Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    19
    Points
    46808
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20024
    Posts
  4. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    11531
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/17/21 in all areas

  1. இப்படிப்பட்ட எண்ணம் மாற வேண்டும், சுயமாக பெண்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும், இப்பவும் ஆண்களில் தானே குறை கூறுகின்றீர்கள்😄; என்னிடம் கேட்கமல் என் கடனட்டையைப்பாவித்து மனைவி பிள்ளைகளுடன் உதவியுடன் ஒன் லைனில் சாமான் வாங்கி குவிக்க நொந்து போய் அந்த கடனை அடைக்கும் எனக்குதான் பெண் சுதந்திரத்தின் வலி தெரியும் 😢
  2. தல பேச நினைப்பதை இந்த பையன் கொட்டித் தீர்க்கிறான்.......! 😂
  3. குரக்கன் மா அல்வா.. டிஸ்கி : வெயில் காலம் ஆரம்பித்து போட்டுது.. 👍 கள உறவுகள் குளிர் ஐயிட்டம்களா போட்டு தாக்கும்படி கனிவுடன் கேட்டு கொள்கிறேன்....👌
  4. புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன? புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள். புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள். புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி கோழையுடன் வாழுவாள். புத்தியுள்ள பெண் அவனுக்கு சுதந்திரம் அழித்து, தன்னிடம் இருக்கும் தைரியத்தையும் மகிழ்ச்சியையும் அவனுடன் பங்கிட்டு தைரியசாலி கணவனுடன் தைரியமாக வாழுவாள். புத்தியில்லாதவள் என் வீட்டில் நான் அப்படி வாழ்ந்தேன் இப்படி வாழ்ந்தேன் என்று முடிந்து போனதை கணக்கிட்டு கையில் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுத்து வாழ்கிறாள். புத்தியுள்ள பெண் எதைக் கையில் கொடுத்தாலும் அதை அழகாக்க முயற்சிக்கிறாள். இடிந்து போன வீட்டை இவள் கட்டுகிறாள். நன்றாக இருக்கும் வீட்டையும் அவள் சிதைத்துவிடுகிறாள். புத்தியுள்ள பெண் வருமானத்திற்குள் செலவு செய்து மீதம் எடுக்கிறாள். புத்தியில்லாதவள் ஆடம்பரத்திற்கு வாழ்க்கையை அடகு வைத்து கண்ணீர் சிந்துவாள். புத்தியுள்ள பெண் நிதானமாகவே செயல்படுவாள். கண்ணாடி குவளையை கையில் ஏந்தி நின்றாலும் உடைத்து விட மாட்டாள். புத்தியில்லாதவள் பொன் குடத்தையும் உடைத்து விடுவாள். நிதானம் இவர்களின் அடையாளம். புத்தியுள்ள பெண் பகைவரை சம்பாதிக்க விரும்ப மாட்டாள். புத்தியில்லாதவளுக்கோ அண்டை வீட்டுக் காரரும் எதிராளிகளே. புத்தியுள்ள பெண் வீட்டாருக்கு ஆகாரம் அளிக்கிறாள், வேலைக்காரர்களுக்கு படி அளக்கிறாள். புத்தியில்லாத பெண் வேலைக்காரியாகவே வாழ்ந்து முடித்து விடுவாள். புத்தியுள்ள பெண் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அழகாக்கி அழகான குடும்பத்தை சமூகத்தில் முன் நிறுத்துகிறாள். புத்தியில்லாதவளுக்கு சுத்தம், தூய்மை அழகு பற்றிய அக்கறை இருப்பதில்லை. புத்தியுள்ள பெண் தனக்கானதை எடுத்துக் கொள்கிறாள். புத்தியில்லாதவள் என் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் என ஆதங்கப்படுகிறாள். புத்தியுள்ள பெண் திருமணம் என்னும் ஒரு நாள் கூத்திற்காக வேலையை இராஜினாமா செய்வதில்லை. புத்தியில்லாதவள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காரணத்திற்காகவே வேலையை விட்டு விட்டு ஆறு மாதம் கழித்து வேலை தேடி அழைகிறாள். புத்தியுள்ள பெண் உருவாக்குகிறாள். புத்தியில்லாதவள் அழித்து போடுகிறாள். புத்தியுள்ள பெண் தன் மக்களை கொண்டாடுகிறாள். புத்தியில்லாதவள் நீ எல்லாம் எங்கே உருப்பட போற? என்று தன் மக்களை சபித்துக் கொண்டே இருப்பாள். புத்தியுள்ள பெண் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குடும்பத்தினரின் தவறுகளை சுட்டி காட்ட மாட்டாள். புத்தியில்லாதவள் அனைவரின் முன்னிலையிலும் குழந்தையை திட்டுவார், அசிங்கப்படுத்துவார். புத்தியுள்ள பெண் குடும்பத்தினரை சரி செய்வாள். புத்தியில்லாதவள் குடும்பம் தான் சமூகம் என்ற அறிவில்லாமல் இருப்பாள். புத்தியுள்ள பெண் குடும்பத்தினருக்கும் உடன் இருப்பவர்களுக்கும் தைரியத்தையும், நம்பிக்கையையும் அளிப்பாள். புத்தியில்லாத