கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
மனிதனும் விலங்கும்மாறுபட்ட கருத்துடையவர்களும் ஒருங்கிணைந்து வாழ முடியும் என்பதனை விளக்குவதற்காக ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒரே கூட்டில் ஒரு புலியும் முயலும் சேர்த்து வைக்கப் பட்டிருந்தன.இந்த அதிசயக் காட்சியைக் காண தினமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.புலி படுத்திருக்கும்.அதன் வயிற்றில் சாய்ந்தவண்ணம் முயல் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும்.ஒரு பெண்மணி இதை வியப்புடன் பார்த்து விட்டு நிர்வாகியிடம் சென்று, ''இது எப்படி சாத்தியம்? எப்படி இவ்வாறு பயிற்சி கொடுத்தீர்கள்?''என்று ஆர்வமுடன் கேட்டார்.அன்று அந்த நிர்வாகி பணியிலிருந்து ஓய்வு பெரும் நாள் எனவே அவர் அந்தப் பெண்ணிடம் மெதுவாக,''இதில் பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை.தினசரி நாங்கள் ஒரு ஆட்டை மாற்றிவிடுவோம்,இதை யாரிடமும் சொல்லி …
-
- 4 replies
- 10.5k views
-
-
சாத்தான் தேவனின் கழுத்தைப் பிடித்து திருகினான். சாத்தானின் கண்களில் கொலை வெறி தெரிந்தது. முடிந்தால் தேவனை உடனேயே கொலை செய்திருப்பான். ஆனால் அதுதான் முடியாதே. தேவன்தான் கடவுள் ஆகிற்றே. சாத்தானின் கையை விலக்கி விட்டு தேவன் அன்பாக புன்னகைத்தார். „என்ன காரியம் செய்தாய்? எதற்காக அவர்களை விடுவித்தாய்?' சாத்தான் வீரிட்டுக் கத்தினான். „என் குழந்தைகளை நீ இப்படி ஒரு அறிவற்ற நிலையில் வைத்திருப்பதை நான் எப்படி அனுமதிக்க முடியும்? அவர்கள் உடை கூட அணியாமல் இருந்தார்கள். தாம் நிர்வாணமாக நிற்கிறோம் என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை. இதை எப்படி நான் பொறுக்க முடியும்? இதற்காகவா அவர்களை நான் படைத்தேன்' தேவன் அதே புன்னகையோடு கேட்டார். „உண்மை என்பதை அறிய முடியாமல் என் குழ…
-
- 4 replies
- 1.5k views
-
-
"நானே வருவேன்" உண்மையான பக்தி எவரிடம் உள்ளதோ அவரைத் தேடி, 'நானே வருவேன்!’ என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லி இருக்கிறார் என்று என் அம்மா சொன்னது ஞாபகம் வருகிறது ஆனால் இவை எல்லாம் புராணத்தில் தான் காண்கிறோம். இந்த புராணங்கள் வாய் மொழிமூலம் சில நூற்றாண்டுகள் புழக்கத்தில் இருந்து, கி பி இரண்டாம் ஆண்டளவில் அல்லது அதற்குப் பின் எழுத்தில் எழுதப் பட்டவையாகும். நான் ஒரு கிழமைக்கு முன் தான் திருமணம் செய்து, என் மனைவியை, அவளின் சொந்த கிராமத்தில் இருந்து வெளியே, தலை நகரத்துக்கு கூட்டி வந்துள்ளேன். இங்கு, கொழும்பையும் உள்ளடக்கிய மேல் மாகாணத்தில், தமிழ் பேசும் மக்கள் மொத்தமாக [தமிழர் + தமிழ் பேசும் முஸ்லீம்] 15 % தான் வரும். ஆனால் கொழும்பு என்று மட்டும் எ…
