கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
கடவுள் தந்த அழகிய வாழ்கை ,,,,,,,,,,,,,,,,, அதிகாலை ஐந்து மணியிருக்கும் அலாரச்சத்தம் கேட்டு கோமதி எழுந்து தன் காலைக்கடன் முடித்து கோப்பி குடித்து ,இரவு பெட்டியில் போட்டு வைத்த் மதிய உணவையும் எடுத்து கொண்டு ,பஸ் தரிப்பு நோக்கி நடந்தாள் . கனடா தேசத்தின் மார்கழி குளிரில் தன்னை பாது காக்க காலுறை கையுறை, தடித்த அங்கி ,காதுகளை மூடிய "மபிலேர்" என்று தன்னை ஒரு துணி மூடை யாகவே ,போர்த்தியிருந்தாள் . பஸ் வண்டி வரவே ஏறி அமர்ந்தவளின் எண்ணம் தாயகம் நோக்கி சென்றது . அம்மாவும் அப்பாவும் தன் இரு தங்கைகளும் என்ன பாடோ ? நான் இந்த குளிரில் உழைத்து அனுப்பும் காசில் தான் அவர்கள் சீவியம் .அப்பாவுக்கும் வயதாகிறது இனி பாடசாலை ஆசிரியார் பதவியிலிருந்து அடுத்தவருடம…
-
- 3 replies
- 2.5k views
-
-
நித்தியகல்யாணியில் தேடி தேடி ஆயும்போது காலை ஆறு மணி இருக்கும். மதிலுக்கு மேலால் வளர்ந்து நிற்கும் மரத்தை ஆட்டுக்கு குலை குத்தும் கம்பியால் எட்டி கொப்பை வளைக்கும் போது யாழ்ப்பாணத்து காலை பனி தலையில் கொட்டும்….. ப்ச்ச்… ஒரு சின்ன ஒலைப்பெட்டியில் மொட்டு தவிர்த்து பூவை புடுங்கி போட்டுக்கொண்டு அப்படியே செம்பரத்தைக்கு தாவுகிறேன். ஒரே மரத்தில் எத்தனை வகை பூக்கள்? அம்மா இந்த செம்பரத்தை “ஒட்டில்” FRCS செய்தவர்! அதில் ஐந்தாறை மடக் மடக்கென்று ஓடித்து போட்டுக்கொண்டு; தோட்டத்தில் நின்ற கனகாம்பரம், ரோசா, கடதாசிப்பூவில் கை வைப்பதில்லை. பேப்பர் பூ எல்லாம் சாமிக்கு வைக்க கூடாதாம். கனகாம்பரம் கலியாண வீடு, சாமத்திய வீடு ஏதும் வந்தால் கொண்டைக்கு வைக்க தேவை. ரோசா விசிட்டர்ஸ் வந்தால் மணிக்கணக்…
-
- 6 replies
- 1.6k views
-
-
ஊரிலை சின்னவயிசிலை பள்ளிக்கூடத்திலை பாரதிதாசனின்ரை தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்கு போவென்று சொன்னாள் உன் அன்னை எண்டொரு பாட்டுச் சொல்லித் தருவினம். அது உண்மையிலை பெண்குழந்தையளிற்கான பாட்டு அதையேன் பெடியளிற்கும் படிப்பிச்சவையெண்டு தெரியாது ??..ஆனால் அதிலை ஒரு வரி வரும் கடிகாரம் ஓடுமுன் ஓடு எண்டு. அதற்கான அர்த்தம் அண்டைக்கு எனக்கு உண்மையா விளங்கேல்லை ஆனால் வெளிநாடு வந்தால் பிறகுதான் அதன் உண்மையான அர்த்தம் புரிந்தது இங்கு தமிழாக்களின்ரை நிகழ்வுகளைத் தவிர மற்றையபடி எல்லாமே நேரம்..நேரம்.. நேரம்.. நேரத்தை பிடிக்க ஓடிக்கொண்டிருக்கின்றோம்.. ஊரிலையெண்டால் வீடுகளிலை வரவேற்பறையிலை மட்டும் ஒரு மணிக்கூடு இருக்கும்.அப்பிடி எங்கை வீட்டிலையும் ஊரிலை ஒரு பெரிய மணிக்…
-
