Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. சத்தியமாக இந்த சொக்ஸ் பண்ணுற தொல்லையை தாங்கமுடியவில்லை. மூக்குள்ளவரை சளிபோல இதுவும் நான் இந்த ஊரில இருக்கு மட்டும் என்னை விடாது போலிருக்கிறது . விதி வலியது இவ் விடயத்திலும். முதலில் பிரச்சனையை விளக்குகிறேன். கடந்த 23 வருடங்களாக நான் வாஷிங் மெசீனுக்குள் 2 சொக்ஸ் போட்டால் வாஷிங் மெசீன் ஓன்றைத்தான் திருப்பித்தருகிறது. 2 சோடி போட்டால் ஒரு சோடி மட்டும் திரும்பித் தருகிறது ஆனால் அது வேற வேற நிறத்திலிருக்கும். ஆனால் அடுத்தமுறை உடுப்புகளுவும் போது முதல் முறை காணாமல் போன சொக்ஸ் வந்திருக்கும் ஆனால் இந்த முறை போட்டது வந்திருக்காது. கல்ல கண்டா நாய கணோம் நாய கண்டா கல்ல கணோம் மாதிரி அல்லது பார்முடா முக்கோத்தினுள்ளக்குள்போன கப்பல் மாதிரி.. மாயமாய் மறைகிறது. வாஷிங் மெசீன் என்ற …

  2. அனாதையாய் போன ஆதிரையும் ஆதவனும் காணாமல் போனார்கள் என எண்ணிய பலர் உயிருடன் உள்ளது போல அவர்களும் இருப்பார்கள் என்றே நம்பினேன். மீண்டும் காணவிரும்புகிறவர்களுள் அவளும் ஒருத்தி. பெண்களின் வெளியீடுகளில் அவளது எழுத்துக்கள் மிகுந்த ஆழுமை செலுத்தியிருக்கின்றன. அவளது சமூகம் சார்ந்த எழுத்துக்களும் கருத்துக்களும் ஊர்பார்க்கப்போன புலம்பெயர்ந்தோர் பலருக்கு அறிமுகமானவை. இலக்கியப்பரப்பில் உச்சரிக்கப்பட்ட சிறந்த பெயர்களுள் அவளது பெயரும் ஒன்று. தடுப்பிலிருந்து வெளியில் வருகின்ற தெரிந்த யாவரிடமும் அவளைப்பற்றிய எனது விசாரணை தொடர்ந்து கொண்டுதானிருந்தது. அண்மையில் ஒருதோழியின் தொடர்பு கிடைத்த நேரம் அவளிடம் விசாரித்தேன். நான் தேடியவள் சரணடைய வந்தவழியில் இறந்துவிட்டாதாகச்…

    • 11 replies
    • 2.2k views
  3. அவளது கண்கள் அழுது அழுது இரத்த சிவப்பாயிட்டுது. இன்னும் கண்ணீர் வடித்து கொண்டே அழுது களைத்து சிணுங்கலாகி சிணுங்கி கொண்டே இருக்கிறாள். சிணுங்கல் தொந்தரவு தாங்க மாட்டாமால் கொடியில் உடுப்பு காய போட்டு கொண்டிருந்த அவளது அம்மா சனியனே உனக்கு இவ்வளவு http://sinnakuddy.blogspot.com/2007/09/blog-post_11.html