-
-
- 4 replies
- 1.1k views
-
-
மூச்சிருக்கும் காலம் வரை“ அப்பா அப்பா” என்று அடிக்கடி என் அன்புச் செல்வங்களின் அழைப்பொலி என் அஸ்தமித்துக் கொண்டிருக்கும் புலன்களினூடே மெல்ல இழையோடி இதயத்தைப் பிசைந்து கொண்டிருந்தது. ஏன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி விழி மலர்த்தி ஒளி செலுத்த விருப்பம் இருந்தும் கண்முன் இனம் தெரியாத என்னவென்று கிரகிக்க முடியாத பல வர்ண ஒளிவட்டங்கள் விழுந்து மறைந்து கொண்டிருந்தன. ஏன்னைச் சுற்றி என் அன்புறவுகளின் அங்கலாய்ப்புகளை என்னால் உணரமுடிந்தும் என் இயக்கங்கள் செயல் இழந்ததால் செயல்பட முடியாமல் கைகளும் கால்களும் கட்டிப் போட்டதுபோல் கனத்துக் கிடந்தன. மெல்லத் தலையை அசைக்கின்றேன். “அம்மா இங்கை பாருங்கோ அப்பா அசைகிறேர். பால் கொஞ்சம் கொடுப்பமா?” என்று என் ஆசை மகள் ஆவலாய்க் கேட்பது கூட எ…
-
- 4 replies
- 1.9k views
-
-
இது எனது கதை இல்லை படித்ததை பகிரும் அரிப்பால் உருவானது .இனி ........................................... இஞ்சாரப்பா கவனிச்சியே ஒரு சிவப்பு பெட்டைக் கோழியொண்டு இஞ்சனேக்க எப்பவும் உலாவுது.அது ஆரிண்ட கோழியப்பா.தெரியுமே உனக்கு. ஓமப்பா நானும் ஒவ்வொருநாளும் பாக்கிறன் எங்கட வளவுக்கதான் எங்கட கோழிகளோட திரியுது.இங்கதான் மரத்தில இரவிலயும் படுக்குதுபோல.ஆரும் இடம் பெயர்ந்து போனவையின்ரயோ தெரியேல்ல.எதுக்கு இந்தக் கிழமையும் பாப்பம். ஏனப்பா பிடிச்சுக்கொண்டுப்போய் அம்மா வீட்டை கொண்டு போய் விடுவமே.கொஞ்சம் வளந்தாப்போல கொண்டுவரலாம்....சரியே. என்னப்பா நீ்.....நான் மனசில வேற கணக்குப்போட்டு வச்சிருக்கிறன்.துணிபோட்டுப் பிடிச்சுச் சட்டிக்க வைக்கவெண்டு.........நீ என்னடா…
-
- 4 replies
- 1.9k views
-
-
மனக்கணிதம் - சுதாராஜ் - தாமரா வீட்டை விட்டுப் போய் பத்து நாட்களாகிறது! இன்றைக்கு வருவாளோ.. இன்றைக்கு வருவாளோ, என எண்ணி ஏமாந்த பொழுதுகளைப் போலவே இன்றைய நாளும் போய் விடுமோ என்ற ஏக்கம் மனதை ஆக்கிரமித்திருக்கிறது. சோகம் அவனைக் குப்புறப் போட்டு அழுத்தியது. படுக்கையிலிருந்து எழவும் மனதில்லை. அழவேண்டும் போன்றதொரு உணர்வு தொண்டையை அடைத்துக்கொண்டிருக்கிறது. அழுகை எதற்காக? தாமராவுக்காகவா? தாமரா வீட்டை விட்டுப் போன நாளிலிருந்து அவனுக்கு, தான் தனிமைப்பட்டுப்போனது போன்றதொரு விரக்தி மனதை எரித்துக்கொண்டிருந்தது. தன் உணர்வுகளை அவள் புரிந்து கொள்ளவில்லையே என மனம் வெதும்புகிறது. அப்படி அலட்சியப்படுத்தினால் அதற்கு அழுகை ஏன்? தாமரா தனக்கு யார்? என்ன உறவு? உறவு ஏதுமில்லையெனில் ஒன்றுமே இல்…
