அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
தமிழ் வாக்காளர்களைஎப்படிவிளங்கிக் கொள்வது? நிலாந்தன்:- 23 ஆகஸ்ட் 2015 தமிழ் வாக்காளர்கள் மறுபடியும் கூட்டமைப்புக்குஓர் ஆணையைகொடுத்திருக்கிறார்கள். 2003 இல் இருந்துஅவர்கள் கொடுத்துவரும் ஓர் அணையின் தொடர்ச்சியா இது? ஆயுதமோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த சுமார் ஆறாண்டுகளுக்கு மேலாக கூட்டமைப்பின் செயற்பாடுகளைக் குறித்து தமிழ் வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியும் விமர்சனங்களும் அதிகரித்துக் காணப்பட்ட ஓர் அரசியல் சூழலில் தேர்தல் முடிவுகள் இவ்வாறு அமைந்திருக்கின்றன. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள முன்னேறிய பிரிவினர் என்று கருதத்தக்க அரசியலை புத்தி பூர்வமாக அணுகும் தரப்பினர் கூட்டமைப்பின் மீது அதிருப்தியோடு காணப்பட்டார்கள். இக்கட்டுரை ஆசிரியர் உட்பட தமிழ் ஆய்வுப…
-
- 2 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சி இலங்கை வசம்.... கருணாநிதி காங்கிரசார் வசம்..... பொன்னிலா கடந்த இரு வருடங்களாக வடக்கை கைப்பற்றும் இலங்கை அரசின் முயற்சி ஒரு வழியாக இப்போது கைகூடியிருக்கிறது. கிளிநொச்சி ராணுவத்தின் வசம் வீழ்ந்ததையிட்டு காலம் காலமாக வெறியூட்டப்பட்ட சிங்கள மக்கள், பாசிச இலங்கை ராணுவத்தின் வெற்றியை தங்கள் வெற்றியாக நினைத்துக் கொண்டாடினாலும் இந்த வெற்றியை சுகிக்கும் நிலையில் ராணுவச் சிப்பாய்களின் குடும்பங்கள் இல்லை. சிங்கள இடது சாரிகளும் இல்லை. இந்த இழப்பின் வேதனைகளையும் வலிகளையும் இழப்புகளையும் சித்திரவதைகளையும் முழுக்க முழுக்க அனுபவிக்கப் போவது வன்னி மக்களே. அவர்கள் இனி கிழக்கைப் போல, யாழ்பாணத்தைப் போல திறந்த வெளிச் சிறைகளில் அடைபடப் போகிறார்கள். அதே சமயம் தமிழ் போராளிகள்…
-
- 4 replies
- 1.5k views
-
-
விக்கியின் தெரிவு: பேரவை உரையை முன்வைத்து புருஜோத்தமன் தங்கமயில் / வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிப் பேசியிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணிக்கு, அவர் தலைமையேற்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் பேரவையிலுள்ள சில கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் புத்திஜீவிகளும் தொடர்ந்து விடுத்துவரும் கோரிக்கைகளுக்குச் சாதகமான பதிலொன்றை வழங்கும் கட்டத்துக்கு, அவர் வந்திருக்கின்றார். முதலமைச்சர் பதவிக்காலம் முடிந்ததும், தன் முன்னால் நான்கு தெரிவுகள் இருக்கின்றனவென, விக்னேஸ்வரன் கூறுகிறார…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஜின்னா - காந்தி இரு தேசப்பிதாக்கள் ரொடெரிக் மாத்யூஸ் தமிழில்: கண்ணன் காந்தி, ஜின்னா இருவருமே தேசத் ‘தந்தை’களாக பாராட்டப்பட்டுள்ளனர். ஆனால் தந்தைமை இருவருக்கும் சுகமானதாக அமையவில்லை. அதிக பணிச்சுமையால் ஜின்னா தன் உடல்நலத்தை இழந்தார். வரலாற்றில் அதிகம் அறியப்பட்ட இந்திய ஆளுமையான காந்தி, ஒரு ‘தேசபக்த’னின் கருத்தில், குறைபட்ட இந்தியத்தன்மை கொண்ட இந்தியாவை உருவாக்கியதற்காகச் சுட்டுக் கொல்லப்பட்டார். தந்தைமை இருவரையுமே பலிவாங்கியது. ஆனால் அதுவே பிற்காலத்தில் அவர்களுக்குப் புத்துயிர்ப்பும் அளித்து திருஉருக்களாக்கியது. அவர்கள் இருவருக்கும் இடையில் உருப்பெற்ற எல்லைக் கோட்டின் தம் பக்கத்தில் அவர்கள் புகழப்பட்டார்கள். இரு தலைவர்களும் எப்படிப் பார…
