Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87997
    Posts
  3. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    16477
    Posts
  4. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    11531
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/16/22 in all areas

  1. ஊரில் விவசாயம் செய்யும்/செய்ய விரும்பும் (பாலபத்ரஓணாண்டி)நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.....! 👍 பி.கு: தோட்டத்தில் நின்று சுவையான தேநீர் அருந்தும் போது ஒரு கணம் சுவியையும் நினைக்கவும்.....! 😂
  2. உங்கள் வயிற்றுச் சதை குறைய ...வேண்டுமா ? பின்பற்றுங்கள். 😃
  3. இன்றைய தின சிட்னி மோர்னிங் கேரல்ட் பத்திரிகையில் வந்துள்ள் கட்டுரை, https://www.smh.com.au/property/news/investor-with-8000-homes-calls-for-negative-gearing-to-be-axed-20220208-p59us2.html
  4. என்ன நிகழ்வு என்று தெரியவில்லை. தெரிந்தோர் கூறவும். பேராசை பிடித்த ஊடகமான Tamil Guardian இழி செயலான படிமத்தின் மேல் தனது பெயரை எழுதுவதை செய்துள்ளது. இவ்வாறு எழுதுவதால் இப்படிமமானதுபிறர் பயன்படுத்த இயலாத நிலைக்குள்ளாகிறது. வேண்டுமென்று செய்கின்றனர்.
  5. தம்பி நுணாவிலுக்கும் அகஸ்தியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂
  6. அகஸ்தியன் & நுணாவிலான் இருவருக்கும் இனிய பிறந்ததாள் நல் வாழ்த்துக்கள்
  7. சுவி,புங்கையூரான்,தமிழ் சிறி,பெருமாள்,ஏராளன் உங்கள் அன்பிற்கு நன்றிகள்
  8. அகஸ்தியன் நுணாவிலான் இருவருக்கும் பிறந்ததாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.
  9. அகஸ்தியனுக்கும், நுணாவிலானுக்கும்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  10. அகஸ்தியனுக்கும், நுணாவிலானுக்கும்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂
  11. அகஸ்தியனுக்கும், நுணாவுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்….!
  12. Ahasthiyan nunavilan (42 years old) Thuvaragan (44 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நுணாவிலான், அகஸ்தியன் & thuvaragan .........! 💐
  13. பெண்கள் பார்த்து பயனடையட்டும். இது எல்லோரும் ரசிக்க ..பெண்ணே குடையென சுழலும் உன் ஆடைக்குள் நான் வந்து ஒளிந்து கொள்ளவா ?
  14. வணக்கம் வாத்தியார்.......! காதல் கண் கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே ஆசை முள் குத்துதே அருகில் போனால் தேன் சொட்டுதே பறவையாய் திரிந்தவள் இறகு போல் தரையிலே விழுகிறேன் இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன் காற்று நீ யாக வீச என் தேகம் கூச எதை நான் பேச கலைந்து போனானே கனவுகள் உரச பறித்து போனாயே இவளது மனச இருள் போலே இருந்தேனே விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே பார்வை கொஞ்சம் பேசுது பருவம் கொஞ்சம் பேசுது பதிலாய் எதை பேசிட தெரியாமல் நான் கூச்சம் கொஞ்சம் கேக்குது ஏக்கம் கொஞ்சம் கேக்குது உயிரோ உனை கேட்டா தருவேனே நான் அன்பே அன்பே மழையும் நீ தானே கண்ணே கண்ணே வெயிலும் நீ தானே ஒரு வார்த்தை உன்னை காட்ட மறு வார்த்தை என்ன மீட்டா விழுந்தேனே........! ---காதல் கண் கட்டுதே---