பெண்ணுடன் இருப்பவர்களுக்கு இருட்டு கூட பயம் தான். புத்தியுள்ள பெண் சேகரிப்பாள், பாதுகாப்பாள், பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் தொலைப்பாள், உடைப்பாள் தூக்கி எறிவாள். சுறுசுறுப்பு புத்தியுள்ள பெண்ணின் மற்றொரு அடையாளம். புத்தியில்லாத பெண்ணின் வீட்டின் அடையாளம் சிலந்தி கூடுகளே. புத்தியுள்ள பெண் இந்த வாழ்க்கை மிகச்சிறந்த வாழ்க்கை என நம்புகிறாள். புத்தியில்லாதவள் பிறருடன் ஒப்பிட்டு பார்க்கிறாள். புத்தியுள்ள பெண் உட்கார்ந்து வரவு செலவு கணக்கை கணக்கிடுகிறாள். புத்தியில்லாதவள் கணக்கிட்டு பார்க்கவும் சோம்பேறித்தனப்படுகிறாள். புத்தியுள்ள பெண் எல்லாருடனும் ஒரு சிறிய இடைவெளியை கடைபிடிக்கிறாள் தன்னை பாதுகாக்கிறாள். புத்தியில்லாதவள் எல்லாரையும் தன் முதல் வட்டத்திற்குள் வந்து செல்ல அனுமதிக்கிறாள். புத்தியுள்ள பெண் "நோ" சொல்ல தைரியம் கொண்டிருக்கிறாள். புத்தியில்லாத பெண் தன்னை கெட்டவளாக நினைத்துவிடுவார்களோ என்று அச்சம் கொள்கிறாள். புத்தியில்லாதவள் குற்றப்படுத்திக் கொண்டே இருப்பாள். புத்தியுள்ளவளின் கண்களுக்கு தவறு செய்தல் மனித இயல்பு என்பது தெரியும். புத்தியில்லாதவள் என்றோ செய்த தவறை இன்றும் நினைவில் வைத்து காயப்படுத்துவாள். மனதை காயப்படுத்துவதில் இவளுக்கு ஒரு மகிழ்ச்சி. புத்தியுள்ள பெண் எப்பொழுதுமே பாராட்டுபவளாக தான் இருப்பாள். புத்தியுள்ளவள் தவறை கடிந்து கொள்வாள். புத்தியில்லாதவள் தவறுக்கு ஒத்துழைப்பு தருவாள். புத்தியுள்ள பெண் எதையும் இரட்டிப்பு ஆக்குவாள். புத்தியில்லாதவள் எதை செய்தாலும் நஷ்டம் தான் முடிவு. புத்தியுள்ள பெண் குழந்தைகளையும் கனப்படுத்துவாள், உயர்வாக எண்ணுவாள். புத்தியில்லாதவளுக்கோ 80 வயது பெரியவர்களின் அருமை தெரிவதில்லை. அவர்களின் முதுமையை கொண்டாடாமல் உதாசினப்படுத்துவாள். புத்தியுள்ள பெண் மீதம் எடுக்க சமைப்பாள். புத்தியில்லாதவளோ மூன்றுக்கு பதில் ஏழு பேர் வந்து விட்டால் செய்வதறியாது திகைப்பாள். புத்தியுள்ள பெண் பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் எப்பொழுதும் அதை எங்கே வைத்தோம் இதை எங்கே வைத்தோம் என தேடிக் கொண்டே இருப்பாள். தேடுவதிலே பாதி நேரத்தை விரயம் செய்வாள். புத்தியுள்ள பெண் மனிதர்களின் மேன்மையை உணர்ந்தவள். புத்தியில்லாதவள் குடும்பத்தினரையும் அண்ட விடுவதில்லை… புத்தியுள்ளவளின் முகம் எந்த சூழ்நிலையிலும் புன்னகைக்கும். புத்தியில்லாதவளின் முகத்தில் எப்பொழுதும் ஒரு எரிச்சல் இருக்க தான் செய்கிறது…
  5. 1960களின் கடைசியில் யாழ் இந்துவில் இருந்து வெளியே தலைகாட்ட தொடங்கிய நேரம். முதலாவது பாடம் முடிந்ததும் ஆசிரியர் வெளியேற ஓரிரு நண்பர்களும் நானும் அவர் பின்னாலேயே வெளியேறிவிடுவோம். ஆரம்பத்தில் ஒரு பாடம் இரண்டு பாடமாக தொடங்கி நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது. பாடசாலைக்கு 2 வருடமாக வாகனத்திலேயே வந்து போனேன்.அப்போது மாதம் 10 ரூபா மட்டுமே.வீட்டிலிருந்து வாகனம் வந்துபோகும் பாதை மாத்திரமே தெரியும்.வேறு பாதை தெரியாது. ஒருநாள் படம் பார்க்க போகலாமா என்று நண்பர் கேட்டார்.அவர் மனோகரா திரையரங்குக்கு அருகாமையில் வசிப்பராகையால் யாழில் கூடுதலான இடங்கள் தெரியும். சரி நண்பன் தான் கேக்கிறானே ஆனால் ரிக்கற் எவ்வளவு அதுக்கு என்ன செய்வது என்று யோசிக்க உங்களிடம் காசில்லாவிட்டால் பரவாயில்லை நாளைக்கு தாங்கோ என்றான்.நானும் மற்ற நண்பனும் கோவில் மாடு போல தலையாட்டினோம். ஒரு நண்பனின் தலமையில் பின் தொடர்கிறோம்.பெருந் தெருக்களுக்கு போகாமல் சிறிய ஒழுங்கைகள் வழியாக 10.30 க்குத் தான் படம் தொடங்கும் 10.25 க்கு போனால் சரி என்றான்.நெஞ்சு திக்குதிக்கென்று இருந்தாலும் படம் பார்க்க போகிறோமே என்று சந்தோசமும் ஏதோ சாதனையுமாக இருந்தது. நாங்களும் உள்ளுக்கு போக முதலாவது மணியும் அடிக்கிறது.படம் தொடங்கிய பின் தான் ஒரு ஆங்கிலப் படத்துக்கு வந்திருக்கிறோமே என்று.முதன்முதலாக களவாக பார்த்த படம் ஜேமஸ் பாண்ட் நடித்த கோல் பிங்கர்(Gold Finger) படம் முடிந்து பிற்பகல் முதல்பாடம் இடாப்பு கூப்பிட முதல் போக வேண்டுமே என்று ஓட்டமும் நடையுமாக போய் சேர்ந்துவிட்டோம். அன்று வீட்டுக்குப் போனால் 65 சதம் கொடுக்க வேண்டுமே எப்படி கொடுப்பது?