-
- 1 reply
- 1.5k views
-
-
ருவாண்டா இனப்படுகொலை (Rwandan Genocide) - ஒரு பார்வை ஒரு சின்னக் கதை. இரண்டு குழுக்கள் பல நூறு ஆண்டுகளாக ஒரே பகுதியில் வாழ்ந்து வந்தன. ஆரம்பத்திலிருந்தே இரு குழுக்களுக்கும் ஒத்துப் போனதில்லை. ஒரு குழு, 'நாங்களே இந்த மண்ணின் மாந்தர்கள். அவனுங்க வந்தேறிகள். இந்த மண்ணின்மீது உரிமை இல்லாதவங்க' என்று மார் தட்டிக் கொள்ளும். இன்னொரு குழுவோ, 'அவனுங்க சுத்த சோம்பேறிங்க. ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாதவனுங்க. இந்த நாட்டை வளப்படுத்துன நாங்கதான் இந்த மண்ணுக்கு உண்மையான வாரிசு' என்று உரிமை கொண்டாடும். இரு தரப்பிலும் இனக்கலப்பு இருக்கக் கூடாது, தங்கள் இளைஞர்கள் அடுத்த இனத்தில் போய் கல்யாணம் செய்துவிடக் கூடாது என்று ரொம்…
-
- 0 replies
- 1.5k views
-
-
செம்மணி. ஈழக்களத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இரண்டு கட்டங்கள் முக்கியமான கட்டங்கள். அவை இரண்டும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டவை. ஒன்று சந்திரிக்கா அம்மையார் ஆட்சிக்காலத்திலும் (95-2005) மற்றையது தற்போதைய மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. சந்திரிக்காவின் வெளித்தோற்றம் சமாதான தேவதை. உள்நோக்கம் போர், தமிழ் இன அழிப்பு. மகிந்தவின் வெளித்தோற்றம் உள்நோக்கம் எல்லாமே போர் மற்றும் இன அழிப்பு. இவர்களின் நோக்கங்களை நிறைவு செய்ய எப்போதும் தயார் நின்றவர்களில் ஒருவர் தான் சரத் பொன்சேகா. சந்திரிக்கா அம்மையார் காலத்தில் தான் யாழ்ப்பாண இடம்பெயர்வு என்ற பெரிய இடம்பெயர்வை தமிழ் மக்கள் அனுபவித்தனர். அது சந்திரிக்கா ஏவிவி…
-
- 12 replies
- 1.5k views
-
-
‘ராஜபக்ச அச்சத்தில்? – டேவிட் கமரனின் இலங்கைப் பயணம் குறித்த ஆய்வறிக்கை : இனியொரு… நன்றி : அவந்த ஆட்டிகல வன்னிப் படுகொலைகளை நடத்திய வேளையில் அழிக்கும் ஆயுதங்களைச் ’சட்டரீதியான’ மூலங்களூடாகவே மகிந்த பாசிச அரசு பெற்றுக்கொண்டது. ஆப்கானிஸ்தானில் பயன்படுத்திய பொஸ்பரஸ் கொத்துக்குண்டுகளிலிருந்து இரசாயன ஆயுதங்கள் வரை இலங்கை அரசு எங்கிருந்து பெற்றுக்கொண்டது என்பது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.இது வெறுமனே தமிழின் வாதம் தமிழின உணர்வு என்ற எல்லைகளுக்கு அப்பால் பரந்துபட்ட மக்களை நோக்கிச் செல்லவேண்டும். கொலைகளின் சூத்திரதாரிகளான ராஜபக்ச குடும்பமும் அதன் ஆதரவாளர்களும் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். அவர்கள் மக்கள் மத்தியில் நடமாடுவதே மனித குலத்திற்கு ஆபத்…
-
