Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    20024
    Posts
  2. நீர்வேலியான்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    538
    Posts
  3. Sasi_varnam

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    2169
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46808
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/15/22 in all areas

  1. மேலே உள்ளது தான் நெடுஞ்சாலையின் பெயர்.பெயர் தான் நெடுஞ்சாலை ஆனால் ஒற்றையடிப் பாதையே.வேகமும் ஒரு சில இடங்கள் 55 மைல்கள்.கூடிய தூரம் 15-20-25 இப்படியாகவே இருந்தது.நாங்கள் விரும்பினால்க் கூட வேகமாக ஓட முடியாது. படங்கள் எடுக்கக் கூடிய இடங்கள் இருந்தன.ஆனாலும் எமது கைபேசியினால் பரந்த தேசங்களை எடுக்க முடியாது.ஆரம்பத்தில் இருந்து முடியும்வரை மிகவும் ரசிக்கக் கூடிய இடமாக இருந்தது.நின்றுநின்று போகிறபடியால் தொடர்ந்து கார் ஓட வேண்டாமென்று பிள்ளைகள் இடையில் ஒரு கொட்டேலும் போட்டிருந்தனர். பிற்பகல் 6 மணிபோல் கொட்டலை சென்றடைந்தோம்.இரவு நல்ல சாப்பாடு நல்ல தூக்கம்.நீண்ட தூரம் கார் ஓடுவதானால் நிறைய சாப்பிடுவதில்லை.காலை சாப்பாடு கொட்டேலில் மீண்டும் பகல் 9.30 போல புறப்பட்டோம்.அன்றைய தினம் அதிகம் நின்று செல்லவில்லை.ஒரேஒரு இடம் தான் பார்க்க திட்டமிட்டிருந்தோம்.வேறோன்றுமில்லை வண்ணாத்தி பூச்சிகளே. குறிப்பிட்ட ஒரு அரைமைல் சுற்றளவில் தேனீக்கள் எப்படி இருக்குமோ அதே மாதிரி வண்ணாத்தி பூச்சிகள்.மிகவும் ஆச்சரியமாக இருந்தது.படமெடுக்கலாம் என்று கைபேசியில் பார்த்தா எல்லா வண்ணாத்தி பூச்சிகளும் சிறிய தேனீக்கள் போல தெரிந்தன. அங்கிருந்கு நேராக மகளாக்கள் நின்ற இடத்துக்கு போய் சேர்ந்தோம். அடுத்த நாள் கொலிவூட் என்ற பெரிய எழுத்துக்கள் உள்ள விளம்பரத்தை பார்க்க போனோம். நான் நினைத்திருந்தது வேறு.கண்ட காட்சியோ வேறு. இதுவரை நான் நினைத்தது கொலிவூட் நடிகர் நடிகைகள் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களே அந்தப் பகுதியில் இருப்பார்கள்.உள்ளே போய் பார்க்க கட்டணம் அறவிடுவார்களோ பெரிய கட்டுப்பாடுகள் இருக்கும் என்று கனக்க எண்ணியிருந்தேன்.நான் தான் இதை ஒருதரமாவது பார்க்க வேண்டும் என்று சொல்ல பிள்ளைகள் சிரிக்கிறார்கள்.இதைப்போய் என்னத்தை பார்க்க போறீங்கள் என்று. ஒரு மலைப் பிரதேசத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.காரில் போக பல பாதைகள் இருக்கும் என எண்ணுகிறேன்.நாங்கள் போன பாதை மலையில் கொஞ்ச தூரம் போனபின் குடிமனைகள் உள்ள இடத்தால் ஒரு கார் மட்டுமே போக கூடியவாறு வீதிகள் இருந்தன.அங்குள்ள மக்கள் இதை பார்க்க வருபவர்களின் தொல்லை தாங்க முடியாமல் இந்த றோட்டால் போக கூடாது தனியார் றோட்டு வாகனம் நிறுத்தக் கூடாது என்று பலவாறு எச்சரிக்கை பலகைகள் தொங்கவிட்டிருந்தனர். ஓரளவுக்கு மேல் எமக்கும் யோசனை.ஏதோ கிடைத்த இடத்தில் நிறுத்திவிட்டு மலையில் சிறிது தூரம் ஏறி போய் பார்த்தோம்.வழமையில் நல்ல காலநிலையாக இருந்த இடம் நாங்கள் போனகிழமை மிகவும் குளிராக இருந்தது.காலநிலை நன்றாக இருந்தால் நிறைய கூட்டம் அந்த கொலிவூட் என்ற விளம்பர பலகையிலேயே ஏறி படங்களெல்லாம் எடுப்பார்களாம். இதனிடையே நீர்வேலியானை சந்தித்தது பற்றி எழுதியிருந்தேன். கடைசியாக ஒரு கோவிலுக்கு போய் தரிசனத்துடன் எமது லாஸ் அங்கிலஸ் சுற்றுலாவை முடித்துக் கொண்டு புறப்பட்டோம். வரும்போது நெடுஞ்சாலை 5 வழியாக 6 மணிநேரத்தில் வீடு வந்து சேர்ந்தோம். நன்றி. இனிவராது. யாராவது கலிபோர்ணியா போனால் நிச்சயம் இந்த பாதையில் பயணித்து பாருங்கள்.