- 31 replies
- 7.3k views
-
-
கடிபட்ட பொழுதுகளின் உத்திரவாதங்கள்,,, சுற்றிக் கொண்டிருக்கிற ஒற்றைக்கொசு கடிக்கும் என்கிற எந்த எதிர்பார்ப்பும் இல்லை. நீண்ட நேரமாய் சுற்றிக்கொண்டிருக்கிறது, ”என்ன வேணும் உனக்கு,எனது ரத்தம்தானே உட்கார்ந்து உறிஞ்சி எடுத்துக் கொண்டு போ” என உடல் முழுவதையும் திரை விலக்கி காட்டிவிட முடியாது தான், ”எத்தனையோ விதங்களில் யார்யாரோலோ என்னனென்ன விதமாகவோ ரத்த மும் வியர்வையும் வேர்வையும் உழைப்பும் உறிஞ்சி எடுக்கப்படும் பொழுது நீ உட்கார்ந்து கொஞ்சம் உன் உணவுக்கான தேவையாய் எடுப்பதால் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லைதான்.” கொசு சொல்கிறது,”குறைந்து விடப்போவதில்லை என்பது வாஸ்தவம்தான். அதற்காக ஒரேயடியாய் உறிஞ்சி கொண்டே இருக்க முடியாதுதா…
-
- 1 reply
- 1.2k views
-
-
கடுப்பான முகம்! அவன் துணைவியாரோடு அங்காடிக்குச் சென்று இது ஐந்தாவதுகடை என்பாதாலும் ஒரு பிஸ்கற் பெட்டிக்காக இருவரும் ஏனென்றுவிட்டுத் துணைவியார் பொருட்கள் வேண்டச் செல்ல, இவனோ வெக்கையால் சிற்றுந்தை விட்டிறங்கி வீதியை விடுப்புப் பார்க்கலானான். அந்த வீதிவழியே ஒரு கரும்திராட்சையும் வெண்திராட்சையுமாக மகிழ்வோடு சென்றுகொண்டிருந்தனர். கருந்திராட்சைக் கறுப்பழகி நான்குமுழ வேட்டி உடுத்துவதுபோன்ற அரைப்பாவாடை அணிந்திருந்தாள். அது காற்றிலே பறந்து அவளது அழகைப் பறக்கவிட்டவாறு சென்றுகொண்டிருக்க, அவளது இதழ்களோ அவள் கையிலிந்ருந்த ஐஸ்கிரீமைப் பதம்பார்த்தவாறு கரங்களை இணைத்தவாறு நடந்துகொண்டிருந்தனர். அவர்களை எதிர்த் திசையிலிருந்து ஒரு வெள்ளைப்பெண்மணி கடந்தாள். அவளின் முகம் கடுப்பானதோடு ஒரு வி…
-
- 0 replies
- 627 views
-
-
கடை - சிறுகதை ம.காமுத்துரை, ஓவியங்கள்: ஸ்யாம் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... பையன் கடையைத் திறந்து வைத்திருந்தான். வாசலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு சேரை எடுத்துப்போட்டு, அன்றைய தினசரியை விரித்துப் படிக்கத் தொடங்கினார் கடைக்காரர். செய்திகள், மனதில் பதியவில்லை; வட்டெழுத்துக்கள் போலவும் பிராமி எழுத்துக்கள் போலவும் கண்களில் பூச்சி காட்டின. பையன் சாமி படத்துக்குப் பத்தி பொருத்துவதற்காக வத்திப்பெட்டியுடன் தயாரானான். கடைக்காரர் எப்போது கடைக்கு வந்தாலும் பத்தி பொருத்தி, சாமி படத்துக்குக் காட்டிவிட்டுத்தான் உட்காருவார். இன்று ஏனோ மனநிலை கெட்டிருந்தது. நான்கு நாட்களில் தீபாவளி. கடைக்கு வரும் சமைய…
-
- 0 replies
- 1.8k views
-
-