-
- 4 replies
- 1.5k views
-
-
எட்டாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு முடிந்து கடைசி நாளன்று தோழிகளுடன் பள்ளியின் மாமரத்தடியில் பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த ஸ்டீஃபன் சார் என்னைக் கூப்பிட்டு ஒரு ரோஸ் கலர் நோட்டீசை தந்து விட்டு சென்றார். அதில் இயேசுவின் வாழ்க்கை குறிப்பு எழுதப்பட்டு முடிவில் பாஸ்காவை காண வாரீர். இடம், நாள், நேரம். எல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தது. அப்போதே தீர்மானித்துக் கொண்டேன். சைக்கிளில் வீட்டிற்குப் பறந்தேன். அம்மா இன்னும் வரவில்லை, பள்ளியில் கடைசி நாள் என்பதால் பார்ட்டி இருக்கும். அப்பாவின் வண்டியை காணவில்லை. மெயின் ரோடுக்கு போயிருப்பார். பொருட்கள் வாங்க, நண்பர்களுடன் அளவளாவ. பாட்டி திண்ணையில் கால்நீட்டி அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார்கள். தம்பி வாசலில் விள…
-
- 4 replies
- 1k views
- 1 follower
-
-
உனைத்தேடி நான் வருவேன்.... சிறு கதை..... பல வருடங்களின் பின் அவன் தாய் நாட்டிற்கு போயிருந்த படியால் அவன் லண்டன் வந்த பின்னர் ஆவணி மாதம் 2003 இல் யுத்த நிறுத்தக் காலத்தில் லண்டனிலிருந்து இலங்கை சென்று பின்னர் யாழ்ப்பாணம், பின்னர் நல்லூர் என்று சென்றடைந்தான் சந்திரன். நல்லூர் திருவிழா எல்லாம் அவனின் குடும்பத்தாருடன் மிகவும் சந்தோசமாகக் கழித்துவிட்டு மீண்டும் திரும்புவதற்கு சில நாட்களே இருக்கும் சமயத்தில் தான் சிறுவயதில் பார்த்த வல்லிபுரக் கோவிலை பார்க்க ஆசைப்பட அவனின் அக்காவின் மச்சானும்( அக்காவின் புருசன்) வான் ஒன்றை ஒழுங்கு செய்து ஒரு சனிக்கிழமை எல்லோரும் புறப்படத் தயாராயினர். சிறுவயதில் தந்தையை இழந்த சந்திரன் தன்னுடன் சேர்த்து பொறுப்பில்லாத மூத்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
சாரதா - இமையம் இடித்துப் பிடித்துக்கொண்டு ரயிலில் ஏறிய தனவேல் உட்காருவதற்கு இடம் இருக்குமா என்று பார்த்தார். உட்காருவதற்கு இடமில்லாமல் ஏற்கனவே நிறைய பேர் நடைபாதையில் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. “ஊருபோயி சேருறவர நின்னுக்கிட்டுத்தான் போவணும்போல இருக்கு” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். மறு நிமிஷமே ரிசர்வ் கோச்சில் எப்படி இடம் காலியாக இருக்கும் என்று தன்னையே கேட்டுக்கொண்டார். நிற்பதற்கு இடம் கிடைத்ததே பெரிது என்று நினைத்தார். தாம்பரத்தில் ஏறியவர்களால் கோச்சில் நின்றுகொண்டு பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. “ரிசர்வ் கோச்சில எதுக்கு ஏறுனீங்க? அன்ரிசர்வடு கோச்சுக்குப் போங்க” என்று டிடிஇ கத்துவாரோ என்ற கவலை வந்தது. “கோச்சுல காலவச்சி நிக்ககூட எடம் இருக்காதே”…