  2. கலிபோர்னியா, நேவாடா, அரிசோனா, கொலராடோ,யூட்டா, டெக்சாஸ், போன்ற பெரும் பிரதேசங்கள், ஸ்பெயின்இன் ஆளுகையின் கீழ், மெக்ஸிக்கோவுடன் இருந்தது. பிறகு அமெரிக்க-மெக்ஸிகோ யுத்தத்தின் முடிவில், உடன்படிக்கையின் படி வெற்றி பெற்ற அமெரிக்காவிடம் வந்தது. இதற்கு ஈடாக மெக்ஸிகோ வுக்கு பணம் கொடுக்கப்பட்டது. 1700 களில் ஸ்பானிஷ் குடியேற்றங்கள் திட்டமிடப்பட்டு, மிக அதிகமாக நடைபெற்றது, இங்குள்ள native இந்தியர்களுக்கு மதமும் பரப்பப்பட்டது, பிறகுதான் ஆங்கிலேயர்களும் மற்றைய ஐரோப்பியர்களும், தங்கத்துக்காக வந்தார்கள். அதனால்தான் இங்குள்ள இடங்களின் பெயர்கள் பெரும்பாலும் ஸ்பானிஷ் மொழியில் இருக்கும். Native இந்தியர்களுக்கு சொந்தமான இடங்களுக்காக ஸ்பானியர்களும் ஆங்கிலேயர்களும் அடிப்பட்டுக்கொண்டார்கள்
  3. இயற்கையுணவே! எமக்கு வலிமை! ************************ கோர்லிக்ஸ்,வீவா, நெஸ்ரோமோல்ட் மைலோ.. இனும் பல.. இத்தியாதி,இத்தியாதி ஆரோக்கிய வாழ்வுக்கு அனைத்துச் சத்தும் நிறைந்ததென்று விளம்பரங்கள் செய்து விற்று பணமள்ளும் வெளிநாட்டு கம்பனிகளே! இதுகளை.. வந்தகொரோனாவுக்கு வாங்கிக்குடியென்று எந்த (சுகாதார) அமைப்பும் இதுவரையும் சொன்னதுண்டா! இஞ்சி,மஞ்சல் மிளகு,சீரகம் உள்ளி,கராம்பென்று இயற்கை உணவுகளே-எம் உடலைக்காக்குமென.. சித்தர்கள் சொன்னதுதான் இன்றும் சிறப்பென்று அறிந்தபின்னும். இதுபோன்ற.. போலிகளை புறம் தள்ளி நல் வாழ்வுதனை-நாம் அமைப்போம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
  4. நன்றி . குமார் அண்ணா . கேட்க மிகவும் அழகான பாடல் . சிவா கங்கை குளத்தருகே சிறீ துர்க்கை காத்திருப்பாள்
  5. நீங்கள் இருவரும் சொல்லுவது ஓரளவுக்கு உண்மை. இருவருமே அடிமை முறையை கொண்டுதான் தங்களை வளப்படுத்தினார்கள், மெக்ஸிக்கர்கள் அடிமை முறையை சட்டப்படி முதலில் முடிவுக்கு கொண்டு வந்தார்கள், அனால் அமெரிக்கா கொஞ்சம் லேட். ஆங்கிலேயர்கள் infrastructureஐ நன்றாக கவனித்து தங்களுக்கு உட்பட்ட இடங்களை வளப்படுத்தினார்கள், ஸ்பானியர்கள் இந்த விடயத்தில் அவ்வளவு சொல்லும்படியாக இருக்கவில்லை. இருவருமே இங்குள்ள மக்களுடன் கலந்த முறைகளில் வேறுபாடு உண்டு. வெள்ளை அமெரிக்கர்கள், பெரும்பாலானவர்கள் ஜெர்மானியர்கள், அடுத்து ஐரிஷ் உம் ஆங்கிலேயர்களும் , இங்குள்ள native மக்களுடன் அவ்வளவாக கலக்கவில்லை, ஆனால் ஸ்பானியர்கள் நன்றாகவே