Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. (ஏற்கெனவே 2005 மாசியில் எழுதிய சிறுகதை. இறுதியாக எழுதிய கதையும்கூட. சுனாமியின் நினைவாக மீண்டும் இங்கே..) அது ஒரு 'சொக்கலேற்' தொழிற்சாலை. ஏறக்குறைய ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட தொழிலகம். அந்த நகரத்தில் அமைந்துள்ள குறிப்பிட்டுக் கூறக்கூடிய பெரிய தயாரிப்பு ஆலை. பிற நாடுகளில் இருந்து பெரிய சதுரப் பாளங்களாக வரும் கொக்கோக் கட்டிகளை அரைத்துப் பாணியாகவும் தூளாகவும் மாற்றும் பகுதி அவற்றுடன் விதம்விதமான அளவுகளிலே பல சுவையான பதார்த்தங்களை 'சொக்கலேற்' வகைகளுக்கு ஏற்ப கலக்கும் பகுதி. அவ்வாறான கலவைகளை அவற்றுக்குரிய வடிவமைக்கும் இயந்திரங்களின் மூலம் உருவாக்கி குறிப்பிட்ட வடிவங்களில் வெட்டி தானாகவே அந்தந்த வர்ண கடதாசிகளால் சுற்றி பெட்டிகளில் அடைக்கும் பகுதி களஞ்சியப் பகுதி விநிய…

    • 2 replies
    • 1.1k views
  2. (2004, டிசம்பர் 26ம் தேதி... சுலபமாக மறக்கக் கூடிய நாளா! உயிர்கள் பல குடித்து கடல் தன் வயிறு நிரப்பிய சுனாமி சோக நாளாயிற்றே! அதன் பாதிப்பில் அப்போது எழுதிய சிறுகதை.) அது ஒரு ~சொக்கலேற்~ தொழிற்சாலை. ஏறக்குறைய ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட தொழிலகம். அந்த நகரத்தில் அமைந்துள்ள குறிப்பிட்டுக் கூறக்கூடிய பெரிய தயாரிப்பு ஆலை. பிற நாடுகளில் இருந்து பெரிய சதுரப் பாளங்களாக வரும் கொக்கோக் கட்டிகளை அரைத்துப் பாணியாகவும் தூளாகவும் மாற்றும் பகுதி அவற்றுடன் விதம்விதமான அளவுகளிலே பல சுவையான பதார்த்தங்களை ~சொக்கலேற்~ வகைகளுக்கு ஏற்ப கலக்கும் பகுதி. அவ்வாறான கலவைகளை அவற்றுக்குரிய வடிவமைக்கும் இயந்திரங்களின் மூலம் உருவாக்கி குறிப்பிட்ட வடிவங்களில் வெட்டி தானாகவே அந்தந்த வர்ண கடதாசிகளா…

    • 15 replies
    • 1.7k views
  3. ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்...... சிறுகதை: யோ.கர்ணன், ஓவியங்கள்: ஸ்யாம் ஆதிரைக்குவிரல் எல்லாம் ரைப்படிக்குது. இதுதான் அவளுக்கு பர்ஸ்ற் ரைம். இது மாதிரி விசயங்களில் பர்ஸ்ற் ரைம் ரென்சன் இருக்கும்தானே. வாறவன் எப்படிப்பட்டவனோ? இவள் படிக்கிற காலத்தில ரைப்பிங் பழகின வள்தான். அப்போது எல்லாம் இல்லாத வேகம் ரைப்ரைற்றர் இல்லாத இந்த நேரத்தில வருது. என்ன இருந்தாலும், இவள் லேசாகப் பயந்த பெட்டைதானே. இப்படி ஒரு காட்டுக்குள் முந்திப்பிந்தி பெட்டை உள்ளட்டதே கிடையாது. இவளின்ர இடம் முள்ளியவளை. முள்ளியவளை யில் இருந்து நெடுங்கேணிப் பக்கம் போனாலோ, குமுழ முனைப்பக்கம் போனாலோ, அல்லது காட்டுவிநாயகர் கோயிலடி கழிந்தாலோ காட்டைப…