-
- 4 replies
- 2.1k views
-
-
யேர்மனி பிறேமன் தமிழ்க்கலை மன்றத்தினால் இ.த. இராஜனின் (யாழ்கள மணிதாசனின்) நெறியாள்கையில் பொங்கல் விழா (தை 2007) அன்று மேடையேற்றப்பட்ட நாடகம். இது ஒரு சற் கதையை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை. இங்கே இணைத்து உங்களது கருத்துக்களை இதுபறற்றி அறிவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.ன். http://tamilamutham.net/amutham/index.php?...3&Itemid=30
-
- 4 replies
- 1.7k views
-
-
மனதுக்குள் எதோ ஒரு வலி தூக்கம் கலைந்து விளித்து எழுந்தேன்.அட நெஞ்சில் விழுந்த இரு துளி கண்ணீர்.ஏன்கேள்வி பிறக்கும் போதுதானே வேள்வி நடக்கும். றிஷானா கொடும் தவறு செய்த பெண்ணே உனக்கு மரணதண்டனை.மிகவும் சரியான தண்டனை.பலவருடங்களாய் உன்னைப்பற்றிய வாதங்கள் விவாதங்கள் அனைத்துக்கும் முடிவு .செத்து ஒளிந்தாய்.நீ ஒரு இஸ்லாமிய பெண் உனக்கான தண்டனை சரி.ஆனால் ஏனோ தெரியவில்லை .இன்னும் என் கண்கள் உகுத்த துளிகள் உயிரில் சுடுகிறது.உன் முதல் தவறு ஏழை பெற்றோருக்கு மகளானது.அதுவும் முதல் மகளானது.உன் வயதுக்கு இறக்கை முளைத்து சிறகடித்து பறக்கும் வயதில் பணம் கொத்திவர பாலைவனம் பறந்தாய் அது உன் மறுதப்பு. சிலவேளைகளில் நினைத்திருப்பாய் ஒழுகும் உன் குடிசைக்கு ஒழுங்கான கூரையிடுவெனென.அதுவும் உன் தப்பு.பல …
-
- 4 replies
- 961 views
-
-
அவர்கள் அப்படிதான் / கோமகன் ( பிரான்ஸ் ) 1985 ஆம் வருடம் அதிகாலை இருபாலை சோம்பலுடன் விழித்துக்கொண்டிருந்தது. கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அருகே இருந்த அந்த முகாமும் சோம்பலுடன் இயங்கிக் கொண்டிருக்க உறுமலுடன் நுழைந்து கிரீச் என்ற ஒலியுடன் நின்றது இளம்பிறையன் வந்த டட்சன் பிக்கப். பிராந்தியப் பொறுப்பாளரின் தீடீர் வருகையால் முகாம் பொறுப்பாளன் சிவா உட்பட எல்லோருமே பரபரப்பானார்கள். அவர்களின் பரபரப்பை இளம்பிறையன் உள்ளர ரசித்தாலும் அதை வெளிக்காட்டாது விறைப்பாக முகாமின் உள்ளே நுழைந்தான். இளம்பிறையன் அந்த முகாமின் ஹோலில் இருந்த மேசையில் இருந்து முகாமின் தினக்குறிப்பேட்டை படித்துக்கொண்டிருந்தான். அவனுக்காக தயாரித்த தேநீரை நடுக்கத்துடன் கொண்டு வைத்தான் ஒரு போராளி…
-
- 4 replies
- 1.4k views
-
-
