Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. nilmini

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    929
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19139
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87993
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46798
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/25/23 in Posts

  1. 2017 ஆம் ஆண்டு எமது பல்கலைக்கழக BBB (Tribeta Biological Honor society)அமைப்புக்கு கிடைத்த ஆய்வு பணத்துடன் லீமார் விலங்கினங்கள், மற்றும் மடகஸ்கார் தாவர விலங்கினங்களை பற்றிய ஆய்வுக்காக மாணவ மாணவிகளுடனும், பேராசிரியர்களுடனும் அட்லாண்டாவில் இருந்து பிரான்ஸ் வழியாக மடகாஸ்கர் சென்றடைந்தோம். மடகாஸ்கர் பிரெஞ்சு ஆட்சியில் இருந்ததால் பிரான்சில் இருந்து தினமும் நேரடி விமான சேவைகள் இருக்கு. நிறைய பிரெஞ்சு காரர்கள் அடிக்கடி மடகஸ்கார் செல்வார்களாம். மடகஸ்காரில் பிரெஞ்சு மொழியில் பேசும் எல்லோருக்கும் குறிப்பாக சிறுவர்களுக்கு பிரெஞ்சு பயணிகள் பணம் கொடுப்பதால் எல்லா மக்களும் பிரெஞ்சு தெரிந்து வைத்திருக்கிறார்கள். விமான நிலையத்தில் இருந்து வேர்ல்ட் ஸ்ட்ரிட்ஸ் (World strides) என்னும் அமைப்பினர் எம்மை வரவேற்று அந்தணனாரிவோ (Antananarivo) விமான நிலையத்தில் இருந்து ஆன்டாசிபே சரணாலயத்துக்கு அழைத்து சென்றனர். எங்கள் குழுவினர் ஒவ்வொருவருக்கும் 12,000 அமெரிக்கன் டொலர் செலவிட்டிருந்ததால் 13 நாள் பயணம் முழுவதும் உயர்தர ஹோட்டல் மற்றும் ரிசொர்ட்கலில் தங்கினோம். இந்த்ரி (Indri lemur) எனப்படும் லிமூர் இனம் கூர்ப்பில் மனிதர்களுக்கு தொடர்புடையது. தாவர உண்ணியான இந்த்ரி லெமூர் இனம் வாழ்நாள் முழுவதும் ஒரு குடும்பமாக வாழும். அவைகளையும் , பல விதமான பச்சோந்திகளையும் அடர் காட்டுக்குள் நடந்து சென்று பார்த்து சில படங்களையும் எமது பயண விபரங்களையும் இத்துடன் இணைத்திருக்கிறேன். அங்கு பாம்புகளோ,யானைகளோ வேட்டையாடும் இனங்களான புலி, சிங்கம் கரடிகளோ இல்லாததால் இரவிரவாக காடுகளில் நடமாட முடியும். அத்துடன் லெமூர் இனங்களும் மனிதர்கள் தம்மை தாக்க மாட்டார்கள் என்று கடந்த பல தசாப்தங்களாக உணர்ந்த படியால் அவைகள் மனிதர்களை தாக்குவதும் இல்லை, பயந்து ஓடுவதும் இல்லை. மாறாக மனிதர்களை நம்பும் ஒரு காட்டு விலங்குங்களாக இருக்கின்றன. மேலும் தொடரும். ஜல்லிக்கட்டில் இருந்து அப்பச்சட்டி வரை எல்லாமே இருக்கும் ஒரு விசித்திர ஊர் மடகாஸ்கர்.