    • 6 replies
    • 1.6k views
  4. கட்டிலில் மல்லாந்து படுத்துக்கிடந்தார் கலியமூர்த்தி. ஒரு வாரம் ஓயாமல் அடித்த டைபாய்டு காய்ச்சல் அவர் உடம்பை உருக்குலைந்துப் போட்டிருந்தது. தலை விண்ணென்று தெறித்தது. காலைக் குளிருக்கு மதிக்கடைக்கு போய் ஒரு டீ குடித்தால் தேவலாம் போல இருந்தது. எல்லாவற்றையும்விட அடுத்தவாரம் ஆத்தங்கரை நாச்சிக்கு எப்படி நீர் மோர் வார்த்து ஊற்றப்போகிறோம் என்று நினைத்த போது, கவலைகள் ஓட்டமாய் ஓடிவந்து ஒட்டிக்கொண்டன. கலியமூர்த்தியின் சொந்த கிராமத்தில் இருக்கும் ஆத்தங்கரை நாச்சியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். வருடந்தோறும் ஆடித்திருவிழா ஏக விசேஷமாக இருக்கும். ஏழு ஊர் கூடுகிற விழா அது. விழாவிற்கு முந்தின நாள் இரவே பக்கத்து ஊர்களில் இருந்து மக்கள் வர ஆரம்பித்து விடுவார்கள். நாற்பது வருடமாக அந…

  5. நாலு ஆக்கங்கள் படைத்த (?) பின் புத்தகம் வெளிவிடுவது, தமக்குத்தாமே அடைமொழி வைத்து அழைப்பது, முகனூலில் லைக்குகளுக்காக அலைவது, கோஷ்டி சண்டைகள் என்று இன்றைய இலக்கிய (?) கர்த்தாக்களின் போக்கு பற்றி நகைச்சுவையாக எழுதப்பட்ட இந்த சிறுகதையினை அண்மையில் வாசித்தேன்; பகிர்கின்றேன். - நிழலி ---------- ஆத்ம திருப்தி எஸ்.சங்கரநாராயணன் அவனுக்கு கவிதை என்றால் என்ன என்று தெரியாது. அத்தனைக்கு விரும்பி புத்தகம் வாசித்தவனும் அல்ல. தவிரவும் பரமேஸ்வரனுக்குத் தமிழே தகராறு. தகராறுக்கு எந்த ர முதல், எந்த ற பிந்தி என்பதே தெரியாது. ஆங்கிலத்தில் அவனைப் படிக்க வைத்தார் அப்பா. வாழ்க்கையில் அவரைவிட அவன் ஒரு படியாவது முன்னேற வேண்டும், என்பதை லட்சியமாகக் கொண்ட அப்பா. அ…

  6. ஆத்மராகம் - சிறுகதை சுபஸ்ரீ முரளிதரன், ஓவியம் : ஸ்யாம் மஹா அக்காவை நான் அங்கு பார்ப்பேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. முதலில் அது அவள்தான் என்றே தெரியவில்லை என்றாலும், அவள் உதடும் என் உள்ளுணர்வும் அவளைப் பற்றிய விவரங்களைத் தேடத் தூண்டின. கிடைத்த விவரங்கள், எனக்குள் அதிர்ச்சியையும் மனபாரத்தையும் ஏற்றின. அங்கிருந்த செவிலியிடம், ``இவங்களை யாரு, எப்போ இங்கே சேர்த்துவிட்டாங்க?’’ என்றேன். ``ஒரு வாரம் ஆச்சும்மா. ஒரு பொண்ணு கூட்டிவந்துச்சு. இப்போ வேலைக்குப் போயிருக்கு’’ என்றாள். ``வேலைக்கா?’’ என்றேன். ``ஆமாம்மா. எங்கேயோ திருச்சி பக்கமாம். இந்த அம்மாவோட மகதான் கூட்டிட்டுவந்துச்சு. நம்ம சென்டரைப் பற்றி…

