துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
எமது அன்புக்குரிய ஜீவாவுக்கு மற்றொரு இடி விழுந்துள்ளது. நேற்று நதியில் குளிக்கும்போது அவரது அண்ணன் நீரில் மூழ்கி இறந்துள்ளார். என்னாலேயே தாங்கமுடியவில்லை. எப்படி தாங்கிப்பானோ எம் தம்பி. என்னவென்று ஆறுதல் சொல்வது உறவுகளே................... (விசுகு அண்ணா எனது சின்ன அண்ணா றைன் நதியில் குளிக்க போகும் போது இறந்திட்டான் அண்ணா. இன்று பொலிஸ் வந்து உடல் கிடைச்சதாக சொல்லிவிட்டார்கள். என்னும் எங்களிடம் தரவில்லை. ஏன் அண்ணா எனக்கு மட்டும் இப்படி நடக்குது???? செத்திடலாம் போல இருக்குது..)
-
- 60 replies
- 3.9k views
- 1 follower
-
-
யாழ் திருநெல்வேலியில் பிறந்து மீசாலையில் எனது மச்சாளைத் திருமணம் செய்து சிவானந்தன்(சிவா,லண்டன்)சிவோதயன்(தவம்,மயாமி அமெரிக்கா)சிவபூரணி(மீனா,சிட்னி அவுஸ்திரேலியா,சிவநாதன்(நாதன்,மயாமி-இலங்கை) மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவர் கடைசியாக சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி இளைப்பாறினார்.
-
- 46 replies
- 3.1k views
- 3 followers
-
-
லஷ்மி நாராயணா, சீதாலஷ்மி என்ற சங்கீதத் தம்பதிகளுக்கு மகனாக வைத்யநாதன் 1942 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இவருக்கு பிரிகன் நாயகி, சுப்பு லஷ்மி, சுப்ரமணியம், ஷங்கர் என்று உடன்பிறந்தோர் இருந்தார்கள். தம் பெற்றோர் மட்டுமன்றி தன் உடன்பிறப்புக்களும் இசையை மேலோங்கக் கற்றுத் தேர்ச்சிபெற்ற சூழலில் தான் வைத்யநாதனின் தொட்டில் தொடங்கிய பிறப்பும் வளர்ப்பும் இருந்தது. முழுப்பதிவையும் வாசிக்க http://kanapraba.blogspot.com/2007/05/blog-post_21.html
-
- 6 replies
- 2.2k views
-
-
எழிலனின், தந்தை... காலமானார். தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரும், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவருமான எழிலனின் தந்தை கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை காலமானார். கிளிநொச்சியில் அவர் நேற்று (திங்கட்கிழமை) காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இறுதிக்கிரியை தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளனர். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் தலைமையில் எழிலன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். எனினும், அவர்கள் தொடர்பான விபரங்கள் வெளிவராத நிலையில், எழிலனின் மனைவியும் வடக்கு மாக…
-
- 0 replies
- 1.6k views
-
-
எழுத்தாளரும் நடிகருமான முல்லை யேசுதாசன் காலமானார் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி) மாரடைப்பினால் இன்று (07) உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாட்டினை சேர்ந்த முதுபெரும் கலைஞரான முல்லை யேசுதாசன், 1990 ஆண்டில் இந்தியாவுக்கு அகதியாக சென்றதுடன், அங்கு திரைப்பட துறையில் ஆர்வம் கொண்டவராக திரைப்படங்கள் உருவாக்கப்படுவதை கற்றுக்கொண்டார். மீண்டும் 1991 ஆம் ஆண்டு தாயகத்துக்கு திரும்பிய அவர் திரைப்படம் எடுக்கும் ஆவலில் இயக்குநர் தாசனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். முதல் முதல் செவ்வரத்தம் பூ, எதிர்காலம் கனவல்ல பேன்ற குறும்படங்களை இயக்கிய இவரின் நடிப்பு திறனை தூண்டுவதற்கு காரணமாக இருந்தது சேர…
-
- 15 replies
- 1.7k views
-
-
எழுத்தாளர் அந்தனி ஜீவா காலமானர். ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