இரவுவரை ஒரு வழியும் தெரியவில்லை. காலையில் குளித்து சாமி கும்பிடும் போது தான் ஒவ்வொரு சாமிப்படத்தின் முன்பும் சில்லரை காசுகள்.ஆகா இதைவிட்டால் வேறு வழியே கிடையாது.பொறுக்கி எடுத்து காற்சட்டை பொக்கற்றுக்குள் போட்டு கிலிங்கி சத்தம் கேக்காமல் ஒரு நுhலாலும் கட்டி கடன் கொடுத்தாயிற்று. இது தான் பள்ளியிலும் வீட்டிலும் தொடங்கிய முதல் களவு.முதல் தவறு செய்வது தான் மிகவும் கஸ்டம்.அப்புறம் அதுவே பழக்கமாயிடும். பின்னர் வின்சர் ராஜா திரையரங்குகளில் 10.30 படம்.காசில்லை அல்லது புதுப்படம் வரவில்லை என்றால் எங்காவது சும்மா சுற்றுவது. ஒருநாள் கஸ்தூரியார் வீதி வழியாக வின்சர் திரையரங்கு நோக்கி போகும் போது நிறைய நேரமிருக்கு என்று அதற்கு முதல் சந்தியில் இடதுபக்கமாக திரும்பி போனால் சிறிய வாசிகசாலை பெயர் அண்ணா அறிவகம். வாசிகசாலை சிறிதாக இருந்தாலும் நிறைய புத்தகங்கள் குறைந்த சனம்.புத்தகங்களுடன் இருந்தில் நேரம் போனதே தெரியவில்லை.படத்துக்கும் நேரம் போய்விட்டது. இதுக்குப் பின் படம் இல்லாவிட்டால் அண்ணா அறிவகம் என்றாகிவிட்டது.நாளாந்தம் போகப் போக படத்துக்கு போகாவிட்டாலும் வாசிகசாலைக்கு போய்வந்தோம். இதுவரை யாழ் பொதுசன நுhலகத்திற்குப் போனதில்லை. ஆனாலும் அண்ணா அறிவகம் மாதிரி ஒரு வாசிகசாலையை இன்னமும் காணவில்லை.அனேகமாக சுவியருக்கு இந்த வாசிகசாலையும் இடங்களும் நன்கு தெரிந்திருக்கலாம்.
  6. ஓஹோ.. நீங்கள் குருதி உறைந்துவிடும் என்று பயந்த ஆட்கள்..! தடுப்பூசி சும்மா களைப்பை தருகிற மாதிரி இருக்கும். ஆனால் எல்லாம் இரண்டொரு நாளில் சரியாகிவிடும். ஐரோப்பிய யூனியனில் இருக்கும் சில நாடுகள் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா குருதி உறைவில் பிரச்சினை தரும் என்று சொன்னதும் சிலர் பயந்து அதனைப் போடாமல் no show ஆகியதால் எனக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட வாய்ப்பு கிடைத்தது! போய்க் குத்திவிட்டு வந்தேன். அன்று ஏதும் செய்யவில்லை. அவர்கள் தந்த பிரசுரத்தில் இருந்ததில் side effects இல் ஒன்றிரண்டு அடுத்தநாள் வந்தது. முதலில் உடல் சில்லென்று சில மணிநேரம் குளிர்ந்த மாதிரி இருந்தது. பின்னர் சாடையாக சூடாகவும் அடிச்சுப் போட்ட மாதிரியும் இருந்தது. ஊசி போட்ட இடத்தில் நோ இருந்தது. ஆனால் 24 மணி நேரத்திலேயே எல்லாம் நோமலாகிவிட்டது!😀
  7. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 19, ஆனி 2019 மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமப் புறங்களில் மீண்டும் கருணா பிள்ளையான் கொலைக்குழுக்களைக் களமிறக்கும் சிங்கள ராணுவப் புலநாய்வுத்துறை http://www.uktamilnews.com/wp-content/uploads/2015/04/karuna-and-gotha-AND-PILLAYAN.jpg மட்டக்களப்பு மாவட்டத்தின் வட மேற்கில், 45 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள கோரளைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகரைப் பகுதியில் இனவழிப்பு யுத்தத்தினால்நலிவடைந்திருக்கும் மக்களைக் கண்காணிக்கவென்று கருணா மற்றும் பிள்ளையான் துணைராணுவக் கொலைப்படைகளை மீளவும் களமிறக்கியிருக்கிறது ராணுவப் புலநாய்வுத்துறை. இப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் வரும் உறவினர்கள், இம்மக்களின் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகள், சமூக மட்டத்திலான ஒன்றுகூடல் விபரங்கள், இப்பகுதி மக்களுக்கான வருமானம், அவை வரும் மூலம், பணத்தினை அவர்கள் செலவழிக்கும் முறைகள், புதிதாகக் குடியேறும் மக்களின் கொட்டகைகளின் விபரம், அவர்கள் அப்பகுதியில் தங்குய்வதற்கான காணி உறுதிப்பத்திரங்கள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறான தகவல்களை இம்மக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு இவ்விரு துணைராணுவக் கொலைக்குழுக்களும் பாவிக்கப்பட்டு வருவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர். வாகரைப் பகுதி 2007 வரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாகவும், அவர்களது நிர்வாகப் பிரதேசமாகவும் விளங்கிவந்தது குறிப்பிடத் தக்கது. 