எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
சிறீலங்கா இராணுவம் தனது இறுதிஅழிப்பு யுத்தத்தைத் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக வன்னியிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. முடிந்தால் உங்கள் உங்கள் உறவுகளைக் காக்க ஏதாவது செய்யுங்கள்.
-
- 3 replies
- 3.7k views
-
-
வன்னியில் சிறீலங்கா படையினர் தமது முழுப்படைக்கல சூட்டாதரவைப் பயன்படுத்தி இன்று காலை முதல் மிகக்கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். தொடர் எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு வந்த படையினர், இன்று காலை முதல் தமது முழுமையான படைக்கல சக்தியைப் பயன்படுத்தி பாதுகாப்பு வலயம் நோக்கி கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். ஆட்டிலறி எறிகணை, பல்குழல் எறிகணை, பீரங்கித் தாக்குதல், கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள், துப்பாக்கித் தாக்குதல் என்பவற்றின் மூலம் இந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், வெள்ளை பொசுபரஸ் (phழளிhழசழரள) குண்டுகளையும் பாவித்து, மக்களை பெரும் எண்ணிக்கையில் அழிப்பதற்கு படையினர் திட்டமிட்டிருப்பதாக, படைப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்…
-
- 3 replies
- 2.4k views
-
-
புலம்பெயர் தமிழர்கள், அமெரிக்க வாழ் தமிழர்கள் என பலரும் இன்று ஒரு வித்தியாசமான, ஆனால் இலங்கைக்கு பெரும் வலியைத் தருகிற ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதுதான் இலங்கைத் தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டம். அமெரிக்காவின் முக்கிய நகரங்களான வாஷிங்டன் டிசி, நியூயார்க், அட்லாண்டா, மியாமி, சான்பிரான்ஸிஸ்கோ, டல்லாஸ், பிரின்ஸ்டன், நியூஜெர்ஸி, சிகாகோ, ரேலி, சார்ல்ஸ்டன், கொலம்பஸ், ஒஹியோ மற்றும் பாஸ்டனில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த போராட்டம் இலங்கையை அதிர வைத்துள்ளது. இலங்கையில் ஆடைகள் தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்கும் முதன்மை நிறுவனங்களான விக்டோரியா சீக்ரட் (Victoria's Secret) மற்றும் GAP ஆகிய நிறுவனங்களின் சில்லறை விற்பனைக் கடைகள் முன்பாகவே இ…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஐ நாவின் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கை, இந்த வருடம் இலங்கைக்குள் பாயவுள்ள பெரும் தொகையான பிரித்தானிய முதலீடுகள், பழம்பெரும் இந்திய நிறுவனமான டாடா இலங்கையில் உள்ள தகவல் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவமொன்றை வாங்க உள்ளதாக வந்துள்ள செய்திகள் எமது போராட்டத்தில் அடுத்து வரவிருக்கும் செங்குத்தான வளைவுகளை முன்னறிவிக்கின்றன. வாகரை மோதல்களின் முடிவு கிழக்கில் ஒரு புதிய அரசியல் மாற்றத்துக்கு வழிகோலலாம் என்பதால் கருணா குழுவுடன் முழு அளவிலான ஒரு யுத்த நிறுத்ததை மேற்கொள்வதன் மூலம் கிழக்கில் தமிழர் தரப்பு இன்னொரு வடிவத்தில் பலத்தை இழந்து விடாது தக்கவைப்பதே வன்னி பெருநிலபரப்புக்கு கூடுதல் பலத்தை தரும். இல்லையெனில் கிழக்கில் தமிழர் மூன்றாம் சிறுபான்மையாகி எந்த காலத்திலும் எம்ம…
-
- 3 replies
- 1.3k views
-
-
-
- 3 replies
- 1.7k views
-
-
