Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46808
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    38791
    Posts
  3. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    9308
    Posts
  4. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    13720
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/22/21 in Posts

  1. எனது நாத்திகம் - சுப. சோமசுந்தரம் நாம் விரும்பாமலே நாத்திகம் எனும் வடமொழிச்சொல் வெகுசனத்திடம் பரவிவிட்டதால், இறை மறுப்பை நான் இங்கு ‘நாத்திகம்’ என்றே பதிவிடுகிறேன். ‘கடவுள் உண்டா இல்லையா ?’ என்ற அருதப் பழசான விவாதத்தை ஆரம்பித்து, வாசிப்போரின் கழுத்தில் நரம்பு புடைக்க வைப்பது சாமி சத்தியமாக(!) இவ்வெழுத்தின் நோக்கமல்ல. “உண்டென்பார்க்கு உண்டு, இல்லையென்பார்க்கு இல்லை” என்று ஏனையோரிடம் உரக்கச் சொல்லிவிட்டு, “ஆனால் எனக்குத் தெரியும் இல்லையென்று” என எனக்குள் சொல்லி ‘கடவுளைக்’ கடந்து செல்பவன் நான். (ஆகையால் அது ‘கட உள்’ தானோ?) ‘நான் நாத்திகன் ஏன்?’ என்ற பகத்சிங்கின் அளவில் சிறியதொரு பெரிய படைப்பினை வாசித்த அனுபவம் எனது நாத்திகத்தையும் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்ததோ என்னவோ ! பகத்சிங் தமது சிந்தனையாலும் செயலாலும் தம் படைப்பினை உலகையே வாசிக்க வைத்தவர். குறைந்த பட்சம் நட்பு வாசக வட்டத்தில் அனுபவங்களைப் பகிரும் எண்ணமே எனது இந்த எழுத்து. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வது நமக்குப் புதிதா என்ன? எனக்கு விவரம் தெரிந்து சுமார் பன்னிரெண்டு வயது முதல் நான் நாத்திகன். இது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. என் வீட்டின் ஜனநாயகச் சூழலும், வீட்டில் பெரியாரையும் அண்ணாவையும் சிலர் பேசிக் கொள்ளும் சுமாரான அரசியல் சூழலும், எனக்கு வாய்த்த ஆசிரியர் ஒருவர் அந்நாளைய பள்ளி வரைமுறைகளைத் தாண்டி திராவிட இயக்க விதைகளை அவ்வப்போது தூவியதும் காரணமாய் அமைந்தன எனலாம். பசுமரத்தாணியாய்ப் பதிந்து நிற்கும் பருவம் அது. இறை நம்பிக்கையும் அப்படித்தானே ! குழந்தைப் பருவத்தில், “கண்ணு, சாமி கும்பிடு ! சாமி கும்பிடு !” என்று சொல்லி வளர்ப்பதே இறை, மத நம்பிக்கையாய் முகிழ்க்கும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை. பின்னர் அந்நம்பிக்கை சார்ந்த பெரியோரிடம் கற்றல், கேட்டல் மூலம் அது வலுப்பெறும். நிற்க. இளம் வயதில் பெரியார், அண்ணாவிடம் படித்த பாடம் கல்லூரி நாட்களிலும் பின்னாளிலும் மேலும் கிடைத்த நூலறிவினால் வாழ்வியலானது. குறிப்பிட்டுச் சொல்வதானால் ஆபிரகாம் கோவூரின் ‘Gods, Demons and Spirits’, பெட்ரன்ட் ரஸலின் ‘Why I am not a Christian’, கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸின் ‘God is not great’ என்னை நல்வழிப்படுத்தியவை. ஆயினும் இந்த ஆன்றமைந்த கொள்கைச் சான்றோர் எனக்குப் போதித்ததைப் போல் நாத்திகத்தை நான் யாருக்கும் போதிக்கவில்லை. என் குழந்தைகளுக்குக் கூட, உண்டு அல்லது இல்லை எனப் புகட்டியதில்லை. எனது நடவடிக்கைகள் மூலம் அவர்கள் இறைமறுப்பின்பால் ஈர்க்கப்பட்டது எனக்கான பேறு. அதிலும் அவர்கள் பெண்பிள்ளைகள் என்பது பெரிதினும் பெரிதான பேறு. இதில் இறைநம்பிக்கையுள்ள எனது இல்லாளின் பங்களிப்பு அபரிமிதமானது. அவளும் தன் நம்பிக்கையைக் குழந்தைகளுக்கு ஏற்றியது இல்லை. இந்த ஜனநாயகம் எல்லோருக்கும் வாய்ப்பதிலை. ஆத்திகர்களின் மொழியில் சொல்வதானால், நான் இறை மறுக்க அவர்களது இறைவனாலேயே ஆசீர்வதிக்கப்பட்டவன் போலும்! பெரும்பான்மைச் சமூகம் இறை நம்பிக்கை சார்ந்ததால், பெரும்பாலான இறை மறுப்பாளர்கள் தங்களை வெளிக்காட்டுவதில்லை. அது அவரவர் தனிப்பட்ட கருத்து எனும் நிலைப்பாடாக இருக்கலாம். இப்பூவுலகில் இவர்களோடுதானே வாழ வேண்டும் எனும் நடைமுறைச் சித்தாந்தமும் என் போன்றோர்க்கு ஏற்புடையதே. எனக்கு இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும் சமூகத்தில் பெரும்பாலானோர் அந்த நம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பது என் உள்ளக்கிடக்கை. அதற்கு நானாக வரித்துக் கொண்ட காரணங்கள் இரண்டு. ஒன்று, ‘மேலே ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்’ எனும் பயத்தினால் மட்டும் அதிகம் தவறு செய்யாமல் இருக்கும் வெகுசனம். இரண்டாவது, வாழ்வில் சொல்லொணாத் துயரத்தை எதிர்கொள்ள ‘மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்’ என்று பாரத்தைக் கற்பனையான தோள் மீது இறக்கி வைக்கும் மனோபாவம்; அக்கற்பனை தரும் ஆறுதலை அவர்களுக்கு என்னால் தர இயலாத கையறுநிலை. எனவே அறியாதாரை அறியாமை இருளிலேயே வைத்து நமக்கும் அவர்களுக்கும் துன்பமில்லாமல் வாழ நினைக்கும் சுயநலம் எனது. வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி நமக்கும் தான் வரும். அப்போது நமக்கு அந்த கற்பனைத் தோள் வேண்டாமா ? இல்லையென்று நம்பிக்கை(!) ஏற்பட்டு சுமார் ஐம்பது வருடங்களான பிறகு, இல்லாததைக் கற்பனை செய்ய இயலாது. வாழ்வில் ஏற்படும் இன்பத்தை அளவாய்த் துய்க்கத் தெரியும். துன்பத்தில் அழத் தெரியும், விழத் தெரியும், எழத் தெரிய வேண்டும். இது தான் பக்குவம் பெற்ற வாழ்விற்கான இலக்கணம் என்பது எனக்குப் பால பாடம். எனக்கு இலக்கிய ஆர்வம் உண்டாகையால் பக்தி இலக்கியங்களையும் விட்டு வைக்க மனம் வருவதில்லை. நான் உருகவில்லையாயினும் அவர்கள் எப்படி உருகுவார்கள் என்பதை உணரும் அளவு இலக்கியச் சுவை தெரிந்தவன். நாத்திகராயிருந்தும் கோயில்களையும் பக்தி இலக்கியங்களையும் சமயங்களின் அடிப்படைத் தத்துவங்களையும் உணர்ந்த அறிஞர் தொ. பரமசிவன் இவ்விடயத்தில் எனக்கான வழிகாட்டி. இவையனைத்தும் மக்களை வாசிக்க உதவும் கருவிகள் எனக் கொள்ளலாம். பக்தி இலக்கியம் பேசும்பொழுது, எழுதும் பொழுது நமது இறைமறுப்பை வெளிக்காட்டாது அவ்விலக்கியச் சுவை காட்டுவது கயிற்றின் மேல் நடப்பது. “கடவுள் இல்லை; இல்லவே இல்லை” என அறிவித்து மக்கட்சேவை செய்யும் நாத்திகப் பெரியோர் வீரமரபில் தோன்றிய சான்றோர். மக்கள் கூட்டத்திலிருந்து தனித்தியங்கும் ஆற்றல் பெற்றோர். அவ்வகையில் தமிழ்ச் சமூகத்தில் பெரியார் எஞ்சாமி(!). நடிப்பாற்றலால் வெகுசனத்தில் விரவி தன் அடையாளத்தைத் தொலைத்து வாழ்ந்து தொலைக்கும் நான் ஒரு கோழை. இதுகாறும் எனது நாத்திகத்தில் பொதுவான விஷயங்களைப் பேசிய நான் இது