-
- 5 replies
- 509 views
-
-
எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் மறைவு! 'டொராண்டோ'வில் எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் மறைந்த தகவலினை எழுத்தாளர்கள் கற்சுறா மற்றும் பா.அ.ஜயகரன் ஆகியோர் பகிர்ந்திருந்தனர். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் காத்திரமாகத் தன்னை நிலைநிறுத்திய எழுத்தாளர் என்.கே.ரகுநாதன். என்.கே.ரகுநாதன் என்றதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது அவரது புகழ்பெற்ற சிறுகதையான 'நிலவிலே பேசுவோம்' சிறுகதைதான். இத்தலைப்பிலேயே அவரது சிறுகதைத்தொகுதி 1962இல் தமிழகத்தில் பாரி பதிப்பகத்தின் விற்பனை உரிமையுடன் வெளியாகியுள்ளது. இலங்கையில் பாரதி புத்தகசாலையில் நூல் கிடைக்குமென்ற அறிவிப்புடன் வெளியான தொகுப்பு அது. எப்பதிப்பகம் வெளியிட்டது என்பதில் தெளிவான விபரமில்லை. இத்தொகுப்பிலிருந்து என்.கே.ரகுநாதனின் 'நிலவிலே பேசுவோ…
-
- 5 replies
- 1.8k views
-
-
எழுத்தாளர் கோவை ஞானி காலமானார் கா.சு.வேலாயுதன் மார்க்சிய அறிஞரும் எழுத்தாளருமான கோவை ஞானி இன்று காலமானார். அவருக்கு வயது 86. கோவை, துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு, விஆர்வி நகரில் வசித்துவந்த கோவை ஞானிக்கு இன்று மதியம் 12.45 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அச்சமயம் அவர் மகன் பாரிவள்ளல் அருகில் இருந்துள்ளார். ‘மார்க்சிய அழகியல்’, ‘கடவுள் இன்னும் ஏன் சாகவில்லை?' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களை கோவை ஞானி எழுதியுள்ளார். ‘நிகழ்’, ‘தமிழ்நேயம்’ உள்ளிட்ட சிற்றிதழ்களையும் நடத்தினார். கோவை ஞானியின் இயற்பெயர் கி.பழனிசாமி ஆகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்றவர். கோவைய…
-
- 2 replies
- 717 views
-
-
எழுத்தாளர் செ. கணேசலிங்கன் காலமானார் டிசம்பர் 4, 2021 யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டு, தற்போது சென்னை வடபழனியில் உள்ள தனது மகளின் இல்லத்தில் வசித்துவந்த தோழர் கணேசலிங்கன் இன்று (04.12.2021, சனிக்கிழமை) காலை காலமாகினார். இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையாக விளங்கிய எழுத்தாளர் செ.கணேசலிங்கன், 40க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதை, சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தோழர் கணேசலிங்கன் அவர்களின் பூதவுடல் இன்று (04.12.2021, சனிக்கிழமை) பிற்பகல் 5.00 மணியளவில் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. …
-
- 0 replies
- 961 views
-
-
எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்! புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், இன்று காலமானார். எழுத்தாளர் பிரபஞ்சன் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதியன்று புதுச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பெற்றவர் இவர். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர், அதன் பின்னர் பத்திரிகையுலகில் நுழைந்தார். தமிழில் உள்ள பிரபலப் பத்திரிகைகளில் பணியாற்றினார். இவரது முதல் சிறுகதை 1961ஆம் ஆண்டு வெளியானது. அன்று முதல் தொடர்ந்து படைப்புலகில் தொடர்ந்து இயங்கி வந்தார் பிரபஞ்சன். சிறுகதை, நாவல்கள், கட்டுரைகள் என்று பல தளங்களில் இயங்கி வந்தார். இதனால் பத்திரிகையுலகை விட்டு விலகி எழுத்துலகில் பயண…
