Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இங்கே அறிக்கை விடுவதற்கும் ,அதன் மூலம் விவாதிப்பதற்கும் ஒன்றுமேயில்லை ..............கூட்டிக்கழித்துப்பார்த்தால் முடிவு பூச்சியம்தான் ...................உண்மையில் சரியான ,உண்மையான தலைமையின் வழிகாட்டலுடன் நாம் இருந்த வேளை...........அங்கே அவர்கள் கூறுவதை பெரும்பாலான தமிழர் ,விடுதலையின் மேல் பற்றுக்கொண்டவர்கள் ,ஏற்றுக்கொண்டோம் ,ஏற்றுக்கொண்டார்கள் .ஏனனில் சரியாக நடந்துகொண்டார்கள் அந்த உன்னதமான தலைமை .....................மக்கள் மிகுந்த நம்பிக்கையும்,மதிப்பும் அந்த தலைமையின் மேல் வைத்தது .........இதை மறக்கவோ,மறுக்கவோ யாரும் முடியாது ............ஆனால் இன்று தலைமை ,தாங்களே பிரதிநிதிகள் என்று கருதப்படுவோர் மக்கள் நம்பும் படி எந்த வகையான செயற்பாடுகளையும் ,நம்பிக்கை தரும் விடயங்கள…

  2. சுய பரிசோதனைக்கு கூட்டமைப்பு தயாரா? இலங்­கைக்கு பயணம் மேற்­கொண்­டி­ருந்த சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் பொதுச்­செ­யலர் சலில் ஷெட்டி கடந்த புதன்­கி­ழமை கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பின் போது, இலங்கை அர­சாங்­கத்­துக்கு காலம் கடந்து கொண்­டி­ருக்­கி­றது என்று கூறி­யி­ருந்தார். போரின் இறு­திக்­கட்­டத்தில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தாக, சர்­வ­தேச சமூ­கத்­திடம் இலங்கை அர­சாங்கம் கொடுத்­தி­ருந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வ­தற்கே காலம் கடந்து கொண்­டி­ருக்­கி­றது என்று அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். காலம் கடந்து கொண்­டி­ருக்­கி­றது என்ற இந்தக் கூற்று, இலங்கை அர­சாங்­கத்­துக்கு மாத்­திர…

    • 2 replies
    • 421 views
  3. தமிழரசு கட்சி சிதைந்ததாலும்> அழிந்தாலும் பரவாயில்லை> கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும்> சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் தனது அலுவலகத்தில் 31ம் திகதி அன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது> வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் சீ.வி.சிவஞானம் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி சுமந்திரன் தரப்போடு முரண்பட்ட பலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முழுக்க மு…

    • 2 replies
    • 394 views
  4. முதலமைச்சர் வேட்பாளர் ஆகிறாரா சிவாஜிலிங்கம்? சுகாஷ், காண்டீபனுக்கும் வாய்ப்பு | பேசும் களம் நன்றி - யூரூப்

    • 2 replies
    • 467 views
  5. மகிந்த ராஜபக்ச வேலணை மக்களின் உறவினன், கருணா சிங்கள மக்களின் உறவினன், டக்ளஸ் சமூக வேறுபாடுகளின் தலைவன். இவர்கள் தான் கிழக்கின் உதயத்தையும், வடக்கில் வசந்தத்தையும் கொடுக்கிறார்கள். அவ்வளவிற்கு ஈழத்தமிழர் இழிவானவர்களோ அல்லது மடையர்ககளோ அல்ல. கருணாவிற்கு மது, மங்கை - டக்ளசிற்கு சாதிவெறி, பணவெறி, சமயவெறி, ஈழத்தமிழ் மக்களுக்கு விடுதலைத் தாகம். மகிந்த, கருணா, டக்ளஸ் இவர்களின் வெறிகள் ஒரு போதும் விடுதலை தாகத்தை தணிக்க முடியாது. ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தோல்வி கண்டிருக்கலாம். ஆனால் மக்களின் உணர்வுகள் ஆயுதப் போராட்ட காலத்திலிருந்ததைவிட தற்பொழுது பன் மடங்கு அதிகரித்துள்ளது மட்டுமல்லது, இவ் மும்மூர்த்திகளின் ஆட்டம் நிரந்தரமற்றது என்பதையும், ஈழத…

