Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் இருந்து கொழும்பு சென்ற தாயும், இளம் மகளும் 4'ம் மாடியில்!

Featured Replies

லண்டனில் இருந்து, விடுமுறையை கழிப்பதற்காக கொழும்பு சென்ற, பிரித்தானிய பிரஜைகளான தாயாரும், அவரது இளம் மகளும் கொழும்பில், இன்று சிங்கள இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சிங்கள சித்திரவைதை கூடமான 4'ம் மாடியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

இவர்களை விடுவிப்பதற்காக பெருமளவு பணம் கேட்க்கப்பட்டிருப்பதாகவும், கொடுக்கத் தவறின் புலிகளுடன் தொடர்பு உடையவர்களென குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட இவர்கள், பல வருடங்களாக லண்டனில் வசித்து வருவதாகவும் தெரிய வருகிறது.

அண்மைக்காலங்களாக, இவ்வாறு புலத்தில் இருந்து கொழும்பு சென்ற பலர், சிங்கள புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு, பின் அவர்களின் குடும்பங்கள் மிரட்டப்பட்டு பெருமளவு பணம் கப்பமாக பெறப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்படுவது அதிகரித்து செல்கிறது.

- சிங்கள நாட்டுக்கு போவதை தவிருங்கள்

- இந்த உறவுகளை அவர்களின் உறவுகள் முதலில் மீட்கவேண்டும்

- பின்னர் சனல் நாலு போன்ற ஊடகங்களை அணுகவேண்டும்

- சிங்கள அரசு மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து, ஊர்போய் சேரும் வரை... எத்தனை கெடுபிடிகள்.

உயிருக்கே உத்தரவாதம் இல்லாத பயணம் அவசியமா?

  • தொடங்கியவர்

.... நணபர் ஒருவரின் சகோதரியும், மகளுமே கடத்தப்பட்டு 4'ம் மாடியில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்! இப்போ அவர்கள் முன்பு புலிகளுக்கு காசு கொடுத்தவர்கள்/ஊர்வலங்களில் பங்கு பற்றியவர்கள்/.. என்றெல்லாம் சிங்கள பொலிஸ் கூறுகிறார்களாம்!! .... இது இங்கிருந்து அங்கு செல்லும் எம்மவர்கள் பலருக்கு தொடர்ச்சியாக நடந்திருக்கின்றது, வெளியே சொல்லாமல் (அது நிபனந்தனையோ தெரியாது??) காசை அள்ளிக் கொடுத்து ... மீண்டிருக்கிறார்கள்

தேவையா இது? :rolleyes: விடுமுறையைக் கழிப்பதற்கு வேறு இடமா உலகத்தில் இல்லை? :huh:

எப்ப வருவார்கள் சுளையாகக் கறக்கலாம் என்று வழிமேல் விழி வைத்து சிங்களவன் காத்திருப்பது தெரியாமலா துணிந்து போகிறார்கள்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய பணக்காரர் போல :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு எவ்வளவுதான் சொன்னாலும் ஏறாது. அங்கே போகாதேங்கோ, கட்டாயம் கடத்துவாங்கள் என்றால், "அங்க தேனும் பாலும் ஓடுது, ஒரு பிரச்சினையுமில்லை, சனம் சும்மா சொல்லுது" என்று போட்டு போறவையும் இருக்கினம்.அதுமட்டுமில்லாமல், சிறிலங்கா ஏர்லயின்ஸில போறது இன்னும் விசேசம்.

எப்பத்தான் திருந்தப் போகுதுகளோ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதென்ன பெரியவிசயம்....இப்ப இஞ்சை தனி பிளைட் புடிச்சு எல்லே அங்கை போயினம்.

