துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
மிருனாள் சென் மறைவு: இந்திய சினிமாவின் பேரிழப்பு! நவீன சினிமாவின் அடையாளமாகக் கருதப்படும் திரைப்பட ஆளுமை மிருனாள் சென் இன்று காலமானார். சத்யஜித்ரே, ரித்விக் கடாக் என இந்திய சினிமாவுக்கென தனித்த அடையாளமும், உலக சினிமாவில் இந்திய சினிமாவுக்கான இடத்தையும் பெற்றுக்கொடுத்த பொற்காலத்தில் அவர்களுடன் இந்திய சினிமா பல உயரங்களை எட்டிப்பிடிக்க காரண்மாக இருந்தவர் மிருனாள் சென். நிலம் சார்ந்த கதைகளை இயக்குவதாலேயே, மிருனாள் சென்னின் படங்களில் அந்தந்த ஊர்கள் தனித்த இடத்தைப் பிடிக்கும். கொல்கத்தாவிலேயே மிருனாளின் கதைகள் நிகழ்வதால், கொல்கத்தா அவரது ஒவ்வொரு படத்திலும் வரும் பெயரிடப்படாத கேரக்டராகவே இருக்கும். அப்படி, அவர் நேசித்த கொல்கத்தாவிலேயே அவரது உயிர் பிரிந்திருப்பத…
-
- 1 reply
- 1k views
-
-
எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்! புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், இன்று காலமானார். எழுத்தாளர் பிரபஞ்சன் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதியன்று புதுச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பெற்றவர் இவர். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர், அதன் பின்னர் பத்திரிகையுலகில் நுழைந்தார். தமிழில் உள்ள பிரபலப் பத்திரிகைகளில் பணியாற்றினார். இவரது முதல் சிறுகதை 1961ஆம் ஆண்டு வெளியானது. அன்று முதல் தொடர்ந்து படைப்புலகில் தொடர்ந்து இயங்கி வந்தார் பிரபஞ்சன். சிறுகதை, நாவல்கள், கட்டுரைகள் என்று பல தளங்களில் இயங்கி வந்தார். இதனால் பத்திரிகையுலகை விட்டு விலகி எழுத்துலகில் பயண…
-
- 10 replies
- 1.1k views
-
-
தமிழரின் மரபு கலை சிலம்பாட்டம், உடுக்கு பயனை, போன்ற பாரம்பரிய கலைகளின் குருவாக இருந்துகொண்டு பல மாணாக்கர்கள் யாழ்மண்ணிற்கு அளித்த மண்ணின் மைந்தனும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தன்னிகரற்ற போராளி கடற்படைதளபதி கேர்ணல் சூசை அவர்களின் அண்ணாவுமாகிய சிவலிங்கம் என்றழைக்கப்படும் கலாபூசணம் தில்லையம்பலம் தவராசா இன்று காலை 2.30மணியளவில் இவ்வுலகைவிட்டு சென்றுள்ளார். இவருக்கு எனது கண்ணீர் கலந்த அனுதாபத்தை வெளிப்படுத்துகின்றேன் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
-
- 16 replies
- 1.5k views
-
-
மூத்த எழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சென்னையில் காலமானார்! மூத்த எழுத்தியல் தொல்லியல் அறிஞர், தமிழறிஞர் ஐராவதம் மகாதேவன் (88) இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியரான ஐராவதம் மகாதேவன் 1930ல் திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் பிறந்தார். 1987-1991 வரை இவர் தினமணி ஆசிரியராக இருந்துள்ளார்.இவர் சிந்தி எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள் தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். கல்வெட்டு எழுத்தியல் துறையில் மிக முக்கியமான அறிஞராக பார்க்கப்பட்டார். கல்வெட்டு துறையில் தமிழ் தொடர்பாக இவர் செய்த ஆராய்ச்சி காரணமாக இவருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்கள் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர், அதில் ஆய்ந்த…
-
- 0 replies
- 356 views
-
-
எழிலனின், தந்தை... காலமானார். தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரும், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவருமான எழிலனின் தந்தை கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை காலமானார். கிளிநொச்சியில் அவர் நேற்று (திங்கட்கிழமை) காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இறுதிக்கிரியை தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளனர். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் தலைமையில் எழிலன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். எனினும், அவர்கள் தொடர்பான விபரங்கள் வெளிவராத நிலையில், எழிலனின் மனைவியும் வடக்கு மாக…