  2. இங்கே ஒரு வாழ்வு இருந்தது அங்கே ஒரு கதை இருந்தது அதிலும் ஒரு அறம் இருந்தது அப்போ எல்லாம் அழகு இருந்தது வீடு இருந்தது மரம் இருந்தது மரத்தில் பல பறவை இருந்தது பாடி இருந்தது கூடி இருந்தது பல குஞ்சுகள் அங்கு கூவி இருந்தது நிலவும் இருந்தது கனவும் இருந்தது நித்தம் இசைக்கும் பாடல் இருந்தது ஆட்டம் இருந்தது கூத்தும் இருந்தது எங்கும் சலங்கை ஒலியாய் இருந்தது நதி இருந்தது கடல் இருந்தது பூ இருந்தது கனியும் இருந்தது அருகில் எங்கும் ஆலயம் இருந்தது அங்கே ஒலிக்கும் மணி இருந்தது பள்ளி இருந்தது படிப்பும் இருந்தது துள்ளித் திரிந்த காலம் ஒன்றிருந்தது அடிக்கடி கூடும் நண்பர் இருந்தனர் அணைத்து எம்மை தாங்கும் ஆலமரமிருந்தது கோவில் இருந்தது சாமி இருந்தது வருடா வருடம் திருவிழா நடந்தது அம்மன் ஆடி வரும் தேரும் இருந்தது அதை விட அழகு எது தான் இருந்தது அறிவு இருந்தது தேடல் இருந்தது ஆயிரம் பள்ளிகள் அருகில் இருந்தது கலை இருந்தது தமிழ் மொழி இருந்தது காக்கவென்றொரு தெய்வம் இருந்தது மார்கழி மாதம் ஊர்களில் எல்லாம் கூவுத் திரியும் குயில்கள் இருந்தனர் பூவும் ஆட கூந்தலும் ஆட கண்கள் ஆலே கவிதைகள் பேசி சந்திரன் போலே பெண்கள் இருந்தனர் காதல் இருந்தது கனிவும் இருந்தது பாசம் இருந்தது நேசம் இருந்தது பங்கு பிரித்து உண்ணும் வாழ்வு இருந்தது உண்மை இருந்தது நேர்மை இருந்தது நீரும் இருந்தது நெருப்பும் இருந்தது நித்திய வாழ்வினில் சத்தியம் இருந்தது அறமும் இருந்தது தர்மமும் இருந்தது அழியாப் பிரம்ம ஜோதி எரிந்தது இத்தனை வாழ்வும் எங்கே போனது எத்தனை கனவுகள் வந்து போகுதே இன்னும் கனவுகள் உயிர்க்கவில்லையா எமக்காய் இரவுகள் விடியவில்லையா எங்கே கனவுகள் தொலைந்து போனதா. பா.உதயன்✍️
  3. விளங்க நினைப்பவன், ஜேர்மனியில்... வேலை விபத்துக்கு பணம் கொடுப்பது வெகு அரிது. 🙂 ஆனால்.... விபத்திலிருந்து மீண்டு வர எவ்வளவு பணம் என்றாலும் செலவழிப்பார்கள். வேலை விபத்து ஆட்களுக்கு வைத்தியம் செய்வதற்காகவும், தெரப்பி செய்யவும் என்று குறிப்பிட்ட இடங்களில் மருத்துவ மனைகள் உள்ளது. அதில் உயர்தர உணவு, சிகிச்சைகளுடன், சென்று வர வாகன வசதிகள் என்று.. எது தேவையோ.. அவற்றை அவர்களே ஒழுங்கு செய்து தருவார்கள். உதாரணத்துக்கு.... சிறிய பிள்ளைகள் வீட்டில் இருந்து, ஒரு பெண் விபத்தில் சிக்கியிருந்தால்.. பிள்ளைகளை பராமரிக்க கணவனுக்கு சம்பளத்துடன் விடு முறையும், சமைக்கவும் ஆட்களை ஒழுங்கு பண்ணி தருவார்கள். அந்த வகையில் மிகவும் பயனுள்ள வேலைகளை செய்வதால்... எமக்கும் அது மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும். 👍
  4. வீட்டு வேலைகள் முடிந்து விட்டது. ஆனால் நான் நினைத்தது போல பினிஷிங் வரவில்லை. சமருக்கு போய்தான் செய்யப்போகிறேன். தோட்டம் அழகாக வருகிறது. ஓய்வு பெற்ற பரி யோவான் கல்லூரி விவசாய டீச்சர் தான் தோட்டம் செய்து பராமரிக்கிறார். சில யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பகுதி நேர வேலை இந்தமாதிரி தோட்டங்களில் கொடுக்கிறார். இப்போது பல்கலைக்கழக தோட்டக்காரரும் அவர்தான். மருத்துவக்கல்லூரி, யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களுக்கு இவர்தான் அலங்காரம் செய்வபவர்
