Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    24
    Points
    88882
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    33855
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    39372
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46979
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/12/21 in all areas

  1. ஓகே.... பிரண்ட்ஸ், நாங்கள் தொடர்ந்து முறுக்கு, சுடுவோம். ஆறு மாதத்திற்கு முன்பு, ஆசைப் பட்டு வாங்கின "கடலை மா..." அதன், ஆயுட்கலாம்... முடிய, இன்னும் இரண்டு கிழமைகள் உள்ளது. நான்... எப்போதும் உணவுப் பொருட்களை, வீண் செய்யாத மனப்பான்மை உள்ளவன். இப்போ... 11 நாள் விடுமுறை. நல்ல, சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று.... நிகேயின்... "பத்தே நிமிடத்தில்... செய்யும், கடலை மா முறுக்கு" செய்வோம் என்று... மனைவியிடம்.... "அம்மாச்சி" இண்டைக்கு, கடலை மா முறுக்கு செய்வோம் என்று, பன்மையில் கேட்டேன். (பன்மையில்... கேட்பது, எப்பவும் நல்லது. ஏனென்றால்... முறுக்கு சரி வராவிட்டால், நான் தப்பித்துக் கொள்ளலாம்) அதனை... திடீரென்று, கேட்ட போது... அவளுக்கு, பயங்கர "கொதி" வந்து, உங்களுக்கு என்ன விசரோ... என்று பேசினாள். நான்... வீட்டில் இல்லாத நேரம், அவள் பார்க்கும் "தொலைக்காட்சி" நாடகங்கள், தவறிப் போய் விடுமே... என்ற கவலை, அவளுக்கு. ஒரு... மாதிரி, சமாளித்து அவளை என் வழிக்கு கொண்டு வந்து... முறுக்குக்கு "மா" குழைக்க ஆரம்பித்தோம். அந்த இடைவெளியில்... மனைவி, கனடாவில் உள்ள சகோதரிக்கும், சுவிஸில் உள்ள மகளுக்கும்.... நாங்கள்.... "முறுக்கு, சுடப் போகின்றோம்" என்று.. குறுஞ் செய்தியை அனுப்பி விட்டார். அவர்கள்..... அத்தான், அப்பா... "குட் லக்" என்ற செய்தி வந்து சேர்ந்து விட்டது. இடையில்... நிகேயின், சமையல் குறிப்பின் படி, என்ன செய்ய வேண்டும் என்பதனை..... திரும்ப, திரும்ப, திரும்ப... மனப் பாடமாக்கி.... எனக்குத் தெரிந்த, கணித முறைப்படி... ஒரு அட்டவணை தயாரித்து... எம்மிடம் இருப்பது.... ஒரு கிலோ கடலை மா. அதுக்கு... எவ்வளவு, அவித்த கோதுமை மா.... மஞ்சள், எள்ளு, உப்பு, மிளாகாய்த் தூள், எண்ணை.... சுடு தண்ணி... என்ன பதம்...... என்றெல்லாம் கணக்குப் பார்த்து, முடிக்க.... ஒரு மணித்தியாலம் போய்... விட்டது.
  2. ஹாய்யா... என்ரை, முறுக்கு படமும், முறுக்கு உரலும்... யாழ். களத்திலை வந்துட்டுது. 🥰
  3. இப்போ...எங்கள், முறுக்கு சுடும் கோஸ்டி... சாப்பாட்டு மேசையில் இருந்து, போட்ட "பிளான்" படி... முறுக்கு சுட்ட இறுமாப்பில், குசினிக்குள்.... நெஞ்சை நிமிர்த்தி நகர்ந்து... ஒரு கிலோ, கடலை மாவையும்... பெரிய பிளாஸ்ரிக் பாத்திரத்தில் கவிட்டு கொட்டியது. எடுத்த கணக்கின் படி.... கோதுமை மா, வறுத்த எள்ளு, மிளகாய்த் தூள், உப்பு எல்லாவற்றையும் போட்டு விட்டு... மனிசியை நிமிர்ந்து பார்த்தேன். அவளின் முகத்தில்... எல்லாம், திருப்தி என்ற மாதிரி... தலை ஆட்டினாள். இஞ்சையப்பா... இதுக்குள்ளை, கொஞ்ச... சின்னச் சீரகம் போடுவமோ... என்று கேட்ட போது, (எனது மனைவி, சில வேளை... அப்பா... என்று கூப்பிடுவார். ஆசையாக இருக்கும்.) "நோ" என்று சொல்லி, அவளின் ஆசையை, நிராகரித்து விட்டேன். ஏனென்றால்... முறுக்கு, பிழியும் போது... அது, வேறை அடைத்து விடும் என்ற பயம். எல்லாம்.... போட்டாச்சு, நீங்கள் மெல்லமாக தண்ணியை ஊத்துங்கோ... நான், குழைக்கின்றேன் என்று சொல்ல, சுடு தண்ணியை... கொண்டு வந்து ஊத்திய போது, திரும்பவும்... நிகேயின்... "பத்து நிமிட காணொளியை" பார்த்து, அது... "இளம் சூடான சுடு தண்ணீர் என்று, உணர..." காலம், கடந்து விட்டது. மாவை.... குழைத்தால், கழி மாதிரி இருக்கு. அடுப்பில் எண்ணை.... சூடாக, கொதித்துக் கொண்டிருக்கின்றது. என்னுடைய... கை, "பசை" ஒட்டின மாதிரி இருக்கு.