-
- 10 replies
- 1.1k views
-
-
எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை காலமானார். எழுத்தாளர் ஸ்ரீவேணுகோபாலன் என்ற புஷ்பா தங்கதுரை இன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது (82)அவர் உடல்நலக் குறைவால், கடந்த இரண்டு வாரங்களாக ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு வென்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இவர் காலமானார். திருமணமாகாததால் இவர் தனது சகோதரி வீட்டில் வாழ்ந்து வந்தார். 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' மற்றும் 'நந்தா என் நிலா' போன்ற இவரின் குறிப்பிடத்தகுந்த படைப்புகள் திரைப் படங்களாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றன. -தினமணி-
-
- 19 replies
- 2k views
-
-
சென்னை: எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான ரா.கி.ரங்கராஜன் சென்னையில் நேற்று காலமானார். வரலாற்றுப் புதினங்கள், மொழி பெயர்ப்புகள், கிரைம் கதைகள், கட்டுரைகள் என பல படைப்புகளைப் படைத்தவர் ரா.கி.ரங்கராஜன். 1947 முதல் சுமார் 42 ஆண்டுகள் குமுதம் இதழில் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தார். குமுதம் இதழில் அரசு - என்ற பெயரில் கேள்வி பதில் எழுதியவர்களில் 'ர' என்ற நடு எழுத்துக்குச் சொந்தக்காரர் ரா.கி.ரங்கராஜன். (மற்ற இருவர் அண்ணாமலை, ஜ.ரா.சுந்தரேசன் ஆகியோர்). சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, வினோத் என்ற புனைபெயர்களில் பல கட்டுரைகளை எழுதியவர். 1927ல் கும்பகோணத்தில் ரங்கராஜன் பிறந்தார். சக்தி, காலச்சக்கரம், கல்கண்டு, குமுதம் என பத்திரிகை அனுபவம் பெற்றவர். இவருட…
-
- 7 replies
- 798 views
-
-
-
- 10 replies
- 1.5k views
-
-
எழுத்தே வாழ்வு: ராஜம் கிருஷ்ணன் t ராஜம் கிருஷ்ணன் தமிழ் இலக்கிய உலகில் ஒரு முக்கியமான ஆளுமை. 1925இல் முசிறியில் மத்தியதரக் குடும்பத்தில் பிறந்த இவரது பூர்வீகம் நெல்லை மாவட்டம். உயர் கல்வியும், வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு இவருக்கு அக்கால நியதிப்படி இளம் வயதில் திருமணமாயிற்று. மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தின் அழுத்தத்தில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த காலத்தில் படைப்பாற்றல் மட்டுமே அவருக்குப் பற்றுக்கோலாக இருந்தது. இரவு நேரத்தில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சமையலறையைக் கழுவித் தள்ளிவிட்டு அதன் ஈரம் காயாத தரையில் உட்கார்ந்துகொண்டு எழுதுவார். எழுதுவதற்கு காகிதம் வேண்டுமே? கடையில் பெரிய தாள்களில் வழங்கப்பட்ட ரசீதுகளின் மறுபக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.…
-
- 1 reply
- 1.4k views
-
-
எஸ். சுகிர்தராஜன் சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் வீரகேச வார வெளியீடுகள், மெட்ரோ நியூஸ் ஆகியவற்றின் பிராந்திய பத்திகையாளரான எஸ். சுகிர்தராஜன் (எஸ். எஸ். ஆர்.) சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. திருகோணமலையில் நடைபெற்ற பல செய்திகளை ஆதாரங்களுடன் வெளியிட்ட இவரை இனந்தெரியாத சிலர் சுட்டுக் கொலை செய்தனர். நான்கு வருடங்கள் கழிந்தும் கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. மட்டக்களப்பு குருமன்வெளியைப் பிறப்பிடமாகக் கொண்ட சுகிர்தராஜன் சிறிது காலம் அளவையியல் ஆசியராகக் கடமையாற்றினார். இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் கலைப்பூ கதிர் கழகத்தை உருவாக்கி காலாண்டு இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டு இலங்க…
