கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
-
வேலைக்காரி – சிறுகதை அந்தப் பெண்ணைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்ளும்படியாக டாக்டரின் மனைவி வித்யா தான் சிபாரிசு செய்திருந்தாள். வித்யாவிற்கு அவளை எப்படித் தெரியும் எனத் தெரியவில்லை. வாசல்கதவை ஒட்டி நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். ஆனால் தோற்றம் நடுத்தர வயது பெண்ணைப் போலவே இருந்தது. மெலிந்திருந்த போதும் களையான முகம். நீண்ட கூந்தல். கவலை படிந்த கண்கள். அந்தப் பெண்ணின் கையில் துணிப்பை ஒன்றிருந்தது. `உன் பேரு என்னம்மா` எனக்கேட்டேன் `கோகிலம்` என்றாள் `கோகிலாவா` என மறுபடியும் கேட்டேன். `இல்லை சார் கோகிலம்` என அழுத்தமாகச் சொன்னாள். இப்படி ஒரு பெயரை முதன்முறையாக இப்போது தான் கேட்கிறேன். `எந்த ஊர…
-
- 2 replies
- 15.8k views
-
-
சிறிது காலமாக சிறீலங்கா சிறைகளில் அப்பாவித் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் பிடிக்கப்பட்டு அடைக்கப்படுகிறார்கள். இந்தச் சிறை அனுபவங்கள் பயங்கரமானது. நேரில் அனுபவித்தவர்களிற்குத்தான் இதன் துன்பங்கள் தெரியும். யாழ் களத்திலும் சிறீலங்கா சிறைகளில் வைத்து செய்யாத குற்றத்திற்காக சிங்களக் குண்டர்களால் துன்புறுத்தப்பட்ட பலர் இருக்கக்கூடும். உங்கள் சிறீலங்காவில்பட்ட சிறைஅனுபவங்களை யாழ்கள நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இக்கருத்தாடலை நாம் ஒட்டியுளோம். இங்கு எமது அனுபவங்களை நாம் கூறுகின்றோம். சிறீலங்கா சிறைகளில்பட்ட உங்கள் சொந்த அனுபவங்களையும் கூறி வெளி உலகத்திற்கு தெரியாத உண்மைகளை அம்பலப்படுத்துங்கள்! இங்கு நாம் எழுதப்போகும் சம்பவங்கள் எமது சொந்தவாழ்வில் நடைபெற்ற…
-
- 103 replies
- 15.7k views
-
-
அப்பொழுது எனக்குப் பதின்மூன்று வயது. எனது தந்தை ஜெர்மனிக்குப் பயணம் போவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார். அவரை வழியனுப்ப நாங்கள் எல்லோரும் கொழும்பு சென்றோம். அப்பாவைத் தவிர ஒருவரும் முன்னர் கொழும்பு சென்றிருக்கவில்லை. எனது சித்தப்பாவும் எம்முடன் வந்திருந்தார். அவர் அப்போது யாழ் பல்கலைக் கழக மாணவர். ஆனாலும் யாழ்ப்பாணம் தாண்டி வேறு எங்கும் செல்லாத பட்டிக்காடு. அப்பா மிகவும் துணிவானவர் என்னைப்போல். ஆனால் சித்தப்பா பயந்தவர். தனிய எங்கும் போகமாட்டார்.எந்த நேரமும் புத்தகங்களுடன் கிடப்பார். எங்களுடன் வந்து ஏதாவது பம்பலாகக் கதைப்பது என்று ஒருநாளும் செய்ததில்லை. எனக்கு அவரைப் பார்த்தால் எரிச்சல் தான் வரும்.எங்கள் குடும்பத்தில் இப்படி ஒன்று வந்து பிறந்திருக்கிறதே என்று. கொழு…
-
- 57 replies
- 15.5k views
-
-