  15. இந்த மாதிரியான நீர்குமிழிகளை அரசுகள் கூட உருவாக்குகின்றதோ? ( உண்மை இல்லை ஒரு சந்தேகம் மட்டுமே) உதாரணமாக அவுஸ்திரேலியாவில் முதலீட்டு அடிப்படையில் வீடு வாங்கும் போது அந்த கடனின் வட்டியை உங்களது வரியிலிருந்து தள்ளுபடி செய்யலாம். இதனால் நன்மை பெறுவது செல்வந்தர்கள், அதனை பார்த்து மற்றவர்களும் வீடுகளை வாங்க வீட்டு விலை அதிகரிக்கும் செல்வந்தர்கள் அதிகரித்த விலையில் மற்றவர்களுக்கு விற்றுவிடுவார்கள், அதன் பின் நீர்குமிழி உடைந்து விலை சாதாரண மட்டத்திற்கு வந்த பின் சிலேட்டை அழித்து விட்டு மீண்டும் ஆரம்பிப்பார்கள், இதனால் பாதிப்படைவது பாட்டாளிகளே. வீடுகள் மட்டுமல்ல பங்குகள் போன்ற அனைத்து முதலீடுகளில் பெரும்பாலும் நன்மை அடைவது செல்வந்தர்கள் (இதில் நிறைய விதி விலக்குகளும் உண்டு). வளங்களை சமமாகப்பிரிப்பதே வரியின் அடிப்படை, என்று கொண்டுவரப்பட்ட வரி, அதிகமாக செல்வந்தர்களுக்கே சாதகமாகவுள்ளது (பாட்டாளிகளின் வரி விகிதம் வருமானத்தினடிப்படையில் பல மடங்கு செல்வந்தர்களை விட அதிகமாகவுள்ளது). வருமானங்களை சமமாக பிரிக்கப்படும் நிலை உருவானால் ஒட்டு மொத்த சமூகமும் சிறந்த வாழ்க்கை தரத்தை எட்ட முடியும், அமெரிக்காவில் 1950 - 1970 காலப்பகுதியில் ஒப்பீட்டளவில் வருமான இடை வெளி குறைவாக இருந்ததாக கூறுகிறார்கள் ( மிக சிறிய அளவில்) இந்த காலத்தை பொற்காலம் என கூறுகிறார்கள் (இதன் உண்மைதன்மை தெரியாது). இந்த முதலீடுகளில் பங்கு பெற்றும் காலங்கள்தான் அதன் வெற்றியை தீர்மானிக்கின்றது. முதலீடுகளில் ஆரம்பத்தில் முதலிடுபவர்கள் அதிக வெற்றியாளராகவும் உச்ச பகுதியில் முதலிடுபவர்கள் தோல்வியாளராகவும் (குறைந்த பட்சம் சில ஆண்டுகளாவது) காணப்படுகிறார்கள். https://www.investopedia.com/terms/b/bell-curve.asp#:~:text=A bell curve is a,a symmetrical bell-shaped curve.&text=The width of the bell curve is described by its standard deviation. இது ஒரு வட்டம் போல நிகழும் (கால சுழற்சி). https://en.wikipedia.org/wiki/Diffusion_of_innovations இந்த Bell curve மற்றும் "S" curve அடிப்படையிலேயே பழக்க வழக்க பொருளாதார நிகழ்வதாகக்கூறுகிறார்கள். the three skills of top trading இந்த புத்தகத்தை இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம் ( இணையதளத்தை இணைப்பது சரியல்ல என்பதால் இணைக்கவில்லை). பங்கு சந்தையில் சொல்வார்கள் " Don't fight with the trend", "Cut your loss and run your profit" ஆனால் நடைமுறையில் நாம் அதற்கு எதிர்மறையாகவே செயல்படுவோம். விலை வீழ்ச்சி அடைகிற பங்குகளை வாங்குவோம் (Catching falling knife), ஏற்கனவே நட்டத்திலுள்ள பங்கினை விலை மேலும் குறைந்த பின்னும் திரும்பவும் வாங்குவோம் (Doubling down). அதே நேரம் சிறிதளவது இலாபம் வந்தவுடன் பங்குகளை விற்றுவிடுவோம், ஆனால் சில பங்குகள் நட்டம் அதிகரித்து கொண்டு போய்க்கொண்டிருக்கும் ஆனால் எங்களால் விற்க முடியாது. இவை அனைத்தும் எனக்கு ஏற்பட்டது, இவற்றிற்கு காரணம் சரியான முதலீட்டு திட்டமின்மையே.