- 8 replies
- 1.5k views
-
-
கியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும் : பிரான்ஸிஸ் போர்டு கொப்பாலாவுடன் ரோபர்ட் ஸ்டார் உரையாடல் (மொழிபெயர்ப்பு : யமுனா ராஜேந்திரன்) ஞாபக மறதிக்கு எதிரான போராட்டம் என்பது கலைஞர்களும் அறிவாளிகளும் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்களில் ஒன்றாக இருக்கிறது. கியூப சமுகத்தின் மீது வைக்கப்படும் மிகப் பெரும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று அங்கு சுதந்திரம் இல்லை என்பது. பிறிதொரு குற்றச்சாட்டு அங்கு வறுமை நிறைந்திருக்கிறது என்பதாகும். இலத்தீனமெரிக்க நாடுகளின் தொடர்ந்த வறுமைக்கான காரணங்களாக 500 ஆண்டு காலத்திற்கும் மேலான காலனியச் சுரண்டலையும் அதற்குப் பின் இன்று வரை இராணுவச் சர்வாதிகாரிகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஊட்டி வளர்த்ததையும் இன்று வரை கியூப சமூகத்தின் மீது …
-
- 0 replies
- 1.5k views
-
-
நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதிலுள்ள சவால்கள் ! 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததையடுத்து, யுத்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் சம்பந்தமாக வகைப்பொறுப்பு கூறுவதற்கும் அத்துடன் நல்லிணக்கத்தை தோற்றுவிப்பதற்கும் ஏற்புடைய பிரச்சினைகளை இலங்கைக்குள்ளேயே தீர்க்குமாறு இலங்கை உந்தப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட ஜெனிவா பிரேரணையானது உண்மை, நீதி, இழப்பீடு செய்தல் மற்றும் மீள் நிகழாமை போன்றவற்றை நோக்கிய அர்த்தபுஷ்டி மிக்க முதலாவது படிமுறையை தோற்றுவித்தது. இந்தப்பிரேரணையின் கீழ், உண்மை மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு, காணாமற் போன ஆட்களைப்…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம். இறுதிக்கட்டப் போரின் போது லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான 58 ஆவது டிவிசன் படையினர், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கிடைத்த நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள அதிகாரிகள் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்களில் ஈடுபட்டதற்கான நம்பகமான ஆதாரங்களை அமெரிக்க இராஜாங்க செயலர் கொண்டி…
-
- 6 replies
- 1.5k views
-
-
Courtesy: ச.வி.கிருபாகரன், பிரான்ஸ் இலங்கைதீவின் சுதந்திரத்தை தொடர்ந்து நடைபெற்ற அரசியல், பொருளாதார, சமூக, கலை மற்றும் கலாசார சம்பவங்கள், நிகழ்வுகளை நாம் மிகவும் அவதானமாக ஆராய்வோமானால், அவை பேயாட்டம், சூதாட்டம், போராட்டம், களியாட்டம் என்ற அடிப்படையிலேயே கடந்த எழுபத்து ஐந்து வருடங்களாக நகர்ந்துள்ளதை அவதானிக்க முடியும். இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் எந்த தமிழன் எங்கு வாழ்ந்தாலும், அவர்களுடைய வாழ்க்கை, பங்களிப்பு சரித்திரம் மிக சுருங்கிய சில தசாப்தங்களே. ஆனால் இவ் பூமியில் தமிழ் மொழி கலை, கலாச்சாரம் என்பது பல ஆயிரம் ஆண்டுகள் அல்ல, “கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு மூத்த தமிழ்”. இதில் இலங்கைதீவில் தமிழர் தாயாக பூமியான வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்க…