  5. 2021´ம் ஆண்டு கார்த்திககை 29´ம் திகதியன்று வேலையிடத்தில் நடந்த விபத்தின் பின்... நோயாளர் காவு வண்டியில்.. வேலையிடத்தை விட்டு சென்ற நான், 15 மாத தொடர் சிகிச்சை, தெரப்பியின் பின்... இன்று முதன் முதலாக மீண்டும் வேலையிடத்துக்கு சென்றேன். 🙂 வைத்தியரின் அறிவுரைப்படி... முதல் இரண்டு கிழமைகள் தினமும் 3 மணித்தியாலமும், மூன்றாம், நான்காம் கிழமைகள் தினமும் 5 மணித்தியாலமும், ஐந்தாம், ஆறாம் கிழமைகள் 7 மணித்தியாலமும் வேலை செய்து பார்த்து சரி வந்தால், தொடர்ந்து எட்டு மணித்தியாலப் படி வேலை செய்யலாம் என்று சொன்னார். இன்று முதல் நாள் என்னை வேலை இடத்தில் கண்டது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. வேலை இடத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இருவர் ஓய்வெடுத்து போய் விட்டார்கள். இருவருக்கு... ஒரு கால் கழட்டி நிரந்தரமாக வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். அதில் ஒருவருக்கு சீனி வருத்தத்ததால் கால் கழட்டியதாம், மற்றவர்.... பல வருடமாக அதிக சிகரெட் புகைத்ததால், கால் கழட்ட வேண்டி வந்ததாம். எல்லோரையும் இன்று கண்ட போதும், எனக்கு விபத்தை ஏற்படுத்தியவர் எனக்கு கிட்ட வர இல்லை, தூரத்தில் அவரின் முகம் தெரிந்தது. நான் பார்த்தவுடன், ஒளித்து விட்டார். குற்ற உணர்ச்சி... எப்படி முகத்தில் முழிப்பது என நினைத்தாரோ தெரியவில்லை. 😎 எல்லோரும் எனக்கு... உடம்பு கூடியிருப்பதாக சொன்னார்கள். ஆஸ்பத்திரி சாப்பாடு செய்த வேலை என்று பகிடிக்கு சொன்னேன். 🙂 உண்மைதான்... முன்பு இருந்ததை விட பத்து கிலோ கூடியுள்ளேன். வேலை செய்த உடம்பு திடீரென சும்மா இருக்கும் போது, கூடுவது வழமை தானே. இனி வரும் காலங்களில்... குறையும் என நினைக்கின்றேன். 😋 விபத்தின் பின் நடந்த சிகிச்சைகளையும், தெரப்பிகளையும் நினைவில் வருபவற்றை அவ்வப்போது தொடர்ந்து பதியலாம் என நினைக்கின்றேன். உங்களுக்கு வாசிக்க விருப்பமா? 😃 பிற் குறிப்பு: கால் விரலுக்கு, Qtex பூசுறனீங்களா என்று கேட்டு, கடுப்பேத்த வேண்டாம். 😂 🤣
  6. இன்று தாய்மொழி்தினம். எம் உயிரினுமினிய தமிழன்னைக்காக 2020 பெப்ரவரி 21 இல் நானெழுதிய அருட்புகழ் கீழே தரப்பட்டுள்ளது.
  7. வட் யூ மீன்? நான் அமாவாசையில தான் நல்லகாரியமே தொடங்குவன்
  8. ஓ….அவருக்கு இப்படி ஒரு காரணப்பெயரும் இருக்கா🤣
  9. ஆமாம்.. எதை குடித்தாலும். அப்படி தான் தெரியுது 😂. அப்போ ஞாயிற்றுக்கிழமை யாருக்கு....முத்தார்சாமிக்கா. ?. 🤣
  10. வெளிநாடு வந்த ஆரம்பத்தில் ஆங்கில அறிவினை வளர்ப்பதற்காக இலகு நடையில் உள்ள ஆங்கில புத்தகங்கள் வாசிப்பதுண்டு, மேலே உள்ள நாவலின் சிறுகதை வடிவ புத்தகம் வாசித்திருந்தேன். ஆபத்து வரும்போது மனிதர்களோ மிருகமோ ஒரே மாதிரியே சிந்திக்கிறார்கள், ஒன்று எதிர்த்து போரிடுவது அல்லது தப்பி ஓடுவது, இந்த கதையில் தனது எஜமானியினை விபத்திலிருந்து காக்க குதிரை புகையிரதத்துடன் போரிட முடிவு செய்கிறது (அது தன் அறிவிற்கேற்ப). அந்த விபத்தின் பின் அந்த குதிரையும் அந்த மனிதர்களும் அடிப்படையில்லாமல் கோபமுள்ள முரட்டு மனிதர்களாகவும், குதிரையாகவும் மாறிவிடுகிறார்கள். சில மனிதர்கள் வெறுப்புணர்வுடன் எப்பொதும் இருந்தால் அவர்கள் மனதிலும் இவ்வாறான காயங்களே அவர்கள் இவ்வாறு மாறுவதற்கு காரணம் என்பதனை இந்த புத்தகத்தினை வாசித்ததின் பின்னர் உணர்ந்துகொண்டேன்.