  16. நன்றி, கு.சா. 🙏 இந்தக் காணொளியின் சில பின்னூட்டங்களை பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது. உள்நாட்டு போரின்போது, தானும், தன்னை சார்ந்தவர்களும் தப்பித்தால் போதுமென வசதிபடைத்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடி செட்டிலாகிவிட, வசதியற்ற எளியவர்கள் தோணி மூலம் தமிழகம் வந்து ஏழ்மை நிலையில் இன்னமும் வாழ்கிறார்கள். இங்கிருக்கும் அரசியல் மிக மிக மோசமானதுதான்(இவர்கள் சுதந்திரமாக வாழ, குடியுரிமையை கொடுக்க மறுக்கும் நிலையும் சேர்த்து), அவற்றை புரிந்துகொண்டு, இங்கிருக்கும் தமிழர்களின் வாழ்க்கை தரத்தையும் பார்த்தால், குழப்பங்களை, ஏமாற்றங்களை தவிர்க்கலாம். (அரசியல் சூழலை பொறுத்து, காலப்போக்கில் இவர்களுக்கு குடியுரிமையும் கிடைக்கலாம், யார் கண்டா..? 😕) மேற்கத்திய நாடுகளை போல தமிழ்நாடு பொருளாதர, சமூக வாழ்வளவில் உயர்ந்தது இல்லை, இங்கிருக்கும் தமிழர்களின் வாழ்வு நிலையும் மிக சுமாரானதுதான். அந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் "ஈழத்தில் நாங்கள் அப்படியிருந்தோம், இப்படியிருந்தோம் தமிழகத்தில் வந்து சிரமப்படுகிறோம், அவர்களை திருப்பி அனுப்பிவிடுங்கள்.." என வெளிநாட்டிற்கு தாங்கள் வசதியாக தப்பியோடி செட்டிலாகிவிட்டு, அங்கிருந்து கூப்பாடு போடுவது எந்த விதத்தில் நியாயம்? அப்படிபட்டவர்கள் ஒன்றாக சேர்ந்து, இவர்கள் நாடு திரும்ப விரும்பினால் அழைத்துக்கொள்ளலாமே..? இவர்கள் இழந்த வாழ்வை மீட்டுக் கொடுக்கலாமே..? 'கொதிக்கும் எண்ணெய் சட்டிக்கு பயந்து,நெருப்பில் விழுந்த கதையாக போச்சுதே, இவர்களின் வாழ்க்கை.,!' என எமக்கும் மிகுந்த வருத்தமே.😢
  17. பெண்கள் வாகனத்தில் ஏறினாலும் இந்தப் பகுதிகள் குலுங்கவே செய்யும். எனவே பெண்கள் வாகனத்தில் ஏறுவதையும் தடை செய்ய வேண்டும். நல்லகாலம் முந்தி இத கேக்கலை. இல்லாட்டி நானும் நித்திரை இல்லாமல் திரிந்திருக்க வேண்டும்.