தொடர்பில் ஒன்றிரண்டு நிகழ்வுகளை நினைவு கூற நினைக்கிறேன். இத்தகைய நிகழ்வுகளும் என்னைப் பெரிதும் செதுக்கியதாக உணர்கிறேன். அவை என் மனதில் காட்சிகளாய் விரிகின்றன. காட்சி 1: இறை மறுத்து வளர, வாழ எனக்குச் சாதகமான சூழலே அமைந்தது எனக்கான வரம். அவ்வரம் எனக்கு பள்ளி, கல்லூரி வடிவிலும் அமைந்தது கூடுதல் சிறப்பு. உரோமன் கத்தோலிக்க நிறுவனங்களிலேயே நான் வளர்ந்தாலும், தம் மத நம்பிக்கைகளை என்மீது இம்மியளவும் அவர்கள் ஏற்ற முயற்சி செய்ததில்லை. கத்தோலிக்க மாணவர்களுக்கு வாரம் ஒரு மணி நேரம் கத்தோலிக்க மறை வகுப்பு நடைபெறும் பொழுது ஏனையோருக்கு நல்லொழுக்க வகுப்பு நடைபெறும். அவ்வளவே. ஒருமுறை கல்லூரியில் வகுப்புத் தோழன் ஒருவன் வேலைக்கு மனுச் செய்த போது அவனுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் தேவைப்பட்டது. கிறித்தவனான அவன் எங்களது தமிழ் ஆசிரியரும் அவனது விடுதிக் காப்பாளருமான பாதிரியாரிடம் சான்றிதழ் கேட்கப் போகும் பொழுது என்னையும் துணைக்கு அழைத்தான். நன்றாகப் படிக்கும் மாணவன் நல்ல மாணவன் என்ற வேடிக்கையான வரையறை அன்றும் இன்றும் உண்டே ! அதனால் பெரும்பாலான ஆசிரியர் பெருமக்களுக்கு என் மீது அன்பும் மதிப்பும் உண்டு என்பது என் கணிப்பு. பாதிரியார் அவனிடம், “எடேய், நீ ஜெபத்துக்கே வர மாட்டே ! உனக்கு எப்படி நான் காண்டக்ட் (conduct certificate) தரமுடியும்?” என்று கடிந்துகொண்டார். அவன் கூடப் போய் நான் அங்கு நின்றதே அநாகரிகம். அதையும் தாண்டி நான் அதிகப்பிரசங்கித் தனமாக அப்போது இடைமறித்துப் பேச வேறு ஆரம்பித்தேன். அவ்வயதில் எங்களுக்குத் தெரிந்த நாகரிகம் அவ்வளவுதான். “ ஃபாதர் ! ஒழுக்கத்திற்கும் ஜெபத்திற்கு என்ன தொடர்பு ? ஜெபம் ஒருவரின் தனிப்பட்ட விஷயம்தானே ?” – சாதாரணமாக ஒரு பாதிரியாரிடம் சராசரி மனிதர்கள் கேட்காத கேள்வி. என் மீது கொண்ட அன்பினால் அவர் கோபம் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். மாறாக, “நீ சிறிது நேரம் வெளியே நில்!” என்று சாந்தமாகச் சொல்லி அனுப்பிவிட்டு அவனிடம் பேசினார். பின்னர் அவனை அனுப்பிவிட்டு என்னை உள்ளே அழைத்துச் சொன்னார், “நீ சொன்னது உனக்குச் சரி, நான் சொன்னது அவனுக்குச் சரி. படிப்பெல்லாம் எப்படிப் போகிறது ? கம்பனில் நம் பாடப்பகுதியில் உள்ள அந்த சிறு பகுதியை நீ செமினார் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று வெகு சாதாரணமாய்ப் பேசி, புன்னகை மாறாமல் அனுப்பிவிட்டார். அவர் உள்ளே அழைத்ததும் எனக்கு கடவுள், ஜெபம் பற்றிய பாடம் எடுக்கப் போகிறார் என்று நினைத்தேன். தம் செயல்பாட்டின் மூலமாக அவர் எனக்குத் தந்த பாடம் ஜனநாயகம் என்று நம்புகிறேன். அன்று என்னுள் இருந்த இளைஞன் கபடமின்றி இப்படி யோசித்தான், “அவர் சான்றோர் என்பதில் ஐயமில்லை. கூடவே, அவரும் என்னைப் போல் இச்சமூகத்தில் ஒரு நாத்திக நடிகர்தானோ !” காட்சி 2 : அடிப்படைக் கணிதக் கோட்பாடுகளை அழகுற எடுத்துச்சொல்லி அத்துறையில் நான் நானாக பெரிதும் காரணமானவர் எனது கணிதப் பேராசிரியர் திரு. ஜோதிமணி அவர்கள். இலக்கிய ஆர்வமும் உள்ளவர். சிந்தனைச் சிற்பியான அவர் வாழ்வியலிலும் எனக்கு ஆசான். பல்துறை சார்ந்த அறிவே சான்றாண்மை என்பதை எடுத்துக் காட்டியவர். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகும் அவருடன் தொடர்பில் இருந்தேன். நான் எங்கள் ஊரிலேயே புதிதாகத் தோன்றிய பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியனாய்ப் பணி அமர்ந்ததால் நாங்கள் குடும்ப நண்பர்கள் ஆனோம். அவர் ஞாயிறு தவறாமல் தேவாலயம் செல்லும் கிறித்தவர். வழியில் மாரி அம்மனையும் வணங்கும் விந்தை மனிதர். பேராசிரியர் தொ.ப விற்கு அடுத்தபடியாக சைவமும் வைணவமும் அவரிடம்தான் கேட்டிருக்கிறேன். இவ்வாறு நிரம்பிய நூலுடையோர் கேண்மை வாய்த்தது எனக்கான அடுத்த பேறாக அடுக்குவது, கூறியது கூறலாகவும் தம்பட்டம் ஆகவும் அமையும் என்பதால் தவிர்க்கிறேன் (!!!). பேரா. ஜோதிமணி அவர்களுக்கு என்னிடம் ஒரு சிறிய மனக்குறை உண்டு. அது என் இறை மறுப்பு. தம் கருத்தை மற்றவர்களிடம் வலிந்து திணிக்கும் இயல்புக்கு எதிரானவர் அவர். எனினும் இறையருளில் பரிபூரண நம்பிக்கை அவருக்கு இருந்ததால் அவ்வருள் எனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கம் அவருக்கு. சமயக் கருத்துகளையும் பக்தி இலக்கியத்தையும் அவர் மேற்கோள் காட்டும்போது மிகுந்த (நடிப்பில்லாத) ஆர்வத்துடன் நான் கேட்பதுண்டு. ஆகையால் இறைவன்பால் ஒரு நாள் என்னை ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகக் கூறினார். அவர் நம்பிக்கை அவருக்கு. சவால் விடும் தொனியில் இல்லாமல் நான் அவருக்குப் பதில் சொன்னேன், “இறையுணர்வை இத்துணைப் பகுத்தறிவுடன் அணுகும் உங்களை இறைமறுப்பின்பால் திருப்ப முடியும் என்று எனக்கும் தோன்றுகிறது”. இது குரு, சிஷ்யன் இருவரின் தன்னம்பிக்கையையும் ஒருவர் மற்றவர் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் குறிக்கிறது. இருவருமே தோற்கக்கூடாது என்பது இயற்கையின் நியதியோ என்னவோ, திடீரென்று ஒரு நாள் அவர் தமது கர்த்தருக்குள் நித்திரை கொண்டார். அந்த நேரத்தில் என் கைபேசியும் காலாவதியானதால் ஒரு வாரம் கழித்துப் புதிய கைபேசி வாங்கலாம் என்று சோம்பேறித்தனமாய் இருந்துவிட்டேன். அந்த நேரத்தில் அந்தப் படுபாவி காலன் என் கண்ணையும் காதையும் மறைத்து அவரைக் காவு கொண்டான். மரணச்செய்தி நேரில் ஆள் மூலம் வந்ததும் சென்றேன். எனினும் அவர் மருத்துவமனையில் இருந்த கடைசி நேரத்தில் அவரிடம் பேச முடியாத வருத்தம் எனக்கு நிரந்தரமாகி விட்டது. சோகத்திலும் கவித்துவமாய் அவலச் சுவையில் சொல்வதாய் இருந்தால் அவரது விருப்பத்திற்கு மாறாக நான் இறை மறுத்ததால் அவரது இறைவன் எனக்கு அளித்த தண்டனையோ ! அவர் சீக்கிரம் விடை பெறுவார் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் தோற்று விட்டதாக - அவரது இறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாக – நடித்திருப்பேன். உலகத்தாரிடம் அங்கங்கே நடிக்கும்போது எனது குருவானவரின் இறுதி நாட்களில் அவரது மன நிறைவுக்காக நடிக்கக் கூடாதா, என்ன ? ஆனால் அவர் அதை நம்புவது ஐயப்பாடே ! எனது குருவை நான் அறிந்தது போல் அவருக்கும் தமது சீடனைத் தெரியும். மேலும் தமது ஞானபுத்திரனாய் அவரால் அறிவிக்கப்பட்ட நான் கருத்தியலில் அவரிடம் தோற்பதை அவரே விரும்ப மாட்டார். அவரும் எஞ்சாமி !