  7. ஆத்மார்த்தியின் ஆன்மா! ஜெரா படம் | Laruwan Wanniarachi, AFP, blogs.ft | சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவருக்கும் சி்ங்கள சிப்பாய் ஒருவருக்கும் கிளிநொச்சியில் இடம்பெற்ற திருமணத்தின்போது எடுக்கப்பட்ட படம். ஆத்மார்த்தியின் கட்டில் அசைந்து கொண்டேயிருந்தது. தூக்கம் வரவேயில்லை. தாதியர் அடிக்கடி வந்து விசாரித்தனர். அவளுக்கு நாளை சுகப் பிரசவம் என்பதைத் தவிர வேறு எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்றே கட்டிலுக்கு கீழே படுத்திருக்கும் அவளின் அம்மா நினைத்துக் கொண்டிருப்பார். அங்குள்ளவர்களும் அப்படித்தான் நினைத்திருக்க வாய்ப்புண்டு. திடகாத்திரமான உடல் அவளுக்கு சுகப்பிரசவம் என்பதை உறுதிப்படுத்தியும் இருந்தது. “இன்டைக்கு கொஞ்சமாவது நித்திர கொள்ளவேணும்” என்ற எ…

  8. ஆனந்தி வீட்டு தேநீர்! - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... வா.மு.கோமு, ஓவியங்கள்: ஸ்யாம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தினுள் சாய்வு இருக்கையில் 10 நிமிடங்களாக அமர்ந்து, எதிரில் தெரிந்த பெரிய மானிட்டரையே வெறித்துப் பார்த்தபடி இருந்தான் முருகேசன். எந்தெந்த ஊர்களுக்குச் செல்லும் ரயில்கள், எந்தெந்த நேரத்தில் கிளம்பும் என்ற தகவல்கள், அங்கு இருந்த தகவல் பலகையில் நிதானமாக ஓடிக்கொண்டிருந்தன. பலத்த இரைச்சலுக்கு இடையிலும் இவன் காதினுள் தேனை ஊற்றுவது போல் ஒரு பெண்ணின் குரல், 'பயணிகளின் கனிவான கவனத்துக்கு’ என்று ஆரம்பித்து ஊற்றியது. எப்போதுமே பரபரப்பாக இருக்கும் இடம் என்பதுபோல, பயணிகள் வருவதும் போவதுமாகவே இருந்தனர். ய…

    • 1 reply
    • 3.4k views
  9. ஆனந்தியும் அவனும் 'தனி'த்துவ காதலும்! என் மௌனத்தைப் புரிந்துகொள்கிறாய் என் அமைதியையும் மகிழ்ச்சியையும் ரசிக்கிறாய் என் அழுகையைச் செவிமடுக்கிறாய் என் விம்மலைக் கூர்ந்து கவனிக்கிறாய் என் பதற்றத்தை உணர்ந்து கொள்கிறாய் நிராகரிக்கப்பட்டு வலியில் துடிப்பதை உணர்ந்து பதறுகிறாய் ஒவ்வொரு முறையும் நேசித்தவர்களால் நேசிக்கப்பட்டவர்களால் கைவிடப்படுகையில் எனக்காக கண்ணீர் சிந்துகிறாய். எ…

  10. ஆனைக்கிணறு தெரு - சிறுகதை உதயசங்கர் - ஓவியங்கள்: ரமணன் பதினைந்து வருடங்களுக்குப் பின்னால் ஊருக்குத் திரும்புகிறான் சுந்தர். ஒன்றுவிட்ட சித்தப்பா இறந்த துஷ்டி கேட்பதற்காக இந்த ஊருக்கு மீண்டும் வரவேண்டியதாயிற்று. அடையாளம் தெரியாதபடி ஊரின் முகம் மாறிவிட்டது. பேருந்திலிருந்து இறங்கி நூறுமீட்டர் தூரம் நடந்து சென்று வலது புறம் திரும்பினால் ஆனைக்கிணறு தெரு. இடிந்த கட்டைமண் சுவர்தான் தெருவைத் தொடங்கிவைக்கும். அதற்கு அடுத்தபடியாகத் தகரக்கொட்டாய் போட்ட கரீம்பாய் டீக்கடை. எப்போதும் டீயும் வடை தினுசுகளும் கலந்து தெருவே மணத்துக்கிடக்கும். நீண்ட தாடி வைத்த கரீம்பாய் ஒரு நொடிகூட நிற்காமல் ஆடிக்கொண்டேயிருப்பார். தலையாட்டி பொம்மை பக்கவாட்டில் ஆடுவதைப்போல லேசான ஆட்டத்…

