Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு ஈழத்தமிழர்கள் ஒருமுறை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை: தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரலாற்றில் ஒருமுறை கூட ஈழத்தமிழர்கள் மத்தியிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்படுகிறார்களே அதை நாங்கள் கண்டிக்கிறோம் என்ற குரல் வந்ததே கிடையாது என்று நேற்று சென்னையில் நடைபெற்ற தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை பொதுக்கூட்டத்தில் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

இவர் உரையின் காணொளி

[media=]

http://www.periyarth...ikkal-3rd-year/

Edited by திராவிட மாணவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தமிழர்கள் மீதான சிங்கள கடற்படையினரின் தாக்குதலுக்கு புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் பலமுறை கண்டனமும் தெரிவித்து போராட்டமும் செய்துள்ளனர். சமீபத்தில் கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா, அமெரிக்கா, ஐரோப்பா வாழ் ஈழத்தமிழர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். தங்கள் அமைப்பின் சார்பில் இந்திய, தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்திருந்தனர். இவ்வாறு இருக்க தமிழ் தேச பொதுவுடைமைக்கட்சியின் பொதுச்செயலாளர் தவறான செய்திகளை தமிழக மக்களிடம் பரப்புவது சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

1990 இந்தியப் படைகள் வெளியேறியது முதல் 2009 முள்ளிவாய்க்கால் வரை ஈழக் கடலில்.. தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படவில்லை... அல்லது வெகு சில சம்பவங்களே நடந்திருந்தன. காரணம் கடல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்துக்குள் இருந்தது. தமிழக மீனவர்களும் ஈழ மீனவர்களும் மீன் பிடி தொடர்பான சர்ச்சைகளில் ஈடுபட்ட போதும்.. விடுதலைப்புலிகள் அவை தொடர்பில் சிநேகித பூர்வ நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டிருந்தனர்.

மேலும்.. தமிழக மீனவர்கள் மீதான பாதுகாப்பில் விடுதலைப்புலிகள் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டிருந்ததோடு.. அவர்களின் பாதுகாப்பிற்கு கடற் புலிகளின் பலமும் இருப்பும் அவசியம் என்பதை உணர்த்தியும் இருந்தனர். தமிழக மீனவர்களும் அதனை உணர்ந்திருந்தனர்.

மேலும் 1984 இல் இருந்தே தமிழக மீனவர்கள் மீதான சிங்கள இனவெறியர்களின் தாக்குதல்களை ஈழத்தமிழர்கள் கண்டித்து வந்துள்ளனர்.

இருந்தும்.. தமிழக மீனவர்களின் இழப்புக்கு சிங்களவனிடம் அடி வாங்கிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழன் கண்டனம் தெரிவித்து என்ன ஆகிடப் போகுது என்பது போலவே தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை ஈழத்தமிழர்களின் கண்டனங்கள் தடுத்து நிறுத்தவில்லை! அந்த வகையில் இந்தக் கண்டனங்களால்.. ஏதாவது தீர்வு வரும்.. என்றால் நிச்சயம் ஈழத்தமிழன் மீண்டும் மீண்டும்.. கண்டன அறிக்கைகளை விடுவதை வரப்பிரசாதமாகவே கருதுவான்.

கடற்புலிகளின் இருப்பு இன்று இல்லாத ஒரு நிலையில்.. தமிழக மீனவர்களினதும்.. ஈழ மீனவர்களினதும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில்.. ஈழத்தமிழன் கண்டனை அறிக்கை விடுவதில்லை என்ற கோசம்.. கொலையாளிகளின் செயல்கள் குறை மதிப்பீடு செய்யப்படவும்.. கொலைக்கு காரணமாகவுள்ள இந்திய மத்திய அரசு மற்றும் அதன் கடலோரக் காவல் படை போன்றவற்றின் பாராமுகமான செயற்பாடுகளை மறைக்கவுமே வழி செய்யும்..!

ஈழத்தமிழன்.. தன்னை மட்டுமன்றி.. தமிழக சொந்தங்களையும் காக்க முடியவில்லையே என்ற சோகத்தில் தினமும் அழு வடியும் இன்றைய பொழுதுகளில்.. அவன் அறிக்கை விட்டு ஆகப் போவது தான் என்ன..??! உயிர் நீத்த தமிழக மீனவர்கள் மீள உயிர் பெறுவார்களா..??! அல்லது உறவுகளை இழந்து வறுமையில் வாடும் மீனவக் குடும்பங்கள் அதில் இருந்து மீட்சி தான் பெற முடியுமா..????!