-
- 1 reply
- 737 views
-
-
இயல்பு வெளிப்பாடுகளை வைத்து மனிதர்களை அளவிடுவது தவறு - செல்வநாயகம் ரவிசாந்த் 16.04.2007 ஆம் ஆண்டு படு கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரும், கவிஞரும், இலக்கிய வாதியுமான ‘எஸ்போஸ்’ எனப்படும் சந்திரபோஸ் சுதாகரின் நினைவுப் பகிர்வு நிகழ்வு மறுபாதிக் குழுமத்தின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை 16.04.2016 பிற்பகல் -4 மணிக்கு ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள புதிய உயர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. விமர்சகர் சி.ரமேஸ் நிகழ்வை முன்னிலைப்படுத்தினார். கவிஞர் கருணாகரன், ஆசிரியர் பெருமாள் கணேசன், ஆசிரியர் ப. தயாளன், எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், சமூக ஆய்வாளர் தெ . மதுசூதனன், கவிஞர் தானா விஷ்ணு ஆகியோர் எஸ்போஸுடனான தமது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அதனைத…
-
- 0 replies
- 921 views
-
-
ஏ.இ. மனோகரன் காலமானார் சுராங்கனி புகழ், பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.இ மனோகரன் சென்னையிலுள்ள திருவான்மையூர், கந்தன்சாவடியில் இன்றிரவு 7.20 மணியளவில் இயற்கையெய்தினார். இலங்கையில் பொப்பிசைத்துறையில் பிரபல்யமான பாடகராகத் திகழ்ந்த இவர், இலங்கையின் தமிழ் பொப்பிசையை உலக அளவில் எடுத்துச் சென்ற பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார். இவர் சுராங்கனி சுராங்கனி மாலு கெனாவா என்ற பாடலை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், சிங்களம், மலே, போர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட 7 மொழிகளில் பாடியுள்ளார். பொப்பிசைத்துறை மட்டுமல்லாது சினிமாத்துறையிலும் கால்பதித்திருந்தார். அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் புதன்கிழமை சென்னையில் நடைபெறும். http://www.tamilmirror.lk/செய்திகள்/ஏ-…
-
- 28 replies
- 3k views
-
-
றூபன் என்றழைக்கப்படுகின்ற 18 வயயேதான துவாரகன் பாலசுப்பிரமணியம் இன்று மாலை மாலிசந்தி சின்னத்தம்பி வித்தியாலத்துக்கு அருகில் வைத்து படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.ச
-
- 16 replies
- 3.3k views
-
-
கனடா ஒட்டாவா நகரில் ஏற்பட்ட வாகன விபத்தில் தேசிய செயல்பாட்டாளர் சுரேஸ் பலி. இன்று மாலை (May 15, 2020, 5:30 PM) கனடா ஒட்டாவா மாநகருக்கு அருகில், ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சிக்கு தெற்கே (Smiths Falls) மூன்று வாகனங்கள் மோதியதில், அதில் ஒரு வாகனத்தை செலுத்தி சென்ற சுரேஷ் தம்பிராஜா என்ற தமிழர் கொல்லப்பட்டுள்ளார். மற்றைய வாகன சாரதி ஒருவர் சிறு காயம் அடைந்துள்ளார். போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டாவா சுரேஷ் என எல்லோராலும் அறியப்பட்ட 5 பிள்ளைகளின் தந்தையான சுரேஷ் அவர்கள் புத்தூரை பிறப்பிடமாகவும், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒட்டாவாவில் வசித்தும் வருகிறவருமாவார். ஓட்டவா நகரில் உள்ள மக்களின் தொடர்புகளை பேணுதலும் பல அரசியல் வேலை திட்டங்களயும் தமிழ்த் தேசியத்த…
-
- 16 replies
- 2.4k views
-
-