  6. மீண்டும் கலர் கலராய் தோரணங்கள் வடக்கு வீதியில் சின்ன மேளம் கிழக்கே மேளச் சமா தெற்கே காவடி மேற்கே கச்சான் கடைகளென தேர்தல் திருவிழா அரிதாரம் பூசியவர்களின் அணிவகுப்பு வானத்தை வில்லாய் வளைப்பவர்களாகவும் விடுதலையை வென்று தருபவராகவும் சிலர் ஒருபடி மேலே போய் தாயகத்தை தோண்டி பெருவாழ்வு பெற்றுத் தருவதாகவும் ஆளுக்கொரு மூடையுடன் அவர்கள் மூடைகளின் அளவுகளில் வேறுபாடிருந்தாலும் எல்லாம் புளுகுமூடைகள்தான் தொடுத்த வில்லிற்கும் கொடுத்த விலைக்கும் ஈடுதான் என்ன மாகாண சபைதானா ஆளுனர் தலையசைத்தால்தான் மூத்திரமே பெய்யலாம் கோவணம் இறுக்குவதற்கும் கொழும்பில்தான் அனுமதியாம் போக்கறுந்த சபைக்கு பொலீஸ் அதிகாரமும் இல்லை கந்தறுந்த ஆட்சியால் காணியும் இல்லை நீதிமான் சொல்கிறார் மாகாண சபை மூன்ற…

  7. ஜே.வி.பி எனும் இனவாத சக்தி என்.கே. அஷோக்பரன் ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மக்கள் அலை, தினம்தினம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக எழுந்திருக்கும் மக்கள் எதிர்ப்பையும் அதிருப்தியையும், தமக்குச் சாதகமாக்க சஜித் பிரேமதாஸவை முன்னிறுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியும், அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி என்ற மக்கள் விடுதலை முன்னணியும் களத்தில் இறங்கியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி, திக்குத் தெரியாத நடுக்கடலில் சிக்கிய, பல கப்டன்களைக் கொண்ட கப்பலைப் போலத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தான் ஒரு கட்சியா? அல்லது, கூட்டணியா என்ற குழப்பம், ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ள ஆயிரம் பிரச்சினைகளில், ஒரு பிரச்சினையாகக் காணப்படுகின்றது. ஆகவே, பிரதான எதிர்க்கட்சி வலு…

  8. இலங்கை கடன் மறுசீரமைப்பு: இந்தியா ஆர்வம் காட்டும்போது சீனா பின்தங்க காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 பிப்ரவரி 2023, 11:22 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலரை வழங்க தயாராகவுள்ள பின்னணியில், அதற்கு ஆதரவு வழங்க சீனா முன்வந்துள்ள போதிலும், சீனாவின் ஆதரவு போதுமானதாக இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இதனைக் குறிப்பிட்டுள்ள…

  9. மேதகு- ஈழத்தமிழர்களின் அடையாளம்- பா.உதயன் எல்லா மனிதர்களும் பிறக்கும் போதே எல்லா சுதந்திரத்துடனும் பிறக்கிறான் என ஆங்கிலேய தத்துவஞானி ஒருவன் கூறினான்.( All human beings are born free and equal). இவனது உரிமைகள் பறிக்கப்படும் போதும் நசுக்கப்படும் போதும் தனக்கான இருப்பை தங்க வைத்துக் கொள்ள அற ரீதியாகவோ ஆயுத ரீதியாகவோ போராடித் தான் தம் உரிமையை மீட்க முடியும் என்ற அடிப்டையிலே இலங்கைத் தீவில் ஈழத்து தேசிய இனத்துக்கு இனவாத சிந்தனை கொண்ட சிங்கள ஆட்சியாளர்களினால் வலிந்து ஆக்கப்பட்ட கொடுமையின் விளைவே இந்த தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டம் என்ற வழிமுறையைப் பின்பற்ற வைத்தது. இந்த அடிப்படையில் ஈழத் தமிழரின் வலிகளையும் துன்பத்தையும் அவனது தேசிய அடையாளத்தையும் உலகறியச் செய்தான் தனி மனித…

