Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துப்படம் - 31.10.2007

Featured Replies

bt2.jpg

எண்ணக்கரு: யாழ் இணைய செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா

ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு சமன் என்று கேள்விப்பட்டிருக்கிறன்,

இந்தப் படத்தை விளக்கிறதுக்கு 1000 சொற்கள் தேவை போலக்கிடக்கு!

குறுக்ஸ், அப்படியே ஒரு கட்டுரையையும் கீழ எழுதினா நல்லது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சுயசிந்தனை அற்ற புலத்தமிழர்கள் என்று யாரை சொல்கிறீர்கள்? "ஒரு சில" என்று போட்டிருந்தால் புத்திசாலித்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சுயசிந்தனை அற்ற புலத்தமிழர்கள் என்று யாரை சொல்கிறீர்கள்? "ஒரு சில" என்று போட்டிருந்தால் புத்திசாலித்தனம்.

எல்லோரையும் சொல்லவில்லை. சுயசிந்தனையும், ஈடுபாடுமற்ற புலத்தமிழர்களைத் தான் கருத்துபடம் சொல்கிறது. சுயசிந்தனையும், ஈடுபாடுமுள்ள புலத்தமிழர்களைக் கருத்துப்படம் சொல்லவில்லை.

கருத்து சொல்லுற படம் எண்டது போய் கணக்கு காட்டும் படம் எண்டு போடலாம் போலகிடக்கு....!!

அது சரி புலம் எண்டால் என்ன..?? சொந்த நிலம்தானே....! தாயக மக்களை இவ்வளவு கேவலப்படுத்தி இருக்க வேண்டியதில்லை....

புலம் பெயர்ந்தவர்களை ( இடம் பெயர்ந்தவர்களை ) சொல்லி இருந்தால் கூட இது ஏற்பானது இல்லை.. ஏன் எண்டால் புலம் பெயர் தமிழருக்கும் அவர்களின் செயல்களுக்கும் தேசிய தலைவர் மாவீரர் நாள் உரையினூடு மதிப்பளிக்க இங்கை யாழ்களமும், அதன் அறிஞர் களும் அதை வேற மாதிரி நோக்குகிறது..... கெடுகுடி சொல் கேளாது எண்ட நிலைதான்....!

இங்கை தூர நோக்கும் விளைவுகளை பற்றி யாரும் சிந்திக்க மாட்டினம் போல....

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் எண்டால் புலம் பெயர் தமிழருக்கும் அவர்களின் செயல்களுக்கும் தேசிய தலைவர் மாவீரர் நாள் உரையினூடு மதிப்பளிக்க இங்கை யாழ்களமும், அதன் அறிஞர் களும் அதை வேற மாதிரி நோக்குகிறது..... கெடுகுடி சொல் கேளாது எண்ட நிலைதான்....!

ஓமோம். உந்த புலம் பெயர்ந்த சனம் ஏன் உவ்வளவு அளப்பரிய செயல்களை செய்யிறினம் எண்டு தலைவர் ஆதங்கப்பட்டவராம்.

வாற வருசத்தில இருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கட "செயல்களை" அரைவாசியாக குறைக்கும்படி இந்த மாவீரர் தின உரையிலை தலைவர் கேட்பாராம், அது உண்மையே பாருங்கோ?

சாணக்கியன், ஒவ்வொருவரும் கருத்துப்படத்தை எப்படி விளங்குகிறீர்கள் பார்த்தவுடன் எப்படியான எண்ணங்கள் வருகிறது என்று பகிர்வது தான் நல்லம். உங்கள் எண்ணங்களை எழுதவும்.