அங்கையிருந்து அவதிப்பட்டு ஓடிவந்து........விசா எடுத்து...சிற்ரிசன் எடுத்து....உழைச்சுமுன்னேறி....நாலு பெற்றோல்செற் நடத்தி அதை வைச்சு அஞ்சாறு வீடுகள் வாங்கி இப்ப எங்கடையளுக்கு கொழுப்பு கூடீட்டுது.இஞ்சை நாலு சிவருக்கை பந்தா காட்டுறதை கொழும்புகில்டன் கொட்டல்லை தங்கடை பொடியளுக்கு கலியாணம் செய்து காட்டீனமாம்.அதை விட கொடுமை என்னவெண்டால்...பள்ளிக்கூடத்திலை பிள்ளையோடை கூட படிச்ச பிள்ளையளுக்கும்(தனிய வெள்ளையள் எண்டதையும் நீங்கள் கவனிக்கோணும்) இவைதான் ரிக்கற் எடுத்து கூட்டிக்கொண்டு போயினமாம்.அதுக்கை யூனிபோம் வேறை என்ன நான் சொல்லுறது விளங்குதோ???ஐயோ...அய்யோ

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது செய்திடபோறாங்கப்பா .. உடனே மீட்பதற்கான நடவடிக்கை என்ன என்பதை ஆராயுங்கள் பிரிட்டிஸ் ஐ கமிசனோடு லைனில் இருங்கள் ... :( :(

உங்கை எதினையயிரம் சனம் போய் வருகுது ஏதும் அசுமாத்தங்களை காணோம். இது என்ன இப்பொ திடீர் என்று ஒரு கதை?

உங்கை எதினையயிரம் சனம் போய் வருகுது ஏதும் அசுமாத்தங்களை காணோம். இது என்ன இப்பொ திடீர் என்று ஒரு கதை?

எல்லா கதைகளும் வெளியில் வருவதில்லை.

போகும் எல்லோரையும் பிடித்தால், ஒட்டு மொத்த வரவுமே நின்றுவிடும். ஒவ்வொரு நூறுக்கோ இல்லை ஆயிரத்திற்கோ ஒருவர் என பிடித்து, நடக்கும் இராணுவ ஆட்சியில், கோடிகளை கறந்தால் அது வெளியில் வருவது கடினம்.

Edited by akootha

.... நணபர் ஒருவரின் சகோதரியும், மகளுமே கடத்தப்பட்டு 4'ம் மாடியில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்!

உங்கள் நம்பிக்கை நச்சத்திரங்களிடம் சொல்லிக் காப்பாற்ற முடியவில்லையா?

உங்கள் நம்பிக்கை நச்சத்திரங்களிடம் சொல்லிக் காப்பாற்ற முடியவில்லையா?

இப்படி செய்வதே அந்த நம்பிக்கை நட்சதிதிரங்களின் ஆதரவுடன் தானே.....

  • தொடங்கியவர்

... கிணறு தோண்ட பூதம் கிழம்பிய கதை போல் ... இதுவும்!!!

... இந்த சிங்கள கடத்தலின் பின் பெரும் நாடகம் நடந்ததாம் ... ஊர்ஜிதப்படுத்திய பின் யாழுக்கு ...!!

... அதற்கு முன் யாழ்கள நிர்மலன், சுமங்களா, அத்தியன், பாண்டர் போன்றவர்கள் இங்கு வந்து பெரியவரின் அறிவுறுத்தல்களை வைக்க முற்படலாம்!

  • தொடங்கியவர்

.. புலமெங்கும் மே18 இற்கு முன்னர், பல தெருவழிப்போராட்டங்கள் நடைபெற்றது, குறிப்பாக பிரித்தானியாவில் பல நடைபெற்றன. அதில் இலட்சக்கணக்கானவர்கள் பங்கும் பற்றினர். இப்போது தடுத்து வைக்கப்பட்டிருப்பவரும், ஒரு சில போராட்டங்களுக்கு சென்றவர்தானாம் ... விடியோ ஆதாரம் காட்டப்பட்டதாம் ... அதற்கு மேல் பெரிய செயற்பாட்டாளரோ/புலிகளின் லண்டன் செயற்பாட்டாளரோ அல்ல அவர்! ... அப்படி இருக்க ஏன் கைது செய்யப்பட்டார்??? ... பணத்துக்காக என்று சொன்னாலும் ... தேட பூதம் கிளம்புகிறது!!!!