  4. ஒரு ஊரில் ஒரு ஆசாமி இருந்தான். அவன் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளு. அவனுக்கு எதைக் கண்டாலும் அருவெறுப்பா இருந்தது. ஒரு சமயம் நம்ம ஆளு ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தான். கல்யாணம் முடிஞ்சு சாப்பாடு பந்தி ஆரம்பமாச்சு. நம்ம ஆளு ஒரு ஓரமா போய் உக்கார்ந்து கிட்டான். சாப்பாடு பிரமாதமா இருந்துச்சு. இவனுக்குப் பக்கத்து இலையில் உக்கார்ந்திருந்த ஆசாமி பால் பாயசத்தை உறிஞ்சி உறிஞ்சி குடிச்சிட்டுருந்தான். அப்போ எச்சில் நம்ம ஆளு மேலே தெறிச்சிட்டுது . நம்ம ஆளு தான் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளாச்சே. இந்த கறுமத்தைக் காசியில் போய்த் தான் தொலைக்கணும்னு நினைச்சிகிட்டு மறுநாளே காசிக்குக் கிளம்பிப் போனான். அந்த காலத்தில் இப்போ மாதிரி பஸ், ரயில் வசதி எல்லாம் கிடையாதே.…

      • Haha
    • 11 replies
    • 1.5k views
  5. சாலமன் சபைக்கு வந்த விசித்திர வழக்கு - கறுப்பி அன்றொரு நாள் மன்னன் சாலமனுடைய சபையில் ஒரு விசித்திரமான வழக்கு வந்தது ஒரு பிள்ளை … இரண்டு தாய்மார்கள் இரண்டு பேருமே இது தன் பிள்ளை என்பதால் யாரிடம் ஒப்படைப்பதென்று தெரியவில்லை ஆகவே … காவலா இந்தப் பிள்ளையை ஆளுக்குப் பாதியாகக் கொடு என்றான்.. 1 “மிஸ்ரிமோஃபோர்பியாதான் சந்தேகமில்லை”. பெரியக்கா என்னை ஆச்சரியமாகப் பார்த்து “என்ன பெயர் சொன்னனீ?” என்றாள். நான் முகத்தை வலு சீரியஸாக வைத்துக்கொண்டு, “மிஸ்ரிமோஃபோர்பியா, எல்லா அறிகுறிகளும் அது போலதான் கிடக்குது. நான் கூகிளில தேடியும்; பார்த்தனான். இப்படித்தான் விளக்கம் கிடந்தது” என்று கையில் மடித்து வைத்திருந்த வெள்ளைப்பேப்பர் ஒன்றை விரித்துப் படித்துக்காட்டத…

  6. 1996ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26ம் திகதி, மதிய வேளை, பனிக்கால நாட்கள். குளிர் ஊருக்குள் படிந்துபோயிருந்தது. நான் வடமேற்கு நோர்வேயில் உள்ள ஒரு வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவில் நின்றிருந்தேன். கனிவான தாதியர், அமைதியான அறை, மெதுவான இசை, தாங்கொணா வேதனையில் ஒருவர், மற்றும் நான். மகப்பேற்றுத் தாதியின் கட்டளைகள், அன்பான வார்த்தைகளுக்கு மத்தியில் ஒரு அலரல். ஒரு பிரசவம் நடந்து கொண்டிருந்தது, அங்கு. இரத்தமும், ச‌தையும், நீரும் கலந்ததொரு குழந்தையை கையிலெடுத்து, தொப்புள் கொடியை ‌வெட்ட என்னை அழைத்த போது பயத்தில் மறுத்துவிட, ஒரு தாதி அதை வெட்டினார். குழந்தையை எடுத்துப்போய் சுத்தப்படுத்தி, தலையைச் சுற்றி தொப்பி போன்றதொன்றை இட்டு, அளந்து, நிறுத்து, ஊசி போட்டு என் கையில் தந்த போத…