கலந்தார்கள். இதன் காரணமாக இந்தியாவில் இருப்பதுபோல் மெக்சிக்கர்களிடமும் ஒருவகை சாதி முறை உண்டு. கலப்பு குறைந்த, வெள்ளையின தோற்றம் கொண்டவர்கள் உயர் சாதிகளாகவும், நன்றாக கலந்தவர்கள் குறைந்த சாதிகளாகவும் கருதப்படுவதாக மெக்ஸிகோவில் இருந்து வந்த ஒருவன் சொன்னான், எவ்வளவு தூரம் இவை அங்கெ நடையின்முறையில் இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்த கலப்பின் அளவு விஞ்ஞானரீதியானது நிருபிக்கப்பட்டதல்ல, நமது சாதி போன்ற ஒரு சமூக கட்டமைப்பு (Social Construct) தற்பொழுது அமரிக்காவும் மெக்ஸிகோவும் சில இடங்களை, native மக்களுக்குரிய தனி நாடுகளாக அங்கீகரித்துள்ளார்கள். அமெரிக்காவில் அவர்களுக்கும் அவர்களின் இடங்களுக்கும் வரிகள் மற்றும் இதர சலுகைகள் நிறைய உண்டு. பக்கங்களில் இருப்பவர்கள் அங்கு சென்று சாமான்களும் வாங்கிக்கொண்டு எரிபொருள் நிரப்பிக்கொண்டு வருவார்கள். பொருளாதார நிலைமைகளினால், மெக்ஸிகோவில் இவை அவ்வளவாக நன்றாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இந்த கதை எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை, முன்பு அங்கீகரிக்கப்பட்ட செவ்இந்தியர்களின் தலைவர்கள், எவரையுமே தங்கள் இனத்தில் சேர்க்கலாம், அப்பிடி சேர்த்தவர்கள் உடனடியாக அமெரிக்கா குடியுரிமை பெறுவார்கள், சில சீனர்கள் இப்படி அவர்களின் இனத்தில் சேர்ந்து அமெரிக்கர்கள் ஆனார்கள், பின்பு இந்த முறையை ஒளித்து விட்டார்கள் என்று ஒரு கதை உலாவியது. தமிழ் சிறி, எனது பிள்ளைகளுக்கு படிப்பதுக்கு உதவி செய்யும்பொழுது அந்த பாடப்புத்தகங்களிலில் இருந்து நான் இவற்றை நிறைய அறிந்து கொண்டேன். கொலம்பஸ் இறங்கியது கிழக்கு கரை. 1600 கடைசியிலும் 1700 ஆரம்பத்திலும், மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவின் மேற்கு பக்க மாநிலங்கலில் ஸ்பானிஷ் குடியேற்றங்கள் வேகமாக நடைபெற்றது. ஸ்பெயின் அரசரின் கட்டளைக்கு இணங்க, முறைப்படுத்தப்பட்ட குடியேற்றங்கள் நடைபெற்றது. படைவீரர்களுடன், பாதிரியார்களும் ஆண்களும் பெண்களுமான குழுவாக சென்று குடியேறினார்கள். அமெரிக்கா-மெக்ஸிகோ யுத்தம் நடந்தது 1848இல். அதன்முடிவில் பல மாநிலங்களை/நிலங்களை அமெரிக்கா பெற்றுக்கொண்டது. அமெரிக்காவின் கிழக்கு பக்கங்களில் (அதிக மக்கள் கொண்ட