எனக்கு அப்போ பதினைஞ்சு வயசு தான் இருக்கும். பூனை மீசை இடைக்கிடை அரும்பி இருந்தாலும், தலைவர் பிரபாகரன் மாதிரி பொட்டு அம்மான் மாதிரி (அந்த காலத்தில் மீசை என்றால் அவர்களது மீசை தான் அழகு) மீசை வர வேண்டும் என்று, அப்பாவின் முகச்சவரஅலகை (சேவிங் பிளேடு தானுங்க ..சும்மா தமிழ்ல சொல்லி பார்த்தேன் ) கள்ளமாக எடுத்து வழிச்சும் பார்த்தாச்சு மீசை வளர்ந்த பாடு இல்லை. எங்கட ஊர் பிள்ளையார் கோவிலில் ஐயருக்கு எல்லாமே நாங்க தான், மணி அடிக்கிறது, மடப்பள்ளி கழுவிறது, சாமி தூக்கிறது, மாலை கட்டுறது ஏன் மேளகாறார் வராவிட்டால் மேளம் அடிக்கிறதும் நாங்கள் தான். அதுக்கு லஞ்சமாக பிள்ளையாருக்கு வைச்ச பொரிச்ச மோதகம் கருவறையின் பின் வாசல் வழியாக எங்களுக்கு எப்பவுமே வந்து சேரும். அண்டைக்கும் அப்படி த…
-
- 111 replies
- 15.4k views
- 1 follower
-
-
[01] நல்ல நித்திரையில் இருந்தவனுக்கு லைற் வெளிச்சம் கண்ணில அடிக்க... "என்னடி இந்த நேரத்தில.... வந்து படு! குளிருதடி.... ஏசியைக் கொஞ்சம் குறையன்! என்ன பண்ணிக்கொண்டிருக்கிறாய்?" என்று அரைக்கண்ணால பார்த்து.... நித்திரை முறியாமல் சொல்லிக்கொண்டிருந்தவனுக்கு, அவள் சாறிகட்டி வெளிக்கிட்டுக்கொண்டிருந்தது தெரியவேயில்லை! வழமையாக அவள் ஆறரைக்குத்தான் எழும்புவாள். எழும்பவிடாமல் இன்னும் அரை மணித்தியாலம் மினக்கெடுத்திப்போட்டுத்தான் விடுதலை குடுக்கிறவன் இவன். இன்றைக்கு அவள் முன்னதாகவே எழும்ப ஒரு காரணம் இருந்தது. அவளின் நண்பி ஒருத்தியின் திருமணம் அன்றைக்கு. நல்ல நேரம் காலை 8.09 மணிக்கு என்று கலியாணா கார்ட்டிலயே அடிச்சிருந்தவையள் என்று அவளுக்கு நல்ல ஞாபகம்!.எந்த சாறியை உடுக்கோணும் …
-
- 73 replies
- 15.3k views
-
-
அவசரம் அவசரமாக கதவை திறந்தான் .அறையில் யாரும் இல்லை .நேரத்தோடை சுரேஸ்க்கு சொல்லியிருந்தும் இன்றும் அலட்சியபடுத்தியது என்னவோ போல் இருந்தது அவனுக்கு ,வழமையாக எங்கும் போகாமல் இதுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் சுரேஸின் மைத்துனனை கூட காண கிடைக்கவில்லை . .இன்றைக்கென்று எங்கு போய் தொலைஞ்சாங்கள் சனியன்கள் என்று மனதுக்குள் திட்டிக் கொண்டான். இந்த எட்டாவது மாடிக்கு ஏறி வந்த மூச்சு அடங்காத நிலையில் அதே வேகத்திலையே கதவை சாத்தி விட்டு இறங்கி கொண்டிருந்தான். ,படி இறங்கின்ற இடத்தில் எந்த நேரம் சென்றாலும் அழுக்கு உடை அணிந்த கறுத்த இனத்தவன் ஒருவன் குந்தி இருப்பது வழக்கம் .அவனையும் சிறிது இடித்து தள்ளிக் கொண்டு வேகமாக போக , அவன் முதலில் டச்சு மொழியில் ஏதோ இவனை நோக்கி சத்தம் போட்டான் ,பிறகு த…
-
- 77 replies
- 15.1k views
-
-
வலி தெரியாக் காயங்கள்.... முருகன் கோவிலுக்கு முன்னால் மனதால் கும்பிட்டுவிட்டுத் திரும்பி பார்த்தாள் வேணி. அவளையே வைத்த கண்வாங்காமல் பார்த்தபடி நின்ற முகத்தினைக் கண்டு திடுக்குற்று, அவன் யார் என்று உற்றுப் பார்த்தாள் முகம் புரியவில்லை. கடந்த ஒரு மாதமாக அவளையே பின் தொடரும் யார் அவன்? பாடசாலைக்கு முன்னால் நிற்பான். ரீயூசனுக்கு போனாலும் வருவான். கோவிலுக்கு போனாலும் வந்து நிற்கிறானே யார் இவன்? மெல்லிய அரும்பு மீசை, கூரான நாசி ம்ம் பார்த்தால் மறு முறை பார்க்க தூண்டும் முகம். அடுத்த நாளும் பாடசாலைக்கு போகும் போதும் அவன் பின்தொடர்வதை அவள் உணர்ந்து கொண்டாள். பின்னால் வரும் அந்த இளைஞன் யார் என்று கூட வந்த சினேகிதியிடம் கேட்டாள். "யார் ஊருக்குள் புதுமுகம் என்றும், ம்ம் கொ…