இது அம்பையும் நோகாமல்.. எய்தவனையும் நோகாமல்.. எங்கையோ நின்று தன் அழிவையே தடுக்க முடியாமல்.. அழுது புரண்டு கொண்டிருப்பவனை குற்றவாளி ஆக்கும் செயலாகவே தெரிகிறது. இது உண்மையை உணராத ஒரு பேச்சு.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு றோ வின் ஆளாக இருக்கலாமென சந்தேகம் வருகிறது. இரண்டு பக்கத் தமிழர்களையும் ஒருவருக்கொருவர் வெறுப்பேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். அவர் கூறுவது பச்சைப் பொய். ஈழத்தமிழர்கள் எப்போதும் தமிழக மீனவர்களுக்கு ஏற்படுத்தப்படும் அனியாயங்களைக் குறித்து மிகவும் ஆத்திரமடைபவர்களாகவே உள்ளனர். எந்தத் தரவுகளை அல்லது புள்ளி விபரங்களை வைத்து அவர் இப்படிக் கூறுகிறாரென்று தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணை ஆசிரியர் மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்

the1.gif

protest_ind_2012_18.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் பலருக்கு உண்மைகள் தெரிந்திருக்கவில்லை.. அவர்களுள் ஒருவராகவும் இவர் இருக்கலாம்.. :unsure:

அண்மையில் இயக்குனர் ராமின் பேட்டி ஒரு காணொளியாக வந்திருந்தது.. அதில் ஈழத்தமிழ் அமைப்புக்கள் 90களின்பின் சரியான பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.. ராஜீவ் காந்தி கொலைக்குப்பின் அங்கிருந்த நிலைமைகள் பிரச்சாரம் செய்வதுமாதிரி இருக்கவில்லை என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை போலும்.. அதுபோல புலம்பெயர் அமைப்புக்கள் என்பதே கிட்டத்தட்ட பூச்சியம்.. இதில் எங்கிருந்து பிரச்சாரம் செய்வது? :rolleyes:

இந்திய அமைதி(?)ப்படை காலத்திலேயே நேசக்கரம், அன்புவழி மற்றும் இன்னொரு பெயரில் வானொலியில் புலிகளுக்கு எதிரான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.. அவற்றை நாங்கள் அப்போது மோசக்கரம், வம்புவழி என்று சொல்லுவோம்.. :D

இதன்மூலம் புலிகள் என்றால் பேய்கள் என்கிற நச்சுவிதை தமிழகத்தில் தூவப்பட்டுவிட்டது.. ராஜீவின் முடிவுடன் எல்லாம் சுபம்.. தமிழகத்தில் வாயே திறக்க முடியாது.. :rolleyes:

தமிழக மீனவ உறவுகளின் படுகொலை தொடர்பாக ஈழத்தில் வாழும் தமிழர்கள் கண்டனம் தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளபோதும், புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் கண்டணங்களை இணைய வழி மூலம் எப்பொழுதுமே தெரிவிக்கிறார்கள். அது மாத்திரம்தான் தற்சமயம் எமது குரலை வெளிப்படுத்த உள்ள ஒரே வழி.

எல்லா வழிகளையும் அடைத்து

விட்டு, சகோதரன் சாவதைக் பார்த்து கண்டனம் தெரிவிக்கச் சொன்னால் நாங்கள் எங்கே போவது? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிணற்றுத்தவளைகளை கேள்விப்பட்டிருக்கிறேன் கண்டதில்லை... இப்போது தமிழகத்தில் நிறைய பேரை காண முடிகிறது...! அண்மையில் கூட நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்திரகுமார் ஓரிடத்தில் இந்த விடையம் பற்றி பேசிக் கேட்ட நினைவு... அதை விட பல்வேறு சந்தர்பங்களில் கனேடிய தமிழ் அமைப்புக்கள் கூட கண்டனங்களை வெளியிட்டுள்ளன. கூகிள் தேடல் செய்தால் கூட அவற்றை அறிந்திருக்க முடியும்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எம்மை பாதுகாக்கும்

அது ஒரு வல்லரசு

அது எமது தாய் நாடு என்றும் சொல்கிறார்கள்

எம்மை கொலை செய்ததை தீக்குளித்துக்கொண்டிருக்கும் ஒருவனிடமிருந்தும் எதிர்பபார்க்கின்றார்கள்.