  11. ஆபரேஷன் நோவா - 1 தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம் அகிலன் கண் விழித்தான்; மீண்டும் விழித்தான். இந்த முறை எங்கு இருக்கிறோம் என்பதற்காக. எல்லா நினைவுகளையும் துடைத்து எடுத்துவிட்ட மாதிரி பளிச்சென இருந்தது. எழுதப்படாத வெள்ளைக் காகிதம், பதியாத டி.வி.டி., க்ளீன் ஸ்லேட்... அப்படி ஒரு சுத்தம். மூளைக்குள் ஏதோ இணைப்புக் கோளாறு. சிந்திக்க அவதிப்படுவது அப்பட்டமாகத் தெரிந்தது. 'சேஃப் மோடில்’ வேலை செய்கிறதா மூளை? இரும்பில் செய்த இன்குபேட்டருக்குள் அடைக்கப்பட்டு இருப்பதாகத் திடுக்கிட்டான். அதனுள் எதற்கு வந்தோம், ஏன் வந்தோம் என நினைவில்லை. நிலக்கடலைக்குள் பருப்பு போல முற்றிலுமாக மூடப்பட்டிருந்தான். எட்டி ஓர் உதைவி…

  12. ஆபரேஷன் புலி - சிறுகதை மூன்று காரணங்களுக்காக, எங்கள் வார்டு கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளரை நிறுத்துவது என நாங்கள் முடிவெடுத்தோம். ஒன்று, புலி எந்த நேரமும் முழு போதையில் தெருவில் அங்குமிங்கும் உலாத்திக்கொண்டே இருப்பது. இரண்டு, புலி முழு போதையில் எந்த நேரத்திலும் யார் வீட்டுக்குள்ளும் உள்ளே நுழைந்து சமையலறையில் தண்ணீர் எடுத்துக் குடிப்பது, சோற்றை எடுத்துப் போட்டுச் சாப்பிடுவது. மூன்று, எங்கள் தெருவுக்குள் புதிதாக யார் நடந்து சென்றாலும் அவர்களை நிறுத்தி அலப்பறை கொடுத்து, அவர்கள் சட்டைப்பையில் கையை விட்டு, தனது குடிக்காக ஐந்து ரூபாய் எடுத்துக்கொள்வது. இது அப்பட்டமான ரெளடித்தனம்; பகல் கொள்ளை. எங்கள் தெரு, பேருந்துநிலையத்…

  13. ஆப்பரேசன் அல்ககோல் – யதார்த்தன் வவுனியா, நெழுக்குளம் வன்னியை விட்டு வெளியேறியவுடன் நாங்கள் தங்கவைக்கப்பட்ட முதலாவது நலன்புரி முகாம். நெழுக்குளம் முகாமிற்கு வந்து 4 மாசத்திற்கு மேலாகி விட்டது. இன்னும் மூன்று மாதத்தில் எங்களுக்கு ஓ.எல் பரீட்சை. முகாமிற்கு வெளியில் எங்கட வயது இருக்கும் பிள்ளைகள் பள்ளிகூடம் ஸ்பெசல் கிளாஸ் டியூசன் என கற்று கொண்டிருந்தார்கள். நாங்கள் தண்ணீர் எடுபதற்கும் சாப்பாட்டிற்கும் லைனில் நிற்பது போக மீதி நேரங்களில் கரம் போட் விளையாடுவது. இரவில் பெரிய திரையில் போடப்படும் ஏதோ ஒரு தமிழ் சினிமாவை பார்த்த படி நாட்களை நகர்த்தி கொண்டு இருந்தோம். அப்போது முகாமில் இருக்கும் ஆசிரியர்கள் சிலர் சும்மா சம்பளம் எடுக்கிறம் என்று மனம் உறுத்த ராணுவத…