  7. அவளுக்கு ஒரு "வாரிசு " .......... அமைதியான அந்த கிராமத்தின் ....இளங்கதிரவன் மெல் ல ஒளி பரப்ப் தொடங்கிய அந்த காலை வேளையில் குயிலினமும் பறவை களின் ஆர்ப்பரிபுகளுடனும் பொழுது புலர்ந்தது . காலை பஸ் பயணத்துக்கு மகனை எழுப்ப தேநீர்க்குவளையுடன் செல்லம்மா .அவன் கணேசு அண்மையில் உள்ள நரகத்தில் மரக்கறி வியாபாரம் செய்பவன். எழுந்து காலை க்கடனை முடித்து தேநீரை குடித்து தாயிடம் விடைபெற்றான். அவள் தானும் தேநீர் பருகி ,கூட்டு மாறு எடுத்து முன் முற்றத்தை நீர் தெளித்து கூட்டுகையில் அவள் நினைவு ...கடந்த காலம் நோக்கி சென்றது . செல்லம்மா , ஆசைப்பிள்ளை தங்கம்மா தம்பதியருக்கு மூத்த பெண் . இரண்டாவது பெண்ணியே எல்லோரும் திருமணதுக்காய் கேட்டனர் . ஏன் எனில் இவள் செல்லம்…

  8. இரவு வேளையில்.. எனக்கு பரப்புரைக் கூட்டங்கள் இல்லாத வேளையில், நான் வீட்டில் இருந்து கவிதையோ கட்டுரையோ எழுதிக் கொண்டிருப்பேன்.. அந்த வேளைகளில் அவள் என் காலடியில்தான் அனேகமாக இருப்பாள்! உடனே நீங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விட்டு, நான் ஏதோ என் பழைய காதலியைப் பற்றி எழுதப் போகிறேன் என்று நினைத்தால்… ஏமாறப் போவது நிச்சயம் நீங்கள்தான்! அவள் ஓர் சிறுமி..! தூரத்து.. உறவு முறையில் அவள் எனக்கு மகள்தான்..! அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்..! நிறம் கறுப்புத்தான்.. ஆனால்.. அவளிடம் எனக்கு எப்போதுமே பிடித்தது அவளது அந்த கருவிழிகளும் கூரிய நாசியும் நீண்ட கூந்தலும்தான்.. “சித்தப்பா”.. என்றுதான் எப்போதும் என்னை கூப்பிடுவாள்!.. வகுப்பில் கொஞ்சம் மக்கு!.. அதனால், தா…

  9. Started by nedukkalapoovan,

    ஏ எல் பரீட்சை முடிந்த சந்தோசத்தில்.. இடுப்பில் சுத்திய பட்டு வேட்டியும்.. தோளைச் சுற்றிய பட்டுச் சால்வையுமாக.. நல்லூர் முருக தரிசனம் காண.. ச்சா.. அதுக்கெல்லாமா அங்க போவாங்க.. வண்ண வண்ண காவ் சாறி உடுத்து வரும் இளம் தேவிகள் தரிசனம் காணும் பக்திப் பரவசத்தோடு.. நித்தியன் மயூரனின் வீட்டு வாசலில்.. சைக்கிளில் வந்து பெல்லை அடுத்துக் கொண்டு நின்றான். ஆனால்.. மயூரனோ வருவதாக இல்லை. டேய் மயூரன்.. கெதியா வாடா. ரைம் போகுது. நித்தியா போகப் போறாடா.. என்று கத்தினான். நித்தியாவின் பெயரைக் கேட்டதுமே மயூரன்.. எப்படி வாசலுக்கு வந்தான் என்று தெரியவில்லை ராக்கெட் வேகத்தில் வந்து நின்றான். ஏ எல் பரீட்சைக் காலத்தில் தான்.. நல்லூர் முருகன் திருவிழாவும் வருவதால்.. எப்படா பரீட்சை முடியும்..…

  10. சன் என்று மனைவி விஜி அழைக்க திடுகிட்டு தன் சிரிப்பை நிறுத்தினான,ஏன் இப்ப உங்கள்பாட்டில் சிரித்து கொண்டு இருந்தனீங்கள் யாராவது பார்த்தால் விசர் என்று நினைக்க போறார்கள் என்றவல் அது சரி இப்ப ஏன் சிரித்தனீங்கள்.அதுவோ சும்மா என்ன நினைத்தேன் சிரித்தேன்,அப்படி என்ன பெரிசாக கிழித்து போட்டீங்கள் இப்ப உங்களை நினைத்து சிரிக்க என்றவளை பார்த்த சன்,அதற்கு காரணமே நீர் தான் விஜி என்றான். 25 வருடங்களிற்கு முன் நீர் எப்படி என்னை கூப்பிடுறனீர் என்பதை யோசித்தேன் அது தான் சிரித்தேன்.ஏன் எப்படி கூப்பிட்டனான் என்று சொல்லுங்கோ எனக்கு இப்ப எல்லாம் மறந்து போய் விட்டது.அது சரி இப்ப உமக்கு ஒன்றும் நினைவு இருக்காது ஏன் என்றா நீர் இருகிற இடம் அப்படி."இஞ்சாருங்கோ"."இங்கேயப்ப…