2009 இன் பின்னர், இம்மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2007 இற்கு முட்பட்ட காலத்துடன் ஒப்பிடுகையில், மிகவும் பின் தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. இவற்றுக்கு மேலாக, இன்று இவர்களுக்கென்று இருக்கும் காணிகளும் துணைராணுவக் கொலைப்படைகளின் ஆதரவோடு சிங்களக் குடியேற்றவாதிகளால் சிறிது சிறிதாக சூறையாடப்பட்டு வருகின்றன. மக்களின் வீடுகளுக்குள் திடீர் திடீரென்று நுழையும் ராணுவப் புலநாய்வுத்துறையும், அவர்களின் ஏவலாளிகளான கருணா பிள்ளையான் கொலைப்படையுறுப்பினர்களும் மக்களின் அன்றாட வாழ்வில் இடம்பெறும் அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் தமக்கு அறியத் தரப்படவேண்டும் என்று வற்புறுத்துவதாகவும், தம்மோடு ஒத்துழைக்காதவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மிரட்டி வருகிறார்கள். கிராமப்புற அபிவிருத்திச் சபை செயற்பாட்டாளர்களின் கூற்றுப்படி மாங்கேணி, காயங்கேணி மற்றும் பண்ணைக் கொலனி ஆகிய கிராமங்களிலேயே துணைராணுவக் கொலைக்குழுக்கள் அதிகம் உலவ விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தமது காணிகளைத் துப்பரவு செய்து, மீளக் குடியேறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குடும்பங்களையும் இவர்கள் விட்டு வைப்பதில்லையென்றும் கூறப்படுகிறது. அக்காணிகளுக்கான உரிமைப் பத்திரம், கொட்டகைகளை அமைக்க அவர்களுக்கு பணம் கிடைத்த விபரம் போன்ற விபரங்கள் உட்பட பல விடயங்களை அவர்கள் மக்களை மிரட்டிப் பெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. இப்பகுதியில் சகல அதிகாரம் கொண்டவர்களாக ராணுவமும் அவர்களால் வழிநடத்தப்படும் கருணா பிள்ளையான் கொலைப்படையுறுப்பினர்களும் திகழ்வதாகவும், இப்பகுதியில் மீள்குடியேற்றம் முதல் சகலவிதமான நிவாரணச் செயற்பாடுகள்வரை பிரதேச செயலாளரின் அனுமதி கிடைத்தப்போதும் கூட, ராணுவத்தினரினதும், துணைராணுவக் கொலைப்படைகளினதும் அனுமதி கிடைத்ததன் பின்பே ஈடுபட அனுமதிக்கப்படுவதாகவும் தெரிகிறது.
  8. அசரீரி..! ******* மனிதா... உலகம் உனக்கென யாரவர் சொன்னார் உயிரினம் யாவையும் உந்தனின் படைப்பா இயற்கையின் அழகை எப்படி அழிப்பாய்-உன் இறப்புக்குள் மட்டுமா உலகத்தை படைத்தான். பிறப்புக்கு முன்னே எத்தனை கோடி-உன் இறப்புக்கு பின்னாலும் எத்தனை கோடி வாழ வருகின்ற உயிரினமுண்டு-உன் வாழ்க்கைக்கு மட்டுமா வையகமுண்டு. உன்னையே நீயே வெறுக்கின்ற காலம் உன்னால் தானே உருவானதிங்கு-நீயோ விண்ணையும், மண்ணையும் விஞ்ஞானமென்று அன்னையின் கண்ணையே அபகரித்தாயே. ஒவ்வொரு உயிரினம் வாழ்வதற்க்கேற்ப ஒவ்வொரு நிலமாக பிரித்துமே தந்தான் ஒவ்வொரு நிலத்தையும் உன் நிலமாக்கி-மற்ற உயிரினம் அனைத்தையும் அழிய நீ வைத்தாய். மனிதனாய் வாழவே உன்னை படைத்தான் மனிதநேயமும் உன்னுக்குள் வைத்தான் பொது நலம் தவிர்த்து நீ சுயநலமானாய்-பூமி பொறுமை இழந்துமே போராளியானாள். அன்புடன் -பசுவூர்க்கோபி- 16,03.2021
  9. நிச்சயமாக. மனித தர்மம் மற்றும் மனித உரிமை என்பன அந்தந்த நாடுகளின் அரசியல் நலன்களுக்கேற்ப அவற்றின் சுருதி கூடிக் குறையும். நாம் ஈழத்தமிழர் எம்மை பலமுள்ள ஒரு மக்கள் கூட்டமாக (எவ்வயையிலாவது) மாற்றாத வரை மற்றவர் பிச்சையிடுவார்கள் என்று பாத்திரம் ஏந்தி திரியவேண்டிய பரிதாப நிலை தொடரவே செய்யும்
  10. ஐயா நான் எல்லாவற்றையும் செய்து பார்த்த வரலாற்றுடனும் எனது சொந்த அனுபவத்துடனும் இருந்து கொண்டு அதன் உச்ச விரக்தியில் பேசுகின்றேன் ஆனால் உங்களுடைய கருத்துக்களை பார்க்கும்போது சிங்களமும் சர்வதேசமும் தமது இரு கரங்களிலும் தீர்வை ஏந்தியபடி தவமிருப்பது போலவும் தமிழர்கள் அதை வாங்காதிருப்பது போலவும் அல்லது உங்களிடம் தீர்வுக்கான பாதை இருப்பது போலவும் அதனை தமிழர்கள் முழுமையாக அழியும்வரை நீங்கள் வெளியடுவதில்லை என்ற உறுதியிலிருப்பது போலவும் திருட்டுத்தனமாக இருக்கிறது நாம் தான் சொல்கின்றோமே எங்களையும் சேர்த்து அல்லது சேர்க்காமல் எதையாவது செய்யுங்கள் செயலில் காட்டுங்கள் என்று???