இடங்கள்) ஆங்கிலேயர்களும், நடுப்பகுதிகளில் பிரான்ஸ் உம், தென் அமேரிக்காவில் இருந்து, மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவின் மேற்குவரைக்கும் ஸ்பானியர்களும் ஆதிக்கம் செலுத்தினார்கள். கிழக்கின் சில பகுதிகளில் (உதாரணம் நியூயார்க், Delaware) Dutch West India கம்பெனி மூலம் ஹாலந்தும் ஆதிக்கம் செலுத்தி செவ்விந்தியர்களுடன் வியாபாரம் செய்தார்கள். 1776 இல் கிழக்கில் இருந்த 13 மாநிலங்கள் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது, பிறகு Louisiana மற்றும் சில நடுப்பகுதிகளை பிரான்ஸின் நெப்போலியன் உடனான ஒப்பந்தத்தின் மூலம் வாங்கினார்கள், பிறகு மெக்ஸிக்கோவிடம் இருந்து மேற்கு பகுதிகளை பிடித்தார்கள், வடஅமேரிக்காவில் ரஷ்யா இருப்பது நல்லதல்ல என்ற காரணத்தினால், கிட்டடியில் அலாஸ்காவை ரஷ்யாவிடம் இருந்து வாங்கி சேர்த்தார்கள். ரஷ்யாவிற்கும் அலாஸ்காவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் இருக்கும் இரண்டு சிறிய தீவுகளுக்கிடையில் எல்லை பகுதியை வகுத்தார்கள். ஒரு தீவு ரஷ்யாவிடமும் மறு தீவு அமேரிக்காவிடம் இருக்கிறது. தற்பொழுது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 2.4 மைல்கள் மட்டுமே. நான் எனக்கு தெரிந்தவற்றை பொதுவாக, மேலோட்டமாகவே எழுதியுள்ளேன், தவறுக்கு இருக்கலாம்.
  6. நல்லதொரு விளக்கம்.இத்தனையும் நடந்திருக்குதா? நன்றி நீர்வேலியான். புங்கை நல்லகாலம் நான் அரைகுறையாக சொன்னதை நீர்வேலியான் முழுமையாக சொல்லியுள்ளார்.
  7. நல்லதொரு கட்டுரை ஈழப்பிரியன் ஐயா ஆம் புங்கை நானும் இதை பற்றி கேள்விப்ட்டேன். என்னுடைய முன்னாள் மேலாளர் ஒரு மெக்க்சிகன். அடிக்கடி இலங்கைக்கு விடுமுறைக்கும் வருவான். அவன் கூறிய ஒரு விடையன் என்னவென்றால் ஆங்கிலேயர்கள் தாங்கள் பிடித்த நாடுகளை அபிவிருத்தி செய்தார்களாம் உ+ம் ரயில் பாதைகள் போன்றவற்றை அமைத்துள்ளார்கள். ஆனால் ஸ்பானிய ஆக்கிரமிப்ள‌ர்கள் அப்படி எதுவும் செய்வதிலையாம்.
  8. மிக்க நன்றி, நீர்வேலியான்…! ஆங்கிலேயர்களிலும் பார்க்க ஸ்பானியர்களின் காலனித்துவம் இலாபத்தையும், மதம் பரப்பலையும் நோக்கமாகக் கொண்டது..!அவர்களின் அக்கிரமங்கள் அதிகமாக இருந்தாலும், அடிமகளை ஓரளவுக்கு மனிதராக மதித்தார்கள் என்று தான் கூற வேண்டும்! ஆங்கிலேயர் அடிமைகளை savages ஆகத் தான் கருதினார்கள்.இதுநாள் அடிமைகள் ஆங்கிலேயர்களை விடவும் ஸ்பானியர்களை விரும்பினார்கள்!