  11. ரஞ்சித், குமார் அச்சகத்தை காந்தி அச்சகம் என்று தவறுதலாக நான் குறிப்பிட்டுவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன். 70களில்தான் எனக்கு அவர்களுடனான பழக்கங்கள் கிடைத்தன. ஒருவேளை முன்னர் அவர்கள் நெல்லியடியில் அந்த அச்சகத்தை வைத்திருந்தார்களோ எனக்குத் தெரியாது. ஆக திரு சபாரத்தினம் எழுதியது சரியாகக் கூட இருக்கலாம். எது எப்படியோ பருத்தித்துறையில் இருந்த குமார் அச்சகம் 1984இல் சிறீலங்கா இராணுவத்தால் எரிக்கப்பட்டது MEERA, பருத்தித்துறைக்கு முன்பாக உள்ளதுதான் புலோலி. இதற்கு தெற்கு, கிழக்கு, மேற்கு என பிரிவுகள் உண்டு. இதில் புலோலி மேற்குதான் மேலைப் புலோலி. மேலைப் புலோலி என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருபவர் சதாவதானி கதிரவேற்பிள்ளை அவர்கள்.
  12. நளாயினி ரீச்சரை தெரியும். ஆங்கிலம் படிப்பித்தவர் என நினைக்கிறேன். யோகலிங்கத்துடன் தொடர்பு உண்டு.வன்கூவரில் உள்ளார். அமிர்தலிங்கம் ரொரன்டோவில் உள்ளார் என நினைக்கிறேன். தொடர்பு இல்லை. திலக ரீச்சர் தான் சொந்தம்.🙂
  13. எல்லோருடைய கொமெண்ட்ஸ்க்கும் ஊக்கத்துக்கும் மிகவும் நன்றி. எப்பவோ எழுத நினைத்தது. அங்கு வாழும் மக்களில் 95 வீதமானோர் 500 வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கை தான் வாழ்கின்றனர். மிகவும் வறுமை. வரும்போது அநேகமான கொண்டுபோன பொருட்களை அங்கு விட்டுட்டு அழகான கலை பொருட்களை வாங்கி வந்தோம். இந்த சிறுமிகள் மாலையில் பவோபாப் என்னும் ராட்சத மரத்தில் இருந்து பெறும் மணிகளை கொண்டு செய்த மாலைகளை விற்றுத்தான் பள்ளிக்கூடம் போகிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் கடிகாரம் நான் குடுத்தது. இந்த மரம் நெடுந்தீவு மற்றும் மன்னாரில் போர்த்துக்கீசரால் ஆபிரிக்காவில் இருந்து கொண்டுவந்து நடப்பட்டது. இந்த இலைகள் தண்ணிப்பிடிப்பானவை. அரேபியார்களுக்கு குதிரை விற்கும் காலத்தில் குதிரைகள் இந்த மரத்தின் கீழ் இளைப்பாறி தண்ணிக்காக இலைகளையும் சாப்பிட்டதாக நெடுந்தீவு சென்றபோது சொன்னார்கள். யாழ்ப்பாணத்தில் செய்யும் பனை சார்ந்த கைவினை பொருட்களின் தரம் பத்தாது. இந்த வறிய மக்கள் செய்து வைக்கும் பொருட்கள் மிகவும் உறுதியான நல்ல தரமானவை. ஏனெனில் அதை செய்வதற்கு பயிட்சியாளர்கள் இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் அப்படி செய்தா நல்லம். அகப்பைகள் எல்லாம் கொஞ்ச காலத்துக்கு தான் பாவிக்கலாம். நான் ஒவ்வொரு முறையும் வேண்டும்போது அவர்களுக்கு சொல்லியிருக்கிறேன். தரமானதாக செய்தால் எல்லோரும் நிறைய வேண்டுவார்கள் (வெள்ளைக்காரர் உற்பட) யாழ் சந்தையில் எனக்கு சில வெள்ளைக்காரர்கள் அப்படி அவர்களுக்கு சொல்லுமாறு கேட்டுக்கொண்டனர். நிறைய எழுத இருக்கு. நான் பாவிக்கும் கூகிள் மொழி பெயர்ப்பு அவ்வளவு நல்லம் இல்லை. நீங்கள் எல்லோரும் எப்படி தமிழில் எழுதுகிறீர்கள்?
  14. காலமாற்றமா? திட்டமிட்ட மாற்றமா? யாமறியோம் பராபரமே. இருப்பைத் தொலைத்த மனிதர்களானோம்.