    • 1 reply
    • 1.5k views
  14. Started by நவீனன்,

    ஆப்பிள் இ ப்போது பெய்கிற மழையை எதிர்பார்க்கவில்லை. வெயில் உச்சத்தைத் தொட்டுச் சரிந்த வேளையில் திறந்த வானின் மதகுகள் இன்னும் மூடாமல் பெய்கின்றன. ஊழிக்காலத்து உக்கிரம் இல்லை என்றாலும், நகரங்களில் பெய்கிற எந்தப் பெருமழையும் ஊழியை ஞாபகப்படுத்திவிடும். நகரத்தில் மழையை எதிர்பார்த்திருப்பவர் யார்? இருந்தாலும் பெய்து தொலைக்கிறது. உடை போட்டுக்கொண்டு தெருவில் நடமாட வாய்த்த ஜீவன்கள் அனைத்தும் நனைந்து, மழையின் துளிகளைச் சிறிதளவாவது உடையில் சேமித்துச் சென்றன. நனைந்ததால் கேசம் கற்றையாய் ஆகின. நாய்கள…

  15. ஆமிக்காறருக்கு நாங்களோ உதவி…? சொல்லட்டோ ? சுரேன் கேட்டான். ஓம்...! சொந்த இடம்…..3பிள்ளைகள் ..மூத்த பிள்ளை 19வயது , 2வது பிள்ளை 17வயது….3வது பிள்ளை 11வயது….எழுதிக்கொண்டு வர சுரேன் அவர்களது பெயர்களை வாசித்தான். ஐஞ்சும் கெட்டு அறிவும் கெடுறதெண்டு சொல்றவையெல்லோ அந்த நிலமைலதான் நானும். அண்ணை நீங்களெனக்கு ஆக்களிட்டை அடிவாங்கித்தரத்தான் நிக்கிறியளென்ன…? எங்களுக்கு உதவாட்டிலும் பறவாயில்லை இந்தக் குடும்பத்துக்கு கட்டாயம் உதவுங்கோ….நாங்கல்லாம் நாட்டை நேசிச்சுத்தான் வெளிக்கிட்டனாங்கள். எங்களுக்கு கொள்கை லட்சியமெண்டு எல்லாமிருந்தது…நாங்க உள்ளையிருக்கிறதிலயும் ஞாயமிருக்கு…! ஆனா இந்த 50வயது மனிசன் எங்கடையாக்களுக்கு உதவப்போய்த்தான் இண்டைக்கு இந்தச் சிறையில காய…

  16. [size=6]ஆமிக்காறர் போட்டுக்குடுத்த அம்மாவின் வீடு [/size] Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Tuesday, July 17, 2012 2010...., அம்மா வீட்டிலிருந்து நாட்டுக்காக 4பிள்ளைகளைக் கொடுத்தாள். இன்று அம்மாவுக்காக ஒரு பிள்ளையும் அம்மாவோடு இல்லை. அம்மா உழைச்சுக் கட்டிய கனகபுரம் வீடும் போய் இப்ப பரந்தனில் அம்மாவின் முதிசமான அரை ஏக்கர் வயல் நிலத்தில் ஒரு குடிசைதான் அம்மாவின் வசந்தமாளிகை. 7தகரத்தோடும் ஒரு சின்ன உரப்பையோடும் 2நாளாக காணியில் போயிருந்தாள் அம்மா. ஆண்துணையும் இல்லை ஆட்களின் துணையும் இல்லாமல் தன்கையே தனக்குதவியென்ற முடிவில் புல்லைச் செருக்கி ஒரு பாயை விரித்துப் படுத்துறங்கக்கூடிய அளவுக்குத்தான் நிலத்தைத் துப்பரவாக்கினாள். கதியால் இறுக்கி கிடைச்ச தகரங்களைப்…