-
- 120 replies
- 14.6k views
-
-
என்ன செய்யலாம் நேசக்கரம் அமைப்பிறகாக பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியில் நிகழ்ச்சியொன்று புதன் வெள்ளி மற்றும் சனிக்கிழைமைகளில் சாந்தி ரமேசும் நானும் செய்வது வழைமை .சில நேரங்களில் நான் நிகழ்ச்சி செய்வதாக அடித்து சத்தியம் செய்து விட்டு நிகழ்ச்சி செய்யாமல் எஸ்கேப்பாகி சாந்தியிடம் திட்டுவாங்குவதும் வழைமையான நிகழ்ச்சிநிரலில் அடங்கும். இதுபோலத்தான் ஒருநாள் வானொலி நிகழ்ச்சி முடிந்து வழைமை போல உதவ விரும்புபவர்கள் தொடர்புகொள்ளவும் என்று சாந்தியினுடைய தொ.பே மற்றும் என்னுடைய தொ.பே இலக்கங்களை அறிவித்து நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில் எனது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது மறு முனையில் ஒரு ஆணின் குரல் அதனை உரையாடல் வடிவிலேயே இங்கு தருகிறேன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான். வண…
-
- 187 replies
- 14.4k views
-
-
மெசொபொத்தேமியா சுமேரியர் Posted Today, 05:04 PM கடந்த வருடம் நானும் என் கணவரும் இரண்டு பிள்ளைகளும் விடுமுறையில் இத்தாலி சென்று இருந்தோம். கணவரின் ஒன்றுவிட்ட சகோதரன் தினேஷ் அங்கிருந்தான். இத்தாலி பற்றி பல கதைகள் கேள்விப்பட்டிருந்தாலும் அவன் இருக்கும் துணிவு ரோமில் போய் இறங்கியாச்சு. எங்க பாத்தாலும் கூடுதலா சிங்களவங்கள்தான். கூடிக் கூடி நிண்டு கதைச்சுக்கொண்டு நிண்டாங்கள். அவங்கள் எங்களப் பாத்து நக்கலடிச்சுச் சிரிச்சமாதிரி இருந்திது. அவங்களுக்கு முன்னாலை கேவலப்பட்டுப் போனது போலை அவமானமா இருந்திது. கணவரின் தம்பியை பத்து வருடம் கழித்துப் பார்த்தபடியால் என்ர மனுசன் குடும்பக் கதையள் கதைக்கத் தொடங்கீட்டார். போலி எண்ட இடத்திலதான் தம்பி இருந்தபடியால் அங்க போற பஸ்சில ஏறி இருந்தாச்…
-
- 103 replies
- 14.3k views
-
-
பாகம் - 1 2009 மே திங்கள் 18ம் நாள்.. தமிழீழத்தின்.. இறுதிப் போர் முனையான முள்ளிவாய்க்காலின் இறுதி மூச்சடக்க எதிரிகளின் போர்க்கலங்கள் தீவிரமாக முழங்கிக் கொண்டிருந்தன. இஸ்ரேலிய தயாரிப்பு கிபீர்களும் டோராக்களும் சீனத் தயாரிப்பு F-7 களும் ரஸ்சிய தயாரிப்பு உலங்குவானூர்திகளும் குண்டுகளைக் கொட்டிக் கொண்டிருக்க அமெரிக்க தயாரிப்பு செய்மதிகள் முள்ளிவாய்க்காலில் புலிப் போராளிகளின் நகர்வுகளை துல்லியமாகக் கண்காணித்து குண்டுகளுக்கு இலக்குகளைக் காட்டிக் கொண்டிருந்தன. கூடவே இந்திய ராங்கிகளும் பாகிஸ்தானிய பல்குழல் எறிகணைகளும் பள்ளிகள்.. வைத்தியசாலைகள்.. மக்கள் கூடாரங்கள் என்று எங்கும் குண்டுகளைக் கொட்டி அப்பாவித் தமிழ் மக்களை வேட்டையாடிக் கொண்டிருந்தன. இத்தனை அவலங…