கடவுளின் உரை.. சந்திரா இரவீந்திரன் மழைக்காலத்து மஞ்சள் பூக்கள் மலர்ந்து சொரிந்திருக்கும் வீதியோரங்களில் அவர்கள் நின்றிருந்தார்கள்! தலைக்கு மேலே சாம்பல் புறாக்கள் சத்தமிடாமல் பறந்து சென்றன. ரோஜாக்களின் மணம் கமழும் மெல்லிய குளிர்காற்று இடையிடையே வீசிக் கொண்டிருந்தது. கேள்விகள் ஏதுமற்ற மயக்கம் நிறைந்த பார்வைகள் தெருவெங்கும் நிறைந்திருந்தன. வார்த்தைகளும் வசனங்களும் அங்கு வலிமையற்றுப் போயிருந்தன! பிடுங்கி வீசப்பட்ட பெருமரத்து வேரின் தளைகளைப் போல் புத்துணர்ச்சி அரும்பும் வசீகர முகத்தோடு அவர்கள் நின்றிருந்தார்கள். அடிக்கடி எல்லோர் புருவங்களும் உயர்ந்து விரிந்தன. ஒருவரையொருவர் சிநேகத்துடன் பார்த்துக் கொண்டார்கள். உற்சாகமும் பெருமிதமும் நிரம்பித் ததும்பும் நிமிடங்கள் அவர்களி…
-
- 4 replies
- 866 views
-
-
அன்றொரு நாள் ஒருவன் தனிவழிப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்க, அப்பொழுது ஆங்கொரு பாறையின் கீழொரு பாம்பு சிக்கிக்கொண்டிருக்க, அவனதைக் காக்க, பாறையை நகற்றினால் பாம்பு கடிக்குமா அன்றி நன்றி சொல்லி நகருமாவென யோசித்து, பின் அப்பாறைதனை நீக்கி பாம்பைக் காப்பற்ற, அப்பாம்பானது அவனை நோக்கி, "இவ்வளவு நேரம் எனைக் காப்பாற்றாமல் ஏன் சிந்தித்தாய்? நானுன்னை கடிக்கப்போகிறேன்!" எனக் கூறி அவனை நெருங்க, அவனோட, அது விரட்ட, அவ்வழிவந்த நரியொன்று, "ஏனய்ய ஓடுகின்றனை? அரவமே ஏனவரைத் துரத்துகின்றனை?" என வினவ இருவரும் தங்கள் வழக்கை முறையிட, தனக்கு விளங்கவில்லை ஆரம்பமுதல் தெளிவாகச் செய்து காட்டுங்கள் என கேட்க, அவனோ மறுபடியும் பாம்பை அந்தப் பாறையின் இடுக்கில் வைத்து விட்டு தான் முதலில் வந்த பாதைவழியே…
-
- 4 replies
- 1.6k views
-
-
புலமைப்பரிசில் பரீட்சையில் நான்கு புள்ளிகளால் சித்தி எய்த தவறுகிறாள் தாரணி. அந்தக் கவலையின் மத்தியிலும்.. தொடர்ந்து ரீயுசனுக்கு ஓடிஓடிப் படித்தே வந்தாள். பிரபல.. பாடசாலை புகுமுகப் பரீட்சை ஒன்றிற்காக தோற்றுவதற்காகவே அந்தப் படிப்பு. 10 வயதே தாண்டி இருந்தவளின் முதுகிலும் தலையிலும்.. சுமைகள் என்பதே அதிகமாக இருந்தது. அவளால் அந்த வயதை சுமையாக உணர முடிந்ததே தவிர சுகமாக உணர முடியவில்லை. எப்படா இந்த 5ம் ஆண்டு தாண்டிப் போகும் என்பதே அவளின் நினைவாக இருந்தது. 5ம் ஆண்டை தாண்டிய பின் வர இருக்கும் சோதனைச் சுமைகள் பற்றி அவள் அன்று அறிந்திருக்கவில்லை என்பதால்.. 5ம் ஆண்டு தாண்டினாலே போதும் என்பது தான் அவளின் எண்ண ஓட்டமாகவே இருந்தது. ஒருவாறு.. அந்தப் புகுமுகப் பரீட்சைக்கான நாளும் வர…
-
- 4 replies
- 3.5k views
-
-