  17. ஆமை - ஜெயமோகன் Turtle’s back background texture abstract pattern nature. நாங்கள் சென்றபோது நாகப்பன் முதலாளி வீட்டிலேயே இருந்தார். மிகப்பெரிய கேட்டுக்கு உள்ளே பிஎம்டபிள்யூ கார் நின்றிருந்தது. எட்டிப்பார்த்துவிட்டு ராஜேந்திரன் “கார் நிக்குது” என்றான். கேபினில் இருந்து வாட்ச்மேன் எட்டிப்பார்த்து “ஆரு? என்ன?” என்றான். “நாங்க பனை சொசைட்டியிலே இருந்து வாறம்… பனைப்பாதுகாப்புச் சங்கம். முதலாளியை பாக்கணும்” என்றான் ராஜேந்திரன். “டொனேசனுக்குன்னா ஆரையும் உள்ள விடக்கூடாதுன்னாக்கும் அறிவிப்பு” என்று வாட்ச்மேன் சொன்னான். “இல்ல, இது டொனேசன் இல்லை. வேற விசயம்…” என்று ராஜேந்திரன் சொன்னான். “முதலாளிக்க சொத்து ஒண்ணு இருக்கு… பனைவிளை. அது சம்பந்தமான பேச்ச…

  18. ஆமையும் எருதும் அல்லது நீருக்கும் நிலத்துக்கும் நாமே ராசா வ. ஐ. ச. ஜெயபாலன் முன்னொரு காலத்தில் ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் தேவதைகள் வாழும் காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு ஆமையும் எருதும் தங்கள் குடும்பங்களோடு வாழ்ந்து வந்தன. ஆமை தேவதைகளுக்குப் படகு ஓட்டியது . எருது தேவதைகளுக்கு வண்டி ஓட்டியது. ஆமையும் எருதும் ஏனென்று காரணம் தெரியாமல் ஒன்றோடு ஒன்று பகமை பாராட்டுவதைப் பார்த்து தேவதைகள் ஆச்சரியப் பட்டன. அந்த ஆமையிடன் ஒரு பெரிய புத்தகம் இருந்தது. அதேபோல எருதும் ஒரு பெரிய புத்தகத்தை வைத்திருந்தது. ஆமை தனது பரம்பரை புத்தகமே உலகத்திலேயே பழமையானதும் உண்மையானதும் என்று காண்கிற தேவதைகளிடம் எல்லாம் சொல்லும். அதனால் உலகத்தில் ஆமைகள்தான் உசத்தி என்று அந்த ஆமை சொல்லிவந்தது. இ…

    • 3 replies
    • 1.5k views
  19. முதலே சொல்லிடுறன்.இது கதைக்குள்ள வருமா தெரியேல்ல.வேற ஒரு பகுதியும் சரியாப்படேல்ல அதான் கதை என்ற பகுதில போடுறன். ஆம்பரலங்காயும் அணிஞ்சில் பழமும் மலைநாடான் பாலைப்பழத்தைப் பற்றி எழுதினாரா நான் அதைப்போய் வாசிச்சனா இப்ப எனக்கும் நான் ரசிச்சு ருசிச்சு சண்டைபிடிச்சு பிச்சுப் பிடுங்கி சாப்பிட்ட பழம் காய் பற்றியெல்லாம் எழுதவேணும் போல இருந்திச்சா அதான் எழுதினா என்ன குறைஞ்சிடுவன் என்று எழுத வெளிக்கிட்டிட்டன். பாலர் வகுப்புப் படிச்ச காலத்தில இருந்தே பள்ளிக்கூடம் போற வழியில ரியூசன் போற வழியில இப்பிடி எப்பெல்லாம் நண்பர்களோட சேர்ந்து வீட்டை விட்டுப் போறனோ அப்பெல்லாம் ஆற்றயும் வீட்டுக்காணியிலோ அல்லது தோட்டத்துக்காணியிலோ கைவைக்காமல் வீடு திரும்பினதா ஞாபகம் இல்லை. என…