  4. வணக்கம், தானா சீனா! புத்தரினது மரணமானது 'குஷினகர்" என்னும் இடத்தில் நிகழ்ந்தது! மரணிக்கும் போது அவரது வயது எண்பது எனக் கூறப்படுகின்றது! மகாயானம், தேரவாதம் ஆகிய பிரிவுகளின் கருத்துப் படி, இரு விதமான கருத்துக்கள் பகிரப்படுகின்றன! மகாயானத்தினரின் கருத்துப் படி, புத்தர் நஞ்சாகிய காளானை உண்டதால் மரணித்தார் என்று கூறப்படுகின்றது! தேர வாதத்தினரின் கருத்துப்படி...புத்தர் நஞ்சாகிப் போன பன்றி இறைச்சியை உண்டதால் மரணித்தார் என்று கூறுகின்றார்கள்! அதே போல தேர வாதத்தினரின் கருத்துப் படி...புத்தர் விசாகப் பௌர்ணமியில் மரணித்தார் என்று கூறுகின்றார்கள்..! எனினும் புத்தர் புரட்டாதி, ஐப்பசி போன்ற மாரி காலத்திலேயே இறந்ததாகக் கூறப்படுகின்றது! எவ்வாறு இருப்பினும் மரணத் தெய்வமான 'மாரா' புத்தருக்கு இன்விற்றேசன் அனுப்பியதாகவும், புத்தர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது! இதிலிருந்து புத்தர் அந்தக் கால கட்டத்தில், மரணத்தை எதிர் பார்த்திருக்கவில்லை என்று அறியப் படுகின்றது! புத்தருக்கு நிறைய எதிரிகள் இருந்தார்கள்..! முக்கியமாகப் புத்தரது கருத்துக்கள் வருணாச்சிர தர்மத்தை தூக்கிப் பிடிப்பவர்களுக்கு எதிராகவேயிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது! உயிருள்ள மிருகங்களை வேள்வித் தீயில் போட்டு..அந்த ஊணவை, வேதாந்திகள் உண்டார்கள். அப்போது கொல்லாமையைப் போதித்த புத்தர் அவர்களிடம்...எதற்காக மிருகங்களைப் பலியிடுகிறீர்கள் எனக் கேட்டார்! அப்போது வேதாந்திகள், நாங்கள் அவற்றைக் கொல்லவில்லை...அவற்றை மோட்சத்துக்கு அனுப்பிகின்றோம் என்று பதில் கூறினார்கள்! அவர்களை நோக்கிய புத்தர் அப்ப்டியானால், நீங்கள் எதற்காகப் பூசை புனஸ்காரம் என்று மினக்கடுகிறீர்கள்? மிருகங்களைப் போலவே, நீங்களும் வேள்வித் தீயில் விழலாமே என்று கூறவும்....மிருகங்கள் மட்டும் தான் அவ்வாறு செய்ய முடியும் என்று வேதாந்திகள் வாதிட்டார்கள்! இறுதியில் புத்த மதம் இந்தியாவில் வேரூன்றாதவாறு பார்த்துக் கொண்டார்கள்! இருப்பினும், புத்தரின் சில திரிபிடகங்கள் இலங்கைக்குக் களவாகக் கொண்டு வரப்பட்டு, அவை தப்பிப்பிழைத்தன! இலங்கையிலிருந்து தான் சீன யாத்திரிகர் மூலம் புத்தம், ஆசியாவின் மற்றைய பகுதிகளுக்குப் பரவியது! அதனால் தான் புத்த மதம் தப்பிப் பிழைத்ததில்..இலங்கைக்கு மிகவும் முக்கியமான பங்கு உள்ளதாகக் கூறுகின்றார்கள்!