ஒரு நிமிடக் கதை: பார்வைகள் வீட்டுக்குள் ஏறி வந்த கணவன் முகுந்தனின் முகத்தைப் பார்த்ததுமே ஜோசியர் என்ன சொல்லியிருப்பார் என்று கல்யாணிக்குப் புரிந்தது. அவரே சொல்லட்டும் என்று பேசாமல் இருந்தாள். ‘‘கல்யாணி! நம்ம காவ்யா ஜாதகமும் பையனோட ஜாதகமும் நல்லா பொருந்தியிருக்காம். ஒரு மாசத்துக்குள்ளே கல்யாணம் நடத்திடலாம்னு ஜோசியர் சொன்னார். ஆனால், எனக்கென்னவோ இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு செய்யலாம்னு தோணுது. நம்ம ரோஷினிக்குச் செய்ததைவிட அம்பது சவரன் நகை அதிகம் போட்டு, ரெண்டு லட்சம் ரொக்கம் கொடுத்து, பெரிய கல்யாண மண்டபம் எடுத்து காவ்யாவை நல்லமாதிரி கல்யாணம் செஞ்சு கொடுக்கணும்னு தீர்மானிச்சிருக்கேன். அதுக்கு பணம் ஏற…
-
- 4 replies
- 957 views
-
-
“நீங்கள் யார்?” பிறிடெகார்ட் இன் கேள்வியால் குமார் அதிர்ந்து போனான். அவன் தன் மனைவி சந்திராவைப் பார்த்தான். இமை வெட்டாமல் மெதுவாக திறந்திருந்த வாயுடன் அவளும் அதிர்ச்சியில் இருந்தாள். கேள்வி கேட்ட பிறிடெகார்ட் பதிலுக்காகக் காத்திருப்பது போன்ற பாவனையுடன் இருந்தார். ஒருவேளை பகிடி விடுகிறாரா என்று குமார் தனக்குள் நினைத்துக் கொண்டான். ஆனால் ஷோபாவில் அமர்ந்திருந்த பிறிடெகார்ட்டைப் பார்த்த போது, அவனுக்கு அப்படித் தெரியவில்லை. எப்பொழுதும் மற்றவர் மனம் கவலைப்படும் அளவுக்கு நடந்து கொள்ளாதவர். ஏதோ ஒரு தவறு இருப்பது அவனுக்குத் தெரிந்தது. “எப்பிடி இருக்கிறீங்கள் மம்மா?”நிலமையை சீராக்க குமார் முயற்சித்தான். “நீங்கள் யாரென்று இன்னும் சொல்லவில்லையே” பிறிட…
-
- 4 replies
- 979 views
- 1 follower
-
-
தொலைந்து போனவைகள். போர் சூழலினால் வஞ்சிக்கபட்ட ஒரு இளைஞன் கதை. அமைதியான அந்தக் கிராமத்துக்கு படையினர் உட்புகு மட்டும் மக்கள் சாதாரண வாழ்வு தான் வாழ்ந்தார்கள். அதன்பின்பு தானேல்லாமே தலை கீழாய் போனது. சீர் குலைந்து நிம்மதி இழந்தது. பால பாஸ்கரன் அந்த கிராமத்தின் , ஊர்ச்சங்க தலைவரின் மகன். ஊர்பள்ளிக்கூடத்தின் உதவித் தலைமை ஆசிரியராய் இருந்தான். காலாகாலத்தில் திருமணம் செய்து ....மனைவி கற்பமாய் இருந்த காலத்தில் தான் ராணுவத்தினர் கிராமத்துள் புகுந்தனர் . சோதனை என்றும் சந்தேகம் என்றும் கைது செய்துகொண்டு சென்றுவிடுவார்கள். இதில் பாஸ்கரனும் விதிவிலக்கல்ல. பலமுறை கொண்டு சென்றாலும்.பாடசாலையை காரணம் காட்டி வெளிவந்து விடுவான். இவர்களது தொல்லை தாங்க முடியாமல்,வேறு ஊருக…
-
- 4 replies
- 928 views
-
-
பேனாவின் சிவத்த மை ......... அமைதியான அந்த கிராமத்தில் சுந்தரதாரின் கடைக்குட்டி சாதனா , பத்தாம் வகுப்பில் படித்து கொண்டிருந்தாள் . அக்காலம் மிக மிக சாதாரணமாகவே இருந்தது ,கைதுகளும் குண்டுமழையும் ... இடப்பெயர்வுகளும் ...இல்லாத காலம் . தெளிந்த நீரோடை போன்று ,மக்களும் ,வாழ்கையும் ஓடிக்கொண்டு இருந்தது . கோவில் ,பாடசாலை ,விளையாட்டு என்று ,சமுதாயம் அமைதியாக வாழும் காலத்தில் ,முதலாம் முறை ,பத்தாம் வகுப்பு கோட்டை விட்டதால் ஏனைய தோழிகளுடன் பதினோராம் வகுப்பு செல்ல முடியவில்லை .முக்கியமான கணிதபாடம் தவற விட்டு விட்டாள் , வீடிலும் நல்ல வசை மாரிகள் ,அதனால் இரண்டாம் வருடம் முழு மூச்சாக படித்து கொண்டிருந்தாள். போதாக்குறைக்கு பெரியண்ணாவின் கண்டிப்பு வேறு . பாடசாலையும் ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
