Leaderboard
-
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்16Points8910Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்12Points19152Posts -
தனிக்காட்டு ராஜா
கருத்துக்கள உறவுகள்11Points9976Posts -
நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+9Points35658Posts
Popular Content
Showing content with the highest reputation on 06/06/21 in all areas
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
(இது என்னுடைய 5,000 ஆவது பதிவாகும்.)4 points
-
மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
3 pointsதுபாய் நகரின் புறநகர் பகுதியான 'துபாய் மெரீனா' என்பது பெரும்பாலும் கோடிகளில் புரளும் ஐரோப்பிய செல்வந்தர்கள் வாழும் பகுதியாகும். மற்றொருபுறம் அலுவலகங்கள் நிறைந்த ஜெ.எல்.டி(Jumeirah lake towers) எனப்படும் உயரடுக்கு மாடிகள் கொண்ட பகுதிகள். இந்த பகுதிகளுக்குள் சென்றால் நமக்கு கழுத்தில் சுளுக்கு வந்துவிடும், ஏனெனில் பெரும்பாலும் அனைத்து கட்டிடங்களும் குறைந்தது 25 மாடிகளுக்கு மேல்..சில கட்டிடங்கள் 60, 80 எனவும் உண்டு. இப்பகுதிகளைக் கடந்தால் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், துறைமுகங்கள் நிறைந்த 'ஜெபல் அலி' பகுதிகள் வரும். எனக்கு பெரும்பாலும் இப்பகுதிகளுக்குள் அலுவலக வேலை சம்பந்தமாக அடிக்கடி சென்று வரக்கூடிய வாய்ப்புக்கள் வரும்.. முதலில் மிக பிரமிப்பாக இருந்தது.. இப்பொழுது ரொம்ப பழகிப்போச்சுது.. ஆடம்பரமான வாழ்க்கை கொண்ட இப்பகுதியை பார்த்து நாம் பெருமூச்சுதான் விடமுடியும்..! அப்படி ரசித்தவைகளில் ஒன்று, இந்த புதிய "பென்ட் ஹவுஸ்.." 56 வது தளத்தில், சுமார் 6400 சதுர அடிகள் பரப்பளவு கொண்ட இந்த அடுக்குமாடி வீட்டில், அனைத்து அடிப்படை(?) வசதிகளும் உண்டு.. விலை ரொம்ப கம்மிதான்.. 15 மில்லியன் திர்ஹாம்கள்.. உங்கள் பார்வைக்கு..! டிஸ்கி: அதுசரி, திரியின் தலைப்பிற்கும், உள்ளேயுள்ள விசயங்களுக்கும் என்ன சம்மந்தம் என முழிக்கிறீங்களா..? மாடி... அதிலிருக்கும் பொண்ணு..! சரியா இருக்கா..? ஹி..ஹி..😜3 points
-
மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
2 pointsநாங்கள் கீழ் வீட்டிலை இருந்து கொண்டே பக்கத்து வீட்டு புதினம் பாக்கிற ஆக்கள். அதுவும் 80 மாடி வீடுகளிலை எண்டால் பைனாகுலரோடை சுழல் கதிரையிலை இருந்து சுழண்டு அடிக்க வேண்டியது தான்.😁2 points
-
மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
2 pointsநன்றி வன்னியர். நான் ஒரு முறை நான்கு நாட்கள் தங்கி இருக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அசந்து போயிருந்தேன் இங்கே இருந்த வசதிகளைப் பார்த்து. வேலை செய்த நிறுவனம் ஒன்றில் ஒரு புதுமையாக பரிசு ஒன்றினை அளித்தார்கள். பொதுவாக பரிசு வழங்குவது, வரி விதிப்புக்கு உள்ளாவது. அதனை தவிர்க்க ஒரே வழி, அதனை லாட்டரி மூலம் வழங்குவது. அதிட்டம் இருந்தால், பரிசு கிடைக்கும். நிறுவனத்தின் முந்தைய வருடம் கிடைத்த லாபத்தினை அறிவிக்க, முக்கிய ஊழியர்களை அழைத்து கூட்டம் போட்டு அறிவித்தார்கள். பரிசாக, துபாயில் தங்க ஒரு வார விடுமுறை. அந்த வகையில் கிடைத்தது இந்த சந்தர்ப்பம். சரி எப்படி லாட்டரி விழுந்தது. நாம் இருந்த சீட்டின் கீழ் பகுதியில் ஒட்டி வைத்து இருந்தார்கள், ஒரு சீட்டினை. யார் இருந்த சீட்டில் அது இருந்ததோ, அவர்களுக்கு அதிஷ்டம். விசயம் தெரியாமல், எனக்காக, அந்த சீட்டினை தந்து விட்டு, தள்ளிப் போயிருந்த நபரின் முகத்தினை நான் பார்க்கவில்லை. பேயறைந்தது போல இருந்தார் என்று எனது பக்கத்து, மேசை நண்பர் பின்னர் சொன்னார். நம்ம லுங்கியை கட்டிக்கொண்டு, அரச மரத்தடியில் படுக்கும் சுகமே சுகம். இது எல்லாம் ஒரு போலி என்று உணர்வு வந்தது. *** விடியோவை பார்க்கும் போது, அம்மணி சொல்லுவதை வைத்தும், வரும் உணர்வு.... (குளித்துக்கொண்டு வெளியே பார்த்து ரசிக்கலாமாம்) யாராவது பைனாகுலர் வைத்துக்கொண்டு, இங்கே நடப்பதை பார்க்கலாமே. *** மகிந்த ராஜபக்சே மச்சான் மனைவியின் சகோதரர், விக்ரமசிங்க குறித்து ஒரு கட்டுரை போட்டிருந்தேன். இவரை சிறிலங்கன் விமான நிறுவன தலைவராக மகிந்த போட்டிருந்தார். அதிலே, சிறிலங்கன் விமான நிறுவனத்துக்கு இந்த வகையில் ஒரு வீடு இருந்தது. அதிலே, நிர்வாக பயிச்சிக்கு அலுவகர்களை துபாய்க்கு அனுப்பும் போது தங்க வைப்பார்கள். அந்த வீட்டில், ஏர் ஹோஸ்டர்ஸ் ஆக வேலை செய்த ஒரு பெண்ணை, மடக்கி, அங்கே தங்க வைத்திருந்தார், ஒரு வருடமாக. தனது செகிரேட்டரி என்று சொல்லி, சம்பளம் வேறு கொடுக்க உத்தரவு போட்டிருந்தார். கொழும்பில் இயங்கிய நிறுவன தலைவரின், செயலாளருக்கு துபாயில் என்ன வேலை என்று கேட்க கூடாது.2 points
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
2 points@ரஞ்சித் வணக்கம் அண்ணை, தாங்கள் மிகவும் அளப்பரிய பணியினை செய்து வருகிறீர்கள்... தொடர்ந்து செய்யுங்கள்... எந்த இடையூறு வந்தாலும் செய்வதை நிறுத்தாதீர்கள். என்னைப் போன்ற இளைய தலைமுறைக்கு(2k) தங்களின் ஆவணப்படுத்தலானது வரலாற்றை அறிந்து கொள்ளவும் எமக்கு எம்மினதின் புல்லுருவிகள், காட்டிக்கொடுப்போர், வஞ்சகர் போன்றவர்கள் ஆரார், எந்தெந்த வடிவத்தால் இருந்தார்கள், இனியும் எப்படியெல்லாம் பசுத்தோல் போர்த்தி வருவார்கள் என்பதை அறிந்து கொள்ளவும், படிப்பினையைச் செய்யவும் இத்தொடர் மிகவும் உதவி கரமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இத்தொடரானது -->கூலிப் படைகளாகச் செயல்பட்ட மாற்று இயக்கத்தின் வால்களுக்கும், -->சிங்கள அடிவருடிகளுக்கும், -->புலிகளைப் பிடிக்காதோருக்கும், -->தமிழீழம் கிடைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்போரிற்கும், -->தவறுகளைச் சரிசெய்யப்போகிறோம் என்று கூறி இனத்தை மேலும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் பேர்வழிகளுக்கும், இத்தொடர் உறுத்தும்; உறுத்துகிறது. அதை பற்றியெல்லாம் தாம் சட்டை செய்ய வேண்டாம்.... தொடங்கியதை முற்றாக எழுதி இனிதே முடித்து வையுங்கள்... நன்றி2 points
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
2 pointsஇணையத்தில் பரவலாக இருக்கும் விடயங்களை ரஞ்சித் தொகுத்துத் தருகின்றார். அவற்றில் தவறுகள் இருந்தால் அவற்றினை இந்தத் திரியிலேயே சுட்டிக் காட்டலாமே. நான் முழுமையாகப் படிக்கவில்லை. எனினும் படித்த அளவில் ரஞ்சித் புனைந்து எழுதியதாகத் தெரியவில்லை. சிலவேளை 10 - 17 வருடங்களுக்கு முன்னர் வந்தவற்றைப் இப்போது பார்க்கும்போது புனைவாகவும், தவறாகவும் தெரிவது பார்வையில்தான் உள்ளது!2 points
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
2 points
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
2 points2. டி பி எஸ் ஜெயராஜ் - சண்டே லீடர் ஆவணி 21, 2005 "புலிகளுக்கு முன்னால் உள்ள ஒரே தெரிவு தமது அகம்பாவத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு கருணாவுக்கான இடத்தைக் கொடுப்பதுதான். கருணாவை தனியான ஒரு தரப்பாக கொழும்பும் கிளிநொச்சியும் கட்டாயம் நடத்த வேண்டும். நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளில் கருணாவும் அவரது ஆதரவாளர்களும் மூன்றாம் தரப்பாக அமரவைக்கப்படுதல் அவசியமாகும். இதன்மூலம் கருணா முன்னணி அரசியல் - ராணுவச் சக்தியாக ஆக்கப்படுவதோடு, அரசியல் ஜனநாயக நீரோட்டத்திலும் கலக்கப்படுதல் அவசியமாகும். கருணாவை போரின் வேட்டை நாயாகப் பார்க்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்". "ஆயுதங்கள களையப்பட்ட பின்னர் ஏனைய ஆயுதக் குழுக்களுக்கு புலிகளால் வழங்கப்பட்ட தண்டனைகளைப் பார்க்கும்போது, கருணாவிடம் இருந்து ஆயுதங்களைக் களையுங்கள் என்று கேட்பது நகைப்பிற்குரியது. பிரபாகரன் ஆயுதங்களைக் கீழ் வைத்தால் ஒழிய கருணா ஆயுதங்களைக் கீழே வைக்கவேண்டிய தேவை இல்லை. ஆனால் இடைக்கால தீர்வாக மோதல் தவிர்ப்பு சூழ்நிலையினை பிரபாகரன் தரப்பும் கருணா தரப்பும் ஏற்படுத்திக் கொள்வது சாத்தியமானது. புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டோ அல்லது கருணாவுடன் சுமூகமாக மோதல் தவிர்ப்பு நிலைக்கு வந்தால் மட்டுமே கிழக்கில் நடக்கும் சகோதரப் படுகொலைகளை நிறுத்த முடியும். பிரபாகரனோ அல்லது கருணாவோ இம்மோதல்களில் தோற்றால்க் கூட, நேரடியாகப் பாதிக்கப்படப்போவது கிழ்க்குத் தமிழினம் அடங்கலான ஒட்டுமொத்தத் தமிழினமும் தான்". 3. ரோகினி ஹென்ஸ்மன் - தி ஹிந்து , சென்னை, ஆவணி 22, 2005 "புதிய யுத்த நிறுத்த ஒப்பந்தம், பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம், பிரபாகரன் தரப்பு, கருணா தரப்பு ஆகியவற்றை சம அந்தஸ்த்துள்ள தரப்புக்களாக அமர்த்துவது அவசியமானது. முக்கியமாக, கருணா தரப்பினருக்கும், பிரபாகரன் தரப்பினருக்கும் இடையிலேயே பெரும்பாலான மோதல்கள் நடந்துவருவதால், அவர்களுக்கிடையிலேயே யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்யப்படுவதும் அவசியமானது. ஆக மொத்தத்தில் அரசு, பிரபாகரன் தரப்பு கருணா தரப்பு ஆகிய முத்தரப்புக்களுக்கும் பொதுவான யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்று மிக அவசியமானது. சிலவேளைகளில் பிரபாகரன் தரப்பு யுத்த நிறுத்தத்தில் இருந்து விலகிக் கொண்டாலும் கூட கருணா தரப்பிற்கும் அரசுக்குமிடையிலான யுத்த நிறுத்தம் ஒன்று செய்யப்படுதல் மிக அவசியமானது. கிழக்கில் இடம்பெற்று வரும் மனிதவுரிமை மீறல்கள் மற்றும் யுத்த முனைப்புக்களை குறைக்க இது அவசியமானது. ஆகவே, கருணா தரப்பை சம அந்தஸ்த்துள்ள தரப்பாக மதிப்பதன்மூலம், கிழக்கில் அமைதியினை உருவாக்க முடியும்".2 points