  15. கிட்டு என்கின்ற கிருஸ்ணகுமார் தனது மேற்படிப்பை மேற்கொண்டது பருத்தித்துறையில் உள்ள ‘புலோலி ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை (வேலாயுதம் மகா வித்தியாலயம்) இல். மற்றது அவர்களது ‘காந்தி அச்சகம்’ இருந்தது பருத்தித்துறை முதலாம் குறுக்குத் தெருவையும் நகரையும் இணைக்கும் பகுதியில். இன்னும் விபரமாகச் சொல்ல வேண்டுமானால் வீரபாகு கிட்டங்கியின் தென்பகுதியில். இராணுவம் அவரைத் தேடும் வரை தனது தமையனான காந்திதாசனுக்கு உதவியாக அவர் அங்கு பணியாற்றியிருக்கிறார். கலைக்கதிர்
  16. வணக்கம் புங்கையூரான், இது பொன்னொச்சி மரம் என்பது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது. போனமுறை கேதீஸ்வவரம் போய்த்தான் முதல் தடவையாக கொன்றை பூவை அடையாளம் கண்டேன். உண்மைதான் சிட்னி கோவில்காரர் கண்டுபிடித்து விட்டால் உங்கள் நினைவு மீட்டல்களையும் குழப்பி விடுவார்கள். எனது தோட்டத்தில் நான் முதன்மையாக கேட்டது பாக்கு மரம் தான்.அப்பாவுக்கு விருப்பமானது. மிச்சம் எல்லாம் lanscaperரே தெரிவு செய்தது.
  17. ஜே ஆரின் வன்முறை மீதான விருப்பு ஜெயவர்த்தனா தான் நீதிக்கு எதிரானவர், பழிவாங்கும் குணம் கொண்டவர், அரசியல் தில்லுமுள்ளுகளில் கைதேர்ந்தவர், வன்முறையில் மிகுந்த நாட்டம் கொண்டவர் எனும் பெயரைச் சம்பாதித்து வைத்திருந்தார். 2003 ஆம் ஆண்டு இலங்கையில் போரும் சமாதானமும் எனும் தனது இரண்டாவது நூலை எழுதிய டி. டி. எஸ் ஏ. திசாநாயக்கா என்பவர் ஜெயவர்த்தனாவின் இந்த மனோநிலையின் உறுதிப்படுத்த இரு நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டியிருந்தார். இந்த இரு நிகழ்வுகளும் 1944 இல் சிங்களத்தினை ஆட்சிமொழியாக்கும் தனது தீர்மானத்தினைப் பாராளுமன்றில் ஜெயவர்த்தன முன்வைத்த காலத்தில் இடம்பெற்றவை. இந்த பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதத்தின்பொழுது ஜி ஜி பொன்னம்பலம் பின்வருமாறு கூறினார். ஜி ஜி பொன்னம்பலமும் தந்தை செல்வாவும் "மிகுந்த மரியாதைக்குரிய உங்களின் தகப்பனாரான நீதிபதி இ. டபிள்யு ஜெயவர்த்தனவின் முன்னால் வழக்காடுவது பெரும் பாக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால், நீங்களோ நீதிக்கு நேர்முரணானவர்" என்று கூறியபோது சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே பாரிய செற்போர் உருவாகியது. நிலைமையினைக் கட்டுப்படுத்த முடியாமல்த் திணறிய சபாநாயகர் சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார். தனது புத்தகத்தை எழுதும்போது ஜெயவர்த்தனவே இந்தத் தகவலை தன்னிடம் கூறியதாக டிசாநாயக்க கூறுகிறார். அவர் இலங்கையில் போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் இரண்டாவது பகுதியினை "இலங்கையின் ஜே ஆர் ஜெயவர்த்தன" எனும் பெயரில் எழுதியிருந்தார். இரண்டாவது சம்பவமும் ஜே ஆரின் 1944 தீர்மானத்தின்போதே இடம்பெற்றது. 1972 இல் "இலங்கையின் டட்லி சேனநாயக்க" எனும் புத்தகத்தை எழுதும்போது டிசாநாயக்க இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ஜே ஆர் தனது சிங்களத்தினை அரசாட்சி மொழியாக உருவாக்கக் கோரும் தீர்மானத்தினை முன்வைத்தபோது அவையின் தலைவராக இருந்த டட்லி கொதித்துப் போயிருந்தாராம். தனது மகனை ஜே ஆரிடம் அனுப்பிய டட்லி, "நீங்கள் தீர்மானத்தை மேலும் முன்கொண்டு சென்றால் உங்களின் கழுத்தை முறிப்பேன்" என்று எச்சரித்திருக்கிறார். உள்ளூர் அலுவல்கள் அமைச்சராக இருந்த தேவநாயகம் ஒருமுறை திசாநாயக்கவுடன் பேசும்போது ஜே ஆரின் வன்முறை மீதான வெறுப்பு மற்று அரசியல் தில்லுமுள்ளுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழுவில் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு முன்னர் விவாதிக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார். ஜே ஆரின் இந்த மூர்க்கத்தனமான நிலைப்பாடு தேர்தலின்பொழுது தமது கட்சிக்கு பாதகமாக அமையலாம் என்று பல மூத்த கட்சி உறுப்பினர்கள் அச்சமடைந்திருந்தனர் என்றும் அவர் கூறினார். எஸ்மண்ட் விக்கிரமசிங்க