.... குறித்த கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர், கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர். பெரியவருடன்(மே18இற்கு பின்னம் தன்னை பெரியவர் ஆக்கப்பார்த்தவர்) யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவராம், அந்த நட்பு பின்னும் என்ன இப்பவும் தொடர்கிறதாம்.

ஆனால் தற்போது கைது செய்யபட்டிருக்கும் பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்து பிரிந்திருக்கிறார்களாம்.

1.jpg

அண்மையில் கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர், மூன்று மாதங்கள் அங்கு சென்று பெரியவருடன் தங்கி/படுத்து/உணவருந்தி/... விட்டி இங்கு திரும்பியவராம். இவர் வந்தும் பெரியவரின் தொலைபேசி இலக்கத்தை பலருக்கு கொடுத்து .. அவருடன் கதையுங்கோ/உங்களுடன் கதைக்க விரும்புகிறார்/உங்களை எல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறார்/.. .... என்று கதைக்க கேட்டு, வாங்கியும் தள்ளியவராம். ... அப்படி மனைவி, பிள்ளையின் மீதில்லாத அன்பு, பென்னாம் பெரியவரின் மீது இருக்காம்!!!

மற்றும் இந்தப் பெண் அங்கு சென்றது வேறொருவருக்கும் தெரியாது (வேறு யாரும் காட்டி கொடுத்திருப்பார்கள் என்பதற்கு சந்தர்ப்பம் இல்லை), மகள் மூலம் போவதை அறிந்தவர், மனைவியை அங்கு பெரியவரின் உதவியுடன் உள்ளுக்குள் போட்டிருக்கிறார்????? .. கணவனை கேட்டால், பெரியவருடன் தொடர்பு கொண்டவராம், பெரியவர் இயலாது என்று சொல்லி விட்டார் என்கிறாராம்!!!!!

.... மொத்தத்தில் ... பென்னாம் பெரியவர், தன் விடசுவாசிக்காக, சிங்களத்தை ஏவி நடத்திய தாக்குதல் இதுவாகுமாம்!!!!?????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

அது யாரையா அந்த பெரியவர்?

வேற யார் கேபி தான் :lol:

  • தொடங்கியவர்

ஏதாவது செய்திடபோறாங்கப்பா .. உடனே மீட்பதற்கான நடவடிக்கை என்ன என்பதை ஆராயுங்கள் பிரிட்டிஸ் ஐ கமிசனோடு லைனில் இருங்கள் ... :( :(

... மகளோடு சேர்ந்து உறவினர்களும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம் ... பிரித்தானிய உதவி தூதுவர் சென்று பார்த்ததாகவும் தெரிகிறது!!!

.... முன்பும் ... சில வருடங்களுக்கு முன்னர் வெள்ளைவான் கடத்தல்கள் கொழும்பில் களை கட்டியிருந்த சமயம், லண்டனில் ஹரோ பகுதியில் இருந்து கொழும்பு சென்ற ஓர் வர்த்தகரும் கடத்தப்பட்டு காணாமல் போனார், அப்போ இங்கு சிலர் ஹரத் தோமஸ் எம்பியை பிடித்து, பிரித்தானிய அரசு மூலம் கொடுத்த அழுத்ததினால், அவரை விடுவித்தார்கள்.

plaza.jpg

உண்மையில் கடத்தப்பட்டவர், பம்பலப்பிட்டி யுனிட்டி/மஜிஸ்ரிக் பிளாஸாவின் மேல் இரு மாடிகளில் தானாம் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர். அக்கட்டத்தின் மேல் இரு மாடிகளையும் கடத்தப்பட்டவர்களை அடைத்து வைத்திருந்து கப்பம் அறவிட பயன்படுததப்பட்டதாம். அங்கு இரவு நேரங்களில் கோத்தபாய வந்து போவதும், சிலர் கொல்லப்பட்டு இரவுகளில் அங்கிருந்து தூக்கி சென்று எங்காவது எறிவதும் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததாம்.