கட்டுரையாக இல்லது உதவியாக சொல்லக் கூடியது இந்தக் கருத்துப் படத்திற்கு பாவிப்பதற்கு பின்வரும் தகவல்களும் ஒருமுறை கவனத்தில் கொள்ளப்பட்டது:

பேரினவாதம்,

தமிழ் துரோகிகள்,

அரசபயங்கரவாதம்

பெரும்பான்மை 83% (அல்லது 74%?),

பொருளாதாரம் 27$bil,

சர்வதேச அழுத்தங்கள்,

புலம்பெயர் தமிழர்களின்

மந்தமான ஈடுபாடு, சுயநலம்,

மூடநம்பிக்கைகளில் விரையம்,

பன்முக அறிவியல் பலவீனம்

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் வேற கரும்புலிகள் வேறையா..???! கரும்புலிகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் அங்கம் தானே. கருத்துப்படம் தவறான எண்ணங்களை காட்ட முனையக் கூடாது. தரைப்புலிகள் கடற்புலிகள் வான்புலிகள் கரும்புலிகள் என்று பல பிரிவுகளை உள்ளடகியதுதான் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற தமிழ் மக்களின் அமைப்பு. இதற்கு மேலாக வேவுப்புலிகள் உளவுப்புலிகள் என்றும் பிரிவுகள் உள்ளன.

தமிழீழத்தின் வரலாற்றை அறியாதவர்கள் போல கருத்தோவியங்களூடு தங்கள் சித்தாந்த மேலாதிக்கத் திணிப்பை செய்ய முன்னிற்பதிலும்.. ஆழமாக சிந்தித்து.. காட்டப்படும் சிறு விடயமும் மக்களால் தவறாகப் புரிந்துகொள்ள முடியாத படிக்கு வழங்கப்படுதல் முக்கியமானது.

ஓவியரை விட ஓவியரின் தூரிகைக்குப் பின்னால் இருக்கின்ற இயக்கு சக்திகளே இதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

புலத்தமிழர்கள் என்ற சொற்பயன்பாடு தவறானது. அது தாயக மக்களைக் குறித்து நிற்பது. புகலிடத்தமிழர்கள் என்பதே சரியானது.

கண்ணீர் விடும் பெண்ணாகவும்.. பின்னர் இரத்தம் கக்கும் இதயமாகவும் உள்ளவை எதைக் குறிக்கின்றன. யாராவது விளங்கிக் கொண்டதை கொஞ்சம் எழுதுறீங்களா..???! காரணம் சமநிலைக்குப் பின்னால்.. பெரும் துன்பம் இருக்கிறது.. சமநிலைக்கு முன் வெறும் கண்ணீர்தான் என்பது போல.... இருக்கே...! இது சிங்களப் பேரினவாதத்துக்கும் தமிழ் துரோகத்தனத்துக்கும் மறைமுகமாக நியாயம் கற்பிப்பது போலல்லவா இருக்கிறது. :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் நுனிப்புல்மேய்ந்ததில் புரிந்தது ,விளங்கிகொன்டது.......புலிகளின் பலம் குறைவாக இருக்கும் போதுகண்ணீருடன் இருந்ததாகவும் சமநிலையில் இருக்கும் போது நெஞ்சில் உதிரம் கொட்டுவது போலவும்,புலிகளின் பலம் கூடினால் என்ன நடக்குமோ என்றுஒரு கேள்வியை கேட்பது போல தெரிகிறது.என்ன நான் தப்பா விளங்கிட்டனோ அதற்காக புத்தன் புலிகளிற்கு விரோதமானவன் என்ற கருத்தை யாழில் படம் எடுத்து போட்டுவிடாதையுங்கோ... :wub:

ஓமோம். உந்த புலம் பெயர்ந்த சனம் ஏன் உவ்வளவு அளப்பரிய செயல்களை செய்யிறினம் எண்டு தலைவர் ஆதங்கப்பட்டவராம்.

வாற வருசத்தில இருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கட "செயல்களை" அரைவாசியாக குறைக்கும்படி இந்த மாவீரர் தின உரையிலை தலைவர் கேட்பாராம், அது உண்மையே பாருங்கோ?

தலைவர் சொன்னவைகளை( என்ன இனிமேல் சொல்லுவார் என்பவைகளையும்) சீண்டும் அளவுக்கு இருக்கிறது யாழ்கள் செய்தி குழுமத்தின் மமதை... !