  10. தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான ஜனாதிபதியின் சந்திப்புக்குக் காரணம் லக்ஸ்மன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஜனாதிபதி சந்திப்பதானது, ஒருபடி கீழிறங்கலாகவே பார்க்கப்படவேண்டும். இதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சந்திக்கிறார் ஜனாதிபதி என்றும் ஜனாதிபதியைச் சந்திக்கிறது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றும் இன்னும் பலவாறும் பொருள் கொள்ளலாம். எவ்வாறு பார்த்தாலும், நடைபெறவுள்ளது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புதான். சந்திப்புக்கே இரண்டுக்கு மேற்பட்ட வகைகளில் விளக்கம் கொடுக்கமுடியுமென்றால், சந்திப்பு எவ்வாறான விடயங்களை உள்ளடக்கியிருக்கும் என்பதற்கும் பல வியாக்கியானங்களைக் கொடுக்க முடியும். அரசாங்கத்துடன் நட்பைப் பாராட்ட முனைந்தாலே தவறாகப் பார்க்கப்படுகின்ற மனோநிலை, தமி…

  11. குருதிச் சாட்சியங்கள் தீபாவளி, பொங்கல், புதுவருடம் என பண்டிகை நாள்களில்தான் தமிழ்த் திரைப்படங்கள் அள்ளுகொள்ளையாக வெளியாவதுண்டு. ஏனெனில் பண்டிகைக் காலங்களில் தான் பெருமளவான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு இழுக்க முடியும். பொதுவாகவே இத்தகைய பண்டிகைகளின் போது அந்த நாள்கள் அரச விடுமுறை நாள்கள் என்பதால் எல்லோரது கவனமும் புதிய படங்களின் மீது பதிவதால் தாம் நினைத்த இலக்கினை இந்தத் திரைப்படங்களால் அடையமுடிகிறது. என்னதான் மோசமான திரைப்படமாக இருந்தாலும் கூட முதலுக்கு பாதகமில்லாத நிலைமை பண்டிகைக் காலங்களில் தான் கிடைக்கிறது. எனவேதான் இத்தகைய பண்டிகைகளைக் குறிவைத்தே படங்களின் வெளியீட்டுத்திகதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஜெனிவா மனிதஉரிமைகள் சபை அமர்வு ஆரம்பித்தாலே "சனல்4'…

    • 2 replies
    • 623 views
  12. தமிழ்த் தேசியத்தின் திரிசங்கு நிலை -ஆர்.ராம்- 2020பொதுத்தேர்தலின் பின்னரான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டிருந்த சேனாதிராஜா சுமந்திரன் ‘அணி’ முரண்பாடுகளும், அதனால் அக்கட்சியின் தலைவராக இருக்கும் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும், சுமந்திரன், சிறிதரன் போன்றவர்களுக்கும் இருந்த ‘அரசியல் உறவில்’ ஏற்பட்ட ‘வெடிப்புக்களும்’ பகிரங்கமானவை. சேனாதிராஜா தேர்தலில் பின்னடைவுகளைச் சந்தித்திருந்த சொற்பகாலத்திலேயே தமிழரசுக்கட்சியின் தலைவர் பாத்திரத்திலிருந்தும் அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலில் இருந்தும் அகற்றப்படவுள்ளரா? என்ற சூழல் ஏற்பட்டிருந்தது. இத்தருணத்தில் ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்று பதிலுரைத்து அவர…

