Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொக்ஸ் இன் சிறீலங்கா பயணம் - தள்ளிப்போடப்பட்டது

Featured Replies

பிந்திய செய்தி Defence Secretary Liam Fox postpones Sri Lanka trip

Defence Secretary Liam Fox has postponed a visit to Sri Lanka, following reported Foreign Office concerns about the trip.

http://www.bbc.co.uk/news/uk-politics-12014516

=============================================

சிறீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரின் நினைவு உரையில் கலந்துகொள்ளும் நோக்கத்துடன் சிறீலங்கா செல்லவுள்ள பிரித்தானியா பாதுகாப்புச் செயலாளரின் பயணத்தை தடுத்து நிறுத்துமாறு பிரித்தானியா வெளிவிவகாரச் செயலகம் பிரதமர் அலுவலகத்தை கோரியுள்ளது.

இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது:

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சிறீலங்காவுக்கு பாதுகாப்புச் செயலாளர் செல்வது பொருத்தமற்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பொக்ஸ் 1990 களில் வெளிவிவகார அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இருந்து சிறீலங்கா அரசுடன் நெருக்கமான உறளைக் கொண்டுள்ளார். கடந்த 13 மாதங்களில் அவர் இரு தடவை சிறீலங்கா சென்றுள்ளார்.

அவருக்கான அழைப்புக்களை காலம்சென்ற வெளிவிவகார அமைச்சரின் மனைவியே அனுப்பிவருகின்றார். ஆனால் பொக்ஸ் இன் நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹெக் கடும் அதிதிருப்தி கொண்டுள்ளார்.

ஆனால் சிறீலங்காவுக்கான தனது பயணச் செலவுகளையும், தங்குமிட செலவுகளையும் பொக்ஸ் செலுத்தியுள்தாக பொக்ஸ் இன் பேச்சாளர் நேற்று இரவு தெரிவித்துள்ளார். அதனை சிறீலங்கா அரசு செலுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு வந்திருந்த சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவை பொக்ஸ் தனிப்பட்ட ரீதியில் சந்தித்திருந்தார். தமிழ் மக்களின் போராட்டத்தை தொடர்ந்து ஒக்பேட் மாணவர் அமைப்பு அவரின் உரையை நிறுத்தியதால் மகிந்தா திரும்பிச் சென்றிருந்தார்.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல்களில் 40,000 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துவருகின்றன. ஆனால் அனைத்துலகத்தை சேர்ந்த சுயாதீன விசாரணையாளர்களை அனுமதிக்க சிறீலங்கா அரசு தொடர்ந்து மறுத்து வருகின்றது. அது தானே ஒரு விசாரணைக்குழுவை அமைத்துள்ளது.

ஆனால் சிறிலங்கா அரசின் இந்த குழுவை அனைத்துலக மன்னிப்புச்சபை, அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு, மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்பன நிராகரித்துள்ளன.

தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் போர்க்குற்றங்கள் தொடர்பில் பிடியாணைக்கு விண்ணப்பித்தசமயம், கொழும்பில் உள்ள பிரித்தானியா தூதரகத்திற்கு முன்னால் அரச ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

பொக்ஸ் எதிர்வரும் சனிக்கிழமை (18) கொழும்பில் உரையாற்றவுள்ளார். பொக்ஸ் இன் இந்த பயணம் தொடர்பில் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் மெர்பி ஐந்து கேள்விகளை நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.

அண்மைக்கால நடவடிக்கைகளை பொறுத்தவரையில் சிறீலங்கா மிகவும் பிரச்சனைக்குரிய நாடாக உள்ளது, பிரித்தானியா அதில் முக்கிய பங்குவகிக்க முடியும். ஆனால் தனது பயணத்தின் மூலம் பொக்ஸ் எதனை சாதிக்க முயல்கிறார் என்பதை அவர் விளக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் வாரம் பொக்ஸ் சிறீலங்கா அதிகாரிகளை சந்திக்கப்போவது உங்களுக்கு தெரியுமா? என நிழல் வெளிவிவகார அமைச்சர் ஜெற்றி கூப்பர், வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹெக்கிடம் இந்த வாரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீன விசாரணைகள் தேவை என்ற பிரித்தானியா அரசின் செய்தியை பொக்ஸ் சிறீலங்கா அரசுக்கு எடுத்துச் செல்வாரா எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த நவம்பர் மாதம் சிறீலங்கா சென்ற பொக்ஸ் விமானக்கட்டனத்தை தான் செலுத்தியிருந்ததாக தெரிவித்திருந்தார். ஆனால் அது எடின்பரோ பகுதியில் இருந்து, சிறீலங்கா அபிவிருத்தி நிதியம் என்ற அமைப்பினால் 3,000 பவுண்ஸ் செலுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் கலந்ந்துகொள்ள அவர் அங்கு சென்றிருந்தார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampress.com/2010/12/9015/