-
- 0 replies
- 1.6k views
-
-
அஞ்சலிக்குறிப்பு: யுகமாயினி சித்தன்!… முருகபூபதி. கலை, இலக்கியத்தில் பல்துறை ஆற்றல் மிக்க படைப்பாளி யுகமாயினி சித்தன் தமிழக – இலங்கை – புகலிட எழுத்தாளர்களின் உறவுப்பாலமாக திகழ்ந்தவரும் விடைபெற்றார் முருகபூபதி. “பல மொழிகளிலும் ஒருவரது படைப்பு மொழிபெயர்க்கப்பட்டு நூலுருவில் வெளியாவதும் ஒரு வகையில் படைப்பாளிக்கு கிட்டும் அங்கீகாரம்.” எனச்சொன்னார் நாமக்கல் கு. சின்னப்பபாரதி. என்னருகில் அமர்ந்திருந்த யுகமாயினி சித்தன் உடனே அதனை மறுத்துரைத்தார். “மொழிபெயர்ப்பில் ஒரு நாவல் வெளியானால் அதனை இலக்கிய அங்கீகாரம் என எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரு நாவல் சர்வதேச தரத்தில் எழுதப்பட்டால் மாத்திரமே அதற்கு அங்கீகாரம் தரமுடியும். ஒரு நாவல் இந்திய மொழிகளிலும…
-
- 1 reply
- 1.2k views
-
-
இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமாகினார்… October 15, 2018 எழுத்தாளர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் இன்று காலை காலமாகினார். உள்ளம், வெளிச்சம், ஆதாரம், நமது ஈழநாடு, ஈழநாடு, தளவாசல் ஆகியவற்றின் ஆசிரிய பீடங்களில் இருந்தவர். முள்முடி மன்னர்கள், இருள் இரவில் அல்ல, மருத்தவர்களின் மரணம், என்றாவது ஒருநாள், என்னுடையதும் அம்மாவினுடையதும் உள்பட பல நூல்களை எழுதியவர். நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக எழுத்திலும் இலக்கியச் செயற்பாடுகளிலும் இயங்கி வந்தவர். தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இலக்கியம், எழுத்து, பிற செயற்பாடுகளின் வழியாகப் பங்களிப்புகளைச் செய்து வந்தவர்.. நிர்வாக உத்தியோகத்தராக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றியவர…
-
- 8 replies
- 1.8k views
-
-
யாழ் அரங்கியல் கலைஞர் ஜி. பி. பேர்மினஸ் காலமானார் : October 9, 2018 திருமறை கலாமன்றத்தின் மூத்த கலைஞரும் ஈழத்தின் அரங்க புலத்தில் அரைநூற்றாண்டுக்கு மேல் பணியாற்றியவருமான ஜி. பி. பேர்மினஸ் இன்று காலமானார். அமரர் ஜி.பி.பேர்மினஸ் அறுபது ஆண்டுகளுக்கு மேல் அரங்கப் பணியாற்றியவர். சிறந்த நடிகர், நெறியாளர், தயாரிப்பாளர், வேட உடை விதானிப்பாளர், அரங்கப் பயிற்றுனர், திருமறை கலாமன்றத்தின் தாபக உறுப்பினர் என பன்முகப் பணிகளைப் புரிந்த இவர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் திருமறை கலாமன்றத்தில் கலைச்சேவை ஆற்றியுள்ளார். அறுபது நாடகங்களுக்கு மேல் நடித்ததுடன் நாடக அரங்ககல்லூரி உட்பட பல அரங்கநிறுவனஙகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பல நாடகங்களை இயக்கியுள்ளார். திருப்பாடு…
-
- 0 replies
- 441 views
-
-
"மேகம் கருக்கையிலே.." புகழ் காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார் சென்னை: பழம் பெரும் நடிகர் "வெள்ளை சுப்பையா" உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. திரையில் பார்க்கும் காமெடி நடிகர்கள் வேறு, சொந்த வாழ்க்கையில் அவர்களின் நிலை வேறு என்பதற்கு அடுத்த உதாரணம்தான் வெள்ளை சுப்பையாவின் மரணமும். பெரும்பாலும் திரையில் பார்க்கும் காமெடி நடிகர்களின் வாழ்க்கை வறுமை கலந்த கண்ணீருடன்தான் முடிவு பெறுகிறது. வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் சுப்பையா. வெள்ளை சுப்பையா நடிக்க வந்த புதிதில் சுப்பையா என்ற பெயரில் நிறைய பேர் இருந்தார்கள். வெள்ளை சுப்பையா, எஸ்.வி.சுப்பைய…