தமிழீழ தேசிய தலைவர் 2006 ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் சொன்னது...!

  • இந்தச் சந்தர்ப்பத்திலே எமது புலம்பெயர்ந்த உறவுகள் காலங்காலமாக விடுதலைப் போராட்டத்திற்குச் செய்துவரும் பெரும் பங்களிப்பிற்கும் உதவிகளுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதோடு தொடர்ந்தும், உங்கள் தார்மீகக் கடமையை ஆற்றுமாறு வேண்டுகிறேன்

http://www.tamilnation.org/ltte/vp/mahaveerar/vp06.htm

மிகவும் சீரிய தூர நோக்கோடு சொல்லப்பட்ட வசனம்.... ஆனால் இவைகளை மறுத்து வந்து இருக்கிறது கருத்து படம்... அதுக்கு யாழ்கள செய்தி குழுமம் காரணம்...

கருத்துபடம் சொல்லும் செய்தி அனேகமாக துரோக ஊடகங்கள் சொல்லும் செய்திக்கு ஒப்பானது... புலம் பெயர்ந்த மக்கள் தமிழீழம் அமைவதை அக்கறை படவில்லை, விரும்பவில்லை... மிகவும் குறுகிய மக்களே தமிழீழத்தை உருவாக்க ஆதரவளிக்கிறார்கள்...

அனேகமாக இது துரோக ஊடகம் ஒண்றில் வந்து இருக்க வேண்டிய கருத்து படம் யாழ் களத்தில் வந்து இருக்கிறது...

Edited by தயா

இந்த படத்தை பார்த்தவுடன் பேபியான நேக்கு என்ன எண்ணம் வந்தது என்றா முதல் படத்தில தராசில் அவர்களு குறிபிட்ட ஆறு விடயங்களாள் தராசில் விடுதலை புலிகளின் பலம் குறைவாக இருக்கிறது சிங்கள பேரினவாதிகளின் கை பலம் பெற்று இருக்கிறது அத்துடன் அந்த பெண்ணிண் ஒரு பக்கம் கண்ணில் இருந்து அல்லவா கண்ணீர் வருகிறது அதாவது தாயகத்தில் உள்ள மக்கள் படும் அவலங்களை சித்தரிக்கிறது என்று நினைக்கிறேன் :wub: !!இது குறிபிட்ட ஒரு காலதிற்கு முன்னம்!! :)

தற்போது அதாவது அநுராதபுர வான் படை தள தாக்குதலின் பின் தராசின் இரு பக்கமும் சமமாக இருக்கிறது ஆனாலும் இரத்தத்தை கொடுத்து சமனாக தராசை நிறுத்தி இருக்கிறார்கள் கரும்புலிகள் என்பதை இதயத்தில் இருந்து இரத்தம் வருவதன் மூலம் காட்டி இருக்கிறார்கள் :D !! அத்துடன் இனி "அநுராதபுர வான் படை தாக்குதலை பொறுபேற்று நடத்திய இளங்கோ அண்ணா சொன்ன மாதிரி" எனி நாம் தலைவரின் கைகளை பலபடுத்துவதன் மூலம் தராசில் எம்பக்கத்தை உயர்த்தலாம் என்று சொல்ல வருகிறார்கள் என்று நினைக்கிறேன் :unsure: !!அதன் பின் பேச்சு வார்த்தைக்கு போனா நம் பக்கம் ஓங்கி இருக்கும் என்ற ரீதியிலும் இந்த கருத்து படத்தை எடுத்து கொள்ளளாம்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

இப்படிக்கு உலக புகழ் பெற்ற செய்தி ஆய்வாளர்

ஜம்மு பேபி!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழக்கம் போல் எனது கருத்தை தேசிய பாதுகாப்பு கருதி எடுத்துவிட்டார்கள்.

இதற்கு சரியான பதில் தரவில்லை என்றால் இக்கழத்திலிருந்து நான் இன்றே விடைபெறுகிறேன்!

