துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
வீரகேசரி இணையம் 9/11/2008 4:22:49 PM - யாழ்ப்பாணத்தின் பிரபல நாதஸ்வர வித்துவான் வி. கே. காணமூர்த்தி நேற்று இரவு 11 மணிக்கு காலமானார். இவர் இறக்கும் போது வயது 65 ஆகும். இவர் தனது 15 வயதில் இருந்து நாதஸ்வர வாத்தியத்துறையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சுவிட்ஸர்லாந்து ஆகிய இடங்களில் இவர் தமது திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்.
-
- 10 replies
- 2.4k views
-
-
கொடியுயர்த்தி வாழ்ந்தவொரு குடிவாழ்க்கை இடிவிழுந்து எல்லாமிழந்து இருக்கிறது சூனியமாய் நாளையிது மீண்டும் நிமிரும் மீள அழகொழிரும் -புதுவை இரத்தினதுரை – 1. அமெரிக்க சிந்தனையாளரும் வெள்ளைமாளிகையின் ஆலோசகர்களில் ஒருவருமான பிரான்ஷிஸ் புக்குயாமா வரலாற்றின் முடிவு பற்றிப் பேசினார். 'வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும்' (The end of history and the last man) என்ற தனது நூலின் மூலம் மனித வரலாற்றின் முடிவை பிரகடனம் செய்தார். புக்குயாமாவின் கருத்து நிலை ஐரோப்பிய புத்திஜீவித்துவ உலகில் பெரும் சர்ச்சைகளையும் எதிர்வினைகளையும் உருவாக்கியது. எனினும் அவர் தனது வெளிப்பாடு குறித்த விமர்சனங்களை பெரியளவில் பொருட்படுத்தவில்லை என்றே கூறப்படுகின்றது. ஆனால் 2001 செப்டம்பர் 11ல்…
-
- 0 replies
- 1k views
-
-
எழுத்தாளர், வானொலி, நாடக, திரைப்பட நடிகர், ஆய்வாளர் என பல்துறையிலும் தன்னை ஈடுபடுத்திய கலைஞர் ‘மாருதி’ சிசு நாகேந்திரன் அவர்கள் 10.02.2020இல் காலமானார்
-
- 4 replies
- 750 views
-
-
எமது போராட்டத்தின் முதல் பெண் வித்து, 2ம் லெப் மாலதி அவர்களின்..... தந்தையான பேதுரு அவர்கள் சுகயீனம் காரணமாக இவ்வுலகை விட்டு விடைபெற்றார்..!! ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்...!!!
-
- 12 replies
- 967 views
-
-
சென்னை: தினத்தந்தி அதிபர் பா சிவந்தி ஆதித்தன் வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி பா ஆதித்தனாரின் மகன் சிவந்தி ஆதித்தன். ஆதித்தனாரின் மறைவுக்குப் பிறகு தினத்தந்தி நாளிதழின் அதிபராகப் பொறுப்பேற்று நிர்வாகத்தை நடத்தி வந்தார். இதழியல் துறையில் சிறப்பான இடம் வகித்தவர். கடந்த 2008ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகவும், ஆசிய ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவராகவும் திகழ்ந்தவர் சிவந்தி ஆதித்தன். சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் மூலம், பல்வேறு நலத்திட்ட உதவிகளை எளியோர்க்கு வழங்கியவர். கல்விப் பணியில் மிகச் சிறந்த இடம் வகித்தவர் சிவந்தி ஆதித்தன். தூத்துக்குடி மற்றும் திருச்செந்…
-
- 4 replies
- 1.1k views
-
-
வாழ்வின் பெரும் பகுதியைக் கலைவாழ்வில் அர்ப்பணித்த அரும்பெரும் கலைஞர் “லூஸ் மாஸ்ரர்” ஐசக் இன்பராஜா ஜேர்மனி நாட்டில் ஜூலை 29ம் திகதி காலமானார். மேடை நாடகம், வில்லுப்பாட்டு என்பவற்றில் நகைச்சுவையால் மக்கள் மனங்களை வென்ற ஓர் உன்னதமான கலைஞராக ஐசக் இன்பராஜா விளங்கினார். ஈழத்தின் திரைப்பட இயக்குனர் நிரமலா புகழ் அருமைநாயகம் அவர்களின் இயக்கத்தில் பல நாடகங்களில் கலைஞர் ஐசக் இன்பராஜா நடித்துள்ளார். “லூஸ் மாஸ்ரர்” என்கின்ற நகைச்சுவையின் மூலம் ஈழத்தின் பல பகுதிகளிலும் புகழ் பெற்று விளங்கினார். ஆடி, பாடி நடிப்பதில் வல்லவரான “லூஸ் மாஸ்ரர்” ஐசக் இன்பராஜா அவர்களுக்கு ‘மாப்பிள்ளை தேவை’ என்ற நாடகம் மிகப்பெரும் புகழை ஈட்டிக்கொடுத்திருந்தது. செய்ய வேண்டும்…செய்யவேண்டும்….உடனடியாச் செ…