(அதையும் மீறி நாம் எதிர்ப்புக்குரல் எழுப்பினோம் என்பது வேறு)

மிஸ்டர் றோ ஏஜென்ட்,

கண்டனம் தெரிவிச்சு... உங்க ஒண்டு கிடக்குதே சேடம் இழுத்துக் கொண்டு... தந்தி அடி... கடிதம் எழுது எண்டு ஊரை பேய்க்காட்டிகொண்டு...

அது மாதிரி எதிர்பார்க்கிறீங்களா?

இந்திய கூலிப்படையும் சிறிலங்கா பயங்கரவாதிகளும் தமிழ்நாட்டு மீனவர்களை கொல்லும் போது நான்

நான் உண்ணாவிரதம் எல்லாம் இருந்தனான்.. காலமை எட்டு மணியில இருந்து மத்தியானம் 12 மணி வரைக்கும் சாப்பிடாம...

ஒரு சொட்டு தண்ணி கூட எண்ட வாயில படலை.

இதுக்கும் மேல என்னத்த நீங்க எதிர்பார்க்கிறீங்க?

நல்லா முட்டி விடு சாமி... றோக்காரன் வேற என்ன எல்லாம் செய்ய சொன்னவன்?

தமிழ்நாட்டில "லாம்ப் போஸ்ட்" எண்டு ஒரு சாமான் இல்லையா?

உதுகள் எல்லாம் அதில இருக்க வேண்டியதுகள்.

அது ஒரு வல்லரசு

அது ஒரு வலசு அரசு.

  • கருத்துக்கள உறவுகள்

தனது கட்சியும் தானும் பிரபலம் அடையவேண்டும் என

இவர் நினைத்தால் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கலாம்.

எதற்காகவோ ஈழத்தமிழர்களை இதற்குள் இழுக்கின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டிலுள்ள ஒருசில அரசியல்வாதிகளுக்கு ஈழத்தமிழர் ஒரு பொன்வாத்து.

நாம் இங்கே சிலவற்றை விளங்கப்படுத்த வேண்டும். மீனவர்கள் விடுதலைப்புலிகளின் அன்புக்குரியவர்கள். அவர்களை சிங்கள அரசு கொலை செய்வதற்கு அதுவேதான் காரணம். எனவே ஈழத்தமிழரின் விடுதலையே தான் மீனவர்களின் பாதுகாப்பும். புலம் பெயர் தமிழர்கள் தங்கள் தாயகமக்கள் கொலைகளுடந்தான் சேர்த்து மீனவர்கள் கொலைகளையும் கணக்கிடுகிறார்கள். அதை நாம் இவருக்கு விளங்க வைக்க வேண்டும். அதில், இவர் எதிர்பார்பதுபோல் இரண்டு தனித்தனி அறிக்கை போராட்டங்கள் அவசியமல்ல.

இந்த விடயம் அவருக்கு தெளிவாக இல்லை என்பதால் மட்டும் அவரை நாம் சந்தேகிக்க வேண்டியதில்லை.

ஆனால் அதேநேரம் அவர் தனது சிறு குறிப்புரையில் பலவற்றை விளங்கவைக்கவும் இல்லை. நேரம் போததாக இருக்கலாம்.

சம்பந்தரின் நிலை இந்தியாவுடன் ஒத்துப் போய் அதன் பிராந்திய நலங்களுக்கு துணை போக வென்பதாகும். அதேநேரம் டக்கிலஸ் ராமேஸ்வரம் போக துணிகிறார். ஒரு பகுதி புலம் பெயர் மக்கள் சர்வதேச ஒழுங்கமைப்பில் நாம் இந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