ஒளிக்கலை போராளி லெப்.கேணல் செந்தோழன் வீரச்சாவு; இசைப்பாடகர் இசையரசன் சாவு [ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2009, 12:29.33 PM GMT +05:30 ] தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்த லெப்.கேணல் செந்தோழன் வீரச்சாவடைந்துள்ளார். ஒளிப்படக் கலைப் போராளியும், பாடலாசிரியருமான லெப்.கேணல் செந்தோழன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்தவர். அத்துடன் தமிழீழ எழுச்சி இசைப் பாடல்களையும் எழுதியுள்ளார். ஒளிக்கலையிலும் இசைப்பாடல்களிலும் போர்க்கலையிலும் திறப்பட தன்பணியை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு லெப்.கேணல் செந்தோழன் வழங்கியுள்ளார். இதேவேளை, தமிழீழ இசைப் பாடகர் இசையரசன் சாவைத் தழுவியுள்ளார். அ…
-
- 6 replies
- 1.5k views
-
-
ஓராண்டாகியும் மாறாத உன் நினைவுடன் வீரவணக்கம்
-
- 13 replies
- 4.5k views
-
-
ஓவியரும், ஒளிப்படக் கலைஞருமான கருணா வின்சென்ட் காலமானார்…. February 23, 2019 2017 தை 14 ,15 இல் கனடாவில் இடம்பெற்ற, கருணா வின்சென்ட்டின் கண்காட்சியை முன்னிட்டு வெளிந்த கட்டுரையை இங்கு நினைவு கூர்கிறோம்… கருணா வின்சென்ட் :- ஈழத்து ஓவிய மரபின் தொடர்ச்சி. – எஸ் எம் வரதராஜன் -நியூசீலாந்து Jan 13, 2017 @ 13:52 Edit கலைகளில் அவள் ஓவியம் என்பது பிரபலமான திரைப்படப் பாடல் வரி. ஓவியக் கலைக்கு கவிஞர் கண்ணதாசன் கொடுத்த சிறப்பு அது. மனிதக் கண்கள் பார்க்கத் தொடங்கும்போதே ஓவியமும் இணைந்து விடுகிறது. அவள்தான் எனக்கு முதல் ஓவியம் என்பதுதான் கவிஞரின் கற்பனையாக இருக்கலாம். பொதுவாகவே கலைகளுக்கு இதுதானென்று ஒரு வரலாற்றைத் த…
-
- 4 replies
- 3.3k views
-
-
பிரபல ஓவிய மேதையும், விடுதலைப்புலிகளின் இலச்சினையை வரைந்தளித்து தலைவர் பிரபாகரன் அவர்களின் நன்மதிப்பும் நட்பையும் தேடிக் கொண்ட திரு.நடராஜா அவர்களின் மறைவு குறித்த கண்ணீர் அஞ்சலி கண்ணெடுத்துப் பார்த்தவுடன் கலைக்குள்ளே கலைஞனாகி காண்கின்ற காட்சியெல்லாம் கவர்ந்திழுக்கும் வகையினிலே கையிலே தூரிகையை கனிவுடனே தானெடுத்து உயிரான ஓவியத்தை உருகாட்டி வைத்தவரே வாழைகீழ் வாழையென வளர்கின்ற கலைஞர்க் கெல்லாம் மழைகாணும் பயிரினம் போல் ஓவியரே நீரெங்கே! கலைஞனாய் கரையிலா நிறைவு கண்டு விலையிலா வித்தகனாய் விளங்கியதை ஊரறியும் பலநிறங்கள் நீர் சேர்த்து பலவகையாய் ஓவியங்கள் உலகுவக்கும் உத்தமரும் ஊர்சார்ந்த அறிஞர்களும் நுட்பங்கள் ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
கடந்த நான்கு நாட்களாக யாழ்குடாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படையினருக்கும் இடம்பெற்ற மோதல்களில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் பெயர் விபரங்கள் விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விரிப்பு வருமாறு... 11.08.2006 அன்று சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதலின்போது வீரச்சாவடைந்தோர் 01. வீரவேங்கை அருங்கதிர் மதனி சிவப்பிரகாசம் யோகேஸ்வரி யாழ். மாவட்டம். 02. வீரவேங்கை ஆர்த்தி பொன்னுத்துரை சரஸ்வதி யாழ். மாவட்டம் 03. வீரவேங்கை வாணி மார்க்கண்டு சாந்தமலர் விடத்தல்தீவு, பள்ளமடு, மன்னார். 04 வீரவேங்கை கவிமதி கிண்ணியா றெங்கநாதன் தேவிகா. முரசுமேட்டை கிளிநொச்சி. 05 வீரவேங்கை ஆனந்த சுரவி சந்…
-
- 1 reply
- 1.5k views
-
-
என் உடன்பிறவா சகோதரனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!
-
- 1 reply
- 1.1k views
-