  2. எல்லா விந்தணுவும் பிள்ளைகளை உருவாக்குவதில்லை அப்படியாக்கினாலும் எல்லாம்மும் பிள்ளையாகி பிறப்பதும் இல்லை அப்படி பிறந்தது எல்லாம் பிள்ளையாக வளர்வதும் இல்லை வளர்ந்தது எல்லாம் வாழ்க்கையை புரிவதும் இல்லை அதுக்காக நாம் விந்தணுவையா நோக வேண்டும்? அந்த அளவு அடிமட்ட அறிவு உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள் என்று பூமியைத்தான் நோக வேண்டுமா?
  3. 22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட காபர்வியூ படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை. 22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருந்த காபர்வியூ தங்கக(விடுதி)படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை. யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் இருந்த துறைமுகமானது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குத் தேவையான பொருட்களை கடல்வழிமூலம் கொண்டுவருவதற்காக அமைக்கப்பட்டது.முதலாம் ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டவுடன் பெரும்பாலும் படையினருக்குத்தேவையான பொருட்களை கொண்டுவருவதற்காகப் பயண்படுத்தப்பட்டதுடன் .துறைமுகப்பகுதிக்கு சீமெந்துத் தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை எடுத்துவர மற்றும் சீமெந்துகளை கொழும்புக்கு அனுப்பும்வகையில் பாரவூர்திகளில் செல்லுபவர்களிடம் தங்ககவிடுதிகளில் உள்ள படையினரும் துறைமுகப்பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட காவலரனில் உள்ள படையினரும் பல்வேறு தொந்தரவுகளில் ஈடுபட்டனர். இப்படையினர் மீது ஒருதாக்குதல் நடாத்தவேண்டிய நிலைக்கு விடுதலைப்புலிகள் தள்ளப்பட்டனர். அதற்கமைவாக அப்போதைய யாழ்மாவட்டத்தளபதி ராதா அவர்களினால் துரிதகதியில் வேவுத்தரவுகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வேவுத்தரவுகளை தலைவர் அவர்களிடம் கொடுத்தார்.தளபதி ராதா அவர்கள். வேவுத்தரவுகளை பார்த்து அதன் சாதக பாதக நிலைகளை தளபதி ராதா அவர்களிடம் கூறியதோடு மட்டுமல்லாமல் தனது மெய்பாதுகாப்பாளர்களில் பெரும்பாலானவர்களை இத்தாக்குதலுக்கு அனுப்பிவைத்ததுடன் இத்தாக்குதலுக்கான பயிற்சிகளை வடமராட்சியில் நடாத்தும்படி தளபதி ராதா அவர்களிடம் கூறிப்பிட்டார் தலைவர் அவர்கள்.அதற்கமைவாக பயிற்சிகள் வடமராட்சியில் நடைபெற்றன பயிற்சிகளை தலைவர் அவர்கள் பார்வையிட்டதுடன் ஆலோசனைகளையும் வழங்கினார். பயிற்சிகள் நிறைவுபெற்று தாக்குதலுக்கான திட்டம் தளபதி ராதா அவர்களினால் விளங்கப்படுத்தப்பட்டன. அதற்கமைவாக இரண்டு பாரவூர்தியில் சென்று திகைப்பூட்டும் தாக்குதலை நடாத்திவிட்டு திரும்பிவருவதே திட்டமாகும் .ஒரு பாரவூர்தியில் சொர்ணம் (சொா்ணம் அவர்கள் அந்தக்காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பாதுகாப்புப் பிரிவிற்க்கு இரண்டாவது பொறுப்பாளாரக இருந்தார் இவரே பிரிகேடியர் சொர்ணம் ஆவார் வீரச்சாவு 15.05.2009)அவர்கள் தலைமையில் செல்லும் போராளிகள படையினர் தங்கும் தங்ககம் (விடுதி)மீது தாக்குதல் நடாத்துவார்கள் .அதேசமயம் மற்றுமொரு பாரவூர்தியில் கப்டன் ஐயா தலைமையில் செல்லும் போராளிகள் காவலரன்கள் மீது தாக்குதல் நடாத்துவார்கள் .அதற்கமைவாக 22.04.1987 அன்று இரவு 10.00 மணியளவில் ஆரம்பித்த இத்தாக்குதல் குறிப்பிட்ட நிமிடத்திற்க்குள் காவலரன்கள் முழுமையான கைப்பற்றப்பட்டதுடன் அக்காவலரனில் உள்ள ஆயுதங்களும் கைப்பற்ப்பட்டன .அதே சமயம் கண்காணிப்புகோபுரத்திலிருந்த படையினர் இவர்கள்மீது தாக்குதல் நடாத்த இதைக் கவனித்த சுபன்(மன்னார் மாவட்டச் சிறப்புத்தளபதி வீரச்சாவு.25.09.1992 )இன்னொரு போராளியிடம் கூற அவரோ படையினரிடமிருந்து கைப்பற்றிய ஆர்.பி.ஐி எடுத்து கண்காணிப்புக்கோபுரத்தின் மீது குறிதவறாமல் தாக்குதல் மேற்கொள்ள கண்காணிப்புக்கோபுரம் தகர்த்தெறியப்பட்டது.அன்று அப்போராளி அக்கண்காணிப்புக்கோபுரத்தின் மீது மேற்கொண்டதாக்குதல் தவறினால் நிலைமை மோசமாகியிருக்கும்.இன்னொரு காவலரனில் போராளிக்கும் படையினருக்கும் கைகலப்பில் படையனரைக் கொன்றான் அப்போராளி இப்படியான பல்வேறு சாகசங்களையும் நிகழத்திய வெற்றிகரத்தாக்குதலில் பன்னிரன்டிற்க்கும் மேற்பட்ட படையினர் கொல்லபபட்டதுடன் அதி நவீன ஆயதங்களும் கைப்பற்ப்பட்ட இவ்வெற்றிகரத்தாக்குதலில்.ஆறு போராளிகள் வீரச்சாவடைந்தனர். இவ் வெற்றிகரகொமாண்டோத்தாக்குதலை அப்போதைய யாழ்மாவட்டத் தளபதி ராதா அவர்கள் காங்கேசன்துறையிலிருந்து வழிநடாத்தினார். இச்சம்பவமானது அக்களமுனையில் களமாடியவரின் உள்ளத்திலிருந்து. இச்சமரில் வீரச்சாவடைந்தவர்கள் விபரம் வருமாறு. கப்டன் பவான்( ஐயா). லெப்ரினன்ட் கிர்மானி. 2ம் லெப்டினன்ட் குணம். 2ம் லெப்ரினன்ட் குலம். வீரவேங்கை தாஸ். வீரவேங்கை சுவர்ணன். https://www.thaarakam.com/news/a8d19f17-1c32-4753-8c38-089c69ea3c29
  4. Movie: Kuzhandai Ullam Song: Muthu Chippikkulle Oru Poovandu Singer: S.P.Balasubramaniam & P.Susheela Director:Savitri Stars:Gemini Ganesan, Savitri, Vanisri 1969 முத்தமிட்ட இதழே பாலாக முன்னிடை மெலிந்து நூலாக கட்டி வைத்த கூந்தல் அலையாக தென்றல் காற்றே நீ சாட்சி தேன் தரும் நிலவே நீ சாட்சி வானும் நிலவும் உள்ளவரை வளரட்டும் காதல் அரசாட்சி
  5. அன்பான யாழ் உறவுகளுக்கு.. எனது இந்த கவிதை முனைவர் முபா ஐயா அவர்கள் தமிழ் நாடு புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்திருந்தார் அவர்களுக்கு நன்றிகள். பார்கின்ற உங்களுக்கும் நன்றிகள்.