-
- 3 replies
- 1.5k views
-
-
கோட்டாவின் வெற்றி - யதீந்திரா கோட்டபாய ராஜபக்சவின் வெற்றி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக தமிழ்ச் சூழலில் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து பலரும் மீளவில்லை. உண்மையில் கோட்;டபாயவின் வெற்றி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. அது தொடர்பான கணிப்புக்கள் ஏற்கனவே ஓரளவு பகிரங்கப்பட்டிருந்தது. ஆனாலும் தமிழ்ச் சூழலில் இது அதிகம் பேசப்படவில்லை. சஜித்பிரேமதாச வெற்றிபெறப் போவதான ஒரு தோற்றமே தமிழ் மக்களுக்கு காண்பிக்கப்பட்டது. அதனை நம்பியே தமிழ் மக்களும் அதிகமாக வாக்களிப்பில் கலந்துகொண்டு, சஜித்பிரேமதாசவை ஆதரித்தனர். ஒருவேளை சஜித்பிரேமதாசவின் வெற்றிவாய்ப்பு தொடர்பில் சந்தேகம் இருந்திருப்பின் தமிழர்கள் இந்தளவிற்கு வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்க மாட்டார்கள்.…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழ் டயாஸ்பொறாவின் ஆயுட்காலம் எவ்வளவு? - கலாநிதி சர்வேந்திரா இவ் வாரக் கட்டுரை டயாஸ்பொறா என்ற எண்ணக்கரு தொடர்பாக சில கோட்பாட்டு நிலைக் கருத்துக்களை முன்வைத்து தமிழ் டயாஸ்பொறாவின் ஆயுட்காலம் எவ்வளவு என்ற கேள்வியை எழுப்புகிறது. நாளாந்த பாவனையில் அனைத்துவகையான புலம்பெயர் மக்களையும் டயாஸ்பொறா என அழைத்தாலும் கோட்பாட்டு நிலையில் டயாஸ்பொறா என விழிக்கப்படுவோர் சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். டயாஸ்பொறா தொடர்பாக குறிப்பிடப்படும் அம்சங்களில் முழுமையாக எல்லாம் பொருந்தாவிடினும் குறிப்பிட்ட முக்கியமான அம்சங்கள் பொருந்திவரின் அவ் வகையான புலம்பெயர் மக்களை டயாஸ்பொறா என அழைக்கலாம் என வாதிடப்படுகிறது. இதனை எல்லா ஆய்வாளர்களும் …
-
- 0 replies
- 1.5k views
-
-
[size=4]நின்றறுக்கும் தெய்வங்கள் தமிழனின் அழுகுரலுக்கு செவிசாய்க்கத் தொடங்கியுள்ளமை, போன்றொரு பிரேமை[/size] [size=2] [size=4]கடந்த வாரத்தின் வயிற்றுக்கும் தொண்டைக்குமிடையில் உருவமில்லாமல் உருண்டு திரிந்தது. வாய்க்கால்களின் மரணவெளியில், வியாபித்துப் பெருகி விஸ்வரூபித்து, பிரபஞ்சக் கறுப்பினுள் ஒற்றைப் புள்ளியாய் அடங்கிப்போன, ஆதி இனமொன்றின் சோகம், மீண்டுமொரு முறை உலகின் விழித்திரையின் மேல் விழுந்து உறுத்துகின்றது. [/size][/size] [size=2] [size=4]சர்வதேசங்களின் அமைதிக் காவலனான ஐக்கிய நாடுகள் தன்னைத்தானே கேள்வியெழுப்புகின்ற சுயவிசாரணைகளைச் சுற்றியதாக முள்ளிவாய்க்கால் படுகொலைகளை பேசத் தொடங்கிய அதே சம இரவில், வைத்தியசாலை வீதியில் அடுத்த நாள் முன்னிரவு வரை "துப்பாக்கி'…
-
- 22 replies
- 1.5k views
-
-