  11. நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்குமா? ஒரு பெரிய பணக்காரன். அவனுக்கோ மனதில் திருப்தியும் அமைதியும் இல்லை. பணத்தால் அடையக்கூடிய சுகமெல்லாம் அடைந்த பின்னும் அவனுக்குள் ஒரு வெற்றிடம். தன் செல்வமனைத்தையும் ஒரு பெட்டியில் வைத்து அங்கு வந்த ஒரு ஞானியைப் போய்ப் பார்த்தான். அவரிடம், ''சுவாமி, என்னுடைய சொத்து முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தாருங்கள். ஞானி சிரித்தார். அடுத்த கணம் அந்தப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார். செல்வந்தனுக்கோ பயங்கர அதிர்ச்சி. வாழ்நாள் முழுவதும் தேடிய சொத்தை ஒரு போலிச் சாமியாரிடம் கொடுத்து ஏமாந்து போய் விட்டோமே என்ற கவலையுடன் அவரைப் பின் தொடர்ந்து ஓடினான். ஞானி எங்க…

  12. பாலாண்ணா, இது உங்களுக்காக மட்டும்.. இன்று தற்செயலாய் தூர தேசத்திலிருக்கும் என் அண்ணன் ஒருவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தர்ப்பம் என சாதாரணமாய் சொல்லிவிட என்னால் முடியவில்லை. சிறுவயதிலிருந்து நான் அண்ணன்கள் செல்லம். குடும்பத்தில் பல ஆண்களுக்கு பின்னர் பல ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்த பெண்ணாயிற்றே. ஆயினும் எனக்கு என் குடும்பத்தில் பிறந்த சகோதரர்களை விட, ஈழத்தில் எங்கள் வீட்டின் முன்னால் இருந்த சகோதரர்களை தான் அதிகம் பிடிக்கும். நாட்டை காக்க வாழ்பவர்களை பிடிப்பதற்கு காரணம் தான் தேவையில்லையே. அப்படி சிறுவயதில் இருந்து அண்ணனானவர்களில் முக்கியமாக மதியண்ணா, முகிலண்ணா, நிலவண்ணா, பாலாண்ணாவை சொல்லலாம். இதில் நால்வரையும் மாவீரராக பார்த்தவள் நான். இன்று அவர்களின் படங்க…

  13. தீட்டுத்துணி -யதார்த்தன் எது வரவே கூடாதென்று நேர்ந்திருந்தேனோ அது எனக்கும் வந்துவிட்டது.எலோரும் அதன் பெயரைச்சொல்வதைக்கூட தவிர்த்துவந்தார்கள் . தெய்வ நம்பிக்கை மீது எழுதப்பட்ட நோய் அது . கோடை வெயிலின் வெம்மை முகாம்களின் தறப்பால் கூடாரங்கள் மீது காய்ந்தது.வெய்யில் வலுக்க வலுக்க ஒவோரு நாளும் பலர் பூவரசங்குளம் வைத்திய சாலைக்கு ஏற்றப்பட்டனர். பூவரசங்குளம் வைத்திய சாலை நலன்புரி முகாம்களில் பெரியம்மை வந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.எல்லா முகாம்களில் இருந்தும் தினமும் ஏராளமானவர்கள் அங்கே வந்து கொண்டிருந்தனர்.உடல் முழுவதும் கொப்பளங்களும் எரிச்சலும் வேதனையும் அங்கே இயல்பான ஒன்றாய் மாறிக்கிடந்தது. எனக்கு உடலில் அவ்வளவாக கொப்பளங்கள் போடவில்லை .உடலில் நான்கைந்…