  9. படம் : கலியாண மண்டபம் (1965) இசை :பார்த்தசாரதி வரிகள் :வாலி பாடியோர்:TMS & சுசீலா
  10. நீண்ட நாட்களாக சன்பிரான்ஸ்சிஸ்கோவில் இருந்து லாஸ் அங்கிலஸ் கடற்கரை ஓரமாக உள்ள ஒற்றையடிப் பாதையில் (அனேகமான இடங்கள்)போக வேண்டுமென்று ஒரு கனவு இருந்தது. ஒரேஒரு முறை ஒரு 50 மைல் தூரம்வரை குடும்பமாக ஒரு நிகழ்வுக்கு போயிருந்தோம்.அப்போதே இந்த பாதையின் மகத்துவம் பற்றி சொன்னார்கள்.அப்போதே எல்லாவற்றையும் கேட்ககேட்க கடற்கரையையும் பார்க்க ஒருமுறை இந்த பாதையில் போனால் என்ன என்று யோசித்தேன். அதன் பின் 2012-14 (சரியாக ஆண்டு நினைவில் இல்லை)ஆண்டளவில் அவுசிலிருந்து அண்ணனின் மகன் நண்பியுடன் வந்திருந்தான்.அவனும் இந்த பாதையை கேள்விப்பட்டோ ஏதோ இதே பாதையில் கொன்வேட்டர் கார் வாடகைக்கு எடுத்து அதுவும் கோடை காலத்தில் மேலே துறந்துவிட்டுட்டு அவ்வளவு தூரமும் இருவரும் பயணம் செய்தனர்.பயணம் முடிந்து அடுத்தநாள் தூக்கத்தால் எழும்பினால் முகம் முழுக்க தோலுரிந்து இருந்தது வேறுகதை. ஏற்கனவே எனக்குள் இருந்த ஆசை இவனும் போன அனுபவங்களை சொல்லசொல்ல இன்னும் வேகம் கூடியது.ஆனாலும் நடக்குமா இல்லையா பத்தோடு பதினொன்றாக இதுவும் போயிடுமா என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில்த் தான் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவும் முழு தூரமும் நானே கார் ஓடிக் கொண்டு போவேன் என்று நினைத்திருக்கவில்லை. ஒருநாள் காலை 9 மணிபோல புறப்பட்டோம்.ஆங்காங்கே தங்கிதங்கி இடங்கள் பார்த்து போவதற்காக மகளும் மருமகனும் முக்கியமான இடங்கள் என்று 8 இடங்கள் வரை படத்தில் அடையாளமிட்டிருந்தனர்.இந்த பாதையில் பல இடங்களில் கைபேசி வேலை செய்யாது.எனவே வரைபடத்தையும் முன்னரே சேமித்துக் கொண்டேன். வழமை போன்று போகும் பாதையை தேடினால் நெடுஞ்சாலையையே காட்டும்.நெடுஞ்சாலை ஐந்தரை மணிநேரமும் 101 ஆறரை மணிநேரமும் ஆகும்.ஆனால் நான் விரும்பிய பாதையில் தொடர்ந்து ஓடினால் 9 மணிநேரமாகும். இதுதான் நாங்கள் போனபாதை மிகுதி தொடரும்.
  11. அப்பிடியெண்டால் நீர்வேலியான் காட்டாயம் அந்த கோயில்லை தூக்குக்காவடி எடுத்திருப்பார்....😁🤣
  12. இது பக்கத்தில் பக்கத்தில் பிள்ளையார் கோலும் விஸ்ணு கோவிலும் இருக்கிறது.நாங்கள் சனிக்கிழமை போனபடியால் கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருந்தது.நிறைய தமிழ்நாட்டு தமிழர்கள் வந்திருந்தார்கள்.தமிழ் ஐயர்மாரும் இருப்பதாக @நீர்வேலியான் சொன்னார். வழமை போன்று ஒரு அரிச்சனை.மனைவிக்கு பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிளளைகள் எல்லோரது நாள் நட்சத்திரங்கள் எல்லாம் ஞாபகம்.வரிசையாக எல்லோரது பெயர்கள் நட்சத்திரங்களும் சொல்லி செய்தோம். மதிய சாப்பாடு கோவிலிலேயே முடித்துக் கொண்டோம்.பரவாயில்லை சாப்பாடு நன்றாகவே இருந்தது.விலையும் மிகவும் மலிவாக இருந்தது.ஒரு சாப்பாடு 4 டாலர்கள் மட்டுமே. கோவிலைப்பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் @நீர்வேலியான் தான் சொல்லோணும்.