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
2 pointsஇந்திய றோவின் திருகுதாலங்களும் கருணாவும் ஆக்கம் : சச்சி சிறிகாந்தா இணையம் : தமிழ் நேஷன் காலம் : 22 ஆவணி 2005 சங்கீத விற்பன்னர்களான சுப்புலக்ஷ்மியாக இருக்கட்டும், மதுரை மணி ஐய்யராக இருக்கட்டும் அல்லது சீர்காழி கோவிந்தராஜனாக இருக்கட்டும், இவர்களின் குரலைக் கேட்ட ஒரு சில நொடிகளிலேயே பாடுவது இன்னார்தான் என்பதனை தமிழ் மக்கள் துல்லியமாக இனங்கண்டுகொள்வார்கள். இந்த ஒவ்வொரு பாடகர்களுக்கும் உரித்தான தனித்தன்மையான குரலும், நுணுக்க அசைவுகளும் தமிழரின் மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதால் அவர்களின் குரலினை அடையாளம் காண்பது அவர்களுக்கு இலகுவானது. அவ்வாறே தமது அன்றாட வாழ்க்கையில் கடந்த 15 - 20 வருடங்களாக இந்தியாவின் மிகக் கேவலமான உளவுப்பிரிவு, றோ செய்துவரும் கைங்கரியங்களை இனங்கண்டுகொள்வதும் தமிழர்களுக்குக் கடிணமானது அல்ல. றோவின் நாசகாரக் கைகள் தமது கற்பனைக்கும் அப்பாற்பட்ட நிகழ்வொன்று நடைபெறும்போது அதனைப்பற்றி அளவுக்கதிகமாக தனது ஊடக அடிவருடிகள் மூலம் எழுதிக்கொள்கிறது. ஆனால், எந்தச் சுரமும் அற்று வெற்றுக் கீதங்களாக றோவினால் புனையப்பட்டு மீட்டப்படும் இந்த சுதிகெட்ட பாடல்களை தமிழ்மக்கள் திரும்பியும் பார்ப்பதில்லையென்பது வேறுவிடயம். சர்வதேச புலநாய்வு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்து வரும் அமைப்பொன்றின் தகவல்களின்படி சுமார் 8000 இலிருந்து 10,000 உளவாளிகள் றோவுக்காக இயங்குவதாகவும், இவர்களுக்கான வருடாந்தச் செல்வாக இந்திய ரூபாயில் குறைந்தது 1,500 கோடிகள் றோவினால் வாரியிறைக்கப்படுவதாகவும் தெரியவருகிறது. இந்தப் பணத்தில் ஒருபகுதி இலங்கையில் ஈழத்தமிழருக்கெதிரான அதன் சதிகளுக்காகப் பாவிக்கப்படுகிறது என்பதும் ரகசியமல்ல். இவ்வமைப்பின் கருத்துப்படி சுமார் 20 - 25 கோடி இந்திய ரூபாய்கள்வரை இலங்கையில் றோ தமிழருக்கெதிரான தனது சதிகளுக்கு பாவித்துவருவதாகத் தெரிகிறது. பின்வரும் இரு சம்பவங்கள் இந்திய றோவையும் அதன் அடிவருடிப் பத்தியாளர்களையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியிருப்பதாகத் தெரிகிறது. 1. வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை 2. இலங்கையரசாங்கம் 2002 சமாதான உடன்படிக்கை தொடர்பாக புலிகளுடன் பேசப்போவது வெறும் 2 நாள் இடைவெளியில் றோவின் ஊதுகுழல்களில் மூவர் எழுதியிருக்கின்றனர். இவர்களின் எழுத்துக்களின் சாராம்சம் யாதெனில், மீண்டும் கருணாவை முன்னுக்குக் கொண்டுவாருங்கள் என்பதுதான். சண்டே லீடர் பத்திரிக்கையில் புலிகள் பற்றிப் புரணிபாடும் அதே டி பி எஸ் ஜெயராஜ் தற்போது உச்சஸ்த்தானியில், "கருணாவுக்கான அங்கீகாரத்தை கொழும்பும் கிளிநொச்சியும் கட்டாயம் வழங்கியே தீரவேண்டும்" என்று கூக்குரலிட்டிருக்கிறார். அவரைப்பொறுத்தவரை கருணாவும் அவரது ஆதரவாளர்களும் ஒஸ்லோவில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் மூன்றாம் தரப்பினராக அங்கீகரிக்கப்படவேண்டும் என்று தெரிகிறது. இதன்மூலம் கருணாவும் அவரது ஆதரவாளர்களும் முன்னணி அரசியல் நீரோட்டத்தில் இணைந்து அரசியல் - ராணுவ தலைமையாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்று அவர் கோருகிறார். மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளை அவ்வப்போது எடுத்துவிடும் ஜெயராஜ் தனது கற்பனை பலூன்களில் றோவின் காற்றினை அடைத்து பறக்கவிட்டிருக்கிறார் என்பதே இங்கு நோக்கப்படவேண்டியது. அவரைப்போன்றே , மனிதவுரிமை வாதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ரோகினி ஹென்ஸ்மனும், புதிய போர் நிறுத்த உடன்படிக்கை முத்தரப்பினரான அரசாங்கம், பிரபாகரன் பிரிவு, கருணா பிரிவு ஆகியவற்றை உள்ளடக்க வேண்டும் என்று கூவியிருக்கிறார். இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவெனில் பெரும்பாலான மோதல்கள் புலிகளுக்கும் கருணா குழுவுக்கும் இடையிலேயே அண்மைக்காலமாக நடந்துவருகிறது என்பது. ஆகவே, யுத்த நிறுத்தம் என்பது முத்தரப்புக்களிடையேயும் செய்யப்படுதல் அவசியமாகிறது. ஆனால், ஜெயராஜினதும் ரோகினியினதும் கோரிக்கைகளில் பாரிய ஓட்டைகள் உள்ளன. கிழக்கில் இரு தரப்புக்கள் மட்டுமே தமக்கான கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைக் கொண்டிருக்கின்றன. ஒன்று அரசாங்கம், மற்றைய தரப்பு புலிகள். 2004 சித்திரையில் உயிரைக் கைய்யில் பிடித்துக்கொண்டு, கல்களிடையே வாலைச் சுருட்டிக்கொண்டு கருணா கொழும்பிற்குத் தப்பியோடியபின்னர் அவரின் கட்டுப்பாட்டின்கீழ் ஒரு சிறு நிலப்பகுதிகூட இப்போது இல்லையென்பது இவர்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. கடந்த 20 வருடங்களில் றோவின் அடிவருடி பத்தியெழுத்தாளர்கள் ஒரு சகதிக்குள் சிக்குண்டிருப்பதாகவே படுகிறது. இலங்கையின் பாராளுமன்ற நிகழ்வுகள்பற்றி இவர்களுக்குச் சற்றேனும் அறிவு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 1980 களின் நடுப்பகுதியிலிருந்து 1994 வரை காமினி திஸாநாயக்காவே இவர்களுக்கான தகவல்களை வழங்கிவந்தார். 1989 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரின் இறுதி நிகழ்வுகளின்பொழுது றோ சார்பான இரங்கல் உரையினையே காமினி திஸாநாயக்கா படித்திருந்தார். காமினி திஸாநாயக்காவின் மரணத்தின்பின்னர் றோவிற்கான தகவல் வழங்குனராக லக்ஷ்மன் கதிர்காமர் திறம்படச் செயலாற்றியிருந்தார். ஆனால், லக்ஷ்மன் கதிர்காமரும் திடீரென்று அகற்றப்பட்ட பின்னர் றோவுக்கான தகவல்கள் சடுதியாகத் தடைப்பட்டுப் போனது. ஐக்கிய தேசியக் கட்சியில் காமினி அரசியலில் செயற்திறன் மிக்கவராகத் திகழ்ந்தார். அநுர பண்டாரநாயக்காவை தனது அருகில் வைத்துக்கொள்ளுமுன்னர், லக்ஷ்மன் கதிர்காமர் ஒரு செயல்வீரனாக சந்திரிக்காவுக்குத் தெரிந்தார். ஆகவே, றோவுக்கான ஏஜெண்டுக்களை கொழும்பு அரசாங்கத்தில் மிகச் சுலபமாக அதனால் நிலைநிறுத்த முடிந்திருந்தது. ஆனால், இப்போது முன்னாள் ஆயுதக் குழுத் தலைவரும், துணைராணுவக் குழு - அரசியல்க் கட்சி பிமுகருமான டக்கிளஸ் தேவாநந்தாவையே சந்திரிக்கா அரசின் செய்திகளைத் தமக்குக் காவிவரும் ஏவலாளியாக றோ வைத்திருக்கிறது. ஆனால், இந்த தேவாநந்தாவினால் சந்திரிக்காவின் உள்வட்டத்தை நெருங்குவதைக் கனவில்க் கூட நினைத்துப் பார்க்கமுடியாது. சந்திரிக்காவைப் பொறுத்தவரை டக்கிளஸ் எனும் ஆயுததாரி ஒரு ராணுவ வீரனுக்கான தகைமையையோ, கூலிகளுக்குக் கொல்லும் துணைப்படையினனுக்கான தகைமையையோ கொண்டிருப்பதாக அவர் சிறிதும் நம்பவில்லைபோலத் தெரிகிறது. ஆகவேதான் கருணாவை சந்திரிக்காவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ராணுவ நிபுணனாக, கொலைக்குழுத் தலைவனா நிறுத்த றோவும் அதன் பத்தியெழுத்தாளர்களும் அரும்பாடுபட்டு வருவது தெரிகிறது. றோவின் ஊதுகுழல்களாகச் செயற்பட்டுவரும் ஹிந்துஸ்த்தான் டைம்ஸின் பாலச்சந்திரன், சண்டே லீடரின் ஜெயராஜ், ஹிந்துப் பத்திரிக்கையின் ரோகினி ஆகிய மூவரின் அபத்தப் புனைவுகள் உங்களுக்காகக் கீழே தரப்படுகின்றன. 1. பி கெ பாலச்சந்திரன் - ஹிந்துஸ்த்தான் டைம்ஸ், ஆவணி 20, 2005 "புலிகளைப்பொறுத்தவரை கிழக்கில் அவர்களின் இருப்பென்பது மிகவும் பலவீனமானதாகவே படுகிறது. அங்கே அவர்களின் கட்டுப்பாட்டின் அஸ்த்தமக் காலம் தெரிவதோடு, அங்குள்ள பல்லின சமூகமும் அவர்களின் இருப்பிற்கு உதவப்போவதில்லை. வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரியாத போதிலும், கருணாவின் இருப்பென்பது, அவர்களை ஏனைய போராளிக் குழுக்களை விழிப்பதுபோல "துணைராணுவக் குழுக்கள்" என்று புலிகள் விழித்தாலும் கூட, புலிகளின் ஆயுதம் தரிக்காத அரசியல் போராளிகளின் பாதுகாப்பிற்கு மிகக் கடுமையான அச்சுருத்தலை கருணாவினால் கொடுக்க முடியும்". "கருணாவை சட்டைசேயத்தேவையில்லை என்று புலிகள் உதறித் தள்ளினாலும் கூட, அவரது பெயர் புலிகளுப் பெரும் அச்சுருத்தலாகவே இப்போது உச்சரிக்கப்பட்டு வருகிறது. தம்முடன் சில மாதங்களுக்கு முன்னர் வரை இருந்த கருணாவின் ஆதரவாளர்களே தமக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வல்லமையினைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை புலிகள் மறுக்கமுடியாது". "கருணாவின் பிரச்சினை அரசைப் பொறுத்தவரை பெருத்த சவாலாகவே மறியிருக்கிறது. கருணாவுக்கெதிராகச் செயற்படுவதோ அல்லது அவருக்கு தாம் வழங்கிவரும் ஆதரவினை நிறுத்துவதென்பதோ அரசுக்கு இலகுவான முடிவாக இருக்கப்போவதில்லை. ராணுவத்தின் சில படைப்பிரிவுகள் கருணாவை வெளிப்படையாகவே ஆதரித்துவருவதாகப் பேசப்படும் நிலையில், அவரைத் திடீரென்று கைவிடுவது தமது அரசியல் நிலையினைப் பலவீனமாக்கும் என்று அரசு நன்கு அறிந்தே வைத்திருக்கிறது. இதற்கான மிக முக்கிய காரணம், புலிகளைப் பலவீனப்படுத்தி பிளவுபடுத்திய கருணா தெற்கின் சிங்களவரைப் பொறுத்தவரை ஒரு வெற்றி நாயகன். கருணாவைக் கொண்டு புலிகளைப் பலவீனப்படுத்தி, பிரபாகரனின் பலத்தை முற்றாகவோ பகுதியாகவோ அழிப்பதன் மூலம் பேச்சுவார்த்தை மேசையில் அரசின் பேரம்பேசும் பலத்தினை அதிகரிக்க தெற்கின் சாதாரண சிங்கள் மக்கள் விரும்புவது தெரிகிறது". "கருணாவுக்கெதிரான ராணுவ நடவடிக்கை ஒன்றினை அரசு நடத்த எத்தனிக்குமாக இருந்தால், அதுவே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை மீறும் செயலாகிவிடும் . அதுமட்டுமல்லாமல், கருணாவுக்கெதிரான ராணுவ நடவடிக்கை என்பது புலிகளுக்கெதிரான அரசின் ராணுவ நடவடிக்கையாகப் பார்க்கப்படும் அபாயமும் இருப்பதாக அரசின் சமாதானப் பணியகத்தில் தலைவர் ஜயந்த தனபாலவின் கூற்றும் இங்கே கவனிக்கப்படவேண்டிய ஒன்று".2 points