    • 11 replies
    • 2.5k views
  14. புதுச்சப்பாத்து... (இந்தவார ஒருபேப்பரிற்காக எழுதியது) தீ,பெருந்தீ,விண்ணைமுட்டும் வேட்கையுடன் கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்தது,மனிதர்களை எரித்துஎரித்து எஞ்சிய கரித்துண்டுகள் குவிந்து அந்த இடம் மேடாகி இருந்தது.அதன் மேல் வைக்கப்பட்டிருக்கும் அந்த சிதையைத்தான் தீ விரைவாகத் தின்றுதீர்த்துவிடவேண்டும் என்ற பெருஞ்சங்கல்ப்பத்துடன் எரித்துக்கொண்டிருந்தது.மாலை நேரத்து மெல்லிருளில் அந்த மயானப் பிரதேசமெங்கினும் அத்தீயின் ஒளியில் கரைந்து செந்நிறமாக உருகிக்கொண்டிருந்தது.சனசந்தடியற்ற அந்தச்சுடலை ஏரியாவில் பினமெரியும் சிதையை சற்றுத்தொலைவில் இருந்து வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் கோபி.தீ எழுந்து வானத்தை தொட்டுவிட எத்தனித்துக்கொண்டிருந்தது.சுடலையை அடுத்திருந்த வயல்வெ…

  15. மனிதநேயம் என்றபெயரில் புகழ்ச்சி தேடும் கரங்கள் ******************************************* மாலைநேர வகுப்பிற்கு சென்றுவந்த மகள் அறைக்குள் சென்று சத்தமாக அடித்து கதவைச் சாத்துவது கேட்டது,ஒருநாளும் இப்படி கோபப்படாதவள்,இன்றைக்கு ஏன் இப்படி செய்கிறாள்..? ஏதோ நடந்திருக்கு என்று மட்டும் ஊகிக்க முடிந்தது என்னால்,போய் கதவில் தட்டி எழில் கதவைத்திறவம்மா என்று கூப்பிட்டேன்,வெளியே வந்தவள் அம்மா எனக்குப் படிக்கப்போக சைக்கிள் தேவை. யாரிட்டயாவது வாங்கித்தாங்கோ என்று உங்களிட்ட கேட்டனா.,?எனக்கு பள்ளிக்கூடத்துக்கும் பின்னேர வகுப்புக்கும் நடந்துபோகத் தெரியாதா என்று கேட்டாள்..? ஏன் பிள்ளை என்ன நடந்தது சொன்னால்த்தானே தெரியும் என்றேன்,எனக்கு சைக்கிள் தந்த போட்டோவை பத்திரிகையி…

  16. அந்த பிரமாண்டமான் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டது ..பல் கற்பனைகள் கடந்த கால நினைவுகளோடு புஷ்பாவும் இரு குழந்தைகள் அருண் அர்ச்சனாவும் விடுமுறைக்கு புறப்படுகிறார்கள். . கனடாவில் இருக்கும் தங்கள் சகோதரியை , பெரியம்மாவை பார்பதற்காக. புஷ்பாவின் எண்ணங்கள் சில கணம் தாய் நாட்டின் கிராமத்து வாழ்வை நோக்கி அசை போடுகிறது. தாய் தந்தைக்கு எழு குழந்தைகள் அரச பணியகத்தில் வரும் அளவான் வருமானத்தில் வளமாக் தான் தாயார் மீனாட்சி குடும்பம் நடத்தினாள். நானு பெண்களும் மூன்று ஆண்க்களுமாக் எழு குழந்தைகள். நான்காவதாக் இந்த பாமா என்னும் கனடாவில் இருப்பவர் ் பிறந்தார். ஐந்தாவ்தாக் புஷ்பா . வாழ்வு தான் காலச்சக்கரத்தில் .. சுழன்று கொண்டே இருந்தது . கடைசி மூவரும் தங்களுக்குள் கொப்ப…