http://eathuvarai.net/?p=1943 “சூரிச்” புகையிரத நிலையத்தினுள் நுழைந்த அமுதன் அங்கிருந்த சிற்றுண்டி சாலையை நோக்கி நடந்தான். அங்கு இருந்த கதிரைகளில் பிஸ்கற்றை சாப்பிட்டபடி விளையாடிக்கொண்டிருந்த மாலதியும் தமிழினியும் பல நாட்களிற்கு பின்னர் அமுதனைக் கண்டதும், அப்பா என்றபடி ஓடிப்போனவர்களை முழந்தாளிட்டு இரண்டு கைகளாலும் கட்டியணைத்து மாறி மாறி முத்தமிட்டவன் . தான் வாங்கி உடைந்து விடாமல் பத்திரமாக பாதுகாத்தபடி கொண்டு வந்த இரண்டு Kinder சொக்கிலேற்றுக்களை இருவரிடமும் கொடுத்து விட்டு மேனகாவை பார்த்தான். தன்னை பாரக்கிறான் என்பதை கவனித்த மேனகா அவனை கவனிக்காதது போல் வாடிக்கையாளர் ஒருவரிற்கு குளிர் பானங்களை எடுத்து நீட்டிவிட்டு பணத்தை பெற்றுக்கொண்டிருந…
-
- 60 replies
- 10.3k views
-
-
கடைசி கடுதாசி அன்புள்ள அமுதினிக்கு, அன்றைய திகதி நினைவில்லை. அன்று ஏன் எனக்கு மட்டும் புது பட்டுப் பாவாடை சட்டை அணிவித்து காலையிலேயே எனக்குப் பிடித்த பருப்புக் குழம்பு செய்திருந்தாய்? “ஆறு வயசாயிட்டது…. இனியெங்கிலும் அவளை ‘அம்மா’ எண்டுதான் விளிக்க வேணும். சரி தன்னே?’ என்று மாமி என்னைப் பார்த்துக் கூறவும், “பரவாயில்லை ! அவளுக்கு எப்படி இஸ்டமோ அப்படியே விளிக்கட்டும்” என்றாயே? நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்ததை அவ்வளவு ரசித்தாயா? நாம் நட்டு வைத்த செடியில் கொத்துக் கொத்தாய்ப் பூக்கள் பூத்தது, அண்ணன் (அவனது பெயர் ஏன் எனது நினைவிற்கு வரமாட்டேன் என்கிறது?) ஒரு கொத்தைப் பறித்து அதில் ஒரு பூவின் நடுவில் இருந்த மெல்லிய நார் போன்ற ஏதோ ஒன்ற…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
கடைசி பேட்டி 1 ராஜேஷ். வயது 28. 5 அடி 11 அங்குலம். மாநிறம். வழக்கமாக உடற்பயற்சி செய்யும் தேகம். மிடுக்கான நடை. ஆங்கிலம் ஹிந்தி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று பல மொழிகளில் சரளமாக பேசும் திறமை. உடை அணிவதில் தற்போதை நாகரீகம் எது என்று இவனை கேட்டுத்தான் தெரிந்துக் கொள்ள வேண்டும். நான்கு சக்கர வாகனம் உண்டு. ஆனாலும் சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஒரு ஹீரோ ஹோன்டா ஸ்பெலன்டர். இவன் தான் கதையின் நாயகன். இவனும் ஒரு ஸ்பெலன்டர் தான். உலக ஞானம். அனைத்து நாட்டு அரசியலும் விரல் நுனியில். இந்திய நடப்பை கரைத்து குடித்தவன். யார் மந்திரி யார் சட்டமன்ற உறுப்பினர் அவர் ஜாதகம் என்ன என்று அனைத்தும் அறிவான். வேலை. மிகப்பெரிய தனியார் தொலைக்காட்சியில் நிருபர். தனியே…
-
- 4 replies
- 2.2k views
-
-