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
2 pointsஇணையத்தில் தன்னை ராணுவ விடயங்களின் வல்லுனர் என்று மார்தட்டி எழுதிவரும் மேத்தா ஈழத்தில் புலிகளால் பந்தாடப்பட்ட தனது ராணுவத்தின் தோல்விகரமான வரலாற்றினை திருத்தியெழுதும் கைங்கரியத்தில் ஈடுபட்டுவருகிறார். புலிகளுடனான போரில் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காக அரசியல்வாதிகளையு, அதிகாரிகளையும், உளவுத்துறையினரையும் குற்றஞ்சொல்லும் மேத்தா, தான் போன்ற ராணுவ அதிகாரிகளின் கையாலாகாத்தனத்தை வேண்டுமென்றே மறைத்து வருகிறார். அவர் பங்குனி 24 இல் எழுதிய ஒரு பந்தியில் கிழக்கில் தனது ராணுவ நடவடிக்கை ஒன்றுபற்றி பின்வருமாறு எழுதுகிறார், "கருணாவைக் கொல்வதற்கு உங்களுக்கு என்ன வேண்டும் என்று எனது தளபதி என்னிடம் கேட்டார். மட்டக்களப்பு - அம்பாறை தளபதியாகவிருந்த நான் என்னிடம் இன்னும் இரு பிரிகேட்டுக்களைத் தாருங்கள், கருணாவை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று கூறினேன். அன்று வெறும் 20 வயது இளைஞனாக இருந்த கருணா இன்று புலிகளின் கிழக்குப் பிராந்திய தளபதியாக இருக்கிறார். இந்திய அமைதிப்படையின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இருந்து லாவகமாகத் தப்பித்துவரும் அவரைப் பிடிப்பது இயலாத காரியமாக இருந்தது. என்னிடம் ஐந்து கோடி பணமிருந்தால் அவரைப் பிடித்திருக்கலாம்" என்று கூறும் மேத்தா பணப்பற்றாகுறையினாலேயே கருணாவை அன்று பிடிக்கமுடியாமற்போனதாகக் கூறுகிறார். புலிகளின் பெரும் தலைவரான பிரபாகரன் கூட இதே கேள்வியை தனது புலநாய்வுத்துறைப் பொறுப்பாளரான பொட்டு அம்மாணிடம் கருணா பிரிந்துசென்றதிலிருந்து கேட்டிருக்கலாம். அவருக்கு பணத்தட்டுபாடோ, ஆளணிப்பற்றாக்குறையோ, வளங்களின் தட்டுப்பாடோ நிச்சயம் இருக்காது. ஆனால், இன்னொரு மாத்தையா உருவாவதை அவர் நிச்சயம் விரும்பமாட்டார். அஷோக் மேத்தாவின் இந்த 5 கோடி பணம் என்பது என்னை சிந்திக்க வைக்கிறது. போர்க்களத்தில் தனது எதிரியை போரில் சிறைப்பிடிப்பதை விடுத்து, பணத்தாசை காட்டி அன்று பிடித்திருக்காலாம் என்று அவர் கூற வருகிறாரா? அதாவது கருணா விலைபோகக் கூடியவர் என்பதை இந்திய அதிகாரிகள் அறிந்திருந்தார்களா? அப்படியானால் வெறும் ஐந்து கோடிகளைக் கொடுத்து அவர்களால் அன்று அதனை ஏன் செய்யமுடியாமல்ப் போனது? இன்று கருணா அன்றிருந்ததைக் காட்டிலும் பல மடங்கு பலமானவராக மாறியிருக்கலாம். ஆகவே அன்று தேவைப்பட்ட ஐந்து கோடிகளின் பல மடங்குகளை இன்று கொடுத்திருக்கலாம் என்று அவர் கூறுவதன் நோக்கம் கடந்த இரண்டு வருடங்களில் கருணாவை இந்திய உளவுத்துறை பெருந்தொகைப் பணத்தினைக் கொடுத்தே புலிகளிடமிருந்து பிரித்து துரோகத்தினைச் செய்யத் தூண்டியதாக இவர் சொல்லாமல் சொல்கிறாரா? றோவும், அதன் நீண்ட கரங்களும் : எனது தனிப்பட்ட கருத்து றோவின் பணவளங்கள் குறித்துச் சிந்திப்பது அவசியமானது என்று நினைக்கிறேன். அமெரிக்க நிறுவனமொன்றின் இணையத்தளமொன்று பின்வருமாறு கூறுகிறது, "இந்தியாவின் மிகப்பலம் வாய்ந்த உளவுத்துறையானது இந்தியாவின் தேசியப் பலத்தினை பாதுகாப்பதிலும், இந்தியாவின் உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளை வகுப்பதிலும் பாரிய தாக்கத்தினைச் செலுத்தி வருகிறது. பாக்கிஸ்த்தான் உட்பட பல அயல்நாடுகளில் தவறான செய்திகளையும், கொள்கைகளையும் பரப்புதல், நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகிய கைங்கரியங்களில் அது வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறது. தொடர்ச்சியாக ஆட்சியில் ஏறும் அரசுகள் றோவின் இந்த நடவடிக்கைகளுக்கு முற்றான ஆதரவினை வழங்கிவருகின்றன. இந்தியப் பிரதமரின் கீழ் செயற்படும் றோ அதிகாரிகளின் விபரங்கள், அவர்களின் சம்பளம், தரம் ஆகியன பாராளுமன்றத்தில் கூட பேசப்படாமல் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது" "றோ அமைப்பும் , இந்திய வெளியுறவுத்துறையும் வருடந்தோறும் 25 கோடி ரூபாய்களை அயல்நாடுகளில் தமது செயற்பாடுகளுக்காக ஒதுக்கி வருகின்றன". ஆகவே, இதன்மூலம் அறியமுடிவது யாதெனில் வருடம் தோறும் 25 கோடிகளை வெளிநாடுகளில் தமது நாசகார நடவடிக்கைகளுக்கு ஒதுக்கிவரும் இந்திய உளவுத்துறை அதில் ஒரு பகுதியினை புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதியாகவிருந்த கருணா, இயக்கத்திற்குத் துரோகமிழைத்து வெளியேறிச் செல்ல இந்தியா சன்மானமாகக் கொடுத்திருக்கலாம் என்பதுதான். இவற்றிற்கிடையில், தமிழரில் ஒரு சில செய்திகாவும் பிரிவினர் இந்திய புலநாய்வுத்துறையின் நாசகாரச் செயற்பாடுகள் பற்றிப்பேசுவதையோ, கேட்பதையோ, எழுதுவதையோ பாரிய குற்றம் என்று கருதி வாளாவிருக்கின்றனர். ஆனால் இந்திய புலநாய்வுத்துறையின் நாசகார சதித்திட்டங்கள் தற்போது பரவலாக வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன. "ஒரு நூற்றாண்டின் உளவாளிகள் : 20 ஆம் நூற்றாண்டி உளவுத்துறைகள்" எனும் புகழ்பெற்ற புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதியினை இங்கே தருகிறேன், "இந்தியா விஞ்ஞான ரீதியிலும், தொழிநுட்ப ரீதியிலும் மிகத் தீவிரமான புலநாய்வு ஆராய்ச்சிகளை அமெரிக்கா உட்பட பல நாடுகளில் மேற்கொண்டு வருகிறது. கணிணி தொழிநுட்பத்தின் மூலம் மூன்றாம் உலக சந்தையினைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரமுடியும் என்று அது எதிர்பார்க்கிறது. அமெரிக்காவில் தொடர்ச்சியாக 5 மாதங்கள் தங்கியிருந்து தனது உளவாளிகளை வழிநடத்திவிட்டு, மீண்டும் இந்தியாவுக்குச் செல்ல எத்தனித்த றோவின் உதவி இயக்குநரை இறுதிநேரத்தில் தடுத்துவைத்த அமெரிக்காவின் எப் பி ஐ பிரிவு, அமெரிக்காவில் றோவின் செயற்பாடுகள் குறித்துத் தனது கடுமையான கண்டனங்களை 1993 இல் தெரிவித்திருந்தது". "அமெரிக்கா உளவுத்துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தனது உளவாளிகளை 5 மாதங்களாக அமெரிக்காவில் சந்தித்து சதிவேலைகளை முடிக்கிவிட றோவின் உதவி இயக்குநர் முயன்றார் என்றால், இலங்கையில், குறிப்பாக ஈழத்தில் எந்தவகையான நாசகாரச் செயற்பாடுகளை றோ முன்னெடுத்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்வது கடிணமானதாக இருக்கப்போவதில்லை". இது, ஜனவரி மாதம் 13 ஆம் திகதி சிலோன் டெயிலி மிரர் பத்திரிக்கையில் வந்த புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவியிருக்கும் றோ உளவாளிகள் எனும் செய்தியை மீளவும் எனக்கு ஞாபகப் படுத்துகிறது. புலிகளை கீழ்த்தரமாக விமர்சிப்பதையே தொழிலாகச் செய்துவரும் ஜெயராஜ் போன்றவர்கள் , புலிகளின் உளவுத்துறையினை எவ்வளவுதான் மோசமாக விமர்சித்தாலும் பொட்டு அம்மாணும் அவரது உளவாளிகளும் இந்தியாவின் றோ உளவாளிகள் தொடர்பாகச் செய்துவரும் விசாரணைகளும் கண்டுபிடிப்புகளும் உண்மையிலேயே அபாரமானவை. புலிகளின் ஒப்பற்ற தியாகத்தால் ஈட்டப்பெற்ற வெற்றிகளைத் தக்கவைக்க அவரும், அவரது உளவாளிகளும் செய்துவரும் சேவை போற்றுதற்குரியது. ஒரு மாதத்திற்கு முன்னால், கொழும்பிலிருந்து செயற்பட்டு வரும் இந்திய பத்திரிக்கையாளர் ஒருவருக்கு நான் எழுதிய மின்னஞ்சலில் மிகவும் காட்டமான கருத்தொன்றினை முன்வைத்திருந்தேன். "நீங்கள் உங்கள் தூதுவராலயங்களில் செயற்பட்டு வரும் அதிகாரிகள் பற்றி மிகைப்படுத்தப்பட்ட விம்பங்களை உருவாக்குகிறீர்கள். கொழும்பில் இருக்கும் இந்திய பாக்கிஸ்த்தானிய தூதரகங்கள் எப்படி இயங்குகின்றன என்பதுபற்றி எமக்குத் தெரியாது என்று நீங்கள் இன்னமும் நினைக்கிறீர்களா? இந்திய றோவினதும், பாக்கிஸ்த்தானிய ஐ எஸ் ஐ உளவுப்பிரிவினதும் உளவாளிகள் கொழும்பிலிருக்கும் தூதரகங்களில் "அதிகாரிகள்" எனும் போர்வையில் மறைந்திருப்பது ஏன்? உண்மைகள்" என்று கூறப்படும் திரிபுகளை சமைத்துக் கொடுப்பவர்கள் கூட இவர்கள் தானே?" எனது கருத்தினை எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ அந்த "உளவாளிச் செய்தியாளர்" எனக்குப் பதில் எழுதவில்லை என்பது நான் சொல்லத் தேவையில்லை. ஆனாலும், எனது முந்தைய இரு மின்னஞ்சல்களுக்கு அவர் பதில் அனுப்பியிருந்தார். நான் இதை இங்கு எதற்காக முன்வைக்கிறேன் என்றால், கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதரகத்தில் செய்தியாளர்களாகத் தொழிற்படும் பலர் ஒரே சமயத்தில் செய்தியாளர்களாகவும், றோ உளவுப்பிரிவினரின் செய்திகளைக் காவிவந்து உள்ளூரில் தமது செயற்பாட்டாளர்களுக்கு கொடுக்கும் தூதர்களாகவும் செயற்படுகிறார்கள் என்பதைக் கூறவும், இவர்கள் தொடர்பாக நாம் அவதானமாக இருக்கவேண்டும் என்பதை நினைபடுத்தவும்தான்.2 points
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