குழப்பகரமான படம்.

புறதமிழரை பற்றிய குறிப்பு மிகவும் அபாயகரமானது. எனக்கு தெரிந்தவர்கள் எல்லொருக்கும் தெரியும் தனிநாடுதான் ஒரேதீர்வு என்று.... இதை (புறதமிழரை பற்றிய குறிப்பு) ''' அறியாமல்புகுத்தும்பரப்புரை

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தை பார்த்தவுடன் பேபியான நேக்கு என்ன எண்ணம் வந்தது என்றா முதல் படத்தில தராசில் அவர்களு குறிபிட்ட ஆறு விடயங்களாள் தராசில் விடுதலை புலிகளின் பலம் குறைவாக இருக்கிறது சிங்கள பேரினவாதிகளின் கை பலம் பெற்று இருக்கிறது அத்துடன் அந்த பெண்ணிண் ஒரு பக்கம் கண்ணில் இருந்து அல்லவா கண்ணீர் வருகிறது அதாவது தாயகத்தில் உள்ள மக்கள் படும் அவலங்களை சித்தரிக்கிறது என்று நினைக்கிறேன் :wub: !!இது குறிபிட்ட ஒரு காலதிற்கு முன்னம்!! :lol:

தற்போது அதாவது அநுராதபுர வான் படை தள தாக்குதலின் பின் தராசின் இரு பக்கமும் சமமாக இருக்கிறது ஆனாலும் இரத்தத்தை கொடுத்து சமனாக தராசை நிறுத்தி இருக்கிறார்கள் கரும்புலிகள் என்பதை இதயத்தில் இருந்து இரத்தம் வருவதன் மூலம் காட்டி இருக்கிறார்கள் :D !! அத்துடன் இனி "அநுராதபுர வான் படை தாக்குதலை பொறுபேற்று நடத்திய இளங்கோ அண்ணா சொன்ன மாதிரி" எனி நாம் தலைவரின் கைகளை பலபடுத்துவதன் மூலம் தராசில் எம்பக்கத்தை உயர்த்தலாம் என்று சொல்ல வருகிறார்கள் என்று நினைக்கிறேன் :D !!அதன் பின் பேச்சு வார்த்தைக்கு போனா நம் பக்கம் ஓங்கி இருக்கும் என்ற ரீதியிலும் இந்த கருத்து படத்தை எடுத்து கொள்ளளாம்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

இப்படிக்கு உலக புகழ் பெற்ற செய்தி ஆய்வாளர்

ஜம்மு பேபி!!

நல்ல அருமையான விளக்கத்தினைத் தந்துள்ளீர்கள்.

குறுக்ஸ்,

போராட்டத்தின் ஒரு புறத்தில் புலிகளும், மறு புறத்தில் குறிப்பிடப்பட்ட ஏழும் ஒரு அணியாக நின்றபோது புலிகளின் பக்கம் பலவீனமாக இருந்ததாகவும் கரும்புலித்தாக்குதலின் மூலம் அவை சமன் செய்யப்பட்டதாவும் முதல் சில வினாடிகள் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.

(1 தொடக்கம் 3 வினாடிகளில்)

பின்னர் மூளையை கொஞ்சம் கசக்கி யோசித்ததில் பின்னணியில் காணப்படும் பெண் தமிழீழத்தாயாகவும் அவள் முன்னர் கண்ணீர் வடித்ததாகவும் பின்னர் கரும்புலிகளின் பொருட்டு இதயத்திலிருந்து (மனது - அன்பு) இரத்தக்கண்ணீர் வடிப்பதாகவும் (ஏசுவின் இதயத்திலிருந்து அதீத அன்பின் பொருட்டு இரத்தம் வடிவதை போல) சொல்லப்படும் செய்தியை புரிந்து கொள்ள முடிகிறது.