  5. எதிர்நீச்சல் போட்டு செல்லும் சால்மன் மீன்கள்........! 🐡
  6. பிலோமினாவின் தந்தையாருடன் அளவளாவிக் கொண்டிருந்த சந்திரன் ஒரு சிறுவன் வீட்டை நோக்கி ஓடி வருவதை அவதானித்தான்! அதே சுருண்ட முடியும், நீல நிறக் கண்களும்...! அந்தக் குழந்தை யாருடையது என்பதற்குப் பெரிய அறிமுகம் எதுவும் அவனுக்குத் தேவைப்படவில்லை! சந்திரனைக் கண்ட குழந்தையின் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது! அப்பன் பயப்பிடாதை...இவர் உனக்கு மாமா! வெளி நாட்டில இருந்து வந்திருக்கிறார்! குழந்தை தாத்தாவைக் கட்டிப் பிடித்த பிடித்த படி....அவனைக் கூர்ந்து கவனித்தபடியே இருந்தது! இருவரில் ஒருவருமே...பிலோமினாவைப் பற்றிய கதையை ஆரம்பிக்கவில்லை! நான் அப்ப போயிற்று...நாளைக்குக் காலமை வாறன்! பிலோமினா நிப்பா தானே எனச் சந்திரன் கேட்கவும், தந்தையார் ஓமோம்...நான் அவவிட்டைச் சொல்லி விடுகிறன் மகன் என்று கூறினார்! அவரது கண்களில் ஏதாவது செய்தி இருக்கின்றதா என்று உற்றுப் பார்த்த போதும் ஒரு வெறுமை மட்டுமே....அதில் தெரிந்தது! பின்னர் சைக்கிளை உழக்கும் போது கொஞ்சம் எதிர்க் காத்து வீசவே, சைக்கிளைத் தூக்கித் தோள்களில் வைத்த படி நடக்கலாமா என்று யோசித்தவன்...தான் இன்னும் சிறு பிள்ளையில்லை என்று நினைத்துச் சைக்கிளை உருட்டிய படியே நடக்கத் தொடங்கினான்! செல்லும் வழியில் சில வீட்டுத் தோட்டங்கள் தெரிந்தன! பொதுவாகச் சின்ன வெங்காயமும், மிளகாய், கத்தரி, வெண்டி போன்ற சில மரக்கறி வகைகளும் நடப்பட்டிருந்தன! அதன் பின்னால் உள்ள உழைப்பின் அளவை அவன் ஓரளவுக்குத் தெரிந்திருந்தான்! வெறும் கல் படர்ந்த நிலத்தின் மீது கொஞ்சம் மண்ணை உயர்த்தி..அதன் மீது தான் நாற்றுக்களை நட்டிருப்பார்கள்! தரவை நிலங்களில் நிறையக் காய்ந்த எருக்கள் கிடைக்கும்! அதையும் மழையையும் மட்டும் நம்பியே அந்தத் தோட்டங்கள் இருந்தன! வீட்டுக்கு வந்த பின்னரும் பிலோமினாவைப் பற்றிய சிந்தனை அவனை விட்ட பாடில்லை! இன்னும் நல்ல வெளிச்சம் இருந்ததால்...கால் போன திசையில் கொஞ்ச நேரம் நடக்கத் தொடங்கினான்! வீதிக்குக் கொஞ்சம் தார் காட்டியிருந்தார்கள்! இப்போதெல்லாம் வீட்டு நாய்களைக் காணும் போது...உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருந்தது! அந்த நாட்களில் நாய்கள் துரத்தும் போது, கால்களைத் தூக்கிச் சயிக்கிள் ஹாண்டிலில் வைத்து ஓடி, நாய்களுக்கே நிலாக் காட்டியதை நினைத்துப் பார்த்தான்! ஓரு இடத்தில் நிறைய ஆவரம் மரங்கள் சிறு..சிறு பற்றைகளாக இருந்தன! இவற்றின் காய்கள் சீயாக்காய் போல நீளமாக இருக்கும்! இவற்றைத் தலையில் வைத்துக் கழிகளில் குளித்ததும் நினைவுக்கு வந்தது! இப்போதும் அவ்வாறு குளிக்க வேண்டும் போல இருந்தது! இப்போது அவனுக்கு ஒரு உண்மை...ஓடி வெளித்தது! எவ்வளவு நாட்கள் பிற தேசங்களில் வசித்தாலும்...இளமைக் கால நினைவுகள் ஒரு போதும் அழிந்து போவதில்லை! அதே சூழலுக்குள் திரும்பப் போகின்ற போது...அந்த நினைவுகள் அப்படியே திரும்பவும் வரும்! இப்போது பிற் காலத்தில் இங்கு வந்து வசிக்க வேண்டும் என்ற அடி மனத்து ஆசை மேலும் வீறு கொண்டெழுந்தது! மறு நாள் காலையில் விடிந்தும் விடியாத வேளையிலேயே கண் விழித்தவன் இன்றைய நாளைப் பெரும் எதிர்பார்ப்புகளோடு வரவேற்றான்! அவனுக்கே பிடித்தமான பிட்டும், கப்பல் வாழைப்பழமும், சம்பலும் பெரியவர் அவனுக்காகச் செய்து வைத்திருந்தார்! பின்னர் காலையின் வாசனையை முகர்ந்த படியே சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் புறப்படவும்....