2 pointsகருணாவின் துரோகத்தின் இந்திய உளவுத்துறை றோவின் பங்கு மூலம் தமிழ்நேசன், ஆக்கம் சச்சி சிறீகாந்தா காலம் சித்திரை 2004 இந்தியாவின் அமைச்சரவை அதிகாரம்பெற்ற புலநாய்வு அமைப்பான றோ மிகப்பலம்வாய்ந்த ஒரு அரச வெளியுறவுத்துறை நிறுவனமாகும். இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு, பலம் மற்றும் அதன் அண்டை நாடுகளுடனான வெளியுறவுக்கொள்கைகள் என்பவற்றின் மீதான அதனது தாக்கம் மிகப் பெரியது. பாகிஸ்த்தானுட்பட பல அயல்நாடுகளில் பல நாசகார, ராஜதந்திரத்திற்கு முரணான செயற்பாடுகளை அது தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. தனது செயற்பாடுகளுக்கான தங்குதடையற்ற ஆதரவினை தொடர்ந்துவரும் இந்திய அரசுகளிடமிருந்து அது பெற்றுவருகிறது. இந்தியப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் றோ அமைப்பின் அனைத்து நடவடிக்கைகளும் இந்தியப் பாராளுமன்றத் திற்கு தெரிவிக்கப்படாமேலேயே செயற்படுத்தப்பட்டு வருகின்றன. புலிகளிடமிருந்து தான் பிரிந்து இயங்கப்போவதாக கருணா கூறிச்சென்று ஏறக்குறைய ஒரு மாதகாலமாகிறது. இந்தியாவின் நாசகார உளவுத்துறை கருணாவின் பின்னால் உண்மையாகவே இருந்திருக்கிறதா? இனிவரும் காலங்களில் எமக்குக் கிடைக்கவிருக்கும் சாட்சிகள் இதனை உண்மையென்றோ அல்லது தவறென்றூ நிரூபிக்கப் போகின்றன என்கிறபோதும், இதுதொடர்பாக உள்ளூர் , சர்வதேச செய்திச் சேவைகளில் வெளிவந்த செய்திகளினூடு எனது பார்வையினை இங்கே பதிகிறேன். முதலாவதாக ஜனவரி மாதம் சிலோன் டெயிலி மிரர் பத்திரிக்கையில் வெளியான "புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் றோ உளவாளிகள்" எனும் தலைப்பில் சிறிநாத் பிரசன்ன ஜயசூரிய எழுதிய ஆக்கத்தினைப் பார்க்கலாம். தை 13 ஆம் திகதி அவர் அக்கட்டுரையினை எழுதிய சில மாதங்களின் பிறகு, பங்குனி 3 ஆம் நாள் கருணா தனது துரோகத்தை வெளிப்படுத்தினார். "வடக்குக் கிழக்கில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிகளுக்குள் இந்திய உளவுத்துறையான றோ உளவாளிகள் நுழைந்திருப்பதாக புலிகளின் புலநாய்வுத்துறை தெரிந்துகொண்டது". "வடக்கிலிருக்கு ராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி எழுதும் அவர், இந்திய உளவாளிகளைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளைப் புலிகள் ஆரம்பித்திருப்பதாக அவர் எழுதுகிறார். அண்மையில் தமிழ்நாட்டு வர்த்தகர் ஒருவரையும், புலிகளின் மேஜர் தரப் போராளி ஒருவரையும் மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் கைதுசெய்திருக்கும் புலிகள் இந்திய உளவுத்துறையினருடனான இவர்களின் தொடர்புபற்றி விசாரித்துவருவதாகத் தெரியவருகிறது. புலிகளின் மேஜர் தரத்தில் இருந்த போராளியொருவர் இந்தியாவின் உளவுப்பிரிவின் உளவாளியாகச் செயற்பட்டு வந்திருக்கிறார் என்பது அறியப்படுகிறது". "இது நடைபெற்று மிகக் குறுகிய காலத்தில் இலங்கை இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றில் அவசர அவசரமாகக் கையெழுத்திடும்பொழுது, வன்னியின் காடுகளுக்குள் இந்திய உளவாளிகளைத் தேடும் புலிகளின் நடவடிக்கை தொடர்கிறது. றோ உளவாளி என்று சந்தேகிக்கப்பட்டு மன்னாரில் புலிகளால் கைதுசெய்யப்பட்டிருக்கும் இந்திய வர்த்தகர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் செல்வந்தர் என்பதும், அவரிடம் பல மீன்பிடி ட்ரோலர்கள் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இலங்கைக்கு வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக வந்திருப்பதாக இவரும் இன்னும் பலரும் உல்லாசப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் எனும் போர்வையில் தமிழர் தாயகப் பகுதிகளில் இறக்கிவிடப்பட்டிருப்பதாக புலிகளின் உளவுத்துறை தலைமைக்கு அறிவித்திருக்கிறது". கருணாவின் துரோகம் எவருமே எதிர்பார்க்காத அதிர்ச்சியாக இருக்குமாக இருந்திருந்தால், ஜயசூரியவினால் இதுதொடர்பான கட்டுரையொன்றினௌஇ 50 நாட்களுக்கு முன்னர் எப்படி அனுமானித்து எழுதமுடிந்தது? 1. ஹிந்து - புரொன்ட்லைன் பத்திரிக்கைகள் பங்குனி 27 ஆம் திகதி வெளிவந்த புரொன்ட்லைன் பத்திரிக்கையில் எட்டுப் பக்க தலைப்புச் செய்தியை அக்குழுமத்தின் வழமையான விற்பன்னர்களான வி எஸ் சம்பந்தனும், டி பி எஸ் ஜெயராஜும் எழுதியிருந்தார்கள். இவ்விருவரும் தமக்குள் போட்டி போட்டு எழுதுதிக் குவித்த ஆயிரக்கணக்கான வார்த்தை ஜாலங்களின் சாரம்சம் இதுதான், அ) பிரச்சினைக்குள் அகப்பட்டுப்போயுள்ள புலிகள் - சம்பந்தன் ஆ) விரும்பப்பட்டவரும், வெறுக்கப்பட்டவரும் - சம்பந்தன் இ) ஒரு தேர்தல் முற்றுகை - சம்பந்தன் ஈ) கிழக்கின் ஆயுததாரி - ஜெயராஜ் உ) கேர்ணல் கருணாவுடன் ஒரு நேர்காணல் - சம்பந்தன் ஊ) புலிகளின் உள்வீட்டுப் பிரச்சினை - ஜெயராஜ் எ) தமிழ்ச்செலவ்னுடன் ஒரு நேர்காணல் - சம்பந்தன் ஏ) புலிகள் எதிர் புலிகள் - ஜெயராஜ் ஆனால், இவை எவற்றிலுமே இந்திய உளவுத்துறை றோ பற்றி இவர்கள் இருவரும் மூச்சுக் கூட விடவில்லை. ஆகவே றோவின் கைங்கரியம் பற்றி நாம் அறிவதற்கு இந்துப் பத்திரிக்கை குழுமத்தின் முழுப்பூசணிக்காயினை சோற்றில் மறைக்கும் இச்செயலை நாம் தண்டிச் செல்வது அவசியமாகிறது. 2. டெக்கான் ஹெரல்ட் பங்குனி 16 இல் டெக்கால் ஹெரல்ட் பத்திரிக்கையில் சுதா ராமச்சந்திரன் சில விடயங்களை மறைவின்றிப் பேசுகிறார். இலங்கையில் தற்போது நடைபெறும் விடயங்கள் தொடர்பான சாதாரண மக்களின் கருத்தினை அது பிரதிபலிக்கிறது. "கருணாவின் துரோகத்தின் பின்னால் வெளிச்சக்திகளான இந்தியாவின் உளவுத்துறை றோவோ அல்லது அமெரிக்கர்களோ இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். சிலவேளை கருணாவை அவமானப்படுத்த இவ்வகையான செய்திகள் பரப்பப்படலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதேவேளை, மிகப் பலம்பொறுந்திய பிரபாகரனை பகிரங்கமாக எதிர்ப்பதற்குக் கருணாவுக்கு நிச்சயமாக இப்படியான வெளிச் சக்திகளின் ஆதரவு இருந்திருக்க வேண்டும். புலிகளைடமிருந்து பிரிந்துசென்று எதிராகச் செயற்பட்ட பலரை பிரபாகரன் அழித்திருக்கிறார். கருணாவுக்கு என்ன நடக்கும் என்பதனை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்" என்று எழுதுகிறார். 3. பயணியர் இந்திய அமைதிப்படையின் மேஜர் ஜெனரலாக 1988 முதல் 1990 வரை பணியாற்றிய அஷோக் மேத்தா என்பவர் பயணியர் பத்திரிக்கையில் எழுதிய 1280 வார்த்தைகள் அடங்கிய குறிப்பில், இந்திய உளவுத்துறையினை மறைமுகமாகச் சாடுவதுடன், இலங்கை உள்வுத்துறையின் கைங்கரியமே இதுவென்று சொல்ல விழைகிறார். "இந்திய உளவுத்துறையும் இலங்கை புலநாய்வுத்துறையும் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ கருணாவை ஊக்குவித்து புலிகளிடமிருந்து பிரித்து வெளியே எடுத்திருக்கலாம் என்கிற பொதுவான நம்பிக்கை நிலவுகிறது. எனக்குத் தெரிந்த மட்டில் புலிகளுடனான தொடர்பினை இந்திய உளவுத்துறையான றோ இந்திய அமைதிப்படை 1990 இல் வெளியேறியதன் பின்னர் முற்றாகத் துண்டித்துக்கொண்டுவிட்டது. ஆனால், புலிகளைப் பலவீனப்படுத்தி, பிளந்திருக்கும் இந்தச் செயற்பாட்டினை எமது புலநாய்வு அமைப்பே செய்திருந்தால் நிச்சயாம் அதனை நாம் பாராட்டியே தீரவேண்டும், ஆனால் அவ்வாறானதொரு தீரச்செயலினை எமது உளவுத்துறை அண்மைக்காலத்தில் செய்திருக்கிறதா என்பதைப் பார்த்தால் அதற்கான சாத்தியங்கள் குறைவென்றே எண்ணுகிறேன். சிலவேளைகளில் இலங்கை அரசாங்கமே இந்தப் பிளவினை திட்டமிட்டு உருவாக்கியிருக்கலாம்" என்று கூறுகிறார். 1990 ஆம் ஆண்டு இந்திய ராணுவம் வெளியேறியதன் பின்னர் புலிகளுடனான தொடர்புகளை றோ முற்றாக அறுத்துவிட்டதெனும் மேத்தாவின் கருத்து ஓரளவிற்கு உண்மையாக இருக்கலாம். ஆனால், இங்கே திட்டமிட்டு மறைக்கப்பட்ட மற்றொரு விடயம் தான் புலிகளுக்கெதிரான அமைப்புக்களோடடு றோ மிக நெருக்கமான தொடர்புகளை இன்றுவரை பேணிவருவதென்பது. இந்த அமைப்புக்களும், சக்திகளும் தமிழரகாவோ, சிங்களவராகவோ அல்லது முஸ்லீம்களாகவோ இருந்தால்க் கூட, புலிகளை அழிக்கும் தனது இலட்சியத்திற்கான கருவிகளாக அவர்களைப் பாவித்து மிக நெருக்கமான தொடர்புகளை அது உருவாக்கிப் பேணியே வருகிறது. இதற்கான காரணம் என்ன? 1987 இல் இருந்து ராணுவ ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பிரபாகரனைப் பிந்தொடர்ந்து, தனது நாசகார நடவடிக்கைகள் மூலம் புலிகளைப் பலவீனமாக்கிப், பிரித்து இறுதியில் முற்றாக அழிப்பதை இன்றுவரை தனது தலையாய இலக்காகக் கொண்டிருப்பதே அதன் காரணம்!2 points
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தரைப்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" ----------------------------------------------------------------------------------------- "மீட்பர்களாய் நடந்தார்கள் புலிவீரர்கள் மீளமுடியாது பகை தோற்றோடினார்கள்" ----------------------------------------------------------------------------------------- இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:1 point
-
மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