-
- 71 replies
- 14.3k views
-
-
தாதா தாவூத் இப்ராஹிம்: Most wanted person (க்ரைம் தொடர்-1) மும்பை மாநகரத்தின் மிக பிரமாண்ட ஹோட்டல் அது. அரபிக் கடலில் எழும் அலைகள் கரையில் வந்து மோதும் பொழுது, உடையும் சாரல் துளிகள் அந்த ஹோட்டல் வாசலில் வந்து தெறிக்கும். அதனால் எப்பொழுதும் ஈரமாகவே இருக்கும் அந்த ஹோட்டல் வாசல் சாலை. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பெரிய பிசினஸ் புள்ளிகள், பாலிவுட் ஸ்டார்கள், முக்கியமான அரசியல் வாரிசுகள், உயர் அதிகாரிகள் என அனைவருவே அதிகார வர்க்கம்தாம். அந்த பிரமாண்ட ஹோட்டலில் யார் யாருடன் வருகிறார், யார் யாருடன் போகிறார் என்கிற விபரங்கள் ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரிந்தாலும் அதை வெளியில் சொல்வதில்லை. பாலிவுட்டில் மிக பிரபலமாக இருந்த கனவுக்கன்னி நடிகை ஒருவர் மாலை நேரம் ஒன்றில…
-
- 25 replies
- 14.2k views
-
-
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலை வெட்டி வீழ்த்தி தோளின்மீது போட்டுக்கொண்டு மயானம் நோக்கி செல்லுகையில் அதனுள்ளிருந்து எள்ளி நகைத்த வேதாளம் பேசத்தொடங்கியது: "மன்னா! எல்லோரும் அமைதியாக உறங்கும் இந்த நள்ளிரவில், தமிழ் ஈழத்தின் இந்த சுடுகாட்டில் நீ எதற்காக இவ்வளவு சிரமப்படுகிறாய் என்று தெரியவில்லை. தளர்வில்லாத முயற்சி சமயங்களில் பின்னடைவை சந்தித்தாலும் அதை செய்பவர்களின் மன உறுதியினால் வேண்டிய பலனை கொடுத்தே தீரும். அதற்கு இந்த தமிழ் ஈழ தேசத்தின் வரலாறே சாட்சி. இந்த தேசத்தின் கதையை கூறுகிறேன் கேள். இந்த சுடுகாட்டின் அருகில் அமைந்துள்ள நகரமானது ஒரு காலத்தில் இந்திர லோகத்தைப்போல் பொலி…
-
- 3 replies
- 14.2k views
-
-
தீபாவளியை முன்னிட்டு டைகர்பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் "காதல்காவியம்" ஜம்மு பேபியின் "அழகிய காதல் மகன்" *கதாநாயகன் - "காதல் மன்னன்" சுண்டல் திரைபடத்தில் பிரசாந்தன் *கதாநாயகி - அறிமுக நட்சத்திரம் "அழகிய மகள்" ப்ரியா (ஜரோப்பிய வருகை) *இவர்களுடன் அறிமுகம் சின்ன கலைவாணன் செந்தூரன் (அவுஸ்ரெலிய வருகை) அறிமுகம் சிரிபழகி அனுசா (ஜரோப்பிய வருகை) *கெளரவேடத்தில் அட்டகாசமான குணசித்திர நடிகர் நெடுக்ஸ் தாத்தா (திரைபடத்தில் கனகசுந்தரம்) (தற்போது உங்கள் குடும்ப திரையரங்கான யாழ்நாற்சந்தியில் காண்பிக்கபடுகிறது) சுண்டல் அண்ணாவின் அட்டகாசமான நடிப்பில்!!! கண்களை மட்டும் அகல் விரித்து மூடிய திரைகுள் முகத்தை தேடி என்…
-
- 40 replies
- 14k views
-
-