  6. எனக்கு தெரிந்த வரையில் நாத்திகம் கதைப்பவர்கள் கடவுள் இல்லை என்ற மதம் கொண்டவர்கள்.
  7. நுணாவிலான் யாழ் இணையம் கருத்துக்கள நிர்வாகத்தில் மட்டும் அல்ல கனடா குடிவரவுத்துறை நிர்வாகத்திலும் உள்ளார் என்று அறியும்போது பெருமையாக உள்ளது. வேலியே பயிரை மேய்ந்தால் யாழ் கருத்துக்களம் உருப்படும். வாழ்த்துக்கள்!
  8. கனடாவில் புலிகளால் பிரச்சனை என்று சொல்லி அகதி கோரி ஆகா ஓகோ என வாழ்கிறோம் என்றூ சொல்ல வெட்கம் விடுவதில்லை.
  9. நாத்திகம் என்றால் என்ன......! வெறுமனே கடவுள் இல்லை என்று சொன்னால் மட்டும் நாத்திகமா...... அதைத் தவிர்த்து அல்லது அதையும் தாண்டி நாத்திகத்துக்கு வேறு ஏதாவது அறிகுறிகள் இருக்கா..... நாத்திகர்களுக்கு என்று தனியான கொள்கைகள் உண்டா இருந்தால் அவை யாவை....... தெரிந்து கொள்வதற்காக மட்டுமே கேட்கிறேன்.......!
  10. போராட்டமே நடாத்தி இருக்க கூடாது. அடிமைகளாக இருந்திருக்க வேண்டும். போராட்டம் அவர்கள் நடாத்தா விட்டால் இப்போ கனடாவில் எப்படி ஓகோ என இருக்க முடியும்?
  11. கிட்டத்தட்ட எனது நிலைப்பாடும் இப்படி தான் போய்க்கொண்டு இருக்கிறது ஒவ்வொரு பந்தியும் ஏதோ ஒரு வகையில் நாம் கடந்து வந்த பாதையை நினைவு படுத்தி செல்கிறது பிறப்பால் சைவசமயம் கோயில் தர்மகர்த்தா பரம்பரை ஆனால் சிறு வயது முதல் அதன் மீதான கேள்விகள் மறுப்புகள் மூடநம்பிக்கைகள் சார்ந்து முட்டுதல்கள் பிள்ளைகளுக்கு எதையும் புகுத்தாமல் அவர்களே அவர்களுக்கானதை தேட வழிவிடுதல் ஆனாலும் பரம்பரைக்கோயில் திருவிழா மற்றும் பராமரிப்புக்கு பணம் அனுப்புதல் வீட்டில் பெரியோர்களின் ஞாபகார்த்தங்களுக்கு ஐயர் வருதல் உட்பட அது இன்னொரு பக்கம் போய்க்கொண்டே தான் இருக்கிறது நீங்கள் சொன்னது போல எனது நிலைப்பாடு என்னுடன் மட்டுமே ஏனெனில் எனது நிலைப்பாட்டை விட பெரும்பான்மையோர் என் முன்னே உள்ளனர். அவர்களின் நம்பிக்கைகளை நான் மதிக்காவிட்டால் நான் மனிதனாக கூட இருக்கமுடியாதே??? அப்புறம் தானே கடவுள்?? பல்வேறு கதைகளை கருத்துக்களை ஞாபகங்களை மீண்டும் மீண்டும் எம்முள் விதைத்த தங்கள் ஆக்கத்திற்கு நன்றிகள்.
  12. இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றீங்க 😁 நீவீர் இறைமறுப்பு பாதையில் சென்றதற்கும், மற்றையவர் இறை பாதையில் சென்றதற்க்கும் சிறிய வயதில் கிடைக்கும் தூண்டுதலே காரணம் என்பதை அழகான மொழியில் விவரித்துள்ளீர். நன்று 🤝
  13. முன் எப்போதும் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு) நீலகண்டன் நெற்றிக் கண்ணில் நெருப்பு வடிவாகத் தோன்றி நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு) விழிகளொரு பன்னிரண்டு உடையவனே என்று சொல்லி விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு) உலகமென்னும் கடல் தனிலே உடல் என்னும் ஓடமது உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு) ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு) கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே உன் கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு) நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைந்து பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு) நெஞ்ச மதில் வஞ்சமின்றி நிர் மலனே நின்னடியைத் தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு) ஆறுபடை வீட்டினிலே ஆறுமுக வேலவனே ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு) திருப்புகழைப் பாடி உந்தன் திருவடியைக் கைதொழுது திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) கந்தர நுபூதி பாடி கந்தனே உன் கழலடியைக் கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) வேலவனே என்றுபாடி வேண்டிடும் அடியவர்க்கு வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு) மந்திரமும் தந்திரமும் மருந்துமாக நின்ற உந்தன் மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) தெள்ளு தினை மாவும் தேனும் பரிந்தளித்த வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு) வடிவேலா என்று தினம் வாழ்த்துகின்ற அடியவர்க்கு கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு) பரங்குன்று செந்திலும் பழனி மலை ஏரகம் பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா ...... (வேலுண்டு).
