வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
391 topics in this forum
-
அன்பு நண்பர்களுக்கு: இவை நான் இதுவரை எழுதிய நீண்ட கட்டுரைகள். பல கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும், ஆனால் வெவ்வேறாக உள்ளன. உங்களின் விருப்பம் தெரிவித்தால், அவையை நான் இங்கு பதிய முயலுவேன் அல்லது லிங்க் தருவேன். நீங்கள் வாசித்து உங்கள் கருத்துக்கள் பதியும் பொழுது நானும் அதனுடன் சேர்ந்து வளர்ச்சியடைவதுடன் கட்டுரைகளும் மேலும் திருத்தப்பட்டு அழகு பெறுகிறது! நன்றி தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] / 82 parts [இந்த தமிழ் கட்டுரையை உடனடியாக அல்லது எல்லோருக்கும் தேவையற்ற ஆழமான விபரங்களைத் தவிர்த்து 36 பகுதிகளாக சுருக்கி பதிவிடவுள்ளேன்] Origins of Tamils? [Where are Tamil people from?] / 82 parts …
-
-
- 2 replies
- 1.5k views
-
-
இன்று இணையத்தில் தமிழ் படிப்பதும், பகிர்வதும் மிக இலகுவானதாக இருக்கின்றது. தமிழ் தேடுபொறிகள், வலைப்பதிவுகள், தமிழ் தட்டச்சுக்கான மென்பொருட்கள் எழுத்துருக்கள் என்று பெருவளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளுக்குள் வேகமாக அரங்கேறியிருக்கின்றது. இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்திய முன்னோடிகளுள் ஒருவர் சுரதா யாழ்வாணன். யுனிக்கோடு பரவலான பாவனைக்கு வருவதற்கு முன்னைய காலங்களில் தமிழில் வெவ்வேறு இணையத்தளங்களும் வெவ்வேறு எழுத்துருக்களைப் பாவித்து வந்தன. அந்தத் தளங்களைப் பார்ப்பதற்கு வெவ்வேறு எழுத்துருக்களை கணனியில் நிறுவ வேண்டியது அவசியமானதாக இருந்தது. இது ஒருவிதத்தில் தமிழ் இணையத்தளங்களை அணுகவும், ஆக்கங்கள், கருத்துக்களைப் பகிரவும் தடையாகவும் இருந்தது. இத்தகைய ஒரு காலப்பகுதியில் வெவ்வேறு…
-
- 1 reply
- 556 views
-
-
நாம் ஈழத்தை கோருவதற்கு வலுவான இரண்டு காரணங்கள் அல்லது ஆதாரங்கள் அல்லது நியாயங்கள் உள்ளன. ஒன்று ஈழம் தமிழர்களின் பூர்வீக நாடு என்ற வரலாறு. மற்றையது எமக்கு எதிரான இன அழிப்பும் நில அபகரிப்பும். காற்றுவெளி மின் இதழுக்காக தீபச்செல்வன் வழங்கிய நேர்காணல் இது. http://www.yaavarum.com/archives/2323
-
- 0 replies
- 1k views
-
-
திசை புதிது இதழ்-1 (2003) மூத்த எழுத்தாளர் வரதர் ஈழத்தின் இலக்கிய வரலாறு எழுதுகையில் தவிர்க்க முடியாத பெயர்களில் ஒன்று 'வரதர்' என்பது. சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் எத்துறையை எடுத்தாலும் முத்திரை பதித்தவர் வரதர். 'வரதர்' என்கிற தி. ச. வரதராசன் 1924 இல் யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலையில் பிறந்தார். சிறு வயது முதல் நிறைய வாசிக்கத் தொடங்கிய இவர் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாச - புராணக் கதைகளில் ஆரம்பித்துப் பின்னர் ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளையும் பலவிதமான நூல்களையும் வாசிக்கத் தொடங்கினார். தொடர்ச்சியான இந்த வாசிப்பே அவரை எழுதத் தூண்டியது எனலாம். ஈழத்தின் மூத்த எழுத்தாளர் பலரையும் ப…
-
- 2 replies
- 2.5k views
-
-
