Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. தந்தை செல்வா என்று போற்றப்பட்டவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவருமான தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) மூத்த மகள் சுசீலாவதி வில்சன் தனது 97 ஆவது வயதில் கனடாவில் இறைவனடி எய்தினார். தந்தை செல்வாவின் மூத்த மகள் சுசீலாவதி (சுசீலி) வில்சனின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. சுசீலாவதியின் மறைவு தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான தந்தை செல்வாவின் மூத்த மகள் சுசீலாவதி (சுசீலி) வில்சனின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றது. சுசீலி , தனது தாயாருடன் இணைந்து, 1950கள் மற்றும் 60களில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரச…

    • 0 replies
    • 120 views
  2. ஈழத்து மூத்த இலக்கிய சிகரம் டொமினிக் ஜீவா காலமானார்! ஈழத்து இலக்கிய இதழியல் சாதனையாளரும் மூத்த இலக்கியவாதியுமான டொமினிக் ஜீவா இன்று (28) மாலை தனது 94 வது வயதில் காலமானார். டொமினிக் ஜீவா “மல்லிகை” எனும் மாதத் சஞ்சிகை ஆரம்பித்து 2012 நவம்பர் – டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர். நாற்பத்தி எட்டு வருடங்கள் 401 இதழ்களை வெளியிட்டு பெருமை சேர்த்தவர். இவர் இலங்கையில் சாகித்திய மண்டலத்தின் சிறுகதைகளுக்கான சாகித்திய மண்டலப் விருதை முதன் முதலாகப் பெற்ற புகழுக்குரியவர். அடுத்தடுத்து இரு தடவைகள் அவ்விருதினைப் பெற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த ஜோசெப்-மரியம்மா தம்பதிகளின் இரண்டா வது புதல்வராக 1927ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் திகதி இவர் அவதரித…

  3. தமிழீழத் தாயகத்தில் சிங்கள அரச பயங்கரவாதம் இந்திய மற்றும் சர்வதேசத்தின் உதவியோடு எம்மினத்தை குண்டுகளால் அழித்தொழித்த 2009 மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளான இன்று.. அந்த இன அழிப்பில் தம் இன்னுயிர்களை மண்ணிற்காக தந்து.. மண்ணோடு மண்ணாகிப் போன மக்களுக்கும் மறவர்களுக்கும் வீர அஞ்சலிகளும்.. கண்ணீரஞ்சலிகளுக்கும் உரித்தாகப்படுகிறது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

  4. சிரேஷ்ட ஊடகவியலாளர் நடராஜசிவம் காலமானார்! இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர், சிறந்த ஒலி, ஔிபரப்பாளர் மற்றும் நடிகர் எனப் பல பரிணாமங்களை கொண்ட சி.நடராஜசிவம் இன்று (24) சற்றுமுன் காலமானார். இவர் இலங்கை வானொலி, சூரியன் எப்எம், ரூபவாஹினி போன்ற வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களிலும் பணியாற்றியுள்ளார். https://newuthayan.com/சிரேஷ்ட-ஊடகவியலாளர்-நடரா/

    • 6 replies
    • 1.3k views
  5. பிரிகேடியர் பால்ராஜ் - முதலாம் ஆண்டு நினைவில்

    • 1 reply
    • 749 views
  6. ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார். மட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தையின் பணி நிமிர்த்தம் யாழ்ப்பாணம் மண்டதீவில் வசித்து தனது ஆரம்பம் முதலான கல்வியைத் தொடர்ந்தார். யாழ். இந்துக்கல்லூரி மாணவரான அவர் மாணவப் பருவத்தில் இருந்தே எழுதும் பணியினை மேற்கொண்டு வந்த அவர் 1995 இன் பின்னர் யாழ்.…

    • 0 replies
    • 700 views
  7. சுண்டலின் மாமாவின் இழப்பினால் துயருற்று இருக்கும் சுண்டலுக்கும் , அவரது குடும்பத்தினருக்கும் , உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .

  8. மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவரும் பள்ளிப் பருவம் முதல் இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றியவரும் .தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர். இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல், பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்த மாபெரும் மனிதர் ஆவார். இனவாத அரசின் நெருக்கடிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்த போதிலும், தாயகத்திலும், இந்தியாவில…

    • 4 replies
    • 669 views
  9. எங்கள் சாந்தியக்காவின் தந்தை மரணம் அடைந்துள்ளார் ரமேஸ் வவுனியனின் மாமனாரும் சாந்தி ரமேஸ்ன் தந்தையும் ஆகிய ஆனந்தசடாட்சரம் அவர்கள் மரடப்பு காரனமாக மரணம் அடைந்துள்ளார்.. சந்தியக்காவுக்கு ரமேஸ் அண்ணாவுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

  10. ஈழநாதம், வெள்ளிநாதத்தின் துணை ஆசிரியராகவும், மக்கள் நாளேட்டின் செய்தியாளராகவும் பணியாற்றிய க.ஜெயசீலன் (வயது 27) நேற்று அகாலச்சாவடைந்தார். கிளிநொச்சி சேவியர் கடைச் சந்திப் பகுதியில் முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் அவர் சிக்கியதில் இந்த விபரீதம் நேர்ந்தது. இவருக்கு விடுதலைப்புலிகள் நாட்டுப்பற்றாளர் கௌரவம் வழங்கியிருக்கின்றனர். படுகாயமடைந்த நிலையில் இவர், கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இல: 12, ஆனந்தநகர், கிளிநொச்சியைச் சேர்ந்த நாட்டுப்பற்றாளர் க.ஜெயசீலன் (வயது 27) துடிப்…

    • 2 replies
    • 1.5k views
  11. அப்துல் கலாமின் இறப்பும், தகர டப்பாக்களின் சப்தமும் / மு. கோபி சரபோஜி ( சிங்கப்பூர் ) கடந்த 27.07.2015 ல் அப்துல் கலாம் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி எட்டியதும் தங்கள் வீட்டுத் துயரமாக நினைத்து பகிரப்பட்ட துக்க நினைவுகளோடு விமர்சனம் என்ற பெயரில் சில தகர டப்பாக்கள் போட்ட சப்தங்கள் அவர்கள் நினைத்ததைப் போல ஒன்றையும் புரட்டிப் போட வில்லை. அவர்கள் பாசையிலேயே சொன்னால் ஒரு மயிரையும் புடுங்கவில்லை. இறந்த ஒருவரை ஏன் விமர்சனம் செய்யக் கூடாது? இறந்தவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா? அவரின் செயல்பாடுகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ன? இந்த மூன்று கேள்விகளை மட்டுமே முன் வைத்து எழுதப்பட்ட பெரும்பாலான விமர்சன வாந்திகளை எடுத்தவர்கள் தங்களைச் செல்வாக்கு மிக்கவர்களாக, தங்களின…

  12. ஆழ்ந்த அனுதாபங்கள் மயூராவின் குடும்பத்திற்கு! மயூராவின் இழப்பைக் கேட்டு அதிர்ச்சியுற்றோம். மிகவும் நட்பாக பழகக் கூடிய பண்பும் மிகவும் திறமையான மாணவியாகவும் பெற்றோர்களுக்கு ஆசை மகளாகவும் திகழ்ந்தார். இவரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம். ===>>நண்பர்கள்<<===== 9ஆம் மாத நினைவஞ்சலியும் வீட்டுக்கிருத்தியமும் Date of Birth 1985-10-11 Date of Death 2007-03-09 செல்வி முருகையா மயூரா (முகாமைத்துவப் பிரிவு, யாழ். பல்கலைக்கழகம் 2007) பொன் மயிலே! புதுச்சரமே! புன்னகையே! புதுமலரே! பூமுகத்தைக் காண்போமா? புன்னகையை இரசிப்போமா? ஆசைச் செல்வமே! அன்பு மலரே! பாசம் மாறாத நேசத்தாமரையே! கைகள் கூப்புகின்றோம் கண்மலர்கள் த…

  13. தமிழர்களின் வாழ்வில் மறக்கமுடியாத வைகாசி மாதம் -2009 வன்னிப்போரில் உயிர்துறந்த அத்தனை உறவுகளிற்கும் எனது அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றேன். அவரவர்களின் நாடுகளில் நடைபெறுகின்ற அஞ்சலி நிகர்வுகளில் பங்கு கொள்வோம் வாரீர்.