1 pointஇயற்கை வளம் என்பது பாலைவனம் தான். கச்சா எண்ணெய் இந்தப்பகுதியில் இல்லை, அல்லது தோண்டியெடுக்க முயற்சிக்கவில்லை. கச்சா எண்ணை வளம் துபாய்க்கு தெற்கே 140 கி.மீ தூரத்திலிருக்கும் அபுதாபி மாநிலத்தில் தான் மிக அதிகம். துபாயின் வருமானம், சுற்றுலா மற்றும் வியாபாரம் சார்ந்த பொருளாதாரம் மட்டுமே. தன்னிடம் இருக்கும் வளங்களைக் கொண்டு எப்படி புது புது விடயங்களை செய்யலாம் என சிந்திப்பது. அவற்றை மிக கவர்ச்சியாக, பிரமிப்புடன் உலகிற்கு அறிமுகம் செய்வதில் வல்லவர்கள். இதற்கென உலகத்தின் திறன் வாய்ந்த ஆலோசனை சொல்லும் நிறுவனங்களை (Consultants) அமர்த்தியுள்ளார்கள். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த தொலைநோக்கு பார்வை, எந்த வேலையிலும் நேர்த்தி, எதை தொட்டால் நாட்டுக்கு செல்வம் பெருகும் என்ற திட்டமிடல்.. தாரக மந்திரம்,உங்கள் பணத்தை கொண்டு வாருங்கள், வசதிகளை ஒழுக்கமுடன் அனுபவியுங்கள்.. இந்தியாவில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல், லஞ்சம் இங்கே இல்லை. குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள்.. இங்கே மண்ணின் மைந்தர்கள்(Natives) மக்கள் தொகை மிகக்குறைவு..பெரும்பாலும் வெளிநாட்டவரே.. 150க்கும் மேற்பட்ட வகை வகையான வெளிநாட்டவர்கள் வாழும் நாடு.1 point
-
மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
1 pointதெரியாமல் ஒரு 'ஃப்லோ'வில் 'பொண்ணு' என சொல்லிவிட்டேன். அது அம்மா எனும் அம்மணி..🤣1 point
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointநான் "ஒரு பக்கம் தாண்டாது" என திரி மூடப் பட்டு விடும் என்ற அர்த்தத்தில் சொன்னேன். ருல்பென் ஒரு புத்தகத்தை (அதுவும் உண்மையாக சிலர் கண்ட அனுபவங்கள் அல்லவா, எமக்கு உவப்பாக இருக்கா விட்டாலும்?) இணைத்த போது அது அகற்றப் பட்டதல்லவா? முன் அனுபவம்!1 point
-
மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
1 point3 மில்லியன் பவுண்ஸா. மாடியோடு மீனாவையும் சேர்த்து விலை சொல்கிறார்கள் போல் உள்ளதே 🤣.1 point
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointநயவஞ்சகத்திற்கான அரசியல்ப் பரிசுக்காக ஆனந்தசங்கரியை பிரேரித்த சிங்கள இனவாதம் தமிழினத்திற்கெதிராக எதிரியுடன் ஒத்துழைப்பவர்களையும், காட்டிக்கொடுப்பவர்களையும் தமிழினத்தின் மீட்பர்களாக சிங்களப் பேரினவாதத்தின் ஊதுகுழல்கள் எப்படி முன்னிலைப்படுத்திவருகின்றன என்பது தொடர்பாக ஒருவர் சிறந்த கற்கைநெறியை ஆரம்பித்தல் அவசியம் என்று கருதுகிறேன். கடந்த மாதம் பரீஸ் நகரில் யுனெஸ்கோ அமைப்பின் 2006 ஆம் ஆண்டிற்கான மடன்ஜீட் சின் பரிசு மூத்த அரசியல்வாதி ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனது வாழ்நாளில் ஈழத்தமிழ் இனத்திற்காக எந்தவொரு நலனையும் செய்தறியாத, சமூக அக்கறை மற்றும் விழிப்புணர்வு சார்ந்து தனது சொந்த மொழியில்க் கூட ஒரு நூலை எழுதத் தோன்றாத ஒரு முழுப் பச்சோந்தி அரசியல்வாதியான ஆனந்தசங்கரிக்கு மனிதாபிமானத்திற்கான உலகப் பரிசொன்று வழங்கப்பட்டுள்ளதென்பது மொத்த ஈழத் தமிழினத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. பழுத்த, பச்சோந்தி அரசியல்வாதியான சங்கரியை இந்த மனிதாபிமான உலகப் பரிசுக்காகப் பரிந்துரை செய்திருப்பவர் தொடர்பான விபரங்களைத் தேடும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. இனங்களுக்கிடையேயான சகிப்புத்தன்மை, வன்முறைக்கெதிரான செயற்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்டுவருகின்ற இப்பரிசினை பிரேரித்தவரின் கல்வித்தகமைகள், அரசியல் பின்புலம், அவரதும், அவர் சார்ந்த அமைப்பினதும் தகமை மற்றும் கெளரவம் பற்றி அறியும் நோக்குடன் யுனெஸ்கோ அமைப்பின் மடன்ஜீட் சின் பரிசு க்குப் பொறுப்பான அலுவலகரை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டேன். எனது மின்னஞ்சலுக்குப் பதில் அனுப்பிய திரு செர்கேய் லஸரேவ் அவர்களின் விளக்கம் எனக்கு வியப்பினை அளிக்கவில்லை. அக்கடிதத்திலிருந்து..... "திருவாளர் அவர்களுக்கு", "திரு ஆனந்தசங்கரி அவர்கள், அவரின் நாட்டு அதிகாரிகளால், இலங்கை தேசிய யுனெஸ்கோ கமிஷனினால் இப்பரிசிற்காக பிரேரிக்கப்பட்டிருக்கிறார். இப்பரிசிற்காக பிரேரிக்கப்பட்ட ஏனையவர்கள் தொடர்பான தகவல்களை என்னால் வெளியிட முடியாது". இப்போது இது தெளிவாகப் புரிகிறது. குறிப்பாகச் சொல்லாதபோதும்கூட, "அவரின் நாட்டு அதிகாரிகள்" என்று கூறுவதன்மூலம் இலங்கையின் அரசியல் தலைமையே இதன்பின்னால் நின்றிருக்கிறது என்பது புலனாகிவிடுகிறது. ஆனந்தசங்கரியை இப்பரிசிற்காக பரிந்துரைத்த "யுனெஸ்கோ தேசியக் கமிஷன்" எனும் அமைப்பு இலங்கை கல்வியமைச்சின் கீழ் செயற்படும் ஒரு அமைப்பென்பதும் அவ்வமைச்சின் தற்போதைய தலைவர் பற்றிய விடயங்களும் வெளிச்சமாகியிருக்கிறது. தலைவர் : சுசில் பிரேமஜயந்த உதவித் தலைவர் : ஆரியரத்ண ஹேவகே பொதுச் செயலாளர் : ஆர் பி பெரேரா உதவிப் பொதுச் செயலாளர் : பிரசன்ன சண்டித்1 point
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointஒரு துரோகத்தின் நாட்காட்டி.. மறதி அதிகமான எமது சமூகத்தில் இரண்டு வருடங்கள் கடந்தாலே அனைத்து வகையான எதிரிகளும் எமக்கு என்னவெல்லாம் செய்தார்கள் என்பது 50% மறந்து போகிறது. அதுவே ஐந்து வருடங்களானால் நடந்த சம்பவங்களை ஒரு குத்து மதிப்பாக, ‘நினைவிருக்கிறது, அப்படி இருக்கும் எண்டு நினைக்கிறேன்’ அப்படித்தான் நடந்திருக்கோணும் எண்டு ஞாபகம்’ என்றே வரலாறுகளை நினைவில் வைக்கிறோம், அதற்கு மேலான காலங்களில் நமக்கு நடந்தவற்றை கூகுளில் தேடி பார்க்கிறோம். ரஞ்சித்தின் இந்த தலைப்பின் கீழான தொடர் பதிவுகள் யாழில் ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஒன்று.1 point
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointஎதிரியுடன் ஒத்துழைப்பவர்களும், இனத்தைக் காட்டிக்கொடுப்பவர்களும் ஆக்கம் : சச்சி சிறிகாந்தா காலம் : 6, மார்கழி 2006 எதிரியுடன் ஒத்துழைப்பவர்கள் என்பதும் இனத்தைக் காட்டிக்கொடுப்பவர்கள் என்பதும் தமிழில் உள்ள மிகவும் அருவருக்கத்தக்க இரு சொற்தொடர்கள். இந்த துரோகச் செயல்களைச் செய்பவர்களின் செயற்பாடுகளைக்கொண்டு இச்சொற்றொடர்கள் இவை ஒருமித்தும், தனித்தனியாகவும் அம்மக்கள் கூட்டத்தால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. என்னைப்பொறுத்தவரையில் இச்சொற்றொடர்கள் இரண்டிற்குமிடையே சிறு வேறுபாடு இருப்பதாக உணர்கிறேன். எதிரியுடன் ஒத்துழைப்பவர்கள் குறிப்பிடத்தக்களவு வெளிப்படையாக இயங்குபவர்கள். அரசியல் வெளியில் தமது அரசியல் ஆதாயத்திற்காகவும், தம்மைப் பிரபலப்படுத்தவும் இனத்தின் எதிரிகளோடு ஒத்துழைப்பவர்கள். பிரபலமாவதற்காகவும் இதனைச் செய்பவர்கள். ஆனால், இனத்தைக் காட்டிக்கொடுப்பவர்கள் மிகவும் ரகசியமாக , ராணுவ மற்றும் உளவு வெளிகளில் செயற்பட்டு இனத்திற்கெதிராக எதிரிக்குத் தகவல்கள் வழங்குபவர்கள் அல்லது இனத்தின் காவலர்களைக் காட்டிக்கொடுப்பவர்கள். ஆனாலும், இந்த இரு பகுதியினருக்குமிடையில் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது. துணை ராணுவக் குழுக்களின் தலைவர்களாகவும், அதேவேளை அரசுக்கு ஆதரவான அரசியலைச் செய்பவர்களாகவும் இதுவரை செயற்படும் டக்கிளஸ் தேவானந்தா, தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் போன்றவர்களை நாம் நோக்கினால் இவர்கள் அனைவருக்கும் இந்த அருவருப்பான சொற்றொடர்கள் அச்சொட்டாகப் பொருந்திப் போகின்றன. புலிகள் இயக்கத்திலிருந்து விரட்டப்பட்ட கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் முன்னர் அரச ராணுவத்திற்கான உளவாளியாகவும் பின்னர் அதே அரசின் அணுசரணையோடு அரசியலில் பிரவேசிக்கும் கைங்கரியத்திலும் ஈடுபட்டிருக்கிறார். தனது முகத்தினை வெளிப்படையாகக் காட்டமறுக்கும் கருணா ஏதோ மறைவிடம் ஒன்றில் இருந்தபடியே தனது "ஒத்துழைப்பு அரசியலை" செய்துவருகிறார். புலிகளையும், அவர்களின் ஆதவாளர்களையும் காட்டிக்கொடுக்க இந்திய ராணுவத்தினருடன் சேர்ந்து செயற்படும் ஒரு தமிழர் - யாழ்ப்பாணம் 1987 அமெரிக்க விடுதலைப் போராகட்டும், பிரெஞ்சுப் புரட்சியாகட்டும், சீனக் கம்மியூனிசப் புரட்சியாகட்டும், கியூப விடுதலைப் போராகட்டும், வியட்னாமிய விடுதலைப் போராகட்டும், இவை அனைத்துமே அந்த இனங்களைக் காட்டிக்கொடுத்த, எதிரியுடன் சேர்ந்து இனத்திற்கெதிராகச் செயற்பட்ட பலரைக் கண்டுதான் வந்திருக்கின்றன. நியாயப்படுத்தமுடியாத காரணங்களுக்காக தமது இனத்தினை வஞ்சித்து எதிரியுடன் ஒத்துழைத்து, காட்டிக்கொடுத்த இந்தக் கயவர்களின் அஸ்த்தமனம் என்பது எவ்வளவு கொடூரமானது என்பதை சரித்திரம் தொடர்ச்சியாக எமக்கு நினைவூட்டியே வருகிறது. ஆனால், சரித்திரம் சொல்லிவரும் அனைத்துப் பாடங்களுக்கு மத்தியிலும் தமிழினத்திலிருந்து தொடர்ச்சியாக இனத்தைக் காட்டிக்கொடுப்பவர்களும், எதிரியுடன் ஒத்துழைப்பவர்களும் எழுந்துவந்துகொண்டுதான் இருக்கிறார்கள். உலக சரித்திரத்தில் கண்டவர்போல எமதினமும் காலத்திற்குக் காலம் பல துரோகிகளை இனக்கண்டு அவர்களுக்கான சரியான இடத்தைக் கொடுத்துத்தான் வந்திருக்கிறது. 1970 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரையான காலப்பகுதியில் ஒவ்வொரு தசாப்த்தத்திலும் பல இனத்துரோகிகளை, காட்டிக்கொடுப்பவர்களை, எதிரியுடன் ஒத்துழைப்பவர்களை நாம் கண்டுதான் வந்திருக்கிறோம். 1970 களின் குமாரசூரியர்களும் துரையப்பாக்களும், 1980 களின் ராஜதுரைகளும் வரதராஜப் பெருமாள்களும், 1990 களினதும் 2000 களினதும் டக்கிளஸ் தேவாநந்தாக்களும், கதிர்காமர்களும், 2000 இற்குப் பின்னரான கருணாக்களும் ஆனந்தசங்கரிகளும் என்று இனத்தைக் காட்டிக்கொடுத்து எதிரியுடன் ஒத்துழைத்த மிகப்பிரபலமான தமிழர்கள் எம்மிடையே வலம்வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் .1 point
-
களைத்த மனசு களிப்புற ......!