வெளியே யாரோ வருவது போல அரவம் கேட்கவே, பிலோமினாவும் அவளது குழந்தையைக் கையில் பிடித்த படியே நடந்து வந்து கொண்டிருந்தாள்! அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் பெரியவரின் நினைவு திடீரென வந்ததும், அவளை வரவேற்பதற்காக வெளியே ஒடினான்! அதற்குள் பெரியவர் முந்திக்கொண்டார்! என்ன பிள்ளை இந்தப் பக்கம்? பேச்சு நடை விபரீதமாகப் போய் விடக் கூடாது என்பதற்காக, இவ எனது நண்பனின் உறவினர்...என்னிடம் தான் வந்திருக்கிறா என்று கூறியவன் பிலோமினாவை அழைத்துக் கொண்டு விறாந்தையில் கிடந்த கதிரையில் உட்காரச் சொன்னான்! அவனது கைகளில் தோன்றிய நடுக்கம்...வெளியே தெரிந்து விடுமோ என்று அவன் அஞ்சிய மாதிரித் தெரிந்தது! தான் எவ்வளவு கோழையாகிப் போனேன் என்று அவனுக்கே வெட்கமாக இருந்தது! பெரியவரிடம் இவள் என்னோடு ஒரே பாடசாலையில் படித்தவள் என்றோ....எனக்கு மிகவும் நெருக்கமானவள் என்றோ அறிமுகப் படுத்தியிருக்கலாமே என்று மனதுக்குள் புழுங்கிக் கொண்டான்! ஒரு ராஜதந்திரப் பார்வை ஒன்றை அவள் மீது வீசிய படியே பெரியவர் அப்பால் நகர்ந்து போனார்! பெரியவர் போன பின் அவளது கரங்களை இறுகப் பற்றிய படியே வெகு நேரம் நின்று கொண்டிருந்தவனை....எப்படி இருக்கின்றீர்கள் என்ற அவளது குரல் இவ்வுலகத்துக்கு அவனை திரும்பவும் கொண்டு வந்தது! ஓம்...ஓம்...சுகத்துக்கு ஒரு பிரச்சனையும் இல்லை! நான் உங்களை மறந்து போகேல்லை! ஆனாலும் வெளி நாடு சென்றதும் எதிர்பாராத எவ்வளவோ பிரச்சனைகள், படிப்பு...வேலை என்று சிந்திக்கவே நேரம் கிடைக்கேல்ல! தமிழனுக்கே உரித்தான தனித்துவமான பொறுப்புக்கள், எதையுமே நனைச்சுச் சுமக்க வைக்கும் எமது சமுதாய அமைப்பு எல்லாமே சேர்ந்து எனது வாழ்வைத் தின்று விட்டன! எல்லாம் முடிந்து கண்ணாடியைப் பார்த்த போது....காதோரத்தில் நரை முடி அரும்பிப் போயிருந்தது! அவன் சொல்லி முடிக்க, அவளும் சிரித்த படியே தனது புத்தம் புதிய நரை முடிகளைத் தடவிக் கொண்ட்டிருந்தாள்! இதையெல்லாம் பற்றி நீங்கள் கவலைப் படவே வேண்டாம்! எழுதிச் செல்லும் விதியின் கை, யாருக்காகவும் எழுதுவதை நிறுத்துவதில்லை! எப்படி உங்கள் குடும்பம் என்று அவள் விசாரித்த போது...அவனது மௌனமே அவளுக்கான பதிலாக அமைந்தது! அதன் பின்னர் அவளும் அந்தக் கேள்வியை மீண்டும் கேட்கவேயில்லை! வானத்துச் சந்திரனைப் போலவே.....நீங்கள் என்னிடமிருந்து வெகு தூரம் போய் விட்டீர்கள்! நீங்கள் அண்மையில் இருந்திருந்தாலும் இந்த உலகம் எம்மிருவரையும் சேர்ந்து வாழ ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டாது! ஏன், இன்றும் கூட அது பெரிதாக மாறி விடவில்லை! நான் இந்த வீட்டின் படலையத் தாண்டி வந்த போது...அந்தப் பெரியவரின் முகத்தில் தோன்றிய கோடுகளை, நீங்களும் பார்த்தனீங்கள் தானே? நீங்கள் வெளி நாடு போய், ஐந்து வருடங்கள் ஆனதும், எங்களுடன் படித்த பீற்றர் என்னைக் கட்டித் தரும்படி அப்பாவிடம் கேட்க, நானும் கழுத்தை நீட்டினேன்! பீற்றரும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு வள்ளம் வாங்கி வைத்திருந்தார்கள்! பிடிக்கும் மீன்களை எல்லோருமே பங்கிட்டுக் கொள்வார்கள்! ஒரு வருடத்துக்கு முன்பு வரை எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது! ஒரு நாள் இந்திய இழுவைப்படகுகள் இவர்கள் போட்டிருந்த வலைகளை அப்படியே சேதப் படுத்தி விட்டுப் போய் விட்டன! இவர்களது வலைகள் மட்டுமல்ல, இன்னும் பலரது வலைகளுக்கும் அதே கதி தான்! இப்போதெல்லாம் இந்தியப் படகுகள் கரைக்கு அருகேயே வருகின்றன! நீங்கள் வந்து பார்த்தால் அவற்றின் எஞ்சின் சத்தத்தைக் கூடக் கரையிலிருந்தே நீங்கள் கேட்கலாம்! சந்திரன் நீண்ட நேரம் யோசித்து விட்டு....