பழைய யாழ் களத்தில் இருந்து நாரதரால் சித்திரை 17 -2006 ம் தொடக்கப்பட்ட பழைய திரியை மீண்டும் பலரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் http://www.yarl.com/forum/index.php?showtopic=10461
-
- 3 replies
- 1.6k views
-
-
போர் நடைபெற்ற போது வன்னிக்குச் சென்று தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கு தமிழ் கற்பித்த தமிழ் ஆசான்களில் ஒருவராகிய தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் அறிவரசன் என்றழைக்கப்படும் மு.செ.குமாரசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். விடுதலைப்புலிகளின் நிதித்துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழேந்தியுடன் இணைந்து 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டுவரை வன்னியில் பல்வேறு மொழிச்செம்மைப் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். அதேபோல பெருமளவான போராளிகளுக்கு தமிழ் கற்பித்திருந்தார். அந்த அனுபவங்களை “ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்” என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் நெல்லை ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் …
-
- 3 replies
- 930 views
-
-
http://www.periyarthalam.com/2012/11/28/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81/
-
- 3 replies
- 819 views
-
-
யூலை 1983 கலவரம் http://www.tamilnaatham.com/articles/2006/.../sabesan/04.htm
-
- 3 replies
- 1.6k views
-
-
பார்வதி், பார்வதிப் பிள்ளை, பார்வதி அம்மா, அண்ணையின் அம்மா, அன்னை, இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது. 2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, 'பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். 'நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி. பரபரத்த இராணுவம், அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மா…
-
- 3 replies
- 482 views
-
-
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம், முருகன் ஆலயம் மீதான தாக்குதல்: 25ஆம் ஆண்டு நினைவுகூரல் இன்று! யாழ்ப்பாணம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயம் மீதான விமானத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப் படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் மரணமடைந்தனர். அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணைத் தாக்குதல், விமானத் தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் (Leap forward ) எனும் இராணுவ நடவடிக்கையை மேற…
-
- 3 replies
- 884 views
-
-
வாகரை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஆழங்குளம் பிரதேசத்தில் 30 மருதமுனையை சேர்ந்தமுஸ்லீம் குடும்பங்களை முதல் கட்டமாக குடியேற்ற அரசாங்க அதிபரின் அங்கிகாரமும் மாகணசபையின் அனுமதியும் அளிக்கப்படு அதற்கானவீட்டு திட்ட பணிகள் எதிர்வரும் வாரங்களில் அமுல்படுத்தபடவுள்ளது இதனை சிப்லிபாறுக் முன்னின்று நடத்துகிறார் இவர்தான் முஸ்லீம்கள் மட்டக்களப்பின் மொத்த நிலப்பரப்பில் 2% நிலப்பரப்பில் குறுகி வாழ்வதாகவும் சனத்தொகை பரம்பல் விகிதத்தில் அவர்களுக்கு 30%நிலப்பரப்பு காணப்படவேண்டும் எனும் பிரச்சாரத்தை தொடங்கிவைத்தவர், இவ்வாறு ஏனைய மாவட்ட முஸ்லீம்களை இங்கே கொண்டுவந்து குடியேற்றி நிலப்பரம்பலையும் தமிழ் மக்களின் பரம்பலை குறைத்து கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லீம்களின் ஆதிக்கத்தில் கல்குடா தொகுதியை மாற்றவ…