என்குறிப்பு.. என்னுடைய பயணத்தொடரில் அதிகமாக அரசியல் கலந்துவிட்டது என்றும் அதனாலேயே சுவாரசியமான விடயங்களிற்கும் கருத்துக்களை பகிர முடியவில்லையென பலரும் குறைப்பட்டிருந்தனர். எனவேதான் அரசியல் கொஞ்சமும் கலக்காத அனைவரும் கருத்துக்கள் பகிரக் கூடியதானதொரு குறுந்தொடரை எழுதியிருக்கிறேன். இக்கதையை எழுதிய பின்னர் எனக்கு இரண்டு பிரச்சனைகள் ஒன்று குறுங்கதையாகத்தான் எழுத முடிவெடுத்திருந்தேன்.எழுதி முடித்தபின்னர் பார்தால் அது நீண்டுகொண்டேயிருந்தது.அதனால் குறுந்தொடராக்கிவிட்டேன்.அடுத்தது கதையை எழுதி முடித்துவிட்டு திரும்பப் படிக்கும் போது இதனை கதைகதையாம் பகுதியில் இணைக்கலாமா அல்லது பேசாப்பொருள் பகுதியில் இணைக்கலாமா என்கிற சந்தேகம் வந்துவிட்டது.ஆனாலும் முடிந்தளவு விசரம் இல்லா…
-
- 79 replies
- 13.5k views
-
-
--------------------------------------------------------------------- தண்ணீர் தேசம் கவிஞர் வைரமுத்து --------------------------------------------------------------------- 1 கடல்... உலகின் முதல் அதிசயம். சத்தமிடும் ரகசியம். காலவெள்ளம் தேங்கிநிற்கும் நீலப் பள்ளம். வாசிக்கக் கிடைக்காத வரலாறுகளைத் தின்றுசெரித்து நின்றுசிரிக்கும் நிஜம். கடல்... ஒருவகையில் நம்பிக்கை. ஒருவகையில் எச்சரிக்கை. கடல்குடித்துக் கொண்டிருந்த கலைவண்ணன் மடியில்கிடந்த தமிழ்ரோஜாவை மறந்துபோனான். அவள் அழகின் நவீனம். சிறகுகளைந்து சுடிதார்கொண்ட சொப்பனதேவதை. ரத்தஓட்டம் பாயும் தங்கம் அவள் தேகம். பொறுக்கி எடுத்த உலக அழகுகளை நெருக்கித் தொடுத்த நேர்த்தியான சித்திரம். குமரி வயதுகொண்ட கு…
-
- 0 replies
- 13.3k views
-
-
ஃபைவ் ஸ்டார் துரோகம்... க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் அதிரடி அரசியல் த்ரில்லர்! கடந்த ஓராண்டு காலமாக ஒன்இந்தியா தமிழில் க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் க்ரைம் த்ரில்லர் தொடரான ஒன்+ஒன்=ஜீரோ தொடர் இடம் பெற்றது. லட்சக்கணக்கான வாசகர்களால் ரசிக்கப்பட்ட தொடர் இது. அந்தத் தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் ஒரு புதிய தொடரை ராஜேஷ்குமார் ஒன்இந்தியா தமிழில் எழுதுகிறார். இந்தத் தொடருக்கு தனது பாணியில் 'ஃபைவ் ஸ்டார் துரோகம்' என்று தலைப்பிட்டுள்ளார். தலைப்பே, தொடருக்கான எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கிறதல்லவா? ரொம்ப நாள் காத்திருக்கத் தேவையில்லை... ஜஸ்ட் 24 மணி நேரம்தான். நாளை இதே நேரம் ஃபைவ் ஸ்டார் து…
-
- 32 replies
- 13k views
-
-
பெத்த மனசு ( சிறுகதை) செந்தமிழ்ச்செல்வி தம்பி மதியழகா... நான் உன் கிளி சின்னம்மா பேசுறன்பா.... உன் அம்மாவ ஒருதடவ வந்து பார்த்துட்டு போயிடப்பா... மருந்து மாத்திரை எதுவும் சரியாகல... எதுவும் சொல்லமுடியாதுப்பா.... என்று பேசிய கிளி சின்னம்மாவின் பேச்சை சிலைபோல் கேட்டுக்கிட்டே இருந்தன் கண்களில் என்னையறியாமல் கண்ணீர் கொட்டியது... சரிம்மா... நான் சீக்கிரமா வரன்.. என்றவாறு பதிலுக்காக காத்திராமல் தொலைபேசியை வைத்துவிட்டு எனது அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டேன் அப்பா எனக்கு ஆறு வயசிலயே விபத்தில இறந்திடாரு... அப்போ தங்கை றேனுவிற்கு மூனு வயசு. அப்புறம் எங்களுக்கு எல்லாமே அம்மாதான்... அம்மா படிகல ஆனா பக்குவமானவங்க.. நல்லது கெட்டது எல…