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ் கள கனடா வாழ் உறவான சபேஷ் இனது தந்தையார் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் காலமானார் எனும் செய்தியை மிகுந்த துயரத்துடன் பகிர்கின்றேன் இங்கு. அன்னாரின் உடல் யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவுக்கு விரைவில் எடுத்து வரப்பட்டடு அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிய முடிகின்றது. இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்களை தகவல்கள் கிடைத்தவுடன் அறியத் தருகின்றேன். தந்தையை இழந்து வாடும் சபேஷ் இற்கும் அவர் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்கள்.
-
- 41 replies
- 5.8k views
- 1 follower
-
-
யாழ் இந்து கல்லூரியின் முன்னைநாள் அதிபர் திரு சரவணமுத்து பொன்னம்பலம் காலமானார். Mr.Saravanamuthu Ponnampalam, Retired Principal and Sydney OBA Patron, has passed away in Sydney Posted on: 23/07/2018 (Monday) Mr.Saravanamuthu Ponnampalam, the Retired Principal and the Patron of Sydney OBA, has passed away in Sydney on Monday, the 23rd July 2018, at around 8.30 PM at his residence in Westmead. He leaves behind his loving wife Dr.Gunapoopathy, son Dr.Visakan, daughter in law Komathy Visakan, and grand children Seyon, Yuvan, and Tharini. His funeral details will be notified later. …
-
- 3 replies
- 661 views
-
-
http://www.kallarai.com/ta/obituary-20180207217471.html?ref=lankasrinews நல்லதொரு நண்பன் குடும்ப நண்பன் அயலவன் எல்லோராலும் யோகா என்று அழைக்ப்படும் யோகலிங்கம் என்பவர் நேற்று இரவு 8 மணியளவில் காரில் மோதுண்டு அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.மேலதிக விபரங்கள் வெகு விரைவில். A 64-year-old man was trying to cross the Little Neck Pkwy at 83rd Ave. when a black car hit and killed him in Bellerose, Queens. (GOOGLE MAPS STREET VIEW) A man was struck and killed by a car as he tried to cross a busy Queens highway Friday night, cops said. The 64-year-old victim was walking across Little Neck Pkwy. at 83rd Ave. in Bellerose when…
-
- 20 replies
- 2.5k views
-
-
யாழ்.கள உறவான... poet என்ற பெயரில் உள்ள, வ. ஐ. ச. ஜெயபாலன் அவர்களின் சகோதரி, அண்மையில் காலமாகி விட்டதாக அறிந்தோம். அவரின் பிரிவால் துயருறும் ஜெயபாலன் அவர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
-
- 24 replies
- 3.5k views
-
-
ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் (ஆங்கிலப் பேராசிரியர்- எதியோப்பிய பல்கலைக்கழகம், முன்னாள் விரிவுரையாளர்- கிழக்கு பல்கலைக்கழகம்) தோற்றம் : 16 டிசெம்பர் 1967 — மறைவு : 10 சனவரி 2018 யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், எதியோப்பியா வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று எதியோப்பியாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம்(ஆசிரியர்) சிவயோகம்(அதிபர்) தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற மரியசந்தானம்(அரச உத்தியோகத்தர்), பூமணிதேவி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும், கலாநிதி நதிரா(கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஸ்ட விர…
-
- 42 replies
- 4.3k views
-
-
யாழிணைய கருத்துக்களப் பொறுப்பாளர் நிழலியின் மாமியார் காலமானார். நிழலியினதும் அவரது குடும்பத்தாரினதும் துயரில் யாழ் நாமும் பங்குகொள்கிறோம். மேலதிக விபரங்கள் பின்பு தரப்படும்.