என்னால் ஓரளவுக்கு உதவ முடியும்! ஆனால் இதை நீங்கள் நிச்சயம் மறுக்கக் கூடாது என்றான்! இதைக் கேட்டுத் திடுக்கிட்ட பிலோமினா, சந்திரன் நீங்கள் எந்தப் பிராயச்சித்தமும் செய்ய வேண்டிய அவசியமில்லை! உங்கள் மீது எந்தத் தவறுகளும் இல்லையே என்று கூறினாள்! இல்லை, எனது ஆத்ம திருப்திக்காக என்னால் முடிந்த ஒரு உதவியை உனக்காகச் செய்ய என்னை அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தவே, அவளும் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டாள்! மறு நாள் வங்கிக்குச் சென்று பிலோமினா பெயரிலும், அவளது குழந்தையின் பெயரிலும், அவனது பெயரிலும் ஒரு வங்கிக்கணக்கு ஒன்றைத் திறந்து வலைகளுக்குத் தேவையான பணத்துடன் மேலதிகமாகக் கொஞ்சப் பணத்தை மேலதிகமாகவும் போட்டு, மாதம் ....மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அந்தக் கணக்குக்குத் திரும்பக் கட்டுமாறு கூறியவன்...அந்தக் கடன் கட்டி முடியும் வரை...அந்த வங்கிப் புத்தகம் தன்னிடமேயிருக்கும் என்றும் கூறிய படியே, அந்தக் குழந்தையின் தலையை வருடிய படியே விடை பெற்றான்! சில நாட்களின் பின்னர்..அவனது வீட்டில் அவன் விடிகாலையில் நித்திரையால் கண் விழிக்கும் போது, அவனது மனைவி 'என்னப்பா...ராத்திரி முழுக்கப் பிலோ...பிலோ எண்டு பினாத்திக் கொண்டிருந்தீங்கள், தலைகணி விலகிப் போச்சோ என்று கேட்கவே, ம்ம்...தலையே விலகிப் போச்சுது என்ற படி....அன்றைய நாளுக்கான கடமைகளில் மூழ்கத் தொடங்கினான்! அடுத்த வருசம் இந்தப் பாஸ் புத்தகத்தை எப்படியாவது பிலோமினாவிடம் சேர்த்து விட வேண்டும்! இனிமேல் அவன் ஊருக்குப் போக மாட்டான்! முற்றும்....!
  7. மாலதி அதிகாலை விழித்து விட்டாள் .எழுந்து காலைக்கடனை முடித்தவள், அடுப்பை பற்ற வைத்து , தேநீருக்கான ஆயத்தங்கள் செய்தாள். அப்போது மாமியார் பசுக்களில் பால் எடுத்துக்கொண்டு பாற்செம்புடன் வந்தாள். அவர் வாடிக்கைக்காரர் இருவருக்கு போத்தலில் பாலை நிரப்பி மீதியை மாலதியுடம கொடுக்க அவள் அவற்றை காய்ச்சி குழந்தைகளுக்கும் மாமனாருக்கும் தேநீர் தயாரித்து கொடுத்தாள். தன் மாமியார் பங்கை கொடுக்கவும் அதை வாங்கி ....பருகிக்கொண்டே " மாலதி ...இன்று பட்டணம் போக வேணும் என்று சொன்னனீர். எத்தனை மணிக்கு போகவேனும். ......வரும்போது இவருக்கு ஒரு சாரமும்( லுங்கி) ..மறக்காமல் வாங்கி வாரும். என்றாள். சம்மதம் சொன்ன மாலதி உடுப்பு மாற்றி வெளிக்கிட தயாரானாள் நாலு வயது ரோகிணியும் இரண்டு வயது ரோஷானும் இவளது குழந்தைகள். அவர்களுக்கே உரிய துடுக்கு தனம் உடையவர்கள். மாமனார் பால் போத்தல்களுடன் விநியோகிப்பதற்காக புறப் பட்டார். காலை உணவை எல்லோருக்கும் கொடுத்து தனது பங்கையும் முடித்து கொண்டவள்.ஒன்பது மணி பஸ்சுக்காக புறப்படும் போது பிள்ளை களையும் அமைதிபடுத்தி "விளையாட்டு பொருட்கள் வாங்கி வர வேணும் அம்மா" என்னும் வேண்டுதல் வழியனுப்புதலோடு பஸ் தரிப்பு நோக்கி புறப்பட்டாள் . பஸ் வண்டியும் நேரத்துடன் வரவே ...அதில் ஏறி உட்கார்ந்தாள். பற்றுச்சீ ட்டை பெற்று கொண்டவள் எண்ணம் கடந்த காலத்தை நோக்கி சிறகடித்தது................. தன் பெற்றவரை மீறி மகேந்திரனை கைப்பிடித்துக் கொண்டவள் தான் மாலதி.