-
- 0 replies
- 12.9k views
-
-
தாயகத்தை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட 20 வருடங்களாகின்றது. நான் தாயகத்தை விட்டு வெளியேறும் போது அங்கு இருந்த உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்களில் பலர் உலகத்தின் வெவ்வேறு மூலைகளில் சிதறிப் போய் இருக்கிறார்கள். சிலர் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாது. சிலர் உயிருடன் இல்லை. இப்பொழுது பலர் தாயகத்துக்கு சென்று வருகிறார்கள். ஊடகவியலாளர் வித்தியாதரன் அவர்கள் ஒரு செவ்வியில் நல்லூர் திருவிழாவுக்கு ஐம்பதினாயிரம் வெளினாட்டவர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தார். தாயகத்துக்கு தற்பொழுது செல்பவர்களில் சிலருக்கு அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் இருக்கிறார்கள். பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். பல வருடங்களா…
-
- 65 replies
- 12.8k views
- 1 follower
-
-
மனவலி யாத்திரை.....! (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்) அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அவனது குரல் அழைக்கிறது. விழிப்புலனில் சிக்காத முகம் ஆனால் அந்தக்குரல் மட்டும் தெளிவாகக் கேட்டது. திடுக்கி…
-
- 1 reply
- 12.5k views
-
-
:P அவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தேன். என் நேரம், கதவு திறக்கும் சத்தம் கேட்டதாலும், இனிமேல் முடியாது என உணர்ந்ததாலும், மடிக்கணினியை மூடும் வேலையை செய்யத் தொடங்க... கொலுசுச் சத்தம், அவள் நெருங்கிவருகிறாள் என்பதை உணர்த்த, திரும்பிப் பார்த்தேன். எங்கள் வீட்டில் கொலுசுச் சத்தம் கேட்பதில்லை; பெண் குழந்தை இல்லாத காரணமோ என்னமோ, தெரியாது. அம்மா அணிந்திருக்கும் கொலுசு சத்தம் தராது. ஆனால் அதற்காக வருபவளை குற்றம் சொல்ல முடியுமா? திருமணம் முடிந்த முதல்நாள் அன்று, என்பதற்காக மட்டும் கிடையாது. ஒருவேளை அவளுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாகக் கூட கொலுசு இருக்கலாம். அவளைப் பற்றி எனக்…
-
- 15 replies
- 12.3k views
-
-
ரிபிசி ராம்ராஜ் அப்படி சொன்னதை எனக்கு ஜீரணிக்கச் சற்றுக் கடினமாகத்தான் இருந்தது. மாவிலாறில் அப்பொழுதுதான் பிரச்சனை ஆரம்பமாகிக் கொண்டிருந்தது. தமிழீழப் போராட்டம் போகப் போகின்ற கொடுரமான திசை பற்றி யாரும் கனவிலும் நினைக்காத நேரம் என்னுடைய இணையத்தில் ரிபிசி பற்றி வந்த விமர்சனத்திற்கு பதில் சொல்வதற்கு தொடர்பு கொண்ட ராம்ராஜ் அப்பொழுது நடந்த உரையாடலின் போது ஜீரணிக்க முடியாத ஒரு எதிர்வுகூறலை சொன்னார். அவர் சொன்னதன் சாரம்சம் இதுதான். விரைவில் பெரும் யுத்தம் வரும் உலகின் பலநாடுகள் சிறிலங்காவிற்கு உதவி செய்யும். விடுதலைப் புலிகள் வன்னியின் ஒரு பகுதியில் முடக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள். பிரபாகரன் மீது உண்மையான விசுவாசம் வைத்திருக்கும் சில ஆயிரம் புலிகள் கடைசி மட்டும் போராட…