கடைசிக்கடிதமும் காயாத கண்ணீரும். அவன் இருக்கிறானா ? எங்கே….? வதைமுகாமிலா அல்லது வவுனியா முகாமிலா பத்தாயிரத்துக்கும் மேல் சரண்புகுந்த தோழ தோழியருள் அவனும் தப்பியிருக்கிறானா ? அக்கா அக்கா என அவன் ஸ்கைபியில் கூப்பிடும் குரலும் மறைந்து…ஸ்கைபியில் அவன் பெயர் இப்போது சிவப்பாகிக் கிடக்கிறது…. ஏதோ எனது வீட்டில் என்கூடப்பிறந்த ஓர் இரத்த உறவு போல அவன் என்னுடன் வாழ்ந்து கொண்டிருந்தவன். தனக்குள்ளான துயரங்களை வெற்றிகளையென எல்லாவற்றையும் கடிதமெழுதி இளைப்பாறிக்கொள்ள “அன்பின் அக்கா” என்று ஆரம்பித்து அனைத்தையும் எழுதியனுப்புவான். எத்தனையோ தோழதோழியரின் எழுத்துக்கள் ஞாபகங்கள் போல இவனும் எனக்கு எழுதிய கடிதங்கள் பேசிய வார்த்தைகளென இவன் ஞாபகமாய் ஏராளம் நினைவுகள்…… யார…
-
- 4 replies
- 2.5k views
-
-
கடைசிச் சடலம் யோ.கர்ணன் ஓவியங்கள் : ஸ்யாம் எனக்கு இப்போதும் நன்றாக நினைவில் உள்ளதுஇ ஒரு மரணம் அதன் அர்த்தங்களுடன் என்னுள் பதிந்த நாள்! எனக்கு அப்போது ஆறு வயது. இலங்கை ராணுவத்தின் வாகன ரோந்து அணியினரால் சுடப்பட்டுஇ வீதியில் கிடந்த அம்பி மாமாவை அப்பாவும் இன்னும் சிலருமாக வீட்டுக்குக் கொண்டுவந்தனர். அவரது வயிறு பிளந்து இருந்தது. பெரிய உடம்புக்காரரான அவர்இ ஒரு விலங்கைப்போலத் துடித்துக்கொண்டு இருந்தார். வாகனம் பிடித்து மருத்துவமனைக்குக் கொண்டுபோகும்போது வழியிலேயே இறந்துபோனார். அம்பி மாமாவின் முகம் மங்கலாகவே நினைவில் உள்ளது. எப்போதும் எனக்கு இனிப்பு வாங்கித் தருவதுஇ பிளந்த வயிறுஇ மரண ஓலம்இ அவரில் இருந்து பெருகிய ரத்தம் தவிரஇ வேறு எதுவும் நினைவில் இல்லை. நா…
-
- 6 replies
- 3.2k views
- 1 follower
-
-
கட்சிக்காரன் - சிறுகதை சிறுகதை: இமையம், ஓவியங்கள்: செந்தில் சலவை வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு, சட்டையைப் போட்டுக்கொண்டார் பொன்னுசாமி. வேட்டி சட்டை சரியாக இருக்கிறதா என்று பார்த்தார். எண்ணெய் தடவி தலை சீவினார். தன்னுடைய துணிகள் இருந்த இடத்தில் துண்டைத் தேடினார். இல்லை. அடுத்தடுத்த இடங்களில் தேடினார். துண்டு கிடைக்கவில்லை. மீனாட்சியின் துணிகளுக்கிடையே கிடந்த இரண்டு துண்டுகள் அழுக்காக இருந்தன. அதை எடுத்துக் கோபத்தில் எறிந்துவிட்டு வந்து மீண்டும் தன்னுடைய துணிகள் இருந்த இடத்தில் தேடினார். இருந்த சால்வைகளும் உருப்படியாக இல்லை. உடம்பு சரியில்லாத நிலையில் படுத்திருந்த மீனாட்சி “என்னாத்தத் தேடுறீங்க?” என்று கேட்டாள். “துண்டு.” “வேட்டி சட்டதான் போட்ட…
-
- 0 replies
- 2.6k views
-
-