Edited by akootha

  • தொடங்கியவர்

Liam Fox's Sri Lanka trip makes Foreign Office furious

• William Hague is said to be appalled at the visit

• Human right groups are angry over Tamil Tigers

Liam Fox, the defence secretary, is planning to defy the Foreign Office by making a personal visit to Sri Lanka this weekend to deliver a speech in honour of a former foreign minister.

The Foreign Office is debating whether to appeal to Downing Street to prevent Fox from visiting Sri Lanka, whose government is facing allegations of war crimes during its final assault on the Tamil Tigers last year.

http://www.guardian.co.uk/politics/2010/dec/15/liam-fox-sri-lanka-foreign-office-furious

... பிரித்தானிய தமிழ் கொன்ஸவேற்றிகளென கூறித்திருந்தோர் ... எங்கிருக்கிறார்கள்??????????? தற்போது!!!!!!!!!!!!!!! .... உயிருடன் தானே இருக்கிறார்கள்???????????

  • தொடங்கியவர்

Defence Secretary Liam Fox postpones Sri Lanka trip

Defence Secretary Liam Fox has postponed a visit to Sri Lanka, following reported Foreign Office concerns about the trip.

A spokesman said the postponement was due to "an extension to his scheduled official visit to the Gulf" and it would go ahead next year.

The Guardian reported that Foreign Secretary William Hague was annoyed about the trip.

Sri Lanka denies war crimes during its defeat of the Tamil Tigers last year.

Both the Tamil Tigers and Sri Lanka's government have been accused by human rights groups of committing crimes against humanity during the last year of their 26-year conflict.

Tamil protests

Earlier this month demonstrators tried to storm the British high commission in Sri Lanka's capital Colombo, after a speech to the Oxford Union by Sri Lankan President Mahinda Rajapaksa was cancelled, following Tamil protests in the UK.

Dr Fox has had an interest in Sri Lanka since his efforts to broker a ceasefire in the conflict when he was a junior Foreign Office minister in 1996. He met President Rajapaksa during his UK visit.

The Guardian reported that Dr Fox had accepted an invitation to deliver the Lakshman Kadirgamar memorial lecture, made by the widow of the former foreign minister Mr Kadirgamar, who was shot dead in 2005.

The paper reported Foreign Office sources as having said Foreign Secretary William Hague was "appalled" by the decision.

Questioned about Dr Fox's trip earlier, the prime minister's spokesman stressed it was a "private visit", not a government one, and Dr Fox had "a long-term private interest in Sri Lanka".

Later it was announced the trip would not go ahead this weekend.

A spokesman said: "Dr Fox has postponed his private visit to Sri Lanka due to an extension to his scheduled official visit to the Gulf.

"He intends to carry out an official visit to Sri Lanka next year during which he proposes to fulfil the speaking engagement that he had planned."

For Labour, Yvette Cooper said it was an example of "chaotic diplomacy" and raised questions about Dr Fox's judgement.

She said: "William Hague must be spitting mad. This is a sensitive area of foreign policy. Who is in charge of policy on Sri Lanka, the foreign secretary or the defence secretary?"

http://www.bbc.co.uk/news/uk-politics-12014516

Liam Fox has at the last minute cancelled his trip to Sri Lanka. There was widespread anger outside government that the defence secretary was in danger of giving comfort to the Sri Lankan regime when it was flouting UN demands for an independent investigation into alleged war crimes.

Here’s the statement from Dr Fox -

“Dr Fox has postponed his private visit to Sri Lanka due to an extension to his scheduled official visit to the Gulf. He intends to carry out an official visit to Sri Lanka next year during which he proposes to fulfil the speaking engagement that he had planned.”

Edited by akootha

  • தொடங்கியவர்

தள்ளிப்போடப்பட்ட இந்த பொக்ஸ் அவர்களின் பிரயாணம் சிங்களத்தின் கோபத்தை மேலும் அதிகரிக்கலாம். ஏற்கனவே ஒக்ஸ்போட்டில் ஏற்பட்ட அவமானம் காரணமாக தனது மூர்க்க சுயரூபத்தை காட்டிய சிங்களம், மேலும் அதே பாதையில், இம்முறை தீவிரமாக பயணிக்கலாம்.