1 point
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாடல் - கண்ணே பாப்பா என் படம் - கண்ணே பாப்பா பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகர் - சுசீலா1 point
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 point"இல்லை, கருணா இதற்குப் பின்னர் மட்டக்களப்பில், முக்கியமாகக் கிரானில் தென்படவில்லை. வாழைச்சேனை, கல்க்குடா, கிரான் ஆகிய பகுதிகளில் புலிகளில் பலம் அதிகரித்துக் காணப்படுகிறது. அதிலும் கிரான் என்பது புலிகளின் பலமான பகுதியென்று நம்பப்படுகிறது. கருணா புலிகளின் தளபதியாகவிருந்த காலத்தில் கிரானின் மைந்தன் என்பதனால் அவர் இப்பகுதியில் பலராலும் மதிக்கப்பட்டிருந்தார். புலிகளினது இலட்சியத்திற்கும், தமிழர்களின் விடுதலைக்கு புலிகளின் சேவைக்காகவும் கிடைத்த ஆதரவே கருணாவையும் அவர்கள் ஆதரிக்கும் நிலைக்கு இட்டுச் சென்றிருந்தது. தனிமனிதனாக, புலிகளின் தொடர்பில்லாத கருணாவுக்கு மக்கள் ஆதரவென்பது ஒருபோதுமே இருக்கப்போவதில்லை. புலிகளுக்கும் தமிழினத்திற்கும் துரோகமிழைத்து அவர் வெளியேறியபின் கிரானில்க் கூட அவருக்கு ஆதரவென்பது இருக்கப்போவதில்லையென்பது திண்ணம்". "மட்டக்களப்பு நகரப்பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் முற்றாக வந்ததையடுத்து, புலிகளுக்கெதிரான துணை ராணுவக்குழுக்களான புளொட், ஈ பி ஆர் எல் எப், ராஸீக் குழு மற்றும் ஈ என் டி எல் எப் ஆகிய குழுக்கள் மட்டக்களப்பு நகரின் புளியந்தீவுப் பகுதியில் தமது முகாம்களை நிறுவியுள்ளன. நீரால் சூழப்பட்ட தீவுப்பகுதியான மட்டக்களப்பு நகரை பெருநிலத்துடன் இணைக்கும் மூன்று முக்கிய பாலங்களில் ராணுவம் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது. அத்துடன் இத்துணைராணுவக் குழுக்களின் குடும்ம்பங்களையும் நகரினுள் அழைத்துவந்திருக்கும் ராணுவம் அவர்களுக்கான பாதுகாப்பினையும் வழங்கிவருகிறது. புலிகளுக்கான வெளிப்படையான ஆதரவினை இதுவரை வழங்கிவந்த பொதுமக்கள் இக்குழுக்களின் பிரசன்னத்தினையடுத்து தற்போது மெளனமாகிவிட்டதுபோலத் தெரிகிறது. இத்துணைராணுவக் குழுக்களின் பிரசன்னம் மட்டக்களப்பு நகருக்கு வெளியே காணக்கிடைப்பதில்லையென்று மக்கள் கூறுகிறார்கள்". "ஆகவே, வெளியிலிருந்து நகருக்குள் வரும் ஒருவருக்கு இத்துணை ராணுவக் குழுக்களின் அதிகரித்த பிரசன்னம் ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். மேலும், புலிகளுக்கெதிரான குழுக்களின் தலைவனாக கருணாவே பார்க்கப்படுவதால், நகருக்கு வரும் ஒருவர் கருணாவே நகரினைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதாக எண்ணுவதற்குச் சாத்தியம் இருக்கிறது. இவ்வாறு வெளியிலிருந்து வருவோர், நகரில் இருக்கும் நிலையே மட்டக்களப்பின் ஏனைய பகுதிகளிலும், அம்பாறையிலும் இருக்கலாம் என்று தவறாகக் கணிக்கிறார்கள். மட்டக்களப்பு நகரை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இவர்கள் வெளியிடும் புனைவுகள் மிகவும் தவறான செய்தியினையே வெளிக்காவிச் செல்கின்றன". "நான் அங்கு தங்கியிருந்த இரு மாத காலத்தில் மட்டக்களப்பின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து பல பொதுமக்களையும், நண்பர்களையும் சந்தித்து உரையாடினேன். அரச உத்தியோகத்தர்கள், பண்ணையாளர்கள், விறகு வியாபாரம் மசெய்வோர் என்று பலதரப்பட்டவர்களுடனும் உரையாடியபோது எனக்குக் கிடைத்த செய்தி ஒன்றுதான், அதாவது இவர்களுள் எவருமே கருணாவின் செயலினை சரியென்று ஏற்றுக்கொள்ளவுமில்லை, அவரை ஆதரிக்கவுமில்லை". "மேலும், கிழக்கு மக்களின் நலனுக்காகவே புலிகளை விட்டுப் பிரிந்து செல்கிறேன் என்று கருணா கூறிச் சென்றபின்னர் இந்த மக்களுக்காக கருணா இதுவரையில் செய்தது என்ன? தமிழர்களுக்குத் துரோகமிழைத்து, தமிழர்களை 2002 வரை வேட்டையாடிய கொடிய ராணுவத்துடனும், விசேட அதிரடிப்படையுடனும் கருணா இன்று கொஞ்சிக் குலாவுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். புலிகளின் முன்னாள் தளபதியாகவிருந்த கருணா இனிமேல் கிழக்கிலோ அல்லது எந்தவொரு நிலத்திலோ மக்கள் முன் வெளிப்படையாக வரும் யோக்கியதையினை இழந்துவிட்டதாகவே அவர்கள் நினைக்கிறார்கள். ஆக, ஜெயராஜ் மற்றும் பீ ராமன் போன்ற கற்பனை உலகில் வாழும் புனைகதையாளர்களின் காதல் நாவல்களில் உலாவருவதுடன் கருணாவின் பிரசன்னம் முடிந்துவிடுகிறது". "மட்டக்களப்பில், லேக் வீதியில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் அலுவலகமும், அதன் மிக அருகே ராஸீக் குழுவின் முகாமும் அமைக்கப்பட்டிருக்கிறது. கண்காணிப்புக் குழுவினரின் அலுவலக வாயிலின் ஒரு பக்கத்தில் ராஸீக் குழுவினரின் காவலரண் கட்டப்பட்டிருக்கிறது. பதின்ம வயதுச் சிறுவர்கள் கைகளில் தானியங்கித்துப்பாக்கிகளை ஏந்தியபடி மரக்குற்றிகளுக்குப் பின்னால் அமர்ந்திருக்க அவர்களைக் கடந்து கண்காணிப்புக் குழுவினர் சென்று வருகின்றனர். முன்னாள் ஈ பி ஆர் எல் எப் பாராளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவுக்குச் சொந்தமான காணியிலேயே ராஸீக் குழு முகாமிட்டிருப்பதாகத் தெரிகிறது". "ஒருநாள் காலை கருணாவின் மாமனார் குமரகுருவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. முன்னர் அவர் வாழைச்சேனை காகித ஆலையில் பாரம் நிறுக்கும் பகுதியில் வேலைபார்த்து வந்திருந்தார். 1980 களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான ஜாதிக சேவக சங்கமய எனும் அமைப்பின் தலைவராக அவர் இருந்தார். நான் அவரை காலை 6 மணிக்குச் சந்தித்தேன். அடிடாஸ் உடற்பயிற்சி ஆடையுடன் அவர் காலை நடைப்பயிற்சிக்காகச் சென்றுகொண்டிருந்தார். மிகக் கவனமாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பாவித்து அவரதும், அவர் குடும்பத்தினதும் சுகம் பற்றி விசாரித்துக்கொண்டேன். கருணா பற்றி அவரிடம் எதையுமே கேட்கும் தேவை எனக்கு இருக்கவில்லை". "முடிவாக, என்னைப்பொறுத்தவரை கருணா என்பவர் முகமற்ற நிழலாகவே மட்டக்களப்பில் இருக்கிறார், பன்றிகள் பறக்கும் புனைவுகளில் கதாநாயகனாக வலம் வருவதைத்தவிர அவரை அங்கே நான் காணவில்லை".1 point
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 point"இது இவ்வாறிருக்க, ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ராணுவ புலநாய்வுத்துறையின் இயக்குனர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவை குறுகிய கால நடவடிக்கை ஒன்றிற்காக வெளிநாடொன்றிற்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. ராணுவ புலநாய்வுத்துறை அதிகாரி லெப்ட். கேணல் துவான் நிஸாம் முத்தலிப்பைக் கொல்வதற்கு முன்னர், கபில ஹெந்தவிதாரணவையே புலிகள் இலக்குவைத்திருந்தார்கள் என்று ராணுவத்திற்குத் தகவல் வந்ததாலேயே அவரை வெளிநாடொன்றிற்கு அவசர அவசரமாக அனுப்பிவைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கபில ஹெந்தவிதாரணவைத் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து வந்த புலிகளின் புலநாய்வுத்துறை அவர் ஞாயிற்றுக்கிழமைகளில் அடிக்கடி வரும் சந்தைப்பகுதியொன்றில் வைத்துத் தாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததாக ராணுவம் அறிந்துகொண்டது. சுதாரித்துக்கொண்ட அரசாங்கம், அவரைக் கொல்ல புலிகள் தருணம் பார்த்திருந்த வாரமே வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்திருப்பதாகத் தெரிகிறது. முன்னாள் ராணுவ புலநாய்வுத்துறை இயக்குநனரான கபில ஹெந்தவிதாரண கூட்டுப்படைத் தலைமையகத்திலேயே பணியாற்றிவந்தார். அவரது புதிய பதவியான ராணுவப் புலநாய்வுத்துறையின் நிர்வாக செயலாளர் எனும் பதவி அவர் மீண்டும் இலங்கை திரும்பும்வரை செயலற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை இப்பதவிக்கான தற்காலிக அதிகாரியாக உள்நாட்டு புலநாய்வுத்துறை இயக்குநர் சூல செனிவிரட்ன நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் தெரியவருகிறது. அதேவேளை, ஹெந்தவிதாரணவை ராணுவ தலைமைக் காரியாலயத்திற்கு மாற்றும் உத்தரவைப் பிறப்பித்த சந்திரிக்கா, அவரை பணியிறக்கம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக, கிழக்கில் செயற்பட்டுவரும் சாதாரண ராணுவப் புலநாய்வுத்துறையினர் மட்டுமல்லாமல், அதிகாரிகளையும் புலிகளின் புலநாய்வுத்துறை பிந்தொடரத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது". அத்தாஸ் மேலும் கூறுகையில், அரச ராணுவ புலநாய்வுத்துறையினருக்கெதிரான புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் அரச புலநாய்வுத்துறை பின்னடைவுகளைக் கண்டுவருவதாகத் தெரிகிறது. "திருகோணமலை மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ராணுவத்தின் 22 ஆவது டிவிசனில் இயங்கிவரும் ராணுவப் புல்நாய்வுத்துறை அதிகாரியை உடனடியாக கொழும்பு திரும்பும்படி கட்டளையிடப்பட்டிருக்கிறது. இவ்வாரம் ராணுவத்தின் 22 ஆவது டிவிஷன் தளபதியான மேஜர் ஜெனரல் சுமித் பாலசூரியவைச் சந்தித்த சந்திரிக்கா திருகோணமலைப் பகுதியின் பாதுகாப்பு நிலைமைகள் பற்றி கேட்டு அறிந்துகொண்டார். முப்படைகளின் தளபதி எனும் அதிகாரத்தினைப் பாவித்து சந்திரிக்கா எடுத்துவரும் பல நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது". "சண்டே டைம்ஸ் பத்திரிக்கைக்குக் கிடைத்த நம்பகமான செய்திகளின்படி, திருகோண்மலையில் கடற்புலித் தளபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் யாரென்பதுபற்றிய விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சந்திரிக்கா கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இக்கொலையின் பின்னால் மறைகரம் ஒன்று இருக்கலாம் என்றும், சமாதானப் பேச்சுவார்த்தைகளைக் குழப்பும் வகையில் கிழக்கில் இடம்பெற்றுவரும் புலிகளின் அரசியல்ப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் மீதான கிர்ணேட் தாக்குதல்களுக்கும் இக்குழுவே காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது". "பல உயர் ராணுவ அதிகாரிகள் தமக்குக் கீழான அதிகாரிகள் மற்றும் வீரர்களின் செயற்பாடுகள் குறித்து தாம் எதுவும் அறிந்திருக்கவில்லை என்று தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. தெற்கில் வெளிவரும் சில சிங்களப் பத்திரிக்கைகள் ராணுவத்தில் இருக்கும் முன்னாள் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்களே கிழக்கில் சமாதானத்தைச் சீர்குலைக்கும் காரியங்களில் ஈடுபடுவதாக எழுதுகின்றன". முடிவாக, மட்டக்களப்பில் பன்றிகள் பறப்பதாகாச் சத்தியம் செய்யும் ஜெயராஜின் புனைவுகளை இக்பால் அத்தாஸ் தவறென்று நிரூபித்திருக்கிறார்.1 point