  14. சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ஜெயன் மஹாதேவன் (ஜெயன் தேவா) மறைவு! - வ.ந.கிரிதரன் 21 டிசம்பர் 2022 நண்பரும், எழுத்தாளரும், முகநூலில் ஜெயன் தேவா , Jeyan Deva , என்னும் பெயரில் அறியப்பட்டவருமான மகாதேவன் ஜெயக்குமரன் (விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அமைப்பின் போராளியாகவும், அரசியல் பிரிவுத் தலைவியாகப் பணியாற்றியவருமான மறைந்த தமிழினி ஜெயக்குமரனின் கணவர்) மறைந்த செய்தியினை எழுத்தாளர் காத்யான அமரசிங்க மூலம் அறிந்து கொண்டேன். அண்மைக்காலமாகச் சிறுநீரக நோய்ப்பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயன் தேவா அதற்காகச் சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை எடுத்து வந்து கொண்டிருந்தார். தனிமையில் வாழ்ந்து வந்த ஜெயன் தேவாவின் மறைவு துயர் தருவது…

  15. லெப்.கேணல் அருணா (அருணன்) நினைவு தினம். ஜ சனிக்கிழமைஇ 22 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ லெப்.கேணல் அருணா-அருணன் இராசேந்திரம் சசிகரன் 16-12-1973 22-09-1998 துயரம் நிறைந்த தமிழினத்தை துன்பக்கடலில் இருந்து மீட்டிடத் தோன்றிய ஆயிரம் ஆயிரம் மாவீரர் வரிசையில் அருணாவும் ஒருவன். வடமராட்சிப் பகுதியில் பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் வயல்வெளிகளையும், வானைத் தொடுவதற்குப் போட்டி போட்ட வண்ணமுள்ள மா, பலா, பனை, தென்னை போன்ற பயன்தரு மரங்களையும் தன் அணிகலனாக அணிந்திருந்தாள் துன்னாலை அன்னை. அருணா துள்ளி விளையாடிய பெருமைக்கும், கறுப்பு மலர் கரும்புலிகள் வரிசையில் தன் பெயரை முதலாவதாகப் பதித்த கப்டன் மில்லரை வளர்த்தெடுத்த பெருமைக்கும் உரியவள் இவளே. இராசேந்…

  16. அம்மா காலமானார் என்று விசுகு முகநூலில் தகவல் போட்டுள்ளார். விசுகுவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். எமது தாயார் இன்று காலை 3 மணிக்கு இயற்கை மரணம் எய்தினார் . உற்றார் உறவினர்கள் நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும். மேலும் தகவல்கள் பின்னர் அறியத்தருகின்றோம். Sri Parasu Kalamathi Selvam Gandhi Bala Janakan Balan

  17. எனது கவலையில் பங்குபற்ருவிர்களா? 01.01.2009 எனது அண்ணாவின் வீரசாவு 1 அண்ணவும் 1அக்காவும் களத்தில் அம்மவால் நடக்கமுடியாது அப்பாவால் உலைக்க முடியாது விரைவில் நானும் களத்தில் நிற்கலாம் ????????????????? மாவீரரின் கனவை நினைவாக்குவோம்

  18. Started by Vaasha,

    பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் (62) ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவர் சிறுகதை நாவல்கள் எனப் பல சிறந்த படைப்புக்களை தமிழிற்கு தந்துள்ளார். இவரது ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம் இன்றைய உதயனில் மேலும் விரிவான தகவல்களை பார்க்கலாம்.