  11. நன்றி ரஞ்சித் உங்களின் நேரத்துக்கும் ஆக்கத்துக்கும் . இதே போல் முன்னாள் புளொட் உறுப்பினர் வெற்றிச்செல்வன் முகநூலில் எழுதும் தொடர்களில் இயக்கம் இயங்க பணம் தேவை எப்படி எல்லாம் கேரளா அயல் மாநிலங்களில் கொள்ளை அடித்தார்கள் பொறுக்கித்தனமாய் என்ற ஒப்புதல் வாக்குமூலம் இன்னும் நாக்ஸலைட் களின் தொடர்புகள் இந்திய அரசு கொடுத்த ஆயுதத்தையே அந்த அரசுக்கு எதிராக இயங்கும் தீவிர வாத குழுக்களுக்கு விற்று அந்த பணத்தில் தலைவர்கள் சுகவாழ்க்கை என்ற பல தகவல்களை சொல்கிறார் . ஆக மொத்தம் ராஜீவ் கொலைக்கு முன்பே ஈழத்து தமிழர்களுக்கு எதிரான போக்கை சருகு கூட்டம்கள் உருவாக்கி உள்ளார்கள் .
  12. ஒவ்வொரு பெண்களுக்கு பின்னாலும், ஒரு ஆண் இருப்பார். 😜
  13. இப்படி எழுதும் நீங்கள் எக்கேடு கெட்டாலும் நமக்கென்ன குறைவு என்று ஒதுங்கி போவதே சிறப்பு. வன்முறை அல்லது உண்ணாவிரதம் தவிர வேறு எதை பற்றி பேசுபவர்களுக்கும் இங்கே இடம் இல்லை. அப்படியான கருத்துகளை கொண்டிருப்பவர்களை துரோகிகளாக பார்ப்பது ஈழத்தமிழரின் வழக்கம். ஆகவே உங்களுக்கு எஞ்சியுருப்பது: உங்களுக்கு தெரியவே தெரியாது. அதற்கு காரணம் நீங்கள் பார்க்க விரும்பாததே. வேறெதுவும் இல்லை.
  14. 👍👍👍👍👍👍👍👍 இந்த கேள்வி பிரபல தமிழ் அரசியல்வாதிகள் சர்வதேசத்தை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. ஐநா சபையில் எதிரொலிக்க வேண்டிய கேள்வி. உந்த மாற்றுக்கருத்து மாணிக்க மன்னர்களை நினைக்கத்தான் வயிறு பத்தியெரியுது. உலக அரசியல் தெரியேல்லையாம்.சரி மற்றவனுக்கு உலக அரசியல் தெரியேல்லை எண்டால் நீங்கள் செய்ய வேண்டியது தானே? கண்ணன்மாரே! பத்து வருசமாய் என்ன செய்யிறியள்? சிங்களவனை சாந்தப்படுத்தி வெல்ல வேணும் எண்டு நினைக்கினம் போல.... ஆனால் அதுவும்....????????????? பழைய கதை அப்பன். 😎
  15. "அசரீதி" பிடிச்சிருக்கு. பூமித்தாயின் கோபத்துக்கு ஆளாகி உள்ளோம் என்பது உண்மை.
  16. பாராட்டத் தக்க நல்ல கவிதை......! 👍
  17. அடி எடுத்து தந்தால் அடியையொற்றி போக வேண்டும். stop complaining🤣
  18. நல்ல கருத்துக்கள் உடைய கவிதை சகோதரி.......! நீங்கள் தாழ்வு மனப்பான்மையுடன் ஆண்களைப் பிரித்துப் பார்க்கின்றீர்கள். ஆண்கள் ஒருபோதும் அப்படி இருப்பதில்லை.நீங்கள் இவ்வளவு சுதந்திரமாக எழுதுவதற்கும் ஒரு ஆண்தானே துணையாக இருக்கின்றார் என்பதை மறுக்க முடியுமா. நாங்கள் ஒருபோதும் பெண்களை பிரித்துப் பார்ப்பதில்லை. நாங்களே விரும்பாவிடினும் அவர்கள் காலால் இட்ட வேலையை சிரமேற்கொண்டு செய்து முடிக்கின்றோம்.எங்களது உயிரையே அவர்களிடம் தந்து விட்டு அந்த பாவத்திற்காக ஆயுள் முழுதும் விலங்கில்லாத அடிமையாய் வாழ்ந்து சாகிறோம்.நாங்கள் ரொம்ப பாவம் தாயே, கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்........ ! 😎
  19. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 04, தை 2019 படுவான்கரையில் தமிழர்களின் கால்நடைகளைக் கொன்றுவரும் கருணா துணைராணுவக் கொலைப்படையினர் நல்லாட்சி அரசின் மைத்திரிபால சிறிசேனவுடன் நெருங்கிச் செயற்பட்டுவரும் முன்னாள் துணையமைச்சரும் துணைராணுவக் கொலைப்படையொன்றினை நடத்தி வருபவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கட்டளையின் கீழ் அவரது ஆயுததாரிகள் படுவான்கரையின் பாலை வெட்டுவான் பகுதியில் தமிழர்களின் கால்நடைகளைக் கொன்றுவருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வடமேற்கில் அமைந்திருக்கும் இம்மேய்ச்சல் நிலப்பகுதி 2007 வரை புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்துவந்தது. 2007 இல் இலங்கை ராணுவத்துடன் இணைந்து கருணா செய்த துரோகத்தின்மூலம் இப்பகுதி சிங்கள ராணுவ ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவரப்பட்டதுடன், தொடர்ச்சியான சிங்களக் குடியேற்றங்களையும் இப்பகுதி எதிர்நோக்கி வருகிறது. இதேவேளை, கடந்த இரு வாரங்களில் மட்டும் குறைந்தது 20 கன்றுகளை சிங்களக் குடியேற்றக்காரர்கள் இப்பகுதியிலிருந்து களவாடிச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. பொலீஸாரிடம் முறையிடச் சென்றபோது, திருடர்களை அடையாளம் காட்டினால் மட்டுமே தம்மால் நடவடிக்கை எடுக்கமுடியும் என்று கூறுவதாகவும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தெரிவிக்கின்றனர். கருணா