88 வயதாகும் ஈழத்து வரலாற்று நாயகர் எசு. ஏ. தாவீது மறவன்புலவு க. சச்சிதானந்தன் தளரா நெஞ்சம். மருத்துவமனை கண்டிராத உடல். செருப்பணியாத கால்கள். திருமணமாகாத வாழ்க்கை. 1970 முதலாகக் காய்கறி உணவு. முகத்தை மூடும் வெள்ளை மீசையும் தாடியும். 88 வயதிலும் இரு மாடிகளுக்கும் படியேறி என் வீட்டுக்கு இன்று, புலர் காலை 0600 மணிக்கு வந்தவர், பெரியார் எசு. ஏ. தாவீது என நான் அழைக்க விரும்பும் எஸ். ஏ. டேவிட். 1970களில் வவுனியாவில் காந்தீயம் அமைப்புத் தொடங்கிய காலங்கள். மலைநாட்டில் துணை மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராசசுந்தரம், கொழும்பில் என்னிடம் வருவார். அவருடன் டேவிட் ஐயாவும் வருவார். கொழும்பு வைஎம்சீஏ விடுதியில் டேவிட் ஐயா தங்கியிருப்பார். அந்தக் கட்டட வரைபடத்த…
-
- 10 replies
- 1.5k views
-
-
மோடி, சுஷ்மா ஸ்வராஜ், அஜித் குமார் தோவால் - ராஜபட்சேவின் முப்படைத் தளபதிகளும் ஈழத்தின் இருண்ட எதிர்காலமும் - செந்தில் நாதன் நாம் எதிர்பார்த்தது நடந்திருக்கிறது. ஈழத்தமிழர் விவகாரத்திலும் தமிழ்நாட்டின் புவிசார் நலன் சார்ந்த விவகாரத்திலும் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதில் மன்மோகன்சிங்கைவிட பலமடங்கு மோசமாகத்தான் நரேந்திர மோடி நடந்துகொள்வார் என்பதில் நமக்கு எப்போதும் சந்தேகமில்லை. அது இன்று வெளிப்படையாகத் தெரிகிறது. கடந்த ஆட்சிக் காலத்தின்போது இந்தியாவின் சார்பில் இலங்கை சென்று திரும்பிய சுஷ்மா ஸ்வராஜ் எத்தகைய கருத்துகளை வெளிப்படுத்தினார் என்பதை நாம் அறிவோம். அவர்தான் இன்று வெளியுறவுத்துறை அமைச்சராக ஆகிறார். ஆனால் இங்கே மோடி சுஷ்மா இருவருக்கும் அப்பாற்பட்டு ஒருவரைப் ப…
-
- 16 replies
- 1.5k views
-
-
இன்றைய ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிந்துள்ள முகமூடியின் பின்னணி என்ன? "V for Vendetta" இந்த புகைப்படம் சமீக காலமாக மேற்கத்தேய நாடுகளில் அராஜகத்தை எதிர்த்தும், நீதிக்காக வீதிக்கிறங்கி போராடும் போராட்டக்காரர்கள் அணிந்திருப்பதை அவதானித்திருக்கிறேன். இந்த முகமூடி எதனை குறிக்கிறது என்று ஆராய்ந்த போது அந்த முகமூடி பயன்படுத்தப்பட்ட திரைப்படம் குறித்த தகவல்கள் கிடைத்தன. "V for Vendetta" இரவே அதனை தரவிறக்கி பார்த்துவிட்டேன். 132 நிமிடங்களை கொண்டது இந்த திரைப்படம். கதைக்களம் இங்கிலாந்து பாராளுமன்றம். கட்டுக்கடங்கா அதிகாரங்களைக்கொண்ட ஒரு சர்வாதிகார அரசு. வெளிநாட்டவர், ஓரினச்சேர்கையாளர்கள், முஸ்லிம்கள், சிறுபான்பாமையினர் நலிந்தவர்கள் ஆகியோருக்கு எதிரான அரசு…
-
- 0 replies
- 1.5k views
-
-
கனடாவில் பெரும் கட்டமைப்பைக் கொண்ட தமிழர் அமைப்பான உலகத்தமிழர் இயக்கத்தின் ரொரன்ரோ தலைமை செயலகம் கனடிய காவல்துறையினரால் சோதனைக்குள்ளானது. அண்மையில் கனடாவில் விடுதலைப்புலிகளின் தடையை அடுத்து கனடிய காவல் துறையினர்மும்முரமாக தமது சோதனை நடவடிக்கைகளை தமிழ் தேசிய ஆதரவு அமைப்புக்கள் மீது ஆரம்பித்துள்ளனர். அவர் தங்கள் சோதனை நடவடிக்கையின் பொது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இந்த அமைப்புக்களுக்கும் இடையே தொடர்புகள் உள்ளதா? என்பதை அறிவதிலே மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தடைச் சட்டம் அமுலுக்கு வந்த பின் தமிழர் அமைப்பொன்று சோதனையிடப்படுவது இது இரண்டாவது தடவையாகும். இதற்க்கு முன்னர் கடந்த 16ம் திகதி கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள உலகத்தமிழர் இயக்க காரியா…