    • 1 reply
    • 897 views
  19. ஆண்டொன்று போனாலும் ஆறாது எம் துயரம் . நீள் துயில் நீங்கி நீ வருவாயோ ? மாறாது மாறாது மண்ணில் உள்ள காலம் வரை ஒரு நாளும் ஓயாது சுழன்று திரியும் பம்பரமே ஆழ் துயரில் உடன் பிறப்புக்களும் உறவுகளும் உன் மனையாள்- பெண் குழந்தைகளும் தவியாய் தவித்து நிற்க உறக்கத்தில் உன் உயிர் பறந்ததென்ன ? வேலைப்பளுவிலும் "அக்கா "என அலைபேசியில் அழைத்து அத்தாரும் மக்களும் சுகமா என்பாய் உன் குரல் கேளாது தவிக்கிறேன் ஊருக்கு சென்ற நீ வந்ததும் "அழைப்பேன்" என சொல்லி காய்ச்சலில் வந்து படுத்து கண கதியில் போனதேன்?. இளையவனாய் பிறந்த நீ ஏனையவர்க்கு முன்பே ஒரு வார்த்தை சொல்லாமல் கடுகதியாய் பறந்ததேன் யாவரையும் சிரிக்க வைத்து …

  20. 27.08.1992ம் ஆண்டு யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் ராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவும் 27.08.1995 அன்று அம்பாறை மாவட்டம் வம்மியடிக்குளம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் ரஞ்சன்(மாருதியன்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவும் இன்றாகும். உறுதியின் உறைவிடம். அன்றையநாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது. அன்று காலைதான் ராஜன் எம்மைவிட்டுப் பிரிந்தான். முதல்நாள் மாலை, பண்டத்தரிப்பில் நின்ற போராளிகளைப் பார்க்க வந்த ராஜனிடம், எதிரியின் சிறிய படையணி ஒன்றின் மீதான சிறியதாக்குதல் திட்டம் ஒன்றைக் கூறினர் கோபியும் தோழர்கள…

  21. ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் இன்று (புதன்கிழமை) உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. 1950-ம் ஆண்டு இலக்கிய வாழ்க்கையை தொடங்கிய ஜெயகாந்தன் தன் படைப்புகளால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இலக்கிய நண்பர்களால் ஜே.கே என்று அழைக்கப்பட்டவர். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படத்துறை என ஜெயகாந்தனின் படைப்புலகம் பரந்து விரிந்தது. ஜெயகாந்தன் எழுதிய கதைகளை வைத்து, 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'ஊருக்கு நூறு பேர்' ஆகிய மூன்று திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. 'உன்னைப்போல் ஒருவன்', 'யாருக்காக அழுதான்', 'புதுச்செருப்பு கடிக்கும்' ஆகிய மூன்று படங்களை ஜெயகாந்தன் இயக்கினார். கடந்த 2002- ம் ஆண்டு இலக்கிய உலகின்…

  22. கேட்கவே மிகவும் வருத்தமாக இருக்கின்றது, வாதவூரான்! தங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்!

  23. https://www.newsweek.com/jane-goddall-dead-conservationist-institute-chimpanzees-latest-updates-10813647 கடந்த 60 ஆண்டுகளாக சிம்பன்சிகள் (Chimps) எனப்படும் மனிதக் குரங்குகள் பற்றி நடத்தையியல் ஆய்வுகளை மேற்கொன்டு வந்த ஜேன் குடால் நேற்றுக் காலமானார். ஏராளமான பெண் விஞ்ஞானிகளுக்கு ஊக்கமாக இருந்தவர். சிம்பன்சிகளின் நடத்தையியலைக் கொண்டு பல ஆபிரிக்க நாடுகளில் சிம்பன்சிகளை அழியாமல் பாதுகாக்கும் செயல்திட்டங்களை உருவாக்க உதவியவர். மிகவும் எளிமையான பிரபலம். கொண்டாடப் பட வேண்டிய வாழ்வு இவருடையது!

  24. பழம்பெரும் இசை அமைப்பாளரும் இளையராஜாவின் குருவுமான தட்சிணாமூர்த்தி நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94. நல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர், ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் இளையராஜா, பி.சுசீலா, ஜேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார். இவர் மலையாளப்பட உலகில் 3 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்து வந்தார். நேற்று மாலை 6-30 மணிக்கு தட்சிணா மூர்த்தி சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவர் மலையாளப்பட உலகில் ‘சுவாமி' என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். அவரை தட்சிணாமூர்த்தி சுவாமிகள் என்றே பொதுவாக அழைக்கப்பட்டார். இவர் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழி…

    • 7 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.