41வது இலக்கியச் சந்திப்பு – யாழ்ப்பாணம் 2013 (குவர்னிகா – இலக்கியச் சந்திப்பு மலர் வெளியீடு) 41வது இலக்கியச் சந்திப்பு (இலங்கை – யாழ்ப்பாணம்) எதிர்வரும் யூலை 20 – 21ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கீழ்வரும் வகையில் இலங்கை இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி உள்ளடக்கங்கள் அமையும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம், பன்மைத்துவம், சமனிலை என்பவற்றின் அடிப்படையில் ஈழ இலக்கியத்தில் பேசுபொருளாக இருந்த – இருக்கின்ற அனைத்து விடயங்கள் பற்றியும் எத்தகைய சார்பு நிலைகளுமின்றி, பேசுவதற்கான அரங்குகள் திறந்துள்ளன. 1. பாரம்பரியக் கலைகள் மலையக, முஸ்லிம், தமிழ்ச் சமூகங்களின் கலை, பண்பாடு, மரபுரிமை மற்றும் அவற்றின் இன்றைய நிலை தொடர்பான அரங்கு. 2. சாதியம் யாழ்ப்…
-
- 25 replies
- 3.5k views
-
-
இதற்கு மேல் பின்னொரு நாளில் பேசுவேன் - வ.ஐ.ச.ஜெயபாலன் கடந்த நாற்பது வருடங்களிற்கு மேலாகத் தனது எழுத்துகளாலும் அரசியற் செயற்பாடுகளினாலும் ஈழச் சமூகத்திலும் அனைத்துலகத் தமிழ் இலக்கியப்பரப்பிலும் தனது குரலை ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு அறிமுகம் தேவையற்றது. எனினும் இளைய வாசகர்களிற்காகச் சில குறிப்புகள்: 1944ல் ஈழத்தின் உடுவில் கிராமத்தில் பிறந்தவர் ஜெயபாலன். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பல்வேறு துறைகளிலும் பங்களிப்புச் செய்தவர். மரபு அளித்த கொடையாக சந்தங்களாலும் ஓசைநயத்தாலும் நவீன கவிதையை எழுதிய ஈழத்தின் முதன்மையான கவிஞன். 1984ல் ' தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லீம் மக்களும்' என்ற ஜெயபாலனின் முதல் நூல் வெளியாகியது. சூரியனோடு பே…
-
- 9 replies
- 2.5k views
-
-
இனிய வணக்கங்கள், நீண்ட நாட்களின் பின் உங்களுடன் மீண்டும் உறவாடுவதில் மகிழ்ச்சி. இன்று ‘வேரும் விழுதும்’ பகுதியில் - கனடா நாட்டில், ஊடகத்துறையில் குறிப்பிடத்தக்களவு பங்காற்றியுள்ள கலைஞர் ராகவன் அவர்கள் பற்றி சில எண்ணவோட்டங்களை உங்களுடன் சுருக்கமாக பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். +++ சில வருடங்களின் முன்னர் யாழ் இணையத்தின் ஊடாக நமது கலைஞர்கள், நம்மவர் படைப்புக்கள் சம்பந்தமாக பல்வேறு தகவல்களை உங்களுடன் பரிமாறினேன். அச்சமயத்தில் யாழ் இணையம் சார்பாக ராகவனையும் பேட்டிகண்டு வலைத்தளத்தில் பிரசுரம் செய்ய விரும்பினேன். இதுபற்றி ராகவனுடன் முகநூலினூடாக தொடர்புகொண்டேன். ஏனோ தெரியவில்லை, எதுவித பதிலும் அவரிடம் இருந்து அப்போது கிடைக்கவில்லை. ஆனாலும்.. இன்று …
-
- 120 replies
- 12.5k views
-
-
மூத்த ஊடகர், எழுத்தாளர் அ.செ.மு. — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — ஈழத்தின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர் அ.செ.மு. அதைப்போல மூத்த முன்னோடி ஊடகவியலாளர்களிலும் முக்கியமானவர். 1940களிலேயே ஊடகத்துறையில் இயங்கி, தனி அடையாளங்களை உருவாக்கியவர். ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, ஈழநாடு, எரிமலை ஆகிய பத்திரிகைகளின் ஆசிரிய பீடங்களில் பணியாற்றிய அ.செ.முருகானந்தன், “எரிமலை” என்று தனியாக தன் சொந்தச் செலவிலும் ஒரு பத்திரிகையை நடத்தியிருக்கிறார். திருகோணமலையிலிருந்து வெளிவந்தது. திருகோணமலையின் முதற்பத்திரிகையும் அதுதான் என்று கூறப்படுகிறது. ஆனால் அது நீடிக்கவில்லை. காரணம்,பெரிய பத்திரிகை நிறுவனங்களின் உரிமையாளர்களைப்போல அ.