இவள் பிறந்த வீட்டில் வசதி வாய்ப்புகளை கொண்டவள் . சற்று வசதியானவள். மகேந்திரனை காதலித்தபோது ...அந்தஸ்த்து காரணமாய் மறுக்கவே ஒருநாள் ஓடிபோய் திருமணம் செய்து கொண்டாள். அதே ஊரில் இருந்தாலும் இவளது பெற்றோரும் சகோதரார்களும் இவளை சேர்ப்பதில்லை . கைப்பிடித்த நாள் முதல் மகேந்திரனும் இவளை கண்கலங்காமல் பாதுகாத்தான். மகேந்திரன் , சாதாரண விவசாயக் குடிமகன். தாய் தந்தைக்கு ஒரே பிள்ளை . சற்று வசதி வாய்ப் புகள் குறைவு என்பதால் ஓலை வீட்டிலேயே வாழ்ந்தார்கள். இதனால் தான் மாலதி வீட்டுக் காரர் இந்த திருமணத்தை விரும்பவில்லை. தங்கள் அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரியில்லை என்பதால். மண முடித்து இரு குழந்தைகளும் பிறந்த பின் , தன் வாழ்வுக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் பலத்த முயற்சியின் பின் வெளி நாட்டுக்கு புறப்பட்டான் . வாழ்வில் அவன் தாய் தந்தையை பிரிந்த துயரம் ...வேலையின் கடின உழைப்பு துயரை தந்தாலும் எதிர்காலத்துக்காக தாங்கி கொண்டான். மாலதி அவன் அனுப்பிய காசு வங்கியில் பெற்றுக்கொள்வதற்காக தான் பட்டணம் செல்கிறாள். புது வருடம் பிறக்க போகிறது மூத்தவள் ரோகினியை பாடசாலயில் சேர்க்க வேண்டும் ......மாமனார் ..மாமியாருக்கு துணிமணிகள் எடுக்கவேண்டும். மகன் ரோஷன் ...ஒரு மூன்று சில்லு சைக்கிள் வண்டி கேட்டுக்கொண்டிருந்தான்...........அத்தோடு இந்த பணத்தில் மகேந்திரன் போவதற்காக் பட்ட கடனுக்கும் கொஞ்சம் கட்டவேண்டும்......... வங்கிக்கு சென்று பணத்தை பெற்றவள் பெரும் பகுதியை ஒரு இறுக்கிய இணைப்பு கொண்ட கைப் பையினுள் மறைத்து வைத்தாள் மீதியில் தேவையான பொருட்களை வாங்கினாள் .இரண்டு கையிலும் பொருட்களின் சுமை . மனதில் வீடு நோக்கிய அன்புச்சுமை ...........அன்று ஏனோ வஸ் வண்டி மிகவும் ஊர்ந்து செல்வது போல் இருந்தது..வீட்டில் மாமியார் மதிய உணவை பேரப் பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டு, தான் உண்ணாமல் இவளுக்காக காத்திருப்பார்."அம்மா" என்று அழைத்துக்கொண்டு என் மருமகள் வருவாள் என்று பசியோடு வாசலை பார்த்து கொண்டிருப்பார் என்பது ...மனதை மெல்ல நெருடிக்கொண்டு இருந்தது . ஆம் இவள் தன் மாமியாரை " அம்மா " என்று தான் அழைப்பாள். அவரும் தனக்கு பெண் குழந்தை இல்லயே என்ற கவலை தீர்க்க வந்த இன்னொரு) மகள் என்று தான் உறவு பாராட்டுகிறார்கள். மாமி மருமகள் என்றாலும் வேற்றுமை பாராட்டுவதில்லை . .....மாலதிக்கு அவர் இன்னொரு அம்மா..... சில குடும்பங்களில் பெண்ணுக்கு பெண்களால் தான் எதிரி . எதிலும் குறை சொல்வது . பிழை பிடிப்பது மச்சாள் ( நாத்தனார் ) இருந்துவிடடால் போதும் தனது செல்வாக்கை கைப்பற்ற வந்த எதிரி என்றே எண்ணுவார்கள். அவளுக்கும் ஒரு காலம் வரும் .......நல்ல வாழ்வு வரும் . வாழ்வு வந்தால் இழந்த சொந்தங்கள் தேடி வரும். ..
  8. சுவியர்... மிக வித்தியாசமான, ஆனந்த உணர்வுடன் உள்ளேன். முறுக்கு... சுட்ட கஸ்ரம் ஒரு பக்கம், இருக்க... படங்கள்... இணைக்கும், கஸ்ரம்... மூளைக்கு அதிக வேலை கொடுத்து விட்டது. கிருபன் ஜீ... இயலுமானவரை அவசர உதவி செய்தார். அதனை... என்றும் மறக்க முடியாது. யாழ். களம் படங்களை இணைப்பதில், பயங்கர கட்டுப்பாடுகளை வைத்துள்ளது போல் தோன்றுகின்றது. அது... அவர்களின் நிர்வாகம் சம்பந்தப் பட்ட விடயம் என்றாலும், என்னை... உலுக்கி எடுத்துப் போட்டுது.