-
- 137 replies
- 12.2k views
-
-
பரமேஸ்வரி - சிறுகதை பரமேஸ்வரியின் மகனுக்கு, மாமனாரின் பெயரைத்தான் சூட்டியிருந்தனர். மரியாதை காரணமாக, எவரும் `உலகநாதன்’ என்று அழைப்பதில்லை. பரமேஸ்வரியின் கணவர் ராமச்சந்திரன், `மணி’ என்றுதான் அழைப்பார். பரமேஸ்வரி, ``என் சர்க்கரைக்கட்டி... என் பூந்திக் குஞ்சே!” என இஷ்டம்போல் கொஞ்சுவாள். கணவர் ராமச்சந்திரனுக்கு, ஊர் ஊராகச் சென்று பிரின்டிங் ஆர்டர் எடுக்கும் வேலை. மாமா உலகநாதன், கலெக்டர் ஆபீஸில் வேலைபார்த்து ஓய்வுபெற்றவர். பரமேஸ்வரி, ராமநாதபுரம் அலையாங்குளத்துக்காரி (அழகன்குளம்தான் அவ்வளவு அழகாக உருமாறியிருக்கு!). சாதுவாக, அப்பிராணியாக இருந்தாலும் போக்குவரத்தெல்லாம் அடிதடிக் குடும்பங்களோடுதான். பேச்சு அதாட்டியமாக இருக்கும், பயப்பட மாட்டாள். ஆண…
-
- 1 reply
- 12k views
-
-
[17] போனை வைத்துவிட்டு உட்கார்ந்தவனின் நெஞ்சம்.... இப்பொழுது மிகவும் கலங்க ஆரம்பித்தது. அவளுக்கு வீஸா கிடைத்ததை அறிந்ததும்... இன்னும் சில நாட்களில் அஞ்சலி தன்னை விட்டு தூரமாக பிரிந்து செல்லப் போகின்றாள் என்பதனை அவனால் தாங்கிக்கொள்ள இயலாமல் எண்ணங்கள் அல்லாடியது. "போக வேண்டாம் என்று சொல்லுவமோ..." என்றுகூட ஒருகணம் யோசித்துவிட்டு, "இல்லையில்லை... அவள் படிக்கட்டும்....! என்ர சின்னத்தனமான ஆசைக்காக அவளின்ர படிப்பைக் குழப்பக் கூடாது" என முடிவெடுத்தவனால்... அவளின் பிரிவினைத் தாங்கும் மனநிலைக்கு இலகுவில் வர முடியாமல்.... தவித்தான். அவனிற்கு அப்போது தேவைப்பட்டது 'தனிமை' ஒன்றுதான். சற்று நேரத்துக்கு எங்கேயாவதுபோய் தனிமையில் உட்கார்ந்து யோசிக்க வேண்டும்ப…
-
- 56 replies
- 11.8k views
-
-
[size=5]வருடம்: 1976, [/size] [size=5]மாதம்: ஜூன்[/size] [size=5]நாள்: 27 [/size] குவைத் நாட்டில் இருந்து பகரைன் வழியாக வந்த, SQ763 இலக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் கிரேக்க நாட்டின் ஏதன்ஸ் விமான நிலையத்தில் தரை இறங்கிய நேரம் காலை 6 மணி 45 நிமிடங்கள். விமானத்தில் இருந்து வெளியேறிய ஐந்து பயணிகளில் நால்வர் நேராக transit பகுதிக்கு சென்று சென்று பாரிஸ் நோக்கிச் செல்லும் Air France AF139 விமானதிற்க்கான check in முடித்து, அங்கிருந்த இருக்கைகளில், ஒருவருக்கொருவர் தெரியாதவர் போல் வெவ்வேறு இடங்களில், அமர்ந்தார்கள். அதே காலை 8:59 மணியளவில் Air France 139 விமானத்தின் பைலட், கப்டன் Michel Bacos, இஸ்ரேலிய நாட்டின் Ben Gurion விமான நிலையத்தில் இருந்து ஏதன்ஸ் வழிய…
-
- 47 replies
- 11.7k views
-