எனும் உறுப்பினர் இதற்குப் பரிகாரமாக யோசனை ஒன்றினை முன்வைத்ததாக தேவநாயகம் குறிப்பிட்டிருந்தார். அதுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மதம் கூறும் விதிகளின்படி நடத்தல், இன மத பேதமற்ற ஆட்சியினை உருவாக்குதல் ஆகிய விடயங்களைப் புகுத்தலாம் என்ற ஆலோசனை . "இப்படித்தான் வன்முறையாளரான ஜே ஆர் ஒரு தர்மிஸ்ட்டராக மாறினார்" என்று கூறிச் சிரித்தாராம் தேவநாயகம். ஆனால், ஜே ஆர் இன் பழிவாங்கும் முகம் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின் மீண்டும் வெளித்தெரிய ஆரம்பித்தது. சிறிமாவின் ஆதரவாளர்களின்மீது ஜே ஆர் தனது குண்டர்களை ஏவித் தாக்குதல் நடத்தத் தொடங்கினார். அவரின் வன்முறை மீதான விருப்பு அடுத்த மாதத்திலும் தொடர்ந்தது. 1979 ஆம் ஆண்டு ஆவணியில் பொலீஸார் மீது டெலோ அமைப்பினர் தாக்குதல்களை நடத்தியதையடுத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மீது தனது விஷமத்தனமான பிரச்சாரத்தினை முடுக்கி விட்ட ஜே ஆர், தனது சட்டவல்லுனர்களின் மூலம் மிகவும் கொடூரமான பயங்கவாதத் தடைச் சட்டத்தினை உருவாக்கியதுடன் இராணுவத்தினருக்கும் பொலீஸாருக்கும் அளவிற்கதிகமான அதிகாரத்தை வழங்கி தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வினை இராணுவ ரீதியில் வழங்கத் தயரானார். கொலைக்களத்திற்கான ஆயத்தங்களைச் செய்தல் அமிர்தலிங்கத்தின் மீதான தனது விஷமத்தனமான பிரச்சாரங்களின் மூலம் கொடூரமான சட்டங்களை உருவாக்கி, இராணுவத்தினரின் கடுமையான அடக்குமுறைகளை ஜே ஆர் மிகவும் திட்டமிட்ட முறையில் வகுக்கத் தொடங்கினார். அமிர்தலிங்கம் சென்னையில் ஆற்றிய உரையினை தனது பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக ஜே ஆர் பாவித்தார். பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சிறில் மத்தியூ புலிகள் இயக்கம் என்று அமைப்பு இருப்பதை மறுப்பதன் மூலம் அமிர்தலிங்கம் புலிகளைப் பாதுகாக்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டினார். இந்தக் காலத்தில் அமிர்தலிங்கத்தின் பேச்சுக்களைப் பற்றி பாராளுமன்றம் தொடர்ச்சியாக விவாதித்து வந்தது. தன்மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த பிரச்சாரங்களினால் அமிர்தலிங்கம் தற்காப்பு நிலையினை எடுக்கவேண்டியதாயிற்று. தனது பேச்சுக்களை விளக்கப்படுத்தி அமிர்தலிங்கம் ஒரு விரிவான அறிக்கையினை வெளியிட்டார். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தமிழீழத்திற்கான ஆணையினை முன்வைத்தே தேர்தலில் தமிழ் மக்களால் தேர்வுசெய்யப்பட்டதாக அவர் கூறினார். ஆகவே தனது பேச்சுக்களில் இதனையே தான் வலியுறுத்திப் பேசிவந்ததாக அவர் கூறினார். ஆனால், அறிக்கையின் முடிவில் அவர் இறங்கிப் பேசவேண்டியதாயிற்று, "ஆனாலும், அரசாங்கம் மாற்றீடான தீர்வொன்றினை முன்வைக்குமிடத்து அதனைப் பரிசீலிக்கவும் நாம் தயாராகவே இருக்கிறோம்" என்று அவர் முடித்திருந்தார். அரசாங்கத்தின் பேச்சாளரான அத்துலத் முதலியிடம் அரசாங்கம் தனிநாட்டிற்கான மாற்றீட்டுத் தீர்வை முன்வைக்குமா என்று நான் வினவியபோது, லலித் பின்வருமாறு பதிலளித்தார், "தனிநாட்டிற்கான ஒரே மாற்றுத்தீர்வு இராணுவ ஆட்சி மட்டுமே. அதனைத்தான் நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம்"
  18. நில்மினி உங்கள் தோட்டத்தில் நிற்கும் பொன்னொச்சி மரம் சிட்னியில் ஒரு ஆற்றங்கரையில் வரிசையாக வளர்ந்துள்ளது. மிகவும் அழகாக இருக்கும். ஊரின் நினைவுகள மீட்டுத் தருவதால், அங்கு அடிக்கடி செல்வதுண்டு..! பி.ஈ; இன்னும் கோவில் காரருக்குத் தெரியாது..!😅
  19. யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் படம் கூறும் கதைகள் எனும் சுய ஆக்கத் திரியில் கள உறவு நில்மினியால் இணைக்கப்பட்ட படங்களும் அவற்றை ஒட்டிய கருத்துக்களும் பிரிக்கப்பட்டு நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள் எனும் புதிய திரிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.