  13. ஈழப்பிரியன் & நீர்வேலியான்…. சுவராசியமான தகவல்களுடன் அருமையான ஒரு கட்டுரையை வாசித்த திருப்தி ஏற்பட்டது. 1700’களில் அமெரிக்க, மெக்சிகோ யுத்தம் நடந்தது என்றால்… “கொலம்பஸ” எப்ப அமெரிக்காவை கண்டு பிடித்தவர். நான் அறிந்தவரையில்…. கொலம்பஸ் கண்டு பிடித்த அமெரிக்காவுக்கு, 250 வயசு என நினைக்கின்றேன். 😁
  14. என்ன தல பொசுக்கெண்டு இப்பிடி சொல்லிப்போட்டியள் ?!?!?!?!?!?!?!?!?!?!?!😵 படங்களோடை கனக்க எதிர்பார்த்தனே 🤔
  15. சுவியவர்களின் கதை சிறப்பாக நகர்ந்து நடந்து செல்கிறது. காத்திருக்வைக்காது தொடர்ந்து எழுதியமை மேலும் சிறப்பு. பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக.
  16. கதை அந்த மாதிரி, வாசிக்க நன்றாக இருந்தது
  17. FILM : AADI PERUKU SONG : PURIYATHU SINGER : P.B.SRINIVAS LYRICS : SURADHA MUSIC : A.M.RAJA YEAR : 1962
  18. கோத்தாவும்.......பசிலும்........மகிந்தவும் விமானத்தில் செல்லும் போது பேசிக்கொண்டார்களாம். (முதலில்)#கோத்தா: 1 லட்ச ரூபாயை 100 ரூபாயாக மாற்றி கீழே போட்டால் அதை ஆயிரம் பேர் எடுத்தால் அந்த 1000 பேரும் என்னை வாழ்த்துவார்கள் (இரண்டாவதாக) #பசில்.. அதே 1 லட்ச ரூபாயை 10 ருபாயாக மாற்றி கீழே போட்டால் அதை 10,000 பேர் எடுப்பார்கள் அந்த பத்தாயிரம் பேரும் என்னை வாழ்த்துவார்கள்!!!. (மூன்றாவதாக )#மஹிந்த : அந்த 1 லட்ச ரூபாயை ஒவ்வொரு ரூபாயாக மாற்றி கீழே போட்டால் அதை 1 லட்சம் பேர் எடுப்பார்கள் அந்த ஒரு லட்சம் பேரும் என்னை வாழ்த்துவார்கள். இதைக்கேட்டுக்கொண்டிருந்த அந்த விமானத்தின் #பைலட் : இந்த விமானத்தை அப்படியே கொண்டு போய் கடலில் கவிழ்த்தால்.... இலங்கையில் 3 கோடி மக்களும்_என்னை_வாழ்த்துவார்கள் !!! நாட்டை என்னடா பண்ணிவச்சிருக்கீங்க...
  19. இந்தியாக்காரனை ‘ஹிந்தியன்’ என்று எல்லோ அழைப்பார்கள்!😂
  20. ஈழப்பிரியன்…. இந்தியன் என்றால், நம்ம அயல்நாட்டு, ஹிந்தி பேசும் இந்தியன் என நினைக்கப் போகிறார்கள். 😜 செவ் இந்தியன் என்று… குறிப்பிடுங்கள். 🤣
  21. பரவாயில்லை அங்கிள்… எனக்கும் இடங்கள் அதிலும் காடு மலை கடல் என்பனவற்றை பார்க்க மிகவும் விருப்பம்.. அதிலும் ஒரு தரமாவது USல் உள்ள Grand Ganyan பார்க்க விருப்பம்..let’s see
  22. சிங்கப்பூர் லெவலுக்கு முன்னேறின இந்து சமுத்திரத்தின் முத்து.