செ.மு பெரும் தனவந்தர…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஷோபாசக்தி பதில்கள் ஷோபாசக்தி இனி ஒவ்வொரு மாதமும் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்தாளர் ஷோபாசக்தி பதில் அளிப்பார். வாசகர்கள் கேள்விகளை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் அனுப்பிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம். உங்களின் கேள்விகளை editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். பொதுவாக உங்கள் பேச்சுகளில் கலை சார்ந்த அக்கறை இல்லாதது போல உள்ளது. ஆனால் உங்கள் சிறுகதைகள் பல தமிழ்ச்சூழலில் முக்கியமாகக் கருதப்படுகின்றன. இலக்கியம் அல்லது கலை குறித்து உங்கள் அபிப்பிராயம்தான் என்ன? பேச்சுகளில் கலை சார்ந்த அக்கறை இல்லாவிட்டால் கெடுதலில்லை. ஆனால் எனது கதைகளில் அந்த அக்கறை இருக்கிறதல்லவா, அதுதான் முக்கியமானது. இலக்கியம் / கலை குறித்தெல்லாம் பொதுவான…
-
- 19 replies
- 6.9k views
-
-
ஜெயகாந்தன் அஞ்சலி - ஆலமர்ந்த ஆசிரியன் ஜெயமோகன் 1991இல் நான் விஷ்ணுபுரம் எழுதிக்கொண்டிருந்த நாட்கள். நானும் சென்னை நண்பர்கள் சிலரும் ஜெயகாந்தனைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தோம். மடம் என நண்பர்களால் அழைக்கப்பட்ட அந்த மூன்றாவது மாடிக்கொட்டகையில் ஜெயகாந்தன் வருவதை எதிர்பார்த்து ஏற்கனவே நால்வர் காத்திருந்தனர். சாம்பல் படிந்த பழைய நீண்ட மேஜைக்கு முன் ஜெகெ அமரும் பழைய மரநாற்காலி. அதில் அவரது பிரதிநிதி போல ஒரு பழைய துண்டு கிடந்தது. அவர் முந்தையநாள் போட்டுவிட்டு போனது. அங்கிருந்தவர்கள் அவரது இன்மையையே ஓர் இருப்பாக உணர்ந்துகொண்டிருந்தனர். நாங்கள் அமர்ந்துகொண்டோம். எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொள்ளவோ பேசவோ தோன்றவில்லை. ஜெயகாந்தன் மட்டும்தான் அங்கே முக்கியம…
-
- 0 replies
- 774 views
-
-
Sir Arthur Charles Clarke, CBE, FRAS, Sri Lankabhimanya, (16 December 1917 – 19 March 2008) was a British science fiction author, inventor, and futurist http://en.wikipedia.org/wiki/Arthur_C._Clarke
-
- 2 replies
- 1.6k views
-
-
நேயர்கள் அபிமானம் வென்ற மூத்த அறிவிப்பாளர் சரா இம்மானுவேல் இலங்கை வானொலி இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும். தமிழ் ஒலிபரப்பாளர்கள் எஸ். பி. மயில்வாகனம் (வர்த்தக சேவையின் முதல் தமிழ் அறிவிப்பாளர்) வீ. சுந்தரலிங்கம் (சுந்தா சுந்தரலிங்கம்) ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் வீ. ஏ. கபூர் எஸ். புண்ணியமூர்த்தி எஸ். கே. பரராஜசிங்கம் சற்சொரூபவதி நாதன் கே. எஸ். ராஜா பி. எச். அப்துல் ஹமீட் விமல் சொக்கநாதன் சரா இம்மானுவேல் சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியம் ராஜேஸ்வரி சண்முகம் பி. விக்னேஸ்வரன் ஜோர்ஜ் சந்திரசேகரன் எஸ். நடராஜசிவம் எஸ். எழில்வ…
-
- 3 replies
- 2.3k views
-
-