துணைராணுவக் கொலைப்படையினரால் பசுக்கள் சுட்டுக் கொல்லப்படும் பால வெட்டுவான் (பாலை மடு) பகுதிக்கு ஓரிரு கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் மயிலத்தை மடு மேய்ச்சல் தரைகளிலேயே சிங்களவர்களால் பசுக்கன்றுகள் திருடிச் செல்லப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். பொலீஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அண்மையில் தெரிவித்த கருத்தில் கிழக்கு மாகாணத்தில் முப்படைகளையும் பொலீஸாரையும் தவிர வேறு எவராவது ஆயுதங்களுடன் நடமாடினால் கைதுசெய்யப்படுவார்கள் என்று கூறியிருக்கும் நிலையில், பாலை வெட்டுவான் நீர்த்தேக்கத்தருகில் முகாமிட்டிருக்கும் கருணா துணைராணுவக் கொலைப்படையினர் வாழ்வாதாரத்திற்காகப் போராடிவரும் தமிழர்களின் கால்நடைகளை கொன்றுவருவதுபற்றி நடவடிக்கை எதனையும் எடுக்காதது ஏன் என்றும் இவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். கருணா துணைராணுவக் கொலைக்குழுவின் ஆயுததாரிகள் டி - 56 துப்பாக்கிகள் சகிதம் பாலை வெட்டுவான் பகுதியில் நடமாடுவதாகவும், இப்பகுதியில் முகாமிட்டு சிங்களக் குடியேற்றக்காரர்களுடன் இணைந்து சிங்கள மயமாக்கலினை ஆதரித்துவருவதாகவும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் கூறுகின்றனர். கருணா கொலைக்குழு ஆயுததாரிகள் தமது கால்நடைகளைச் சுட்டுக்கொல்வதுபற்றி பொலீஸாரிடம் கொடுக்கப்பட்ட முறைப்பாடுகளை அவர்கள் உதாசீனம் செய்வதாகவும், "அவர்களிடம் நீங்களே போய்ப் பேசுங்கள்" என்று கூறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பல்லாண்டுகளாக தமிழர்களால் பாவிக்கப்பட்டுவரும் மேய்ச்சல் நிலங்களுக்குள் பிரவேசிப்பதென்றால் அனுமதிப்பத்திரம் அவசியம் என்று பொலீஸார் திடீரென்று கட்டாயப்படுத்துவதாகவும், ஆனால் அரச பால்ப்பண்ணை நிறுவனமான மில்க்கோவினால் தமக்கு தரப்பட்ட அனுமதிப்பத்திரங்களை பொலீஸார் ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். கிரான், சித்தாண்டி, கோரகள்ளி மடு மற்றும் சந்திவெளி ஆகிய பகுதிகளை சேர்ந்த பண்ணையாளர்கள் மேலும் கூறுகையில், "2007 இலிருந்து சிங்களவர்கள் எமது கால்நடைகளைத் திருடியும், எமது மேய்ச்சல் நிலங்களை அபகரித்தும் வருகின்றனர். தற்போது கருணா துணைராணுவக் கொலைக்குழுவும் எமது கால்நடைகளை சுட்டுக் கொல்கிறது. எமக்கு தற்போது இரு பக்கத்திலிருந்து அநியாயங்கள் இடம்பெற்று வருகின்றன" என்று கூறுகிறார்கள். பாலை மடு நீர்த்தேக்கத்திற்கு அருகிலிருக்கும் சுமார் 200 ஏக்கர் மேய்ச்சல் நிலங்களில் மேயும் கால்நடைகள் இந்த நீர்த்தேக்கத்தினை நாடி வருகின்றன. இப்பகுதியில் மைத்திரிபால சிறிசேன அரசினால் கருணா குழுவிற்கு வழங்கப்பட்ட 20 ஏக்கர்கள் பகுதியில் முகாமிட்டு தங்கியிருக்கும் இக்கொலைப்படை நீர்த்தேக்கத்திற்கு வரும் கால்நடைகளைக் கொன்று வருகின்றனர். தனது கொலைப்படை உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இம்மேய்ச்சல் தரைகளிலிருந்து 550 ஏக்கர்களை விவசாய நிலமாக்கித் தருவேன் என்று கருணா உறுதியளித்திருந்ததும், அதன்படியே இப்பகுதியில் கால்நடைகளை மேய்த்துவரும் பண்ணையாளர்களை விரட்டுவதற்காக அவர்களின் கால்நடைகளைச் சுட்டுக் கொல்வதாகவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை , மைத்திரிபால அரசின் மகாவலி அபிவிருத்தித் திட்டம் மூலம் படுவான்கரையில் 10,000 ஏக்கர்களை சிங்களமயமாக்கும் கைங்கரியத்தில் மகாவலி அபிவிருத்திச் சபை ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைத்திரிபாலவுக்கும் கருணாவுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒப்பந்தத்தினையடுத்தே இப்பகுதியில் கருணா துணைராணுவக் கொலைப்படை ஆயுதங்களுடன் முகாம் அமைத்துத் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், தமிழ்ப் பண்ணையாளர்களை விரட்டும் வேலையிலும் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் "பி பிரிவு" மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர்களின் மேய்ச்சல் நிலங்களை சிங்களமயமாக்கும் நோக்கத்துடனேயே செயற்படுத்தப்பட்டு வருகிறது. 2007 வரை புலிகளின் கட்டுப்பாட்டில் இப்பகுதிகள் இருந்தபொழுது சிங்களக் குடியேற்றங்கள் எவையுமே மேற்கொள்ளப்படவில்லையென்றும், தமிழ்ப் பண்ணையாளர்கள் சுதந்திரமாக தமது வாழ்வாதாரத்தினை இப்பகுதியில் பெற்றுக்கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