  14. இதயம் அன்பு இதயம் இயேசுவின் அன்பு இதயம் -2 ஓராயிரம் நெஞ்சம் புகழும் இதயத்தின வேன்தே வாழி உதயத்தின் ஒளியே வாழி அன்பினில் இருந்திடும் இதயத்தின் தலைவா என்றும் நீ வாளீ ஒராயிரம் நெஞ்சம் புகழும் ஈடில்லா அன்பு இதயம் 1. கல்லான இதயம் கரைய செந்நீர் ஊறும் இதயம் சுமைகள் சுமந்து சோர்ந்தால் ஆறுதல் கூறும் இதயம் தொலைந்த ஆட்டைத்தேடி மகிழும் ஆயன் இதயம் திருந்தி திரும்பும் மகனைத் தழுவும் தந்தை இதயம் நம் இயேசுவின் அன்பு இதயம் மேய்ப்பன் ஊற்றும் 2. சிலுவைப் பாடுகள் வழியே மீட்ப்பு நல்கும் இதயம் மண்ணுயிர் வாழ அன்று தன்னுயிர் ஈந்த இதயம் நன்றி மறந்த நம்மை மன்னிக்கும் நல்ல இதயம் பாவி என்றே தெரிந்தும் கருணை பொழியும் இதயம் - நம் ஈடில்லா அன்பு இதயம் ஒரு கோடி ஜென்மம் இருந்தாலும்
  15. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  16. நானும் அப்படித்தான். அவ்வளவுக்கும் எனது தந்தையார் பெரிய பக்திமான். நல்லதோர் பதிவு. தற்செயலாக உருவான பிரபஞ்சத்தில் தற்செயலாக உருவான பூமிப்பந்தில் தற்செயலாக உருவான உயிரிகளில் நாங்களும் அடக்கம்! எனக்கு தமிழ் கற்பித்த பண்டிதர் சதாசிவம் திருநீற்றுப் பூச்சும், சந்தனப் பொட்டும், பூவும் தவறாமல் இட்டு வருவார். அதேவேளை பாடசாலையில் சைவசமயம் கற்பித்த பண்டிதர் பரந்தாமன் சமயநம்பிக்கை இல்லாதவராக இருந்தபோதும் கணீர் என்ற குரலில் சைவ சமய தத்துவங்களை சொல்லுவார். பக்திக்கு அப்பால் சைவ/இந்து சமய தத்துவங்களில் ஈடுபாடு வர அவரது கற்பித்தல்முறைதான் காரணம்.
  17. உண்மையும் அது தான் ஐயா.
  18. இப்படியாய், வாழ்வை சுதந்திரமாய் வாழும் சூழலைத் தோற்றுவித்த திராவிடப் பெரியாரும், பேரறிஞர் அண்ணா வும் உழுது பண்படுத்திய மண்ணில் உதித்த இரு கிறித்தவப் பாதிரிமார்கள் கிறித்துவரல்லாத மாணவர்களை எவ்வாறு கண்ணியமாக அவரவர் பாதைகளில் சுதந்திரமாக வாழ வழி நடத்தினர் என்பது தமிழ்ச் சமூகத்தில் திராவிட இயக்கத்தின் தாக்கம் என்றால் மிகையில்லை. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் தமிழ் மண்ணில் விளைந்த பன்முகத் தன்மைக்கோர் நற்சான்று இந்நிகழ்வுகள். "நீ சொன்னது உனக்குச் சரி. நான் சொன்னது அவனுக்குச் சரி" என்ற இரு வரிகள் எவ்வளவு பட்டவர்த்தனமான வாழ்வியல் யதார்த்தம். உளவியல் அடிப்படையில், மதவாதம் பேசும் பிஜேபி ஏன் தமிழ் மண்ணில் காலூன்ற இயலவில்லை என்பதை இக்கட்டுரையை வாசிப்போர்க்கு நன்கு விளங்கும்.
  19. இக்கடத்தல்கள் பற்றி மேலும் தெரியவருவதாவது, கிழக்கில் செயற்பட்டு வரும் இரு துணை ராணுவக் குழுக்களான கருணா குழு மற்றும் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் குழு ஆகிய இரண்டும் ஒன்றையொன்று இப்படுகொலை தொடர்பாக குற்றஞ்சாட்டி வருகின்றன. கொல்லப்பட்ட வர்ஷாவின் பாடசாலைப் புத்தகப்பை மற்றும் அவளது இன்னும் சில உபகரணங்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரின் அலுவலகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதையடுத்து, பிள்ளையான் குழுவினரே இக்கடத்தல் மற்றும் படுகொலையின் பின்னாலிருப்பதாக பெரும்பாலும் நம்பப்படுகிறது. அதேவேளை சுமார் 2000 ஆயுததாரிகளோடு அரசாங்கத்தின் சுதந்திரக் கட்சியில் இணைந்த கருணா தனது அலுவலகங்களைச் சூறையாடிச் சென்றிருப்பதாகக் குற்றஞ்சாட்டும் பிள்ளையான் தன்மீதான கடத்தல் மற்றும் கொலைப்பழியினை திசைதிருப்ப முயற்சிப்பது தெளிவாகிறது. கிழக்கு மாகாண மக்களின் உண்மையான கவலை இந்த இரு துணை ராணுவக் குழுக்களில் எது வர்ஷாவைக் கடத்திச் சென்று கொன்றிருக்கிறது என்பதல்ல, மாறாக இந்தக் கொலைகாரர்களையே தமது இரட்சகர்களாக, பாதுகாவலர்களாக உலகின் பார்வைக்கு அரசாங்கம் முன்வைத்து வருகிறது என்பதுதான். திருகோணமலை நகரில் இதே பாணியிலான கடத்தல்கள் கடந்த சில வாரங்களில் நடந்திருக்கிறது. ஒரு வர்த்தகர், சினிமாக் கொட்டகை முகாமையாளர், பஸ் நடத்துனர் ஆகியோர் உட்பட பலர் கப்பப் பணத்திற்காக இக்குழுக்களில் ஒன்றினால் அரச ஆசீர்வாதத்துடன் கடத்தப்பட்டிருக்கிறார்கள். இன்றைய வன்முறைக் கலாசாரம் பற்றிக் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயங்கள். 1. கடத்தல்கள் என்பது நாளாந்த வாழ்க்கையின் தவிர்க்கப்பட முடியாத ஒரு நிகழ்வாக இப்பகுதியில் மாறியிருப்பது, சட்டமும் நீதித்துறையும் இப்பிரதேசத்தில் முற்றாகச் செயலிழந்துவிட்டது என்பதைத்தான் காட்டுகிறது. போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இப்பகுதியில், போரின் பின்னர் அரசு செய்திருக்கவேண்டிய மிக முக்கியமான கடமை சட்டம் ஒழுங்கினை இப்பகுதியில் அமுல்ப்படுத்துவதுதான். ஆனால் இதுதொடர்பாக எதுவித நடவடிக்கையினையும் அரசு எடுக்க முன்வரவில்லையென்பதே உண்மை. இதற்கான காரணமாக முன்வைக்கப்படுவது, யுத்தம் இடம்பெறாத நாட்டின் தென்பகுதியில் கூட அரசு சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டத் தவறியிருக்கிறது அல்லது அதனால் முடியாமல் இருக்கிறது என்பதைத்தான். சாதாரண நிலைமை இருக்கும் தெற்கின் பல மாவட்டங்களிலேயே சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டத் தவறும் ஒரு அரசு போரிற்குள் இருந்து வெளியே வந்திருக்கும் நாட்டின் கிழக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதுபற்றி அக்கறை கொண்டிருக்கும் என்பதை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமானது. 2. சட்டத்திற்கு உட்படாத, சட்டத்திற்குப் புறம்பான குழுக்களிடம் கிழக்கு மாகாணத்தைக் கையளிப்பது. நாட்டின் தென்பகுதியிலேயே சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டத் தவறியிருக்கும் இந்த அரசாங்கம், கிழக்கு மாகாணத்தில் தனக்கு ஆதரவான ஆயுதக் குழுக்களுக்கு இம்மாகாணத்தின் அதிகாரத்தினை ஒப்படைத்திருப்பதென்பது விளங்கிக்கொள்ளக் கடிணமானது அல்ல. அரசாங்கத்தைப் பொறுத்தவரை கிழக்கு மக்கள் மீதான தனது அதிகாரத்தினை நிலைநாட்ட கொலைகாரர்களை, கடத்தல்க்காரர்களை துணைராணுவக் குழுக்களைப் பாவிக்க விரும்புகிறது. 