-
- 53 replies
- 7.2k views
- 1 follower
-
-
எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் மறைவு! 'டொராண்டோ'வில் எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் மறைந்த தகவலினை எழுத்தாளர்கள் கற்சுறா மற்றும் பா.அ.ஜயகரன் ஆகியோர் பகிர்ந்திருந்தனர். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் காத்திரமாகத் தன்னை நிலைநிறுத்திய எழுத்தாளர் என்.கே.ரகுநாதன். என்.கே.ரகுநாதன் என்றதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது அவரது புகழ்பெற்ற சிறுகதையான 'நிலவிலே பேசுவோம்' சிறுகதைதான். இத்தலைப்பிலேயே அவரது சிறுகதைத்தொகுதி 1962இல் தமிழகத்தில் பாரி பதிப்பகத்தின் விற்பனை உரிமையுடன் வெளியாகியுள்ளது. இலங்கையில் பாரதி புத்தகசாலையில் நூல் கிடைக்குமென்ற அறிவிப்புடன் வெளியான தொகுப்பு அது. எப்பதிப்பகம் வெளியிட்டது என்பதில் தெளிவான விபரமில்லை. இத்தொகுப்பிலிருந்து என்.கே.ரகுநாதனின் 'நிலவிலே பேசுவோ…
-
- 5 replies
- 1.8k views
-
-
தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக உறவுகளுக்கு கண்ணீர்அஞ்சலி கண்ணீர் அஞ்சலிகள்..
-
- 22 replies
- 2.2k views
-
-
பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார் பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். #Balakumaran சென்னை: இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். பிரபல மாத, வார பத்திரிக்கைகளையும், சிறுகதைகளையும் எழுதி மக்களிடையே நன்கு பரிட்சையமான அவர், கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்…
-
- 21 replies
- 5.1k views
-
-
பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் காலமானார் பிரபல பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் ஞாயிறன்று காலமானார். இவருக்கு வயது 81. உடல் நலக்குறைவு காரணமாக அவர் சென்னையில் இன்று காலமானார். பல மறக்க முடியாத திரைக்காவியங்களை அளித்தவர் சி.வி.ராஜேந்திரன். கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, ராஜா ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். மதுராந்தகம் அருகே சித்தமுர் இவரது சொந்த ஊர். இவர் மனைவி பெயர் ஜானகி. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் அமெரிக்காவில் உள்ளதால் இறுதிச் சடங்கு இவர் வந்தவுடன் நடைபெறும் என்று தெரிகிறது. சி.வி.ராஜேந்திரன் படங்களில் வசனம் எழுதிய சித்ராலயா கோபு கூறும…
-
- 3 replies
- 612 views
-
-
அருள்மொழி அரசி வித்துவான் வசந்தா வைத்தியநாதன் காலமானார். ஈழத்தின் பிரபல சமய இலக்கியச்சொற்பொழிவாளரும் மூத்த சைவத்தமிழறிஞருமான திருமதி வசந்தா வைத்தியநாதன் தனது 81 ஆவது வயதில் நேற்று (13.03.2018) காலை காலமானார். கொழும்பு விவேகானந்த சபை, அகில இலங்கைக் கம்பன் கழகம் போன்ற அமைப்புகளின் ஸ்தாபக உறுப்பினரான அம்மையார் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசகராகவும் செயற்பட்டார். ஈழத்திலும் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் ஆயிரக்கணக்கான ஆலய மற்றும் மாநாட்டு சொற்பொழிவுகளை ஆற்றி இம்மண்ணிற்கு பெருமைசேர்த்தவராவார். ஆலயத் திருவிழாக்களை நேர்முக வர்ணனை செய்வதில் தனித்துவம் வாய்ந்தவராகச் செயற்பட்டார். தமிழ்நாடு மயிலாடு…
-
- 0 replies
- 521 views
-
-