நேர்காணல்: “பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்” தீபச்செல்வன் தீபச்செல்வன் (பிறப்பு: அக்டோபர் 24, 1983) ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாவார். ஈழத்தின் வடபகுதியான கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் வசித்து வருகிறார். கவிதைகள், கதைகள், களச்செய்தியறிக்கை, பத்தி எழுத்து, ஓவியங்கள், வீடியோ விவரணம், புகைப்படங்கள், ஆவணப்படம், வானொலிப்பெட்டகம், ஊடகவியல், விமர்சனங்கள் என பல துறைகளில் இயங்கிவருகிறார். போர், அரசியல், மாணவத்துவம், தனிமனித உணர்வுகள் என்று இவர் எழுதிவருகிறார். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் செயலாளராக 2008/2009 இல் பதவி வகித்த இவர் யாழ் பல்கலைக்கழக தமிழ் துறையில் சிறப்பு பட்டம் பெற்று தற்பொழுது …
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கைப் பேராசிரியர் க.கைலாசபதி(05.04.1933-06.12.1982) : முனைவர் மு.இளங்கோவன் ஈழத் தமிழ் இலக்கியத்தினதும் திறனாய்வினதும் அடையாளமாகக் கருதப்படுபவர் கைலாசபதி. மார்க்சியப் பார்வையில் இலக்கியத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர். ஒரு புறத்தில் சைவ சமய மரபுக்குள் முடங்கியும், மறுபுறத்தில் சாதிய அடையாளங்களுக்குள் அழைத்தும் வரப்பட்டுக்கொண்டுமிருந்த தமிழ் இலக்கியத்திற்கு முற்போக்கு மரபை அறிமுகப்படுத்தியவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முதலாவது துணை வேந்தர். கைலசபதி தொடர்பான குறித்துக்காட்டத்தக்க அறிமுகம் தென்னிந்தியவிலிருந்து கிடைப்பதற்கு இக்கட்டுரை துணை புரிகிறது. முனைவர் இளங்கோவனின் அறிமுகக் கட்டுரை தமிழ் இளைய சமூகத்திற்குக் கைலாசபதியை மீள அறிமுகம் செய்கிறது. கைலாசபதியின…
-
- 0 replies
- 917 views
-
-
நம்நாட்டு இசைக் கலைஞரான சாரங்கன் ஸ்ரீரங்கநாதன் பத்மஸ்ரீ ஹரிஹரனோடு இணைந்து பாடியுள்ள 'அவள் ஒரு மெல்லிய பூங்காற்று.." என்ற பாடல் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப்பாடலை கவிஞர் பா.விஜய் எழுதியுள்ளார். டாக்டர் ஸ்ரீரங்கநாதன் மற்றும் கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் ஆகியோரின் புதல்வரான சாரங்கன் சிறந்த இசைக் கலைஞராகவும் பாடகராகவும் திகழ்கிறார். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=m0wPjWGCakY http://www.virakesari.lk/article/cinnews.php?vid=103
-
- 4 replies
- 1.2k views
-
-
நேர்காணல் "பெண்மொழி இன்னமும் சமூகப் பொதுமொழியாக மாறவில்லை" - ஔவை சந்திப்பு: கருணாகரன் ஔவை நவீனத் தமிழ்க் கவிஞர்களில் முக்கியமானவர். 1980களில் ஈழத்தில் எழுந்த பெண்கவிஞர்களின் எழுச்சியோடு எழுத வந்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். ‘பெண்’ பற்றிய மரபார்ந்த சிந்தனையை உடைத்துப் புதிய நோக்கில் சிந்திக்கும் வழியைத் திறந்துகொண்டு வந்த ‘சொல்லாத சேதிகள்’ அணியில் முக்கியமானவர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருகின்றபோதும் ‘எல்லை கடத்தல்’ என்ற ஒரு கவிதை நூல் மட்டுமே இதுவரையில் வெளிவந்திருக்கிறது. தொடர்ந்து எழுத்திலும் களச் செயற்பாடுகளிலும் இயங்கி வருகிறார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்று, பின்னர் ஆசிரியர் பணி, கல்விச் ச…
-
- 3 replies
- 2.2k views
-
-