  20. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, ஐப்பசி 2018 மட்டக்களப்பில் அரசு சாரா நிறுவன ஊழியர்களை ராணுவத்திற்காகச் செயற்படுமாறும் வற்புறுத்தும் அவ்வமைப்பின் தலைவரும் கருணா துணைராணுவக் கொலைப்படையும் பிரபல இனவாத பிக்குவின் அருகில் அமர்ந்திருக்கும் ஷக்ய நாணயக்கார கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் அரசு சாரா அமைப்பொன்றின் நிர்வாக இயக்குநரான ஷக்ய நாணயக்கார மட்டக்களப்பில் அவ்வமைப்பின் ஊழியர்கள் மத்தியில் பேசுகையில் இலங்கை ராணுவத்துடனும் பொலீஸாருடனுன் அவர்கள் சேர்ந்து செயற்பாடமலிருப்பது ஏன் என்று கேள்வியெழுப்பியதாக இக்கருத்தரங்கில் பங்குகொண்ட ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அரசுசாரா அமைப்புக்களின் தேசியச் செயலகத்தின்மூலம் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் பெருமளவு கருணா துணைராணுவக் கொலைப்படை ஆயுததாரிகளும் கலந்துகொண்டிருந்தனர். நாணயக்கார தொடர்ந்தும் ஊழியர்கள் மத்தியில் பேசுகையில் கிளிநொச்சியில் தமது அமைப்பினைச் சார்ந்த சிலர் ராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்டு வருகையில் மட்டக்களப்பில் மட்டும் தமிழர்கள் ராணுவத்திற்கு உதவாமல், விலகிச் செல்வது ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். ராணுவத்திற்கும் சமூக அமைப்புக்களுக்குமான தொடர்பினை ஏற்படுத்துவதே தனது கடமை எனும் தொனியில் அவர் பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒற்றையாட்சியின் கீழான ஒருமித்த நாடு எனும் கோட்பாட்டின் கீழ் "தேசிய கலந்துரையாடல்" அமைப்பினரின் உதயவியுடன் இவ்வமைப்பினால் நடத்தப்படும் கருத்தரங்குகள் சமூகத்தின் அடிப்படை மட்டத்திலிருந்து "ஒருமித்த நாடு - இலங்கையர்" எனும் கோட்பாட்டினை முன்வைத்தும், ஈழத் தமிழர் எனும் அடையாளத்தை அழித்தும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாகாணசபை முறையிலான அதிகாரப் பரவலாக்கம் என்பதனை நிராகரித்து, நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஒரே உரிமை, ஒரே அடையாளம் எனும் கருப்பொருளுடன், தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளைப் பலவீனப்படுத்தி, நலிவுறவைக்கும் கைங்கரியத்தை அரசும் ராணுவமும் முன்னெடுத்துவருவதாக இவ்வமைப்பின் செயற்பாடுகளை அவதானித்துவரும் மனோ கணேசனின் மனிதவுரிமை அமைப்புக் குற்றஞ்சாட்டியிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் "மாவட்ட நல்லிணக்க செயற்பாடுகள்" எனும் போர்வையில் நாணயக்கார எனும் அரச - ராணுவ பின்புலத்தில் இயங்கும் நபருக்கு உதவியாக கருணா துணைராணுவக் கொலைப்படை ஆயுததாரியும் கருணாவின் பிரத்தியே செயலாளருமான வி கமலதாஸ் இக்கருத்தரங்கினை ஒருங்கிணைத்து நடத்தியதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வமைப்பிற்கான செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். நாணயக்காரவின் இந்தக் கருத்தரங்கில் பேசிய கருணா துணைராணுவக் கொலைப்படை ஆயுததாரி கமலதாஸ் வடமாகாணத் தமிழர்களையும் அவர்களின் அரசியலையும் கடுமையாகச் சாடியதுடன், கிழக்கு மாகாணத் தமிழர்கள் தனித்து இயங்கவேண்டுமென்றும், ராணுவத்துடன் நல்லுறவைப் பேணுதல் அவசியம் என்றும் ஊழியர்களைக் கேட்டுக்கொண்டதாக இக்கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். நல்லிணக்கம் எனும் பெயரில் அரச ராணுவமும் அதன் துணைராணுவக் கொலைப்படைகளும் தமிழர்களின் அடையாளத்தினை இல்லாமல் அழித்து, சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் "ஒற்றையாட்சியின் கீழான ஒருமித்த நாடு - இலங்கையர்" எனும் அடையாளத்தினை விதைக்க முயன்றுவருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
  21. அடுத்த மைக்கல் ஜாக்சன் ரேடி
  22. நியாயம், தர்மம், நீதி ஆகியவற்றின்படி உலகமும் இயற்கையும் இயங்குவதில்லை. மாறாக, இலாபம், சுயநலம், பொதுநலம், கூட்டுநலம் ஆகியவற்றின்படியே உலகமும் இயற்கையும் இயங்குகின்றன. இந்த உண்மையை புரிந்து கொண்டு, ஒவ்வொரு கணமும் இவற்றை மனதில் நிறுத்திக்கொண்டு, அடிப்படை தேவைகளில் இருந்து மீண்டும் ஆரம்பித்து, புதியதொரு தீர்வையும் அதை அடைய புதிய வழிமுறைகளையும் தேடுங்கள் - விடிவு கிடைக்கும்.