எவ்வாறாயினும், இது தமிழருக்கு கிடைத்த ஒரு சிறு வெற்றி. இதன் அடிப்படையில், இந்த சாதகாமான நிலைமையை மேலும் பலமடையச்செய்ய வேண்டும். எமது பரப்புரை மிகவும் அவசியமான வேலை என்பதும் அது வெற்றியளிக்க வல்லதும் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

பிரித்தானிய அரசின் அழுத்தம்: லியாம் பொக்ஸின் சிறிலங்கா பயணம் இறுதி நேரத்தில் இரத்தானது

பிரித்தானிய அரசின் பாதுகாப்பு அமைச்சர் லிமாம் பொக்ஸ் இவ்வார இறுதியில் மேற்கொள்ளவிருந்த சிறிலங்காவிற்கான தனிப்பட்ட விஜயத்தினை இறுதி நேரத்தில் இரத்துச் செய்துள்ளார்.</p>

பிரித்தானிய வெளிநாட்டமைச்சர் வில்லியம் ஹேகே கொடுத்த அழுத்தம் காரணமாகவே இப்பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இன்று பிரித்தானிய வெளிநாட்டமைச்சரைச் சந்தித்துப் பேசிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் தனது பயணத்தை பிற்போடுவதாக அறிவித்தார்.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள கார்டியன், கொழும்பு தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாட்டை இப்பயணம் பாதிக்கும் என பிரித்தானிய வெளிநாட்டமைச்சர் வில்லியம் ஹேகே கருதுவதாகத் தெரிவித்துள்ளது. பிரித்தானிய அரசினதும் எதிர்க்கட்சிகளதும் விமர்சனங்கள் காரணமாக தனது பயணத்தை நிறுத்த வேண்டிய நிலைக்கு லிமாம் பொக்ஸ் தள்ளப்பட்டுள்ளதாகவும் கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை சிறிலங்காவிற்கான பயணத்தை தவிர்க்கும்படி வேண்டி, பிரித்தானிய தமிழர் பேரவை பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதமொன்றை எழுதியிருந்தது. இப்பயணம் போர்க்குற்றம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுவரும் சிறிலங்காவிற்கு தவறான செய்திகளை வழங்கிவிடும் என பிரித்தானிய தமிழர் பேரவை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தது.

சிறிலங்காவின் மனித உரிமை விவகாரங்கள் குறித்த விமர்சனங்கள் தனது பயணத்தை நிறுத்தியமைக்கான காரணமல்ல என லியாம் பொக்ஸ் சனல் 4 தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். எனினும் பிரித்தானிய அரசின் சக அமைச்சர்களாலும் எதிர்க்கட்சியினராலும் முன்வைக்கப்பட்டுவரும் கடும் விமர்சனங்களே பயணத்தை இடைநிறுத்தியமைக்கான காரணமாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.

பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் லியாம் பொக்ஸின் சிறிலங்கா பயணம் தொடர்பாக நேற்று கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. சர்ச்சைக்குரிய வரலாற்றினைக் கொண்டிருக்கின்ற தேசமாக சிறிலங்கா உள்ளது. பிரித்தானியா முக்கியமான பொறுப்பான பங்கினை ஆற்ற முடியும். இந்நிலையில் தனது பயணத்தின் மூலம் லியாம் பொக்ஸ் அடையவுள்ளது என்ன என்பதனைத் தெளிவுபடுத்த வேண்டுமென தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Jim Murphy கேள்வி எழுப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Liam Fox அவர்கள் அடுத்த ஆண்டு சிறிலங்காவிற்கான அதிகார முறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளதையிட்டு பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையில் ஒரு குழப்பான நிலைப்பாட்டை அரசாங்கம் எடுப்பதாக தொழிற்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது இவ்வாறிருக்க, போர் மீறல்கள் நடைபெற்ற சிறிலங்காவில் 'முதலீட்டு வாய்ப்புகள்' தொடர்பாக Fox கலந்துரையாடியுள்ளதாக சனல் 4 இன் வெளியுறவு அரசியல் செய்தியாளர் Jonathan Miller தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் பிரித்தானிய வெளியுறவுச் செயலர் Liam Fox சிறிலங்காவிற்கு ஐந்து தடவைகள் பயணம் மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு பயணமும் சிறிலங்கா அரசாங்கத்தின் செலவில் இடம்பெற்றுள்ளதென Jonathan Miller மேலும் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 2ஆம் திகதி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவிற்கு சென்ற போது Liam Fox அவரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய தமிழ் மக்களின் பாரிய எதிர்ப்புப் போராட்டங்களின் விளைவாக மகிந்த ராஜபக்ச நிகழ்த்தவிருந்த உரை ஒக்ஸ்பேர்ட் பல்கலைக் கழக ஒன்றியத்தால் நிறுத்தப்பட்மையும் போர்க் குற்றவாளியான ராஜபக்சவைக் கைது செய்ய வேண்டுமென குரல்கள் எழுந்ததைத் தொடர்ந்து மகிந்த குழுவினர் அவசரமாக நாடு திரும்பியமையும் குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா அரச அதிபரின் இப் பயணத்தின்போது Liam Fox உடன் தனிப்பட்ட முறையில் இடம்பெற்ற சந்திப்பினை, அதிகாரமுறைப்பட்ட இராஜதந்திர சந்திப்பாக சிறிலங்காவின் அரசாங்க இணையத்தளங்களில் சித்தரிக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ச மற்றும் Liam Fox கை குலுக்கும் ஒளிப்படங்கள் மூலம் இப் பிரச்சார முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இவர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பில் போர் மீறல்கள் இடம்பெற்ற வடக்கில் 'முதலீட்டு வாய்ப்புகள்' என்பதே முக்கியமாகப் பேசப்பட்ட விடயமாகும் என சனல் 4 தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த உரை ஒன்றினை நிகழ்த்துவதற்காக இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த Liam Fox இன் சிறிலங்காப் பயணமே தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான சிறிலங்கா மீதான அழுத்தம் அதிகரித்துவரும் வேளையில் இவருடைய இந்தப் பயணம் தொடர்பாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் கடும் சீற்றம் கொண்டிருந்ததாகவும், பயணத்தை நிறுத்துவதற்கு முனைந்துள்ளதாகவும் சனல் 4 தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

http://www.ponguthamil.net/news/contentnews.asp?sectionid=1&contentid={C90DB46C-B168-4A5F-B836-284DF4A5B433}

  • கருத்துக்கள உறவுகள்

தள்ளிப்போடப்பட்ட இந்த பொக்ஸ் அவர்களின் பிரயாணம் சிங்களத்தின் கோபத்தை மேலும் அதிகரிக்கலாம். ஏற்கனவே ஒக்ஸ்போட்டில் ஏற்பட்ட அவமானம் காரணமாக தனது மூர்க்க சுயரூபத்தை காட்டிய சிங்களம், மேலும் அதே பாதையில், இம்முறை தீவிரமாக பயணிக்கலாம்.

எவ்வாறாயினும், இது தமிழருக்கு கிடைத்த ஒரு சிறு வெற்றி. இதன் அடிப்படையில், இந்த சாதகாமான நிலைமையை மேலும் பலமடையச்செய்ய வேண்டும். எமது பரப்புரை மிகவும் அவசியமான வேலை என்பதும் அது வெற்றியளிக்க வல்லதும் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உண்மை அகூதா. லிமாம் பொக்ஸின் பயணம் கைவிடப்பட்டது சற்று ஆறுதலான செய்தி. :lol:

இவைகள் நரிகள்.

இவ்வார இறுதியில் பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்தை பிற்போட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹோஜ் யுத்த குற்றச்சாட்டு சர்ச்சை நிலவி வரும் நாட்டுக்கு பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் செல்லவதுக்கு பாரிய கண்டனம் தெரிவித்ததால் இவ்வாறு அவரது பயணம் காலவரையரையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு செயலாளரின் பேச்சாளர், கல்ப் பிராந்தியங்களுங்கான விஜயம் ஒன்றினை உடனடியாக மேற்கொள்ள வேண்டி உள்ளதினாலேயே இப் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது தனிப்பட்ட விஜயம் தற்போது தடைப்பட்டிருந்தாலும், அவர் அடத்த வருடம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என யூகே பிரஸ் அசோசியேசன் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஈழ நாதம்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் உற்ற நண்பர் இவர்

எனவே எவ்வளவோ முயன்றிருப்பார். தமிழரின் தர்மம் தழைக்க தொடங்குவதையே இது காட்டுகிறது

இது சம்பந்தமாக உழைத்தவர்களுக்கு நன்றி

  • தொடங்கியவர்

இப்படியான வெற்றிகளுக்கு நாம் எல்லோரும் உழைக்க வேண்டும், உழைக்க முடியும்.