-
- 21 replies
- 2.6k views
-
-
ஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி யாழிலிருந்து வலைப்பதிவெழுதும் பகீ மூலம் அறிந்து நெஞ்சம் கனத்தது. வரதர் ஐயா! போய் வாருங்கள், நீங்கள் மீண்டும் என் தாய்நாட்டில் பிறக்கவேண்டும் என்ற சுயநல ஆசையுடன் என் கண்ணீர் அஞ்சலிகளோடு பிரியாவிடை கொடுக்கின்றேன் உங்களுக்கு. http://kanapraba.blogspot.com/2006/12/blog-post_21.html
-
- 12 replies
- 2.1k views
-
-
சாந்தினி அற்புதசீலன் அவர்கள் புற்றுநோயோடு சில ஆண்டுகளாக போராடி இன்று (03.04.2014) தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டுள்ளார். சாந்தினி அக்காவை இழந்து துயரில் வாடும் மகள் சர்மியா, மகன் குகஜித், துணைவர் சீலண்ணா உங்கள் துயரில் நாங்களும் பங்கேற்கிறோம். சாந்தினி அற்புதசீலன் அவர்களது மரணச்செய்தியை அவரை அறிந்த தெரிந்தவர்களுக்கு இத்தால் அறியத் தருகிறேன்.
-
- 19 replies
- 1.8k views
-
-
இந்திய சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர் தனது 92ஆவது வயதில் காலமானார். அமெரிக்காவிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று திங்கட்கிழமை மாலை இவர் காலமானார். மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர் அமெரிக்காவிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்திய இசையை மேற்கத்தேய உலகிற்கு கொண்டுசென்ற பெருமை ரவி சங்கரையே சாரும். இவர் தனது இறுதிக்காலம்வரை இசையுலகில் ஆர்வமாக இருந்துவந்தார். ஏற்கெனவே கிராமி விருது பெற்ற ரவி சங்கர் தற்போது மீண்டும் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து இவரின் மகள் அனோஷ்கா சங்கரின் பெயர…
-
- 15 replies
- 2.4k views
-
-
1. வீரவேங்கை இசை (வைரமுத்து பாலகுமார்) திருகோணமலை ஈச்சிலம்பற்று 2. வீரவேங்கை ஈழத்தரசன் (கணேசசபை சத்தியராசா) பூமரத்தடிச்சேனை 3. வீரவேங்கை சுதர்சன் (தேவராசா கஜேந்திரன்) மேன்காமம் கிளிவெட்டி 4. வீரவேங்கை குரலாடன் (நவரட்ணம் சசிதரன்) கிண்ணியா சூரன்குடி 5. வீரவேங்கை மனோ (குமரேசபிள்ளை திவாகரன்) நாராயணபுரம் தோப்பூர் 6. வீரவேங்கை முத்தமிழன் (செல்வநாயகம் கரிகரன்) அன்புவெளிபுரம் திருகோணமலை; 7. வீரவேங்கை நளினரூபன்
-
- 28 replies
- 4.8k views
-
-
-
யாழ் அரங்கியல் கலைஞர் ஜி. பி. பேர்மினஸ் காலமானார் : October 9, 2018 திருமறை கலாமன்றத்தின் மூத்த கலைஞரும் ஈழத்தின் அரங்க புலத்தில் அரைநூற்றாண்டுக்கு மேல் பணியாற்றியவருமான ஜி. பி. பேர்மினஸ் இன்று காலமானார். அமரர் ஜி.பி.பேர்மினஸ் அறுபது ஆண்டுகளுக்கு மேல் அரங்கப் பணியாற்றியவர். சிறந்த நடிகர், நெறியாளர், தயாரிப்பாளர், வேட உடை விதானிப்பாளர், அரங்கப் பயிற்றுனர், திருமறை கலாமன்றத்தின் தாபக உறுப்பினர் என பன்முகப் பணிகளைப் புரிந்த இவர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் திருமறை கலாமன்றத்தில் கலைச்சேவை ஆற்றியுள்ளார். அறுபது நாடகங்களுக்கு மேல் நடித்ததுடன் நாடக அரங்ககல்லூரி உட்பட பல அரங்கநிறுவனஙகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பல நாடகங்களை இயக்கியுள்ளார். திருப்பாடு…