  23. ஆண்டவா..எந்த பஸ்சும் வராம இருக்கணும்.
  24. தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்... ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க..... ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்... அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்... வட்டியும் கட்ட மாட்டான்... பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட பிரயோஜனம் இல்லாதவன்... கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு வர மாட்டான்... இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல... இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல... சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல... பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்... இதெல்லாம் போய்த் தொலையட்டும்னு உட்டா... இவனுக்கு சுகர் வராது... இதய நோய் வராது... குண்டாகவும் மாட்டான்... ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையே இல்லை... உலக பொருளாதாரம் வளர இவன் எதுவும் செய்ய மாட்டான்... அதே சமயம் ஒரே ஒரு பீட்ஸா கடை ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்... 10 இதய டாக்டர்... 10 பல் டாக்டர்... 10 டயட்டீசியன்... இன்னும் ஒரு 50 மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம் அதனால கிடைக்கும்... உடனே முடிவெடுங்க சைக்கிளா? காரா? இந்திய பொருளாதாரமா??? உங்க உடல் நலமா??? நன்றிகளும் பிரியங்களும். FB
  25. ஆச்சி:- டேய் மோனை அவங்களோடை சேராதை கெடுத்துப் போடுவாங்கள்....😍 அப்பு:- அவங்களோடை சேர்ந்து அவங்களையும் கெடுத்துடாதை....
  26. துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 15, மார்ச் 2004 கருணா குழுவினரிடையே பிளவு தமிழீழத் தேசியத் தலைவருக்கெதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து செய்தி வெளியிட்ட கருணாவினால் மட்டக்களப்பிலிருந்து இயக்கப்படும் இணையத்தளம் ஒன்று ம் ஒன்று தனது செயலுக்காக பார்வையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதன் பின்னர் திடீரென்று இயங்காமல்ப் போனது. பலமணிநேர இடைநிறுத்தத்திற்குப் பினர் தற்போது அது மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறது. கருணாவிற்கு ஆதரவானவர்கள் இதுபற்றிப் பேசும்போது, வெளியிலிருந்து செயற்படும் சிலரால் தமது இணையத்தளம் தாக்கப்பட்டிருக்கிறதென்றும், தற்போது மீண்டும் அது இயங்குவதாகவும் கூறியிருந்தனர். ஆனால், அமெரிக்காவிலிருந்து இயக்கப்படும் பாடுமீன் எனும் இவ்விணையத்தளத்தினைத் தொடர்புகொண்டபொழுது, இத்தளம் எவராலும் தாக்கப்படவில்லையென்று, இத்தளத்தினை இயக்குபவர்களே தமது தேவைக்காக இடைநிறுத்தி வைத்திருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள். கருணாவினால் நடத்தப்பட்ட பாடுமீன் இணையத்தளத்தில் கருணாவை விமர்சித்து எழுதப்பட்ட கட்டுரையின் சில வரிகள் இதோ, "எமது பார்வையாளர்களிடம் பாடுமீன் இணையத்தளம் மன்னிப்புக் கேட்கிறது". "தாயகத்தினை மீட்கும் கனவில் மரணித்துக் கல்லறைகளில் தூங்கிக்கொண்டிருக்கும் எமது சகோதரிகளையும், சகோதரர்களையும் மனதிற்கொண்டு, கடந்த சில தினங்களாக எமது அன்பிற்குறிய தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கெதிராகவும், எமது தேசிஒய விடுதலைப் போராட்டத்திற்கெதிராகவும் செய்திவெளியிட்டுவந்தமைக்காக எனது வாசகர்களாகிய உங்களிடம் ஆயிரம் முறை மன்னிப்புக் கோருகிறேன். "துரோகி கருணா தமிழ்த்தாயின் குரல்வளையினை நசுக்க பகீரதப் பிரயத்தனம் செய்துவருகிறான். தனது செயற்பாடுகளுக்கு ஆதரவாக என்னை எழுதுமாறு கொடுமைப்படுத்தி வருகிறான். இதனை எழுதும்பொழுது அடக்கமுடியாக் கண்ணீருடனும், இக்கடிதத்தினை வாசகர்களாகிய உங்களுக்கு எடுத்துச் செல்லும்வரையாவது எனது உயிர் என்னிடம் இருக்கவேண்டும் என்ற வேட்கையுடனும் இதனை எழுதுகிறேன்". "தற்போது நடைபெற்றுவரும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை கருணா தனது துரோக நாடகத்தினை அரங்கேற்றப் பாவித்துவருகிறான். ஆனால், அவனது துரோகத்தினை முறியடிக்க எமது தேசியத் தலைமை துரிதமாகச் செயற்படும் என்கின்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. கருணாவின் துரோகத்தினை இந்த மண் ஒருபோதும் மன்னிக்காது".

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.