  17. இது பல மாதங்களுக்கு முன்பு எழுதிய கதை!! இங்கு புதிது என்பதால் பதிக்கலாம் என்று தோன்றியது.. ஏற்கனவே வாசித்தவர்கள் பொறுமை காத்தருளவும். என்னால் ஏனோ நித்திரைகொள்ள முடியவேயில்லை. கண்களை மூடியவாறு புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன். எவ்வளவுதான் முயன்றாலும் நேற்றய நிகழ்வுகளை என்னால் மறக்கவே முடியவில்லை. அவள் நேற்றுப் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தச் சிரிப்பு! தலையை அடிக்கடி கொதும் விரல்கள்! நெற்றியில் விழும் அந்த ஒரு தொகுதி கூந்தல்! கண்களை அகல விரித்தவாறு பேசும் அந்தத் தோறனை! எந்தப் பையனும் இதை மறக்கவே மாட்டான். சிங்களத்தை வெறுத்தாலும் இந்த சிங்களத்தியை மட்டும் என்னால் வெறுக்க முடிய வில்லையே. அ…

  18. என்னடா பயல் இப்படி கதை விட்டுட்டு போறானே என்ற பாவனையில்..அங்கு கூடி நின்றவர்கள் ஒருதரை ஒருத்தர் பார்த்து கொண்டனர் .இப்படித்தான் பத்து பேர் வருவான் பத்து கதை சொல்லுவான் இதெயல்லாம் நம்பி கொண்டு இருக்க முடியுமா ..அண்டைக்கொரு நாள் பாருங்க ....இப்படித்தான் ஒருவன் வந்து ....என்று கொண்டு ...அங்கு சிறிது நேரம் நீடித்த இனம் தெரியாத அமைதியை இல்லாமால் ஆக்கி கொண்டு அங்கு சப்ளை செய்து கொண்டிருந்த ஒருவன் பேச்சை தொடங்க கல்லா பட்டையில் இருந்து ஒருவன் குரல் கொடுத்தான் கதையை விட்டுட்டு கஸ்டமரை கவனியடா என்று . .இப்படி வாறவர் போறவர் கதைக்கறவர் சிரிக்கிறவர் கேலி செய்கிறவர் சாப்பிடுறவர் குடிக்கிறவர் பத்திரிகை பார்க்க வருகிறவர் வெட்டி கதை அழப்பவர் எல்லாரோயும் வேடிக்கை பார்த்து பொழுது போக்…

  19. ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம் இரகசியமாக உங்களுக்குமட்டும் பகலெல்லாம் நல்ல வெயிலடிச்சு மரங்களெல்லாம் வாடிப்போய்கிடக்கிறதே என்று முற்றத்தில நின்ற மரங்களுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டு நின்றன். எதிர்வீட்டு முற்றத்திலையும் நடமாட்டம் தெரிந்ததும் நேற்றுப்பட்ட அவஸ்த்தை ஞாபகத்திற்குவர கொஞ்சம் சுதாகரித்துக்கொணடு கண்டும் காணாததுபோல மற்றப்பக்கமாகத் திரும்பித் தண்ணீர் ஊற்றுவதில் தீவிரமானன். சில நொடி தாண்டியிருக்காது. அண்ணை! அண்ணை! என்ன கண்டும் காணாததுபோல நிக்கிறியள்? எதிர் வீட்டிலிருந்து குரல் வந்தது. அது.... எதோ யோசனையில கவனிக்கேல்லை என்று சமாளிச்சன். பரவாயில்லை. நான் வீட்டிற்குப் புதுத் தொலைபேசி இணைப்பு எடுத்திட்டன் அதுதான் உங்களுக்கும் இலக்கத…