  20. ஐயனே! ஒன்றும் அறியா பாலகனா நீவீர்......?
  21. வணக்கம் தங்கச்சி! நல்ல விடயம் எழுதுங்கள். 👍🏼 நீங்கள் இணைக்கும் படங்களையும் பயணக்கட்டுரைகளையும் உங்களுக்கென ஒரு தனித்திரி ஆரம்பித்து தொடருங்கள். இங்கே இணைத்த படங்களையும் அதற்குரிய கருத்துக்களையும் உங்கள் பெயரில் தனித் திரியை ஆரம்பித்து அங்கே இணைத்து விடுமாறு நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தால் நிச்சயம் செய்வார்கள்.
  22. இந்த கதையின் தலையங்கம் "பைத்தியம்" என்பதை கவனத்தில் எடுக்கவும்.
  23. நன்றி அண்ணா. நிறைய இடங்களுக்கு போய் படங்கள் எடுத்தது வைத்திருக்கிறேன். இந்த கிழமை மடகாஸ்கர் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். ஜெர்மனி தமிழ் பேப்பர் ஒன்றுக்கும் கேட்டிருந்தார்கள். வீட்டு வேலை நான் நினைத்தது போல் இன்னும் முடிக்கவிலை. ஜூலை மாதம் செய்யலாம் என்று இருக்கிறேன்.
  24. நல்ல முடிவு அத்துடன் யதார்த்தமான முடிவும் அதுதான்.......! 👍 இது நடந்து இரு வருடங்களுக்கு முன் இருக்கும்.......பின்னடி காலத்தில் கொஞ்சம் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார் ஒருநாள் பிரச்சினை கூட யாரோ போன் செய்து போலீஸ் மற்றும் அவசர வண்டியும் வந்து கொண்டு போனது. பின்பு அவரை தனியான ஒரு ஆஸ்பத்திரியில் சில நாட்கள் வைத்திருந்து பின் விட்டு விட்டார்கள் .......பிறகு அவர் சரியான அமைதியாகி விட்டார்.....இப்ப நன்றாக இருக்கிறார்கள்........! டயபிட்டீஸ் மெல்லெனக் கொல்லும் ஒரு வருத்தம்தான்......கொஞ்சம் கவனித்து உணவுகளை எடுத்து வந்தால் வருத்தம் இருந்த போதிலும் நலமாக வாழலாம்.......மனக்கட்டுப்பாடு மிக மிக அவசியம்.......! 😁
  25. சில ஊர்கள் தாண்டித்தான் எனது ஊர்.
  26. நில்மினி ............பிளா என்பது பனை ஓலையால் செய்த boat போன்ற கள் கூழ் குடிக்க பயன்படும் கிராமத்து soup bowl . 😃
  27. என்ன கெதியாய் முடிச்சிட்டியள்..... இன்னும் பக்கத்து கடைக்காரர்,பக்கத்து வீட்டுக்காரரையும் நைசாய் இழுத்து வைச்சு தைச்சிருக்கலாம். ஒரு அம்சமான கதைக்கு நன்றி.
  28. சீட்டும் கூட ஒரு போதை தான் போல் உள்ளது. கதை கடைசி வரையும் தொய்வே இல்லாமல் சென்றது…! இந்தச் சுடச் சுட பிரியாணி இல்லாவிட்டால், உலகமே இயங்காது போல…! அவனின்றி ஒரு அணுவும் அசையாது…! அவளின்றி ஒரு அவனும் அசையாது..! நன்றி, சுவியர்…!