3. கடத்தல்க்காரர்கள் சட்டத்திற்குப் புறம்பான முறையில் பொலீஸாரினால் படுகொலைசெய்வதைக் காணும்போது சாதாரண பொதுமக்கள் அடையும் சந்தோஷம் அல்லது திருப்தி. பொலீஸாரைப் பொறுத்தவரை வர்ஷாவின் கொலைகாரர்களைச் சுட்டுக் கொன்றதில் திருப்த்திப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஏனென்றால், கடத்தலில் சம்பந்தப்பட்ட அனைவருமே கொல்லப்பட்டுள்ளதையடுத்து இக்கடத்தல் தொடர்பாக மேலும் விசாரிக்க வேண்டிய தேவை அவர்களுக்கில்லை. அத்துடன் இக்கடத்தல்காரர்களின் படுகொலைகள் பொதுமக்களிடமிருந்து வரவேற்பினைப் பெற்றிருப்பது அவர்களின் வேலையினை இலகுவாக்கியிருக்கிறது. பொதுமக்களின் இவ்வாறான மனநிலை, ஒரு தோல்வியடைந்த, நீதியற்ற சமூகத்தில், அநாதரவாக அவர்கள் விடப்பட்டுள்ளார்கள் என்பதையே காட்டுகிறது. இப்படியான சமூகத்தில் கொலைகாரர்களை பொதுமக்கள் அடித்தே கொல்கிறார்கள் அல்லது காவல்த்துறை கொல்லும்போது அகமகிழ்கிறார்கள். இவ்வாறான நிகழ்வுகளை நாம் இந்தியாவின் பீகாரிலும் நாள்தோறும் காண்கிறோம். பல சமயங்களில் பீகாரில் குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படும் பலர் குழுக்களாக பொலீஸாரினால் என்கவுண்ட்டர் பாணியில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். சில இடங்களில் சந்தேக நபர்களை போலீஸார் தமது வாகனங்களில் கட்டி தெருக்களில் மக்கள் பார்த்திருக்க இழுத்துச் சென்று கொன்றதும் நடந்திருக்கிறது. மனித நேயமும், நீதியும் செத்துவிட்ட தேசத்தில் குற்றவாளிகளை கொடூரமான முறையில் பொலீஸாரோ அல்லது வேறு எவரோ கொல்லும்போது பொதுமக்கள் மகிழ்வதும், தமது பழியினைத் தீர்த்துக்கொள்வதும் நடக்கிறது. குற்றங்களுக்கான சரியான தண்டனை விசாரணைகள் ஊடாக, சட்டத்தினால் சரியான முறையில் வழங்கப்படவேண்டும் என்பது மக்களின் மனதிலிருந்து முற்றாகவே காணாமல்ப் போயிருக்கிறது. 4. வர்ஷாவின் கொலைகாரர்கள் இறந்ததாகக் கூறப்படும் பொலீஸாரின் நாடகபாணிக் கதையினை எதுவித கேள்விகளுமின்றி இச்சமூகம் ஏற்றுக்கொள்ள விரும்புவதோடு, இக்கடத்தல் குறித்தோ, இதன்பின்னால் உண்மையிலேயே இருக்கும் அரசுக்கு ஆதரவான கிரிமினல் குறித்தோ மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை அது கேட்க மறுக்கிறது. பொலீஸாரின் பாதுகாப்பில் இருக்கும்போது மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கும் கொலைகாரர்களின் மரணம் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. பெரும்பாலானவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனாலும்கூட, அரசாங்கமோ அல்லது ஏதும் ஒரு அமைப்போ இதுபற்றிய மேலதிக விசாரணைகளைச் செய்வதை மறுத்தே வருகின்றன. தொடர்ச்சியான விசாரணைகள் மூலம் வெளிக்கொணரப்படக்கூடிய உண்மைகள் அரசாங்கத்தையும், அரசுக்கு ஆதரவான சிலரையும், கூடவே மக்களையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் என்று அவை கருதுகின்றன. அரசாங்கத்தினது இந்த பாராமுகமும், உண்மையினைக் கண்டறிவதில் அதற்கு இருக்கும் உண்மையான தயக்கமும் வர்ஷாவின் கொலையின் பின்னால் இருக்கும் அரசுக்கு ஆதரவான சக்திகள் இம்மாதிரியான பாதகச் செயல்களைத் தொடர்ந்தும் செய்ய ஊக்கிவித்துக்கொண்டிருக்கின்றன. ஆக, பீகாரில் இருக்கும் மிகச் சிக்கலான சட்டம் ஒழுங்கு பிரச்சினையினை மத்திய அரசே கைவிட்டுள்ள நிலையில், அம்மாநிலம் இந்தியாவின் வன்முறைகள் மிகுந்த மாநிலமாக மாறியிருப்பதுபோன்று, இலங்கையின் கிழக்கு மாகாணமும் அரசுக்கு ஆதரவான ஆயுததாரிகளால் மாற்றப்பட்டிருக்கிறது. அதிர்ச்சியிலும், வெட்கத்திலும் அமிழ்ந்திருக்கும் ஒரு சமூகம் இலங்கை இன்று அதிர்ச்சியிலும் வெட்கத்திலும் உறைந்திருக்கும் நீதியற்ற சமூகமாக மாறியிருக்கிறது. 6 வயதுப் பாலகியின் கடத்தல் மற்றும் மரணம் தொடர்பாக சட்டத்திற்கு உட்பட்ட வகையில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தக் கூட தகமையற்ற நாடாக அது மாறியிருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை வர்ஷாவின் படுகொலையானது இன்னொரு நிகழ்வு, இன்னொரு மரணம், அவ்வளவுதான். அம்மக்களைப் பொறுத்தவரை இந்தப் படுகொலையினையும் முடிந்தவரை வெகு சீக்கிரமாகவே மறந்துவிடவேண்டும். பாலகியின் கடத்தலையும், படுகொலையினையும் கொல்லப்பட்ட நான்கு கடத்தல்க்காரர்களின் தலையிலும் போட்டுவிட்டு, அவர்கள் தற்போது உயிருடன் இல்லையெனும் மனத் திருப்தியுடன் கடந்து சென்றால்ப் போதுமானது. மனித உயிரின் மீதான மதிப்பினை இழந்த இச்சமூகத்தின் இன்றைய மனநிலை, இம்மக்களை ஆளும் அரசாங்கத்திற்கு இனிமேல் ஒருபோதுமே நீதியால் வழிநடத்தப்படும் சமூகம் ஒன்றினை உருவாக்க வேண்டிய தேவையினை இல்லாமலாக்கி விட்டிருக்கிறது. மனித நேயத்தினை அழித்து, படுகொலைகளை அன்றாட வாழ்வின் சாதாரண நிகழ்வாக்கியிருக்கும் இலங்கையின் இன்றைய அரசாங்கம் இப்போது செய்வது தான் உருவாக்கிய வன்முறைகளுக்குப் பலியாகும் பாலகி வர்ஷா உட்பட அப்பாவிகளின் உயிர்களுக்காக முதலைக் கண்ணீர் சிந்துவதுதான். நீதியினை விட்டு நீண்டதூரம் சென்றிருக்கும் அரசு ஒன்றினால் ஆளப்படும் மக்களே தமது சமூகத்தை மீளவும் நீதியின்பாற்பட்ட , சட்டத்திற்கு உட்பட்ட, மனித உயிர்களை போஷிக்கிற சமூகமாக மாற்றத் தலைப்பட வேண்டும். அவர்களால் ஏற்படுத்தப்படும் மாற்றமே வன்முறையற்ற , நீதியான சமூகம் ஒன்றினை உருவாக்க உதவும். ஆசிய மனிதவுரிமை கமிஷன் இவ்வமைப்பு 1984 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் ஆசிய நாடுகளின் மனிதவுரிமை மீறல்கள் பற்றி கண்காணிக்கவும், அவற்றுக்கு எதிராக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஏற்படுத்தப்பட்டது. ஆங்கில மூலம் : ஆசிய மனிதவுரிமைக் கமிஷன் https://www.scoop.co.nz/stories/WO0903/S00468/sri-lanka-east-has-become-bihar-like.htm