பாச மலர்' படத்தில் கணவன் - மனைவியாக ஜெமினி, சாவித்திரி 'காலம் மாறிப்போச்சு' படத்தில் ஜெமினி, அஞ்சலி தேவி திரையில் கதாநாயகியைக் காதலிப்பதில் எம்.ஜி.ஆர். கைதேர்ந்தவராக இருந்தார். பிறகு மெல்ல மெல்ல வளர்ந்து வாள் சண்டை, குஸ்தி என ஆக்ஷன் காட்சிகளில் அதிகம் ரசிக்கப்படும் நாயகனாக உருப்பெற்றார். சிவாஜியோ உணர்ச்சிகரமான நடிப்புக்காக உச்சிமுகரப்பட்டார். இந்த இரண்டு ஜாம்பவான் நாயகர்கள் ஜம்மென்று தங்கள் ராஜபாட்டையில் பயணித்துக்கொண்டிருந்தபோது உருகும் காதலனாக, நொறுங்கிய கணவனாக உள்ளே நுழைந்தவர்தான் ஜெமினி கணேசன். இந்தியாவின் மிக உயரிய விருந்தான பத்மஸ்ரீயைத் தன் புகழின் உச்சியிலேயே (1971) பெற்றுக்கொண்டவர் ‘காதல் மன்னன்’. கேஸ்டிங் உதவியாளர் சுதந்திர வேட்கை சுள்ளென்று சூடு பறந…
-
- 1 reply
- 2k views
-
-
ஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை! வணக்கம் எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் சிந்தனைப்போக்கையும் வரலாற்றையும் மாற்றியமைத்தார்கள். அத்தகைய சக்திவாய்ந்த எழுத்தானது அடிப்படைவாதிகளது இருப்பிற்கான களமாக அமைந்துவிடும்போது, அந்தச் சமூகமே சீரழிந்துபோகும் கெடுவாய்ப்பு இருக்கிறது. அந்த இழிநிலையை நோக்கி தமிழிலக்கியம் நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சங்கலந்த ஐயம், அண்மைக்காலமாக சில இலக்கியவாதிகளது பொறுப்பற்ற பேச்சினால் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுள், ஜெயமோகன் செய்துவரும் இலக்கிய மேட்டிமைத்தனங்கள் சொல்லுந்தரமற்றவை. அதிகாரத்தரப்பை உயர்த்த…
-
- 11 replies
- 1.5k views
-
-
எம்.எஸ்.விஸ்வநாதனின் 87வது பிறந்தநாள் இன்று: - அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி[Wednesday 2015-06-24 19:00] காலாத்தால் அழிக்க முடியாத பல காவிய பாடல்களை கொடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவரின் 87வது பிறந்தநாள் இன்று. இவருக்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிய, அவருடைய ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தும் படி ஒரு செய்தி வந்துள்ளது. இவருக்கு இன்று திடிரென்று மிகவும் உடல் நிலை முடியாமல் போனது, இதனால், சென்னையின் பிரபல மருத்துவமனையில் ICUல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்செய்தி இவருடைய ரசிகர்களுக்கு பெரும் சோகத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=134760&category=EntertainmentNews&language=tamil
-
- 0 replies
- 481 views
-
-
தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம் கரகாட்டம் போர் தேங்காய் அடித்தல் நாடகங்கள் மற்றும் பஜனைப் பாடல்கள் போன்ற கலை துறைகளில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் சிலம்ப ஆசான் தில்லை சிவலிங்கம் என அழைக்கப் படுகின்ற தில்லையம்பலம் தவராசா அவர்கள். 8 வயதில் இருந்து சிலம்பம் சூரசங்காரம் அவர்களிடமும் பின் நடராசா சோதிசிவம் அவர்களிடமும் பயிற்சி பெற்று தமிழாராட்சி மாநாட்டில் சிலம்ப நிகழ்வில் வைத்து இவரது ஆசான் நடராசா சோதிசிவம் அவர்களினால் சிலம்பாசான் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டவர் அதனைத் தொடர்ந்து தனது திறமையினால் நிறைய சிலம்ப மாணவர்களை உருவாக்கியிருக்கின்றார். இன்றும் கூட சிலம்பம் பயிற்சியளித்து வருகின்றார். அமரர் சாண்டோ எம் துரைரத்தினம் அவர்களினால் சிலம்பச் சக்கரவர்த்தி என ப…