செருப்.........பூ ...(காலணி ).. மனிதனுக்கு அன்றாடம் தேவையான பொருட்களில் ஒன்று. இதன் பலன்கள் பெருமை பல கோடி.........காலுக்கு பாதுகாப்பு ........மழை ....குளிர் ...வெப்பம்.... முட்கள் ...அழுக்குகள் என்று .........ஆனால் இதற்கு மதிப்பு என்னவோ ?........இத்தனைக்கும் சுமை தாங்கியாய் உற்ற தோழனாய் நம்மோடு தொடர்ந்து வருகிறது. இந்த பாதணி. ஆரம்ப காலத்தில் மிதியடிக்கட்டை என்றும்...செருப்பு என்றும் காலணி..... பாத அணி ......என்றும் அழைக்க பட்டது. இதன் அமைப்பு ..வண்ணவண்ணமாய் ...நிறங்களாய் ..ரகங்க்களாய்...இதன் அலங்காரம் சொல்லி முடியாது. காலத்தின் தேவைக்கேற்ப மாறு படும். சில சமயம் புதுசாய் இருக்கையில் காலையே ( கடித்து )வலிக்க செய்து விடும். இன்டர் வியூ சமயத்தில் சங்கடம் தந்த சம…
-
- 4 replies
- 1.3k views
-
-
நெஞ்சின் ஆசை நனவாக... செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் தாயகம் சென்று சேவை செய்ய இருக்கும் தன் முடிவை உறுதி செய்திருந்தாள் மோகனா. மூன்று பெண்களும், நான்கு ஆண்களுமாக ஒருவருட உடன்படிக்கையின் பேரில், அதில் இந்த நாட்டைச்சேர்ந்தவர்களும் அடங்களாக அவளின் பயணம் வெற்றிகரமாக பதியப்பட்டிருந்தது. முதன் முதலாக அவளின் தாயக பயணம் இது. மனதுக்குள் சோடாக் குமிழ் போல் நுரையாய்ப் பொங்கும் சந்தோஷம். கூடவே மனதிற்குள் ஒரு சின்னப்பயம். அதையும் மீறிக்கொண்டு அவள் உள்ளத்தில் இருந்த மனஉறுதி தன்னால் முடிந்த சேவையை தன் தாய்நாட்டிற்காக செய்ய வேண்டும் என்ற திடமான உணர்வு அவளின் நாடி நரம்பெங்கும் வியாபித்து, அந்த பயத்தினை முறியடித்து இருந்தது. வீட்டுக்கு வந்து தன் பயணம் பற்றிக் கூறியபோது அ…
-
- 4 replies
- 1.6k views
-
-
வாங்க ஒரு கதயப் பற்றிக் கதைக்கலாம்....... சத்யமா வீமன்ற ‘கதை‘யப் பற்றியில்லீங்கோ.... நானும் பல முயற்சிகளப் பண்ணிப்பார்த்து...சலித்து.... சல்லியாகி ...... சரி சொந்தமா இப்ப முடியாங்காட்டிலும்.... எங்காச்சும் 'படிச்சு ரசிச்ச' அல்லது 'பதியப் படிச்ச' கதையொன்ற ஒங்களோட பகிர்ந்துக்கலாம்னு... இரவு பகலா தேடித் தேடி அமுக்கிய இந்தக் கதயயும் (முன்னாங்காட்டி எங்காச்சும் மேஞ்சிருப்பினும்....சலிக்காம மீண்டும் ஒரு வாட்டி மேஞ்சுக்கணும்) பெர்ய மனசோ அல்லது தொறந்த மனசோ பண்ணி ஒரு வாட்டிதான் படிச்சுப் பாத்திடுங்களேன். படிச்சுண்டு, 'பேஷாயிருக்கே' இல்ல 'மொக்கையாயிருக்கே'ன்னு ஒங்களுக்குள்ளாறயே பேசிணிண்டு அப்புறம் பேசாமலே போயிடாம.... எதனாச்சும் இங்கிட்டு ஒங்க பங்குக்கு பதிவுகளயும் வ…