  29. கதவு திறந்தே இருக்கிறது ஓஓ கடைச் சொந்தக்காரன் நீங்களோ? கபிரியேலை வேற மாதிரி கணக்கு போட்டேன்தப்பித்தான்.
  30. இதுக்குத்தான் சொல்லுறது ஊருக்கு ஒரு சைவப்பழமாவது இருக்க வேணும் எண்டு
  31. பாகம் II அவனுக்கும் இவனுக்குமான நட்பு அலாதியானது. வாழ்க்கைமுறை, சமயம், பிரதேசம், தெரிவுப்பாடங்கள் என பலதிலும் வேறுபட்டிருந்தாலும் தமிழும், கவிதையும், நாடகமும், புத்தகங்களும் அந்த இடைவெளியை இட்டு நிரப்பி, மேலதிகமாகவும் ஒரு பிணைப்பை ஏற்படுத்த போதுமாயிருந்தன. இருவரும் கிண்டல் அடிப்பதில் ஆளை ஆள் சளைத்தவர்கள் இல்லை என்பது மேலும் அவர்கள் நட்பை எப்போதும் கலகலப்பான உறவாக வைத்திருந்தது. இவனின் மெசேஜை பார்த்ததில் இருந்து, அவனுக்கு கொஞ்சம் கலக்கலாமகவே இருந்தது. அவர்களுக்கு இடையில் இப்படியான pranks செய்வதும் வழமைதான். அதுபோல் இதுவும் இவனின் குழப்படிகளில் ஒன்றாக இருக்கலாம். போன கிழமை கூட வாட்சப்பில் மாவீரர் நாளுக்கு இவன் எழுதியதை வாசித்து விட்டு, அவன் ஒரு தெரியாத நம்பரில் இருந்து கோல் எடுத்து சிங்களத்தில் “மாத்தையா டக்சி ஓடர் பண்ணீர்கள், வீட்டுக்கு வெள்ளை வான் ஒன்று அனுப்பவா” என கேட்டு கலாய்திருந்தான். இதுவும் அதுக்கான இவனின் பதிலடியாக இருக்கலாம். ஆனால் அவனின் உள்ளுணர்வு இது ஏதோ வேறு பிசகு என கூறியது. பரவாயில்லை இன்றைக்கு வேர்க் புரொம் ஹோம்தான், நல்ல வேளையாக வேலை போனையும் கையோடு எடுத்து வந்தது வசதியாக போய்விட்டது. வேர்க் புரொம் ஹோம் என்றாலே வேலையை தவிர மிச்சம் எல்லாம் செய்யும் நாள் என்பது எழுதப்படாத சட்டம் ஆகி விட்ட நாட்டில் அவன் மட்டும் என்ன விதி விலக்கா? கார் கழுவுவது, உடுப்பு தோய்ப்பது, ஆருக்கும் சம்பளம் வாங்காமல் அட்வைஸ் கொடுப்பது, யாழிலும் வட்சாப்பிலும் உழட்டுவது, இடைக்கிடையே, முதலாளி பாவம் எண்டு கொஞ்சம் வேலையும் செய்வது. இதுதான் அவனின் இந்த வேர்க் புரொம் ஹோம் நாட்களின் ரூட்டின். ஆகவே அருகில் இருக்கும் டெஸ்கோவில் காரை விட்டு விட்டு என்ன எண்டு கேட்போம் என நினைத்தவாறே காரை டெஸ்கோ கார்பார்க்குக்குள் விரட்டினான் அவன். என்ன மச்சான் ஓகேயா? அவனின் கேள்விக்கு பதில் வர தாமதித்தது…. மச்சான்…டேய்…என்னடா மெசேஜ் போட்டிருந்தாய்…என்ன ஏர்ஜெண்ட் மட்டர்? தொண்டையை கனத்தபடி இவன் பேசத்தொடங்கினான்….. ஐ’ ம் குட் படி. ஐ டு ஹாவ் எ குவஸ்யன் போர் யூ…. டேய் லூஸ் விளையாட்டு விளாடாத…வேலை கடுப்பில நிக்கிறன் பிறகு அடிக்கிறன்…. நோ..நோ…லிசின் மேட்… ஐயம் சீரியஸ் எபவுட் திஸ்… அட்சரம் பிசகாத லண்டன் உழைக்கும் வர்க்க ஆங்கில உச்சரிப்பில்…. தன் பிரச்சனையை எடுத்து சொல்ல ஆரம்பித்து இருந்தான்…. வாழ்வில் என்றுமே இங்கிலாந்துக்கு வந்தே இராத, பிரித்தானியாவுடன் எந்தவித பரிச்சயமும் இல்லாத இவன். (தொடரும்) (யாவும் கற்பனை அல்ல) ——————————————-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.