    • 8 replies
    • 2.3k views
  20. எனது பாடசாலை நண்பன் ஒருவன் நீண்ட நாட்கள் மத்திய கிழக்கில் வேலை செய்தான். இரு பிள்ளைகள், பெண் மணமுடித்து தாயுடன் கொழும்பில்- மகன் மணமுடித்து லண்டனில். பாடசாலை நண்பன் பலவருடங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கில் விபத்தொன்றில் அகப்பட்டு நரம்புத் தொகுதி பாதிக்கப் பட்டு தனியே பருத்தித்துறையில் இருக்கிறான். இரண்டு விடயங்களை ஒன்றாக சிந்திக்க முடியாது அவனால். உதாரணமாக மந்திகைக்கு சைக்கிளில் போனேன் என்று அவனால் ஒரேயடியாக சொல்ல முடியாது. மந்திகைக்கு போனதையும் சைக்கிளில் போனதையும் தனித்தனியே தான் அவனால் சொல்ல முடியும். இரண்டையும் சேர்க்க வெளிக்கிட்டால் ஒரேயடியாக குழம்பி விடுவான். அத்துடன் அவனால் எழுத முடியாது, ஆனால் வாசிப்பான்; கதைப்பான். சொல்ல வந்த விடயம் என்னவென்றா…

  21. ஒரு ஊரில் ஒரு மாடும்,கோழியும் இணைபிரியா நண்பர்களாக இருந்து வந்தார்கள். இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்லுவது வழக்கம். ஒரு நாள் மாடு கோழியை கூப்பிட்டு பக்கத்து கிராமத்துக்குக்கு போய் வருவோமா என்று கேட்டது. உடனே கோழி சம்மதித்தது.இருவரும் சேர்ந்து பக்கத்து கிராமத்தை அடைந்தனர். கிராமத்தை நெருங்கியவுடன் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்டது.உடனே மாடு கோழியைப் பார்த்து நண்பா இது என்ன சத்தம்.என்று கேட்டது. கோழி உடனே வேகமாக சென்று அந்த இடத்தை பார்த்துவிட்டு வந்து மாட்டிடம் அந்த குழந்தைகள் பாவம் என்று சொன்னது. உடனே மாடு கேட்டது ஏன் பாவம் என்று சொல்லுகிறாய். கோழி சொன்னது அந்த இடம் ஒரு அனாதை ஆசிரமம்.அங்கு இருக்கும் குழந்தைகளுக்க…

  22. [size=4]ஆகஸ்ட் 6, 1945. இரண்டாம் உலகப்போர் உச்சத்தை அடைந்திருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ’பியர்ல் ஹார்பர்’ (Pearl Harbor) தாக்குதல் மூலம் தன் நாட்டை சிதைத்த ஜப்பானை பழிக்குப்பழி வாங்க அமெரிக்கா தொடை தட்டிக் கொண்டிருந்தது. அமெரிக்க விமானப்படை முதன்முதலாக அணுகுண்டுகளை ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது வீசியது. நொடிப்பொழுதில் பேரழிவு. புழுதி அடங்கியதும் பார்த்தபோது ஒரு லட்சத்து நாற்பதாயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்திருந்தார்கள்.[/size] [size=4]சடாகோ சஸாகிக்கு அப்போது வயது இரண்டு. குண்டு வீசப்பட்ட இடத்துக்கு ஒரு மைல் தூரத்தில்தான் அவளது வீடு இருந்தது. அணுகுண்டின் வீரியத்தால் பூகம்பம் வந்ததுபோல அவளது வீடு அதிர்ந்தது. சஸாகி ஜன்னல் வழியாக தூக்கியெறியப் பட்டாள். அவளது அம்மா…