-
- 0 replies
- 443 views
-
-
இலங்கை இரசாயனவியல் பட்டையக் கல்வியகத்தின் முதன்மையாளராகவும்.. கொழும்பு.. யாழ்.. றுகுணு.. திறந்த பல்கலைக்கழகம்.. பேராதனை.. சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய இரசாயனவியல் பேராசிரியர்.. Prof. J.N.O Fernando புற்றுநோய் காரணமாக அண்மையில்.. இயற்கை எய்தியுள்ளார். இவர் பப்புனிகினியாவிலும் கல்வி கற்பித்துள்ளார். இவர் கொழும்பு பல்கலைக்கழகம்.. மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி பழைய மாணவராவார். குறுகிய காலம்.. இவரின் ஆசிரிய சேவையில் கல்வி பெற்றவன் என்ற வகையில்.. கண்ணீரஞ்சலிகள். மிகவும் அமைதியான குணம் கொண்ட நல்லதொரு ஆசான். (RIP)
-
- 1 reply
- 720 views
-
-
ஒளிக்கலை போராளி லெப்.கேணல் செந்தோழன் வீரச்சாவு; இசைப்பாடகர் இசையரசன் சாவு [ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2009, 12:29.33 PM GMT +05:30 ] தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்த லெப்.கேணல் செந்தோழன் வீரச்சாவடைந்துள்ளார். ஒளிப்படக் கலைப் போராளியும், பாடலாசிரியருமான லெப்.கேணல் செந்தோழன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்தவர். அத்துடன் தமிழீழ எழுச்சி இசைப் பாடல்களையும் எழுதியுள்ளார். ஒளிக்கலையிலும் இசைப்பாடல்களிலும் போர்க்கலையிலும் திறப்பட தன்பணியை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு லெப்.கேணல் செந்தோழன் வழங்கியுள்ளார். இதேவேளை, தமிழீழ இசைப் பாடகர் இசையரசன் சாவைத் தழுவியுள்ளார். அ…
-
- 6 replies
- 1.5k views
-
-
யாழ்.களத்தின் அன்புச் சகோதரி, யாயினி... அவர்களின் அன்பு சகோதரர் காலமாகி விட்டார். துயர் பகிர்வு அறிவித்தல்: கனகலிங்கம் பகீரதன்(கபிலன்) புங்குடுதீவு 3ம்வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடாவில் வாழ்ந்து வந்தவருமான கனகலிங்கம் கபிலன், இன்று அதிகாலை மாரடைப்பினால் காலமாகிவிட்டார். (தகவல்: விசுகு) அன்னாரின், ஆத்மா சாந்தியடைய... பிரார்த்திக்கின்றோம். 🙏 🙏 🙏
-
- 45 replies
- 2.4k views
- 2 followers
-
-
எழுத்தாளர் செ. கணேசலிங்கன் காலமானார் டிசம்பர் 4, 2021 யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டு, தற்போது சென்னை வடபழனியில் உள்ள தனது மகளின் இல்லத்தில் வசித்துவந்த தோழர் கணேசலிங்கன் இன்று (04.12.2021, சனிக்கிழமை) காலை காலமாகினார். இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையாக விளங்கிய எழுத்தாளர் செ.கணேசலிங்கன், 40க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதை, சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தோழர் கணேசலிங்கன் அவர்களின் பூதவுடல் இன்று (04.12.2021, சனிக்கிழமை) பிற்பகல் 5.00 மணியளவில் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. …
-
- 0 replies
- 961 views
-
-
இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 10 வீரமறவர்களின் வீரவணக்க நாள் . Friday, May 13, 2011, 5:31 13.05.95 அன்று வன்னி செட்டிமலையில் நடந்த இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர் .தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். கப்டன் வேங்கையன் . இராசையா – திவாகரன் . யாழ்ப்பாணம் . லெப்டினன் ஜெயந்தன் மகாலிங்கம் – விக்னேஸ்வரன் திருமலை. லெப்டினன் கருங்கதிர் ஏகாம்பரம் – முத்துலிங்கம் மட்டக்களப்பு. லெப்டினன் யுகந்தன் கந்தசாமி – கரிகரன் கிளிநொச்சி . லெப்டினன் சுமணன் தம்பிபிள்ளை – முரளி மட்டக்களப்பு . லெப்டினன் தர்ம…