  20. இலங்கையின் கிழக்கு மாகாணம் ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகளில் இந்தியாவின் பீகாரை மிஞ்சுகிறது. கிழக்கில் கருணா மற்றும் பிள்ளையான் கொலைக்குழுக்களினால் நடத்தப்பட்டு வரும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள் தொடர்பில் ஆசிய மனிதவுரிமைக் கமிஷன் வெளியிட்ட அறிக்கை திகதி :24, பங்குனி 2009 சிறுமி வர்ஷாவின் கடத்தலும், கடத்தல்காரர்களை சட்டத்திற்குப் புறம்பான முறையில் படுகொலை செய்தலும். கடந்தவாரம் திருகோணமலை நகரில் கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலைசெய்யப்பட்ட 6 வயது வர்ஷா ஜூட் ரெஜி என்றழைக்கப்பட்ட சிறுமியின் உடலை தமது தொலைக் காட்சிப் பெட்டிகளிலும், செய்தித் தாள்களிலும் கண்ட இலங்கையர்கள் அனைவரும் அதிர்ச்சியும் வெட்கமும் அடைந்தார்கள் என்று கூறினால் அது மிகையில்லை. இக்கடத்தல்பற்றியும், படுகொலைபற்றியும் பலராலும் எழுதப்பட்டு விவாதிக்கப்பட்டாலும் கூட, இந்த அக்கிரமம் நடத்தப்பட ஏதுவாக இச்சமூகம் உருவாக்கப்பட்டிருக்கிறதெனும் செய்தியை நாம் இலகுவாகக் கடந்து செல்ல முடியாது. வர்ஷாவின் கடத்தலும், படுகொலையும் நடத்தப்பட்டிருக்கும் பிரதேசம் அண்மைக்காலமாக பல்வேறு கடத்தல்கள், கப்பம் கோரல்கள் ஆகியவற்றினைச் சந்தித்த பிரதேசம் என்பது குறிப்பிடத் தக்கது. நீதியின் நிழல் கூட மிதிக்காத இப்பிரதேசத்தில் உயிர்வாழ்தலுக்கான உத்தரவாதத்தினை இழந்து நடைபிணங்களாக உலாவரும் இந்த மக்கள் கூட்டம், அப்பாவிகளைக் கடத்திச் சென்று கொல்லும் அக்கிரமக்காரர்கள் இன்னொரு பகுதியினரால் படுகொலை செய்யப்படும்போது அகமகிழ்வது நடக்கிறது. நீதியற்ற சமூகத்தில் இவ்வாறான மலினமான சந்தோசங்கள் இடம்பெறுவது ஒன்றும் வியப்பில்லை. இதே வகையான கடத்தல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் இடம்பெறும் இடமாக இந்தியாவின் பீகார் மாநிலம் திகழ்கிறது. இந்தியாவில் பல மாநிலத்தவர்களால் பொதுவாகக் கூறப்படும் "நீ பீகாரைச் சேர்ந்தவன் என்று எவரிடமும் கூறாதே" எனும் வாக்கியம் தற்போது இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு பொருந்திப் போகிறது, "நீ கிழக்கைச் சேர்ந்தவன் என்று எவரிடமும் சொல்லாதே". 6 வயதுச் சிறுமியான வர்ஷா கடந்த பங்குனி மாதம் 11 ஆம் திகதி பாடசாலைக்குச் சென்றிருந்தாள். அன்று பின்னேரம் அவளது குடும்பத்திற்குப் பழக்கமான, வர்ஷாவுக்கும் அவளது சகோதரனுக்கும் கணினிப்பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒருவனால் கடத்தப்பட்டாள். அவனை வர்ஷாவும் அவளது சகோதரனும் "கம்பியூட்டர் மாமா" என்றே செல்லமாக அழைத்து வந்திருக்கிறார்கள். கடத்தியவர்கள் வர்ஷாவின் குடும்பத்துடன் கப்பப் பணத்திற்கான பேரம்பேசலை ஆரம்பித்திருக்கிறார்கள். "உங்களுக்கான மாதாந்த கொடுப்பனவை இனிமேல் அரசு வழங்காது, ஆகவே தமிழர்களைக் கடத்திச் சென்று உங்களுக்குத் தேவையான பணத்தினை அறவிட்டுக் கொள்ளுங்கள்" என்று கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் கோத்தபாயவினால் வழங்கப்பட்ட ஆசீர்வாதத்தினைப் பாவித்து, கடத்திச் சென்றவர்கள் தமது பேரத்தில் கடுமையாக இருந்திருக்கிறார்கள். வர்ஷாவின் தந்தையானவர் மத்திய கிழக்கில் வேலை பார்த்துவருவதை நன்கு அறிந்து வைத்திருந்த கடத்தல்காரர்கள் 300 லட்சம் ரூபாய்களை தந்தால் ஒழிய வர்ஷாவை உயிருடன் பார்க்கமுடியாதென்று கூறிவிட, தம்மால் இப்போதைக்கு 10 லட்சம் ரூபாய்களை மாத்திரமே தரமுடியும் என்று அவளின் குடும்பம் கடத்தல்காரர்களிடம் வேண்டியிருக்கிறது. கடத்தல்காரர்கள் கேட்ட 300 லட்சம் ரூபாய்களை வழங்கமுடியாமல் அக்குடும்பம் தவித்துக்கொண்டிருக்க படுகொலைசெய்யப்பட்ட வர்ஷாவின் உடல் உரம் இறக்குமதி செய்யப்படும் வெள்ளைநிறப் பைய்யொன்றில் இருந்து 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. திருகோணமலை நகரின் இதயப்பகுதியில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், மோர் வீதியில் , கழிவு நீர் ஓடும் வாய்க்கலுக்கு அருகில் அவளது உடல் கடத்தல்க்காரர்களால் வீசப்பட்டிருந்தது. இக்கடத்தல் நாடகம் வர்ஷாவின் படுகொலையுடன் நின்றுவிடவில்லை. மாறாக இன்னும் நான்கு உயிர்களைப் பலியெடுத்த பின்னரே மூடிமறைக்கப்பட்டு அவசர அவசரமாக முடித்துவைக்கப்பட்டிருக்கிறது. இக்கடத்தல் மற்றும் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒஸ்வின் மேர்வின் ரினவுஷன் மற்றும் வர்தராஜன் ஜனார்த்தன் ஆகிய இருவருமே மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பொலீஸாரின் கூற்றுப்படி கைதுசெய்யப்பட்டு அடைக்கப்பட்ட ரினவுஷனை தாம் வெளியே அழைத்துவரும்போது அவர் தம்மைத் தாக்கியதாகவும், தமது பதில்த் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல ஜனார்த்தனின் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்ட பொலீஸார், கைவிலங்கிடப்பட்ட நிலையில் அழைத்துச் செல்லப்பட்ட ஜனார்த்தன் எப்படியோ அருகில் இருந்த சயனைட் வில்லையினைக் கண்டெடுத்து உட்கொண்டு மரணமனாதாகக் கூறியிருக்கிறது. இக்கடத்தலில் இன்னும் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று பொலீஸார் சந்தேகிக்கும் நிலையில், அவர்கள் கைதுசெய்யப்படுமிடத்து அவர்களுக்கும் இவ்வாறான மர்ம மரணங்கள் பொலீஸாரினால் அரங்கேற்றப்படும் என்பது உறுதி.