  18. கழுகு: கழுகும் அதன் 7 கொள்கைகளும் கழுகு (Eagle) ஓர் அற்புதமான பறவை. அதற்குச் சிறப்பான பார்வையும், உயரப் பறக்கும் ஆற்றலும் உள்ளன. உலக நாடுகளின் சின்னங்கள் முதல் வியாபாரப் பொருட்கள் பலவற்றை அலங்கரிப்பதற்குக் காரணம் அதன் சிறப்பான பண்புகள் ஆகும். கழுகிடம் காணப்படும் ஏழு குணாம்சங்கள் உயர்வான மனித வாழ்வை விரும்பும் ஒவ்வொருவருக்கும் அவசியம். கொள்கை 1: கழுகுகள் தனியாக, உயரத்தில் பறக்கும். அவை ஏனைய பறவைகளுடன் சேர்ந்து பறக்கது. ஏனைய பறவைகளும் கழுகுகள் பறக்கும் உயரத்தில் பறக்க முடியாது. கழுகுகள் கழுகுகளுடன் மட்டும் பறக்கும்! கொள்கை 2: கழுகுகள் கூர்மையான பார்வை உடையன. ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள ஒன்றை அவற்றால் தெளிவாகப் பார்க்க முடியும். கழுகு ஓர் இரையைப் பார்த்ததும், அது தன் பார்வை ஒடுக்கி அதைப் பிடிக்க முயலும். தடைகள் வந்தாலும், அது தன் தன் கவனத்தை திசை திருப்பாது, தன் பார்வையை இரையின்மேல் வைத்திருக்கும். தரிசனமும் தடைகளின்போது சிதறாத கவனமும் வெற்றியடையும்! கொள்கை 3: பிணந்தின்னிக் கழுகு போல் கழுகு அழுகியவை மற்றும் இறந்தவற்றை உண்ணாது. அது புதிதான இரையினையே உண்ணும். எதை உண்பது? எதைத் தெரிவது? எதை விலக்குவது? என்பதில் கழுகுகள் சரியான தெரிவை எடுக்கும்! கொள்கை 4: கழுகுகள் புயலை விரும்புகின்றன. புயல் காற்றின் மூலம் அவை மேகங்களின் மேலாக உயர்த்தப்படுகின்றன. இதனால், அவை சிறகினை விரித்து காற்றில் மிதக்கவும், அதன் மூலம் இளைப்பாறவும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. அதே நேரம், மற்றப் பறவைகள் மரக்கிளைகளில் ஒளிந்து கொள்ளும். வாழ் நாட்களில் ஏற்படும் புயல்கள் போன்ற சவால்கள், உயரப் பறக்க கிடைக்கும் சந்தர்ப்பங்களாகவும், நன்மையாகவும் மாற்றிக் கொள்ளப்படுகின்றன! கொள்கை 5: கழுகு பரீட்சையின் பின்பே நம்பிக்கை வைக்கும். பெண் கழுகு ஓர் ஆண் கழுகை சந்தித்து உறவு கொள்ளு முன், அது ஆண் கழுகுடன் நிலத்திற்குச் சென்று சிறு தடி போன்ற குச்சியை எடுக்கும். பின்பு மேலே ஆணுடன் உயரத்திற்குப் பறந்து சென்று அந்தக் குச்சியினைக் கீழே போட்டுவிட்டு அவதானித்துக் கொண்டிருக்கும். நிலத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் குச்சியை ஆண் கழுகு விரட்டிச் சென்று, அது நிலத்தில் விழு முன் பிடித்து, அதை உயரப் பறக்கும் பெண் கழுகிடம் சேர்ப்பிக்கும். பெண் கழுகு மீண்டும் குச்சியைக் கீழே போட்டுவிடும். ஆண் கழுகு பிடிப்பதற்காக கீழே செல்லும். இவ்வாறு குச்சியை வீழ்த்துவதும், எடுத்து வருவதுமாக பல மணித்தியாலங்களுக்கு பரீட்சை நடைபெறும். பெண் கழுகு ஆண் கழுகிடமுள்ள பொறுப்புணர்வை நிச்சயப்படுத்திக் கொண்டதும் அது உறவு கொள்ள இடமளிக்கும். உறவை ஏற்படுத்திக் கொள்ள முன் பொறுப்புணர்வு சோதனைக்கு உள்ளாக்கபடுகின்றது! கொள்கை 6: முட்டையிடத் தயாரானதும், ஆணும் பெண்ணும் மலையின் உச்சியிலுள்ள, ஏனைய உயிரிணங்கள் இலகுவில் வந்தடைய