-
- 3 replies
- 564 views
-
-
விடுதலைப்புலிகள் தூர நோக்கோடு பொருண்மிய துறையினால் மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட கிரான் #திலிபன் மருத்துவமனை, ஆயித்தியமலை அரிசி ஆலையும் நெசவு கைத்தறி நிலையமும் தற்போது அநாதையாய் காட்சியளிக்கின்றது. இதில் திலிபன் மருத்துவமுனை எம்மால் ஊடகத்திற்கு வெளிப்படுத்தியதையடுத்து அப்பகுதியில் இரு இடங்களில் மருத்துவ சேவையை மீள வழங்கி வருகின்றார்கள் #மட்டக்களப்பு தமிழ் சமூகத்தின் அர்ப்பணிப்பாளர்கள். இதே போன்று ஆயித்தியமலையில் புதிய தொழில் நிறுவனங்கள், படுவான்கரை பகுதியில் உற்பத்தி நிலையங்கள் பெரியளவில் உருவாக்கப்படாத நிலையில் இப்படியான பழமை வாய்ந்த எமது தமிழர் பொருளாதர மறுமலர்ச்சியின் திணைக்களங்களை நவீன தொழினுட்ப உபகரணங்களையும் உள்வாங்கி இவ் நிலையத்தை திட்டமிடலுடன் செயற்படுத்த…
-
- 3 replies
- 498 views
-
-
சுந்தர் அண்ணா, சுந்தர் அண்ணா பூனகரியை பிறப்பிடமாக கொண்டிருந்தவர், தொலைத்தொடர்பு திணைக்கள களஞ்சியப்பொறுப்பாளர். எந்நேரமும் புன்னைகையோடுதான் பிறரிடம் பேசுவார். 1983 - 1986 காலப்பகுதியில் சுந்தர் அண்ணாவின் வீடும் மோட்டார்சைக்கிளும் தளபதி கிட்டு உட்பட்டு சகல பொறுப்பாளர்களினாலும் பாவிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் சுந்தர் ஒரு சயனைட் கட்டாத சயனைட் கட்டியிராத ஒரு விடுதலைப்போராளியாகவே இருந்தார். 1986 ஏப்பிரல் மாதமளவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களினால் இயக்கவேலைகளில் நேரடியாக பங்கேற்பதை தவிர்த்து வந்தாலும் பழைய தொடர்பில் வந்தோர்க்கு தேவையான உதவிகளை செய்து வந்தவரை அமைதி காக்க வந்த இந்தியப்படை கைது செய்து கோழைத்தனமாக கைகளை பின்னால் கட்டி சுட்டுக்கொலை செய்தது. சுந்தர் அண்ணா உங்களை…
-
- 3 replies
- 1.4k views
-
-
இந்த கரும்புலி மறவரின் புகைப் படத்தை சிறு வயதிலே பார்த்து இருக்கிறேன் , நான் நினைத்தேன் இவர் எம் தேசத்தில் பிறந்து வளந்தார் என்று , தமிழ் நாட்டில் பிறந்து எம் போராட்டத்துக்கு நேரம் பார்த்து உயிர் தியாகம் செய்த இந்த கரும்புலி மறவனுக்கு( வீர வணக்கம் 🙏 😓 )
-
- 3 replies
- 2.2k views
- 1 follower
-
-
தமிழ் இன அழிப்பு பொது மக்களின் பாதுகாப்பு வலயங்களின் மீது இலங்கை இராணுவத்தினரின் கொலைவெறி தாக்குதல் தொடர்ந்தவண்ணம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அல்லல் படுகின்றனர். தினமும் மக்களின் இறப்பு அதிகரித்துகொண்டிருகிறது. விலங்கினங்கள் அழிக்கபடுவதை தடுக்க உலகில் பல்வேறு நிறுவனங்களும் நாடுகளும் நடவடிக்கை எடுக்கின்றது. இங்கு மக்களின் சாவை தடுக்க எந்த ஒரு நிறுவனமோ , எந்த ஒரு அரசோ முன்வராதது உலகத்தில் இன்னும் மனிதம் இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது. இலங்கையில் என்றுமில்லாதவாறு பட்டாசுகளும் இலங்கை தேசிய கொடியும் விற்பனை ஆகி உள்ளது, இவை எல்லாம் தமிழினம் அழிக்கபடுவதை கொண்டாடுவதற்காக சிங்கள மக்களால் உபயோகிக்கப்படுகிறது. பிணம் தின்னும் கழுக…
-
- 3 replies
- 3.9k views