எமக்கு முன்னால் உள்ள சவால்களை ஒற்றுமையாக உணர்வுபூர்வமாக எதிர்கொள்வோம்.

சிங்களத்திற்கு எதிராக மாறிவரும் உலகத்தை நாம் எமதாக்குவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் வெளிநாட்டு அரசியல்வாதிகளை அமுக்குறதை விட்டிட்டு புத்திசாலித்தனமாக அதிகாரிகளை மடக்கி வச்சிருக்கிறானோ எண்டு எண்ணத் தோன்றுது..! லியாம் ஃபொக்ஸ், நாராயணன், மேனன் என்று... :lol:

என்னதான் அரசியல்வாதிகள் பாராளுமன்றங்களில் கத்தினாலும் இந்த அதிகாரிகள்தானே முக்கிய முடிவுகளை எடுத்து மந்திரிமாருக்குப் பரிந்துரைப்பார்கள்??! :lol:

  • தொடங்கியவர்

லியாம் ஃபொக்ஸ் அவர்களும் ஒரு அரசியல்வாதி, அதிகாரி அல்ல.

http://www.liamfox.co.uk/text.aspx?id=1

ஆனால் பல இடங்களில் அதிகாரிகளை பிடித்து சில வேலைகளை இலகுவாக நிறைவேற்றலாம் என்பது உண்மையாக இருக்கலாம்.

Edited by akootha

  • தொடங்கியவர்

கதிர்காமர் நினைவுதின சொற்பொழிவு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவரின் அலுவலகம் தெரிவித்தது!!

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/13190-2010-12-17-10-09-25.html

சிங்களவன் வெளிநாட்டு அரசியல்வாதிகளை அமுக்குறதை விட்டிட்டு புத்திசாலித்தனமாக அதிகாரிகளை மடக்கி வச்சிருக்கிறானோ எண்டு எண்ணத் தோன்றுது..! லியாம் ஃபொக்ஸ், நாராயணன், மேனன் என்று... :D

பௌத்த மதத்துக்கு ஏற்ப சிங்கள பௌத்த பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக வழங்கும் மது, மாது, முடிச்சுகள், கையூட்டுக்கள் லியம் பொக்சை, இந்திய பயங்கரவாதிகளை சிங்கள பௌத்த பயங்கரவாதிகளின் நண்பர்களாக்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

லியாம் பொக்ஸுக்கு இலங்கையில் நிறைய நண்பர்கள் உள்ளார்கள், எனவே எப்படியும் இன்னுமொருமுறை இலங்கைக்குப் பிரயாணம் மேற்கொள்வார். அங்கொ போய் மகிந்த ஆட்சியின் ஜனநாயகத்தை மெச்சித் தமிழர்களை சிங்களவர்களுடன் புரிந்துணர்வுடன் வாழுமாறு அறிவுரை செய்வார்!

  • தொடங்கியவர்

பிரித்தானியா வெளிவிவகார அமைச்சரின் கருத்து:

"தாங்கள் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெட்டுக்க சொல்லி கேட்பதால் சிறிலங்காவுடன் ஒரு கடினமான உறவை கொண்டுள்ளோம்" - வெளிவிவகார அமைச்சர்.

"A huge number of crises to deal with simultaneously in the world"

19 December 2010

Foreign Secretary William Hague discussed the areas of concern, and the direction of foreign policy in the coming months.

“We want the Government of Sri Lanka to do better on human rights, to investigate alleged abuses and war crimes in the past. So we have a slightly difficult relationship with Sri Lanka in some ways, but we do meet them and talk to them. I met the Sri Lankan Foreign Minister when he came to London two months ago.”

http://www.fco.gov.uk/en/news/latest-news/?view=News&id=430672682

=======================================================

Liam Fox insists on visiting Sri Lanka’s Rajapaksa: What exactly is the UK Defence Secretary defending?

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லியாம் பொக்ஸ் சிறிலங்காவின் எதை பாதுகாக்க முற்படுகிறார்?

Professor Craig Scott is a Professor of Law at Osgoode Hall Law School of York University in Toronto, and Director of the Nathanson Centre on Transnational Human Rights, Crime and Security. He is also a member of the Steering Committee of the Advisory Council of the Sri Lanka Campaign for Peace and Justice. He contributed the following comment.

http://blog.srilankacampaign.org/2010/12/liam-fox-insists-on-visiting-sri-lankas.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.