முடியாத இடத்தினைத் தேர்வு செய்யும். ஆண் முட்களைக் கொண்டு வந்து பாறைப் பிளவில் கூட்டினை அமைக்க ஆரம்பிக்கும். அதன் பின் குச்சிகளையும், அதன் மேல் முட்களையும் வைத்துக் கட்டும். அதன்மேல் மிருதுவான புற்களை அடுக்கி முதலாவது அடுக்கினை முடிக்கும். அதன் பின் முட்களைப் பரப்பி, அதன் மேல் புற்களைப் பரப்பும். அதற்கு மேலாக தன் இறகுகளைப் பரப்பி, கூட்டினைக் கட்டி முடித்துவிடும். கூட்டின் வெளியேயுள்ள முட்கள் வெளியேயிருந்து எதுவும் கூட்டிற்குள் வருவதைத் தடுக்கும். பெண் கழுகு முட்டையிட்டு பாதுகாக்க, ஆண் கழுகு இரையை வேட்டையாடும். குச்சுகளைப் பயிற்றுவிக்க பெண் கழுகு அவற்றை கூட்டிற்கு வெளியே எடுத்துவிடும். பயந்த குஞ்சுகள் கூட்டிற்குள் தாவி வந்துவிடும். ஆகவே, குஞ்சுகளை கூட்டிற்கு வெளியே எடுத்துவிட்டதும், கூட்டிலுள்ள இறகுகளை வெளியேற்றி முட்களுடன் கூட்டை விட்டுவிடும். பயந்த குஞ்சுகள் மீண்டும் கூட்டிலுள் தாவியதும், அங்குள்ள முட்கள் அவற்றைக் குத்திவிடும். இதனால் குஞ்சுகள் கூட்டைவிட்டு வெளியேறும். அடுத்து, மலை உச்சியிலிருந்து குஞ்சுகளை தாய்க் கழுகு கீழே தள்ளிவிடும். பயத்தால் அவை கீச்சிட்டு, கீழே விழுமுன் ஆண் கழுகு அவற்றைப் பிடித்து தன் மேல் வைத்துக் கொண்டு மலை உச்சிற்கு கொண்டு வரும். குச்சுகள் இறக்கை அடிக்கத் தொடங்கும் வரை, இவ்வாறு நடைபெறும். குடும்பம் இருவரின் பங்குபற்றலாலும் வெற்றி பெறும். முட்கள் குத்துப்போது, வாழ்வு அனுபவப்படாமல், முன்னேறாமல், கற்றுக் கொள்ளமல் அதிக வசதியாக இடத்தில் இருப்பதை உணர்த்துகின்றது. வாழ்விலுள்ள முட்கள் வளர வேண்டும், கூட்டை விட்டு வெளியேறி வாழ வேண்டும் என்பதை கற்பிக்கின்றன. உன்னை நேசிப்பவர்கள் உன்னை சோம்பலினால் நலிவுற விடமாட்டார்கள். அவர்களின் செயல் கூடாத செயலாகத் தெரிந்தாலும் நம் வளர்ச்சி, செழிப்பு எனும் நன்மைக்காளுக்காக அவர்கள் நம்மை கடினமான பாதையில் தள்ளுவார்கள்! கொள்கை 6: ஓரு கழுகு வயதாகியதும், அதன் இறக்கை பலவீனமாகி, அது பறக்க வேண்டிய வேகத்தில் பறக்க ஒத்துழைக்காது. அது சாகும் அளவிற்கு பலவீனப்பட்டுள்ளதாக உணர்ந்ததும், மலையிலிருந்து நீண்ட தூரத்திற்கு ஓய்விற்காகச் சென்றுவிடும். அங்கிருந்து, தன் உடலிலுள்ள அத்தனை இறகுகளையும் மொட்டையாக வரும்வரை நீக்கிவிடும். அந்த மறைவான இடத்தில் புது இறகுகள் முளைக்கும் வரை தங்கியிருந்து, பின் வெளியே வரும். சுமையான, வாழ்க்கைக்குத் தேவையற்ற பழைய விடயங்கள், பழக்க வழக்கங்கள் இடையிடையே நீக்கப்பட வேண்டும்! ஆங்கில மூலம்: கிவ்வி லயின் கழுகு பற்றிய உயிரியல் விபரம்: Kingdom (இராச்சியம்): Animalia (விலங்கு) Phylum (தொகுதி): Chordata (முகுகுநாணி) Class (வகுப்பு): Aves (பறவை) https://arivukalanchiyam.wordpress.com/2012/09/10/eagle/
  19. ஏன் தோழர் கெய்லை ஒருத்தருமே சீண்டவில்லையா ...... அப்போ கெய்ல் பெயிலா ......! 😢

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.