    • 2 replies
    • 2.3k views
  23. Started by கிருபன்,

    ஆராதனா - அனோஜன் பாலகிருஷ்ணன். அபத்தமான தருணங்களில் ஒன்று பஸ் பயணம்.அதுவும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருவது மகா எரிச்சலை கிளப்பியது.மெல்ல மெல்ல தன்னிலை இழந்து அரைத்தூக்கத்தில் இருந்தேன். ஏஸி பஸ்க்கு ஆசைப்பட்டதின் விளைவாக குளிர் தாங்காமல் அவதிப்பட்டு குல்லா சகிதம் சில கிழவர்கள் குறட்டை விட்டு பஸ் எஞ்சின் சத்தத்தை முறியடித்தனர். சுற்றிப்பார்த்தேன் கவனிக்கத்தக்கவகையில் ஒரு இளமை ததும்பிய பெண்களையும் காணவில்லை. என் பின்னால் சுவட்டருடன் இருந்த ஒரு கிழவர் என் பிராணத்தை வேண்டனும் என்ற நோக்கத்தில் இருந்தார்போலும்,என்னால் சீட்டை பின்னால் மடிக்க முடியவில்லை.கொஞ்சம் மடித்தால் “கால் வைக்க முடியவில்லை தம்பி..கொஞ்சம் நிமித்திரியலே……” சம்பந்தம் இல்லாத சத்தங்கள்,முகங்கள். இ…

  24. அன்புடையீர் வணக்கம், வரும் புத்தாண்டு ஜனவரியில் எனது நாவலான ஆறா வடு - தமிழினி பதிப்பக வெளியீடாக சென்னையில் வெளியாகிறது. கடந்த 2 வருடமாக பையப் பையவும் போன ஆறேழு மாதமாக ஓவர் ஸ்பீட்டிலும் அதனோடு மெனக்கெட்டிருந்தேன். அத்தருணத்தில் புத்தகத்தில் வராத முன்னுரை என்றொரு குறிப்பை பேஸ்புக்கில் சிறு சிறு குறிப்புக்களாக எழுதினேன். அவையாவன.. த.பிரபாகரன் என்றொரு நண்பர் இருந்தார். (பின்னாட்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான அம்பலம் இதழின் ஆசிரியர்) நான் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது அவர் நான்காம் வகுப்பிலிருந்தார். அப்பொழுது நம்மிருவருக்கும் இடையில் ஒரு சவால் எழுந்தது. யார் அதிக பக்கங்களுடைய நாவலை எழுதுவது என்பதே அது.. ஒவ்வொரு காலையும் வகுப்புக்கள…

    • 15 replies
    • 2.2k views
  25. Started by nunavilan,

    ஆறாங்குழி கதைகள் இரும்பு மனிதன் எனப் பொருள்படும் ‘யக்கடயா’ என்ற பெயரால் என்னை ஒருகாலத்தில் இராணுவத்தில் அழைத்தார்கள் என்பதைத் தவிர, என்னைக் குறித்த தனிநபர் தகவல்களை நான் உங்களிடம் சொல்லப் போவதில்லை. இலங்கை வரலாற்றிலேயே நெடுங்காலம் தலைமறைவாக வாழும் மனிதன் நான்தான். முப்பத்து மூன்று வருடங்கள் மறைந்து வாழ்கிறேன். இப்போது நான் வசிக்கும் நாடு இலங்கைக்குத் தெற்குத் திசையில் உள்ளது என்பதோடு என்னுடைய அறிமுகத்தை நிறுத்திக்கொள்கிறேன். நான் வசிக்கும் கடற்கரையோர சிறு நகரத்தில் வருடம் முழுவதுமே வெயில் உண்டு. மிகப் பெரிய மீன்பிடிக் கப்பலில் வேலை செய்கிறேன். கப்பலோடு சமுத்திரத்திற்குள் இறங்கினால், ஒரு வாரம் முழுவதும் சமுத்திரத்திற்குள்ளேயே இருந்து, தொன் கணக்கில் …

    • 6 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.