  13. அன்புள்ள மகிந்தா மாமாவுக்கு, நான் கடிக்க மிளகாய் எழுதிக்கொள்வது, அவசர அலுவலாக வெளியூர் சென்றிருந்தததால் சில மாதங்களாக அரசியல் அலசல்களில் கலந்துகொள்ள முடியவில்லை. எனினும் தற்போதைய உங்களின் நிலை குறித்து வேதனையடைந்த நான் சில ஆலோசனைகளை கூறிவிடலாம் என நினைக்கின்றேன். எனது ஆலோசனை என்பது உங்களை சுற்றி இருப்பவர்கள் கூறுவதுபோல குரங்குவால் போல் நீண்டு செல்லாது. இந்த பத்தியின் முடிவில் ஒரு வரியில் எனது ஆலோசனை இருக்கும். அதனை பார்த்து உங்கள் எதிர்காலத்தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையால் நீங்களும், உங்களை சுற்றியுள்ளவர்களும் வெகுவாக ஆடிப்போய்விட்டிர்கள் என்பதை உங்களின் நடவடிக்கைகளில் இருந்து அறிந்…

    • 2 replies
    • 1.7k views
  14. வேதனைக்கு வேதனை என்பதா? அண்டவன் தந்த சோதனை என்பதா? எது எப்படி இருப்பினும் யதார்த்தம் என்ற ஒன்றும் ஈழத் தமிழர் வாழ்வில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த யதார்த்தத்தை எந்தக் கோணத்தில் பார்ப்பது என்ற நிலைக்கு எம் ஈழத்தமிழினம் தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரிய விடயமே. எம் ஜி. ஆர் அவர்களின் மறைவிற்குப் பின், தமிழக அரசினதும், அரசியல் தலைவர்களினதும் உதவி எம் ஈழத் தமிழினத்திற்குக் கிட்டும் என்று எம்மவர்கள் நினைத்திருந்தால் அது தான் நாம் விட்ட மிகப் பெரும் வரலாற்றுத் தவறு என்று கூறவேண்டும். 1987ல் எம். ஜி. ஆர் அவர்கள் மறைந்த பின், தமிழக ஆட்சி பீடத்தில் ஏறியவர்கள் “ஈழம்” “ஈழத்தமிழர்” எனும் பதங்களைப் பயன்படுத்திய ஒவ்வொரு தடவையும் அதில் அவர்களது நலன் சார்ந்திருந்ததை அரசியல் …

    • 2 replies
    • 786 views
  15. தாயகப் பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்கள், நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்தால் மீண்டும் மண் மீட்புப் போராட்டம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது. போர் நடைபெற்ற காலப் பகுதியிலும், போர் முடிவுற்ற பின்னரும் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் சிங்களவர்களினாலும், முஸ்லிம்களினாலும் தொடர்ந்து அபகரிக்கப்படுகின்றன. வியாபாராத்திற்காக வந்தவர்கள் முஸ்லிம்கள் என்று பேச்சில் தெரிவித்தாலும், இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் பூர்விக மக்களே முஸ்லிம்கள்தான் என்ற கருத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வைக்கக் கூடும். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டம் தொடக்கம் அம்பாறை வரையிலான கரையோரப் பகுதிகளிலுள்ள தமிழர்களின் காணிகள் சிங்கள அரசாங்கத்தினால், இராணுவக் குடியிருப்பு…

  16. 29 DEC, 2023 | 05:36 PM சமாதானத்துக்கான மதங்களின் சர்வதேச அமைப்பின் மதத்தலைவர்களுடனும் அந்த அமைப்பின் இலங்கைப் பிரிவின் தலைவர்களுடனும் டிசம்பர் 19 ஆம் திகதி நடத்திய சந்திப்பின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்டி விடுவதில் அக்கறை காட்டினாலும் பெரும்பான்மையான மக்கள் இன்னொரு மோதலை விரும்பவில்லை என்று கூறினார். இலங்கை மக்கள் இனவாதிகள் அல்லர். ஆனால் அரசியல்வாதிகளினால் தூண்டிவிடப்பட்டார்கள். இனங்களுக்கு இடையிலான அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாணங்களுக்கான அதிகாரப்பரவலாக்கத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வொன்றுக்கான ஆதரவு மட்டம் இரு வருட இடைவெளியில் 23 சதவீதத்தில் இருந்து 68 சதவீதமாக அதிகரித்…

