எனப் பார்ப்போம்…
-
- 21 replies
- 11k views
-
-
தேவையான பொருட்கள் துவரம்பருப்பு - 250 கிராம் கடலைப் பருப்பு - 50 கிராம் மிளகாய் வற்றல் - 4 தேங்காய்த் துருவல் - 1/2 கப் பெருங்காயப் பொடி - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 6 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சாம்பார் பொடி - 6 தேக்கரண்டி புளி - எலுமிச்சம் பழ அளவு மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - 1 கறிவேப்பிலை - தேவையான அளவு செய்முறை : பருப்புகளை இரண்டு மணி நேரம் ஊற வைத்து கழுவி தண்ணீரை வடிய வைக்கவும். வடித்ததும் உப்பு, மிளகாய் வற்றல், தேங்காய் சேர்த்து உசிலிக்கு அரைப்பது போல் அரைக்கவும். புளியைத் தண்ணீர் அதிகம் விட்டுக் கரைத்து உபபு, மஞ்சள் தூள் கலந்து கொதிக்க வைக்கவும். இண்டாலியம் சட்டி அல்லது இருப்புச்சட்டியில் 3 தேக்கரண்டி எண்ணெய…
-
- 4 replies
- 3.7k views
-
-
தேவையானப் பொருட்கள் அரிசி - 2 கப் கத்திரிக்காய் - கால் கிலோ பெரிய வெங்காயம் - 4 தக்காளி - கால் கிலோ பச்சை மிளகாய் - 5 தயிர் - 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் தேங்காய்பால் - 1/2 கப் சோம்பு - 1/2 ஸ்பூன் பட்டை - 1 கிராம்பு - 1 மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன மல்லித்தூள் - 3 ஸ்பூன கடலைப்பருப்பு - 50 கிராம முந்திரி - 10 கிராம் எண்ணெய் – தேவையான அளவு நெய் - 50 கிராம் கறிவேப்பிலை - 1 கொத்து உப்பு - தேவையான அளவு செய்முறை: அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து அத்தனுடன் இஞ்சி பூண்டு விழுத…
-
- 8 replies
- 3.6k views
-
-
http://www.yarlcuisine.com/ யாழ்ப்பாண சமையல் இணைய தளத்திற்கு வருக. இந்த இணையத்தளத்தில், இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாண குடாநாட்டின் சமையல் சாப்பாடு பற்றிய முறைகள், விபரங்கள் ஆகியவற்றைக் காணலாம். யாழ்ப்பாண சமையல் சாப்பாட்டு வகைகள் எந்த முறையில் தனிப்பட்டது என்பதை அறிய ‘About Jaffna' என்ற பக்கத்தைப்படிக்கவும். இந்தத்தளத்தில் யாழ்ப்பாண சமையல் சாப்பாடு பற்றி புலம் பெயர்ந்து வாழும் தற்கால தமிழ் சந்ததியாருக்கும், வருங்கால சந்ததியாருக்கும் எடுத்துக்கூற விரும்புகிறோம். இந்தத்தளத்தில் தந்திருக்கும் சாப்பாட்டு வகைகள் யாவும் யாழ்ப்பாணத்தில் பலகாலமாக வாழ்ந்து இந்தச்சுவையான சிறந்த உணவை உண்டு வந்த தமிழ் குடும்பத்தினரிடமும் எம்மிடமும் இரு…
-
- 20 replies
- 14k views
-
-
தேவையான பொருள்கள் உருளைக்கிழங்கு - 250 கிராம் தக்காளி - 2 பெரிய வெங்காயம் - 3 பச்சைமிளகாய் - 8 கசகசா - 2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி தேங்காய்ச் சொட்டு - 2 துண்டு கறுவா பட்டை - 1 துண்டு எண்ணெய் - 2 மேசைக்கரண்டி எலுமிச்சம்பழம் - 1/2 மூடி மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை கசகசா, பெருஞ்சீரகம், தேங்காய்ச் சொட்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்ககை அவித்து தோல் உரித்து, 4 அல்லது 6 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி கறுவா பட்டை, வெட்டிய வெங்காயம், மிளகாய் என்பனவற்றைப் போட்டு வதக்கவும். அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். பின்னர் மஞ்சள் பொடி மற்றும் அரைத்த மசாலாவைப…
-