-
- 4 replies
- 1.4k views
-
-
என்னடா யோசிக்கிற இந்த வெயிலுக்க நிண்டு கொண்டு ஒன்றும் இல்லடா எல்லா வீட்டிலையும் கணக்கெடுத்தாச்சு இந்த வீடு மட்டும் தான் கடைசி அதுகென்ன வா உள்ள போவோம் .போவோம் சரி ஆனால் நீ கனக்க கதைக்கப்படாது ஏண்டா அந்த Ms; என்ன மோசமான ஆளடா பெயர் கந்தசாமி ஊர் கூப்பிடுவது வெடியன் கந்தசாமி மோசம்மான ஆள் வாயை துறந்தால் வஞ்சகம் இல்லாமல் பொய் சொல்லுவார்டா மனுசன் ஓ அப்படியா வா உள்ள போவோம் ஐயா ஐயா ... என்டா சத்தத்தை காணல பொறுடா அந்தாள் தூங்கிட்டு இருப்பாரு சரி சரி செருப்பைகழட்டி விடு ஏண்டா அதால அடிப்பாரோ நண்பன் முறைக்கிறான் சரி சரி யாருப்பா அது நான் தான் ஐயா ஜி.எஸ் வந்திருக்கிறன் வணக்கம் வணக்கம் ஓ ஜி. எஸ்சா வா தம்பி என்ன ஏதாவது நிவாரணம் கொடுக்க போறியளா அல்லது நிவாரணம் தந்து விட்டோம் என்று சொல்…
-
- 4 replies
- 1.9k views
-
-
விடாமுயற்சி - கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் ஜோடி கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலு முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தன.. ஆண் குருவியும், பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.. ஒரு நாள் பெரும் காற்று வீசியது.. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன.. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது.. குருவிகள் மனம் பதறிக் கதறின.. கடல் நீரில் விழுந்து, கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபட…
-
- 4 replies
- 42.8k views
-
-
மோன் (சிறுகதை ) அகரமுதல்வன் கிளிநொச்சி பாண்டியனுக்கு முன்னால இருந்த பாலைமரத்தில தான் ஜெயத்தானை கட்டி வைச்சு இயக்கம் சுட்டதடா என்று சொல்லிய அம்மாவின் சுவாசம் பெருமூச்சாகத் தான் வெளியேறியது. அந்தப் பெருமூச்சில் இழப்பின் பெயரிடாத சொல்லொன்றுமிருந்தது. இயக்கம் ஏன் மாமாவைச் சுட்டது என்று நான் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். ஆரம்ப காலங்களில் இயக்கத்தின் சூடுகள் அவசரமாகவும்,தவறாகவும் சிலரைக் கொன்றிருக்கிறது என்று பெரிய ஆக்கள் கதைப்பதைக் கேட்டிருக்கிறேன். தேங்காய் திருவிக்கொண்டிருந்த அம்மாவிடம் ஏன் சுட்டார்கள் என்று கேள்வியாய்க் கேட்டுவிட்டேன்.”அது நீளமான கதையடா ஆறுதலாய்ச் சொல்லுறன்” என்று சொல்லமறுத்துவிட்டாள். அம்மாவின் மூன்று தம்பிகளில் இப்ப உயிரோட இருக்…
-
- 4 replies
- 885 views
-