  17. [size=4] தமிழரின் பூர்விக தாயக நிலங்களில் முக்கியமானதும்,பல்லினப்பரம்பல் கொண்டதுமான கிழக்கின் மாகாணசபை தேர்தல் முடிந்து பெருத்த ஏமாற்றங்களையும்,சலிப்புக்களையும் உருவாக்கி, மீண்டும் மீண்டும் தமது பதவி மற்றும் அரசஅதிகார மையங்களுக்கான அடிபனிவினை மேற்கொள்ளும் அரசியல்வாதிகளின் கேவல முகங்களை வெளிக்காட்டி இன்று கொஞ்சம் ஓய்ந்து போயுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டு தேர்தல் களமிறங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேர்தல் முடிவுகளுக்கு பின்னான மேற்கொண்ட அரசியல்முதிச்சி அற்ற செயற்பாடுகள் பெருத்த விசனங்களையும், நம்பிக்கையீனங்களையும் புலத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் மக்கள் மத்தியில் விதைத்து விட்டது என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது. முஸ…

    • 2 replies
    • 750 views
  18. தமிழர்களிடம் எதிரான கருத்து நிலை உருவாகாமல் அடக்கி வாசிக்கும் புதுடில்லி —2009 இன் பின்னரான பன்னிரென்டு ஆண்டுகளில் ஈழத்தமிழர்களின் இந்தியா குறித்த எதிர்பார்ப்பு, நம்பிக்கை ஆகியவற்றுக்கு மாறாக இலங்கைக்கு கூடுதல் நிதிகளை வழங்கிப் புவிசார் அரசியல் அடிப்படையில் உறவைப் பேணுகின்றோம் என்ற குற்ற உணர்வு இந்திய மனச் சாட்சிக்குப் புரிகின்றது—- -அ.நிக்ஸன்- புவிசார் அரசியல், பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையை மையப்படுத்தி இந்தியா வகுக்கும் வியூகம், அமெரிக்கா, பிரித்தானியா, ஆகிய நாடுகளின் பின்னணியோடு வெளிப்பட்டு வருகின்றது என்பதை இலங்கையின் சமீபத்திய நகர்வும் அதன் மீதான நம்பிக்கைகளும் கோடிகாட்டுகின்றன. …

    • 2 replies
    • 500 views
  19. இணக்க அரசியல் தோல்வியடைந்துள்ளது சமூக ஆய்வாளர் நிலாந்தனுடன் ஒரு நேர்காணல் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான தென்னிலங்கை அரசியல் சூழலையும் தமிழர் அரசியல் சூழலையும் எப்படிப் பார்க்கின்றீர்கள்? தென்னிலங்கை அரசியல் சூழல் ஸ்திரமற்றதாக மாறியிருக்கின்றது. அதேநேரம் அது அதிகம் வெளிச்சக்திகளுக்குத் திறந்து விடப்பட்டதாகவும் மாறியிருக்கின்றது. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்படும் 2009 மே மாதத்திற்கு முன் வரையிலும் இலங்கையில் தமிழ் அரசியல் ஒரு வகையில் மூடப்பட்டதாக இருந்தது. அதாவது வெளிச்சக்திகள் எளிதில் கையாள முடியாததொன்றாகவும், வெளிச்சக்திகளால் கையாளப்பட முடியாததொன்றாகவும் வெளிச்சக்திகளின் தலையீடுகளுக்கு வரையறுக்கப்பட்ட ஒரு பரப்பாகவும் காணப்பட்டது. 2009 மே மாதத்திற்குப் பின…

  20. "ஒரு மனிதனின் பயங்கரவாதி மற்றொரு மனிதனின் சுதந்திர வீரன்!" / "One man's terrorist is another man's freedom fighter." "பயங்கரவாதி" என்பது அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை என்றாலும் பலவேளைகளில் சரியான அர்த்தம் இல்லாமலும் பாவிக்கப்படுவதால், அது ஒரு தெளிவான அர்த்தத்தை இன்று இழந்துவிட்டது. "பயங்கரவாத" செயலை வன்முறையின் பயன்பாடு என்று வரையறுப்போம், அங்கு ஒருவர் அநியாயமான முறையில் அப்பாவி பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கிறார். ஒரு அரச இராணுவ நடவடிக்கையின் பொழுது பாவிக்கப்படும் வன்முறைகள், அப்பாவி பொதுமக்களுக்கும் தீங்கு விளைவிக்களாம் என்று நியாயமாக எதிர்பார்க்கப்படவில்லை. எனவே, அரச இராணுவ நடவடிக்கைகள் இரு கூறுகளைக் கொண்டுள்ளன. ஒன்று நியாயமான அரச இராணுவ நடவடிக்கை …