- 12 replies
- 3.9k views
-
-
-
பரவை முனியம்மாவின் ...... கிராமத்து விருந்து , பிலாக்கொட்டை பொரியல் . நீங்களும் செய்து பார்க்க கீழே உள்ள சுட்டியை அழுத்தவும். http://www.tubetamil.com/view_video.php?viewkey=9b072b3a5e6f1f3d4c72&page=1&viewtype=&category=
-
- 7 replies
- 6.1k views
-
-
இலைகஞ்சி பற்றி பலருக்கும் தெரிந்து இருக்கும் ஆனால் இன்று இதை காதால் கேட்ககூடாமல் இருக்கிறது நாங்கள் ஊரில் இருக்கும் போது பல இலை கஞ்சிகள் குடித்திருப்போம் என்ன அப்படித்தானே நீங்கள் சுவைத்த இலை கஞ்சிகள் பற்றி குறிப்பை தாருங்கள் எனக்கு தெரிந்தது முல்லை இலை கஞ்சி ஆனால் செய்முறை தெரியாது இலைகஞ்சி பற்றி தெரிந்தவர்கள் செய்முறை தரவும்
-
- 7 replies
- 6.2k views
-
-
-
- 32 replies
- 6.3k views
-
-
| குடமிளகாய் சாம்பார் தேவையான பொருட்கள் குடமிளகாய்-1 கேரட்-1 தக்காளி-1 துவரம்பருப்பு-1 கப் சாம்பார்பொடி-2 டீஸ்பூன் காயம்-சிறிதளவு புளி-எலுமிச்சை அளவு எண்ணெய்-1 டீஸ்பூன் கடுகு-1ஃ2 டீஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன் கறிவேப்பிலை-1 இணுக்கு செய்முறை 1.காய்கறிகளை அலம்பி நறுக்கி வைத்துக் கொள்ளவும். 2.வாணலியில் எண்ணெய் விட்டு குடமிளகாய்தக்காளிகேரட் போன்ற காய்கறிகளைச் சேர்த்து மூடி வைத்து வதக்கவும். 3.1 டம்ளர் தண்ணீர் விட்டு உப்புமஞ்சள் பொடிஇசாம்பார் பொடி போட்டு வேக விடவும். 4.ஓரளவு கொதித்தவுடன் புளித்தண்ணீரைச் சேர்க்கவும். 5.காய்கறிகள் வெந்தவுடன் வெந்த பருப்பைச் சேர்த்து கொதிக்க விடவும். 6.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பி…
-
- 1 reply
- 1.8k views
-
-
ஆட்டிறைச்சி அரை கிலோ மைசுhர் பருப்பு அரை கிலோ சுக்கினி( பிக்கினி அல்ல)அரை கிலோ வெங்காயம் 2 பெரியது பச்சைமிளகாய் உங்கள் உறைப்புக்கு எற்றால் போல உள்ளி 5 இஞ்சி ஒரு துண்டு உப்பு கறுவா பட்டை ஏலக்காய் தக்காளிபழம் 5பெரியது மல்லி இலை சிறிதாக வெட்டியது தேசிக்காய் 1 எண்ணை கொஞ்சம் செய்முறை: முதலில் வெங்காயம் ப.மிளகாய் உள்ளி இஞ்சி இவற்ரை அரைக்கவும் இறைச்சியை ஓரளவு பெரிய துண்டுகளாக வெட்டவும் சக்கினியையும் அப்படியே வெட்டவும் தக்காளியையும் வெட்டி வைக்கவும் அடுப்பில் சட்டியை வைத்து சிறிதளவு எண்ணை ஊற்றி கறுவா ஏலக்காய் போடவும் பின் அரைத்த விழுதை போடவும் அதன் பச்சை மணம் போகும் வரை சமைக்கவும் பின் இறைச்சியை போடவும் பின் பருப்பு அதன் பின் சுக…
-
- 7 replies
- 2.7k views
-
-
சமையல் என்பது முறை அல்ல, .தொழில் அல்ல..அது ஒரு கலை... என்றுமே எவருக்கும் அம்மாவின் சமையல் சுவைக்கும். உலகம் முழுதும் சுற்றினாலும், பல் நூறு உணவு உண்டாலும், நாக்கின் அடியில் அம்மாவின் உணவின் சுவை என்றுமே ஒட்டியிருந்து, நினைக்கும் நேரத்தில் இனிமை தரும். நான் பல இடங்களில் கை கழுவினாலும் இன்றும் அம்மாவினதும் யாழ்ப்பாண உணவினதும் சுவை என் நாக்கு முழுதும் ஒட்டியிருக்கு. சமையல் கலையில் ஈடுபாடு இருப்பதால், அம்மா எப்படி யாழ்ப்பாண முறையில் சமைத்தார் என்ப்தை அறிய ஆவலாக இருக்கின்றேன் உங்களில் யாருக்கேனும் பின்வரும் உணவை யாழ்பாண முறையில் தயாரிக்கும் முறை தெரிந்தால் தரவும்....வீட்டில் வார இறுதி நாட்களில் சமைத்து பார்க்க ஆவலாக இருக்கின்றேன் 1. மீன் பொரியல் (மிக இலகுவானது …
-
- 25 replies
- 11.7k views
-