(4 தொடக்கம் 15++ வினாடிகளில்)

தொடர்ந்து மனதில் உடனடியாகவே தோன்றும் கேள்விகளாவன,

1) இத்தனைக்கும் பக்கபலமாக உறுதுணையாக நின்று அளப்பரிய தியாகத்தை செய்யும் எங்கள் தாயக மக்களின் நிலை என்ன?

2) கரும் புலிகள் விடுதலைப் புலிகளின் ஒரு பிரிவுதானே?

3) முன்னர் ஈடுபாடற்ற சுயநலத்தமிழர்கள் சிலர் தாக்குதல் வெற்றியில் களிப்படைந்து புலிகளை வானளாவ புகழ்ந்து கொண்டாடினரே, அதனை ஒரு சில உருளைகள் புலிகளின் பக்கம் நிலத்தில் விழுந்து கிடப்பதாக காட்டியிருக்கலாமே?

போன்றவையாகும்.

எனது ஆதங்கமானது இந்த கருத்துச்சித்திரம் சொல்லவந்த கருத்து (அது எதுவாக இருந்தாலும்) அதிகமாக கூற முற்பட்டதாலோ என்னவே வெற்றியடையவில்லையே என்பதே. பின்வருவன எனது தாழ்மையான வேண்டுகோள்கள்,

1) கருத்துச் சித்திரம் என்பதன் வெற்றி பல விடயங்களில் தங்கி இருக்கிறது. அவற்றில் சிலவாக,

அ) கண்ணைகவரும் நிறம், லாவகமான வரைகலை நுட்பம். இது மூணாவிடம் நிறையவே இருக்கிறது.

ஆ) குறிப்பிட் சில வினாடிகள் (3 தொடக்கம் 5 வினாடிகளில்) சொல்ல வந்த விடையத்தை குறிவைக்கப்பட் பார்வையாளருக்கு உணர்த்திவிட வேண்டும். பார்வையாளர்களில் பெரும் பாலானவர்கள் நுனிப்புல் மேய்பவர்கள், 5 வினாடிகளுக்கு மேல் நின்று நிதானித்து பார்க்க மாட்டார்கள். உண்மையில் இந்த பிரச்சனையில் ஆர்வமுள்ளவர்களை விட மேற்குறித்த வகையினருக்கு செய்தி சென்றடைவதில்தான் உங்கள் முயற்சியின் வெற்றி தங்கியிருக்கிறது.

இ) ஒரு சித்திரத்திலேயே அதிக விடயங்களை புகுத்தாமல் குறிப்பிட்ட ஒரு சிறிய விடயத்தை உருப்பெருக்கி காண்பிக்க முயற்சிக்க வேண்டும்.

ஈ) வெளியிடப்படும் காலகட்டத்தில் தங்கியுள்ளது. உதாரணமாக இன்று இன்னுமோரு கருத்துச் சித்திரம் கரும்புலித்தாக்குதல் குறித்து வரைவது கவனத்திற் கொள்ளப்படாது. சுடச்சுட சில செய்திகளை அண்மித்து அவை விரைவாக வர வேண்டும்.

2) எழுத்தில் ஒன்றும் இல்லாமல் சித்திரத்திலேயே அனைத்தையும் கூற முடிந்தால் சிறப்பு. அல்லது இவை ஆங்கிலத்திலும் வெளியிடப்படுமானால் சிங்கள மற்றும் சர்வதேச நோக்கர்களையும் சென்றடையும்.

இதன் மூலம் மேலும் சிறப்பாக செயற்பட்டு மேலும் வெற்றிகரமான கருத்துச் சித்திரங்களை தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

நன்றியுடன்,

Edited by சாணக்கியன்

சாணக்கியன்

உங்கள் ஆழமான ஆரோக்கியமான விமர்சனங்களிற்கு மிக்க நன்றி. அவற்றை கவனத்தில் கொண்டு திருந்த முயற்சிக்கிறம்.

சொல்ல வந்த கருத்தில் சில முரன்பாடுகள் இருக்கிரது தான் இருந்தாலும் அதில் சில உண்மையும் புதைந்து கிடைக்கிறது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.