    • 11 replies
    • 2.2k views
  20. ஞாபகப் புதைகுழி அல்லது சிதம்பரநாதன் அவனை நான் முதன்முதலில் பார்த்தபோது மாடுகளைச் சாய்த்தபடி போய்க்கொண்டிருந்தான். ‘ஹெய் ஹேய்’என்ற அவனது குரலுக்குக் கட்டுப்பட்டோ அல்லது பழக்கம்காரணமாகவோ கலையாது நிரையாகப் போய்க்கொண்டிருந்தன அவை. சின்னதும் பெரிதுமாய் நூற்றைம்பது மாடுகளுக்குக் குறையாது. நடுநாயகமாக கேப்பை மாடொன்று தன் பெரிய திமிலும் கொம்புகளும் அனைத்துக்கும் மேலாகத் தெரிய மெத்தனத்தோடு நடந்துபோனது. கறுப்பு மை பூசப்பட்ட கூரிய கொம்புகள் அச்சம் தருவதாயிருந்தன. நாங்கள் அந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்து சில நாட்கள்தான் ஆகியிருந்தன. பள்ளிக்கூடத்தில் சேர்ந்த நாளன்று புதுவகுப்பில் எனக்குப் புதிதான முகங்கள் நடுவில் மிரட்சியோடு அமர்ந்திருந்தபோது மீண்டும் அவனைப் பார்த்தேன். கக்க…

  21. மச்சான்! நீ வெளிநாடு போறதுக்காக நாட்டைவிட்டுப் போனாப்பிறகு... கொஞ்ச நாளில் உன்ர தொடர்பு எதுவுமே கிடைக்காமல் போயிட்டுது. பிறகு நானும் மலேசியா வந்திட்டன். அதுக்குப் பிறகு என்ன நடந்தது எண்டு உனக்குத் தெரியாதுதானே..?!சொல்லுறன்" என்றவன் ஆவலுடன் அவனுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த விமலிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தெளிவாக விபரிக்கத் தொடங்கினான். அவன் சொல்லச் சொல்ல... நடந்த நிகழ்வுகள் அனைத்தும் விமலின் மனக்கண் முன்னால் காட்சிகளாக விரியத் தொடங்கின. 2007 செப்டெம்பர் 08 அவன் மலேசியாவிற்கு வந்து மூன்று நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. கட்டிலில் சாய்ந்திருந்தவனின் விரல்கள் அவனது செல்போனின் பட்டன்களை அழுத்திக்கொண்டிருந்தன. 'அஞ்சலி' என்ற அவனது செல்லத் தேவதையின் 20வத…

  22. இக்கதையானது யோ.கர்ணனின் இன்னொரு வித்தியாசமான கதை. தாடிக்காரர் செய்த அரசியல் பற்றிய கருத்தோடு இக்கதை எழுதப்பட்டுள்ளது. ஐயர் என்றழைக்கப்பட்ட ஒரு முன்னாள் விடுதலைப்போராளியின் காலங்களோடு தாடிக்காரரின் அநியாயம் இன்றைய அரசியல் பற்றியும் இக்கதை பதிவிட்டிருக்கிறது. அரசியல்துறையில் பணியாற்றி யோ.கர்ணன் விடுதலைப்புலிகளின் வெளியீடுகள் பலவற்றில் எழுதிய ஒருவர். தற்போது யுத்தமுடிவின் பின்னர் எழுதும் எழுத்துகள் மிகவும் முன்னைய காலத்துக்கு வேறுபட்ட கதைகள். படித்ததை இங்கு பகிர்கிறேன். ஐயனின் எஸ்.எல்.ஆர் எங்கட தமிழ்ச் சினிமாவில அனேகமாக ஒரு கட்டம் வரும். ஹீரோவுக்கு கோபம் வந்தால் கையைத் தான் காட்டுவினம். அவர் கையைப் பொத்த, நரம்பு புடைச்சு இரத்தம் ஓடும். இந்த சீன் வைக்காத…