  23. உள்ளத்தின் கதவுகள் கண்களடா ........! 😍
  24. பார்வை ஒன்றே போதுமே.......(15). வீட்டுக்கு வருகின்றார்கள். தூரத்தில் வரும்போதே கோழிக்கறியின் வாசனை மூக்கைத் துளைக்கிறது. முற்றத்தில் நின்ற சேவல் சட்டிக்குள் கொதித்துக் கொண்டிருக்கு. மகேஸ்வரியின் பழகிய கை பக்குவமாய் சட்டியை கிளறுகின்றது.அவள் மனசும் அதுபோல் கொதித்துக் கொண்டிருக்க நினைவுகள் உள்ளே பிராண்டிக் கொண்டிருக்கின்றன. கடவுளே எதோ ஒரு எண்ணம் என்னையும் அறியாமல் என்னை அலைக்கழித்து இந்த மனுஷன் என் மனசுக்குள் புகுந்து விட்டார். அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்ற திருப்தி. அது கூட உனக்குப் பொறுக்கவில்லையா. மனம் ரணமாய் வலிக்கிறது. யோசித்துப் பார்க்கிறாள், இது எப்படி......சில கோவில் தீர்த்தக்கிணறுகளில் ஒரு சான் அளவு தண்ணீர்தான் இருக்கும்.அபிஷேகத்தின் பொழுது பத்து குடமா, நூறு குடமா, ஆயிரம், லட்ஷம் குடமா நீர் சுரந்து கொண்டு இருக்கும் வற்றாது, அதுபோல் இப்பொழுது அவர்மீதுள்ள அன்பு பிரவாகித்து வருகிறதே, நான் என்ன செய்வேன். குழம்புபோல் மனமும் கொதிக்கிறது. அவளின் நிலையில்தான் சாமிநாதனும் இருந்தார். சமீபகாலமாக அவளின் நடவடிக்கையில் மாற்றங்களை அவர் பார்த்துக் கொண்டுதான் வருகிறார். இப்போது திண்ணையில் இருந்து மகேஸ்வரியைப் பார்க்க அவளின் பரிதவிப்பு அவரை என்னமோ செய்கிறது. இதற்கெல்லாம் தானும் காரணமாகி விட்ட குற்றவுணர்வு மேலோங்கி அவரை என்னமோ செய்கிறது. கண்கள் பனிக்கின்றன. பிள்ளைகள் வந்து விட்டதால் மறுபுறம் திரும்பிப் புறங்கையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார். ஆனால் அவர்கள் அதைக் கவனித்து விடுகிறார்கள். மகேஸ்வரி வெளியில் வந்து வாங்கோ பிள்ளைகள் சாப்பாடு தயார். எல்லோரும் சாப்பிட்டு விட்டுத்தான் போகவேணும். தம்பி முத்து ஓடிப்போய் எல்லோருக்கும் வாழையிலைகள் வெட்டிக் கொண்டு வா அப்பு. பிள்ளை பாய்களை எடுத்து வந்து போடனை என்று சொல்லிக்கொண்டு பம்பரமாய் சுழல்கிறாள். எல்லோரும் சாப்பிடும்போது சாமிநாதனும் பேருக்கு சாப்பிட்டு விட்டு எழும்புகிறார், மகேஸ்வரிக்கு சாப்பிடவே மனமில்லை வெறும் தண்ணியைக் குடித்துவிட்டு எழும்புகிறாள். அம்மா சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது, இப்படி ஒரு விருந்து சாப்பிட்டு ரொம்ப காலமாச்சுது என்று ரவிதாஸ் சொல்ல நிர்மலாவும் ஓம் அம்மா என்று சொல்கிறாள். கிளம்புகிற நேரம் எல்லோருக்கும் ஒரு தயக்கமாய் இருக்கு. சாமிநாதனுக்கும் தான் எப்படி இனியும் இங்கிருப்பது என்ற தயக்கம் ஆனாலும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு முன்வந்து "முத்தம்மா" ஆம் இதுவரை அவளை அவர் அப்படித்தான் கூப்பிட்டு வந்திருக்கிறார். நீங்கள் விரும்பினால் என் பிள்ளைகளில் ஒருவரையும் உங்களின் பிள்ளைகளில் ஒருவரையும் மணமுடித்து வைக்கலாமே என்று சொல்கிறார். அதற்கு அவளும் அதென்ன புதிதாக இன்றைக்கு உங்க பிள்ளை , என் பிள்ளை என்று பிரித்துப் பேசுகிறீர்கள். ஆனாலும் நீங்கள் எது சொன்னாலும் எனக்கு சம்மதம். இவ்வளவு நாளும் இந்தப் பிள்ளைகளுக்கும் எனக்கும் ஒரு அரணாக இருந்து அதுகளை சொந்தக்காலில் நிக்குமளவு ஆளாக்கி விட்டது நீங்கள்தான். அன்று நீங்கள் சொல்லவில்லை யென்றால் முத்துவால் படித்திருக்கவே முடியாது. அந்த நன்றியை நாங்கள் ஒருகாலமும் மறக்க மாட்டோம்.