  9. பிறரை மட்டம் தட்டுகிறீர்களா கவனம் உங்களுக்காகவே தண்ணித்தொட்டி காத்திருக்கு......! 👍
  10. மிசினுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.......! 👍
  11. விளையாட்டு வரலாற்றின் சிறப்பான நிகழ்வுகள்.......! 😁
  12. எது உண்மை? எது பொய்? என்பதை... 4 விதமா பேசும் இந்த 4 பேரிடமும் சென்றால் நன்றாக அறியமுடியும் தங்கையே.😲
  13. Thaaye Unakkaga 1966 directed by P. Pullaiah stars Sivaji Ganesan, S. S. Rajendran, R. Muthuraman, Padmini and Santha Kumari musical K. V. Mahadevan Singer: B. Vasantha இயேசு நாதர் பேசினால் அவர் என்ன பேசுவார் ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள பார்வையிலே பழுது வந்தால் தேவனை கேளுங்கள்
  14. சந்தன மலரோ உன் முகமே ஸ்ரீ சரவணபவன் உன் பொன்முகமே செந்தூர்முருகா அருட்செல்வமே திருச்சேவடி பணிந்தேன் என் தெய்வமே .. என் தெய்வமே நடமாடினான் வடிவேலனே . . . தத்தீம் தகதிமி தரிகிடமென தாழினை நடமிட தண்ணுமை முழங்கிட போர்க்களம் வந்தான் சூரபத்மன் . . . போர்க்களம் வந்தான் சூரபத்மன் புன்னகை மறந்தான் திருமுருகன் புரிந்தான் குமரன் குடைக்கூத்து . . . நெடும்பகை போர்க்களம் நடனமிடும் அரங்கென குடையோரு திடரையிட கொடுமைகள் விலகிட கடலில் மறைந்தான் சூரபத்மன் . . . கடலில் மறைந்தான் சூரபத்மன் கண்டான் தொடர்ந்தான் திருமுருகன் புரிந்தான் வேலவன் துடிக்கூத்து . . . அலையோடு அலையென அலைகடல் அரங்கென துடியோடு பதமிட அரும்பகை பொடிபட
  15. முதலே முடிவே முழுமையே போற்றி.
  16. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 மார்க்கமும் மதமும்
  17. அவர் முறுக்கே சுடவில்லை எதோ குறுக்காக யோசித்து கிறுக்காக எழுதியுள்ளார் இதில் முறுக்கு தண்ணியில் வெந்தால் என்ன பியரில் மிதந்தால் என்ன ஆனாலும் திரி விறுக்காக ஓடுகின்றதல்லவா 🙏🤣
  18. எப்பிடியும் நாலு வெள்ளி செல்லும் போலை கிடக்கு.....இனித்தான் முறுக்குக்கு மா வாங்கப்போறாரோ ஆருக்குத்தெரியும்?😁 நானெண்டால் கடையிலையாவது இரண்டு முறுக்கு பக்கற்றை வாங்கி ஒரு தட்டிலை போட்டு படங்காட்டி வெட்டி விளாசியிருப்பன்.😎
  19. வாத்தியார்....! இங்கு பின்னூட்டம் கொடுத்த எவருமே சிறித்தம்பி முறுக்குச் சுட்ட நாளைக் கவனிக்கவில்லை. அது வெள்ளிக்கிழமை. அவர் பியர் அடித்து மப்பேத்திக்கொள்ளும் நாளது. அன்றுதான் முறுக்கும் சுட்டிருக்கிறார். நீங்கள் கிட்டத்தட்ட சரியாகத்தான் கணித்துள்ளீர்கள். ஆனாலும் அது எண்ணையுமில்லைத் தண்ணியுமில்லை, நல்ல மப்பிலை பியரை ஊத்தித்தான் சுட்டிருக்கிறார். 😂🤣
  20. கெதியா சுட்டு அனுப்புங்கோ ....இன்று சனிக்கிழமை பிரயோசனப்படும்..
  21. நொந்து நூடுல்ஸ் ஆகியதை காணொளியாக்கி யூரியூப்பில் போட்டால் பிச்சுக் கொண்டு ஓடும்.