  23. Started by Subiththiran,

    சாத்தான்! அவன் அந்த நடைபாதையில் இருந்த இருக்கை ஒன்றில் வானத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவனுடைய மனதிற்குள் ஆயிரம் கேள்விகளும் அச்சங்களும் கலகம் செய்து கொண்டிருந்தன. அவனிடம் நிரந்தர வதிவிட அனுமதி இல்லை. நிரந்தர வதிவிட அனுமதி இல்லை என்பதால் நிரந்தர வேலை இல்லை. நிரந்தர வேலை இல்லை என்பதால் வருவாய் போதுமானதாக இல்லை. வீட்டில் மனைவியுடன் அடிக்கடி சண்டைகளும் வர ஆரம்பித்து இருந்தன. ஊரில் இருந்து வருகின்ற கடிதங்களும் அவனுடைய மனச்சுமையை கூட்டுவதாகவே இருந்தன. இந்தப் பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்கு அவனுக்கு எந்த வழியும் தென்படவில்லை. எதிர்காலத்தை நினைக்க அச்சமாக இருந்தது. யாரவாது வந்து தன்னை இந்தப் பிரச்சனைகளில் இருந்து கைதூக்கி விட மாட்டார்களா எ…

    • 11 replies
    • 2.5k views
  24. அவன் தான் மனிதன் ............ நாற்புறமும் கடலால் சூழபட்ட அந்த தீவினிலே .ஒரு ஒதுக்கு புறமான ,சிறு கிராமம் .காலத்தின் கோலம் , அரக்கர் ஆட்சியில் ,அக்கிராமத்தில் இருந்தவர் எல்லோரும் வெளியேறி விட்டார்கள் , ஒரு விறகு வெட்டியும் குடும்பத்தினரும் , வாழ்ந்தார்கள் .கிராமத்தவர் எல்லாம் போய்விட ,அவனுக்கு போகிடமும் இல்லை ,அருகிலிருந்த சிறு கொட்டிலில் அமைக்க பட்ட வைரவர் சிலைக்கு தினமும் பூசை செய்து வருவதால் அதை விட்டு போகவும் மனமில்லை , கடவுள் காப்பாறுவார் என்ற அசைக்காத நம்பிக்கை .அவன் எங்கும் போகவில்லை . காலமும் ஓடிக்கொண்டு இருந்தது ,ஒருநாள் அவர்கள் வீட்டு நாய் ,சிறுசல சலப்பு கண்டு குரைக்க தொடங்கியது .இரவானதால்..... அவன் இரு சிறு குழந்தைகளுடன் ,வெளியில் செல்ல…

  25. தம்பி சுறுக்கென்று சிப்டை( shift)மாத்து ராசா. .அவனை அவசர படுத்தினார். இன்றைக்கு என்னவோ வழமைக்கு மாறா பிசியாய் இருக்கு ..இவங்கள் துலைவாங்கள் எங்கிருந்து தான் வாறங்களோ தெரியாது வந்து கொண்டிருக்கிறாங்கள்.அவருடையதை தொடங்க முன்னரே அவரே இப்பவே வேலை செய்து கடினமாக கஸ்டபடுவர் போல வார்த்தைகளை கொட்டி கொண்டிருப்பதை கேட்ட அவன் , கொஞ்சம் பொறண்ணை இந்த கியூவை கிளியர் பண்ணி போட்டு தாறன் அது உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது. அவர் நடுத்தர வயதை கடந்தவர் . இதே வேலையை இங்கு கன காலமாக செய்யிறார் அதிலை ஒரு பிடிப்பில்லாமால் அவருக்கு மட்டுமல்ல அந்த மூலையில் கடந்த வார தமிழ் பேப்பரோடு மல்லாடி கொண்டிருக்கும் இவரின் நண்பர் சண்முகமும் அப்படித்தான் .அவர்கள் இரண்டு பேரும் என்ன …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.