  21. திருமலை சிறுமி வர்ஷாவின் கொலையைச் செய்தது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் துணைராணுவக் குழுவே சிறிலங்கா டயஸ்போரா இணையத்தள செய்திச் சேவையில் வெளிவந்த கட்டுரை கார்த்திகை 2, 2009 ****************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************** **** **** **************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************** தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனப்படும் பிள்ளையான் தலைமையிலான துணைராணுவக் குழுவினரால் 30 லட்சம் ரூபாய்கள் கப்பப் பணத்திற்காககக் கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலையைச் சேர்ந்த வர்ஷா எனும் 6 வயதுச் சிறுமியின் கொலைபற்றி அறிந்திருப்பீர்கள். இக்கடத்தல் மற்றும் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகத்தின்பேரில் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்ட இரு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் துணைராணுவக் குழு உறுப்பினர்கள் அடைத்துவைகப்பட்டிருந்த நிலையில் மர்மமான முறையில் இறந்தது நினைவிலிருக்கலாம். தற்போது வந்துள்ள தகவல்களின்படி இவ்விரு உறுப்பினர்களும் இப்படுகொலையுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் சம்பந்தப்பட்டிருப்பதை மறைப்பதற்காகவே கொல்லப்பட்டதாகத் தெரியவருகிறது. இந்த சம்பவங்களுக்கு வலுச் சேர்க்கும் முகமாக, இக்கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் இருவர் இருநாட்களுக்கு முன்னர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், இப்படுகொலை மற்றும் இதன் பின்னாலிருந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக சில உறுப்பினர்களைக் கொலை செய்திருக்கும் பொலீஸார், இந்த இரு உறுப்பினர்களின் மரணங்களை புலிகள் மேல் போட்டுவிட்டு தப்பிக்க முயல்கிறது. திருகோணமலை பொலீஸ் அத்தியர்ட்சகர் வாஸ் குணவர்த்தண இதுபற்றிக் கூறிகையில், கைதுசெய்யப்பட்டிருந்த இருவரையும் அழைத்துக்கொண்டு தற்கொலை அங்கிகள் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் இடம் ஒன்றினைப் பார்வையிடச் சென்ற வேளையில் அங்கிருந்த புலிகள் தம்மீது தாக்குதல் நடத்தியவேளை அவர்கள் இருவரும் கொல்லப்பட்டதாகவும், சில பொலீஸாரும் இச்சம்பவத்தில் காயமடைந்ததாகவும் கூறுகிறார். இத்தளத்தில் முன்னர் வெளிவந்த செய்திகளின்படி, சிறுமி வர்ஷாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று கைதுசெய்யப்பட்டிருந்தவர்களை அகற்றும் முயற்சிகள் ஆளும்தரப்பிற்கு விசுவாசமான நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் கூறியிருந்தோம். வர்ஷாவின் கடத்தல் மற்றும் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட மிக முக்கிய குற்றவாளியான ஒஷ்வின் மேர்வின் ரினவுஷன் எனப்படும் ஆயுததாரி பொலீஸ் வாகனத்தில் திருகோணமலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பொலீஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அவ்வாறே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவின் உப்புவெளி அலுவலகத்தின் பொறுப்பாளர் மரியராஜன் ஜனார்த்தன் சயனைட் வில்லையினை உட்கொண்டு மரணமடைந்ததாக உப்புவெளி பொலீஸார் கூறியிருந்தனர். இக்கொலை பற்றிய விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலீஸ் அதிகாரியை காரணங்கள் ஏதுமின்றி இடமாற்றம் செய்திருந்தது, அரசின் அதிகார மட்டங்கள் இக்கொலையின் பின்னாலிருந்தவர்களை காப்பாற்றுவதற்காகவே என்பது தெளிவாகிறது. பாராளுமன்றத்தில் இவ்விடயம் குறித்துப் பேசிய தினேஸ் குணவர்த்தன இக்கொலையின் பின்னாலிருந்தவர்களை மறைக்கும் கைங்கரியத்தில் வெளிப்படையாகவே பேசியது நினைவிலிருக்கலாம். அடுத்ததாக , இக்கொலையின் இரண்டாவது குற்றவாளியான ஜனார்த்தனின் முகம் முற்றாக எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டிருந்ததைப் பார்க்கும்போது, அவர் சயனைட் உட்கொண்டுதான் இறந்தாரா இல்லையா என்பதை பிரேதப் பரிசோதனைமூலம் கண்டறிவதை இதன் பின்னால் இருந்து செயற்பட்டவர்கள் விரும்பியிருக்கவில்லை என்பதும் தெளிவாகிறது. இப்படுகொலையினைத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் பல விடயங்கள் இதன் பின்னால் அரசுக்கு ஆதரவான குழுவொன்று இருந்திருக்கிறதென்பத்கை கோடிட்டுக் காட்டுகின்றது. அண்மையில் அரசின் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளீதரன், பிள்ளையான் குழுவினர் தாம் வாக்குறுதியளித்தபடி தமது ஆயுதங்களை அரசிடம் இன்னும் முற்றாகக் கையளிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார். கண்துடைப்பிற்காக ஒரு சில ஆயுதங்களை மட்டுமே கையளித்த பிள்ளையான் குழுவினர், கொள்ளைகள், கடத்தல்கள், கப்பம் கோரல்கள், படுகொலைகள் உட்பட பல்வேறான குற்றச் செயல்களுக்காக இன்னும் பெருமளவு ஆயுதங்களை தம் வசம் வைத்திருப்பதாக கருணா மேலும் தெரிவித்திருந்தார். அண்மையில் தினமின எனும் நாளிதழுக்கு செவ்வியளித்த அரச பேச்சாளர் கெகெலிய ரம்புக்வெல்ல, "பிள்ளையான் ஆயுதங்களை ஒப்படைத்திருந்தார் என்பது உண்மையானாலும் கூட, அவர் கையளித்த ஆயுதங்களின் அளவைப் பார்க்கும்பொழுது இதனைக் காட்டிலும் அதிகமாக அவரிடம் இருந்திருக்க வேண்டும் என்று நான் கருதினோம்" என்று கூறியிருந்தார். அவர் மேலும் கூறுகையில், "அவர்களிடம் இன்னமும் ஆயுதங்கள் இருக்கின்றனவா இல்லையா என்பது எமக்கு ஒரு பிரச்சினையல்ல, அவர்கள் ஆயுதங்களைக் கையளிக்க ஒத்துக்கொண்டதே நல்ல முயற்சிதான், அவர்களிடம் மேலும் ஆயுதங்கள் இருப்பின் அவற்றினை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடுகளை எம்மால் செய்யமுடியும்" என்றும் கூறியிருந்தார். ஆகவே, பிள்ளையான் தனது குழுவினரிடம் இருந்த ஆயுதங்கள் அனைத்தையுமே கைய்யளிக்கவில்லையென்பதும், அரசாங்கம் இதுபற்றி அதிகம் அக்கறை காட்டவில்லையென்பதும் புலனாகிறது. வர்ஷாவின் கொலையில் பிள்ளையான் சம்பந்தப்பட்டிருப்பதை மறைக்க பொலீஸார் எடுத்த முயற்சியின் ஒரு அங்கம்தான் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு பிள்ளையான் குழு உறுப்பினர்கள் சாட்சியமளிக்கும் முன்னரே பொலீஸாரால் நாடகபாணியில் சுட்டுக் கொல்லப்பட்டது. அதே போல, ஏனைய இரு உறுப்பினர்களின் கொலைகளும் பொலீஸாரினால் மிகவும் திட்டமிட்ட முறையில் அரங்கேற்றப்பட்டு பிள்ளையானின் கொடிய கரம் சிறுமி வர்ஷாவின் படுகொலையின் பின்னால் இருந்ததை மறைத்திருக்கிறார்கள். கடத்தலுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட பிள்ளையான் குழு உறுப்பினர்கள் நால்வரும் கொல்லப்பட்டு, சாட்சியங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டிருப்பதானது பிள்ளையானைக் காப்பாற்ற அரசு எவ்வளவு தூரம் முயன்று வருகின்றது என்பதையே காட்டுகிறது. பிள்ளையான் ஆயுததாரிகளால், கடத்தப்பட்டு, வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, படுகொலைசெய்யப்பட்ட 6 வயதுச் சிறுமியான வர்ஷாவின் பின்னால் பிள்ளையான் இருந்ததும், அரசு அவரைப் பாதுகாக்க இறுதிவரை துணைநின்றதும் இச்சம்பவங்கள் மூலம் நிரூபணாமாகிறது. ஆங்கிலத்தில் சுகத் குமார அழகக்கோன்
  22. இந்த பெரியமனுஷன் செய்யும் வேலை ? எவ்வளவு அவதானம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.