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
சபேசன் அண்ணாவின் தந்தை வெள்ளியன்று காலமாகி இருப்பதாக Facebook இல் கூறி இருக்கின்றார் ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா கடந்த வெள்ளிக் கிழமை எனது தந்தை இயற்கை எய்திவிட்டார். அப்படி ஒன்று அதிக வயது இல்லை. வெறும் 65தான். மாரடைப்பு அவரை கொண்டு போய் விட்டது. செய்தி கேட்டதும் அடித்துப் பிடித்து முப்பது மணித்தியாலங்கள் பயணம் செய்து ஓடி வந்தேன். 3 நாள் அப்பாவின் உடல் எனக்காக காத்திருந்தது. பெற்றோர்களின் கடைசிக் காலங்களில் பக்கத்தில் நிற்க முடியாத ஒரு துர்ப்பாக்கியம் மிகுந்த சமூகமாக ஆகி விட்டோம் என்பது பெரும் வேதனையை தருகிறது. எனக்கு இன்னும் சரியாக புரிபடாத கிழக்கு மாகாணத்தின் பாதைகளில் நாளை நான் நடந்து செல்கின்ற போது, விரல் பிடித்துச் செல்ல அவருடைய கரம் இருக்கிறது என்கின்ற நம்பி…
-
- 55 replies
- 4k views
-
-
சிறிலங்கா இராணுவம் வடபோர் முனையில் மேற்கொண்ட வலிந்த தாக்குதலின் போதும் அதற்கெதிராக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட முறியடிப்புச் சமரின் போதும் போராளிகள் வீரச்சாவைத் தழுவினார்கள். நடைபெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவியவர்களில் இதுவரை கிடைக்கப்பெற்ற 75 பேரின் விபரங்கள் 11.08.2006 வீரவேங்கை வாணி மார்க்கண்டு சாந்தமலர் விடத்தல்தீவு, பள்ளமடு, மன்னார் பளைப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான சமரின்போது வீரவேங்கை கவிமதி/கிண்ணியா றெங்கநாதன் தேவிகா முரசுமோட்டை, கிளிநொச்சி. த.மு: இடைக்கட்டு, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு. வீரவேங்கை அருங்கதிர்/மதனி சிவப்பிரகாசம் யோகேஸ்வரி யாழ். மாவட்டம். வீரவேங்கை நீலச்சுடர் அன்ரன்பெனடிற் பிறேமலதா …
-
- 11 replies
- 2.1k views
-
-
அமிர்தலிங்கத்தின் மூத்த புதல்வர் காண்டீபன் லண்டனில் காலமானார். On Nov 14, 2022 தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் , தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும், இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்கட்சித்தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மூத்த புதல்வர் அமிர்தலிங்கம் காண்டீபன் லண்டனில் இன்று (13) காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டது மட்டுமல்ல தமிழீழ இராணுவம் என்ற அமைப்பையும் இவர் கட்டமைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த மூன்று தசாப்தங்களாக அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்தார். ஈரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று இயற்கை எய்தியதாக தமிழீழ விடுதலைக் கூட்டணி நண்பர்கள் தெரிவித்தனர்.…
-
- 2 replies
- 1.1k views
-
-