கட்டறுத்த பசுவும் ஒரு கன்றுக் குட்டியும் 0 கதையாசிரியர்: தி.ஞானசேகரன் தின/வார இதழ்: வீரகேசரி 1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதிரி தனது பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டி ருக்கிறாள். வியர்வைத் துளிகள் அவளது நெற்றியில் அரும்பி யிருக்கின்றன. பின் வளவைக் கூட்டித் துப்புரவாக்கிக்கொண்டிருந்த அவளிடம், அழுது அடம்பிடித்து வெற்றியடைந்துவிட்ட களிப்பில் அந்தச் சிறுவன் பால் குடித்துக்கொண்டிருக்கிறான். பால் கொடுப்பதிலே ஏதோ சுகத்தைக் காண்பவள்போல கதிரி கண்களை மூடிய வண்ணம் சுவரோடு சாய்ந்திருக்கிறாள். அவளது மடியில் முழங்கால்களை அழுத்தி, தலையை நிமிர்த்தி, தன் பிஞ்சுக் கரங்களால் தாயின் மார்பில் விளையாடிக் கொண்…
-
-
- 1 reply
- 530 views
-
-
கட்டியவளைக் கொண்டாடுகிறவர்கள் "சொல்லச் சொல்ல இனிக்குதடா - முருகா உள்ளமெல்லாம் உன் பெயரை...' அழைப்புமணியை அழுத்தியதும் மணியோசைக்குப் பதிலாய் வந்த பாட்டு ஒலியில் சுசீலா அம்மாவின் குரலில் உருகி நின்றோம். "முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும் அழகன் எந்தன் குமரன் என்று...'' "வாங்க சார் !''- பாடலை விழுங்கிக் கொண்டு அமுது அண்ணன் கதவைத் திறந்தார்.. "என்னண்ணே படக்குனு கதவத் தெறந்துட்டீங்க ?'' ஏக்கத்துடன் சொன்னேன். எனக்குப் பின்னால் நின்றிருந்த செந்தில் வீ…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஒரு ”கட்டை” பிரம்மச்சாரி பிரம்மச்சரிய விரதத்தை கடுமையாக பேணி காத்து வந்தார். இருப்பினும் அவ்வப்போது மேனகைகள் புண்ணியத்தால் அவரது பிரம்மச்சரிய விரதத்துக்கு கேடு வந்துவிடுமோ என்று அஞ்சினார். ”இவ்வளவு கடுமையாக பிரம்மச்சரிய விரதத்தை கடைப்பிடிப்பதால் என்ன நன்மை?” என்றொரு இயல்பான சந்தேகம் அவருக்கு எழுந்தது. அகிலம் புகழும் ரிஷியான தன் குருவிடம் இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள சென்றார். “குருவே! வணக்கம். உலகிலேயே பாபமான செயல் எது?” “பெண் தொடர்பு!” “புரியவில்லை?” “ஒரு பெண்ணை கூட தொடாமல் வாழ்க்கையில் கடுமையாக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவன் மேலுலகத்துக்கு செல்லும்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, நூறு குதிரைகள் பூட்டப்பட்ட ரதம் ஒன்றில் ராஜமரியாதையோடு …
-
- 4 replies
- 5.3k views
-
-