-
-
-
இந்திய அரசு - இலங்கையில் தமிழ் ஈழம் அமைத்தட தக்க வழி காண முன்வர வேண்டுமென கலைஞர்.மு. கருணாநிதி அவர்கள் முரசொலி இதழில் கடிதம் தீட்டியுள்ளார். கடிதத்தின் விபரம் வருமாறு - உடன் பிறப்பே அக்டோபர் திங்கள் 13 ம் தேதியன்று வேலூரில் நடைபெற்ற தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) நடத்திய பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் நண்பர் நெடுமாறன் அவர்கள் கலந்து கொள்ள இயலவில்லையென்று கூறி அவருக்குப் பதிலாக காமராஜ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் நண்பர் கிள்ளிவளவன் அவர்கள் கலந்து கொண்டார்கள். திமுக திக காமராஜ் காங்கிரஜ் தமிழ்நாடு பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளின் சார்பில் கோவை திண்டுக்கல் தூத்துக்குடி திருச்சி சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற டெசோ பேரணிகளில் கலந்து கொண்ட அவர் வேல…
-
- 3 replies
- 1.1k views
-
-
'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி''லெப்.கேணல்.அருணன் 1983 தமிழர் வரலாற்றில் கறுப்பு யூலையாய் தமிழர் மனங்களில் பதிவாகியது. அந்த நினைவுகளைத் தனது எழுத்துக்களால் பதிவு செய்து 27.02.09 அன்று வன்னியில் வீரச்சாவடைந்த லெப்.கேணல்.அருணன் அவர்களது பேனாவிலிருந்து பதிவான ' 'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி'' என்ற பதிவு மீளும் நினைவாகிறது. 2001இல் கட்டுநாயக்கா விமானத்தாக்குதலின் வெற்றியின் மறுநாள் லெப்.கேணல்.அருணன் அவர்களால் எழுதப்பட்ட இந்நினைவானது எட்டுவருடம் கழித்து நினைவுகொள்ளப்படுகிறது. 'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி''நிகழ்ச்சியைக் கேட்க இங்கே அழுத்துங்கள். 'வீரயூலைகளின் பிரசவிப்புக்க…
-
- 3 replies
- 1.4k views
-
-
http://www.youtube.com/watch?v=GFtn4D8TxOU&feature=related http://www.youtube.com/watch?v=GFtn4D8TxOU&feature=related http://www.youtube.com/watch?v=2m9xqL6VOVI&feature=related http://www.youtube.com/watch?v=rkQGn4qUkq4&feature=related http://www.youtube.com/watch?v=2m9xqL6VOVI&feature=related
-
- 3 replies
- 1.7k views
-
-
06 JAN, 2025 | 10:24 PM இலங்கை ஆயுதப்படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான 33 வருடகாலப் போர் இப்போதெல்லாம் நினைவில் இருந்து மெதுவாக அருகிக் கொண்டு போகிறது. விடுதலை புலிகள் இயக்கம் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி முறைப்படி ஆரம்பிக்கப்பட்டது. மூன்று தசாப்தகால போருக்கு பிறகு விடுதலை புலிகள் முல்லைத்தீவின் நந்திக்கடல் ஏரியில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி தங்களது தோல்வியைச் சந்தித்தார்கள். வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான அந்த இயக்கத்தினால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர் சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் வரலாற்றில் முக்கியமான ஒரு பாகமாகும். மேலும் வாசிக்க https://www.virakesari.lk/art…
-
- 3 replies
- 670 views
- 1 follower
-
-