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதிருகோணமலையில் கடற்புலிகளின் தளபதி திக்கத்தை மறைந்திருந்து கொன்றது கருணாவே - ராணுவம் ஒளித்துப் பிடித்து விளையாடுவதில் கெயராஜ் ஒரு அதி திறமைசாலி. அவர் தனது பத்திரிகா தர்மத்தை சென்னையின் உருமறைப்புச் செய்து செய்திகாவும் "ஹிந்து" நாளிதழ் குழுமத்தினரிடமிருந்து கற்றதனால் தான் எழுதும் விடயங்கள் தொடர்பான ஆதாரங்களையோ அல்லது தகவல் தரும் நபர்களையோ ஒருபோது கூறுவதேயில்லை. அவரைப்பொறுத்தவரை தனக்குத் தகவல்களை ரகசியமாக வழங்கும் ஒருவர் இருவரையல்ல, பலரைக் காக்கவேண்டிய தேவையிருக்கிறது. மேலே அவர் எழுதிய பந்தியின் இறுதிப் பகுதியினை மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள், புரியும். "கருணாவுக்கு குறைந்தது ஒரு நாட்டின் வெளியகப் புலநாய்வுத்துறையாவது உதவிசெய்துவருகிறது........." இதை ஏதோ பெரிய விடயம்போல ஜெயராஜ் எழுதுவது தெரிகிறது. ஆனால், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, திருகோணமலை என்று எங்கு சென்று தமிழ்ச் சிறுவர்களைக் கேட்டால்க் கூட கருணாவின் பின்னால் இருப்பது இந்தியாவின் வெளிய புலநாய்வுத்துறையான றோ என்று தயங்காமல் கூறிவிடுவார்கள். கருணா இலங்கைக்கும் தென்கிழக்காசிய நாடொன்றிற்கும் இடையே தனது குடும்பத்தைப் பார்ப்பதற்காக அடிக்கடி போய்வருகிறார் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். மட்டக்களப்பிலிருக்கும் எனது நண்பர் ஒருவர் கூறியதன்படி அவர் கடந்த ஆனி, ஆடி ஆகிய மாதங்களில் மட்டக்களப்பில் தங்கியிருந்ததாகத் தெரியவருகிறது. கிழக்கில் நடந்துவரும் நிகழ்வுகள் குறித்த எனது நண்பரின் சில தகவல்களை இங்கே இணைக்கிறேன். பாதுகாப்புத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸின் கருத்து முதலில், கொழும்பிலிருந்து எழுதும் இக்பால் அத்தாஸின் ஆய்விலிருந்து ஆரம்பிக்கலாம். றோவின் தகவல்களைக்கொண்டு கட்டுரைகள் புனையும் ஜெயராஜின் பந்திகளிலிருந்து இது சற்று வித்தியாசமானது. அண்மையில் கொல்லப்பட்ட கடற்புலிகளின் தளபதி திக்கம் மற்றும் அவரது சகாக்கள் தொடர்பான செய்தியிலிருந்து ஆரம்பிக்கலாம். இக்பால் அத்தாஸின் கருத்துப்படி, "தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ராணுவத்தின் முக்கிய அதிகாரியொருவர் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்குத் தகவல் தருகையில் திருகோணமலை செல்வனாயகபுரம் பகுதியில் கடற்புலிகள் தளபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தமது ராணுவமோ அல்லது புலநாய்வுத்துறையோ ஈடுபட்டிருக்கவில்லை என்பதை உறுதியாகக் கூறமுடியும் என்று கூறினார். அதேவேளை இத்தாக்குதல் கருணா குழுவினராலேயே நடத்தப்பட்டிருக்கலாம் என்பதை தாம் சந்தேகிப்பதாகக் கூறிய அவர் , கருணாவின் பல தோழர்கள் விலகிவிட்ட நிலையிலும், ஆயுதப் பற்றாகுறைக்கு மத்தியிலும் அவர் இத்தாக்குதலை நடத்தியிருப்பது சாத்தியமே என்றும் கூறினார். ஆனால், தமது தளபதியொருவர் மீதான கருணாவின் தாக்குதலை புலிகளும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிய அவர், அது கருணாவுக்கான விளம்பரத்தைத் தேடிக் கொடுத்துவிடும் என்றும் கூறுகிறார்". மேலும், ஜெயராஜின் பன்றிகள் பறக்கும் கதையுடன் மாறுபடும் இக்பால் அத்தாஸ், தமது தளபதி திக்கத்தின் இழப்பினை புலிகள் எவ்வாறு சரிசெய்தார்கள் என்பது தொடர்பான ராணுவத்தின் பார்வையினை எழுதுகிறார். இது நான் முன்னர் எழுதிய பிரபாகரன் எனும் நிகழ்வு எனும் கட்டுரையின்படி, புலிகளின் தலைவர் தனது தளபதி ஒருவரின் மறைவுக்குப் பின்னர் எடுத்த நடவடிக்கை பற்றி அத்தாஸின் கருத்தோடு ஒத்துப்போகிறது. "கிழக்கில் இயங்கிவரும் அனைத்து ராணுவப் புலநாய்வுச் செயற்பாட்டாளர்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு பிரபாகரன் கட்டளையிட்டிருக்கிறார். இதனால், கிழக்கில் செயற்பட்டுவரும் ராணுவப் புலநாய்வுத்துறையினரின் பல முக்கிய செயற்பாட்டாளர்களின் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தி, முகாம்களுக்குள் இருக்குமாறு அரசு பணித்திருக்கிறது. அத்துடன், தமக்குத் தகவல் வழங்கும் கருணா குழு உறுப்பினர்கள் அல்லது பணத்திற்காக தகவல் வழங்குவோரைச் சந்திக்க வெளியே செல்வதென்றால், புலநாய்வுத்தளபதிகளிடமிருந்து விசேட அனுமதி பெற்றபின்னரே அவர்கள் வெளியில் செல்லமுடியும் என்றும் அறிவுருத்தப்பட்டிருக்கிறார்கள்".1 point
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointமட்டக்களப்பில் பன்றிகள் கூடப் பறக்குமாம் - ஜெயராஜின் தொடர் புனைவுகள் இணையம் : தமிழ்நேஷன் ஆங்கில மூலம் : சச்சி சிறிகாந்தா காலம் : 28, ஆடி2005 இல்லவே இல்லை, பன்றிகள் பறக்கமுடியா உயிரினங்கள் எனும் இயற்கை நியதிக்கு அப்பாற்பட்ட கண்டுபிடிப்பொன்றை நான் இங்கு மேற்கொள்ளவில்லை. சண்டே லீடரில் ஊடக வியாபாரத்திற்கான புரட்டுக்களைப் புனையும் டி பி எஸ் ஜெயராஜின் ஆடி, 24 2005 இன் இன்னொரு புனவுதொடர்பான எனது கருத்தையே அவ்வாறு எழுதினேன். ஜெயராஜின் புனைவுகளின் பிரகாரம் மட்டக்களப்பில் பன்றிகள் பறக்கின்றன என்றுதான் ஒருவருக்கு எண்ணத் தோன்றும். அவர் அப்பன்றிகளை தான் வசிக்கும் கனடா தேசத்திலிருந்து மிகத் தெளிவாகப் பார்க்கிறார். அவர் அண்மையில் புனைந்துதள்ளிய புரட்டுக்களுக்குப் பின்வருமாறு தலைப்பிட்டுத் தொடர்கிறார், "புலிகளுக்கு அவர்களின் பாணியிலியே கசப்பான பாடம் படிப்பிக்கப்பட்டு வருகிறது". ஜெயராஜின் புனைவுகளை இதுவரை படிக்காதவர்களின் வசதிக்காக அவரது புனைவின் முதல் 214 வார்த்தைகளை நான் இங்கே பதிவிடுகிறேன். "பல வருடங்களில் முதல்த் தடவையாக புலிகள் மிரட்டப்பட்டு, பயந்து ஒடுங்கி முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.இவ்வளவுகாலமும் தமிழ் இனத்தைத் தனது பயங்கரவாத நடவடிக்கைகளால் அச்சுருத்திக் கட்டுப்படுத்தி வைத்திருந்த புலிகள் இயக்கத்திற்கு அவர்களின் பாணியிலேயே தண்டனை வழங்கப்பட்டு வருகிறது". "வழமைக்கு மாறாக, புலிகளால் அடக்கப்பட்டு தடுக்கப்பட்டிருந்த ஏனைய தமிழ் ராணுவ அமைப்புக்களை ஒன்றுதிரட்டியுள்ள அரசும் ராணுவப் புலநாய்வுத்துறையும் அவர்களைக் கொண்டே புலிகளுக்கு சரியான தண்டனையினை வழங்கத் தொடங்கியிருக்கிறது. வழமைபோல புலிகளால் இதனை ஜீரணிக்க முடியவில்லை". "புலிகளாலும், தமது சொந்த நலன்களுக்காக புலிகளை ஆதரிப்பவர்களாலும் கருணாவின் பிரசன்னம் வேண்டுமென்றே தட்டிக் கழிக்கப்பட்டாலும் கூட, அவர் கிழக்கில் விஸ்வரூபமெடுத்து வருகிறார் என்பதே உண்மை. கருணா தனது குடும்பத்தை சந்திக்கும் நிமித்தம் இலங்கைக்கும் தென்கிழக்காசிய நாடொன்றுக்கும் இடையில் அடிக்கடி பயணித்து வருகிறார். அவர் கடந்த வைகாசி 6 ஆம் திகதி நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார், ஆனால் கிழக்கிலிருந்து வரும் தகவல்களின்படி அவர் மீண்டும் திரும்பிவந்து தனது நடவடிக்கைகளைத் தொடர்கிறார் என்று தெரியவருகிறது". "நான் மேலே குறிப்பிட்டதுபோல, கருணா எனும் நாமம் மிகவும் பிரசித்தமாகிவிட்டது. அவருக்கு ஆதரவான பெருமளவு போராளிகள் கிழக்கு மாகாணத்திலும், பொலொன்னறுவை மாவட்டத்திலும் நிலை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெவ்வேறான ராணுவ கட்டமைப்புக்களில், பல்வேறு இடங்களில் நிலைவைக்கப்பட்டிருக்கிறார்கள். சுயாதீனமாக இயங்கிவரும் கருணா ஆதரவாளர்களுக்கு வளங்கல்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை அரச ராணுவம் வழங்கிவருகிறது". "சிறிலங்கா ராணுவ புலநாய்வுத்துறை கருணா அமைப்பிற்கான நெறிப்படுத்தல்களை வழங்குவதுடன், வழிகாட்டியாகவும் செயற்படுகிறது. ஒரு குழுவாக இயங்கும் கருணா அமைப்பினருக்கு குறைந்தது ஒரு பலம் மிக்க நாட்டின் வெளியுறவுப் புலநாய்வுத்துறை தேவையானளவு நிதியினை வழங்கி வருகிறது".1 point
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointபரபரப்பு பத்திரிக்கையில் ரிஷியினால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்று. யாழ்ப்பாணத்தில் றோவின் உளவாளிகளின் வருகை பற்றி இக்கட்டுரை பேசுகிறது. கருணாவைப் பிரிப்பதிலும், புலிகளைப் பலவீனப்படுத்தி இறுதியில் அழிப்பதிலும் முன்னின்று செயலாற்றிய இந்தியர்களின் செயற்பாடுகளைப்பற்றி நான் ஆக்கங்களை இணைத்துவருவதால், இதனையும் இங்கு இணைக்கிறேன். "தமிழகத்தில் இருந்து மூட்டைகட்டி வீடு வீடாக துணிகள் விற்பவர்கள் இங்கு களமிறங்கி யுள்ளனர். இவர்கள் தமிழகத்திலிருந்து விமானம் வழியாக கொழும்புக்கும் அங்கிருந்து விமானம் வழியாக யாழ் பாணத்துக்கும் வருகின்றனர். இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் இவர்களில் எந்தவொரு வியாபாரியும் கொழும்பிலிருந்து தரை மார்க்கமாக யாழ் பாணம் வருவதில்லை. மூட்டைகளை காவியபடி யாழ் பாணத்தின் சகல குச்சொழுங்கைகளுக்கும் சென்று வியாபாரம் செய்கின்றனர். கடைகளைவிட மலிவாகக் கொடுக்கின்றனர். கடனுக்கு கொடுக்கின்றனர். மக்களின் குடும்ப நன்பர்களாக தம்மை வளர்த்துக் கொள்கின்றனர். கடன் வழங்கி மீளமீள வீடுகளுக்கு வருகின்றனர். பேச்சுவாக்கில் தகவல்களை திரட்டுகின்றனர். இவர்கள் குறைந்து பட்சம் பிஏ வரை படித்துள்ள பட்டதாரிகள். ஆஜானுபாகுவானவர்கள். தமிழகத்தின் பரம்பரைத் துணி வணிகர்கள் அல்ல இவர்கள். இவர்களுடன் பேச்சுக் கொடுத்து பார்த்தால் ஒரு ஆச்சர்யம் இவர்களில் பலருக்கு துணிவகைகளின் பெயர்களே சரியாகத் தெரிந்திரு பதில்லை! இவர்கள் யாழ்நகரில் தங்குவது மக்கள் தொடர்பு உள்ள இடங்களில் அல்ல. யாழ் நாகவிகாரை முன்பாக விகாரையின் கட்டு பாட்டில் படையினரின் பாதுகா பில் உள்ள விடுதிகளில்தான் இவர்கள் தங்குகிறார்கள். பெருமளவில் சாமிமார்கள். ஜோதிடர்கள் சித்த மருத்துவர்கள் இங்கு விமான மூலம் வருகின்ற னர். உதயன் (யாழ் பாணத்திலிருந்து வெளியாகும்) பத்திரிகையில் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று விளம்பரம் போட படுகின்றது. இதை பார்த்து மக்கள் அவர்களிடம் செல்கின்றனர். அவர்கள் தமது போக்குவரவுச்செலவை ஈடுசெய்யும் வகையில் கட்டணங்களை அறவிடுவதில்லை. அவர்கள் மக்களை பல தடவைகள் தம்மிடம் மீண்டும் மீண்டும் வரச் செய்கின்றனர். மேலதிக சிகிச்சை பரிகாரம் எனக்கூறி அவர்களை தமிழகத்துக்கு வருமாறு அழைக்கின்றனர். அப்படி இந்தியாவரை போன யாழ் பாணத்தவர்களும் இருக்கின்றனர். இது யாழ் பாணத்தில் வசிக்கும் தமிழ்மக்களை தமது ஏஜன்ட்களாக தயார் செய்யும் வழி என்று ஊகிக்க படுகிறது. இதைவிட, யாழ் போதனா மருத்துவ மனைக்கு முன்பாக குறி சொல்லும் பெ களின் அம்மா வாங்க, அய்யா வாங்க என்ற குரல்கள் அதிகமாக உள்ளது. இவர்களும் விமானத்தில் வருபவர்களே. தமிழகத்தின் பொருளாதார வசதியை அறிந்தவர்களுக்கு ஒரு விபரம் தெரிந்திருக்கும். குறி சொல்பவர்கள் பஸ்ஸில் போய் வருவதே அவர்களுக்குக் கட்டு படியாகாத சமாச்சாரம். இங்கே அவர்கள் சர்வசாதாரணமாக விமானங்களில் போய்வருகிறார்கள்! தமிழகம்-கொழும்பு விமானக்கட்டணம் 16 ஆயிரம் ரூபா கொழும்பு - யாழ் விமானக் கட்டணம் 9 ஆயிரம் ரூபா. யாழ் பாணத்தில் தங்கும் செலவுவேறு இருக்கிறது. குறிசொல்ல பெறுவது 5ரூபா 10ரூபா. கணக்கை போட்டு பாருங்கள். இது கட்டு படியாகுமா என்று! யாழ் பல்கலைக்கழகத்துக்கு ஊடக பயிற்சி நெறிக்கு 180 மில்லியன் ரூபாவை டென்மார்க் அரசு ஒதுக்கியது. இதனை நடைமுறை படுத்தும் பொறுப்பை புதுடில்லி னெஸ்கோ கேட்டு பெற்றுக்கொண்டது. ஊடகக் கல்வியை செயற்படுத்தும் பொறுப்பு அருட்செல்வம் என்ற தமிழகம் மனோன்மணியம் சுந்தரர் பல்கலைக்கழக விரிவுரையாளரிடம் ஒப்படைக்க பட்டது. யார் இந்த அருட்செல்வம்? விடுதலை புலி எதிர்ப்புக் கருத்தை கொண்டவர். அதே கருத்தை கொண்ட றோவின் ஆளான பேராசிரியர் சூரியநாராயணன் விடுதலை புலிகளுக்கு எதிராக புத்தகங்களை வெளியிடுவதை தொழிலாகச் செய்பவர் என்று சொல்ல படுவதுண்டு. இந்த அருட்செல்வம் யாழ் பல்கலைக் கழகத்தில் 6 மாத contractல் நுழைந்தார். 