-
- 1 reply
- 1.4k views
-
-
சுமந்திரனின் மாற்றம்... -கபில் “ஆயுதப் போராட்டத்தை, ஆதரிக்கவில்லை என்று கூறிவந்த- அந்த வழிமுறையை நிராகரிப்பதாக கூறிவந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நினைவேந்தல் களத்துக்கு வந்தமை ஆச்சரியமான மாற்றம் தான்” மாவீரர் நாள் நினைவேந்தல் கடந்த பல ஆண்டுகளைப் போலன்றி, இந்தமுறை மீண்டும், வீட்டு முற்றங்களுக்குள்ளேயோ, அல்லது வீடுகளுக்குள்ளேயோ முடக்கப்பட்டிருக்கிறது. 2009இல் இருந்து- விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், போராட்டம் சார்ந்த நினைவேந்தல் நிகழ்வுகளைப் பகிரங்கமாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஆங்காங்கே சிலர் உதிரிகளாக நினைவேந்தல்களை நடத்தினாலும், அவை கூட்டுத் திரட்சியாக இருக்கவில்லை. 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் தொடங்கி, 2019 ஆட்சி …
-
- 2 replies
- 1.4k views
-
-
1991ம் ஆண்டு ஜுலை மாதம் 10 திகதி. சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக ஒரு மிக முக்கிய தாக்குதலை விடுதலைப் புலிகள் ஆரம்பித்த தினம். சிறிலங்காவில் மிகவும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த சிpலங்கா ஆணையிறவுப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பெரிய இராணுவ நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்திருந்தார்கள். ஒரு பிரதான இராணுவ முகாம் மற்றும் ஆறு சிறிய முகாம்களைக் கொண்ட அந்த பாரிய இராணுவத் தளத்தில், சிறிலங்கா சிங்க ரெஜமன்;ட்(Sri Lanka Sinha Regiment )இனது ஆறாவது பட்டாலியனை (6th battalion) சேர்ந்த 600 படைவீரர்கள் தங்கியிருந்தார்கள். அந்தப் பாரிய படைத்தளத்தைத்தான் விடுதலைப்புலிகள் அந்த நேரத்தில் முற்றுகையிட்டிருந்தார்கள். ஆனையிறவு சிறிலங்காப் படைத்தளம் மீதான முற்றுகைக்கு விடுதலைப் …
-
- 3 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான வன்மம் - விடுதலைப் போராட்டத்திற்கு எதிராய் சூரியதீபன் “இனி ஈழவிடுதலை சாத்தியமா?” என்ற (ஆனந்த விகடன் 22-07-2009 ஷோபாசக்தி நேர்காணல்) கேள்விக்கு ‘இல்லை’ என வருகிறது ஷோபாசக்தியின் பதில். இறந்து போனவர்களுக்கு ‘குழிப்பால்’ விடுதல், இறுதிச் சடங்குகளில் ஒன்று. ‘நாளைக்குப் பால்’ ‘நாளைக்குப்பால்’ - என்று மயானத்தில் அறிவிப்பார் வெட்டியான். இருபதாயிரம் போராளிகளின் கல்லறையிலும் ஒரு லட்சம் மக்களின் புதைகுழிகளிலும், ‘இல்லை’ என்ற பதில் மூலம் குழிப்பால் விடுகிற வேலையை இந்த வெட்டியான் செய்கிறார். போராடுகிறவர்களுக்குத் தான் விடுதலை சாத்தியம். விடுதலையே மற்றவர்கள் உன்னிடம் நம்பிக்கை இழந்தாலும் என்றென்றைக்கும் நான் மட்டும் நம்ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