கடத்தப்பட்டவர் லண்டன் வந்து சேர்ததும், கடத்தப்பட்டதன் பின்னணிகள்/உண்மைகளை வெளிக்கொணர சில தமிழ் ஊடகவியலாளர்கள் முயன்றார்கள், உண்மையில் அப்போது ஒரு சில ஊடகவியலாளர்கள் எடுத்த முயற்சியினாலேயே இவரை மீட்க முடிந்தது, ஆனால் அவர்களால் மீட்டு வந்தவரை சந்திக்க முடியவில்லை. உதவி புரிந்தவர்களுக்கே நன்றி சொல்ல அவரை அனுமதிக்கவில்லை ... அப்போது இலங்கையில் நடக்கும் அட்டூளியங்களை மேற்குலகும் கண்ணை மூடியபடி, பச்சைக்கொடி காட்டி நடத்த உதவியது. இந்த நாடகத்தில் ஹரத் தோமஸுடன், இங்குள்ள ஓர் தமிழ் கவுன்ஸிலரும் சிறப்பாக நடித்தார்கள். குடும்பத்தினரும் அவர்களது இலங்கையில் இருக்கும் உறவினர்களது பாதுகாப்பு கருதி பயந்து ஒதுங்கினார்கள். ...

... இதனால், அப்போது ... வெள்ளை வான் என்றால் என்ன? அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் யார்? ... போன்ற கேள்விகளுக்கு பதிலை ஆதாரங்களுடன் கொணர இருந்த சந்தர்ப்பம் நழுவிவிட்டது. ... வாணி குமார் போன்ற ஓரிருவரே முன்னுக்கு வருகிறார்கள். ஏனையோர் கப்பங்களை கட்டி விட்டும், தாம் தப்பினோம் என்றும் ஒதுங்கி மவுனமாகின்றனர் ..........

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

28wpdeh.jpg

கடத்தி வைக்கிறார்க்ள் என்றா போகாம இருக்கணும்.. நிலமை தெரியாமா போனா இதான் ஆகும்.. ஆயா விட்ட கோயா என்று போர் முடிந்ததற்கப்புறம் 3 ஸ்கேன்டல்ஸ்(குத்து படம் ஏறி இருக்கு சிறிலங்கன் டமில்ஸ் என்று சொல்லி) .. ஏண்டா இங்க என்ன சோ கேஸ் நடத்துகிறார்களா? அவன் இப்படித்தான் என்றால் நீங்க போகாம இருக்கபடாதா? அது அங்க உள்ளவர்களா ? அல்லது வெளிநாட்டில் இருந்து போனவர்களா? அயம் டோட்டலி கன்பூசன்

டிஸ்கி:

லெட்ஸ் பி பிராங்க்.. ஈழ தோழர்கள் ஓரளவுக்கு பண்பாடு கலாச்சாரம் உள்ளவர்கள் என தெரியும் .. எனவே இவ்வாறான சூழ்நிலைய கருத்து கொண்டு அனைத்தினையும் தவிர்த்திடுக .

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு துடிக்கிற அளவுக்கு கூட யாருக்கும் துடிக்க இல்லை.. அட போங்கப்பா ஐயாம் ஸ்லீப்பிங்...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு துடிக்கிற அளவுக்கு கூட யாருக்கும் துடிக்க இல்லை.. அட போங்கப்பா ஐயாம் ஸ்லீப்பிங்...

அந்த அளவுக்கு இறுக்கமாகி விட்டோம்..! :(

plaza.jpg

உண்மையில் கடத்தப்பட்டவர், பம்பலப்பிட்டி யுனிட்டி/மஜிஸ்ரிக் பிளாஸாவின் மேல் இரு மாடிகளில் தானாம் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர். அக்கட்டத்தின் மேல் இரு மாடிகளையும் கடத்தப்பட்டவர்களை அடைத்து வைத்திருந்து கப்பம் அறவிட பயன்படுததப்பட்டதாம். அங்கு இரவு நேரங்களில் கோத்தபாய வந்து போவதும், சிலர் கொல்லப்பட்டு இரவுகளில் அங்கிருந்து தூக்கி சென்று எங்காவது எறிவதும் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததாம்.