உலகத் தமிழர்களுக்கும் சுவிஸ் தமிழ் வர்த்தகர்களுக்கும் ஸ்ரீலங்கா பொருட்களை புறக்கணிப்போம் புலம்பெயர் வர்த்தகர்களே வாடிக்கையாளர்களே நீங்க ரெடியா? தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு எமது இலங்கை தமிழ் மக்கள் பிரச்சனையில் இருக்கும் அக்கறை ரொம்பவுமே வரவேற்கத்தக்கது. வெளிநாடுகளில் வாழும் எமது ஈழத்து தமிழ் உறவுகள் (கிட்டத்தட்ட 500,000 தமிழர்கள் அமெரிக்கா, கனடா வில் உள்ளார்கள். 500,000 தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறார்கள்) மொத்தமாக 1,000,000 அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை உற்பத்தி பொருட்களாகிய *குளிர்பானங்கள் *பலதரப்பட்ட பிஸ்கட்ஸ் *பலதரப்பட்ட ஜாம் *பால்மாக்கள் *டின் மீன்கள், நூடில்ஸ் உள்ளிட்ட வேறுபல பொருட்களும் இவ் 1,000,000 மக்களில், …
-
- 3 replies
- 1k views
-
-
விடுதலைப்புலிகள் பத்திரிகையும் தேசத்தின் குரலும்…! பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தை முறிவடைந்து 1990 யூனில் மீண்டும் போர் வெடித்த போது “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கத் தொடங்கினார். அன்றிலிருந்து சிறிநீரக மாற்றுச் சிகிச்சைக்காகக் கடல்வழி மூலம் பாலா அண்ணை வெளிநாடு செல்லும் வரை அவர் தமிழீழத்திலேயே வசித்தார். பாலா அண்ணை தாயகத்தில் வசித்த சுமார் 10 ஆண்டு காலம் முழுவதும் தனது பல்வேறு வேலைகளுக்கு மத்தியிலும் எமது இயக்கத்தின் உத்தியோகபூர்வ ஏடான “விடுதலைப்புலிகள்” பத்திரிகையின் வழிகாட்டியாக இருந்து பல்வேறு வழிகளில் உதவினார். விடுதலைப்புலிகள் பத்திரிகை சிறப்பான வகையிலும், அரசியல் மற்றும் இராணுவ விடயங்களைத் தாக்கமிகு வகையிலும் எ…
-
- 3 replies
- 1.3k views
-
-
"ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை" / பகுதி: 01 "நீரின்றி அமையாது உலகு " -- வள்ளுவர் வாக்கு (குறள் -20 ) முன்னைய நாகரிகங்களான டைகரிஸ், யூப்ரடிஸ் என்னும் இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட - மெசொப்பொத்தேமியா, நைல் நதியின் ஓரத்தில் அமைந்த - எகிப்பது, சரஸ்வதி, சிந்து நதிகளுக்கு இடைப் பட்ட - சிந்து சம வெளி, மஞ்சள் ஆறு, யாங்சி ஆறு பகுதிகளில் அமைந்த - சீனா போன்றவை எல்லாம் ஆறுகளின் ஓரமாக அல்லது பெரிய ஆறுகளின் வெள்ளச் சமவெளியில் [rivers/ flood plains] அமைந்து இருந்தன. மேலும் அந்த இடங்கள் எல்லாம் நன்னீரின் தோற்று வாயாக அமைந்து இருந்தன. அது மட்டும் அல்ல, நாம் அறிவது என்னவென்றால், இந்த நாகரிகங்கள் எல்லாம் நீர்பாசனத்தை முழுமையாக அங்கீகரி…
-
- 3 replies
- 597 views
-
-
இலங்கையின் தலை நகரம் கொழும்பு! ஆனால் வரும் அத்தனை தூதுவரும் கண்டியில் பேச்சுவார்த்தைக்கு போவதானது கவனிக்கபடவேண்டிய ஒன்று, அதுமட்டுமல்ல இலங்கை வரும்போது மிக காத்திரமான செயல் செய்வதுபோல் அறிக்கை விட்டபடி வருவார்கள், ஆனால் கண்டி போய்திரும்பியதும் கனிவாக காதலனை காதலி விமர்ஷிப்பதுபோல அழகாக நற்சான்ரிதள் தந்துவிட்டு போவது மட்டுமல்ல, தமது நாடு திரும்பியபிறகும் மிக நன்றாக ஆதரவு தருகின்ரனரே அதெப்படி சாத்தியமாகும்? கண்டியில் நடப்பது என்ன? மது, மாது, பணம் காசு,வீடுவாசல் தோட்டம் துறவு என அள்ளி விடுகின்ர அன்புக்காணிக்கை அவர்களை அடிமை மாடுகள் ஆக்குகின்ரனபோலும்? இயலுமானவர்கள் இந்த ஊழலலை ஒழித்துகட்ட முன்வருவீர்களா? உங்களால் முடிந்தளவு முயர்ச்சி செய்வீர்களா? எப்படியாவது ஒரு ப…
-
- 3 replies
- 4.7k views
-