நம்மில் பலர் கடந்த காலங்களில் அதையேதான் நினத்தோம். ஆனால் இன்று இவர் நினப்பது போலவே, இந்தியாவை நமது நிரந்தர எதிரியாகத்தான் நினைக்கிறோம். இந்தியா ஈழத்தின் எதிரி, ஏன் எனில் இந்தியா தமிழ் நாட்டின் எதிரி. இந்தியா தமிழ் நாட்டின் எதிரி ஏன் எனில் அது இந்திய அரசியல் அமைப்பில் எழுதப்படிருக்கிறது. மணிப்பூர், நாகலாந்து, அசாம், யம்மு-கஸ்மீர் எல்லவற்றிற்கும் இந்தியா எதிரி ஏன் எனில் இதுதான் இந்தியாவின் அரசியல் அமைப்பில் எழுத பட்டிருக்கிறது. அதாவது இந்தியாவேதான் தனது மக்களின் எதிரி. இந்தியா மாகாணங்களாகப்பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு ஒற்றை ஆட்சி இலங்கை. அங்கே ஆரிய, கிந்திய, இந்துகளுக்கு மட்டும் தான் உரிமைகளாக ஆக வரையப்பட்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்பேதான் மிக வன்மையான இந்திய எதிரி. இந்த அரசியல் அமைப்பு மாறப்போகும் சந்தர்ப்பம் இல்லை. எனவே பல மாநிலங்கள் தம்மை தாம் ஆளாமுடியாமல், இறுதியில் ஒருநாள் பிரிந்து போகவேண்டியதுதான் வழி. அவர் அதை தெரிந்து வைத்துதான் பேசுகிறார் போலிருக்கு. எனவே இந்தியாவுடன் சேர்ந்து போக வெளிக்கிடும் கூட்டமைப்பு போன்றவற்றுடன் அவர் முரணுவது இயல்பு.

ஆனால் அவர் ஒன்றை மட்டும் பிழையா அனுமனிக்கிறார் போலிருக்கிறது. புலம் பெயர் மக்கள் அரசியல் சக்தியாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார். அண்மைய பல சரியான திசை நகர்வுகள் புலம் பெயர் மக்களின் செயல்ப்பாடுகளால் நடந்தவையே. என்வே புலம் பெயர் மக்களேதான் கூட்டமைப்பு போன்ற உள்நாட்டு அரசியலையும் கட்டுப்படுத்துகிறார்கள் என்றும் நினைக்கிறார் போலிருக்கிறது. அவ்வாறாயின் ஏன் இவர்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்பினர், தமிழ் நாட்டின் சுதந்திரத்தையோ, மீனவர்களின் இயல்பு வாழ்க்கைத் திரும்பலைப்பற்றியோ கதைப்பதில்லை என்றதே இவரின் கேள்வியாக நாம் எடுத்து கொள்ளவேண்டும்.

புலம்பேயர் மக்கள் கூட்டமைப்பை கட்டுப்படுத்தவில்லை. கூட்டமைப்பு தற்போதைய இலங்கையின் பிடியில் இருக்கும் போது இந்தியாவை தொடந்து நண்பனாகத்தான் பார்க்கப்போகிறது. என்வே அது தமிழ்நாட்டின் விடுதலையைப்பற்றியோ அல்லது மீனவர் பிரச்சனையை பற்றியோ பேச சுனக்கம் காட்டும். இது புலம் பெயர் மக்களின் நிலைப்பாட்டைப் பாதிக்காது. உண்மையின்படி நாடுகடந்த தமிழீழ அரசின் கொள்கைகளில், ஒன்று தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கெதிராக நடக்கும், மத்திய, மாநில அரசுகளின் அடக்குமுறைகளை சர்வதேச மட்டத்தில் வெளிக்கொண்டு வருவதாகும். என்வே இவர் தமிழீழமக்களின் நிலைபாடுகளைப்பற்றி அறிய, அவர்கள் சுதந்திரம் அடைந்து வாய்விட்டு சொல்லும் வரை பொறுத்திருப்பது நல்லது. தமிழ் நாடு, இதுவரையில், தென்கிழக்காசிவின் தென் கொறியாவாக மாறியிருந்திருக்க வேண்டும். திட்டமிட்ட காங்கிரசின் சதியும், மத்தியில் பதவிதேடி அலையும் அரசியல் வாதிகளும் அதை கெடுத்துவிட்டார்கள். இனித்தன்னும் யப்பானிய, அமெரிக்க உதவியுடன் இவர்கள் தமிழ் நாட்டின் பொருளாதார, அரசியல் உரிமைகளை கட்டி எழுப்பவேண்டும். மீனவரின் பாதுகாப்பு மட்டுமல்ல உணமியான தமிழ் நாட்டின் சுபீட்சமும்தான் புலம் பெயர் மக்களின் அபிலாசைகள். தமிழ்நாட்டு மக்கள் அதை அடையும் வரை புலம்பெயர் மக்களின் நிபந்தனை இல்லாத ஆதரவு அதற்கு உண்டு.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.