எதுக்கும் பிள்ளைகளையும் ஒரு வார்த்தை கேளுங்கள்.அவர்கள் முடிவெடுக்கட்டும் என்று சொல்லும்போதும் அவலறியாமல் குரல் கம்முகிறது கண்களில் நீர் தளும்புகிறது. சாமிநாதனும் பிள்ளைகள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கோ என்று சொல்ல ரவிதாஸ் முன்வந்து அப்பா நீங்களும் இவ்வளவுகாலமாய் வேலை வேலை என்று வீட்டையும் மறந்து எங்களுக்காக உழைத்தீர்கள். அதனாலோ என்னவோ எங்கள் அம்மாவையும் இழக்க வேண்டி வந்து விட்டது. பின் வந்த இடத்தில் இவர்களின் குடும்பத்தையும் ஒரு மேல் நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறீங்கள். அதுபோல்தான் இந்த அம்மாவும் தன் பிள்ளைகளின் நலனுக்காகவே இவ்வளவு காலமும் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். இனி நீங்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் ஆசைப்படுகின்றோம் என்று சொல்ல, சித்ரா முன்வந்து ஓமம்மா அண்ணா சொல்வதுதான் சரி என்கிறாள். சற்றுமுன் நாங்கள் தோட்டத்தில் இதை பற்றித்தான் கதைத்தோம் என நிர்மலாவும் சொல்லிவிட்டு ஓம்....நீங்கள் "பார்வை ஒன்றே போதுமே" என்று பார்வையால் வாழ்ந்தது போதும் மகேஸ்வரியின் கையைப் பிடித்து நீங்கள் எங்களுக்கும் அம்மாவாக வேணும் இதை நீங்கள் மறுக்கக் கூடாது என்கிறாள். மகேஸ்வரி வெட்கத்துடன் சாமிநாதனைப் பார்க்க அவரும் மௌனமாக ஓம் என்று தலையசைக்கிறார். கொஞ்ச நேரத்தில் ஆடைகள் மாற்றிக்கொண்டு வந்த முத்துவும் சித்ராவும் அம்மா இன்று நாங்கள் அண்ணாத்தை படம் பார்த்துவிட்டு அண்ணாவின் பங்களாவில்தான் இரவு தங்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டே ஆடி காரில் ஓடிப்போய் ஏற அது கோர்ன் அடித்துக் கொண்டு சீறிச் செல்கின்றது. திண்ணைத் தூணைப் பிடித்தபடி ஒருக்களித்து நின்று கொண்டு மகேஸ்வரி வெட்கமும் காதலும் கலந்து காலால் நிலத்தை கீறிக்கொண்டு நிக்கிறாள். "காணாத உறவொன்று கண்முன் நிற்க வாழாத பெண் ஒன்று வழி கண்டதுபோல்" தலை தாழ்திருக்க விழிகளை அசைத்து மேற்கண்ணால் அவரைப் பார்க்கிறாள். சாமிநாதனும் மெல்ல நெருங்கி வந்து அவள் தோளைத் தொட்டு முத்தம்மா என்று மெல்ல சொல்ல ..... ம்.....என்கிறாள். சற்று மௌனம்..... பின் ஏன் நீங்கள் ரஜினி படம் பார்க்க போகவில்லையா...... இல்லை...... ஏனாம் ..... நாங்கள் வலிமை பார்க்கலாம் என்று ...... அப்படியா எனக்கு அஜித் படமும் பிடிக்கும். அப்படியென்றால் இருவரும் சேர்ந்தே பார்க்கலாம். தோள் மீதிருந்த கையை மெதுவாக அழுத்துகின்றார். அவளறியாமலே உடல் இசைவாக குழைகிறது.கூடவே மேனியெங்கும் சிறு நடுக்கமும்......இவ்வளவு காலமும் இருவருக்குள்ளும் தூங்கிக் கிடந்த ஹார்மோன்கள் சலனமடைந்து கிளர்ச்சியுற்று ஹார்மோனியம் வாசிக்கத் தயாராகின்றன. இதற்கு மேலும் தாங்க முடியாமல் "அரங்கனின் தோளில் ஆண்டாள் மாலைபோல்" கைகளை அவர் கழுத்தில் போட்டு மார்பில் மலர்கிறாள். துவளும் அவளது இடையை தன் இரு கைகளால் இறுக்கி அந்த மலரை தன்னுடன் சேர்த்தணைத்தபடி திண்ணையில் அமர்கிறார் சாமிநாதன்......! யாவும் கற்பனை......! யாழ் 24 அகவைக்காக அன்புடன் சுவி......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.