நடுநிசி தாண்டியும் நித்திரை வராமால் தவித்தார் சுப்பர் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் . அவரது அந்த பெயரை மட்டும் சொன்னாலே காணும் ஊரே முழங்காலில் நின்று மண்டியிட்டு மரியாதை செலுத்தும். அது எல்லாம் ஒரு காலத்தில். . நித்திரை இல்லாமால் தவிப்பதுக்கு வயோதிகமா அல்லது வேறு ஏதும் நீண்ட நாள் சுகபடாத வருத்தமா என பெரிய உடல் கூற்று ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை . என்ன என்றது மிக இலகு. இப்பவும் இடைக்கடை ஒலித்து ஓய்ந்து மீண்டும் ஒலிக்கும் மனித குரல்களின் கோரஸ் சத்தங்கள் தான் காதுகளில் தார் ஊற்றியமாதிரி அவரது நித்திரைக்கு பங்கம் விளைவித்து கொண்டு இருக்கிறது http://sinnakuddy.blogspot.com/2008/03/blog-post.html
-
- 17 replies
- 3.3k views
-
-
கணக்குப் புத்தகமும் காதலும் இந்தவார ஒரு பேப்பரில் காதலும் கணக்குபண்ணிறதும் இரண்டும் ஒண்டுதானே என்று நீங்கள் யோசிக்கிற கோணத்திலை யோசித்தாலும் சரிதான் ஆனால் என்ரைவாழ்க்கையிலை இந்த காதல் கணக்குப்பாடம் இரண்டும் ஒண்டுதான் ஏணெண்டால் இரண்டிலையும் நான் அடிக்கடி கோட்டைவிட்டிருக்கிறன்.படிக
-
- 21 replies
- 4.1k views
-
-
ஒரு வயதான அம்மா துவக்கால் சுட்டுவிட்டா. இதுதான் பரபரப்பாக பொலிசுக்கு வந்த தொலைபேசி. அதைவிடப் பெரிய அதிர்ச்சி... அவ சுட்டுக் கொன்றது, அவவின் சொந்தக் கணவனை.😳 பொலிசாருக்கு டென்ஷனால் தலை கிறுகிறுத்தது. ஏனென்றால் அவ கொன்ற காரணம்......🥶 அவ தனது வீட்டில், தண்ணீரால் கழுவிக் கொண்டிருந்த போது, வெளியே சென்ற கணவன் கழுவிய தரையில் காலடி எடுத்து வைத்து விட்டார் என்பதற்காக.🧐🥺 அதிர்ச்சி அடைந்த பொலீஸ் அதிகாரி, உடனே ரேடியோ தொலைபேசி மூலம் தனது பொலிஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு உடனடியாக பொலிசாரை அங்கு சென்று அந்த அம்மாவை கைது செய்யும் படி உத்தரவிட்டார்.😉🧐 நீண்ட நேரமாயும் போன பொலிசாரைக் காணவில்லை. குழம்பிப் போன பொலீஸ் அதிகாரி, தொலைபேசியில் கோபமாக..... " இன்னுமா கைது செய்யவில்லை என்று உறும…
-
-
- 3 replies
- 599 views
-
-
கண் தூங்காமல் நாம் காணும் சொப்பனம் பொ.கருணாகரமூர்த்தி பிறருடைய சோகத்தில் சிரிக்கக்கூடாதுதான். ஆனாலும் இதில் சிரிப்புவருவதைத் தடுக்கமுடியவில்லை. எம் மூத்த மகள் ருதுவாகி இருந்தவேளையில்தான் எமக்கு நாலாவது குழந்தையும் பிறந்திருந்தாள். நேரில் போனில் விசாரித்தவர்களின் குரலில் இருந்த சோகத்தைக் கேட்கத்தான் எமக்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது. " இந்தமுறையாவது ஓப்பிறேசனைச்செய்து விடுங்கோ" " அவளைப்பார்கிறதோ இவளைப் பார்ப்பியளோ நல்லாய்த்தான் கரைச்சல் படப்போறியள்". " அப்படி என்ன பார்வை, என்ன கரைச்சல், சனம் எதுக்கு மூக்கால அழுகுது?' ஒன்றுமாய் புரியவில்லை. எட்டாவது தேறாததுகளே எமக்குக் குடும்பக்கட்டுப்பாடு அட்வைஸ் செய்யலாயினர். அத்தை மாத்திரம் மகளிடம் "அஞ்சு பிள்ளைதான்டி அதிஷ்டம்... இன்ன…