படைநகர்வு முறியடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 7 வீரமறவர்களின் வீரவணக்க நாள். Friday, May 13, 2011, 5:23 மாவீரர்கள் 13.05.95 அன்று மட்டக்களப்பு வாகரைப்பகுதியில் நடைபெற்ற படைநகர்வு முறியடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர் .தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். மேஜர் குகன் சற்குணராசா மட்டக்களப்பு . லெப்டினன் சபேசன் மட்டக்களப்பு . லெப்டினன் சபாபதி அம்பாறை மட்டக்களப்பு . லெப்டினன் நாதன் மட்டக்களப்பு . வீரவேங்கை சுப்பிமணியம் மட்டக்களப்பு . வீரவேங்கை நேசன் மட்டக்களப்பு . வீரவேங்கை லோகிதராசா மட்டக்களப்பு . வீரவேங்கை விக்கின…
-
- 7 replies
- 1.6k views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான மொழி பெயர்ப்பாளராக இருந்த ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினரின் பிரதான மொழி பெயர்ப்பாளராக விளங்கிய வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் (ஜோர்ஜ் மாஸ்டர்) காலமானார். 1936ஆம் ஆண்டு பிறந்த அவர் தபாலதிபராக பணியாற்றியுள்ளார். பின்னர் 1994 ஆம் ஆண்டு காலப் பகுதி தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினருடன் இணைந்து மொழிபெயர்ப்புத் துறையில் செயற்பட்டு வந்திருக்கின்றார். இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச நாடுகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுக்களின் போது பிரதான மொழி பெயர்ப்பாளராகவும் அவர் செயற்பட்டிருக்கின்றார். இற…
-
- 19 replies
- 884 views
- 1 follower
-
-
கள உறுப்பினர் மதனுடைய அம்மப்பா யாழ்பாணத்தில் கடந்த 26 ம் திகதி காலமாகிவிடார். அன்னாரின் ஆத்மா சந்தியடைய பிரார்த்திப்பதுடன், அவரது குடும்பத்தினரிற்கு எமது வருத்ததை தெரிவித்துகொள்கிறோம்.
-
- 36 replies
- 7.1k views
-
-
பழம்பெரும் கவர்ச்சி நடிகை நடிகை ஜோதிலட்சுமி காலமானார். சென்னை: பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி காலமானார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். பெரிய இடத்துப் பெண் தமிழ் திரைப்படத்தில் 1963ல் அறிமுகமானவர் ஜோதிலட்சுமி. 1970களில் கறுப்பு வெள்ளை கால தமிழ் சினிமா தொடங்கி இன்றைய கம்யூட்டர் காலம் வரை சினிமா, சின்னத்திரை என அழகாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஜோதிலட்சுமி. ஜோதிலட்சுமி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஜோதிலட்சுமியின் கவர்ச்சி நடனத்திற்காகவே படங்கள் ஓடி வெற்றி பெற்றுள்ளன. இன்றைக்கும் அதே அழகோடு சீரியல்களில் நடித்து வந்தார். ரத்த புற்று நோயினால் பாதிக்கப்ப…
-
- 5 replies
- 1.1k views
-
-
உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி சிதம்பரநாதன் சாவடைந்தார்! AdminSeptember 4, 2021 உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி சிதம்பரநாதன் நேற்றுக் (03-09-2021) காலமானார். அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நாதஸ்வர வித்துவான் சிதம்பரநாதன், தவிற்காரர் செல்லத்துரையின் மகனாவார். இவர் தமது நாதஸ்வரக் கலையைக் கும்பழாவளை ஆலயத்தில் இளமைப்பருவத்திலேயே ஆரம்பித்தார். இவருடைய தந்தையாரும் கும்பழாவளை ஆலயத்தில் தவிற்கலையில் ஈடுபட்டிருந்தவர். தந்தையாருடன் இணைந்து கலைத்தொண்டு பேணிய இவர் நாதஸ்வரக் கலையில் மிக நாட்டங் கொண்டவராக விளங்கினார். அக் காலத்தில் பிரபல நாதஸ்வரக் கலைஞராகவிருந்த மாவிட்டபுரம் இராசாவிடம் சாஸ்திர ரீதியில் நாதஸ்வரம் பயின்றார். அதன் மேல் இந்தியாவுக்க…
-
- 0 replies
- 320 views
-