வியட்நாம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள் வியட்நாம்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் போராளிகளின் சிந்தையில் உற்சாகத்தைத் தோற்றுவிக்கும் மாபெரும் ஊற்று. இந்தோசீன தீபகற்பத்தில் இருக்கும் இந்தச் சிறிய நாடு கோலியாத் போன்ற அமெரிக்க வல்லரசை 1975ஆம் ஆண்டு வீழ்த்தி 30 ஆண்டுகள் முடிந்துவிட்டது. கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் வியட்நாமிய மக்கள், குறிப்பாக, விவசாயிகள் போராடிப் பெற்ற இந்த வெற்றி உலக வரலாற்றில் ஒரு சகாப்தம். அமெரிக்க அதிபர்கள் கென்னடி முதல் நிக்சன் வரை 10 ஆண்டுகளாக 50 சதவீத தரைப்படை, விமானப்படைகள், 15 விமானம் தாங்கிக் கப்பல்கள் என 10 லட்சம் துருப்புக்களைக் குவித்துக் கொண்டும், ஒரு கோடி டன் வெடிகுண்டுகள்; என வெறிகொண்டு தாக்கியும்…
-
- 0 replies
- 1.4k views
-
-
https://www.thoughtco.com/saltpeter-or-potassium-nitrate-608490 https://en.wikipedia.org/wiki/History_of_the_Haber_process All we love Avocado, right?
-
- 11 replies
- 1.4k views
-
-
தமிழர்கள் பேசுவது இனவாதம் என்றால் சிங்களவர்கள் பேசுவது இனவெறியாகும் யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் கூறிய விடயங்களே இவ்வாறானதொரு கட்டுரையை எழுதத் தூண்டியது. அவர் தன்னை ஒரு ஓய்வு பெற்ற இராஜதந்திரியாக அடையாளப்படுத்திக் கொண்டார். இந்த யாழ்ப்பாணத்தான் இப்படித்தான். சும்மா இனவாதம் பேசிக் கொண்டிருப்பான். தமிழ் அரசியல் எண்றாலே இனவாதம்தானே! எங்கட ஆக்களிட்ட வேறு என்ன இருக்குது? இப்படியான நபர்களை எதிர்கொள்ளும் போது, அவர்களுக்கான ஆகச் சிறந்த பதில் மௌனம் மட்டுமே! ஆனால் தமிழர்கள் மத்தியில் இப்படியான ஒரு தரப்பும் உண்டு. தமிழ்ச் சூழலில் இடதுசாரிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோரில் சிலரும் இப்படிப் பேசுவதுண்டு. …
-
- 0 replies
- 1.4k views
-
-
ரத்தக் கறைகளோடு தம்மை தரிசிக்க வந்த சிங்கள அதிபர் ராஜபட்சேக்கு, போப்பாண்டவர் நல்ல புத்திமதி சொல்லியிருக்கிறார். ‘மனித உரிமைகளுக்கு மதிப்புத் தாருங்கள். மனித உரிமைகளை மீறாதீர்கள். விடுதலைப்புலிகளுடன் பேசுங்கள்’ என்று அவர் கூறியிருக்கிறார். அநியாயக்காரர்கள் ஏசுபிரானை ரத்தம் சிந்த வைத்தனர். சிங்கள இனவாதிகள் தமிழ் இனத்தையே ரத்தம் சிந்தவைக்கிறார்கள். போப்பாண்டவர்கள் போன்ற நல்லோர், எப்படி அந்த மனிதப் படுகொலைகளைச் சகித்துக் கொள்ள முடியும்? அவர்கள் இனம், மொழி, நாடு என்ற எல்லைகள் கடந்த புனித ஆத்மாக்கள் அல்லவா? உலக வங்கியிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. அதனால் இலங்கை தவிக்கிறது. அந்தக் கடனைக் கட்ட கடனுதவி செய்யும்படி பிரிட்டனை சிங்கள அரசு கேட்டுக் கொண்ட…
-
- 4 replies
- 1.4k views
-