-
- 1 reply
- 1.8k views
-
-
அதிகாலை லண்டனில் இருந்து ரவிராஜ் போன் ,அடுத்த கிழமை கனடா வருகின்றேன் ஒரு வார இறுதி நாளை ப்ரீ ஆக வைத்திரு,மற்றது உன்ரை பழைய ஆளின் கணவர் மண்டையை போட்டுவிட்டார் ,எனக்கும் துரத்து சொந்தம் தானே போக இருக்கின்றேன் என்றான் . நான் போனை வைத்துவிட்டு திரும்ப படுத்துவிட்டேன்.பின்னர் அதுபற்றி மறந்தும் விட்டேன். ஏனோ பின்னேரம் போல பழைய படம் ஓடத்தொடங்கியது.அப்போ தான் O/L PASS பண்ணி A/L போன காலம், சோட்ஸ்சும் பான்ஸ்சும் மாறி மாறி போட்ட வயது.பாடசாலை முடிந்ததும் எந்த அலுவல் இருந்தாலும் அதைவிட்டு ஓடிவந்து 3.45 பஸ்ஸை பிடித்து வீடு வந்து ஊரில் இருக்கும் மைதானத்திற்கு ஓடும்காலம்.என்னால் ஏழு நாட்களும் அந்த மைதானத்திற்கு போகாமல் இருக்க முடியாது .CRICKET,FOOTBALL இதுவே எனது LIFE .இரவு வந்து ப…
-
- 50 replies
- 7.4k views
-
-
கண்கள் திறந்தன! பணி இட மாறுதலில் வந்திருந்தான், முரளி. சுறுசுறுப்பாக இருந்ததுடன், சீனியர் பத்மநாபனிடம், நல்ல பேரை சம்பாதிக்க, பவ்யமாகவும் நடந்தான். அதைக் கவனித்த பத்மநாபன், 'இங்க பாருப்பா... நீ, உன் வேலைய கவனமாக செய்தாலே போதும்; அதுவே, எனக்கு கொடுக்கிற மரியாதை. மற்றபடி, முகஸ்துதி செய்வதோ, கூழைக் கும்பிடு போடுவதோ வேணாம்...' என்று, 'பட்'டென்று சொல்லி விட்டார். ஆனாலும், மேலதிகாரி என்ற பந்தா இல்லாமல், சினேகமாக பழகிய பத்மநாபனை, முரளிக்கு பிடித்து விட்டது. மேலும், அவர் இலக்கிய ஆர்வம் உள்ளவர் என்பது தெரியவர, சந்தோஷமானான். 'எனக்கும் இதெல்லாம் பிடிக்கும் ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
கண்டி வீரன் ஷோபாசக்தி சிலோனில் முன்னொரு காலத்தில் கண்டி வீரன் என்றொருவன் இருந்தான். அவனுக்கு ஒரு தமிழ் விடுதலை இயக்கம் மரணதண்டனையைத் தீர்ப்பளித்ததாம். பின்னொரு சந்தர்ப்பத்தில் அந்த மரணதண்டனையை அந்த இயக்கம் விலக்கியும் கொண்டதாம். கண்டி வீரனின் சரித்திரம் பற்றி இதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இத்தகைய சம்பவம் எங்களது போராட்ட வரலாற்றில் வெகு அபூர்வமாகவே நிகழ்ந்த ஒன்று. இயக்கங்களின் கைகளில் சிக்கியவர்கள் மீண்டதான நிகழ்வுகள் வெகு அரிதே. குறிப்பாக மரணதண்டனை விதிக்கப்பட்ட பின்பாக அத்தண்டனை விலக்கிக்கொள்ளப்பட்ட நிகழ்வு இது ஒன்றுதான். நான் கண்டி வீரனைப் பற்றிக் கேள்விப்பட்ட நாளிலிருந்தே இது எப்படி நடந்திருக்கக் கூடும் என யோசித்து வந்திருக்கிறேன். கண்டி வீரனின் …
-
- 4 replies
- 815 views
-
-