-
- 0 replies
- 893 views
-
-
வணக்கம் அனைவருக்கும்... ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து பாரிசில் வசித்து வரும் ஒரு இளம் இசைக் கலைஞன் தான் "நிரு". இவர் பாரிசில் பல இறுவட்டுக்களை வெளியிட்டிருக்கிறார். ஈழத்து கவிஞர்கள் எழுதிய பாடல் வரிகளை இந்தியத் தமிழ்ப் பாடகர்களையும், ஈழத்துப் பாடகர்களையும் கொண்டு பாடவைத்து இவர் வெளியிட்ட இறுவட்டுக்கள் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளன. அந்தவகையில் தென்னிந்திய திரையுலகில் கலாபக் காதலன் என்கிற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார். நமது கலைஞர்கள் நம்மவராலேயே புறக்கணிக்கப்படுகிற மிகக் கவலையான நிகழ்வுகளை நாம் அன்றாடம் எதிர்கொள்கிறோம். எம்மவரின் திறமைக்குரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை என்பது கவலையான விடயம். எம்மவரே எம்மைக் கண்டுகொள்ளாத நிலையில் இன்னெ…
-
- 20 replies
- 5.4k views
-
-
முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2007/06/blog-post_11.html
-
- 0 replies
- 1.7k views
-
-
ஈழத்து இசையமைப்பாளர் சுதாகரன் கணபதிப்பிள்ளை அவர்களின் செவ்வி TIME FM-ITR வானொலி காற்றலைகளின் பெட்டகம் நிகழ்ச்சியில்!! இலண்டனில் இருந்து வருகை தந்திருக்கும் !!இசையமைப்பாளர்,இந்தியத் திரையுலகில் சாதனை(80 களில்) படைத்த ஈழத்து இசையமைப்பாளர் SUTHAKARAN KANAPATHIPILLAI அவர்கள் கலந்து சிறப்பித்த சிறப்பு நேர்காணல்!!
-
- 1 reply
- 1.2k views
-
-
புதுமைப்பித்தன் எனும் மாபெரும் மனிதன் எழுத்துலகில் தமிழ் நாட்டை மடைமாற்றியவர்.கரடுமுரடான நடையில் சிக்கிக்கொண்டு இருந்த தமிழ் கவிதையை பாரதி திசை திருப்பினான் என்றால்,சிறுகதையின் எல்லைகளை எளியவனின் திசை நோக்கி பரப்பியவர் இந்த திருநெல்வேலி திருமகன்.எள்ளலும் ,சுருட்டு வாசனையும் எப்பொழுதும் மிகுந்து இருந்த மாபெரும் அங்கதக்காரன்.எதை தவறு என பட்டாலும் உரக்க இடித்த எழுத்துலகின் புரியாத ஞானி. இலக்கியம் என்று அவர் எளிய மக்களின் வாழ்வை சொல்வதையே நினைத்தார் .சீலைப்பேன் வாழ்வு போல காதல் கத்தரிக்காய் என இருநூறு ஆண்டுகாலம் இலக்கியத்தை தேங்க வைத்து விட்டார்கள் என அவர் கருதினார் .ஏழை விபசாரியின் வாழ்க்கை போராட்டத்தை,தான் பார்க்கிற எளிய மக்களின் வாழ்க்கையை பதிவு செய்வதை பெருமையாக கருதினார…
-
- 0 replies
- 3.4k views
-
-
கல்கியின் பலம் எழுத்தில் மட்டுமல்ல, அவரது சமூகச் செயல்பாடுகளிலும் இருக்கிறது. விடுதலைப் போராட்டக் காலத்திலும் அதற்குப் பின்புமான காலத்திலும், தமிழகத்தின் அரசியலில் சமூக கலாச்சார வரலாற்றை ஆய்வு செய்யும் எவருக்கும் கல்கியின் எழுத்துகள் ஒரு மாபெரும் புதையல். ‘பொன்னியின் செல்வன்’ என்ற வரலாற்றுப் புதினத்தை எழுதியதால் மூன்று தலைமுறை கடந்தும் வாசிக்கப்படுபவர் அவர். ஆனால், இந்த ஒரு காரணத்துக்காக மட்டும் கல்கி அறியப்படுவாரேயானால், அது அவரது ஆளுமைக்குச் சிறப்பாகாது. முன்னோடிப் பத்திரிகையாளர், புனைகதை எழுத்தாளர், கலை விமர்சகர், கட்டுரையாளர், பாடலாசிரியர், தேச விடுதலைப் போராட்டத்தில் நேரடியாகப் பங்குபெற்ற அனுபவம் கொண்டவர் போன்ற பன்முகத் தன்மை கொண்டவர் கல்கி. சம கால ஆளுமைகளை அவர் நு…
-
- 0 replies
- 1.1k views
-