தொலைக்காட்சி வரலாற்றில் பல முதலாவதுகளைக் கண்ட கமலா தம்பிராஜா மறைவு! *இலங்கையின் முதலாவது தொலைக்காட்சித் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் *இலங்கையின் முதலாவது பெண் தொலைக்காட்சித் தமிழ்ச் செய்திகள் பெண் வாசிப்பாளர் *இலங்கையின் முதலாவது – தமிழ்த் தொலைக்காடசி நிகழ்ச்சிகள் -பெண் தயாரிப்பாளர் *இலங்கையின் முதலாவது தமிழ் சிறுவர் நிகழ்ச்சித் தொலைக்காட்சித் தயாரிப்பாளர் *முதலாவது : திரைப்படத்தில் நடித்த மின் ஊடகப் பெண் ஊடகவியலாளர் *முதலாவது: அச்சு ஊடகத்திலிருந்து மின் ஊடகத்தில் தயாரிப்பாளராக வந்த பெண் ஊடகர் *முதலாவது: அச்சு ஊடகத்திலிருந்து மின் ஊடகத்திற்…
-
- 3 replies
- 830 views
-
-
ஈழக் கவிஞர் செழியன் விடைபெற்றார்! ஈழத்தின் எழுத்தாளர், கவிஞர் செழியன், விடைபெற்றார். புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த கவிஞர் செழியன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கும் புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கும் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கும் வளம் சேர்த்த படைப்பாளியாக இவர் கருதப்படுகின்றார். ‘ஒரு போராளியின் நாட் குறிப்பு‘, (அனுபவக் கட்டுரைகள்) , ‘வானத்தைப் பிளந்த கதை‘, ‘குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள் (கவிதைத்தொகுப்பு), ‘ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை‘ (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார். தமிழ் விடுதலைப்போராட்ட அமைப்புகளிடையே வெடித்த முரண்க…
-
- 8 replies
- 1.4k views
-
-
ஏ.இ. மனோகரன் காலமானார் சுராங்கனி புகழ், பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.இ மனோகரன் சென்னையிலுள்ள திருவான்மையூர், கந்தன்சாவடியில் இன்றிரவு 7.20 மணியளவில் இயற்கையெய்தினார். இலங்கையில் பொப்பிசைத்துறையில் பிரபல்யமான பாடகராகத் திகழ்ந்த இவர், இலங்கையின் தமிழ் பொப்பிசையை உலக அளவில் எடுத்துச் சென்ற பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார். இவர் சுராங்கனி சுராங்கனி மாலு கெனாவா என்ற பாடலை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், சிங்களம், மலே, போர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட 7 மொழிகளில் பாடியுள்ளார். பொப்பிசைத்துறை மட்டுமல்லாது சினிமாத்துறையிலும் கால்பதித்திருந்தார். அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் புதன்கிழமை சென்னையில் நடைபெறும். http://www.tamilmirror.lk/செய்திகள்/ஏ-…
-
- 28 replies
- 3k views
-
-
யாழ்கள உறவான அர்ஜுனின் தந்தையார் நவரட்ணம் அவர்கள் காலமாகி விட்டார். அன்னாரை இழந்து பிரிவால் வாடும் அர்ஜுனுக்கும் அவர் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் .
-
- 45 replies
- 4.7k views
- 1 follower
-
-
ஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் காலமானார்! ஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் காலமானார். ஈழத்தின் திருகோணமலையைச் சேர்ந்த ரீ. பத்மநாதன் இலங்கை வானொலி மெல்லிசைப் படால்கள் மூலம் கவனத்தை ஈர்த்தவர். 1964ஆம் ஆண்டில் திருகோணமலை இசைக்கழகம் என்ற இசைக்குழுவை நிறுவிய இவர் ஈழக் கலைஞர் ஏ. ரகுநாதன் அவர்கள் தயாரித்து நடித்த நிர்மலா திரைப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சில்லையூர் செல்வராசான் எழுதிய “கண்மணி ஆடவா ..“ என்ற பாடல் (https://www.youtube.com/watch?v=9MmnlgjcI-0) மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பாராட்டைப் பெற்றது. இதேவேளை தென்றலும் புயலும் என்ற…
-
- 0 replies
- 642 views
-