யுனிட்டி பிளாசா அல்ல, அதற்கு பின்னால் இருக்கும் (கடற்கரையருகில், பம்பலப்பிட்டி ரயில் நிலையம் அருகில்) 21 மாடிக்கட்டிடத்திலும், கொள்ளுப்பிட்டி இந்திய தூதரகத்தின் அருகில் கடற்கரையுடன் இருக்கும் முகாமில், புதிய பாராளுமன்ற வாளாகத்தின் அருகில் உள்ள ஒரு தடுப்பிடம், தெஹிவளை மைத்திரி ஒழுங்கையில் உள்ள ஒரு முகாமில், நாவலை (நுகேகொடை) பகுதியில் உள்ள சில வீடுகளில், அத்துருகிரியவில் உள்ள சில வீடுகளில் கடத்தப்பட்டவர்களை கப்பம் பெறும் வரை தடுத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் பல இடங்கள் இருக்கலாம்.

சிங்களக் காட்டுமிராண்டிப் பயங்கரவாதி கோத்தபாய கருணா, டக்லஸ், KP ஆதரவுடன் விமானப்படை, STF, MSD மூலமாக இந்தக் கடத்தல் கப்பம் வேலைகளை செய்து வருகிறான். இதில் சம்பிக்க உட்பட சிஹல உறுமையவைச் சேர்ந்த சில பிக்குகளுக்கும், விமல் வீரவன்ச உட்பட்ட சில JVP யினருக்கும் நேரடித் தொடர்புகள் உண்டாம். ஆதாரங்கள் விரைவில் வருமென கூறுகிறார்கள்.

Edited by ஆராவமுதன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் லங்காவிற்கு விரும்பி போகவில்லை May 2009 பிறகு, அங்கு எமது உறவுகள் இருப்பதால்தான், மாமிக்கு போன வருடம் அவசர சிகிச்சை என்றபடியால் குடும்பத்துடன் போய் வந்தனான்,

தாய்யும் மகளும் பாதுகாப்பாக மீண்டுவர வேண்டும்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

... இன்னும் இந்த இளம் தாய் சிங்களத்தினால் விடுவிக்கப்படவில்லையாம்!!! .... பிரதமாரம் உத்திரகுமாரரின் நெருங்கிய ஆதரவாளராம் ... பிரதமர் அன்ட் கோவினர், இவரது விடுதலைக்கு குரலாவது கொடுத்தனரா??????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் இருந்து, விடுமுறையை கழிப்பதற்காக கொழும்பு சென்ற, பிரித்தானிய பிரஜைகளான தாயாரும், அவரது இளம் மகளும் கொழும்பில், இன்று சிங்கள இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சிங்கள சித்திரவைதை கூடமான 4'ம் மாடியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

இவர்களை விடுவிப்பதற்காக பெருமளவு பணம் கேட்க்கப்பட்டிருப்பதாகவும், கொடுக்கத் தவறின் புலிகளுடன் தொடர்பு உடையவர்களென குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட இவர்கள், பல வருடங்களாக லண்டனில் வசித்து வருவதாகவும் தெரிய வருகிறது.

அண்மைக்காலங்களாக, இவ்வாறு புலத்தில் இருந்து கொழும்பு சென்ற பலர், சிங்கள புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு, பின் அவர்களின் குடும்பங்கள் மிரட்டப்பட்டு பெருமளவு பணம் கப்பமாக பெறப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்படுவது அதிகரித்து செல்கிறது.

... இன்னும் இந்த இளம் தாய் சிங்களத்தினால் விடுவிக்கப்படவில்லையாம்!!! .... பிரதமாரம் உத்திரகுமாரரின் நெருங்கிய ஆதரவாளராம் ... பிரதமர் அன்ட் கோவினர், இவரது விடுதலைக்கு குரலாவது கொடுத்தனரா??????

ஒரு பிரிட்டிஸ் பிரசை கொழுப்பிலை கொழும்பு போய்.........போய்...போய்...பேப்பேப்பே

இதுக்கு ஏன் உருத்திரகுமார் அன்ட் கோ சிரத்தை எடுக்கோணும்? சரி உங்கடை பாசையிலை எடுக்கிறதாயிருந்தாலும் என்னெண்டு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.