ஆண்கள் உலகம் நமகெல்லாம் அறிமுகபடுத்தப்படுவது அப்பா மூலம் தான். இருப்பினும் அதை இன்னும் சுவாரஸ்யமாக்குவது சகோதரனே. ரிக்கி மார்டினையும், WWF ராக்கையும், கிரிகெட்டின் சகல சூட்சுமங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துவது அவனே! நிலைக்கண்ணாடி முன் AXE வாசனையை தருவதற்கும், கண்ணாடியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுக்காக கடுப்படிபதற்காகவும் எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். எண்ணிலடங்கா நினைவுகள் என் தம்பியோடு இருக்கின்றன எனினும் இந்த பதிவு அதில் ஒரு துளி - மத்திய தர வர்க்கத்துக்கே உரிய கோட்பாட்டின் படி பொறியியல் படித்து, கொஞ்ச காலம் சில பல உப்புமா கம்பெனிகெல்லாம் கோடு எழுதிக்கொடுத்து ஒரு வழியாக ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ப்ராஜெக்ட் லீடர் ஆனான். அவர்கள் அதோடு விடாமல் H1B யும், அமெரிக்க கன…
-
- 0 replies
- 568 views
-
-
கண்ணன் - சிறுகதை சிறுகதை: ஷான் கருப்பசாமி, ஓவியங்கள்: ஸ்யாம் லாரி விரைந்து கொண்டிருந்தது. பரமசிவம் வெளியே தலையை நீட்டி புளிச்சென்று வெற்றிலை எச்சிலைத் துப்பினான். அது காற்றில் சாரலாகி மறைந்தது. இருபது வருடங்களாக லாரி ஓட்டுகிறான். இந்தியாவின் எல்லா மூலைகளுக்கும் எல்லாவிதமான சரக்குகளையும் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறான். காதை மறைத்துக் கட்டியிருந்த உருமாலைக் கட்டு குளிருக்குக் கதகதப்பாக இருந்தது. நாக்பூரிலிருந்து கிளம்பி ஒரு மணி நேரம்தான் ஆகியிருந்தது. இன்னும் பிலாஸ்பூர் வரை செல்லவேண்டியிருந்தது. பீடி கையிருப்பு வேறு குறைவாக இருந்ததால் இன்னொரு பீடியைப் பற்ற வைக்கும் யோசனையைக் கைவிட்டான். தவிர அவனுக்கு இன்னொரு முக்கியமான வேலை இருந…
-
- 1 reply
- 1.8k views
-
-
கண்ணாடி ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றின் தலைமை உதவி ஆசிரியரும், சினிமா ஆர்வலருமான `கே.கே.எம்’ என்று அழைக்கப்படும் கவுண்டனூர் கே.மூர்த்தி (55), முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை இன்று காலை உடைத்துவிட்டார். ஆனால், அவரோ இதை மறுக்கிறார். அதை அவர் உடைக்கவில்லை என்றும், கண்ணாடியே தானாகக் கீழே விழுந்து உடைந்துவிட்டதாகவும் சொல்கிறார். வீட்டில் யாரும் இல்லாதபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை. அவர் பத்திரிகையாளர் என்றாலும் இந்தச் சின்ன விஷயத்தில் பொய் சொல்ல மாட்டார் என்றே நம்பப்படுகிறது. சென்னை கோயம்பேட்டை அடுத்த நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவரது மனைவி சுதா. இவர்களது உறவினர்தான் மூர்…
-
- 1 reply
- 3.9k views
-