  22. அலையாத்திக் காடுகள் ஒரு நாட்டின் எல்லைக்காவல் படை என்றால் மிகையாகாது.....அவற்றைக் காப்போம்.......! 👏
  23. 5 வயது leighla வின் 400 மீ ஓட்டப்போட்டி.....சாதனை.......! 👏
  24. 18.03.2021அன்று எனது கவி வரிகளில் உருவான இந்த பாடலை யாழ் இணையத்துள் பகிர்ந்து கொள்வதில் மகிழ்சி அடைகின்றேன். உங்களின் ஆதரவையும் வேண்டி நிற்க்கின்றேன். நன்றிகள். அன்புடன் பசுவூர்க்கோபி-
  25. கபடியில் கட்டிப்பிடித்து உருண்டு,பிரண்டு விளையாடும் கன்னிகள்.....! 😂
  26. 1960களின் கடைசியில் யாழ் இந்துவில் இருந்து வெளியே தலைகாட்ட தொடங்கிய நேரம். முதலாவது பாடம் முடிந்ததும் ஆசிரியர் வெளியேற ஓரிரு நண்பர்களும் நானும் அவர் பின்னாலேயே வெளியேறிவிடுவோம். ஆரம்பத்தில் ஒரு பாடம் இரண்டு பாடமாக தொடங்கி நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது. பாடசாலைக்கு 2 வருடமாக வாகனத்திலேயே வந்து போனேன்.அப்போது மாதம் 10 ரூபா மட்டுமே.வீட்டிலிருந்து வாகனம் வந்துபோகும் பாதை மாத்திரமே தெரியும்.வேறு பாதை தெரியாது. ஒருநாள் படம் பார்க்க போகலாமா என்று நண்பர் கேட்டார்.அவர் மனோகரா திரையரங்குக்கு அருகாமையில் வசிப்பராகையால் யாழில் கூடுதலான இடங்கள் தெரியும். சரி நண்பன் தான் கேக்கிறானே ஆனால் ரிக்கற் எவ்வளவு அதுக்கு என்ன செய்வது என்று யோசிக்க உங்களிடம் காசில்லாவிட்டால் பரவாயில்லை நாளைக்கு தாங்கோ என்றான்.நானும் மற்ற நண்பனும் கோவில் மாடு போல தலையாட்டினோம். ஒரு நண்பனின் தலமையில் பின் தொடர்கிறோம்.பெருந் தெருக்களுக்கு போகாமல் சிறிய ஒழுங்கைகள் வழியாக 10.30 க்குத் தான் படம் தொடங்கும் 10.25 க்கு போனால் சரி என்றான்.நெஞ்சு திக்குதிக்கென்று இருந்தாலும் படம் பார்க்க போகிறோமே என்று சந்தோசமும் ஏதோ சாதனையுமாக இருந்தது. நாங்களும் உள்ளுக்கு போக முதலாவது மணியும் அடிக்கிறது.படம் தொடங்கிய பின் தான் ஒரு ஆங்கிலப் படத்துக்கு வந்திருக்கிறோமே என்று.முதன்முதலாக களவாக பார்த்த படம் ஜேமஸ் பாண்ட் நடித்த கோல் பிங்கர்(Gold Finger) படம் முடிந்து பிற்பகல் முதல்பாடம் இடாப்பு கூப்பிட முதல் போக வேண்டுமே என்று ஓட்டமும் நடையுமாக போய் சேர்ந்துவிட்டோம். அன்று வீட்டுக்குப் போனால் 65 சதம் கொடுக்க வேண்டுமே எப்படி கொடுப்பது?இரவுவரை ஒரு வழியும் தெரியவில்லை. காலையில் குளித்து சாமி கும்பிடும் போது தான் ஒவ்வொரு சாமிப்படத்தின் முன்பும் சில்லரை காசுகள்.ஆகா இதைவிட்டால் வேறு வழியே கிடையாது.பொறுக்கி எடுத்து காற்சட்டை பொக்கற்றுக்குள் போட்டு கிலிங்கி சத்தம் கேக்காமல் ஒரு நுhலாலும் கட்டி கடன் கொடுத்தாயிற்று. இது தான் பள்ளியிலும் வீட்டிலும் தொடங்கிய முதல் களவு.முதல் தவறு செய்வது தான் மிகவும் கஸ்டம்.அப்புறம் அதுவே பழக்கமாயிடும். பின்னர் வின்சர் ராஜா திரையரங்குகளில் 10.30 படம்.காசில்லை அல்லது புதுப்படம் வரவில்லை என்றால் எங்காவது சும்மா சுற்றுவது. ஒருநாள் கஸ்தூரியார் வீதி வழியாக வின்சர் திரையரங்கு நோக்கி போகும் போது நிறைய நேரமிருக்கு என்று அதற்கு முதல் சந்தியில் இடதுபக்கமாக திரும்பி போனால் சிறிய வாசிகசாலை பெயர் அண்ணா அறிவகம். வாசிகசாலை சிறிதாக இருந்தாலும் நிறைய புத்தகங்கள் குறைந்த சனம்.புத்தகங்களுடன் இருந்தில் நேரம் போனதே தெரியவில்லை.படத்துக்கும் நேரம் போய்விட்டது. இதுக்குப் பின் படம் இல்லாவிட்டால் அண்ணா அறிவகம் என்றாகிவிட்டது.நாளாந்தம் போகப் போக படத்துக்கு போகாவிட்டாலும் வாசிகசாலைக்கு போய்வந்தோம். இதுவரை யாழ் பொதுசன நுhலகத்திற்குப் போனதில்லை. ஆனாலும் அண்ணா அறிவகம் மாதிரி ஒரு வாசிகசாலையை இன்னமும் காணவில்லை.அனேகமாக சுவியருக்கு இந்த வாசிகசாலையும் இடங்களும் நன்கு தெரிந்திருக்கலாம்.
  27. மைதானத்தில் நிகழ்ந்த மறக்க முடியாத மகோன்னதமான தருணங்கள்......! 👏
  28. ஒரு பக்க... "கிட்னியை" விற்று, மோட்டார் சைக்கிள் வாங்கிய... நேபாளி. 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.