6 மாதங்கள் முடிந்த பின்னரும் இவர் இந்தியா செல்லவில்லை! இவரது யாழ் பாண contractஐ நீடிக்கும்படி டில்லியில் பார்த்துக் கொண்டார்கள். இப்போது 2 ஆண்டுகளாக யாழ் பாணத்தில் தொடர்கின்றார். இவர் யாழ்ப்பாண ஊடகவியாலாளர்களுடன் கற்பித்தல் என்ற காரணத்தால் நெருங்கி பழகச் சந்தர்ப்பம் அதிகம். யாழ் பாண பத்திரிகைகளில் ழைந்து, அவற்றின் லே-அவுட் சரியில்லை, சரியான விதத்தில் லே-அவுட் செய்து கொடுக்கிறேன் என்று தானாகவே உதவ முன்வந்தார் என்று சொல்ல படுகிறது. இவரை யாழ் தினக்குரல் மட்டும் உள்ளே நுழைய அனுமதித்தது. அதனுள் நுழைந்து இந்திய ஆதரவு பத்திரிகையாக அதனைச் செலுத்தத் தொடங்க ஆபத்தினை உணர்ந்த நிர்வாகம் அவரிடம் இருந்து விலகியது என்று சொல்கிறார்கள். இவர் மூலமாகத்தான் மீடியாவுடன் சம்பந்த பட்ட யாழ் நகர்வாசிகளை றோ கவர் பண்ண இருப்பதாக ஒரு கதை உளவுவட்டாரங்களில் மிக பிரசித்தம். இந்தியக் கடற்பிரதேசத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்களில் சிலர் அவ்வ போது வழிதவறி இலங்கைக் கடல் எல்லைகளுக்குள் ளைவது அவ்வப்போது நடக்கும் காரியம்தான். அவர்களை சிலசமயங்களில் இலங்கைக் கடற்படையினர் கைது செய்வார்கள். விசாரணைக்காக வடபகுதிக்கு கொண்டும் செல்வார்கள். ஆனால் விசாரணை முடிவடைந்த பின்னர் இவர்கள் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க படுவார்கள் அல்லது, இந்தியக் கடலெல்லைக்குள் கொண்டுபோய் விடப்படுவார்கள். யாழ் பாணத்தில் நடமாட அனுமதிக்க பட மாட்டார்கள். இதுதான் வழமை சமீப காலமாக. வழிதவறி வந்துவிட்ட இந்திய மீனவர்கள் என்ற பெயரில் சிலர் நகருக்குள் நடமாடுவது அவதானிக்க பட்டிருக்கிறது. இவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து நாட்டுக்குள் கொண்டு வந்தார்களா? அப்படிக் கைது செய்திருந்தால் எப்படி நகருக்குள் நடமாட அனுமதித்தார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை! எப்படியிருந்தாலும் ஒரு மிகவும் unusual situation. இது. immigration formalities எதுவும் முடிக்க படாமல் யாழ் பாணத்துக்குள் நடமாடும் வெளிநாட்டவர்கள்! இவர்கள் எப்படி உள்ளே வந்தார்கள்? எப்படி வெளியே போவார்கள் அல்லது எப்போது போவார்கள்? உளவு வட்டாரங்களில் இது சம்பந்தமாக கூற படும் முக்கிய தகவல். இலங்கை-இந்திய கடல் எல்லைகள் வரை இந்தியக் கடற்படையின் கப்பல்களில் வரும் சிலர், இலங்கைக் கடற்பகுதி தொடங்கும் இடத்தில் வைத்து மீனவர் படகுகளில் ஏற்றப்படுகின்றனர். அந்த மீனவர் படகுகள்தான் வடபகுதிக் கடற்கரைகளை நோக்கிச் செல்கின்றன! அப்படியானால் அவங்க யாருங்க சார்?1 point
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointசிவராம் மட்டுமல்ல குமார் பொன்னம்பலமும் ஆபத்து பற்றி தெரிந்து இருந்தாலும் தாம் கொழும்பில் இருந்து செய்ய வேண்டியதை செய்தாகணும் என்ற வைராக்கியத்துடன் இருந்தனர்.1 point
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 point2004 இற்கு முன்னரான கேர்ணல் கருணாவே, இப்போது நீ எங்கே இருக்கிறாய்? தமிழ் சங்கம் இணையத்தளத்தில் சச்சி சிறிகாந்தா சித்திரை 2019 இல் எழுதிய கட்டுரை. 2004 இற்கு முன்னர் அனைவராலும் மரியாதையாக அழைக்கப்பட்ட கேர்ணல் கருணாவும், இன்று வெற்று விநாயகமூர்த்தி முரளீதரனுமாக மாறியிருக்கும் உனக்கு நான் எழுதிக்கொள்வது. இன்றைய உனது நிலை என்ன? பங்குனி 2004 இல் எமது இனம் அறிந்திராத துரோகத்தைச் செய்துவிட்டு இறுமாப்புடன் நீ இருந்தபோது உனது புகழைக் காவிவந்த 800 சொற்கள் அடங்கிய பி பி ஸியின் பசப்புகளையும், அது உனக்கு உலகளவில் புகழ்தேடித் தந்ததாக நீ எண்ணியிருந்ததையும் மறந்திருக்க மாட்டாய். உனது துரோகம் நிகழ்ந்து 15 வருடங்கள் உருண்டோடிவிட்ட நிலையில் நீ இன்று செய்துவரும் செயல்கள் குறித்து என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. முடிந்தால் பதில் அளி. 2004 இற்குப் பிறகு நீ செய்துவருவதாகக் கூறும் உனது வீரப் பிரதாபங்கள், நீ யாருக்குத் துரோகமிழைத்து வெளியேறி எதிரியுடன் சேர்ந்தாயோ, அந்த புலிகளின் தலைவர் பிரபாகரனின் ராணுவ ஆற்றலுக்கு நிகராக இருக்கும் என்று உண்மையாகவே நம்புகிறாயா? இன்றைய உனது நிலை என்ன கருணா? இன்றும் ஈழத்தமிழர்களுக்கான தலைவனாக உன்னைக் கருதுகிறாயா? 2004 இற்குப் பின்னர் நீ செய்துவரும் எந்தத் திருகுகுதாலமும் உன்மீது படிந்திருக்கும் நிரந்தரக் கறையான "இனத்துரோகி " எனும் அவப்பெயரைக் கரைத்துவிட முடியும் என்று நீ நம்புகிறாயா? அண்மைக்காலமாக அரசியலில் இருப்பதாகக் கூறுகிறாயே, அதில் எத்தனை வெற்றிகளை நீ பெற்றிருக்கிறாய்? தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும், பின்னர் அங்கிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தாவிக்கொண்டிருக்கிறாய். 2019 இல் நீ இன்னும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மகிந்தவுக்குப் பணிவிடை செய்கிறாயா அல்லது அவனையும் விட்டு விலகி மைத்திரியிக்குப் பணிவிடைகள் செய்துவருகிறாயா? உனது வீரப் பிரதாபங்களைக் காவிவந்த பி பி ஸி யின் செவ்வியில் உனது மொழிபொஎயர்ப்பாளராக நின்றிருந்த வரதனுக்கு என்னவாயிற்று? அவன் இப்போது உன்னுடன் இருக்கிறானா, அல்லது அவனைக் கொன்றுவிட்டாயா? இதுபற்றியும் எங்களுக்கு நீ கூறமுடியுமா கருணா ? 2004 இல் நீ அரியணை மீது வீற்றிருந்து பி பி ஸி இற்கு வழங்கிய செவ்வியில், "என்னுடன் 2000 பெண்போராளிகள் உட்பட, 5000 போராளிகள் பக்கபலமாக இருக்கிறார்கள்" என்று இறுமாப்புடன் கூறியிருந்தாய். இந்தப் பசப்புகளை விரும்பியே காவித்திருந்த இந்திய செய்திச் சேவைகளுக்கு நீ ஒரு பெருந்தளபதியாகவும், ஆயிரக்கணக்கான படைவீரர்கள் சூழ்ந்த மாபெரும் சேனையாகவும் தெரிந்ததில் எனக்கு வியப்பில்லை. சரி, அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், நீ அன்று கூறிய 5000 "பெரும்படையில்" இன்று உன்னுடன் கூட இருப்பவர்கள் எத்தனை பேர் கருணா? உனது இனத்துரோகத்திற்காக புலிகள் உன்னைத் தூக்கி எறிந்தபொழுது. பல புலியெதிர்ப்பு கருத்தாளர்களான கே டி ராஜசிங்கம், டி பி எஸ் ஜெயராஜ், தயான் ஜயதிலக்க மற்றும் தமிழ்நாட்டின் இந்து கற்பனைவாதிகள் உன்னை வராது வந்த மாமணியாகப் பார்த்து ஆரத்தழுவி ஆதரித்து எழுதியதை நான் பார்த்தேன். ஈழத்தமிழனின் புதிய துருவ நட்சத்திரமாக அவர்கள் உன்னைப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்ததையும் நான் பார்த்தேன். ஆனால், அவர்களின் பேனாக்களில் இருந்து நீ இன்று முற்றாக மறைந்துவிட்டாயே, அது ஏன் கருணா? 2004 இற்குப் பின்னரான உனது வீழ்ச்சியென்பது எத்தனை கீழ்த்தரமானது , கேவலமானது என்பதை நீ உணர்கிறாயா? 1996 இல் தாரகி சிவராம் எழுதிய கட்டுரை ஒன்றை அண்மையில் படித்தேன். அதி அவர் இப்படி எழுதுகிறார். "விடுதலைப் புலிகள் அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை ஒரே ராணுவ நிர்வாகப் பிரதேசமாகவே கையாள்கிறார்கள். இப்பிரதேசத்திற்கான ஒட்டுமொத்தத் தளபதியாக கருணாவே திகழ்கிறார். ஒரு சில உயர் தளபதிகளைத் தவிர, கிழக்கின் அனைத்துப் புலிப் போராளிகளும் அவரை கெளரவத்துடன் அம்மான் என்றே அழைக்கின்றனர்". உன்னை ஒரு ஒப்பற்ற தளபதியாக எண்ணி, 2005 இல் அமெரிக்கச் சஞ்சிகையொன்றில் குடிபோதையில் உளறிய ஒருவர், "கருணா கிழக்கு மாகாண மக்களுக்கான ஆட்சியதிகாரத்தை அரசாங்கத்திற்கு எதிராகவும், புலிகளுக்கு எதிராகவும் போராடி நிலைநாட்டப் பார்க்கிறார். ஆனால், பிரபாகரனின் ராணுவப் பலத்தின் முன்னால் கருணாவால் ஈடுகொடுக்க முடியாதிருக்கும், ஆகவே அவர் வெளிநாடொன்றிற்குத் தப்பிச் சென்றாவது தனது மக்களின் விடுதலைக்காகப் போராடுவார். கிழக்கில் புலிகள் இழந்த நிலங்களை மீண்டும் அவர்கள் மீட்டெடுப்பது சாத்தியமில்லை" பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வெறும் 30 வெள்ளிகளுக்காக நீ ஈழத்தமிழரிடம் சிறுகச் சிறுகச் சேர்த்துவைத்த அபிமானத்தையும், கெளரவத்தையும் 2004 துரோகத்துடன் ஒரே இரவில் இழந்தாய். விடுதலைப் புலிகளால் உனக்கு வழங்கப்பட்ட கெளரவமான "கருணா" எனும் பெயர் கூட 2009 உடன் உன்னை விட்டு ஓடிவிட்டது. அதற்குப் பின்னர் வந்த 10 வருடங்களில் உன்னை ஆட்டுவிக்கும் சிங்கள, இந்திய புலநாய்வுப்பிரிவுகளும் இன்னும் இன்னோரென்ன சக்திகளும், உனது இனத்துரோகத்திற்கான பரிசாக உன்னை உயிருடன் புதைத்துக்கொண்டிருக்கின்றன. உனது கதைதான் எவ்வளவு கேவலமானது? 1957 இல் மறைந்த மக்கள் திலகம் எம் ஜி ஆர் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய வரிகள் உனக்கும் எவ்வாறு பொருந்திச் செல்கிறதென்பதைப் பார். "உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது? நிலை கெட்டுப் போன நய வஞ்சகரின் நாக்குத்தான் அது!".1 point
-
நான் ரசித்த விளம்பரம் .
0 pointsஅன்புத்தம்பி... அந்தக் கமலா, தலையில்... மல்லிகைப்பூ வைத்திருக்கிற படியால்.... "ஒறிஜினல்"... தமிழ் போலை, இருக்குது. ஹா...ஹா...ஹா... 😂 🤣0 points