  21. புதிய ஆண்டைத் திட்டமிடுவது – நிலாந்தன். January 2, 2022 ஒரு புதிய அரசியல் ஆண்டில் என்ன காத்திருக்கிறது? அல்லது என்ன செய்ய வேண்டும்? என்று முடிவெடுப்பதெல்லாம் கடந்த ஆண்டின் தொடர்ச்சியாகத்தான் அமைய முடியும். எனவே கடந்த ஆண்டைப்பற்றிய தொகுக்கப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில்தான் புதிய ஆண்டைத் திட்டமிடலாம். கடந்த ஆண்டில் தமிழ் அரசியலில் ஒப்பீட்டளவில் மூன்று முக்கிய நகர்வுகள் இடம்பெற்றன. முதலாவது- கடந்த மார்ச்மாத ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு மூன்று கட்சிகள் ஒருங்கிணைந்து ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைத்தன. இரண்டாவது-கடந்த செப்டம்பர்மாத ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டு கோரிக்கையை மு…

  22. பொருத்து வீடுகள் நீண்டகாலப் பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல – மொறட்டுவ பல்கலைக்கழக வல்லுனர்கள் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட பொருத்து வீடுகள் பலமான அடித்தளத்தையோ அல்லது பலமான கூரை வசதிகளையோ கொண்டிருக்கவில்லை எனவும் நீண்ட காலப் பாவனைக்குப் பொருத்தமற்றவை எனவும் மொறட்டுவப் பல்கலைக்கழக வல்லுனர்கள் தமது தொழினுட்ப ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். லக்சம்பேர்க்கைத் தளமாகக் கொண்ட ‘ஆர்செலோர் மிட்டல்’ என்ற நிறுவனத்தின் இத்திட்டமானது சீமெந்து வீடுகள் போன்று நீண்டகாலம் நிலைத்து நிற்காது எனவும், இந்த வீடுகளை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தவோ அல்லது திருத்தவோ முடியாது எனவும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இப்பொருத்து வீடுகள் காற்றோட்டம் அற்றவை எனவும் அடுப்…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார் ரா.சம்பந்தன் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் முப்பதைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியப் பங்கு வகித்த இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், இலங்கை தமிழரசு கட்சியின் பெரும் தலைவருமான ரா.சம்பந்தன் காலமானார். இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெறுவதற்காக நீண்ட காலம் பணியாற்றியவர் அவர். அவருக்கு வயது 91. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். …

  24. எனது நண்பர் ஒருவர் திரு எம். ஏ. சுமந்திரன் அவர்கள் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட செவ்வியை எனக்கு அனுப்பியிருந்தார். ஏரிக்கரை பத்திரிகையான தினகரன் பத்திரிகை எப்பொழுதும் தமிழர்களுக்கு எதிராக செயற்படும் பத்திரிகை மற்றும் அரசாங்க பத்திரிகை என்பது யாவரும் அறிந்ததே. ஆனபடியால் சாதாரணமாக நான் தினகரன் பத்திரிகை பார்ப்பது குறைவு அப்படியிருந்தும் எனது நண்பர் மூலம் இவ் செவ்வியை பார்க்க கிடைத்ததற்கு முதலில் எனது நன்றியை அவருக்கு தெரிவித்துகொள்கின்றேன். இனி திரு எம். ஏ. சுமந்திரன் அவர்களின் செவ்வியில் கூறப்பட்ட முக்கியமான விடயங்கள் சிலவற்றைப்பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். வட மாகாண சபையின் முதலமைச்சர் பதவி விலக்கப்படவேண்டு மெனக் கோரி வட மாகாண சபை…

    • 2 replies
    • 481 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.